Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரண தண்டனையால் ஹீரோவான ஆமி.

Featured Replies

 

 

மரண தண்டனையால் ஹீரோவான ஆமி.

 

மிருசிவில் 8 பேர் கொலைவழக்கில் மரண தண்டனைக்கு உள்ளான இராணுவ சிப்பாய் சிங்கள மக்கள் மத்தியில் ஹீரோவாக பிரசித்தப்படுத்தப்பட்டு வருகிறார்…

யுத்தத்தில் பங்காற்றிய இந்த சிப்பாய் மீதான மரண தண்டனை சிங்கள தேசியத்திற்கு எதிரானது என சிங்கள மக்கள் மத்தியில் மத்தியில் பிரச்சாரப்படுத்தப்பட்டு வருகிறது…

இலங்கையின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு தெற்கில் சிங்கள இனவாதம் தலையெடுத்து வருவது எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு பாதிக்கும் என்பதனை எதிர்வு கூற முடியாதிருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.  24 மணி நேரத்திற்குள் 11 ஆயிரம் பேர் லைக்…..

http://www.jvpnews.com/srilanka/113952.htmlSunil 01Sunil

 

  • தொடங்கியவர்

தமிழர்களே இதுதான் சகோதரத்துவம்,இனம், சமயம் 

  • கருத்துக்கள உறவுகள்

கந்தன் கருணையில் கைவிலங்குடன், நிரபராதிகளாய் நின்ற சொந்தச் சகோதரர்களை ஆத்திர மிகுதியில் கொலை செய்த அருணாவுக்கு நாம் கொடுத்த தண்டனை மேஜரில் இருந்து கப்டனாய் பதவி இறக்கம் மட்டுமே.

ஆக சகோதரத்துவம் பற்றி பேசவே லாயகில்லாதோர் நாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருத்தன் 8 பேரின் கழுத்தை வெட்டி கொலை செய்ய அவ்வளவு பேரும் தலை கொடுத்து போட்டு இருந்தார்கள். அதனால் வேறு ஒருவரும் இந்த கொலைகளில் சம்பந்த படவில்லை. அதனால் அவருக்கு மரண தண்டனை மறவர்களுக்கு விடுதலை . இதுதான் நீதிமன்ற தீர்ப்பு இதை நீங்களும் நம்பீட்டின்கள் நாங்களும் நம்பீட்டம் . இந்த தீர்ப்பின் படி மிச்ச கொலைகள் அநீதிகள் எல்லாவற்றிக்கும் இளங்கலையில் தீர்வு உண்டு . 
இதை உதாரணமாக வைத்து புலிகள் செய்த கொலைகளையும் நாங்கள் ஆராய்வம் 

  • கருத்துக்கள உறவுகள்

கந்தன் கருணையில் கைவிலங்குடன், நிரபராதிகளாய் நின்ற சொந்தச் சகோதரர்களை ஆத்திர மிகுதியில் கொலை செய்த அருணாவுக்கு நாம் கொடுத்த தண்டனை மேஜரில் இருந்து கப்டனாய் பதவி இறக்கம் மட்டுமே.

ஆக சகோதரத்துவம் பற்றி பேசவே லாயகில்லாதோர் நாம்.

ஒரு சிறிய வட்டத்துக்குள் நின்றே சிந்திச்சுப் பழகிட்டூங்க போல. ஜே வி பி என்று அப்பாவி இளைஞர்களை போட்டுத்தள்ளிய உடுகம்பொல போன்றவர்களையும் போர் வீரர்கள் என்று சிங்களவர்கள் ஆராதிப்பார்க்களோ..??!

கந்தன் கருணை மட்டுமல்ல.. சவுக்குத் தோட்டத்தில.. வாழைத்தோப்பில வைச்சு.. போட்டுப் புதைச்சவையும் இப்ப வெளிநாடுகளில உல்லாசமா வாழினம். அவர்கள் நீதியின் பிடியில் இருந்து தப்பியதற்காக.. அப்பாவி மக்களைக் கொன்ற இவனையும் இவனது கூட்டாளிகளையும் போர் கீரோக்கள் என்ற வகைக்குள் அடக்கி சிங்களம் பாதுகாக்க முனைவது அதன் ஆழ் மனதில் உள்ள தமிழர் வெறுப்பையே இனங்காட்டி நிற்கிறது.

இவனுக்கு மரண தண்டனை இல்லாவிட்டாலும்.. வெளியில் வர முடியாத ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும். மேலும் இச் சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட இதர குற்றவாளிகளும் தண்டிக்கப்படனும். :(

  • கருத்துக்கள உறவுகள்

கந்தன் கருணையில் கைவிலங்குடன், நிரபராதிகளாய் நின்ற சொந்தச் சகோதரர்களை ஆத்திர மிகுதியில் கொலை செய்த அருணாவுக்கு நாம் கொடுத்த தண்டனை மேஜரில் இருந்து கப்டனாய் பதவி இறக்கம் மட்டுமே.

ஆக சகோதரத்துவம் பற்றி பேசவே லாயகில்லாதோர் நாம்.

மண்டை கழண்ட கேசுகளுக்கு விளக்கம் சொல்லி பிராணனன் போகுது.அருணா மாவீரர் பட்டியலிலேயே இல்லை என்கிறேன் இவர் இப்ப புதுசா கப்டன் பதவி கொடுத்து தன்னுடைய அரிப்புக்கு உதாரணம் காட்டுறார்.

  • கருத்துக்கள உறவுகள்

மண்டை கழண்ட கேசுகளுக்கு விளக்கம் சொல்லி பிராணனன் போகுது.அருணா மாவீரர் பட்டியலிலேயே இல்லை என்கிறேன் இவர் இப்ப புதுசா கப்டன் பதவி கொடுத்து தன்னுடைய அரிப்புக்கு உதாரணம் காட்டுறார்.

நீங்க இப்படியே ஒதுங்கி வேடிக்கை மட்டும் பாருங்கோ......

உங்க வீட்டுக்கதவை வந்து தட்டி தூக்கில் போடும்வரை........:(:(:(

கந்தன் கருணையில் கைவிலங்குடன், நிரபராதிகளாய் நின்ற சொந்தச் சகோதரர்களை ஆத்திர மிகுதியில் கொலை செய்த அருணாவுக்கு நாம் கொடுத்த தண்டனை மேஜரில் இருந்து கப்டனாய் பதவி இறக்கம் மட்டுமே.

ஆக சகோதரத்துவம் பற்றி பேசவே லாயகில்லாதோர் நாம்.

அவர் செய்ததில் என்ன தப்புள்ளது ,,, 8 பேரினை கொலை செய்தது குற்றமா ? 
 அட நீங்க வேற அண்ணர் யேசு பரம்பரை தானே கொலைக்கு கொலை தீர்வல்ல ஆதலால் மன்னித்து விடுவம் 

  • கருத்துக்கள உறவுகள்

நந்தன்,

சிரமத்துக்கு மன்னிக்கவும்.

அருணா மாவீரர் பட்டியலிலே இல்லை என்றே வைத்துக் கொள்வோம்.

அவர் செய்த கொலைகளுக்கு அதுதான் தண்டனையா?

அப்போ இந்த ஆமிக் காரனை இராணுவம் இல்லை என அறிவித்து அவன் லான்ஸ்கோப்பரல் பதவியை மட்டும் பறித்து விட்டால் போதுமா?

  • கருத்துக்கள உறவுகள்

நந்தன்,

சிரமத்துக்கு மன்னிக்கவும்.

அருணா மாவீரர் பட்டியலிலே இல்லை என்றே வைத்துக் கொள்வோம்.

அவர் செய்த கொலைகளுக்கு அதுதான் தண்டனையா?

அப்போ இந்த ஆமிக் காரனை இராணுவம் இல்லை என அறிவித்து அவன் லான்ஸ்கோப்பரல் பதவியை மட்டும் பறித்து விட்டால் போதுமா?

இப்ப என்ன செய்யலாம் ...,பேசாம நீங்க அந்தப்பக்கம் போயிடுங்களேன்.முகப்புத்த லைக் போட ஒராள் குறையுதாம்<_<

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை நந்தன் அந்த பக்கமும் எங்களை போல் தம் தரப்பு அநியாயங்களை வெளிப்படையாக பேசும் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பிரயன் செனவிரட்ன நக அ ஆலோசனை குழுவிலும் உள்ளார்.

இதுக்கு என்ன செய்யலாம் -

1) புலிகளால் கொல்லப் பட்ட அப்பாவிகள் அப்பாவிகள்தான் - அவர்கள் கொலைகள் குற்றங்கள்தான் என்பதை ஏற்பதன் மூலம் அவர்களுக்கும் அவர்கள் குடும்பங்களுகுமான ஆத்ம நிம்மதியை வழங்குவதன் மூலம் - தமிழர்களிடம் உண்மையான reconciliation ஐ உருவாக்கி, அதன் மூலம் தமிழர் மத்தியில் உண்மையான ( போலியான புலித்துதிபாடும் அல்ல) ஒற்றுமையை கட்டி எழுப்பலாம்.

2) இனியொருதரம் பிரபா காட்டிய தற்கொலை அரசியலுக்கு நாம் ஒரு போதும் போகக்கூடாது எனும் படிப்பினையை பெறலாம். 

கோசான்,

நீங்கள் ராணுவ ரீதியான எந்த அமைப்பிலும் இருந்ததில்லை என்ற ஊகத்தில் மட்டுமே இந்த கருத்தை பதிகிறேன். நீங்கள் அப்படியான ஒரு அமைப்பில் இருந்திருந்தால் மன்னித்துவிடுங்கள்.

இராணுவ கட்டமைப்பில் ஒரு வீரனாக/போராளியாக தனிப்பட்ட எந்த முடிவுகளையும் நாங்கள் எடுக்க முடியாது. அது கட்டமைப்பின் ஊடாகவே வரும்.

கட்டளைக்கு கீழ்படிதல் மட்டும் தான். உங்களுக்கு கட்டளை பிறப்பிக்கபட்டால் நீங்கள் செய்து முடித்தே ஆகவேண்டும். அது நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ.

இது ஏனைய நிர்வாக கட்டமைப்புகளுக்கும் இராணுவ நிர்வாக கட்டமைப்புக்கும் இடையிலான வித்தியாசம்.

சில வேளைகளில் கட்டளையிடும் அதிகாரியின் மனநிலையை பொறுத்து கட்டளைகளின் நியாய தன்மை மாறுபடும். இது பிடிக்காவிட்டால் நீங்கள் அந்த அமைப்பில் இருந்து வெளியேற வேண்டும். மக்களுக்காக போராட புறப்பட்டுவிட்டு இன்றைக்கோ அல்லது நாளைக்கோ சாவை தழுவிக்கொள்ளும் ஒரு அதிகாரியின் கட்டளைக்கு பயந்து அமைப்பை விட்டு வெளியேற யாருமே தயாராக இருக்கவில்லை.

எங்களுக்கு ஒரு காலம் வந்து கட்டளையிடும் அதிகாரியாக வரும்போது நாங்கள் அந்த நேர்மையை நியாயத்தன்மையை கடைபிடிக்க முடியும்.

சில உணர்ச்சிவசப்பட்ட முடிவுகளுக்கும் செயல் வடிவம் கொடுக்க வேண்டிய கட்டாய நிலை எங்களுக்கு உருவாகி இருந்தது. எங்கள் சுயத்தை தொலைத்தும் நாங்கள் போராட வேண்டியிருந்தது. எல்லாம் நீங்கள் உட்பட எல்லா தமிழ் மக்களும் சுயமரியாதையையுடனும் சுதந்திரத்துடனும் வாழ வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான்.

நீங்கள் குற்றவாளிகளாக சொல்லும் அதே புலிகளில் தான் உங்களுக்காக தங்கள் உயிரை கொடுத்த ஆயிரமாயிரம் போராளிகளும், தங்கள் பெயர் கூட தெரிய கூடாது என்று மடிந்த கரும்புலிகளும் இருக்கிறார்கள்.

எந்த ஒரு இராணுவ அமைப்பிலும் சுயநலத்துடனும், மனநிலை பிறழ்வுடனும் இருக்கும் நபர்கள் 10 வீதமாவது இருப்பார்கள். ஆனால் அவர்களை மட்டும் சுட்டிகாட்டி முழு அமைப்பையும் குற்றவாளிகளாக்கும் பொது கருத்துக்களை நிறுத்துங்கள்.

உங்கள் இன விடுதலைக்கான அமைப்பை குற்றவாளிகளாக்க, எதிரிகளின் மோசமான ஆளை ஒப்பிடுவது உங்களின் மனசாட்ச்சிக்கு ஒத்துவரும் விடயமா.?

இந்த ராணுவ வீரனுக்கு மரண தண்டனை விதித்தமைக்கு பின்னால் இருக்கும் உள்ளூர் மற்றும் சர்வதேச அரசியல் தெரியாமலா கருத்து வைக்கிறீர்கள்.?

புலிகளாக நாங்கள் எங்களால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்காக மன்னிப்பு கேட்டுவிட்டால் சிங்கள அரசாங்கம் எங்களுக்கு தேவையான சுதந்திரத்தையும் தந்துவிடுமா.?

மன்னிப்புகளுக்கும் தண்டனைகளுக்கும் பின்னால் உள்ள அரசியலை புரிந்துகொண்டுதான் நீங்கள் கருத்துகளை பகிர்கிறீர்கள் என்று நான் இன்றும் நம்புகிறேன்.

 

குறிப்பு:

அருணாவுக்கு மரணதண்டனை விதிக்கவில்லை ஆனால் அவர் தொடர்ந்தும் மக்களுக்காக போராடி மரணத்தை தழுவிகொண்டார். அதற்குரிய மரியாதை கூட அவருக்கு கிடைக்கவில்லை. (மரணதண்டனை விதித்த சிங்கள ராணுவ வீரன் கதாநாயகன்).

இந்தியாவினால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக தேடப்பட்ட அகிலா மக்களுக்காக போராடி உரும்பிராயில் வீரமரணத்தை தழுவிகொண்டார்.

இன்னும் ஆயிரம் ஆயிரம் போராளிகள் உங்களுக்காக/கதாநாயகன் புகழ் இன்றி மடிந்து போனார்கள். அவர்களுக்காக ஆவது நாங்கள் ஒற்றுமையாக எங்கள் உரிமைக்காக போராடுவோம்.

வாறீங்களா..??

 

 

 

 

 

 

 

 

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஆயிரம் ஆயிரம் போராளிகள் உங்களுக்காக/கதாநாயகன் புகழ் இன்றி மடிந்து போனார்கள். அவர்களுக்காக ஆவது நாங்கள் ஒற்றுமையாக எங்கள் உரிமைக்காக போராடுவோம்.

வாலியின் மரண‌த்திற்கு நீதி வேண்டும், காக்கை வன்னியனுக்கு நீதி  கிடைக்க வேண்டும் அதன் பின்புதான் ஒற்றுமை,

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பகவலவனுக்கு வாலை நிமிர்த்தி விடலாம் என்று நப்பாசை

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன்,

மிகவும் சிந்திக்க தூண்டிய கருத்து.

மாவீரர்களை கொச்சைப் படுத்தும் எண்ணம் எனக்குத் துளியளவும் இல்லை. அப்படி ஒரு கருத்து என் பதிவில் தொனித்தால் பகிரங்கமாய் மன்னிப்புக் கேட்கிறேன். 

எனது மன உளைச்சல் எல்லாம் இவ்வளவு தியாகங்களும் நிதாமில்லாத தலைமையால் வீணாய்ப் போய் நாம் ஆரம்பித்த இடத்தில் வந்து நிக்கிறோமே என்பதுதான்.

கிடைத்த சந்தர்பங்களை தவறவிட்டு மாவீரர்களின் தியாகத்தை விழலுக்கு நீர் ஆக்கிய தலைமை நிச்சயம் விமர்சனத்துக்குரியதே.

அவர் மட்டுமில்லை, பல தப்புகள் நடக்கிறது எனத் தெரிந்தும் வாய் மூடி மெளனிகளாய், வன்னியில் பிள்ளை பிடிக்கிறார்கள் என உறவினர்கள் அலைபேசியதை மூடிமறைத்து, வலுக்கடாயமாய் மக்களை இடம் பெயர்தியதை நியாயப் படுத்தி, கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்து நாமும் இந்த தியாகங்கள் வீணடிக்கப் பட ஒரு காரணமாயிருந்தோம்.

இனியும் அந்த தவறை செய்ய நான் தயாரில்லை.  சம்சும் வழியில் போவதே இபோதைக்கு சிறந்த வழி என்பது என் தெரிவு.

அந்த வழியில் போவதாய் இருந்தால்  "வருகிறேன்".

ராணுவ கட்டமைப்பில் ஒரு போதும் இல்லாத போதும் போர் நடைமுறைகள் பற்றி ஜெனிவா ஒப்பந்தம் பற்றி ஓரளவு அறிந்ததால் சொல்கிறேன்.

பொறுப்பு கூறும் அதிகாரத்தில் இருந்தவர்கள் போராளிகள் தப்பு செய்யும் போது அவர்களை தண்டிக்கவேண்டும்,  மாறாக நீங்கள் சொல்லுவது போல் போராளிகள் தப்பை பல்லை கடித்துக் கொண்டும் செய்யும்படி நம் தலைமை இருந்தது எனும் போது அந்த தலைமையின் குறைகளை மாவீரர் தியாகம் எனும் ரத்தின கம்பளத்தால் மூடிவிட்டு போக முடியாது.

ஏன் முடியாது? ஏனெண்டால் இன்றும் அந்த தலைமை வகுத்த பாதையே சரி என மக்களை புதை குழியில் தள்ள ஒரு கூட்டம் முயல்கிறது.

பிரபா ஆவது பிழையான வழியில் ஆனால் நேர்மையுடன், நெஞ்சுரத்துடன் ஊரில் நின்று குடும்ப சகிதம் போராடினார். ஆனால் இவர்கள் வக்கணையாய் புலத்தில் வாழ்ந்த படி அங்கிருக்கும் மக்களை பலிகடா ஆக்கப் பார்கிறார்கள்.

இன்னுமோர் 30 ஆயிரம் தன்னலமற்ற தெய்வப் பிறப்புகளின் உயிர்க்கொடை விழலுக்கு இறைபடக் கூடாது என்பதில் நான் மிக உறுதியாய் உள்ளேன்.

தவிர இந்த மரண்தண்டனையின் பின் உள்ள அரசியல் எனக்குப் புரிகிறது.

எம்மக்கள் மீதான அடக்கு முறைக்கு தண்டனை கொடுப்பதென்றால் இலங்க ராணுவத்தில் ஒரு ஆள் மிச்சமிராது.

முதலில் மன்னிக்கவும் தாமதமான பதிலுக்கு.

உங்களின் கருத்தை நான் மதிக்கிறேன்.

அதேவேளை தலைவர் மீதான உங்கள் ஒரு குற்றச்சாட்டை மறுதலிக்கும் நிலையிலும் நான் இருக்கிறேன்.

விடுதலைப்புலிகள் அமைப்பு மக்களிடம் இருந்து தோன்றிய ஒரு போராட்ட குழு.

ஆரம்பத்தில் கெரில்லா அமைப்பாக இருந்து படிப்படியாக வளர்ந்து ஒரு கட்டுகோப்பான மரபுவழி இராணுவ அமைப்பாக மாறிய விடுதலைப்போராளிகள்.

சாதரணமாக ஒழுக்க கட்டுப்பாடுகள் நிரம்பிய நாகரீக நாடுகளில் வாழும் எத்தனை குடும்பங்கள் தங்களின் பிள்ளைகளை கட்டுகோப்பாக வளர்க்க முடிகிறது. இருபதினாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளை ஒரு கட்டுகோப்பான நிர்வாகத்தினுள் வழிநடத்த ஒரு ஆற்றல் மிகுந்த தலைமைத்துவம் தேவை அது தலைவர் பிரபாகரனிடம் இருக்கிறது.

ஒரு 100 பேர் வேலை செய்யும் ஒரு அலுவலகத்தில் எத்தனை தவறுகள் நடக்கின்றன. அவை அந்த நிறுவனங்களின் தலைமைக்கு தெரிய எவ்வளவு நாட்கள் எடுக்கின்றன. இது இப்படி இருக்க ஒரு புறம் போராடிக்கொண்டே மறுபுறம் தவறுகளை கண்டறிந்து தண்டனை வழங்க நாட்கள் எடுக்கும். ஆனால் தவறு என்று கண்டறியப்பட்டால் தண்டனை வழங்காமல் தலைவர் இருந்ததில்லை. (இறுதி யுத்த தவறுகளுக்கு தண்டனை வழங்கும் கால அவகாசத்தை/சூழ்நிலையை  எதிரிகள் எமக்கு தரவில்லை).

பாலியல் குற்றங்களுக்காக மரண தண்டனை வழங்கப்பட்ட தளபதிகள் முதல் போராளிகள் வரை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

யாழ்மாவட்டத்தில் சுயநலனுக்காக புலிகளின் பெயரால் கொல்லப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்கப்பட்டு அதை செய்த புலனாய்வு பொறுப்பாளருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது தெரிய வாய்ப்பில்லை.

மக்களின் நிதி மோசடி, ஊழல் போன்றவற்றிக்கு கூட எத்தனையோ வருடங்களாக போராடிய எத்தனையோ போராளிகளுக்கு மரண தண்டனை வழங்கபட்டிருக்கிறது.

என்ன கோசான், இதை இப்போ சொல்வதற்கோ, அறிக்கை மூலம் வெளியிடவோ, உரிமை கூறவோ யாருமே இல்லை என்ற நினைப்பில் தான் குற்றச்சாட்டுகள் எழுந்தமானமாக வைக்கபடுகின்றன.

தலைவர் தவறு இழைக்கவில்லை என்று நான் கூறவரவில்லை. ஆனால் அதை இப்போது விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தான் நினைக்கிறேன். தலைவரும் எங்களை போன்றே ஒரு சாதாரண தமிழ் தாயின் வயிற்றில் பிறந்தவர் தான். அவரை கடவுளாக மாற்றி தவறே இழைக்காதாவராக மாற்றியது அவரை வைத்து வியாபாரம் செய்த/செய்யும் கூட்டம் மட்டும் தான். அவரை புகழ்வதன் மூலம் தங்களுக்கு லாபமீட்டி கொண்ட கூட்டம்.

2009 தை விசுவமடு சந்திப்பில் தலைவர் சொன்ன வசனம் இதுக்கு பொருந்தும் என்று நம்புகிறேன்.

"நான் இருக்கும் வரை இந்த போராட்டத்தை நகர்த்துகிறேன், எனக்கு பிறகு நீங்கள் விடுதலை புலிகள் அமைப்பை மொத்தமாகவோ சில்லறையாகவோ வித்து கொள்ளுங்கோ". "இந்த யுத்தம் முடியும் போது நாங்கள் வென்றிருப்போம் இல்லை நான் இறந்திருப்பேன்."

இந்த பெரிய ஒரு தமிழ் விடுதலை போராளிகளை ஒழுக்க கட்டுப்பாட்டுடன் (உலகம் சொல்லும்) வளர்க்க ஒரு தலைமைத்துவம் வேண்டும். அது என் வாழ்நாளில் தலைவர் பிரபாகரனிடம் கண்டேன். 

இந்த மாவீர்களால் நடாத்தப்பட்ட போராட்டம் "விழலுக்கு இறைத்த நீர்" என்று ஒரு பதத்தை குறிப்பிட்டிருந்தீர்கள்.

இந்த போராட்டத்தால் தான் இன்று எங்கள் இன விடுதலை போராட்டம் உலகமயப்பட்டிருக்கிறது. எங்களுக்கு ஒரு பிரச்சனை இருக்கு என்று உலகத்துக்கு தெரிகிறது. இன்னொரு போராட்டம் இப்படி வரக்கூடாது என்றாவது தீர்வு கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இல்லை என்றால் தீர்மானம் போட்டுவிட்டு சத்தியாக்கிரகம் செய்துவிட்டு பொல்லுகளால் அடிவாங்கி, ரயர் போட்டு கொளுத்தி இலங்கையில் ஒரு தமிழனும் இல்லாமல் பண்ணியிருப்பார்கள் சிங்களவர்கள். இது ஒரு ஊகமாக தான் நான் சொல்கிறேன். ஆனால் அப்படி நடந்திருக்காது என்று உங்களாலும் கூறமுடியாது தானே.

நாங்கள் ஒரு தேசிய இனம், எங்களுக்கு விடுதலை தேவை என்ற எண்ணத்தை விதைத்து சென்றது ஆயுதம் ஏந்திய விடுதலைப்போராட்டம் தான்.

இப்போது திரு.சம்பந்தர் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு அறுவடை செய்யும் வாக்குகள், விடுதலை போராட்டம் என்ற அடித்தளத்தில் உருவானது என்பதை உங்களால் மறுக்கமுடியுமா.?

இந்த போராட்டத்தால் தான்  தமிழர்கள் புலம்பெயர்ந்து இன்னும் தாயகத்தை பொருளாதார ரீதியாக விழாமல் காப்பாற்றி வருகிறார்கள். உள்நாட்டு யுத்தம் நடந்த ஆபிரிக்க நாடுகள் போல இல்லாமல் எமது தாயக மக்கள் இன்னும் பட்டினியால் சாகாமல் இருக்க இந்த புலம்பெயர் பொருளாதாரம் தான் காரணம்.

தாயக மக்களை பயத்தினாலும் அடக்குமுறைகளினாலும் அடக்கிவிட்டால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நினைத்த அரசுக்கு தடைக்கல்லாக இருப்பது புலம்பெயர் தமிழர்கள் தான். அரசு கூட பேச்சுக்கு அழைக்கும் அளவுக்கு பலம் இருக்கு.

நீங்களும் "வாறதாக" குறிப்பிட்டிருந்தீர்கள். நன்றி. அது திரு.சம்பந்தரோ அல்லது திரு சுமந்திரனோ தியாகங்கள் வீண் போகாது, எங்கள் மக்களின் உரிமைகளை வென்று எடுத்து தருவார்களானால் அவர்களை வாழ்த்தும் முதல் மக்கள் கூட்டத்தில் நாங்களும் இருப்போம்.

மௌனிக்கப்பட்ட ஆயுதங்களை கையிலெடுக்க உங்களை அழைக்கவில்லை. உரிமைகளை ஆயுதங்களால் மட்டுமே வென்று எடுக்க முடியாது என்று உணர்ந்து காலங்கள் ஓடிவிட்டன.

அந்த மாவீரர்களால் இன்று எங்களுக்கு தந்திருக்கும் ஒரு பலத்தை கூட ஒற்றுமை இல்லாமல் வீணடிக்க வேண்டாம் என்று தான் உங்களை தாழ்மையாக கேட்டுகொள்கிறேன்

 

 

 

Edited by பகலவன்
எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டன

  • கருத்துக்கள உறவுகள்

பகலவனும் கோசானும் தனிப்பட்ட தாக்குதல்கள் இல்லாமல் articulate ஆக தமது நிலைகளை முன்வைப்பதைப் போல எம்மால் உரையாட முடிந்தால் அதுவே எங்களை ஒன்று சேர்க்கும்! பிறகு சிங்களவன் பிரிக்கிறான் என்ற முறைப்பாடே அர்த்தமற்றதாகி விடும்!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  பகலவன்..

பகவலவனுக்கு வாலை நிமிர்த்தி விடலாம் என்று நப்பாசை

நந்தன் அண்ணா,

ஆயுதங்களால் மட்டும் வால்களை நிமிர்த்தமுடியும் என்று நம்பிய காலம் முடிந்துவிட்டது.

இன்று மௌனிக்கப்பட்ட நிலையில் எழுத்துகளால் முயற்சி செய்கிறேன். சாகுமட்டும் அந்த முயற்சியை செய்வேன்.

ஏன் என்றால் இது எங்கள் வரலாற்று கடமை.

நாங்கள் தனியே ஆயுதங்களால்  தமிழீழம் அடையலாம் என்று நம்பி மட்டும் போகவில்லை. எங்களுக்கு வேறு தெரிவு இருக்கவில்லை என்பதை இவர்களும் உணரும் காலம் வரும். அதுவரை நான் தொடர்ந்தும் போராடுவேன்.

 

பகலவன்,கோசான் சிறந்த முறையில் உங்கள் கருத்துக்களைப்  பதிந்திருக்கிறீகள். இதுதான் இறைய தேவை. ஒருவரை ஒருவர் மடக்குவதையும் மட்டம் தட்டுவதையுமே குறிக்கோளாக கொண்டு அதற்காக, காலத்தையும் வீணாக்கி, கருத்துக்களால் காயப்படுத்தி/காயப்பட்டு எதைச் சாதிக்கப்போகின்றோம்?

சுமுகமான கருத்தாடல்களால்  இடைவெளிகளைக் குறைப்போம். பாராட்டுக்கள்  தொடருங்கள்.        

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகலவன்,

மீண்டும் ஒரு சிந்திக்கத் தூண்டிய பதிவு.

சில பதில்களையும் சில கேள்விகளயும் கேட்டு விடுகிறேன்.

1) உலக ஆயுதப் போராட்ட வரலாற்றில் பிரபாவை போல் ஒரு தனி நபர் ஒழுக்கம் உள்ள மனிதர் இல்லை என்பது நான் எப்போதும் ஏற்றுக் கொண்ட ஒன்று. மட்டுமில்லாமல் குழு ஒழுக்கத்திலும் கூட அவருக்கு அவர் இயக்கத்துக்கு கிட்டே ஒருவரும் வர இயலாது.  நீங்கள் சொல்லும் தண்டனைகள் எல்லாம் நடந்தேறின என்பதை நான் சந்தேகிக்கவில்லை. 

என் விமர்சனம் எல்லாம் அவர் அறிய நடந்த விடயங்கள். கொலைகள் தொடர்பில்தான், கந்தன் கருணை கொலையை ஒரு டெலோ காரன் செய்திருந்தால் அருணாவை விட்டது போல் விட்டிருப்பாரா?

அமிர், நீலன், சரோஜினி யோகேஸ்வரன், யோகேஸ்வரன், சிவபாலன், இன்னும் பலர் ஆமிக்கு என்ன வரைபடமா கீறிக் கொடுத்தார்கள்? இல்லை புலியின் கொள்கைக்கு எதிராக அரசியல் செய்தார்கள் அவ்வளவே. அது கொல்லும் அளவுக்கு குற்றம் ஆகியது ஏன்? 

2) பிரபாவின் சபையில் ஒரு புலிவீரன் நிக்கிறார். ஒரு அப்பாவியை கொண்டதாய் வழக்கு.  அந்த புலிவீரன் சில சந்தர்ப சாட்சியங்களின் அடிப்படையில் அந்த மனிதரை கொண்டதாய் கூறுகிறார். பிரபாவும் அந்த சந்தர்ப சாட்சியங்களை வாங்கிப் பார்கிறார். அவருக்கும் புலிவீரர் ஊகித்தது சரி போலப் படுகிறது. அப்போ பிரபாவின் தீர்ப்பு என்னவாயிருக்கும்? கொலை செய்தது சரி என்றுதானே? இதுதான் பல இடங்களில் நடந்தது. ஒருவரின் உயிரைப் பறிப்பதுக்கான காரணம் ஊகத்துக்கு அப்பால் நிறுவப்பட வேண்டும். ஆனால் புலிகள் தமது போராட்டத்தை விமர்சித்தார், மாற்று வழியில் சிந்தித்தார் என பலரைப் போட்டனர். ஆனந்தராஜாவை போடக் காரணம் அவர் செஞோன்ஸ் மாணவரை ஆமியுடன் புட்பால் விளையாட அனுமதித்தார். நீலனைப் போடக் காரணம் சந்திரிக்காவுடன் சேர்ந்து ஒன்று பட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வு வரைபை எழுதினார் என்பது. ஆளைப் போடுவது என்பதை ஒரு வழியாக தலைவரே அங்கீகரிக்கும் ஒரு இயக்கம் உள்ளே எவ்வளவு கட்டுக்கோப்புடன் இருந்தாலும், வெளியே இருந்து பார்போர்க்கு அவர்கள் பயங்கரவாதிகளாயே தெரியும். தெரிந்தது.

3) இப்போ நாம் இருக்கும் கையறு நிலைக்குத்தான் 30 ஆயிரம் பேரைக் கொடுத்தோமா? புலம் பெயர் மக்களின் இன்புலுன்ஸ் பற்றி நீங்கள் மிகை மதிப்பீடு செய்கிறீர்கள். பிரான்சிஸ் கரிசன் கட்டுரையை வாசியுங்கள் - இவர்களை யாரும் சீந்துவதில்லை என்பதை தெளிவாய் சொல்கிறார். 895 மாவீர்கள் இழப்புடன் 87இல் ஆயுதங்களை மெளனித்திருந்தால் - இதை விட நல்ல நிலையில் இருந்திருப்போம்.

4)தனக்குப் பின் இயக்கத்தை நடாத்துவதாய் சொல்பவர்கள் இயக்கத்தை மொத்தமாயோ, சில்லறையாயோ விற்பார்கள் என்று பிரபா கணித்தது மிகச் சரியானது. அப்படி உணர்ந்தவர் தானிருக்கும் போதே ஒரு தீர்வுக்குப் போயிருக்கலாம் அல்லவா ?

5) உண்மையில் அவரை பற்றி இனி பேசி பயனில்லைத்தான். ஆனால் இன்னும் பலர் அவரை மொத்தமாயும் சில்லறையாயும் வித்து காசு பார்கிறார்களே? அவர்கள் வந்து இங்கே தலைவர் மட்டும் இருந்திருந்தால் - அந்த காலத்தில் - புலி ஆட்சியில் - என்று நீட்டி முழக்கும் போது. அல்லது வாங்கோ எல்லோரும் ஜாலியாய் போய் சாகலாம் எனும் ரீதியில் அரசியல் செய்யும் போது, பிரபாவின் மீது விமர்சனம் தவிர்க்க முடியாது போகின்றது.

பகலவனின் கருத்து எனக்கு வியப்பை தரவில்லை .

முடிந்தவரை இன விடுதலைக்காக போராடினோம் .தியாகம் செய்தோம் .வெளி உலகிற்கு பெயர் வராமல் கூட உயிரை மாய்த்தோம் எதற்காக என்று ? அனைத்தும் உண்மைதான் .வீரம் செறிந்த உலகம் வியக்கும் ஒரு இன விடுதலை போரட்டம் ஒன்றைஅவர்களுக்கு தெரிந்த பாதையில்  நடத்தினார்கள் தான் .அதை எவரும் மறுக்கவில்லை ஆனால் அதை அவர்கள் நடைமுறைபடுத்திய விதத்தில் தான் விமர்சனம் வருகின்றது .

தம்முடன்  உடன்படாதவர்களை எதிரிகளாக துரோகிகளாக பார்த்தது .

வேண்டாத பல கொலைகள் செய்தது .அப்பாவிகளை கூட சந்தேகத்தின் பெயரில் கொன்று குவித்தது

அரசியல் அற்ற வெறும் இராணுவ கண்ணோட்டத்தில் பல விடயங்களை அணுகியது

எவர் சொல்லும் கேளாமல் உலகெங்கும் எதிரிகளை  உருவாகியது 

கடைசியில் விடுதலை போரட்டத்தை பயங்கரவாத போராட்டமாக மாற்றியது .

இது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை அல்லது ஒரு நாளில் அல்லது ஒரு வருடத்தில் சர்வதேசம் எடுத்த முடிவல்ல .படிப்படியாக புலிகளது ஒவ்வொரு பிழையான நடவடிக்கைகளும் சர்வதேசத்தின் அழுத்தை கூட்டிக் கூட்டி இறுதியில் அவர்கள்  எடுத்த முடிவு .

புலிகள் செய்த மிக பெரிய அராஜகங்களை விடுதலைக்காக தியாகத்துடன் நாட்டிற்காக செய்தார்கள் என்று எவராலும் நியாயப்படுத்திவிட முடியாது அப்படியானால் சிங்கள அரசுகள் செய்யும் அராஜகங்களையும் அவர்கள் பாணியில் நியாயப்படுத்துவதை சரி என்றுதான் ஏற்கவேண்டும்.

" எந்த அநியாயத்திற்கும் அநீதிகளுக்கும் எதிராக போராளிகள் போராடுகின்றார்களோ அதே அநியாயங்களையும் அநீதிகளையும் அவர்கள் தமது பண்பாக கொண்டிருக்கமுடியாது "

இதுதான் எனக்கு தெரிந்த போரட்ட விதி .

 

 

கோசான்,

உங்கள் பதிலுக்கும் கேள்விகளுக்கும் முதற்கண் நன்றிகள்.

விடுதலைப்புலிகள் இராணுவரீதியில் வளர்ந்த அளவிற்கு அரசியல் ரீதியில் வளர்ந்தவர்கள் அல்லர் என்ற கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. என்று எமது ராணுவ வல்லமையை அரசியலாக்க முயன்றார்களோ அன்றே எங்கள் போராட்டம் அழிவை நோக்கி நகர்ந்ததில் எனக்கு மாற்று கருத்தில்லை. எங்களது இராணுவ ரகசியங்களை அரசியலாக்க முயன்ற பல சொற்பொழிவுகளை நீங்களும் நானும் கேட்டு இருக்கிறோம்.

யாழ்பாணத்தை 7 நாட்களில் பிடித்து விடும்வோம் என்பதில் தொடக்கி முழு இலங்கையையும் அழித்திடும் வல்லமையை நாங்கள் கொண்டிருந்தோம் என்ற மாயையை உருவாக்கி எங்களை வீழ்த்திய பெருமை அவர்களையே சாரும். என்று அவர்கள் ராணுவ   வல்லமையை மட்டும் வைத்து அரசியல் செய்ய தொடங்கினார்களோ அங்கே தொடங்கியது அவர்களின் அரசியல் வரட்சி. உயிர் போகும் தறுவாயில் கூட தலைவரையும் இயக்கத்தையும் காப்பாற்ற துணிந்த திரு.அன்ரன் பாலசிங்கம் அவர்களை கூட துரோகி ஆக்கிய வல்லமை அவர்களையே சாரும். ஆனால் இன்று அதுவல்ல பிரச்சனை.

உங்களின் அரசியல் கொலைகளுக்கான காரணங்களை என்னால் கூற முடியாமைக்கு வருந்துகிறேன். இன்றும் அந்த அமைப்பின் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கும் ஒருவனாகவே நான் சாக விரும்புகிறேன். அதற்காக என்னை மன்னித்துவிடுங்கள். என்றாவது ஒரு நாள் உங்களை நான் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் நான் பதில் தருகிறேன். பதில்களுக்கு பயந்தவன் அல்ல நான் ஆனால் சில நியதிகளுக்கு உட்பட்டே பொது வெளிகளில் பதில் இடவேண்டும் என்று உணரந்தவன்.

குறிப்பு : கந்தன் கருணை கொலைகள் மன்னிக்க முடியாதவை. அதை செய்தவர்களை நியாயபடுத்த முடியாது. அதை நியாயபடுத்துபவர்களால் எம் மக்களுக்காக நியாய வழியில் போராட முடியாது என்பது என் தனிப்பட்ட கருத்து.

உங்களுக்கான பதிலை இரண்டாவது கேள்வியில் இருந்து ஆரம்பிக்கிறேன்.

எனக்கு தெரிந்தவரையில் யாழ்மாவட்டத்தில் இடம்பெற்ற கொலைகளில் 97 கொலைகள் அப்பாவிகள் கொல்லப்பட்டார்கள். இது எமக்கு தெரிந்தவரையில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில். இதன் பின்னால் எங்களுக்கு தகவல் வழங்குபவர்களின் தனிப்பட்ட பகை, வியாபார போட்டிகள், காதல் போட்டிகள், ஈகோ போன்ற சில்லறையான காரணங்களே இருந்தன. இதற்கான மன்னிப்பு கேட்க கூட அமைப்பு தயாராக இருந்தது. ஆனால் அதற்கான காலம் கை கூடவில்லை. இது எமக்கு தெரிந்தது 2008 நடுப்பகுதியில்.

உண்மையில் ஒருவருக்கான மரணதண்டனைக்கு தலைவரின் உத்தரவாதம் தேவை. அதற்கான சான்றுகளை சமர்பித்து நாங்கள் காத்திருக்க வேண்டும்.  சான்றுகளை பரிசீலித்தே தலைவர் முடிவெடுப்பார். பொதுவாக சான்றுகள் இரண்டு வேறு வேறு மூலங்களில் இருந்து பெறப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் ராணுவமும் சரி புலிகளும் சரி ஏன் இந்த உலகில் இயங்கும் அனைத்து புலனாய்வு இராணுவ அமைப்புகளும் 50:50 சந்தேகத்திலேயே கொலைகள் செய்கின்றன. அது தான் இராணுவ விதி. (துணை : உலக பிரசித்தி பெற்ற உளவு கதைகள்).

சிலவேளைகளில் இலக்கு தப்பி விட கூடாது என்ற அடிப்படையில் முடிவுகள் எடுக்கபடுகின்றன. இருப்பினும் எச்சரிக்கை வழங்கபட்டு தான் பெரும்பாலான கொலைகள் செயப்பட்டன. ஆனால் சில இடங்களில் அப்படி நடக்காமலும் இருக்கலாம்.

ஆனால் தலைவருக்கு கொலை செயப்பட்டது பிழை என்று தெரியும்போது அதற்காக மன்னிப்பு கேட்டகாமல் விட்டது கிடையாது. (துறை சார் போராளிகள் மூலம்) . ஆனால் அந்த உயிர் திரும்ப வரபோவதில்லை ஆனால் எதிர் கால பிழைகளை தவிர்க்கலாம். அந்த பிழைகளுக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு மரண தண்டனை கூட வழங்கபட்டு இருக்கிறது.

உங்களின் கருத்துக்கான ஒரு பதிலாக சொல்கிறேன், எனது தந்தையார் கூட வவுனியாவில் ஒரு விளையாட்டு நிகழ்வில் சிங்களத்தில் பேசினார் என்பதற்காக எச்சரிக்கை கடிதம் அனுப்பபட்டு, வேலையில்  இருந்து ராஜினாமா செய்ய சொன்னார்கள். அவர் செய்யாததால் சுடுமாறு பணிக்கபட்டார். சரத்பாபு (கோண்டாவில் - அர்ஜுன் அறிந்திருப்பார் என்று நினைக்கிறேன்) எனும் போராளி என் தந்தையை சுடுவதற்காக நியமிக்கப்பட்டார். அப்போது வவுனியா மாவட்ட பொறுப்பாளராக இருந்த தினேஷ் (ஈழநாதம் தினேஷ்) இணை எனது தந்தை சந்தித்து தெளிவுபடுத்தி மன்னிப்பு கோரியமையால் அந்த கொலை முயற்சியில் இருந்து தப்பித்தார். இது தான் அன்றைய புலிகளின் அரசியல் நிலைமை. (1987).

இன்னொரு சம்பவம், மறைந்த அமரர் சிவசிதம்பரத்தின் உடல் வன்னியில் பார்வைக்காக வைத்திருந்த போது திரு. ஆனந்த சங்கரி வன்னிக்கு வந்திருந்தார், அவரை கைது செய்ய சிலர் முயற்சி செய்தபோது, தலைவர் அவர்களை வன்மையாக கண்டித்து அந்த கைதிற்கான அனுமதியை வழங்க மறுத்துவிட்டார்.

 

குறிப்பு :

1. புலிகள் பிழைவிடவில்லை என்றுமே நான் விவாதிக்கவில்லை.

2. நானும் ஒரு பரியோவான் கல்லூரி மாணவன்.

 

உங்களின்  மூன்றாவது கேள்விக்கான  பதில்

புலம்பெயர் தமிழர்கள் பற்றி நான் குறிப்பிட்டதை நீங்கள் தவறாக விளங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். நான் அவர்களின் அரசியல் பலம் பற்றி குறிப்பிடவில்லை. அது பற்றி எனக்கு எந்த கருத்தும் இல்லை. நான் அவர்களின் பொருளாதார பலம் பற்றியே குறிப்பிட்டேன். அதை இலக்கு வைத்து தான் இலங்கை அரசாங்கமும் காய் நகர்த்துகிறது என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அண்மைய வடக்கு முதல்வரின் கோரிக்கைக்கு ஜனாதிபதியின் பதிலை நீங்கள் வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். புலம்பெயர் விழா உட்பட.

87 உடன் போராட்டத்தை நிறுத்துவதை பற்றி குறிப்பட்டு இருந்தீர்கள். உண்மையில் அதைவிட பலமான நிலையில் 2002 நாங்கள் பேச்சு வார்த்தைக்கு போகும் போது இருந்தோம். அப்போது நாங்கள் 20 000 போராளிகளை இழந்திருந்தோம். அரசாங்கம் வலிந்து யுத்த நிறுத்தத்தை அறிவித்ததின் பின்னால் அவர்களின் தியாகம் இருந்தது.

இந்த கேள்வியை உங்களால் நிச்சயமாக 2002 இல் கேட்டு இருக்க முடியாது. பேச்சுவார்த்தைகளின் பின் எங்களை பலவீனபடுத்தி, எங்களை வலிந்து போருக்கு இழுத்து, அழிப்பதில் உலக சதி இருந்ததில் உங்களுக்கு சந்தேகம் ஏதும் இருக்காது என்று நான் நம்புகிறேன். தலைவர் பிரபாகரனின் அழிவின் பின் தான் தீர்வு என்பதில் உலகம் தெளிவாக இருந்தது என்பதில் உங்களுக்கும் மாற்று கருத்து இருக்காது இல்லையா. அப்போது மட்டும் தான் பிரிக்கபடாத இலங்கைக்குள் தீர்வு வழங்க முடியும் என்று இந்தியா உட்பட உலகம் நம்பியது. அதற்கான போர் தான் இறுதி போர்.

உங்களின் நான்காவது கேள்வி மிகவும் நியாயமானது.

எத்தனையோ பேர் மனதிலே இருக்கும் கேள்வி. இதை பல பேர் கடைசி கிளிநொச்சி விழுந்த பிறகாவது தலைவர் யுத்தத்தை நிறுத்தி சமாதானத்துக்கு போய் இருக்கலாம் இல்லையா என்று கேட்டிருக்கிறார்கள்.

தலைவர் பிரபாகரன் தான் இந்த மக்களுக்கு/ போராளிகளுக்கு ஒரு வழிகாட்டியாக, போராட்டம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும், ஒரு விடுதலை போராளி என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று காட்டுவதில்  என்றுமே பின் நிற்காதவர்.  நான் மேலே சொன்ன சந்திப்பு கிளிநொச்சி கைப்பற்றபட்ட தினத்திலேயே இடம்பெற்றது. தமிழீழத்துக்கு குறைவான எந்த தீர்வுக்கும் தயாரில்லாத, அதை கைவிட்டால் தனது போராளிகளே தன்னை சுடலாம் என்று அறிவித்த தலைவரால் அதில் இருந்து பின்வாங்க முடியவில்லை.

இன்னும் ஒரு உண்மையை சொல்லப்போனால் தன்னுடன் விடுதலைப்புலிகள் என்னும் மாபெரும் இயக்கத்தின் இராணுவ வல்லமை அழிந்துவிட வேண்டும் என்று எண்ணினார். தன்னுடன் இந்த ஆயுதப்போர் முடிவுக்கு வந்துவிட வேண்டும் என்று எண்ணினார். எத்தனையோ சந்தர்ப்பங்களில் அவரை / அடுத்த கட்ட தளபதிகளை காட்டுக்குள் நகர்த்தி ஒரு கெரில்லா அணியாக போரின் பின்னும் தக்க வைத்திருக்க சந்தர்ப்பங்கள் இருந்தும் அவர் எங்களுக்கு அந்த அனுமதியை அளிக்கவில்லை.

இது உண்மையில் இந்த உலகத்துக்கே அதியசயமான முடிவு. இன்று உலகத்தின் கையிலும் புலிகள் அழிந்தால் தீர்வு கிடைத்துவிடும் என்று நம்பியவர்களுக்குமான கால அவகாசம். தீர்வை கொடுங்கள். ஆக குறைந்தது தீர்வையாவது முன் வையுங்கள். புலிகள் அழிந்து, ஒரு வெடி புலிகளின் ஆயுதத்தில் இருந்து வந்து 6 வருடங்கள். இன்னும் ஏன் தீர்வுக்கு தயக்கம்.  புலிகளை எதிர்த்தவர்களால் கூட அரசியல் செய்ய  முடியாத நிலைமை. அவர்களால் தனியே புலிகளை விமர்சனம் செய்து மட்டுமே பிழைக்க முடியும். (இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா .?). இதை கூடவா உங்களால் உணரமுடியவில்லை கோசான்.

கோசான்,

உங்களின் ஐந்தாவது கருத்து மேலோட்டமாக நியாயமாக இருந்தாலும், தலைவரை மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்பவர்களுக்காக விமர்சனம் வைக்கிறேன் என்ற கருத்து என்னை கடித்த நாயை திரும்ப கடிப்பேன் என்பதற்கு ஒப்பானது. (மன்னிக்கவும் நான் யாரையும் நாயென்று குறிப்பிடவில்லை- ஒரு பழமொழிக்காக).

உங்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இருக்கு என்பதையாவது உங்களின் எழுத்துகளில் காட்டுங்கள் கோசான்.

தலைவரின் அரசியல் பார்வையில் உங்களுக்கு முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் தமிழனுக்காக அடையாளத்தை உருவாக்கி, இன்று தீர்வுக்கான தேடல் வெளியை உருவாக்கி தந்த பெருமை தலைவர் பிரபாகரனை சாரும் என்பதில் உங்களுக்கு மாற்று கருத்து இருக்க முடியாது என்று நம்புகிறேன்.

அதற்காக ஆவது இப்போ அவரை விமர்சனம் செய்து எங்களுக்குள் இருக்கும் இடைவெளியை அதிகரிக்காமல் அரசியல் செயுங்களேன் தயவு செய்து.

(அவர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்பது அல்ல எனது கருத்து)

 

குறிப்பு : இந்த கருத்தை நான் எழுதி கொண்டிருக்கும் போது யாழ் இணையம் தடைப்பட்டமையால் என்னால் பிரசுரிக்க முடியவில்லை. தாமதத்துக்கு மன்னிக்கவும்.

Edited by பகலவன்
சில சேர்க்கைகள் இடப்பட்டன.

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன்,

தயவு செய்து யாழில் தொடர்ந்து எழுதுங்கள். புலிகள் மீதான என் அபிப்பிராயத்தை நான் என் அனுபவத்தின் அடிப்படையில் 83-95, 95-09 என இரெண்டு பிரிவுகளாக காண்கிறேன்.

ஒரு சிறுவனாய் பதின்ம வயதினனாய் நான் கண்டு, பார்த்துப் பழகிய புலிகள் மூலம் அவர்களை பற்றி ஒரு நல்ல அபிப்பிராயம் இருந்தது. இது 95 க்கு பின் இது சிறுகச் சிறுக சரியத்தொடங்கியது.

என்பார்வையும் விசாலமடைந்தது. நிறுவன மயபட்ட புலிகளும் மக்களிடம் இருந்து தம் தொடர் தவறுகளால் அந்நியப் படதொடங்கினர்.

உங்களுடன் உரையாடும் போது 83-95 காலத்துப் அண்ணாமாருடன் உரையாடும் அனுபவம் ஏற்படுகிறது.

நாய்களைகடிப்பதற்க்காக நான் பிரபாவை விமர்சிப்பதில்லை. உண்மையிலேயே பிரபா பல இமாலயத் தவறுகளை விட்டார். இவர்களும் அதே தவறை நாம் தொடர்ந்து விடவேண்டும் என வலியுறுத்தும் போது. தவறை விட்டவரை விமர்சிக்காமல் தவறை விமர்சிக்க முடிவதில்லை.

இரு உதாரணங்கள்.

1) தனிநாட்டுக் கோரிக்கையை பிரபா அழுத்திப் பிடித்தது ஒரு மகாதவறு. பலதடவை பலர் எடுத்துச் சொல்லியும் ஏற்க மறுத்தார். இணைந்த வட-கிழக்கில் பிரபா முதலமைச்சர் ஆக, இந்திய நட்புடன் ஓர் அரசு. நினத்துப்பாருங்கள் நாம் இப்போ இருக்கும் நிலைக்கு அது எவ்வளவு மேல்.

2) இந்த மொத்த சில்லறை வியாபார துதி பாடிகளை வெளியேற்ற தவறியமை. 90 க்கு பின் ஒரு துதி பாடும் கலாச்சாரம்  அவருக்கு தெரிந்தே உருவாகியது. அவரைப் புகழ்ந்து, முருகன் என்று அவர் இயக்கமே பாடல் வெளியிட்டது.

இவ்வாறான தவறுகளை சுட்டாமல் அவர்களின் கொள்கையை விமர்சிப்பது மிகக் கடினமானது.

பிரபா எப்படி பட்ட ஒரு தன்னலமற்ற போராளி ? மாவீரன் ? அவரை விமர்சிக்க ஓடிவந்த சுயநலவாதியான எனக்கு என்ன அருகதையுண்டு? உண்மையில் கனத்த மனத்துடன் தான் அவர் மீதான விமர்சனத்தை நான் முன் வைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.