Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் போட்டியிடுவதா? கூட்டமைப்பு விலகுகின்றது!

Featured Replies

 நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பில் போட்டியிடுவது குறித்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதி நேரத்தில் விலகிக்கொண்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி போட்டியிடப் போகிறதா? இல்லையா? எனும் முடிவு எடுக்கப்படாத நிலை தொடர்ந்து இருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் இது பற்றிய எமது உண்மை நிலையை கொழும்பு வாழ் தமிழர்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டிய கடப்பாடு எமக்கு இருப்பதாக உணர்கின்றோம்.

கொழும்பு மாவட்டத்தில் வாழும் வட-கிழக்குத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
சார்பில் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்ற தொடர்ச்சியான அழுத்தங்கள் எமக்கும் தலைமைப் பீடத்திற்கும் கடந்த சில மாதங்களாகவே விடுக்கப்பட்டு வந்தன. இது குறித்து தமிழரசுக் கட்சியின் பல செயற் குழுக் கூட்டங்களில் இவ் விடயம் விரிவாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. பிரதிநிதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய அளவிற்கும் மேலதிகமாகவே கொழும்பில் வட-கிழக்குத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதுவும். அதை விடவும் அந்த வாக்குகள் தேசியப்பட்டியல் மூலமாக மேலும் ஒரு பிரதிநிதியையும் நாம் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பைக்கூட ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதுவும் இந்த அழுத்தம்
மேலோங்கக் காரணமாகும்.

கடந்த கால தேர்தல்களில் இந்த வாய்ப்புக்கள் தெளிவாகக் கவனிக்கப்படக் கூடியவாறு இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது, நேசசக்தியாக மனோகணேசனையும் சேர்த்துக் களம் இறங்குவதற்கான யோசனையும் சாதகமாகப் பரிசீலிக்கப்பட்டது.

இந்த நிலைமை இன்றுவரை நீடிக்கின்றபோதும் மனோ கணேசன் ஐக்கிய தேசியக் கட்சிப் பட்டியலில் களமிறங்குகிறார் என உறுதியான செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இங்கு தமிழர்கள் குழப்பமடைந்துள்ள நிலைமை யதார்த்தமானதே.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழு மனோ கணேசனுடன் இந்த வார முற்பகுதியில் இதுபற்றி மேலும் ஆலோசனை நடத்தியது. இந்த சந்திப்பு தொடர்பான மேலதிக விவரங்களைத் தற்போது வெளியிடுவது ஏற்றதாக இருக்கும் என நாம் கருதவில்லை. இருந்தபோதும், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அது சார்ந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கொழும்பு மாவட்டத் தேர்தல் தொடர்பில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், யாருக்கு எமது மக்கள் ஆதரவை வழங்கவேண்டும். தமிழர் வாக்குப்பலம் சிதறுண்டுபடாதவாறு ஒட்டுமொத்தத் தமிழருக்கும் நன்மை பயக்கக்கூடியவாறு அது எவ்வாறு பிரயோகிக்கப்படலாம் என்பன போன்ற விடயங்கள் பற்றி மக்களுக்கு விரைவில் தெளிவுபடுத்துவோம். முடிவுகள் எதுவாகவிருப்பினும் அவை நிச்சயம் எமது மக்களது எதிர்கால நலன்களை முன்னிறுத்தி எடுக்கப்படுவனவாகவே அமையும் என்பதை உறுதியாக சொல்லிக்கொள்ள விரும்புகிறோமென  சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/news/41515/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரதிநிதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய அளவிற்கும் மேலதிகமாகவே கொழும்பில் வட-கிழக்குத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதுவும். அதை விடவும் அந்த வாக்குகள் தேசியப்பட்டியல் மூலமாக மேலும் ஒரு பிரதிநிதியையும் நாம் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பைக்கூட ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதுவும் இந்த அழுத்தம் மேலோங்கக் காரணமாகும்.

சும்மா சொல்லாதிங்க சார் , அந்த மேலதிக தேசிய பட்டியல் முலம் இன்னுமொரு பின்கதவை புகுத்துவத்தான் உங்கள் முழுநோக்கம்..நீங்கள் அப்படி செய்தால் மனோ கணேசன் வடகிழக்கில போட்டிபோடுவார் ...அவர் உங்களை விட நேர்மையானவர் , சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் குறைவு . சனம் மற்றம் ஒன்றை எதிர்பாத்து காத்துகொண்டு இருப்பவர்கள் அவருக்கும் கொஞ்சம் அதிகமாகவே போடுவார்கள். கடைசியில், மேலுமொரு தேசிய பட்டியல் உறுப்பினருக்கு வெளிக்கிட்டு உள்ளதும் போகும்..அந்த பயத்தில்தான் விலகினீர்கள் ...

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடவேண்டும். அநேகமாகப் போட்டியிடும் என நினைக்கிறேன். 

பதிவு ஒர் ஊடக விபசாரம் செய்யும் இனையத்தளம். அதை இன்னும் சிலர் நம்பிக்கொண்டு இருப்பது வேடிக்கையிலும் வாண வேடிக்கை!

கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடவேண்டும். அநேகமாகப் போட்டியிடும் என நினைக்கிறேன். 

பதிவு ஒர் ஊடக விபசாரம் செய்யும் இனையத்தளம். அதை இன்னும் சிலர் நம்பிக்கொண்டு இருப்பது வேடிக்கையிலும் வாண வேடிக்கை!

ஏன் மகேஸ்வரனைப்போல தோட்டக்காட்டானுக்கு வாக்களிக்காமல் யாழ்ப்பாணத்தவனுக்கு வாக்களியுங்கள் என்று கேட்பார்களோ? எமக்கு கூட்டணியினரை விட மனோகணேசன் மற்றும் ரவிராஜ் இணைந்து ஆற்றிய பங்குதான் அதிகம்.

அண்மையில் குமரகுருபரன் ஒரு பேட்டி வழங்கி இருந்தார். அந்தப் பேட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிட வேண்டும் என்று பல காரணங்களைக் கூறிக் கொண்டிருந்தார்.

அது போல பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து பிள்ளையான் மட்டக்களப்பில் பேசிய ஒரு பேச்சையும் கேட்க நேர்ந்தது.

இந்த இரண்டையும் கேட்ட போது  தமிழர்கள் எவ்வளவு கடைந்தெடுத்த பிரதேச வாதிகள் என்பதை நினைத்து வெட்கப்பட்டேன்.

கொழும்பில் வாழும் தமிழர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு பிரதிநிதித்துவம் கிடைக்குமளவிற்கு வாக்களிப்பார்கள் என்பது எவ்வளவு தூரம் யதார்த்தமானது என்பது புரியவில்லை.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சுமார் 14 இலட்சம் வாக்குகள் அளிக்கபட்டன. அதன்படி பாரத்தால் ஒரு வேட்பாளரைத் தெரிவு செய்யும் தகுதியைப் பெறுவதற்குக் கூட சுமார் 70000 ஆயிரம் வாக்குகள் பெறப்பட வேண்டும். 

அது மட்டுமல்லாமல் மக்கள் விடுதலை முன்னணி சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் அந்த சிறுகட்சிகளிற்கான பிரதிநிதித்துவத்திற்காக போட்டியிடும். இந்த நிலையில் தனது பண பலத்தினால் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வரை பெறக் கூடிய துமிந்த சில்வா சுயெட்சையாகப் போட்டியீடும் நிலையு;ம ஏற்படக்கூடும்.

எனவே வடக்கு கிழக்குத் தமிழர்களின் வாக்குகளைப் பெறப் போகிறோம் எனக் கூறிக் கொண்டு கொழும்பில் போட்டியிட்டால் மனோ கணேசனின் வாக்குகளைப் பிரிப்பதொன்றே முடியும். 

ஏற்கனவே ரணில் சம்பிக ஹிருணிகா ரவி கருணாநாயக்கா சுஜீவ சேனசீங்க றோசி சேனநாயககா எனப் பலம் வாய்ந்த பலரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் நிலையில் மனோ கணேசனின் வாக்குகளைப் பிரித்து கொழும்பில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வது ஒன்றே இவர்களால் முடியும்.

வடக்கு கிழக்குத் தமிழர்களீல் பலரும் மனோ கணேசனுக்கு வாக்களிக்க கடமைப்பட்டிருக்கீறார்கள். காரணம் யுத்த காலத்தில் கொழும்பில் தமீழர்கள் கைது செய்யப்படும் தருணங்களில் எல்லாம் மக்கள் மனோ கணேசனின் அலுவலகத்தில் தான் போய் நின்றார்கள். (கொழும்பில் தங்கியிருந்த சுமந்திரனிடம் எத்தனை பேர் போய் நின்றார்கள் என்று கொழும்பில் வாழ்ந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள்).

அத்துடன் நான் ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்ததைப் போல அந்த தொலைபேசி உரையாடலில் மனோ கணேசன் குறிப்பிட்டதைப் போல (நீங்கள் கொழும்பில் போட்டியிட்டால் நாங்கள் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் போட்டியிடுவோம்) அவர்களும் வடக்கு கிழக்கில் களமிறங்கினால் இவ்வாறு கொழும்புத் தமிழன் யாழ்ப்பாணத்துத் தமிழன் மட்டக்களப்புத் தமிழன் என்று பிரதேச வாதத்திற்குட்பட்டு கிளிநொச்சியிலும் வன்னியிலும் வாழும் மலையகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மக்களின் வாக்குகளில் கணிசமான வாக்குகளைப் பிரிக்க மனொ கணேசனாலும் முடியும்.

காணாமல் போனவர்களுக்காகவும் நில ஆக்கிரமிப்பிற்கெதிரான போராட்டங்களீலும் கொழும்பிலிருந்து சென்று தொடர்ந்து கலந்து கொண்டு வந்த மனோ கணேசன் குகவரதன் போன்றவர்களுக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்கு கொழும்பில் போட்டியிட்டு அவரது பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வது தான் மிகச் சிறந்த வழி என சுமந்திரனும் சம்பந்தனும் கருதினால் போட்டியிடலாம்.

இங்கே சுமந்திரனதும் சம்பந்தனதும் பெயர்களைக் குறிப்பிட்டதற்குக் காரணம் டஏற்கனவே பேட்டிகளில் பிரேமச்சந்திரன் அடைக்கலநாதன் போன்றோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடாது என்று கூறி அதற்கான காரணங்களையும் முன்வைத்திருந்தனர்.

தமிழர்களது நலன்களை விட மனோ கணேசனுக்கு தான் விட்ட சவால் தான் முக்கியம் என்று சுமந்திரன் கருதுவது தான் இந்த கொழும்பில் போட்டி என்ற சலசலப்பிற்குக் காரணம்...

 

ஏற்கனவே வன்னியில் பிரதேச வாதத்தைப் புகுத்தி மலைநாட்டை பூர்வீகமாகக் கொண்ட மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக மின்னல் ரங்காவின் பிரஜைகள் முன்னணி களத்தில் குதித்துள்ளது தெரிய வருகிறது. யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட ரங்கா தனது பாம்புக்கு வாலையும் வேறு எதெற்கோ தலையையும் காட்டும் குணம் யாழ்ப்பாணத்தில் எடுபடாது என்பதால் சென்ற முறை ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நுவரெலியாவில் போட்டியிட்டார். பின்னர் நாமல் றாஜபக்சவுடன் ஒட்டிக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி மகிந்தவிற்கு முட்டுக் கொடுத்தார். இப்போது இரு கட்சிகளும் அவரைக் கழற்றி விட்டுள்ள நிலையில் (இது வரையுள்ள நிலவரம்) எங்கே போட்டியிடுவதென்று முழித்துக் கொண்டிருக்கிறார்.

மஹாறாஜா உரிமையாளரை கைக்குள்ளே போட்டுக் கொண்டு தனது ஊடகபலத்தின் மூலம் மீண்டும் பாராளுமன்றம் சென்று விடலாம் என காய்களை நகர்த்தும் ரங்காவும் வன்னியில் இறங்கி மனோ கணேசனும் அங்கு இறங்கும் நிலை தமீழர்களை பிரதேச ரீதியாக மேலும் மேலும் பலவீனப்படுத்தவே உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் பல்லினக் கலாசாரமிக்க நகரங்களில் வாழ்ந்துகொண்டு தமது தொகுதிக்கு சேவை செய்யும் நபர் எவர் எனப் பார்க்காது தமிழர் என்ற காரனத்தால் அவர்களுக்கு வாக்களித்து மற்றும் வாக்களிக்குமாறு கோருவது மட்டும் இனவாதம் இல்லை எனக் கருதுகிறார்களாம்.  இதற்காகவும் சேர்த்து அவர்கள் வெட்கப்படவேண்டும்!?

  • கருத்துக்கள உறவுகள்

ல் பலரும் மனோ கணேசனுக்கு வாக்களிக்க கடமைப்பட்டிருக்கீறார்கள். காரணம் யுத்த காலத்தில் கொழும்பில் தமீழர்கள் கைது செய்யப்படும் தருணங்களில் எல்லாம் மக்கள் மனோ கணேசனின் அலுவலகத்தில் தான் போய் நின்றார்கள். (கொழும்பில் தங்கியிருந்த சுமந்திரனிடம் எத்தனை பேர் போய் நின்றார்கள் என்று கொழும்பில் வாழ்ந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள்).

 

காணாமல் போனவர்களுக்காகவும் நில ஆக்கிரமிப்பிற்கெதிரான போராட்டங்களீலும் கொழும்பிலிருந்து சென்று தொடர்ந்து கலந்து கொண்டு வந்த மனோ கணேசன் குகவரதன் போன்றவர்களுக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்கு கொழும்பில் போட்டியிட்டு அவரது பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வது தான் மிகச் சிறந்த வழி என சுமந்திரனும் சம்பந்தனும் கருதினால் போட்டியிடலாம்.

 

யதார்த்தத்தை உணர்த்தும் வரிகள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலர் பல்லினக் கலாசாரமிக்க நகரங்களில் வாழ்ந்துகொண்டு தமது தொகுதிக்கு சேவை செய்யும் நபர் எவர் எனப் பார்க்காது தமிழர் என்ற காரனத்தால் அவர்களுக்கு வாக்களித்து மற்றும் வாக்களிக்குமாறு கோருவது மட்டும் இனவாதம் இல்லை எனக் கருதுகிறார்களாம்.  இதற்காகவும் சேர்த்து அவர்கள் வெட்கப்படவேண்டும்!?

அண்ணே நீங்கள் எங்கேயோ போய்விட்டீர்கள் . நீங்கள் மட்டும் ஏன் இப்படி ? அன்றைக்கு சொன்னீர்கள், பிரபாகரன் ஒரு சிறந்த வீரர் அல்ல ஆனால் அவர் ஒரு சிறந்த கோடினட்டர் என்று. இன்றைக்கு இப்படி. நீங்கள்தான் thinking out of the boxக்கு சிறந்த உதாரணபுருஷர். 
வாழ்க வளர்க !!!!

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் பல்லினக் கலாசாரமிக்க நகரங்களில் வாழ்ந்துகொண்டு தமது தொகுதிக்கு சேவை செய்யும் நபர் எவர் எனப் பார்க்காது தமிழர் என்ற காரனத்தால் அவர்களுக்கு வாக்களித்து மற்றும் வாக்களிக்குமாறு கோருவது மட்டும் இனவாதம் இல்லை எனக் கருதுகிறார்களாம்.  இதற்காகவும் சேர்த்து அவர்கள் வெட்கப்படவேண்டும்!?

வாலி சார் இது இன வாதம் அல்ல. தமிழ் இனத்தின் இருப்பு மற்றும் அவர்களுடைய   பிரதிநிதித்துவம் சார்ந்த வாதம். சிங்களத்துடன் இணக்க அரசியல் செய்து கொண்டு தமிழர்களுக்கிடையில் சிண்டு முடியும் வேலை செய்பபவர்களுக்கு இந்தத் தேர்தலில் நிச்சயமாக அடி விழும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாலி சார் இது இன வாதம் அல்ல. தமிழ் இனத்தின் இருப்பு மற்றும் அவர்களுடைய   பிரதிநிதித்துவம் சார்ந்த வாதம். சிங்களத்துடன் இணக்க அரசியல் செய்து கொண்டு தமிழர்களுக்கிடையில் சிண்டு முடியும் வேலை செய்பபவர்களுக்கு இந்தத் தேர்தலில் நிச்சயமாக அடி விழும்.

அதைத்தான் நானும் சொல்லுறன் வாத்தியார் ஸார். மனோ கணேசன் தான் கட்சி தொடங்கியதிலிருந்து சிங்கள இனவாதக் கட்சியான யூஎன்பி சீட்டிலேயே கேட்டுக் கொண்டு இணக்க அரசியல் செய்பவர். உலகில் பிரிக்க முடியாத சம்பந்தங்களில் மனோ - யூஎன்பி உறவும் ஒன்று. இங்கு மனோ ஏதோ வெட்டிக் கிழித்துவிட்டார் என சிலர் கொக்கரிக்கின்றார்கள். மனோ செய்துகொண்டு இருப்பது சந்தர்ப்பவாத அரசியல். இவர்தான் தனக்கு வெற்றி கிட்டாது எனப்பயந்து தேர்தலுக்கு முன்பாக மகேஸ்வரனைக் கொல்லும் முயற்சியில் ஈடுபட்டார் என் அப்போது கொழும்பில் பேசிக்கொண்டார்கள். அப்போது அவரின் நடவடிக்கை அப்படித்தான் இருந்தது. அதில் உண்மையும் இல்லாமலும் இல்லை. பழி வேறு இடத்தில் விழுந்தது.  இப்போது முடிந்தால் மனோ வடகிழக்கில் போட்டியிட்டு வென்று காட்டட்டும். நிச்சயம் கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடவேண்டும். அப்படிப் போட்டியிட்டால் ஒர் ஆசனம் கிடைப்பது உறுதி. மனோ கடந்த முறை தனது சகோதரருக்காக கொழும்பை விட்டு கண்டியில் கேட்டு தோற்றது வரலாறு!

  • கருத்துக்கள உறவுகள்

அப்புக்காத்து சும்.. தன்ர கோட்டையை விட்டிட்டு வட்டுக்கோட்டையில நிற்கிராராம். வெற்றிய நாளை சரித்திரம் சொல்லும் என்று பாட வசதி செய்ய வாய்ப்பு இங்கினை அதிகம் போல. டக்கி அங்கிளுக்கு போட்டி தமிழ் தேசியக் கூத்தமைப்பு என்றாகிட்டு. ;)

திருகோணமலையில் மக்கள் ஆதரவினை அதிகமாகக் கொண்ட தமிழர் பேரவைத் தலைவர் ஒருவரை தேர்தலில் தனக்குப் போட்டியாக வருவார் என்பதற்காக சில ஆண்டுகளுக்கு முன்னர் போட்டுத் தள்ளினார் 'ஒரு இதயங்களால் இணைந்த காதலன்' எனவும் திருகோணமலையில் பேசிக் கொண்டார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.