Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய அரசில் 5 தமிழ் அமைச்சர்கள்? - விஜயகலா, அங்கஜனுக்கு இடமில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
[Saturday 2015-08-29 08:00]
தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை மற்றும் அமைச்சர்கள் தொடர்பான இணக்கப்பாடு தற்போது எட்டப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் 50 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 10 இராஜாங்க அமைச்சர்களும், 30 பிரதி அமைச்சர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதில் 10 முஸ்லிம் மற்றும் 5 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம் பிடித்துள்ளனர். எனினும் இவர்களுக்கு ஒதுக்கப்படவுள்ள அமைச்சுக்களின் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை மற்றும் அமைச்சர்கள் தொடர்பான இணக்கப்பாடு தற்போது எட்டப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் 50 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 10 இராஜாங்க அமைச்சர்களும், 30 பிரதி அமைச்சர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதில் 10 முஸ்லிம் மற்றும் 5 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம் பிடித்துள்ளனர். எனினும் இவர்களுக்கு ஒதுக்கப்படவுள்ள அமைச்சுக்களின் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

   

எதிர்வரும் நான்காம் திகதியளவில் அமைச்சர்களின் பதவிப் பிரமாண வைபவம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர், பிரதி அமைச்சர் பதவிகளை பெற்று கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களின் பெயர் பட்டியல் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

தமிழ் அமைச்சர்கள்!

01. பீ.திகாம்பரம் -கபினட் அமைச்சர்

02. தொண்டமான் -கபினட் அமைச்சர்

03. டீ.எம்.சுவாமிநாதன் – புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர்

04. ராதா கிருஷ்னன் – பிரதி அமைச்சர்

05. வடிவேல் சுரேஷ் – பிரதி அமைச்சர்

முஸ்லிம் அமைச்சர்கள் விபரம்:

06. ரிஷாட் பதியூதீன் -கபினட் அமைச்சர்

07. கபீர் ஹஷீம் – கபினட் அமைச்சர்

08. ஏ.ஏ.எம்.பௌசி – கபினட் அமைச்சர்

09. ரவுப் ஹகீம் – கபினட் அமைச்சர்

10. மொஹமட் ஹலீம் – கபினட் அமைச்சர்

11. பைஸர் முஸ்தபா – இராஜாங்க அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர்

12. அமீர் அலி – இராஜாங்க அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர்

13. மொஹமட் நவவி – பிரதி அமைச்சர்

14. மொஹமட் மஹரூப் – பிரதி அமைச்சர்

15. ஹிஸ்புல்லா – பிரதி அமைச்சர்

ஏனைய அமைச்சர்ககள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் பெயர் விபரங்கள்,

ரணில் விக்ரமசிங்க,ரவி கருணாநாயக்க, சஜித் பிரேமதாஸ, தயா கமகே, அகில விராஜ் காரியவசம்,லக்ஷ்மன் கிரிஎல்ல, சுஜுவ சேனசிங்க, ஹர்ஷ டி சில்வா, பாட்டலி சம்பிக்க ரணவக்க, விஜேதாஸ ராஜபக்ச, ருவண் விஜேவர்தன,ரஞ்சன் ராமநாயக்க, அஜித் பீ பெரேரா, அர்ஜுன ரணதுங்க,ஜோன் அமரதுங்க,வசந்த சேனாநாயக்க,ரஞ்சித் மத்துமபண்டார,ஹரின் பெர்ணான்டோ, வசந்த அலுவிஹார, இரான் விக்ரமரத்ன,திலிப் வெதஆராச்சி, பாலித்த தெவரபெரும, பாலித்த ரங்க பண்டார,ரவி சமரவீர, புத்திக்க பத்திரன, மங்கள சமரவீர, சாகல ரத்ணாநாயக்க,கயந்த கருணாதிலக்க, வஜிர அபேவர்தன, பீ.ஹெரிசன், சந்திரானி பண்டார, நிரோஷன் பெரேரா, நவீன் திஸாநாயக்க, ஜயவிக்ரம பெரேரா, எஸ்.பீ.நாவின்ன, அஷோக் அபேசிங்க, சம்பிக்க பிரேமதாஸ, தலதா அத்துகோரல, துனேஷ் கன்கந்த, அனோமா கமகே, மலிக் சமரவிக்ரம, ஜயம்பதி விக்ரமரத்ன, திலக் மாரபன, அத்துரலிய ரத்ன தேரர், எம்.கே.டி.எஸ.குணவர்தன, துமிந்த திஸாநாயக்க, மொஹான் லால், விதுர விக்ரமநாயக்க, சரத் அமுனுகம, கெஹேலிய ரம்புக்வெல்ல,சிறிபால கம்லத், மஹிந்த அமரவீர, தேனுக்க விதானகமகே,சந்திரசிறி கஜதீர , சந்திம வீரக்கொடி, பிரியங்கர ஜயரத்ன, தயாசிறி ஜயசேகர ,ரஞ்சித சியம்பலாப்பிட்டிய, டிலான் பெரேரா, விஜயமுனி சொய்சா, மஹிந்த சமரசிங்க, லக்ஷ்மன் யாப்பா ,எஸ்.பீ.திஸாநாயக்க, திலங்க சுமதிபால

http://www.seithy.com/breifNews.php?newsID=139310&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

5 தமிழ் அமைச்சர்கள் 
10 முஸ்லீம் அமைச்சர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

5 தமிழ் அமைச்சர்கள் 
10 முஸ்லீம் அமைச்சர்கள்.

பலதிசைகளாகப் பிரிந்தும் அழிந்தும் வரும் தமிழர்கள் சிந்திக்க வேண்டிய விடயம்!

யாழ் மாவட்டத்தில் ஒரு எம்பியை எடுத்த  விஜயகலாவுக்கே இல்லை  அனால் பத்து முஸ்லீம்கள்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாவட்டத்தில் ஒரு எம்பியை எடுத்த  விஜயகலாவுக்கே இல்லை  அனால் பத்து முஸ்லீம்கள்

திருமதி மகேஸ்வரன் பா உ  பதவியைப் பெற்றுக் கொண்டதே அவருக்குக் கிடைத்த சன்மானம். மந்திரி பதவி  எல்லாம் கொடுத்து அவரது வெற்றியைக் கொச்சைப்படுத்தக்கூடாது என்று தான் ரணில் அவருக்கு அமைச்சுப்பதவி கொடுக்கவில்லையாம்.

  • கருத்துக்கள உறவுகள்

டக்கிக்கு இல்லை. கருணா கும்மானுக்கு இல்லை. பிள்ளையான் கும்மானுக்கு இல்லை. விஜயகலாக்கு இல்லை..சித்தார்த்தனுக்கு இல்லை.. இப்படி அமைச்சர் பதவிக்கு லாய்க்கில்லாத யாருக்கும் அது இல்லை. அப்போ எப்படி இவர்கள் எல்லாம் கடந்த காலங்களில் அமைச்சர்கள் ஆனார்கள் எல்லாம்.. புலி அழிப்பு என்று சொந்த இன அழிப்பில் இவர்கள் செய்த எஜமான எடுபிடி காட்டிக்கொடுப்பு வேலைக்குத் தான். புலிகள் இல்லாத கடந்த 6 வருடத்தில்.. 25 வருசமா அமைச்சர் பதவியை வகித்த டக்கி அங்கிள் வெறுமனவே குந்தி இருப்பது பார்க்க பரிகசிப்பா இருக்குது. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

டக்கிக்கு இல்லை. கருணா கும்மானுக்கு இல்லை. பிள்ளையான் கும்மானுக்கு இல்லை. விஜயகலாக்கு இல்லை..சித்தார்த்தனுக்கு இல்லை.. இப்படி அமைச்சர் பதவிக்கு லாய்க்கில்லாத யாருக்கும் அது இல்லை. அப்போ எப்படி இவர்கள் எல்லாம் கடந்த காலங்களில் அமைச்சர்கள் ஆனார்கள் எல்லாம்.. புலி அழிப்பு என்று சொந்த இன அழிப்பில் இவர்கள் செய்த எஜமான எடுபிடி காட்டிக்கொடுப்பு வேலைக்குத் தான். புலிகள் இல்லாத கடந்த 6 வருடத்தில்.. 25 வருசமா அமைச்சர் பதவியை வகித்த டக்கி அங்கிள் வெறுமனவே குந்தி இருப்பது பார்க்க பரிகசிப்பா இருக்குது. tw_blush:

புலி இல்லாத அரசியலால், ஒட்டுக் குழுக்களின்   வாழ்வும், மோசமாக போய் விட்டது. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

பெளசி.. ஹிஸ்புல்லா..பெளதீன் கூட்டம் செய்யாத ஊழல் இல்லை. நல்லாட்சிக்கு அல்காவின் ஆசீர்வாதம் வேண்டி நல்லா அமைச்சுப் பதவிகளை அள்ளிக் கொடுத்துள்ளார் அணிலார். எல்லாம் ஒருவித தமிழரை ஏமாற்றும் குள்ளநரித்தனம் தான். இதற்கு அணிலாரே ஒரு நாள் வருந்தவும் நேரிடலாம். ஏனெனில் இவ்வளவும் மகிந்தவோடு ஒட்டி இருந்த கூட்டம். tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மனோ கணேசனுக்கு, ஒரு அமைச்சுப் பதவி  கொடுத்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மனோ கணேசனுக்கு, ஒரு அமைச்சுப் பதவி  கொடுத்திருக்கலாம்.

மனோ உள்ள இருந்தாலும் உணர்வு ரீதியானவர் என்பது அணிலாருக்குத் தெரியும். அணிலார் உள்ளுக்குள் தனக்கு அடிபணியக் கூடியவர்களுக்கு மட்டும் தான் பதவி கொடுக்கிற ஒருவர். அணிலார் லேசுப்பட்ட நரியார் இல்லை. மிக மோசமான குள்ளநரியார். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

மாவட்ட அமைச்சர் பதவி உருவாக்கப்படு.......யாழ் மாவட்ட அமைச்சர் டக்கிளஸ்,கிளிநோச்சி மாவட்ட அமைச்சர் அங்கஜன்,வன்னி மாவட்ட அமைச்சர் விஜயகலா,பதவிகள் வழங்கப்படும் 

5 தமிழ் அமைச்சர்கள் 
10 முஸ்லீம் அமைச்சர்கள்.

தமிழர்களின் வாக்குகளை விட முஸ்லிம்களின் வாக்குகள் ஐ,தே,க அதிகமாக கிடைத்துள்ளது.அதுதான் அவர்களுக்கு அதிக அமைச்சர் பதவி........அவர்கள் 60 வருடமாக இணக்க அரசியல் நாம் உரிமைக்காக பிணக்க அரசியல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இஞ்சையிருந்து  கத்தின அவையளுக்கு என்ன பதவியாம்??? :cool:

அரசியலும் சற்று விளங்கவேண்டிய ஒரு விடயம் .

இருபது வருடங்களுக்கு மேல் அதற்குள் இருந்தும் இன்னமும் விளங்காமல் இருப்பது ஏன் என்று உண்மையில் எனக்கு ஏன் என்று விளங்கவில்லை .

சற்று என்றாலும் விளங்கியிருந்தால் இப்படி ஒரு கேள்வி எழாது.

5 தமிழ் அமைச்சர்கள் 
10 முஸ்லீம் அமைச்சர்கள்.

ஏன் என்று கொஞ்சம் சிந்தியுங்கள் பிள்ளைகளே .

  • கருத்துக்கள உறவுகள்

இணக்க அரசியல் செய்து முஸ்லிகள் தங்கட இனத்தை முன்னேற்றுகிறார்கள்! நாங்கள் எங்கட 3 யாழ் மேயர்மாருக்கு (2+1) வெடியல்லே வைச்சனாங்கள்!:innocent:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.