Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண்குதிரையில் சவாரி செய்யும் கஜே கோஸ்டி......

Featured Replies

மண்குதிரையில் சவாரி செய்யும் கஜே கோஸ்டி......

அண்மைக்காலமாக நம்மட உறவுகள் சிலர் நடந்ததை மறந்து மீண்டும் ஒரு மாயைக்குள் விழத்தொடங்கியுள்ளனர்.....அதுதான் உந்த ஏமாத்து அப்புகாத்துகளின் மண்குதிரை சவாரியில். தமிழர்களின் இழப்புக்களாலும் தியாகங்களாலும் கிடைக்கும் ஒரு சமாதான இடைவெளியில் தங்களது குதிரையை கொணந்து ஓடவிடுவதில் கஜே கோஸ்டிக்கு நிகர் யாரும் கிடையாது. இப்படியே கொண்டுவரும் மன்குதிரையை சோடிச்சு அதில் அப்பாவிதமிழர்களை உசுபேத்தி ஏத்திவிடுவதில் மகா சூரர்கள்...அதுக்கு சிலர் விளங்கிக்கொள்ளாமல் பிற்பாட்டு பாடுவதே மிகவும் கவலைக்குரிய விடயம். மண்குதிரை உடைந்து உசுபேறி ஆடிய மக்கள் இன்னலில் மாட்டும் போது இந்த கஜே கோஸ்டி நிண்ட இடம் தெரியாமல் ஓடிவிடும்...

ஆமிக்காரனுக்கு 40000 சவப்பெட்டியை தயார்படுத்தச்சொல்லி கஜேந்திரன் உசுப்புபேச்சு பேசும் போது விசில் அடிச்சவர்களில் பலர் இன்று உயிருடன் இல்லாமல் போனதே இவரின் மீள்வருகைக்கு காரணம். இருந்தால் இவர் பெட்டிக்க போய் இருப்பார். இது பத்மினி ஆண்டிக்கும் பொருந்தும்.

அடுத்தவர் வீனாப்போன அப்புக்காத்திண்ட பேரன்.....அது பாவம் நாட்டில நடக்குறது அரைவாசி தெரியாது....
ஆனால் துரோகிகளால் குடுக்கப்படும் காசுகளை மனிசன் சரியா கையாழுது....
அவருக்கு அந்தப்பரம்பரை குணம் அப்புடியே இருக்குது...தான் தலைவராகவும், பதவியிலும் இருந்தால் போதும். ரேஞ்ரோவரில் சென்று மக்கள் சந்திப்பு...அடுத்தநாள் FBயில் படம் வரும்... ஒரு நாலைஞ்சு சனமே எல்லாப்படத்திலும் இருப்பார்கள்.

இவர்களின் அடுத்த பெரிய காமடிப்பீசுதான் மணி... இவர் இந்துவின் பழைய மாணவன் என்பதட்க்காய் வெட்கிதலைகுனியும் நிலைமை வேறு. இந்த மணியிண்ட தந்தையும் ஒரு அப்புகாத்து அந்த வழியில் தான் இவரின் வருகை. தமிழ் தேசிய முன்னணி இதுவரை மக்களுக்கு என்னசெய்திருக்கெண்டால் தம்பி பாவம் சிம்பிளாச் சொல்லும்...நாங்கள் தான் மக்கள் போராடத்தை ஆரம்பிச்சு வைக்குறம் எண்டு...பினிசிங் எப்படி இருக்குதெண்டு விளங்கப்படுத்த தேவையில்லை. இதோடகேட்ட கேள்வியை மறந்து போய் டப்பெண்டு கூட்டமைப்பு வாந்திய எடுக்கதொடங்கிடுவார்....இவரெல்லாம் ஒரு கொள்கைப்பரப்பாளர்.

உந்த ததேமமு காரரை அண்ணோய் காலைக்கடன் கழித்துவிட்டீர்களா என்று கேட்டாலும் பதில்...

"எப்படிக் கழிப்பது? கூட்டமைப்பு எல்லாக் கழிவறைகளையும் பூட்டி வைத்திருக்கின்றது"

அண்ணை பனைக்கு பின்னால் தன்னும் ட்ரை பண்ணலாமே என்று கேட்டால் பதில்...

"எப்படி பதுங்குவது? கூட்டமைப்பு எல்லாப்பனைகளையும் தறித்துவிட்டது"

இப்படிதான் பதில்.

நீங்கள் மக்களுக்கு என்னத்தை பிடுங்குவீங்கள் என்பதை(நடை முறைச்சாத்தியத்துடன்) கொஞ்சம் சொல்லுங்கோவன் எண்டா ஒண்டுமில்லை.... 

  • வீணாப்போன சுமத்திரன், சம்பந்தன் இல்லாவிட்டால் கூட்டமைப்புடன் இணைவோம் என்று கூறுமிவர்கள் ஏன் தமிழருக்கென இருக்கும் கட்டமைப்பை உடைக்கிறார்கள்?
  • கூட்டமைப்பில் இருக்கும் தவறுகளை ஏன் இவர்களால் சரி செய்யமுடியாது போனது?
  • கூட்டமைப்பில் இருக்கும் தவறுகளை திருத்த ஏதாவது ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்தார்களா?
  • இப்படியே எத்தனை தடவைகள் தமிழர்களுக்குள்ளே அடிபட்டு குத்துபடுவது?

கூட்டமைப்புக்குள் இருக்கும் பிரச்சனைகளை போராடி திருத்தியிருந்தால் இம்முறை தேர்தலில் தமிழர் பலமாக இருந்திருக்க முடியும்..இவர்களையும் மெச்சியிருப்போம்.

இவர்களின் இந்த நடவடிக்கையால் EPDP மற்றும் வியகலா கோஸ்டி தனது சீட்டை மிகவும் லாவகமாக தட்டிசெல்லும் வாய்ப்பு தற்போதைய விகிதாசார தேர்தல் முறையில் இருப்பதை இங்கு பலர் அறியாமல் இருக்குறார்கள். விகிதாசார முறை இல்லாவிட்டால் உந்த முழுக்கோஸ்டியும் மூட்டைய கட்டவேண்டியது தான்.

நாட்டில இருக்கிற சனத்தை பற்டி வடிவா ஜோசிச்சு போட்டு கதையுங்கோ...விளங்காட்டி அங்கபோய் ஒரு நாலைஞ்சு மாதம் நிண்டு சனத்திண்ட கஸ்டத்தை பார்த்திட்டு கதையுங்கோ

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டணியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இருந்த போது வெளிநாடுகளுக்கு போனால்

ஐரோப்பிய ஒன்றியமாக இருக்கட்டும்

இங்கிலாந்துக்காரராக இருக்கட்டும்

அமெரிக்காவாக இருக்கட்டும்

முன்னுக்கு போய்நின்று சகலதும கதைப்பது அவர் தான்.
தலைவராக இருந்தாலென்ன யாராக இருந்தாலென்ன கஜேந்திரனுக்கு பின்னால்த் தான் நின்றார்கள்.
அவ்வளவு திறமையுள்ள ஒருவரை எப்படி பிரயோசனப்படுத்தலாம் என்பதை விடுத்து

அவருக்கு ஒன்னுக்கும் இரண்டுக்கும் போக வகுப்பெடுப்பதை நினைக்க ரொம்ப வேதனையாக இருக்கிறது.

நன்றி, ஈழப்பிரியன்.
இப்போது.... வகுப்பு எடுத்து, ரியூசன் சொல்லிக் கொடுப்பதில் தான்.... வருமானம் அதிகம்.
ஆனால்... தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெல்லும்.... வெல்லும்... வெல்லும்.......1571.gif
சம் சும் கோஸ்டி  ... மண்ணை கவ்வும்.:grin:

  • தொடங்கியவர்

கூட்டணியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இருந்த போது வெளிநாடுகளுக்கு போனால்

ஐரோப்பிய ஒன்றியமாக இருக்கட்டும்

இங்கிலாந்துக்காரராக இருக்கட்டும்

அமெரிக்காவாக இருக்கட்டும்

முன்னுக்கு போய்நின்று சகலதும கதைப்பது அவர் தான்.
தலைவராக இருந்தாலென்ன யாராக இருந்தாலென்ன கஜேந்திரனுக்கு பின்னால்த் தான் நின்றார்கள்.
அவ்வளவு திறமையுள்ள ஒருவரை எப்படி பிரயோசனப்படுத்தலாம் என்பதை விடுத்து

அவருக்கு ஒன்னுக்கும் இரண்டுக்கும் போக வகுப்பெடுப்பதை நினைக்க ரொம்ப வேதனையாக இருக்கிறது.

நீங்கள்கூட உசுப்பேத்தும் வசனநடைகளை மிகவும் துல்லியமாக பாவித்துள்ளீர்கள்...

சகலதும் கதைப்பதும் அவர்தான் என்றுள்ளீர்களே...சகலத்தையும் சொல்லாட்டியும் பறவாயில்லை ஒரு சிலதை சொல்லுங்கள் பார்ப்பம்?
என்ன அவர் பெரிதாய் வெட்டிக்கிளழித்துள்ளார் பார்ப்போம்?

அடுத்து இங்கு நாம் அவருக்கு ஒண்டுக்கு இரண்டுக்கு போக சொல்லிகுடுக்கவில்லை....தமிழ் தேசிய முன்னணி தங்களிடம் ஒரு ஒழுங்கான கொள்கை இல்லாமல் சும்மா கூட்டமைப்பை பற்டி அலம்பிக்கொண்டு திரிவதையே கூறியுள்ளேன். சிறு பிள்ளைக்கும் விளங்கக்கூடியதாகவே கூறியுள்ளேன். ஒருநாளும் விசில் அடிக்கோணும் எண்டு நீங்கள் கருத்து எழுதவேண்டாம். நாட்டில் உள்ள மக்களை நினைச்சு கருத்தெளுதுங்கள்.

புதிதாகக்தொடங்கும் கட்சிக்குள்ளும் பூதங்கள் முளைக்க நீண்ட நாட்கள் எடுக்காது என்று நினைக்க வேண்டாம்.

இங்கை நான் கூட்டமைப்பை தங்கம் என்று சொல்லவில்லை.....அதில் உள்ள பிழைகளை திருத்த வேண்டும் என்றே கூறுகின்றேன்?

என் அண்ணனோ தம்பியோ பிழை விட்டால் திருத்த போராடலாம்...ஆனால் அவனெனெக்கு உறவில்லை என்று கூறமுடியாது.

இல்லை உங்களுக்கு வாழ்க்கை முழுக்க எமது போராட்டத்தை வைத்து பொழுதுபோக்கொணும் என்றால் நீங்கள் நடப்பது மிகச் சரியான பாதையே.....

மேலே தமிழ் தேசிய முன்னணி மீது வைக்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு கேள்விக்கு பதில் எழுத முயற்சியுங்கள் பார்க்கலாம்     
       
  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பற்றி, எல்லாம்... எப்ப, எங்கை வைச்சு, யாருக்கு....  கூறி விட்டு, 
இங்கை.... வந்து, புலம்பு றீங்கள்.
அடுத்து.....  சம்பந்தன் பென்சனுக்குப் போக, 
சுமந்திரனை... ஒரு, நாயும் தேடாது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குப், பெயர் தான்......
கூத்தமைப்பின்... ராச தந்திரம்.
உங்கடை ... ராச தந்திரத்துக்கு, இருக்கு ஆப்பு.
அது... வருகின்ற தேர்தலில்.... முடிவு கட்டப் படும்.

  • கருத்துக்கள உறவுகள்

கஜே கோஸ்டி பெயர் நல்லாத்தான் இருக்கு!:grin:

  • கருத்துக்கள உறவுகள்

"அப்புக்காத்து" என்றால் இன்னபா..? ஒன்னும் புரியலையே? :unsure:

அமங்களமான சொல் இல்லையென நம்புகிறேன்.

"அப்புக்காத்து" என்றால் இன்னபா..? ஒன்னும் புரியலையே? :unsure:

அமங்களமான சொல் இல்லையென நம்புகிறேன்.

பாரிஸ்டர்

a lawyer entitled to practice as an advocate, particularly in the higher courts.

  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸ்டர்

a lawyer entitled to practice as an advocate, particularly in the higher courts.

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி, நவீனன்.

  • கருத்துக்கள உறவுகள்

"அப்புக்காத்து" என்றால் இன்னபா..? ஒன்னும் புரியலையே? :unsure:

அமங்களமான சொல் இல்லையென நம்புகிறேன்.

ஈழத் தமிழ் மிகவும் அழகிய மொழி!

ஆங்கில வார்த்தைகள் என்று தெரியாத மாதிரியே.. தனதாக்கி விடும்!

மதுரைக்காரனுக்கே பிடி படவில்லை எண்டால் பாருங்கோவன்!

advocate- அப்புக்காத்து.

proctor - பிரக்கராசி

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பிடி விறாந்தைச் சேர்க்க மறந்திட்டீங்க புங்கை அண்ணா? :grin:

  • தொடங்கியவர்

இதற்குப், பெயர் தான்......
கூத்தமைப்பின்... ராச தந்திரம்.
உங்கடை ... ராச தந்திரத்துக்கு, இருக்கு ஆப்பு.
அது... வருகின்ற தேர்தலில்.... முடிவு கட்டப் படும்.

உங்களது அல்லது உங்கள் கட்சியினது கொள்கையை, தமிழ்மக்களுக்கு நிரந்திரதீர்வு காண நீங்கள் செல்லப்போகும் பாதையை (ஆக்கபூர்வமான அல்லது நடைமுறைச்சாத்தியமான) சற்று விளக்கிக்கூறி...கடந்தகாலத்தில் நீங்களும் உங்கள் கட்சி உறுபினர்களும் மேற்கொண்ட ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள்.

அதைவிடுத்து கூட்டமைப்பு மீது வாந்தியெடுக்கவேண்டாம்.

நீங்கள் கூட்டமைப்பின் மீது வாந்தியெடுத்தால் மக்கள் தங்களது 2வது விருப்பிற்கு செல்வார்கள்...அந்த 2வது விருப்பு நீங்களாக இருப்பீர்கள் என நினைப்பது பகல் கனவு ஆகிவிடும்.

அடுத்து தமிழ் தேசிய முன்னணியில் வாக்குக்கோரும் ஏனைய சில கொமடி பீசுகள் பற்டி பார்ப்போம்

5. சுதா (குருநகர் சுதா)
 பத்திரீசியார் கல்லூரியில் 2003AL மாணவன் தான் சுதா. AL பரீட்சையில் 3 பாடத்திலும் கொடியேட்டிய சுதா குருநகரில் பெயர் போன ரவுடி.இவரும் இவரது பரிவாளங்களும் விடுதலை புலிகளால் பலமுறை தண்டிக்கபட்டவர்கள்.

6.வீரா (மானிப்பாய் மெமோரியல் கிரிக்கெட்வீரன்)
வீராவுக்கு கிரிக்கெட்டை விட ஒண்டும் தெரியாது என்று நிரூபிக்க சிறந்த ஆதாரம் ஒன்று உள்ள போதும் அண்ணன் எனது கட்ச்சுகளை தவறவிட்டதாலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தபடியாலும் இங்கு கூறவில்லை. ஆனால் யாழ்மக்கள் அறிவர். எதுஎப்படியோ அவர் ஒரு கொமடி பீசாகவே எப்பொழுதும் பார்க்கப்படுபவர்.

இவர்கள் தங்கள் நண்பர் வட்டாரத்திடம் பொறுக்கும் வாக்குகள் விகிதாசார தேர்தல் முறைக்கு உபயோகம் ஆகும் என தமிழ் தேசிய முன்னணியின் யூகம்.

தொடரும்....   

  • கருத்துக்கள உறவுகள்

vote.jpg

தமிழ் மக்கள், தங்களது பொன்னான வாக்குகளை.... கஜேந்திர குமாரின்,  
"தமிழ் தேசிய மக்களை முன்னணிக்கே" செலுத்த எப்போதோ தீர்மானித்து  விட்டார்கள்.tenerife-forum-coffee-smiley.gif
bicycle smileyநமது தோழன் சைக்கிள் சின்னம். உங்கள் வாக்கு... சைக்கிள் சின்னத்துக்கே.....spidey_bike.gif

  • தொடங்கியவர்

அண்ணை எனக்கு வாக்கு இருக்கு போட போவம் எண்டால் லீவு எடுக்கேலாமல் இருக்கு

உந்தச் சைக்கிள் எல்லாம் அங்கை இல்லை... எல்லாம் ஓட்டை சைக்கிள்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை எனக்கு வாக்கு இருக்கு போட போவம் எண்டால் லீவு எடுக்கேலாமல் இருக்கு

எப்படியோ... தோக்கப் போற கூட்டமைப்புக்கு, உங்களது....  ஒரு வாக்கை போடுவதற்காக... 
இங்கிலாந்தில்.... இருந்து செல்வது, வீண்... சேர்வயர்.:grin:

  • தொடங்கியவர்

எப்படியோ... தோக்கப் போற கூட்டமைப்புக்கு, உங்களது....  ஒரு வாக்கை போடுவதற்காக... 
இங்கிலாந்தில்.... இருந்து செல்வது, வீண்... சேர்வயர்.:grin:

அண்ணை சிறுதுளி பெருவெள்ளம்.

அதுதான் கூட்டமைப்பின் பலமே

  • தொடங்கியவர்
images?q=tbn:ANd9GcS3XKTJDzDwZWsbHqAuyv-
 
கடந்த தேர்தலில் ஆசை ஆசையாய் வீட்டை கட்டினோம் அப்ப அந்த வீட்டுக்குள் சுமத்திரன் எனும் பெருச்சாளி பின் கதவு வளியாய் உள்ளே வந்தது வந்ததும் தனக்கு தான் எல்லாம் தெரியும் என்று பீலா காட்டி தான் மாத்திரம் உண்டு கொளுத்து வந்தது இந்த பெருச்சாளியின் அக்கிரமத்தால் வீடு பழுதடைந்து எப்போ உடைந்து விடும் எனும் நிலைக்கு வந்து விட்டது உயிரை காப்பாற்ற சைக்கிளில் ஓடித்தப்ப வேண்டியதாய் உள்ளது .

இந்தா..... இதுதான் நானும் பறையுது சிலந்தி...நீங்கள் போவது சைக்கிளில் அல்ல மண்குதிரையில்.....மழைக்கு உடைந்துவிடும்....

வாங்கோ எங்கடை வீட்டை திருத்துவம், எங்கடநாட்டில மோகேஜ், கிரடிட்கார்ட் வசதிகள் ஒன்றும் இல்லை...உடைஞ்ச வீட்டைதான் திருப்பித் திருப்பி கட்டவேணும் என்பது காலத்தின் நிர்பந்தம்....

மிச்சம் கதைத்தால் அது பலரையும் பாதிக்கும் என்பதால் பொதுவிடத்தில் கூறவிரும்பவில்லை....அது என்ன என்று புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்  

விவேக் கூறியது போல் "ஓடினேன் ஓடினேன் சென்னையின் எல்லைவரை ஓடினேன் கடல் இருந்ததால் திரும்பி வந்துவிட்டேன்" 

இப்ப சைக்கிள் போய்... மோர்டார் வாகனங்கள் வந்துவிட்டது சிலந்தி...நாட்டுக்கு போகேலும் எண்டா போய் பாருங்க...இல்லாட்டி சொல்லுங்க படம் எடுத்து அனுப்பிவிடலாம்

சைக்கிளை விட சிலந்தி பறவாய்யில்லை எண்டு கதைக்குறானுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தா..... இதுதான் நானும் பறையுது சிலந்தி...நீங்கள் போவது சைக்கிளில் அல்ல மண்குதிரையில்.....மழைக்கு உடைந்துவிடும்....

சைக்கிளை விட சிலந்தி பறவாய்யில்லை எண்டு கதைக்குறானுகள்

இவ்வாறு நடந்தால் கயேந்திரகுமார் தனது தலைமைத்துவ செயற்பாடுகளுக்கு அருகதையற்றவராவார்..

மாற்றம் ஒன்றே மாறாதது..

  • தொடங்கியவர்

இவ்வாறு நடந்தால் கயேந்திரகுமார் தனது தலைமைத்துவ செயற்பாடுகளுக்கு அருகதையற்றவராவார்..

மாற்றம் ஒன்றே மாறாதது..

அது நடக்கும் என்பதை என்அனுபவத்தை வைத்தே கூறுகின்றேன்....எது எப்பிடியோ....நீங்கள் கூறுவதுபோல அடிபடாமல் பொறுத்திருந்து பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூடமைப்பு வடக்கு கிழக்கில் பெருவெற்றி அடையப்போவதும் உறுதி. சுமந்திரன் யாழில் அதிக விருப்பு வாக்குகளைப் பெறுவதும் நிச்சயம். கஜே குழு டக்கிளஸ் அங்கிளைவிட செல்லாக்காசாக இருக்கப்போவதும் உண்மை!

ஏலாக்கட்டத்தில் விக்கியரை இறக்கிவிட்டிருக்கினம். உண்மை முகத்தை இப்ப தன்னும் காட்டிவிட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.