Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சன் தொலைக்காட்சி தனது ஒளிபரப்பை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சன் தொலைக்காட்சி தனது ஒளிபரப்பை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது:
[Wednesday 2015-06-24 07:00]
இந்தியாவின் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமான சன் நெட்வொர்கின் 33 சேனல்கள் மீதான உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு ஒப்புதல் மறுப்பை, பிரதமர் அலுவலகமும் (PMO) ஆதரித்துள்ளது. இதனால் சன் நெட்வொர்க் தனது ஒளிபரப்பை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சன் நெட்வொர்க் நிறுவனம் மீது பதிவு செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்குகளின் காரணமாக உள்துறை அமைச்சகம், இந்நிறுவனத்தின் 33 சேனல்கள் மீதான பாதுகாப்பு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இவ்விவகாரத்தை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமை வகிக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை மறுபரிசீலனை செய்யுமாறு உள்துறை அமைச்சகக்திற்கு வேண்டுகோள் விடுத்தது.

இந்தியாவின் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமான சன் நெட்வொர்கின் 33 சேனல்கள் மீதான உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு ஒப்புதல் மறுப்பை, பிரதமர் அலுவலகமும் (PMO) ஆதரித்துள்ளது. இதனால் சன் நெட்வொர்க் தனது ஒளிபரப்பை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சன் நெட்வொர்க் நிறுவனம் மீது பதிவு செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்குகளின் காரணமாக உள்துறை அமைச்சகம், இந்நிறுவனத்தின் 33 சேனல்கள் மீதான பாதுகாப்பு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இவ்விவகாரத்தை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமை வகிக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை மறுபரிசீலனை செய்யுமாறு உள்துறை அமைச்சகக்திற்கு வேண்டுகோள் விடுத்தது.

  

இந்நிலையில் பிரச்சனையை விரைவாகத் தீர்க்கவும், பாதுகாப்பு ஒப்புதல்களைப் பெறவும் பிரதமர் அலுவலகத்தைச் சன் நெட்வொர்க் நிறுவனம் நாடியது. தற்போது பிரதமர் அலுவலகமும், உள்துறை அமைச்சக அறிவிப்பிற்குச் சாதகமான பதில் கூறியுள்ளதால், சன் நெட்வொர் தனது ஒளிபரப்புத் நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சன் நெட்வொர்க் உரிமையாளர்கள் ஊழல் வழக்கில் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளதால், இந்நிறுவனத்தின் மீதான பாதுகாப்பு ஒப்புதல் மறுப்பை ஏற்க முடியாது. மேலும் இது சட்டத்திற்குப் புறம்பானது என வழக்கறிஞர் ஜெனரல் முகுல் ரோஹட்கி தெரிவித்தார்.

இதுகுறித்துப் பிரதமர் அலுவலகத்தின் செயலாளர் நிர்பென்திரா மிஸ்ரா, சன் டிவி குறித்த முடிவுகள் உள்துறை அமைச்சகத்தின் முடிவு சரியானதாகவே உள்ளது எனக் கூறினார். இதனால் சன் டிவி நிறுவனத்திற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=134729&category=IndianNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

5000 ஊழியர்களின் வேலை என்று பாடிக் கொண்டே, தமது உரிமையைக் காக்க, பக்கா கிரிமினல் சகோதரர்கள் முயல்கிறார்கள்.

நிலைமையை சமாளித்து, சன் தொடர்ந்து இயங்க வேண்டுமாயின், உரிமை கை மாற வேண்டும். 

அதைத்தான் மத்திய அரசு எதிர் பார்க்கிறது போல் தெரிகிறது. காங்கிரஸ் ஆட்சியில் நினைக்க முடியாத கிரிமினல் ஆட்டம் போட் டு, அதன் காரணமாக, ஈழத் தமிழ் படுகொலைகளை கண்டு கொள்ளாத கருணாநிதி குடும்பம், இப்போ ஜெயலலிதாவை உள்ளே போட்டால் தாம் மீண்டும் வரலாம் பதவிக்கு என்று மனப்பால் குடிகின்றனர்.

ஆனால், அவர்களுக்கும் பெரிய ஆப்பு காத்திருக்கின்றது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தொலைக்காட்சியை மூடுறதில வலு சந்தோசம்!:lol:

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த விமானத்தில் லண்டன் வந்து சன்டிவி திறப்புவிழா கொண்டாடியவர்களின் சாம்ராஜ்யம் இப்படி சரியும் என்று கனவிலும் நினைத்திருக்காயினம்.   

  • கருத்துக்கள உறவுகள்

இவரது ராச்சியம் சரிவதைக்கண்ணால் காணணும்...:(

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப சந்தோசம். அப்படியே தமிழ் டிவி சீரியல்கள் மனித குலத்துக்கு எதிரான குற்றம் என்று சட்டம் போட்டு, எல்லா சேனல்களிலும் தடை செய்யணும் :)

அய்யய்யையோ இனி எங்க அம்மா எப்பிடி அத்திபூக்கள் நாடகம் பார்ப்பாங்க ?????? ^_^:mellow::(......

.

.

.

.

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இவரது ராச்சியம் சரிவதைக்கண்ணால் காணணும்...:(

2012 ம் ஆண்டில் 14,000 கோடி மதிப்பு மிக்கதாக இருந்த சன் மீடியா மதிப்பு இன்று இறங்கிக் கொண்டே செல்கிறது. 

கடைசியில், சன் டிவி வேறு ஒருவர் கையில் போகும். இல்லாவிடில் லைசென்ஸ் கிடைக்கப் போவதில்லை.

கிடைக்காவிடில் மதிப்பு இல்லாமலே போய் விடும். அதை பங்கு தாரர்கள் விரும்ப மாட்டார்கள். ஆகவே, பெரும் சுமையாக உள்ள இந்த சகோதரர்கள் கலட்டி விடப் படுவார்கள்.

இவர்களின் பணத் திமிர் காரணமாக, அழகிரி, கருணாநிதி குடும்பமே இவர்களுடன் நல்ல உறவில் இல்லை.

சிவசேகரன் எனும் தொழில் முகவர் ஸ்டேர்லிங் எனும் ப்ராண்ட் மூலமாக கம்ப்யூட்டர் விற்பனை செய்து, முன்னேறி,  தொலை பேசித் துறையினுள் காலடி வைத்தபோது, அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் அதற்குரிய அனுமதி கொடுக்காது இழுத்தடித்தார்.

இறுதியில், சன் டிவி யில் முதலீடு செய்யத் தயாராக இருந்த, மலேசியா வாழ் ஈழத் தமிழர், ஆனந்த கிருஷ்ணணுக்கு அவரது வியாபாரதிணை விற்பனை செய்யுமாறு வற்புறுத்தி, அது பயமுறுத்தல் ஆனபோது, கொடுத்து தலை முழுகி விட்டு, அவர்  தனது தாய் தந்தையுடன், திருச்சியில் இருந்து  இரகசியமாக கொழும்பு வழியே சிங்கப்பூர் தப்பி ஓடினார்.

சிவசேகரன் கையில் இருந்து, ஆனந்த கிருஷ்ணனின் மச்சிஸ் நிறுவனத்துக்கு கைமாறியதும், தேவையான அனுமதி வழங்கினார் தயாநிதி. பதிலுக்கு ஆனந்த கிருஷ்ணன் சன் டிவி யில் சுமார் ரூ. 742 கோடி சொத்துகளை வாங்கினார்.

கருணாநிதி முதல்வர் பதவி இழந்த பின்னர், தயாநிதியும் மத்திய அமைச்சர் பதவி இழந்த பின், 2011, சிவசேகரன், CBI இடம் அளித்த முறைப்ப்பாடே அவர்களது இன்றைய நிலைக்கு காரணம்.

தன் வினை தன்னைச் சுடும், ஓட்டு அப்பம் வீட்டை சுடும் என்பதன் மிகச் சிறந்த உதாரணம். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மும்பை Monday, June 29, 2015
சன் குழுமத்தின் 33 சேனல்களுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்க உள்துறை அமைச்சகம் உறுதியாக மறுத்துவிட்டதாக வெளியான தகவலை அடுத்து அந்நிறுவனத்தின் பங்குகள் இன்று 5 சதவிகிதம் சரிவடைந்து விட்டதாக மும்பை பங்குச்சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கலாநிதிமாறனுக்குச் சொந்தமாக சன் தொலைக்காட்சியின் 33 சேனல்களுக்குகு பாதுகாப்பு அனுமதி வழங்க இயலாது என உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக கூறியதாக செய்திகள் வெளியாகின.
 

Sun TV falls over 5% after home ministry denies security clearance

மேலும் சன் குழுமத்தின் உரிமையாளர்களான மாறன் சகோதரர்கள் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அக்குழுமத்தின் 33 தொலைக்காட்சி சேனல்களுக்கு, பாதுகாப்பு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், உள்துறை அமைச்சகத்தின் இநத முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்கும் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கும் விஷயத்தில், உள்துறை அமைச்சகம் புதிய நடைமுறைகளை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. குறிப்பாக தொலைக்காட்சி சேனல் தொடங்கும் நிறுவனங்கள், தங்களுக்கு எதிராக குற்ற வழக்குகள், நிதி முறைகேடு, தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளிட்ட புகார்கள் எதுவும் இல்லை என சுய விளக்க அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என விதிமுறை கொண்டு வர உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் திங்கட்கிழமையன்று காலையில் பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கியதும் சன்டிவியின் பங்குகள் 5.52 சதவிகிதம் சரிவடைந்தது பொதுவாக வாரத்தின் தொடக்க நாளான இன்று இந்தியப் பங்குச்சந்தைதகள் கடும் சரிவுடன் தொடங்கின. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் மள மளவென சரிந்து 27,322.5 புள்ளிகள் ஆக வர்த்தகம் இருந்தது. வெள்ளிக்கிழமை ரூ.279.40 ஆக இருந்த சன்டிவியின் பங்குகள் காலையில் வர்த்தக துவக்கத்திலே 5.52 சதவிகிதமாக இருந்தது. கடந்த ஜூன் 8ந் தேதி சன் நெட்வொர்க் குழுமத்தின் 33 சேனல்கள் மீதான பாதுகாப்பு அனுமதியை அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளதாகவும், இதனால் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இக்குழுமம் தனது சேனல்களின் ஒளிபரப்பை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானபோது சன்டிவி நிறுவனத்தின் பங்குகள் சுமார் 22 சதவிகிதம் சரிந்தது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/sun-tv-falls-over-5-after-home-ministry-denies-security-clearance-229900.html

  • கருத்துக்கள உறவுகள்

"சன் ரீவி" பூட்டுற நாள் தான்... தமிழருக்கு நல்ல நாள்.
எப்ப, பூட்டுறாங்களாம்? சட்டுப் புட்டெண்டு சூட்டோட பூட்டி, மாறன் சகோதரரை தூக்கி.... ஜெயில்லை, போடுங்கப்பா.... 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதிரி அடுத்த தேர்தல்வரை இழுத்தார்கள் என்றால் தப்ப வாய்ப்புக்கள் உண்டு 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதிரி அடுத்த தேர்தல்வரை இழுத்தார்கள் என்றால் தப்ப வாய்ப்புக்கள் உண்டு 

 அடுத்த தேர்தலில், தி.மு.க. வெல்லும் என்று, வாத்தியார் முடிவு கட்டி விட்டாரா?:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அதானே,

அடுத்த தேர்தலில் சீமான் ஜெயிப்பதாகத் தானே அக்ரிமெண்டு :) 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.