Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் பலியாடாக்கப்பட்டுள்ளேன்! அனந்தி அறிவிப்பு!

Featured Replies

நான் பலியாடாக்கப்பட்டுள்ளேன்! அனந்தி அறிவிப்பு!

 

ananthi%20siththarthan-3.jpgசித்தார்த்தனிற்கான பிரச்சார விடயத்தினில் திட்டமிட்ட வகையினில் பலியாடாக்கப்பட்டிருப்பதாக வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பின் சுமந்திரன் மற்றும் சித்தார்த்தனை மக்கள் நிராகரிக்க வேண்டுமென ஏற்கனவே விடுத்த ஊடக அறிக்கையினில் தான் அறிவித்ததை அனந்தி நினைவு கூர்ந்துள்ளார்.

குறித்த நிகழ்விற்கு தான் அழைக்கப்பட்டிருந்ததாகவும் அது தேர்தல் பரப்புரை கூட்டமாக இருக்குமென தனக்கு தெரியாதென தெரிவித்த அனந்தி தான் பேசாதவற்றினை பேசியதாக சித்தார்த்தன் தரப்பே ஊடகங்களிற்கு அனுப்பியதாகவும் தெரிவிக்கின்றார்.

யாழினில் கடந்த காலங்களினில் டக்ளஸ் எத்தகைய கொலைகளை அரங்கேற்றினாரோ அதற்கு ஈடாக சித்தார்த்தன் வவுனியாவில் செய்தவை மறக்கவோ மன்னிக்கவோ முடியாது.கப்பம் முதல் கடத்தப்பட்ட தமிழ் பெண்களை பாலியல் வன்புணர்வின் பின்னர் கொலை செய்தவை வரை அவரது துணை ஆயுதக்குழு செய்தவை சொல்லில் அடங்காது.

காணாமல் போனவர்களிற்காக குரல் எழுப்பி போராடி வரும் நான் அவற்றினை செய்த தரப்புக்களிற்கு ஆதவாக பிரச்சாரம் செய்ததாக வெளிவந்துள்ளமை மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதொன்றல்லவெனவும் அனந்தி தெரிவித்துள்ளார்.

 

 

 

http://www.pathivu.com/news/42303/57//d,article_full.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒரு விளம்பரம் பர்த்தேன்

 

நேர்மை

தூய்மை

நல்வழி

இவற்றிற்கு மிகவும் பொருத்தமானவர் சித்தார்த்தன் என்றிருந்தது...

தலை சுற்றுது...

  • கருத்துக்கள உறவுகள்

புளட் அமைப்பில் உமா மகேஸ்வரனுக்கு பின்னர் மாணிக்கதாசன் தலைமயின் ஒரு பிரிவாகவும் சித்தர் தலைமையில் இன்னொரு பிரிவாகவும் இயங்கியதாக அறியக் கிடைத்தது. இதில் மாணிக்கதாசனே நேரடியாக அரசியல் கொலைகளை நிகழ்த்தினார். சித்தர் கூட பயந்து வவுனியாவுக்கு போவதில்லை அப்போது. சித்தர் அரசியல் கொலைகளுடன் தொடர்புபட்டிருந்தாரா என்பதை கேள்விப்படவில்லை. தெரிந்தவர்கள் ஆதாரத்தோடு விளக்கலாம். யார் யாரை சித்தர் மண்டையில் போட்டார்?

பல விடயங்கள் தெரியும் .எழுதித்தான் என்ன ஆகாப்போவுது.

  • கருத்துக்கள உறவுகள்

பல விடயங்கள் தெரியும் .எழுதித்தான் என்ன ஆகாப்போவுது.

ஆனால் புலி  என்றால் எழுதலாம்

எழுதித்தள்ளுவோம்

கனக்க ஆகும்...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச்செல்வனின் பெயரால் தமிழ்நெட் ஜெயச்சந்திரன் முன்னர் அறிக்கைகள் வெளியிட்டது போன்று தற்போது அனந்தி சசிதரனின் பெயரால் பதிவு போன்ற இணையத்தளங்கள் அறிக்கை வெளியிடுவது பரிதாபத்துக்குரிய விடயம் ஆகும்.

இதற்கு அனந்தி சசிதரன் தெரிந்தோ தெரியாமலோ பொறுப்பேற்றுத்தான் ஆகவேண்டும்.

புலி வாலைப் பிடித்தால் விட்டாலும் உபத்திரவம் விடாட்டியும் உபத்திரவம் என்று அன்றே சும்மாவா சொன்னார்கள்.

வெளிநாட்டு புலிகள் சார்பு இணையத்தளங்கள் விபச்சாரிகளை விட கேவலமான வேலைகளைச் செய்வது உண்மையான ஊடகவியலாளர்களைக் கூட கேலிக்குரியவர்களாக்குகின்ற செயல் என கொழும்பில் உள்ள ஊடக நண்பர் என்னிடம் கவலையுடன் தெரிவித்ததனை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

ஊடக சுதந்திரத்தினை எவ்வளவு கேவலமாக பாவிக்க முடியுமோ அவ்வளவு கேவலமாக புலம்பெயர் புலிகள் சார்பு இணையத்தளங்களும் ஒலி, ஒளி ஊடகங்களும் பாவித்து வருகின்றன என்பது கண்கூடாகவே தெரிகின்றது.

அன்று விடுதலைப் புலிகளை இவ்வாறுதான் புலம்பெயர் தமிழர்களும் ஊடகங்களும் உசுப்பேத்தி உசுப்பேத்தி அவர்களை முள்ளிவாய்க்கால் வரை கொண்டு சென்று விட்டார்கள்.

இதே போன்றதொரு நிலை சில மாகாண சபை உறுப்பினர்களுக்கும் தற்போது வெற்றி பெறத் துடிக்கும் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் ஏற்படப் போகின்றது என்பதனை நினைக்க கவலையாக இருக்கின்றது.

எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் எத்தனை எத்தனை அறிக்கைகள் வெளிவரப் போகின்றதோ கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

No fire zone, செய்தியை இணைக்கும்போது தலைப்பையும் உள்ளடக்கத்தையும் முழுமையாகவும் மாற்றாமலும் இணைக்கவேண்டும். வாசிப்பவர்களைக் கவருமாறு தலைப்பை மாற்றுவது களவிதிகளை மீறும் செயலாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்! சித்தார்த்தனை ஆதரித்து அனந்தி பேச்சு!!

 

இது சித்தார்த்தனின் தேர்தல் பரப்புரைக்கூட்டம் கதை எழுதும் பதிவு கொஞ்சம் பொருத்தமாக இனியாவது எழுதி புலி வாலுகளுக்கு உட்சாகமூட்டட்டும் 

 

(புலி வால் ;புலிகளால் முகவரி பெற்றவர்கள் புலிகள் இல்லாதபோது ,மாவீரர்களுக்கும் ,போராளிகளுக்கும் எதையும் செய்யாமல் தங்களது சுயநலனுக்காக புலிகளின் பெயரை பயன்படுத்துபவர்கள் ).

 

 

அனந்தி கூட்டமிப்பில் உள்ளவர்களில் கூடுதல் ஒட்டு சுரேஷ் ,சித்தர் ,செல்வம் போன்றவர்களுடன் தான் .சம் சும் மாவை யுடன் நல்ல உறவு இல்லை .

ஆனந்தி அக்கா பொய் சொல்லுறாவா இல்லை பதிவு பொய் சொல்லுதா//? பதிவு பொய் சொல்லுது எனில் ஏன்  பதிவின் செய்திகளை யாழில் கருத்து களத்தில் தடைசெய்யப்படவில்லை/??

Edited by வினித்

  • கருத்துக்கள உறவுகள்

பதிவு - இது ஆசிரியர் கக்கூசில் இருக்கும் போது அவர் கற்பனையில் உதித்த செய்தியாய் இருக்கும்.

பதிவு மட்டுமே போதும் புலம் பெயர்ந்தவர்களை நிலத்து மக்கள் வெறுத்து ஒதுக்க.

பதிவு போன்ற மூன்றாம் தர இணைய தளங்களிலிருந்து செய்திகள் பதிவதை யாழ் ஏன் தடை செய்யவில்லை?  தனது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு பொய் செய்திகள் வெளியிடுவது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. பதிவும் புலவாலுகளும் என்னும் 2009க்கு முன்னிருந்த மனநிலையிலேயே இருக்கிறார்கள். 

பதிவு போன்ற மூன்றாம் தர இணைய தளங்களிலிருந்து செய்திகள் பதிவதை யாழ் ஏன் தடை செய்யவில்லை?  தனது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு பொய் செய்திகள் வெளியிடுவது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. பதிவும் புலவாலுகளும் என்னும் 2009க்கு முன்னிருந்த மனநிலையிலேயே இருக்கிறார்கள். 

தமது முப்பது வருட வியாபாரம் தொடர வேண்டும் என்ற நல்ல நோக்கம் தான் 

  • கருத்துக்கள உறவுகள்

சித்தருக்கு நல்லாத்தான் கழுவுறாங்க. சித்தர் எம்பி ஆனதே வ்வுனியாவில் இதற்குள்ள சித்தர் வ்வுனியாவிற்கு போறதில்லையாம் செம காமடி. 

சித்தர் குந்தியிருந்தது வ்வுனியாவில், மாணிக்கதாசன் தான் பெரும்பாலும் வ்வுனியாவிற்கு வெளியால இருந்து கொண்டு தன்ர சிண் அலவாங்கு தாசை வைத்துக் கொண்டு ஆட்டம். மாணிக்கம் வ்வுனியா வந்தால் அங்கு நடப்பவற்றை வைத்தே புரியும் ஆள் உள்ளே என்று. 

ஆமா சித்தர் கொலை செய்யும் போது ஷ்பெசல் சூம் போட்டு படம் எடுத்து வைத்திருக்கிறியள் தானே. உமாவை போட்டதே தான் தலைவராக வேண்டும் என்பதற்காக.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலரின் வாதப்படி மாணிக்கதாசனின் சாவுக்கு பின்னர் புளொட் வவுனியாவில் சிரங்கு சொறிஞ்சு கொண்டிருந்தது. ஆனால்.. 2014 மன்னிப்புச்சபை அறிக்கையில் கூட புளொட்டின் சித்திரவதை முகாம்கள் பற்றி குறிப்பிடலோடு கண்டனமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்கள் யாழில் ஏலவே இடப்பட்டும் உள்ளன. 

சித்தார்த்தனுக்கு எத்தினை கிலோவில யார் சுண்ணாம்படிச்சாலும் அவர் வெளுக்கவே வழியில்லை. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் சித்தர் வெள்ளை வேட்டி கட்டுவதால் சுலபமாக வெள்ளையடிக்கலாம் என்று நினைக்கினம். 

  • கருத்துக்கள உறவுகள்

சித்தார்த்தன் கறுப்பாயிருக்கலாம், வெளுப்பாயிருக்கலாம். ஆனால் தேர்தலில் வென்று பாராளுமன்றம் போகத்தான் போகின்றார். சுமந்திரன் தேசியப்பட்டியல் மூலம் போவார்!

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அதை நான் மறுக்கவில்லை. வ்வுனியாவில் போட்டியிட்டு தோல்வி மேல் தோல்வி அடைந்து செல்லாக்காசாக இருந்தவர்.

என்ன யாழ்ப்பாணத்தவர்களுக்கு அவரின் வண்டவாளம் முழுவதும் தெரியவுமில்லை அனுபவிக்கவுமில்லை அதனால் தர்மலிங்கம் என்ற பெயருக்குக்காக வாக்களிப்பார்கள். 

Edited by MEERA

கிருபன் அதை நான் மறுக்கவில்லை. வ்வுனியாவில் போட்டியிட்டு தோல்வி மேல் தோல்வி அடைந்து செல்லாக்காசாக இருந்தவர்.

என்ன யாழ்ப்பாணத்தவர்களுக்கு அவரின் வண்டவாளம் முழுவதும் தெரியவுமில்லை அனுபவிக்கவுமில்லை அதனால் தர்மலிங்கம் என்ற பெயருக்குக்காக வாக்களிப்பார்கள். 

இப்ப கேள்வி சித்தர் வெள்ளையா கறுப்பா என்பதை பற்றியதல்ல. பதிவு ஏன் கீழ்தரமான வியாபாரம் செய்வது என்பது தான் கேள்வி. இதற்கு பதில் கிடைக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

 

இப்ப கேள்வி சித்தர் வெள்ளையா கறுப்பா என்பதை பற்றியதல்ல. பதிவு ஏன் கீழ்தரமான வியாபாரம் செய்வது என்பது தான் கேள்வி. இதற்கு பதில் கிடைக்குமா?

அதை நீங்கள் பதிவையோ அல்லது அதனுடன் தொடர்புடையவர்களையோ கேட்க வேண்டும். 

இரவு பகலாக உழைத்து  சூப்பர் சிங்கரில் ஜெசிகாவை  இரண்டாவது நிலைக்கு கொண்டுவந்த புலன்பெயந்த தமிழருக்கு  முடியாத காரியமா.எப்படியும்  இருதேசக்கரர்களில் ஒரு சீட் கிடைக்க வைப்போம்.

கிருபன் அதை நான் மறுக்கவில்லை. வ்வுனியாவில் போட்டியிட்டு தோல்வி மேல் தோல்வி அடைந்து செல்லாக்காசாக இருந்தவர்.

என்ன யாழ்ப்பாணத்தவர்களுக்கு அவரின் வண்டவாளம் முழுவதும் தெரியவுமில்லை அனுபவிக்கவுமில்லை அதனால் தர்மலிங்கம் என்ற பெயருக்குக்காக வாக்களிப்பார்கள். 

யாழ்ப்பாணத்தில் இருப்பவர்களுக்கு வவுனியாவில் நடந்தது தெரியாதாம் .இப்படியான அறிவாளிகளுடன் தான் யாழில் மாரடிக்க வேண்டிக்கிடக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

வ்வுனியாவில் சித்தர் அடி மேல் அடி வாங்கியது கூட தெரியாத அறிவாளி.

வ்வுனியா

Democratic People's Liberation Front    

2010 - 5,900   

2004 - 6,316

 

 

 

http://www.lankaweb.com/news/items01/281001-2.html

இப்ப 2015.

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் DPLF இல் வ்வுனியாவிற்கு வரலாமே. சில இடங்களில் வரலாறு முக்கியம் சர்வதேச தொடர்பாளரே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.