Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூக்கிலிடப்பட்டார் யாகூப் மேமன்!

Featured Replies

menon.jpgநாக்பூர்: மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப்  மேமன் இன்று காலை 6.35 மணிக்கு தூக்கிலிடப்பட்டார்.

1993 மார்ச் மாதம் 12 ஆம் தேதி மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. அந்த குண்டுவெடிப்பில் 257 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர் யாகூப் மேமன்.

யாகூப் மேமனின் கடைசி கருணை முறையீட்டு மனுவை  குடியரசுத் தலைவர் நேற்று நிராகரித்தார். கருணை மனு நிராகரிக்கப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் யாகூப் மேமன் தரப்பு வழக்கறிஞர்கள் இடைக்கால தடை கோரி மனு தாக்கல் செய்தனர்.

அதில், ''நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, அதிகாரிகள், யாகூப்பின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற குறைந்தபட்சம் 14 நாட்கள் அவகாசம் தரவேண்டுமென்று" கோரி இருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று நள்ளிரவு 2 மணி நேரம் நடைபெற்றது.

அப்போது, யாகூப் மேமனின் வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் முதலில் தனது வாதத்தில், ''கருணை மனு நிராகரிக்கப்பட்டு 14 நாட்களுக்கு பிறகு தான் தண்டனையை நிறைவேற்ற வேண்டும். மேமனின் புதிய கருணை மனுவை குறுகிய நேரத்தில் குடியரசு தலைவர் நிராகரித்தது ஏன்?. கருணை மனு நிராகரிப்பு உத்தரவு நகலை பெற யாகூப் மேமனுக்கு உரிமை உள்ளது" என்றார்.

இதை தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தனது வாதத்தில், ''யாகூப்பை தூக்கிலிடும் தீர்ப்பு ஏப்ரல் மாதமே எழுதப்பட்டுவிட்டது. ஏகப்பட்ட கருணை மனுக்கள், அமைப்பையே தவறாக்குகிறது. குடியரசுத் தலைவருக்கு செய்வதற்கு வேறு பல வேலைகள் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பிரதிநிதிகள் மனு கொடுத்தால் அமைப்பு எப்படி செயல்படும்?.

மேலும் யாகூப் தரப்பு, சட்ட நடைமுறையை நேர்மையற்ற முறையில் பயன்படுத்துகிறது. தண்டனையை இழுத்தடித்து யாகூப்பை சிறையிலேயே வைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது" என்று குற்றம் சாட்டினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தடைகோரிய யாகூப் மேமனின் மனுவை நிராகரித்தனர். மேலும், இன்று அதிகாலை 5 மணியளவில் யாக்கூப்பின் தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

இதை தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள சிறையில், யாகூப் மேமன் இன்று காலை 6.35 மணிக்கு தூக்கிலிடப்பட்டார்.

யாகூப் மேமன் தூக்கிலிடப்படுவதை முன்னிட்டு நாக்பூர் சிறையை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மும்பையிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மும்பையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து போலீசாரின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

http://www.vikatan.com/news/article.php?aid=50259

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானில்... இருந்து, இன்னும்...  ரியாக் ஷன்  வர வில்லையா....
அங்கு, சனம் நித்திரையால் எழும்பவில்லைப் போல் உள்ளது.
எதுக்கும்.... இந்திய, பாகிஸ்தான் எல்லையில் உள்ள சிப்பாய்கள் உசாராய் இருப்பது நல்லது.:)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

யாகூப் மேமஇணைப்பு02 - யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதுன் கருணை மனுவை பிரணாப் முகர்ஜி மீண்டும் நிராகரித்தார் – விடிந்தால் தூக்கு –

30 ஜூலை 2015

இணைப்பு02 - யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது
மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி யாகூப் மேமனுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் சிறையில் இன்று காலை 6.30 மணியளவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. பின்னர் காலை 7.01 மணிக்கு யாகூப் மேமன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தி மருத்துவர்கள் அறிவித்தனர்.

யாகூப் மேமன் தூக்கில் இடப்பட்டார்
மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி யாகூப் மேமன் இன்னு வியாழக்கிழமை அதிகாலை 6.35 மணியளவில் நாக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார்.

யாகூப் மேமன் தரப்பில் கடைசி வரை முயற்சிக்கப்பட்ட சட்டப் போராட்டங்கள் பலன் கொடுக்கவில்லை. மும்பையில் உள்ள யாகூப் மேமன் வீட்டுக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்ததை அடுத்து, யாகூப் மேமன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கடைசி மனுவும் அதிகாலை 5 மணியளவில் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

யாகூப் மேமனுக்கு வயது 54. தனது பிறந்த நாளில் (ஜூலை 30) யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டது கவனிக்கத்தக்கது.

யாகூப் மேமன் அதிகாலை 6.35 மணிக்கு தூக்கிலிடப்பட்டார் என்று நாக்பூர் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, பிரதேப் பரிசோதனைக்காக அவரது உடல் நாக்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

பரபரப்பான புதன்கிழமை...

கடந்த 1993-ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய யாகூப் மேமனுக்கு தடா நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து, நாக்பூர் மத்திய சிறையில் ஜூலை 30-ம் தேதி (இன்று) தூக்கு தண்டனையை நிறைவேற்றவிருந்த நிலையில், இதற்கு தடை கோரி, யாகூப் மேமன் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனில் தவே, குரியன் ஜோசப் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் இரண்டு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பு வழங்கியதால் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
இம்மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்ல சி பந்த், அமிதவ ராய் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆஜரானார். அவர், 'யாகூப் மேமனின் மறுசீராய்வு மனு மீதான விசாரணையில் நடைமுறை மீறப்பட்டுள்ளதாக நீதிபதி குரியன் ஜோசப் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த அமர்வு பிறப்பித்த உத்தரவு செல்லாது என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் மூன்று பேர் அடங்கிய அமர்வு, யாகூப் மேமனின் மறுசீராய்வு மனுவை விசாரித்து தள்ளுபடி செய்துள்ளது. இதை செல்லாது என்று அறிவிக்க எந்த முகாந்திரமும் இல்லை. இந்த வாதத்தை ஏற்க முடியாது' என்று வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மறுசீராய்வு மனு மீது உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை என்று தீர்ப்பளித்தனர். மேலும், மேமன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ்.துளசி, 'யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, குடியரசுத் தலைவரிடமும், மகாராஷ்டிர ஆளுநரிடமும் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வரும் வரை தூக்கு தண்டனையை அமல்படுத்த முடியாது' என்று வாதிட்டார். அதற்கு நீதிபதிகள், 'கருணை மனுக்கள் நிர்வாக அதிகாரத்தின் கீழ் வருபவை. அதற்கும் வழக்குக்கும் தொடர்பில்லை' என்று கூறி அவரது வாதத்தை நிராகரித்தனர். தூக்கு தண்டனை குறித்த உத்தரவு கடந்த 13-ம் தேதி தான் யாகூப் மேமனிடம் வழங்கப்பட்டது. போதிய கால அவகாசம் தரப்படவில்லை என்ற வாதத்தையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.
யாகூப் மேமன் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அனைத்து பரிகாரங்களையும் முழுமையாக பயன்படுத்திவிட்டார். மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு, தூக்கு தண்டனையை நிறைவேற்றும் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தனர்.


கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்....


இந்த தீர்ப்பு வெளிவந்த சிறிதுநேரத்தில், மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், கருணை மனுவை நிராகரித்து உத்தரவு பிறப்பித்தார். குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட இரண்டாவது கருணை மனு மீது நேற்றிரவு வரை எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இறுதியில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகல் கிடைத்ததும், யாகூப் மேமன் கருணை மனுவை நிராகரிக்க மத்திய அரசு பரிந்துரை அளித்தது. யாகூப் அனுப்பிய கருணை மனுவை மத்திய அரசு நிராகரித்த முடிவை குடியரசுத் தலைவர் பிரணாபை நேரில் சந்தித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்ததார். இதன் தொடர்ச்சியாக, யாகூப் மேமனின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்தார்.


கடைசி முயற்சியும் தோல்வி...


கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்த நிலையில், மேலும் ஒரு கடைசி முயற்சியாக, மேமனின் வழக்கறிஞர்கள் புதன்கிழமை பின்னிரவில் உச்ச நீதிமன்றத்தை நாடினர். யாகூப் மேமனுக்கு கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற, உச்ச நீதிமன்ற நெறிமுறைகளின்படி, அவருக்கு 14 நாட்களாவது அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. 
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் உத்தரவு பிறப்பித்தது. நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அதே 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, யாகூப் மேமனின் கடைசி மனுவையும் தள்ளுபடி செய்தனர். ஒரு தூக்கு தண்டனை கைதியின் முதலாவது கருணை மனு நிராகரிக்கப்படும்போதுதான் இந்தக் கோரிக்கை பொருந்தும் என்று அடிப்படையில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, மேமனின் கடைசி முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது.


மும்பை குண்டுவெடிப்பு வழக்கு...


1993 மார்ச் 12-ம் தேதி பிற்பகலில் மும்பை நகரில் 13 இடங்களில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 257 பேர் பலியாயினர். 700 பேர் காயம் அடைந்தனர். தொடர் குண்டுவெடிப்பில் தலைமறைவாக உள்ள டைகர் மேமனின் தம்பி யாகூப். 2007 ஆண்டு ஜூலை 27-ம் தேதி தடா நீதிமன்றம் இவருக்கு மரண தண்டனை விதித்தது. இந்த குண்டுவெடிப்பு சதியில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு யாகூப் நிதி உதவி செய்தார் என விசாரணை நீதிமன்றம் தெரிவித்தது.


நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். யாகூப்பின் பெற்றோர், அவரது 3 சகோதரர்கள், உறவுக்கார பெண் ஆகியோர் இந்த வழக்கில் விசாரணையை எதிர்கொண்டனர். இதில் யாகூபின் மனைவி, தாயார், சகோதரர் விடுவிக்கப்பட்டனர். பிற சகோதரர்களான எசா, யூசுப், உறவுக்கார பெண் ரூபினா ஆகியோர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டனர். தடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஏ.சனாப், 2015 ஏப்ரல் 29-ம் தேதி யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதிப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது. (தஇந்து)

யாகூப் மேமனின் கருணை மனுவை பிரணாப் முகர்ஜி மீண்டும் நிராகரித்தார் – விடிந்தால் தூக்கு –

29-07-2015 -19:44


யாகூப் மேமனின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மீண்டும் நிராகரித்து விட்டார். இந்த மனுவை இரவோடு இரவாக பரிசீலித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து யாகூப் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விடிந்தால் தூக்கு என்ற நிலையில், தண்டனையை தவிர்க்க இறுதி கட்ட முயற்சியாக உச்சநீதிமன்றத்தில் யாகூப் மேமன் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தண்டனைக்கு 14 நாட்கள் தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான யாகூப் மேமனுக்கு தடா நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அவர் ஜூலை 30 ஆம் தேதி தூக்கிலிடப்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தீர்ப்பில் திருத்தம் செய்யக்கோரும் யாகூப் மேமனின் நிவராண மனு, நேற்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அனில்.ஆர்.தவே மற்றும் ஜோசப் குரியன் ஆகியோர் முன்னிலையான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு நீதிபதிகளும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்தனர்.

இதையடுத்து தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்பு யாகூப் மேமன் தரப்பிலும், மத்திய அரசு தரப்பிலும் முறையீடு செய்யப்பட்டது. இந்த மாறுபட்ட நிலைப்பாட்டினால் இந்த வழக்கின் மீதான விசாரணை மூன்று நீதிபதிகள் கொண்ட பேரமர்வுக்கு மாற்றப்பட்டது.

இதன்படி நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி.கோஷ், அமிதவராய் ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கபட்டது. யாகூப் மேமன் மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று யாகூப் மேமன் தாக்கல் செய்த நிவாரண மனுவை தள்ளுபடி செய்ததது. யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்கவும் மறுத்துவிட்டது.

மகாராஷ்ட்ர மாநில ஆளுநர் வித்யாசகர் ராவும் யாகூப் மேமனின் இறுதி நிமிட கருணை மனுவை நிராகரித்துள்ளதால், யாகூப் மேமன் நாளை தூக்கிலிடப்படுவது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது குறித்து சட்ட அமைச்சகத்துடன் உள்துறை அமைச்சகம் தீவிர ஆலோசனை மேற்கொண்டது. இதையடுத்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குடியரசுத் தலைவர் மாளிகை சென்று பிரணாப் முகர்ஜியுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது யாகூப் மேமனின் கருணை மனுவை நிராகரிக்க ராஜ்நாத் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், யாகூப் மேமனின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார்.

ஆனால் இந்த மனுவை இரவோடு இரவாக பரிசீலித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து யாகூப் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தூக்கு தண்டனைக்கு 14 நாட்கள் தடையும் கோரப்பட்டுள்ளது. இதனால் விடிந்தால் தூக்கு தண்டனையை நிவேற்றுவதில் மகாராஷ்ட்ர அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

எனினும் மும்பை நாக்பூர் சிறை யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தயாராகி இருக்கிறது. மும்பைத் தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாபை தூக்கிலிட ஏற்பாடுகளை செய்த சிறை கண்காணிப்பாளர் யோகேஷ் தேசாய் தான் யாகூப் மேமனின் தூக்கு தண்டனைக்கும் ஏற்பாடுகளை செய்துள்ளார்.

பதற்றம் ஏற்படாமல் தடுக்க மும்பை முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விடுப்பில் உள்ள போலீசார் உடனடியாக பணிக்கு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர். நாக்பூரின் முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122440/language/ta-IN/article.aspx

யாகூப் மேமன் தூக்கு... பிறந்த நாளே இறந்த நாளான சோகம்... விடிய விடிய பரபரப்பை ஏற்படுத்திய நிமிடங்கள்

 

 மும்பை: மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நிதி உதவி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட யாகூப் மேமனுக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது. சமூக வலைத்தளங்களில் பல்வேறு சர்ச்சைகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது இந்த தூக்கு தண்டனை. பிறந்தநாளிலேயே தன் மகன் தூக்கிலிப்படுவான் என்று 53 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் யாகூப் பிறந்த போது அவரது தாயார் நினைத்திருக்க மாட்டார். தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு கூறப்படும் காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான் என்றாலும் அதை இன்றே நிறைவேற்ற வேண்டியது ஏன் என்ற கேள்விதான் பலரின் மனதிலும் எழுகிறது. தூக்கு தண்டனைக்கு எதிரான மனநிலையை கொண்டிருந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதிச்சடங்கு நிறைவேற்றப்பட உள்ள இந்த நேரத்தில் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டது ஏன் என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது.

பலிகொடுக்கப்பட்டாரா யாகூப் மேமன் மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பல குற்றவாளிகள் இன்னும் வெளியில் சுற்றிக்கொண்டிருக்க, தானாக வந்து சரணடைந்த ஒருவனை பலி கொடுத்து குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்து விட்டோம் என்று மார்தட்டிக்கொள்கிறதா மத்திய அரசு என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள். அப்போ மற்ற தீவிரவாதிகளுக்கு என்ன தண்டனை என்றும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிறந்தநாளில் சோகம் தூக்கிலிடப்பட்ட யாகூப் மேமனுக்கு இன்று 53வது பிறந்த நாள் என்பதுதான் சோகம். இதே மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நேற்றுதான் தன்னுடைய 56வது பிறந்தநாளை புனேவில் உள்ள எரவாடா சிறையில் கொண்டாடியுள்ளார்.
 
மும்பை குண்டுவெடிப்பு 1993 மார்ச் 12ம் தேதி பிற்பகலில் மும்பை நகரில் 13 இடங்களில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 257 பேர் பலியாயினர். 700க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
 
குற்றவாளிகள் யார்? யார்? நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்த தொடர் குண்டுவெடிப்பில் தலைமறைவாக உள்ள டைகர் மேமனின் தம்பி யாகூப். யாகூப்பின் பெற்றோர், அவரது 3 சகோதரர்கள், உறவுக்கார பெண் ஆகியோர் இந்த வழக்கில் விசாரணையை எதிர்கொண்டனர். இதில் யாகூபின் மனைவி, தாயார், சகோதரர் விடுவிக்கப்பட்டனர். பிற சகோதரர்களான எசா, யூசுப், உறவுக்கார பெண் ரூபினா ஆகியோர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டனர்.
 
மரணதண்டனை இந்த குண்டுவெடிப்பு சதியில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு யாகூப் நிதி உதவி செய்தார் என விசாரணை நீதிமன்றம் தெரிவித்தது. 2007 ஆண்டு ஜூலை 27ம் தேதி தடா நீதிமன்றம் இவருக்கு மரண தண்டனை விதித்தது. தடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஏ.சனாப், 2015 ஏப்ரல் 29-ம் தேதி யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதிப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார்.
 
மரணதண்டனை இந்த குண்டுவெடிப்பு சதியில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு யாகூப் நிதி உதவி செய்தார் என விசாரணை நீதிமன்றம் தெரிவித்தது. 2007 ஆண்டு ஜூலை 27ம் தேதி தடா நீதிமன்றம் இவருக்கு மரண தண்டனை விதித்தது. தடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஏ.சனாப், 2015 ஏப்ரல் 29-ம் தேதி யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதிப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார்.
 
மூன்று நீதிபதிகள் விசாரணை தூக்கு தண்டனைக்கு தடை கோரி, யாகூப் மேமன் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனில் தவே, குரியன் ஜோசப் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் இரண்டு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பு வழங்கியதால் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
 
அர்டர்னி ஜெனரல் இம்மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்ல சி பந்த், அமிதவ ராய் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆஜரானார். அவர், 'யாகூப் மேமனின் மறுசீராய்வு மனு மீதான விசாரணையில் நடைமுறை மீறப்பட்டுள்ளதாக நீதிபதி குரியன் ஜோசப் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த அமர்வு பிறப்பித்த உத்தரவு செல்லாது என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
 
மறுசீராய்வு மனு தள்ளுபடி உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் மூன்று பேர் அடங்கிய அமர்வு, யாகூப் மேமனின் மறுசீராய்வு மனுவை விசாரித்து தள்ளுபடி செய்தது. மறுசீராய்வு மனு மீது உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை என்று தீர்ப்பளித்தனர்.
 
கருணை மனுக்கள் மேமன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ்.துளசி, 'யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, குடியரசுத் தலைவரிடமும், மகாராஷ்டிர ஆளுநரிடமும் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வரும் வரை தூக்கு தண்டனையை அமல்படுத்த முடியாது' என்று வாதிட்டார்.
 
நிராகரித்த நீதிபதிகள் அதற்கு நீதிபதிகள், 'கருணை மனுக்கள் நிர்வாக அதிகாரத்தின் கீழ் வருபவை. அதற்கும் வழக்குக்கும் தொடர்பில்லை' என்று கூறி அவரது வாதத்தை நிராகரித்தனர். தூக்கு தண்டனை குறித்த உத்தரவு கடந்த 13ம் தேதி தான் யாகூப் மேமனிடம் வழங்கப்பட்டது. போதிய கால அவகாசம் தரப்படவில்லை என்ற வாதத்தையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.
 
தடை விதிக்க மறுப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அனைத்து வாய்ப்புகளையும் யாகூப் மேமன் முழுமையாக பயன்படுத்திவிட்டார். மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு, தூக்கு தண்டனையை நிறைவேற்றும் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தனர்.
 
மத்திய அரசு பரிந்துரை இந்த தீர்ப்பு வெளிவந்த சிறிது நேரத்தில், மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், கருணை மனுவை நிராகரித்து உத்தரவு பிறப்பித்தார். குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட இரண்டாவது கருணை மனு மீது நேற்றிரவு வரை எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இறுதியில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகல் கிடைத்ததும், யாகூப் மேமன் கருணை மனுவை நிராகரிக்க மத்திய அரசு பரிந்துரை அளித்தது.
 
குடியரசுத்தலைவர் நிராகரிப்பு யாகூப் அனுப்பிய கருணை மனுவை மத்திய அரசு நிராகரித்த முடிவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்ததார். இதன் தொடர்ச்சியாக, யாகூப் மேமனின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்தார்.
 
14 நாட்கள் அவகாசம் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்த நிலையில், மேலும் ஒரு கடைசி முயற்சியாக, மேமனின் வழக்கறிஞர்கள் புதன்கிழமை நள்ளிரவில் உச்ச நீதிமன்றத்தை நாடினர். யாகூப் மேமனுக்கு கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற, உச்ச நீதிமன்ற நெறிமுறைகளின்படி, அவருக்கு 14 நாட்களாவது அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
5 மணிக்கு உத்தரவு இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் உத்தரவு பிறப்பித்தது. நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அதே 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, யாகூப் மேமனின் கடைசி மனுவையும் தள்ளுபடி செய்தனர்.
 
மனு தள்ளுபடி ஒரு தூக்கு தண்டனை கைதியின் முதலாவது கருணை மனு நிராகரிக்கப்படும்போதுதான் இந்தக் கோரிக்கை பொருந்தும் என்று அடிப்படையில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, மேமனின் கடைசி முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது.
 
144 தடை உத்தரவு மேமன் தூக்கிலிடப்படுவதற்கு முன்னராக அவரை உறவினர்கள் சந்தித்து பேச அனுமதிக்கப்பட்டனர். அவருக்கு புத்தாடைகள் கொடுக்கப்பட்டன. யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டுள்ள நிலையில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க நாக்பூர் சிறையை சுற்றி 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்

இதை விடுப்புப் பார்த்துக்கிட்டு இருக்கிற மாதிரி.. இந்தியா மீது முஸ்லீம் தீவிரவாதிங்க தாக்குதல் நடத்தினாலும் உலகம் விடுப்புப் பார்த்துக்கிட்டே இருக்க வேண்டியான். பழிக்குப் பழி.... தீர்வல்ல.. தொடர் கதை. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

தர்மம் தோன்றிய பூமி....,,

தனதென்று மார் தட்டும் தேசமே!

குற்றம் செய்தவர்களைக்...,,

கழுவேற்றுவது உனது உரிமை,

இல்லை என்று சொல்லவில்லை!

அவனது பிறந்த நாளைத் தவிர,

இன்னுமொரு சிறந்த நாள்..

உனக்குக் கிடைக்கவில்லையா?

 

உனது ஜனாதிபதியின் கரங்கள் கூட..,

இரத்தத்தில் கழுவப்பட்டவை,

என்பதை நீ அறிந்திருக்கவில்லையா?

வருணாசிரமம் வளர்த்தெடுத்த,

வேத காலத்து வாரிசுகளிடம்...,

கருணை மன்னிப்புக் கேட்பது,,,

வெறும் கண் துடைப்பல்லவா?

 

இன்று போய்...நாளை வா..,என்று,

இராவணனுக்கு மனிதாபிமானம் பார்த்த,

இராம பிரானைத் தெய்வமேன்னு,

இன்னும் ஏன் கூறிக்கொண்டிருக்கிறாய்?

 

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனித நேயத்திற்கு பல உதாரண புருசர்களை  உதாரணம் காட்டி  பள்ளிகளில்   படிக்க வைத்து விட்டு....


மனித நேயமேயில்லாமல் ஒருவனின் உயிரை பலியெடுத்திருக்கிறது ஆன்மீக அரசு.


வன்செயலால் அப்பாவி உயிர்களை பலியெடுத்தவனுக்கும்....தண்டனை எனும் பெயரில் பலியெடுத்து பழி தீர்த்த ஆன்மீகனுக்கும் என்ன வித்தியாசம்?

 

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

யாக்கூப் மேமன் குற்றவாளி என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் மரணதண்டனை கொடுப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது!

  • கருத்துக்கள உறவுகள்
பலிகொடுக்கப்பட்டாரா யாகூப் மேமன் மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பல குற்றவாளிகள் இன்னும் வெளியில் சுற்றிக்கொண்டிருக்க, தானாக வந்து சரணடைந்த ஒருவனை பலி கொடுத்து குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்து விட்டோம் என்று மார்தட்டிக்கொள்கிறதா மத்திய அரசு என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள். அப்போ மற்ற தீவிரவாதிகளுக்கு என்ன தண்டனை என்றும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சரணடைந்த ஒருவனை... தூக்கில் போட்டு, பழி தீர்த்தன் மூலம்... இந்தியா மேலும் தரம் குறைந்து விட்டது.
இது, நாகரீக உலகில்... மன்னிக்க முடியாத செயல்.:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.