Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வந்தே தீரும் ; யாழில் தெரிவித்தார் ஹக்கீம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வந்தே தீரும் ; யாழில் தெரிவித்தார் ஹக்கீம்
news

யாழ்ப்பாணத்திற்கு தேவையான குடிநீரை கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் ஒத்துழைப்புடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

 
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வடபிராந்திய உதவிப்பொது முகாமையாளர் மற்றும் பிராந்திய முகாமையாளர் அலுவலகம்  யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இன்று திறந்து வைக்கப்பட்டது. 
 
அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்  போதே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு  தெரிவித்தார். 
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,  
 
இந்த அலுவலகம் இரணைமடுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகச் செயற்பட்டு வந்தது. இனியும் அவ்வாறே செயற்படும். 
 
தற்போது 40 ஆயிரம் ஏக்கருக்கு நீர்வழங்கக்கூடிய வகையில் இரணைமடுக் குளத்தின் நீர் கொள்ளளவு காணப்படுகிறது. இந்த நிலையிலேயே விவசாயிகள் மேலதிக நீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வருவதற்கு தமது ஆட்சேபத்தைத் தெரிவிக்கின்றனர். 
 
எனவே எதிர்காலத்தில் இரணைமடு குளத்தின் நீர்கொள்ளளவை 80 ஆயிரம் ஏக்கருக்கு ஏற்றதாக வீஸ்தரித்து அதன் பின்னர் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணத்துக்கான குடிதண்ணீர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  அவர் மேலும்  தெரிவித்தார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=111914100922286325#sthash.3yZnV5Wo.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

இவரு போடாத வேடமில்லை ...ஒவ்வொரு தடவையும்வரும்போது நல்ல வசனங்களுடன் வருவர்.....இவரு தன் இனத்துக்குரிய கைங்கரியத்தை பழக்க தோசத்தால் இலகுவாக செய்துமுடித்து விடுவார்...புழைக்க தெரிந்த மனுசனும் ..இனமும்

  • கருத்துக்கள உறவுகள்

இரணைமடுவில் இருந்து தண்ணீரை கொண்டு வருவதற்க்காகத்தான் யாழில் உள்ள கிணறுகளில் எண்ணெய் கலப்பு நடக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் உள்ள குளங்களை பராமரிச்சு.. நீரைச் சேமிச்சாலே போதும்.. யாழுக்கு நீர் வெளியில் இருந்து அவசியம் இல்லை. வன்னி மண்ணுக்கு நீர் மிக அவசியம். அது விவசாய பூமி.

இரணைமடு நீர் இப்ப யாருக்கு அவசியம் என்றால்.. சிங்கள இராணுவ இருப்புக்கு தான். இவர் அதுக்கு முக்கிறார். :rolleyes::o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த தைப்பொங்கலுக்கு இரணைமடு தண்ணீர் யாழ்குடாவில் அருவியாக பாயும்.  :lol:

இரணைமடு குளத்தை இரட்டிப்பது நல்லம் தான் ... அது வன்னி விவசயத்திக்கு நல்லம் .. ஆனால் யாழ்ப்பாணம் கொண்டு வரவேண்டிய அவசியம் என்ன .. பிரதேச வாரியாக பிரச்சனை உருவாக்கவா ?   உந்த நரி வேலையை விட்டுட்டு ...

யாழ்ப்பணத்தில் மழை நீர் சேமிப்பினை ஊக்க படுத்துங்கள் .. இதற்கு சரியான வழி குளங்கள் அமைப்பது .. வல்லை வெளி எல்லாம் சும்மாக தானே உள்ளது .. பெரிய குளத்தினை அமைக்கலாம் .. பின்னர் யாழ் குடாவில் பெய்யும் மழை நீரினை Drainage அமைத்து இங்கே வடிய விடுவதன் மூலம் நீர் மட்டத்தை அதிகரிகலாம் ..

இப்படியாக நிறைய வேலை திட்டங்களை செய்வதை விட்டுட்டு ... குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வேண்டாம் 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கோ விவசாயத்திற்கு அரிதாய் கிட்டியுள்ள நீர்வளத்தை அப்பகுதிக்கே இறுத்திக்கொண்டு, கடல்நீரை சுத்திகரித்து குடிநீராய் வழங்குகிறார்களே, அந்த தொழிற்நுட்பமெல்லாம் யாழ்குடாவிற்கு சரிவராதோ?

வானம் பார்த்த பூமிக்கு, ஒரு மாற்று ஏற்பாடாகக் கொள்ளலாமே? பொருளாதாரம் கைகொடுக்குமா? :o

  • கருத்துக்கள உறவுகள்

எங்கோ விவசாயத்திற்கு அரிதாய் கிட்டியுள்ள நீர்வளத்தை அப்பகுதிக்கே இறுத்திக்கொண்டு, கடல்நீரை சுத்திகரித்து குடிநீராய் வழங்குகிறார்களே, அந்த தொழிற்நுட்பமெல்லாம் யாழ்குடாவிற்கு சரிவராதோ?

வானம் பார்த்த பூமிக்கு, ஒரு மாற்று ஏற்பாடாகக் கொள்ளலாமே? பொருளாதாரம் கைகொடுக்குமா? :o

எமது அரசியல்வாதிகள் இடைக்கிடை இவ்வாறு கதைகள் விட்டுத் தாங்களும் இருப்பதைக் காட்டிக்கொள்வார்கள்!

முன்பொரு காலத்தில்.. மகாவலி கங்கையை யாழ்ப்பாணம் கொண்டு வரப்போவதாகப் போவதாகப் பெரும் 'கதை' விட்டார்கள்!

பின்னர் அவர்கள் 'வாக்குறுதியை' காற்றில் பறக்க விட்டு விடவில்லை.

கொண்டு வந்தார்கள்... ஒரு தம்ளரில்..!:wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.