Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெர்மனியில் விநோதச் 'சம்பவம்' - இளம்பெண்ணைப் பின்தொடர்ந்த அணிலுக்கு 'சிறை'

Featured Replies

ஜெர்மனியில் விநோதச் 'சம்பவம்' - இளம்பெண்ணைப் பின்தொடர்ந்த அணிலுக்கு 'சிறை'

'சிறை' பிடிக்கப்பட்ட அணில்.
'சிறை' பிடிக்கப்பட்ட அணில்.

ஜெர்மனியில் இளம்பெண்ணை பின்தொடர்ந்ததாக அணில் ஒன்றை அந்நாட்டு போலீஸார் 'கைது' செய்து சிறைபிடித்தனர்.

நார்த் ரைன் வெஸ்ட்ஃபேலியாவில் உள்ள Bottrop பகுதியில் போலீஸுக்கு வழக்கத்துக்கு மாறான புகார் வந்தடைந்தது. தன்னை ஒரு அணில் பின்தொடர்வதாகவும், உடனடியாக காப்பாற்றும்படியும் அந்த இளம்பெண் கேட்டுக் கொண்டார். புகாரைத்தொடர்ந்து அங்கு விரைந்த போலீஸார், அணிலை 'கைது' செய்தனர்.

அப்போது அந்த அணில் மிக சோர்வான நிலையில் இருப்பதை போலீசார் உணர்ந்தனர். உடனடியாக அணிலுக்கு தேனை ஊட்டி, அதற்கு தெம்பூட்டினர். அணில் கைது செய்யப்பட்டது மற்றும் அதற்கு தேன் கொடுக்கும் காட்சியை அவர்கள் சமூக வலைதளத்தில் பகிர இதுவரை அந்த வீடியோவை 325,711 பேர் பார்த்துள்ளனர். ஜெர்மனி போலீசாரின் ஃபேஸ்புக் பக்கத்துக்கும் லைக்குகள் கூடியுள்ளன.

இது தொடர்பாக ஜெர்மனி போலீஸார் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், "அணில் தற்போது எங்களது கட்டுப்பாட்டில் உள்ளது. அதன் உடல்நிலை தேர்ந்த உடன் மீட்பு மையத்துக்கு அனுப்பி விடுவோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அணிலுக்கு தெம்பூட்டும் செயல் ஒரு பக்கம் இருக்க இந்த 'கைது' நடவடிக்கையை ஜெர்மனி காவல்துறை மற்ற புகார் நடவடிக்கைகளைப் போல தீவிரமாக செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/world/ஜெர்மனியில்-விநோதச்-சம்பவம்-இளம்பெண்ணைப்-பின்தொடர்ந்த-அணிலுக்கு-சிறை/article7429942.ece

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தண்ணீர்  தாகத்தில்  வந்த அணிலை போலிசில் காட்டிக்கொடுத்தது  நியாயமா? :(
பெண்களுக்கு எப்பவுமே அவசர புத்திதான். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

அவசர புத்தி இல்ல சந்தேக புத்தி. அணில் பிந்தொடர்ந்து வந்து "ரேப்பா" பண்ணிடும் இல்லை இல்ல. அப்புறம் எதுக்கு.. இந்தக் கூத்து. இதில ஜேர்மன் காவல்துறை வேற கடமையை செய்யுதாம். :unsure::unsure:

  • தொடங்கியவர்

ஜேர்மன் காவல்துறை என்றால் அப்படித்தான், இங்கிலாந்து காவல்துறை மாதிரி இல்லை.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் காவல்துறை என்றால் அப்படித்தான், இங்கிலாந்து காவல்துறை மாதிரி இல்லை.:grin:

அணில்   சோர்வாக இருந்ததால் ரவுண்ட் அப் செய்து  பிடித்திருப்பினம்.
அணில் உசாராக இருந்திருந்தால் ஜேர்மன் போலீசுக்கே தண்ணி காட்டியிருக்கும்

  • தொடங்கியவர்

அணில்   சோர்வாக இருந்ததால் ரவுண்ட் அப் செய்து  பிடித்திருப்பினம்.
அணில் உசாராக இருந்திருந்தால் ஜேர்மன் போலீசுக்கே தண்ணி காட்டியிருக்கும்

இளம் பெண்ணை பின் தொடர்ந்ததால் அணில் எப்படி இருந்திருக்கும் என்று யோசியுங்கோ வாத்தியார்.:shocked:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அணிலார்கள் ஒரு மார்க்கமாகவே கிளம்பி இருக்காங்க.

ஜேர்மனியில் அப்படின்னா..

Squirrel having a rest

குடி போதையில் அணிலார்..

பிரிட்டனில் பப்புக்குள் நுழைந்து குடித்துவிட்டு அடாவடியில் ஈடுபட்டுள்ளார் ஒரு அணிலார். பின்னர் குடி போதையில்.. பப் குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டு.. வெளியில் விடப்பட்டுள்ளார்.

A "drunk" squirrel has caused hundreds of pounds of damage at a private members' club.

"I've never seen a drunk squirrel before. He was sozzled and looked a bit worse for wear, shall we say."

Mr Boulter, who estimated he lost about £300 in the incident, eventually caught the squirrel in a waste paper bin and released it out of the window.

http://www.bbc.co.uk/news/uk-england-hereford-worcester-33541502

  • கருத்துக்கள உறவுகள்

squirrel-main_1531675a.jpg

இது தமிழ்ச் சிறியின் அணிலைப்போல உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கரப்பான் பூச்சியைக் கண்டாலே... கதிரையில அல்லது கட்டிலுக்கு மேல ஏறி நின்று காவடியாட்டம்  ஆடிற எமது இளைய தலைமுறையைக் கண்டு.. பல தடவை ஆச்சரியப் பட்டிருக்கிறேன்!

அதனால் இந்த ஜெர்மன் பெண் பயந்தது பற்றி... எனக்கு எந்த ஆச்சரியமும் ஏற்படவில்லை!:innocent:

மிருகாபிமானத்துடன் செயல் பட்ட ஜெர்மன் பொலிசாருக்கு நன்றி!

என்ன அணிலார்கள் ஒரு மார்க்கமாகவே கிளம்பி இருக்காங்க.

ஜேர்மனியில் அப்படின்னா..

Squirrel having a rest

குடி போதையில் அணிலார்..

பிரிட்டனில் பப்புக்குள் நுழைந்து குடித்துவிட்டு அடாவடியில் ஈடுபட்டுள்ளார் ஒரு அணிலார். பின்னர் குடி போதையில்.. பப் குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டு.. வெளியில் விடப்பட்டுள்ளார்.

A "drunk" squirrel has caused hundreds of pounds of damage at a private members' club.

"I've never seen a drunk squirrel before. He was sozzled and looked a bit worse for wear, shall we say."

Mr Boulter, who estimated he lost about £300 in the incident, eventually caught the squirrel in a waste paper bin and released it out of the window.

http://www.bbc.co.uk/news/uk-england-hereford-worcester-33541502

தற்போது அவர்கள் சேரும் காலம் தான்

http://newsforsquirrels.blogspot.ca/2012/02/squirrel-facts-mating-and-birth.html

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது அவர்கள் சேரும் காலம் தான்

அணில்.... துள்ளி விளையாடுதே தவிர, சேர்ந்த மாதிரி தெரியவில்லை.
முதலே... இந்த அணில்கள்... இருக்கிற சக்தி எல்லாத்தையும், வீணாக்கினால்.... 
பிறக்கப் போகிற, "அணில் குஞ்சு"  பாவமில்லையா?:innocent:

அணில்.... துள்ளி விளையாடுதே தவிர, சேர்ந்த மாதிரி தெரியவில்லை.
முதலே... இந்த அணில்கள்... இருக்கிற சக்தி எல்லாத்தையும், வீணாக்கினால்.... 
பிறக்கப் போகிற, "அணில் குஞ்சு"  பாவமில்லையா?:innocent:

உங்களின் அணிலைப்பற்றி உங்களுக்குத்தானே தெரியும்.மொத்தத்தில் உங்களை மாதிரியே உள்ளது

baby-squirrels3.jpg

               Baby+Beebz.jpg

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் அணிலைப்பற்றி உங்களுக்குத்தானே தெரியும்.மொத்தத்தில் உங்களை மாதிரியே உள்ளது

ஆ.............. 
உங்கள், பாராட்டுக்கு...... நன்றி, நீலப் பறவை.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

               Baby+Beebz.jpg

இது எலி மாதிரி எல்லோ இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

அணிலைப்பிடித்து உள்ளே போட்டு என்ன பயன்...

குற்றம் பெருகாதிருக்க

அதை வளர்த்த

பயிற்சியளித்த பெண்ணையல்லவா காவலில் வைக்கணும்....:shocked:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.