Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது

Featured Replies

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது

JUL 20, 2015 | 5:17by கார்வண்ணன்in செய்திகள்

H M G S Palihakkaraவடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்தை உருவாக்கும் முயற்சிகளை தேர்தல் முடிந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்கார தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்தை உருவாக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்திருந்த நிலையிலேயே, ஆளுனர் தரப்பில் இந்த முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்தை உருவாக்க முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அனுமதி மறுத்து வந்தது.

எனினும், ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், அண்மையில் மாகாண முதலமைச்சர்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சந்தித்த போது, வடக்கு மாகாணசபை முதலமைச்சர் நிதியத்தை உருவாக்க அனுமதி அளிப்பதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர், சி.வி.விக்னேஸ்வரன், முதலமைச்சர் நிதியத்தை உருவாக்குவது தொடர்பாக ஆளுனருடன் கலந்துரையாடி அவரது கருத்தை அறியும்படி, அவை முதல்வர் சி.வி.கே.சிவஞானத்திடம் கேட்டிருந்தார்.

இதையடுத்து, அவர் வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்காரவை அவர் சந்தித்துப் பேசினார்.

இப்போதே அவர், நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று பதிலளித்துள்ளார்.

இந்த தகவலை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் லண்டனில் வெளியிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/07/20/news/7990

  • கருத்துக்கள உறவுகள்

திரும்ப அவர் வருவார் என்ற எதிர்பார்ப்பில்தான். 

சுமந்திரன் இருக்கின்றார் வழக்கு போட்டு வெல்லுவார் ...அதனை வெற்றி என்று கும்மாளம் அடிக்க கொஞ்சம் வரும் 

  • கருத்துக்கள உறவுகள்

வேதாளம் அல்ல. சிங்களப் பேரினவாதப் பூதம். அது இறங்குவும் இல்லை ஏறவும் இல்லை. எப்பவும் உச்சில தான் நிற்குது. எங்கட ஆக்கள் குறிப்பாக சம் சும் கும்பல்.. டக்கிளஸ்.. கருணா.. போன்ற கோமாளிகள் தான் அது இறங்குது ஏறுது என்று மாயை வித்தை காட்டி தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறார்களே தவிர.. அந்தப் பூதம் கொள்கையில் நிலையா உச்சிலையே நிற்குது. பிரபாகரன் என்ற அந்தத் தலைமையில் அமைந்த புலிகளை தவிர அந்தப் பூதத்துக்கு இந்த உலகில் எதற்கும் பயமில்லை. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

வேதாளம் அல்ல. சிங்களப் பேரினவாதப் பூதம். அது இறங்குவும் இல்லை ஏறவும் இல்லை. எப்பவும் உச்சில தான் நிற்குது. எங்கட ஆக்கள் குறிப்பாக சம் சும் கும்பல்.. டக்கிளஸ்.. கருணா.. போன்ற கோமாளிகள் தான் அது இறங்குது ஏறுது என்று மாயை வித்தை காட்டி தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறார்களே தவிர.. அந்தப் பூதம் கொள்கையில் நிலையா உச்சிலையே நிற்குது. பிரபாகரன் என்ற அந்தத் தலைமையில் அமைந்த புலிகளை தவிர அந்தப் பூதத்துக்கு இந்த உலகில் எதற்கும் பயமில்லை. :grin:

குனிந்தா சிங்களம் அரைக்கும்

நிமிர்ந்தா தான் ஏதாவது பெறமுடியும்

அதை தலைவரால் மட்டுமே உணரமுடிந்தது

செய்து காட்ட முடிந்தது

வெள்ளை கொடியை பிடித்து சரணடைந்து விட்டு சிங்களவனுக்கு பயம் என்று இப்பவும் கதை அழகின்றீர்கள் .

சிங்களவன் பயந்ததும் பயப்பிடுகின்றதும்  இந்தியாவிற்கு மட்டும் தான் ஆனால் அதற்காக அவர்கள் செய்யும் ராஜதந்திரம் விளையாட்டுகள் சொல்லி வேலையில்லை .

இந்தியாவில் இத்தனை தமிழர்கள் இருந்தும் ஒரு மாநிலத்தில் ஆட்சியில் இருந்தும் டெல்கி சிங்களம் பக்கம் சாய்ந்திருப்பதை தடுக்கமுடியவில்லை .எல்லாம் குழந்தை போராளி விட்ட பிழை .

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இந்தியாவையே பயப்பிடுத்தின ஆக்கள் எல்லே. சிங்களவன் எங்களுக்கு ஜுஜுப்ஸ் மாதிரி. ஆனால் நெஞ்சை நிமித்திக் கொண்டல்லே ஆயுதங்களை மவுனிச்சனாங்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி வரை சரணடைய மாட்டோம் என்பது தான் இறுதி வரை சொல்லப்பட்டு வந்த செய்தி. வெள்ளைக்கொடி விவகாரம்.. நோர்வேயின் முன்னெடுப்பு. அது காயமடைந்த போராளிகள் மக்களை மனிதாபிமானத்தின் நிமித்தம் காக்கும் செயல். அதனை கூட நிராகரித்து அவர்களைக் கொன்றது தான் இன்று சிங்களவனை சர்வதேச விசாரணை என்று கொண்டு போய் தொந்தரவு செய்கிறது.

ஏலவே 1972 இலும் 1987/88 பல்லாயிரக்கணகான சிங்கள இளைஞர்களை கொன்று குவித்த போதும்.. இந்திராகாந்தி அம்மையார் 25,000 சிங்கள இளைஞர்களை பேரினவாதிகளுக்கு சார்ப்பாக கொன்று குவித்தார்...1972.

இந்தியாவுக்கு சிங்களம் பயப்படும் காலம் ஒன்றிருந்ததில்லை. அதனால் அது சீனாவையும் பாகிஸ்தானையும் அரவணைக்கிறது. இந்தியா சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் தோற்ற நாடு. அதை அறியாமல் இங்கு சிலர்.

நாங்கள் இந்தியாவை வென்றோம்.. உலக நாடுகள் அநாவசியமாக எமது போராட்டத்தில் தலையிடாத கொள்கையை கொண்டிருந்ததால். இன்றைய சூழல் அதற்கான ஏற்பாட்டைக் கொண்டதல்ல. அதனால் உலக அரச பயங்கரவாதங்கள் எல்லாம் இணைந்து எம்மை அழித்தன. இன்றேல் சிங்களவனால் எம் மண்ணில் ஒரு அடியை தானும் தக்க வைத்திருக்க முடியாது.

திரும்ப திரும்ப அரசியல் விரல் சூப்பிகளுக்கு இதை எழுதி எதுவும் புரியப் போவதில்லை என்பதும் எமக்குத் தெரியும். அதுகள் குளறி அழும் பால்குடிகள் என்பதும் யாழ் அறியும். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

உலகநாடுகள் எல்லாம் சேர்ந்து ஏன் அடிக்க வேணும்????ஒரு இந்தியா போதாதா? தங்கள் தலைவனைக் காப்பாற்ற வக்கில்லாத இந்தியா ஒரு நாடு அதற்கொரு கொள்கை???????????

 

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சரி. முதலமைச்சர் விக்கியர் கேட்கிறார், அவசர செலவாம், என்று வெளிக்கிட்டு உங்க கதவத் தட்ட ஒரு 'ஜில்மாற்' கூட்டம் இருக்கும் வரை, அனுமதி கொடாமல் இருப்பது நல்லது தான்.

இயக்கப் பெயரில, 100 க்கு 20 கொமிசன் எண்டு சொல்ல, வெளிக்கிட்டு 100 யும் சுவாகா பண்ணி, இப்ப நாடு மாறி ஆகா, ஓகோ எண்டு இருக்கிற கூட்டமும் இருக்குது தானே.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் தெளிவாக, பணம் யாரிடம் இருந்து, வெளிநாட்டு அரசுகளிடமிருந்து, அல்லது அங்கீகரிக்கப் பட்ட சர்வதேச நிறுவனங்களிடம் இருந்தது, குறித்த ஒரு அபிவிருத்திக்ககாக அல்லது ஒரு தொழில் முனைவுக்ககாக என தெளிவாக தெரிவித்தே அனுமதி கேட்க வேண்டும். வெளி நாட்டு தமிழர்கள் எனில் நேரடியாக மாகாண சபை கணக்குக்கு அனுப்பபடும் என விபரங்கள் இருக்க வேண்டும்.

சும்மா போய் கேட்டால் அவர்கள் அல்ல, யாரும் இரு முறை யோசனை செய்வார்கள் தானே. :rolleyes:

அரசுக்கு வக்காலத்து இல்லை. இங்கே காசு சேர்க்கிறம் என்று வெளிக்கிட்டு, கொலையிலும், அடிபிடியிலும், ஆட்டையைப் போடுவதிலும், ஒருவர் பங்கு தராமல் முழுவதையும்  ஆட்டையைப் போட்டு விட்டார் என்றதும், மொட்டைக் கடதாசி போட்டு காட்டிக் கொடுத்து அப்பாவி மாதிரி இருப்போரையும் பார்த்தோமே.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.