Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

200ஆவது ஆண்டில் காலடி பதிக்கும் யாழ்.மத்திய கல்லூரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் நாதம்..!

ஆறுமுக நாவலர்..சிதம்பரம் போறதுக்கு 'டிக்கட்' வாங்கக் காசில்லாமல் தானாம்.. பைபிளை மொழி பெயர்த்தவராம்!

அந்தக் காசைக்கொண்டு தான்... சிதம்பரம் போக பயணச்சீட்டு வாங்கினவராம் எண்டு ஒரு கதை!

ஆனால், ஆறுமுக நாவலரின் மொழிபெயர்ப்பு தான்.. தமிழ் படுத்தப்பட்ட விவிலிய நூல்களில் மிகவும் சிறந்ததாக இன்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது!

அத்துடன்.. வீடு வீடாகச் சென்று.. பிடியரிசி சேர்த்து.. ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுத்த்ததாகவும் ஒரு கதை உண்டு!

போர்த்துக் கேய மன்னர்களிடம்.. கடைசியாகத் தோற்ற மன்னன் என்ற பெருமையும் யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலிய மன்னனையே சேரும்!

இல்லை என்று நினைக்கிறேன். பைபிளை மொழி பெயர்க்கும் போது அவர் யாழ் உவெஸ்லியன் பாடசாலை ஆங்கில ஆசான். பணத்துக்குக் குறை இல்லை.

ஆனால், தமது சிறப்பான மொழி பெயர்ப்பு பல ஈழ, தமிழக சைவர்களை, கிறிஸ்தவராகியது கண்டே அவர் வேலையைத் துறந்தார்.

பணம் படைத்த செட்டியார்களிடமும் உதவி பெற்றும், பிடி அரிசி வாங்கியும் பின்னர் சைவம் வளர்த்தார். பல புத்தகங்களை எழுதினார், சைவ பிரகாச அச்சக சாலை மூலம் வெளியிட்டார். அவர் வெளியிட்ட புத்தகங்களே இன்றும் பாடத்திடமாக உள்ளன.

சிதம்பரம் சென்று, பரிகாரம் தேடிக் கொண்டார். யாழ்ப்பாணத்திலும், சிதம்பரத்திலும் அவர் அமைத்த சைவப் பிரகாச வித்தியாசாலை பாடசாலைகள் இன்றும் இயங்குவது குறிப்பிடப் பட வேண்டும்.

மேலும் சிதம்பர, யாஸ்திரிகர் மடம் இன்றும் சேவையில் உள்ளது.

நான் யாழில் சேர்ந்த போது, (பின்னர் அவரது நடவடிக்கைகளினால் நீக்கப்பட்ட) ஒருவர், இந்த ஆறுமுகநாவலர் விடயமாக, என்னுடன் முரண் பட்டார்.  இதென்னடா, சேர்ந்த மறு நாளே தலைவலி என்று எனது கருத்தை நீக்கினேன். 

அவரோ அதெப்படி நீக்குவீர் என்ற ரீதியில் மீண்டும் வந்தார்.

யாழை விட்டே ஓடுவோமோ என்ற நிலையில், நம்ம விசுகர் உதவிக்கு வந்தார். அந்த மனிதர், இதே வேலையாய்ப் போய் (bullying) , பின்னர் நிர்வாகம் அவரை நீக்கியது.

இன்னுமொரு முக்கியமான விடயம்:

இங்கிலாந்தில் புரட்டஸ்தாந்து மதம் தீவிரமாக இருந்த காலம். அதனால் பாதிக்கப் பட்ட கத்தோலிக்க மதப் பிரிவினர் அமெரிக்கா தப்பி ஓடி அங்கே வந்து அட்டகாசம் பண்ணிய புரட்டஸ்தாந்து மன்னர் படைகளுக்கு எதிராக போரிட்டு அமெரிக்க சுதந்திரத்தினை உறுதி செய்திருந்தனர். 

இந்த அமெரிக்க கத்தோலிக்க பாதிரிகளே, தமது மதம் பரப்பும் நோக்குடன் கிழக்கே இரண்டாவது பிரித்தானிய பேரரசு விரிவாக்க பிரதேசம் வந்தனர். அப்போது ஆங்கில தலை நகராக இருந்த கல்கத்தாவில் முகாம் அமைத்தனர். ஆனால் அவர்களது நடவடிக்கை அமெரிக்க அனுபவம் போல் ஆகிவிடலாம் என்பதால் அவர்களை வெளியேறி, எங்காவது செல்லுமாறு உத்தரவு இடப்பட்டது.

மொரிசியஸ் செல்லும் நோக்கில் வந்து யாழ்ப்பாணத்தில் 'தங்கி' செல்ல முயன்றவர்களே பின்னர் அங்கேயே தங்கி, இலங்கையில் அமரிக்கன் மிசன் பாடசாலைகளை 11 ல் 9 ஐ குடாநாட்டில் அமைத்து கல்வி வளர்த்தனர். அனேகமாக அவர்கள் கொழுப்பில் இருந்த, அதிகார பீடத்துக்கு வெளியே இருந்ததால், அல்லது  அதிகார பீடம் கண்டியப் போரில் இருந்த மையால், கவனிக்கப் படாமல் இருந்திருக்க பட முடிந்திருக்கும்.

அவர்களாலேயே யாழ்ப்பாணத்தவர்கள் கல்வி சமூகமாக, பிரிட்டிஷ் அரச நிர்வாக சேவையில் சேர்ந்து, மலேசிய, பர்மிய, சிங்கை நாடுகளுக்கு சென்றார்கள்.

அவ்வகையில் யாழ் மத்திய கல்லூரி மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளது.

Edited by Nathamuni

  • Replies 67
  • Views 6.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை என்று நினைக்கிறேன். பைபிளை மொழி பெயர்க்கும் போது அவர் யாழ் உவெஸ்லியன் பாடசாலை ஆங்கில ஆசான். பணத்துக்குக் குறை இல்லை.

ஆனால், தமது சிறப்பான மொழி பெயர்ப்பு பல ஈழ, தமிழக சைவர்களை, கிறிஸ்தவராகியது கண்டே அவர் வேலையைத் துறந்தார்.

பணம் படைத்த செட்டியார்களிடமும் உதவி பெற்றும், பிடி அரிசி வாங்கியும் பின்னர் சைவம் வளர்த்தார். பல புத்தகங்களை எழுதினார், சைவ பிரகாச அச்சக சாலை மூலம் வெளியிட்டார். அவர் வெளியிட்ட புத்தகங்களே இன்றும் பாடத்திடமாக உள்ளன.

சிதம்பரம் சென்று, பரிகாரம் தேடிக் கொண்டார். யாழ்ப்பாணத்திலும், சிதம்பரத்திலும் அவர் அமைத்த சைவப் பிரகாச வித்தியாசாலை பாடசாலைகள் இன்றும் இயங்குவது குறிப்பிடப் பட வேண்டும்.

மேலும் சிதம்பர, யாஸ்திரிகர் மடம் இன்றும் சேவையில் உள்ளது.

நான் யாழில் சேர்ந்த போது, (பின்னர் அவரது நடவடிக்கைகளினால் நீக்கப்பட்ட) ஒருவர், இந்த ஆறுமுகநாவலர் விடயமாக, என்னுடன் முரண் பட்டார்.  இதென்னடா, சேர்ந்த மறு நாளே தலைவலி என்று எனது கருத்தை நீக்கினேன். 

அவரோ அதெப்படி நீக்குவீர் என்ற ரீதியில் மீண்டும் வந்தார்.

யாழை விட்டே ஓடுவோமோ என்ற நிலையில், நம்ம விசுகர் உதவிக்கு வந்தார்.

அந்த மனிதர், இதே வேலையாய்ப் போய் (bullying) , பின்னர் நிர்வாகம் அவரை நீக்கியது.

தகவலுக்கு நன்றி..நாதமுனி!

எனது தவறான கருத்தை மாற்றிக்கொள்கிறேன்!

ஆறுமுக நாவலரைப் பற்றி இன்னுமொரு தகவல்!

நாவலரின் (நல்லூரில்) பக்கத்து வீட்டுக்காரியோட நாவலர் அடிக்கடி சண்டை பிடிப்பதுண்டு!

அதனால் கொஞ்ச நாள் போக்குவரத்து இல்லாமலிருந்தது!

பின்னர் நாவலர் இறந்த பின்னர் அவளால் துயரையும், நாவலர் மீதிருந்த அன்பையும் அடக்க முடியவில்லை!

அங்கு வந்து அழும் போது...'வைதாலும் நல் தமிழால் வைகுவையே...நாவலா' என்று சொல்லியழுதாளாம்!

பக்கத்துக்கு வீட்டுக்காரியின் தமிழே இப்படியெனில்... நாவலரின் தமிழ் எப்படியிருந்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மத்திய கல்லூரியின் பல தகவல்கள் ஓரளவு தெரிந்த போதிலும் மேலும் பல விடயங்களை இந்தத் திரியில் காணக் கிடைப்பது பாக்யம்...!

நானும் அங்கு நடைபெற்ற கலாச்சார விழக்கள். தென் இலங்கைப் பாடசாலைகளில் இருந்து வருகை தரும் நல்லெண்ணக் குழு மாணவர்களுடனான சந்திப்புகளில் பங்கு பற்றியிருக்கின்றேன்...!

 

  • தொடங்கியவர்

12140664_10153041041901010_6626895455036

Edited by நவீனன்

ஆகா!!  மலரும் நினைவுகள்.

இங்கு கருத்துக்களைப் பகிர்பவர்களிற்கு மனமார்ந்த நன்றிகள். தற்போது தாயகத்தில் உள்ளதால் நேரம் கிடைக்கும் போதெல்லாம்
நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியும்.

நவீனன் தொடர்ந்தும் தகவல்களைப் பரிமாறுங்கள் 

வாழ்க வளர்க மத்திய கல்லூரி.

  • தொடங்கியவர்

ஜீவன் சிவா நீங்கள் தாயகத்தில் நிற்பதால் 9 ம் திகதி நடைபெறும்  "மத்தியின் நடைபவணி" நிகழ்வில் கலந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

அங்கு நடைபெறும் நிகழ்வின் படங்களை இந்த திரியில் இணைத்து விடுங்கள்.

அங்கு நடைபெறும் நிகழ்வின் படங்களை இந்த திரியில் இணைத்து விடுங்கள்.

முடிந்தவரை முயற்சிக்கின்றேன். நன்றி

  • தொடங்கியவர்
யாழ். மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடை பவனி
யாழ். மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடை பவனி

யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடை பவனி இன்று  நடைபெற்றது.

கல்லூரியின் ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், அதன் ஒரு கட்டமாக நடை பவனி இடம்பெற்றது.

குறித்த நடை பவனியினை இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் நடராஜா ஆரம்பித்து வைத்தார். யாழ். மத்தியக் கல்லூரி வளாகத்திலிருந்து நடைபவனி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடை பவனியில் தமிழ் மக்களின் கலாசாரங்களை வெளிப்படுத்தும் வகையில் நடனங்களும் இடம்பெற்றிருந்தன.

நடைபவனியில், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் எனப் பெருந்திரளானோர் கலந்துக் கொண்டிருந்தனர்.

http://onlineuthayan.com/news/1035

index_zpsqxaaacyg.jpg

index.jpg2_zpsx4pvn9jm.jpg

index.jpg1_zpsczrxai0k.jpg

index.jpg3_zpsyp5sumst.jpg

  • தொடங்கியவர்

யாழ் மத்திய கல்லூரிக்கு 200 ஆண்டுகள்

யாழ் மத்திய கல்லூரிக்கு 200 ஆண்டுகள்

 

யாழ் மத்திய கல்லூரியின் 200 ஆண்டு நிறைவினை கொண்டாடும் முகமாக மாபெரும் நடைபவனி ஊர்வலம் இன்று யாழ் மத்திய கல்லூரி வளாகத்தில் இருந்து கல்லூரி அதிபர் எஸ். எழில் வேந்தன் தலைமையில் நடை பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ் இந்திய துணைத்தூதுவர் ஆர்.நடராஐன் கலந்துகொண்டு உத்தியபூர்வமாக 200 ஆவது ஆண்டின் நடைபவனியை ஆரம்பித்துவைத்தார்.

இவ் ஊர்வலம் யாழ் மத்திய கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டு யாழ் பலாலி வீதி, பல்கலைகழக வீதிகளினூடாக சென்று மீண்டும் யாழ் மத்திய கல்லூரியை வந்தடைந்தது.

இதில் பாடசாலை பழைய மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

http://tamil.adaderana.lk/news.php?nid=73350

 

  • தொடங்கியவர்

12049464_10153276361518823_2154785232800

12074863_10153276361498823_2495727595412

12047033_10153276362028823_6236542349020

12108930_10153276362068823_7558579955961

11224767_10153276362703823_4808497522041

12079304_10153276362788823_4295555753711

12096406_10153276362973823_2923697955091

12106905_10153276363033823_3663965162694

12108135_10153276363458823_1935022137448

12141743_10153276363503823_2678804908886

12107849_10153276363533823_1527757106637

12141683_10153276363618823_6952422761543

12074960_10153276363638823_4878574223554

11224357_10153276363703823_1472747585474

12106778_10153276363723823_1391236556762

12072577_10153276363833823_6027789290280

12074932_10153276363943823_6097042654467

11148438_10153276364138823_1871787285473

11218169_10153276364158823_6666323778906

12144770_10153276364333823_5054502858814

12140580_10153276364393823_3382961592752

12140594_10153276364443823_4693318321265

 

  • தொடங்கியவர்
 
நடைபவனி.....
 
 

article_1444381396-16.jpg

சொர்ணகுமார் சொரூபன்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆம் ஆண்டு விழாவையொட்டி, நடைபவனி கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில், யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தின் கொன்சலட் ஜெனரல் ஏ.நடராஜன் உட்பட பலர் கலந்துகொண்டார்.

article_1444381412-9.jpg

article_1444381422-10.jpg

article_1444381434-12.jpg

article_1444381446-13.jpg

article_1444381457-14.jpg

- See more at: http://www.tamilmirror.lk/156142/நட-பவன-#sthash.XCJ0p33T.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
யாழ். மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவனி!
யாழ். மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவனி!
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டிய நடைபவனி இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. காலை 8 மணிக்கு கல்லூரியின் முன்றிலில் ஆரம்பமான நடைபவனியை பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஏ.நடராஜன் கொடி அசைத்துத் தொடக்கி வைத்தார்.
 
தமிழர்களினதும் யாழ்ப்பாணத்தினதும் கலாசாரப் பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் விதத்திலும் மத்திய கல்லூரியின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் விதத்திலான வாகன ஊர்திகளும் அணி வகுப்பில் இடம்பெற்றன. இந்த அணி வகுப்பில் மத்திய கல்லூரியின் சகோதர பாடசாலையான வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையின் மாணவிகளும் பங்குபற்றினர்.
 
மத்திய கல்லூரி மைதானத்தில் இருந்து ஆரம்பமான நடைபவனி வேம்படி வீதியூடாக பலாலி வீதியை அடைந்து அங்கிருந்து பரமேஸ்வரா சந்தியை சென்றடைந்தது. பல்கலைக்கழக மாணவர்களின் வரவேற்பைத் தொடர்ந்து பயணித்த நடைபவனி பிறவுண் வீதியூடாக கஸ்தூரியார் வீதியை அடைந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை அடைந்தது.
 
யாழ். மத்திய கல்லூரி சமூகத்தினரை யாழ். இந்துக் கல்லூரியினர் 'பாண்ட்' இசைத்து வரவேற்றனர். தொடர்ந்து கே.கே.எஸ். வீதி வழியாக யாழ்.நகரை அடைந்த நடைபவனி அங்கிருந்து யாழ். மத்திய கல்லூரியின் மைதானத்தை சென்றடைந்தது. இந்த நடை பவனியில் சமயத் தலைவர்கள், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
 
central%20walk%20563e.jpg&h=auto&w=480&z
central%20walk%20560e.jpg&h=auto&w=480&z
central%20walk%20570e.jpg&h=auto&w=480&z
central%20walk%20571e.jpg&h=auto&w=480&z
central%20walk%20562e.jpg&h=auto&w=480&z
central%20walk%20569e.jpg&h=auto&w=480&z
 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12079623_10153276601463823_1607949612634

12108866_10153276601583823_2422218052947

11226563_10153276601593823_2909393576795

12141630_10153276601723823_1885800740442

12108190_10153276601768823_1029545639576

12141589_10153276601813823_8635835867527

12079441_10153276601913823_6856553348615

இணைப்புகளுக்கு நன்றி நவீனன் .

படங்களை பார்க்க மிக சந்தோசமாக இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப யாழில் எந்த விழா என்டாலும் இந்தியத் துணைத் தூதுவரை கூப்பிடத் தொடங்கிட்டினம்

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப யாழில் எந்த விழா என்டாலும் இந்தியத் துணைத் தூதுவரை கூப்பிடத் தொடங்கிட்டினம்

அமைதிப்படையால் சாதிக்க முடியாததை துணை தூதுவர் மூலம் சாதிக்க பார்க்கினம்...

யாழ்ப்பாணதார் துட்டகெமுனு ஸ்டைலில் இப்படி யோசிக்கினமாம்  ஒருபக்கம் சிங்கள தலைவர்கள் நேசக்கரம்,மற்ற பக்கம் இந்தியா நேசக்கரம் நடுவில நாங்கள் சுயாட்சி பெறுவது எப்படி?

யாழ் "ஹிந்து" க் கல்லூரி .....  ஏன் இந்த "ஹிந்து" யாழ்பாண கல்லூரிக்குள்? ......  சரி மதத்தை குறித்தாலும் ...... . யாழில் ஒருவரும் ஹிந்து மதத்தவர்கள் இல்லையே! ... யாழ் "சைவ* க் கல்லூரி என்றல்லவா அழைக்கப்பட்டிருக்க வேண்டும்? இனியாவது பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்! ... இப்படியான தத்துவம் எனக்கு சொந்தமானதல்ல ... யாழ் மத்திய கல்லூரியில் படித்து ******** ********** மாற்று கருத்து.மாணிக்கத்தின் பொன்வாயால் உதிர்த்த ...!

Edited by நியானி
மலினமான வார்த்தைகள் நீக்கம்

  • 1 month later...
  • தொடங்கியவர்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவையொட்டி புலம்பெயர்ந்து வாழும் பழைய மாணவர்களால் மீள் உருவாக்கப்பட்ட மிக எளிமையான அதே நேரம் சுவையான பாடல் ஒன்று.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.