Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாற்று சந்தர்ப்பம், எதிர்கட்ச்சித் தலைவர் சம்பந்தனுக்கு வாழ்த்துக்கள் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

HISTORICAL OPPORTUNITY - GREETINGS FOR OPPOSITION LEADER SAMPANTHAN

வரலாற்று சந்தர்ப்பம். எதிர்க் கட்ச்சித் தலைவர் சம்பந்தனுக்கு வாழ்த்துக்கள், - வ.ஐ.ச.ஜெயபாலன்

என்போன்றவர்கள் எதிர்பார்த்ததுபோலவும் பிரார்த்தித்ததுபோலவும் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக மேம்பட்டுள்ளது.  எதிர்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு முன்கூட்டியே என் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளேன். இப்போது என் வாழ்த்துக்களையும் ஆதரவையும் பதிவு செய்கிறேன்.

 அண்மைக்கால வரலாற்றில்  விடுதலைக்குப் போராடும் பல்வேறு தேசிய இனங்கள் இன்று நாம் நிற்கும் புள்ளியைக்  கடந்து வெற்றிபெற முயன்றுள்ளன. அவற்றுள் எரித்திரியா, கொசோவோ  கிழக்கு தீமோர் தென் சூடான் ஸ்கொட்லாந்து கியூபெக் போன்ற தேசிய இனங்கள் இன்று நாம் நிற்க்கும் புள்ளியை வெற்றிகரமாக கடந்து சென்று தமது சுய நிர்ணய உரிமையை வென்றெடுத்துள்ளன, அவற்றுள் பல  தேசிய இனங்கள் இன்று சுதந்திர நாடுகளாக விடுதலை அடைந்துள்ளன, சில இணைபாட்ச்சிப் பாதையில் முன்னேறியுள்ளன. மேற்படி தேசிய இனங்களின் வரலாறுகளில் இருந்தும் எங்கள் தோல்வியின் படிப்பினைகளில் இருந்தும் மட்டுமே எங்கள் சுய நிர்ணய உரிமைக்கான பாதைகளை நாம் கண்டு கொள்ள முடியும்.

மேற்படி தேசிய இனங்களின் வரலாற்றில் ஐநா மேற்கு நாடுகள் நேச நாடுகளின் அறிவுறுத்தல்களுக்கும் முக்கிய தலைமைக்கும் எதிராக  ஒருசிலர் தீவிரவாத  கோசம் போட்டமை பதிவாகி உள்ளது. அத்தகைய பொழுதுபோக்கு அதிதீவிர வாதிகள் பெரும்பாலும்  தமது எதிரிகளுக்குச் சாதகமான சூழலையே உருவாக்கினார்கள்.  தேசிய இனப் போராட்டங்களை அழிக்க தீவிர போக்குகளை எதிரியே ஆதரித்தமையும் தூண்டி விட்டமையும்கூட வரலாற்றில் பலதடவை வெள்ச்சத்துக்கு வந்திருக்கிறது.

பல தேசிய இனங்கள் தீவிரக் கோரிக்கைகளையும் வேகமான செயல்திட்டங்களையும்  அதற்கான கால அட்டவணையையும் கொண்டிருந்தார்கள். எனினும் அவை ஐநா மற்றும் நேச நாடுகளின் ஆதரவை நாடியபோது ஐநா மற்றும் நேச நாடுகளின் கால அட்டவணைக்கு தக்கதாக பொறுமையை சோதிக்கும் வகையில் மெதுவாகவும் வழைந்து கொடுத்தும் படிப்படியாகவுமே செயல்பட நேர்ந்தது. ஐநா நமது வேலையாளில்ல. அவர்கள் மகாபாரதத்தில் கண்ணன் தூது போல ஐந்து வீடு ஐந்து நாடு அல்லது ஐந்து ஊர் கொடுங்கள் கடைசி ஐந்து வீடாவது கொடுங்கள் என்றே ஆரம்பிப்பார்கள். இதை புரிந்து கொண்ட தேசிய இனங்களால் மட்டுமே சர்வதேச ஆதரவைத் திரட்ட முடியும்.

தற்போது விடுதலை அடைந்துள்ள எரித்திரியா, கொசோவோ கிழக்குதீமோர், தென் சூடான் கியூபெக் ஸ்கொட்லாந்து போன்ற  தேசிய இனங்கள் மலையே மலையே விலகிச் செல் என்று தீவிரம் கொள்ளாமல் ஐநா சர்வதேச நாடுகளுடன் ஒத்துழைத்து சுற்றிச் சுழன்று நடந்து சென்றே மலையைக் கடந்து வெற்றி பெற்றுள்ளனர். மேற்படி நாட்டுகளின் அனுபவங்களை நம்மில் சிலர் புரிந்து கொள்ளவில்லை.நமது கடந்த கால தோல்விகளில் இருந்தும் வெற்றி பெற்ற நாடுகளின் அனுபவங்களில் இருந்துமே நாம் அவற்றைக் கற்றுக்கொள்ள முடியும்.

2006 ஜெனீவா பேச்சுவார்த்தை முறிந்தத அன்று மாலையில் முக்கிய மான சர்வெதேச ராசதந்தரி ஒருவரைச் சந்திதேன். திரு பாலசிங்க்லம் அவர்கள் ஓரம் கட்டப் பட்டதில் இருந்தே சர்வதேசம் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் அழிவு ஆரம்பித்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜெனீவா பேச்சு வார்தையின் முறிவை திரு பாலசிங்கம் ஓரம்கட்டப்பட்டபோதே எதிர்பார்த்த முடிவின் ஆரம்பம் என்று குறிப்பிட்டார். திரு பாலசிங்கம் அண்ணா அவர்களுக்கு எதிராக செயல்பட்டு நம்மை முள்ளி வாய்க்காலுக்கு அழைத்துச் சென்ற சில பொழுதுபோக்கு ஈழத் தீவிர வாத சக்திகள் சில இன்று சம்பந்தருக்கு எதிராக களம் இறங்கியுள்ளன. கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்கும் சரியான நடவடிக்கையில் இறங்கியுள்ள சக்திகள் மேற்படி பொழுதுபோக்கு தீவிர வாதிகளை இனங்கண்டு புறக்கணிக்க வேண்டும். அழுத்தம் கூட்டமைப்பை பலப் படுத்தவே. சீர்குலைக்கவல்ல என்பதில் அழுத்தம் கொடுக்கும் சக்திகள் தெளிவாக இருக்க வேண்டும்.

இன்று தமிழர்களுக்கு எஞ்சியிருக்கும் மீட்சிக்கான அரசியல் உத்தியின் மைய புள்ளியாக ஐநா மற்றும் சர்வ தேச நாடுகளின் ஆதரவே அமைந்துள்ளது.

இத்தகைய ஒரு வரலாற்று திருப்பு முனையில் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலமையை மிகவும் மதி நுட்பத்தோடு பயன்படுத்த வேண்டும். அவர்களது வேலைதிட்டத்தின் உள்வாரிப் பகுதி சம்பூர் தென்னமரவடி வலிகாமம் போன்ற அரசினால் பறித்தெடுக்கப்பட்ட  ஊர்களை நிலங்கலை மீட்டல் காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களை கன்டடைதல் தமிழர் வடபகுதி முஸ்லிம்களின் மீழ்குடியேற்றம் புனர்வாழ்வு தமிழர் முஸ்லிம்கள் மற்றும் நியாயமான சிங்கள அணிகளின் ஒற்றுமைக்கும் உரிமைகளுக்கும் குரல் கொடுத்தல் சுயநிர்ணய உரிமையை முன்னெடுத்தல் என்பவையாகும். வெளிவாரி பணிகள் போர்குற்ற விசாரணை, புனர்வாழ்வு புனர் நிர்மாணம் சுய நிர்ணய உரிமைக்கான சர்வ தேச சூழலை உருவாக்குதல்  போன்றவையாகும்

இந்த சந்தர்பத்தில் புலம் பெயர்ந்த தமிழர்களும் தமிழக ஆதரவாளர்களும் வடமாகாணசபையும் தமிழர் விடுதலைக் கூட்டமைப்புக்கு தமது ஆதரவை தெரிவிக்க வேண்டும். இது சர்வதேச ரீதியாக முக்கியமான பலப்படுதலாகும்.

மீண்டும் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பிடம் விடுதலைப் பாதையில்  சம்பந்தர் தலைமையைப் பலபடுத்தி   ஒன்றுபட்டு செயல்படுங்கள் வெற்றி பெறுவீர்கள் என வாழ்த்த விரும்புகிறேன். மீட்சியின் பாதையில் ஈழத் தமிழரை முன்னெடுத்துச்செல்ல ஆதரவு தெரிவித்து எதிர்க்கட்ச்சித் தலைவர் சம்பந்தரை வாழ்த்துகிறேன்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே குழப்பமாக உள்ளது ....சமஸ்டி ....சுயநிர்ணய உரிமை....13+........வடமகாணசபைக்கு கூடிய அதிகாரம்....இணக்க அரசியல்...........மாவட்ட அதிகாரசபை....ஒ..ற்றையாட்சியில் சம உரிமை.......தமிழன் தாங்கமாட்டன் ஐயா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோழமைக்குரிய புத்தனுக்கு பொறுமையுடன் கொசோவா தெ

ன் சூடான் எரிதிரியா கிழக்கு தீமோர் வரலாற்றை படியுங்கல். அவர்கள் இதைவிட குழப்பமான சூழலை பொறுமையுடனும் இராசதந்திரத்தோடும் தாங்கினார்கள்  . இறுதியில் பிரச்சினை சர்வதேச சமூகத்துக்கும் சேபியாவுக்கும் என மாறியது.  மத்தியஸ்தரும் எதிரிக்கும் மோதல் தீவிரப்படும் வரைக்கும் தந்திரமாக குனிந்தவந்தான்  வெற்றி பெற்று நிமிருவான் இதுதான் வெற்றி பெற்ற சின்ன இனங்களின்  வரளறு தரும் பாடம்.உங்கள் கருத்தை  கருத்தை எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பெருமிதம் கொள்ளவும்

போற்றி  மகிழவும்

எதுவும் இருப்பதாக தெரியில்லை தோழர்

மிகவும் ஆளமான வலை இது என்றே எனக்குப்படுகிறது

பலமாக இருந்த புலிகளை எவ்வாறு  பேச்சுவார்த்தை என்ற வலைக்குள் கொண்டு வந்து கட்டிப்போட்டார்களோ

அதேபோல் பலமிழந்த நிலையிலுள்ள தமிழரை சில சலுகைகளை பதவிகளைக்கொடுத்து 

கட்டிப்போடும் ராஐதந்திரம் இது என்றே தோன்றுகிறது

இருப்பினும் வேறு வழியில்லை தமிழருக்கு...

இதனால் கிடைக்கும் ராஐதந்திர உரிமையையும்

அதனால் கிடைக்கும் சொல்லுக்கான வலுவையும் கூட்டமைப்பினர் பாவிப்பார்கள் என எதிர்பார்ப்போம்...

நன்றி தங்களது நேரத்துக்கும் அறிக்கைக்கும்..

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்.
ஈழத்தமிழர்கள்  தமது போராட்டத்தை இன்னும்  மெதுவாகவும் பொறுமையாகவும் முன்னெடுத்தால் 60 எள்ளது 70 வருடங்களில் ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்பலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட புத்தன் விசுக்கு வாத்தியார் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். ஆரோக்கியமாக விவாதங்களை நெறிப்படுத்தும் யாழ்க் குழுமத்துக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அண்மைக்கால யாழ்களம் போல ஆரோக்கியமாக விவாதிக்க கழம் கிடைத்தாலே நம்மவர்கல் ஆரோக்கியமாக விவாதிக்க ஆரம்பித்தாலே நம் வெற்றியின் பாதிதூரத்தை கடந்து விடுவோம்

இன்னமும் பிரிவினை ,ஈழம் ,இனவாத கோசம் இடுபவர்களுக்கு பிடிக்காத செய்தி .

இன ஒற்றுமை ,ஒன்றுபட்ட இலங்கை ,சுயநிர்ணய உரிமை என்று நாட்டை கட்டியெழுப்ப நினைப்பவர்களுக்கு நல்ல செய்தி .

  • கருத்துக்கள உறவுகள்

கட்சிப் பெயரில் தமிழீழத்தை வைத்திருப்பவர்களுக்கு இனிப்பான செய்தி. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீரா புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

#இறுதியில் பிரச்சினை சர்வதேச சமூகத்துக்கும் சேபியாவுக்கும் என மாறியது.  மத்தியஸ்தரும் எதிரிக்கும் மோதல் தீவிரப்படும் வரைக்கும் தந்திரமாக குனிந்தவந்தான்  வெற்றி பெற்று நிமிருவான் இதுதான் வெற்றி பெற்ற சின்ன இனங்களின்  வரளறு தரும் பாடம்.#

அற்புதமான கருத்து.

ஆனால் நம்விடயத்தில் நடந்தது என்ன?

இறுதியில் பிரச்சினை சர்வதேச சமூகத்துக்கும் தமிழர் தரப்புக்கும் என மாறியது. 

இந்த அடிப்படை விடயத்தை கூட புரிந்து கொள்ளமுடியாமல் - உலகமே சேர்ந்து அழிக்கும் அளவுக்கு நாங்கள் விண்ணர்கள் பார்த்தீர்களா? என மார்தட்டுபவர்களை நீங்கள் தீமோர், கொசோவா வரலாறு படிக்கச் சொல்கிறீர்கள். 

உங்கள் பொசிடிவ் மனநிலை வியக்கத் தக்கது.

மேலே ஒருவர் நக்கலாய் சொல்லி இருக்கார் - 60/70 வருடம் எல்லாம் பொறுக்க முடியாதாம்.

இப்படி அதரப் பட்டு வெளிகிட்டுத்தான் 2006-2009 மூன்று வருடத்துக்குள் மகிந்தவிடம் தீர்வை வாங்கினார்களாம்.

 

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி goshan_che.  அன்ரன் பாலசிங்கம் அண்ணா தேசிய சர்வதேசிய சமன்பாடுகளை முழுமையாக உணர்ந்திருந்தார். அவர் அவர் கொசோவா கிழக்கு தீமோர் தென் சூடான் பாதையில் மேற்க்குலகத்தோடு வெற்றிகரமாக  விடயங்களைக் கையாண்டார். அந்த சமயத்தில்   நம்மை நாசமாக்கிய சக்திகளின் நெருக்குதலால் பலா அண்ணர் ஓரம் கட்டப்பட்டார். அது மேற்குலகத்துக்கும் நமக்கும் இருந்த கடைசிப் பாலத்தையும் உடைக்கிர முயற்ச்சியாக அமைந்தது. வன்னி ஆலோசனையை ஏற்று நான் தமிழ் நெற் சர்வே போன்ற ஒருசிலர் தவிர்த்து ஐரோப்பிய கிழைகளோடு தொடர்பு வைக்காமல் நான் எரிக் சோல்கைம் அவர்களோடு தொடர்பில் இருந்தேன். பாலா அண்ணன் ஓரம்கட்டப்பட்டதும் நான் வன்னிக்கு சென்று என் அதிற்ச்சியை தெரிவித்தேன். பாலா அண்ணன் இல்லா விட்டால் மேற்குலகம் நம்பி தொடர்புகொள்ளத்தக்க ஆரும் இல்லை என்பதை தெரிவித்தேன். இதன்பின் கஸ்றோ நெருக்குதலால் என்னக்கு துணுக்காய் பொலிஸ் மூலம் பாரிய தொந்தரவு கொடுக்கப்பட்டது. நான் பொலிசாரை தாக்கியதும் நிலாந்தன் முன்னிலையில் கவிஞர் கருணாகரன் புத்தகவெளியீட்டில் நான் வன்னி வரலாற்றில் முதன் முறையாக கஸ்ரோவை தாக்கிப் பேசியதும் என என்னுடைய கோபத்தால் நெருக்கடி மேலும் வலுத்தது. 

இயக்கம் - பாலா அண்ணர் = தேசிய சர்வதேசிய மட்டத்தில் நாடுகளின் தலைவர்களை கொன்ற கொல்லும் வல்லமையுள்ள இயக்கம் என்கிற ஒரு ஆபத்தான பெயர் இருப்பதை சுட்டிக் காட்டினேன், புலனாய்வு பிரிவு, பாலகுமாரன், தயாமாஸ்டர் போன்றவர்கள் நிலமையை புரிந்துகொண்டனர். இயக்கம் கஸ்ரோவிடமிருந்து என் பாதுகாப்பை உறுதிப்படுத்தியபோதும் கஸ்ரோவின் சொல்லே எடுபட்டது.

அதன் விழைவுதான் ஜெனீவா பேச்சுவார்த்தை ராசதந்திரமற்ற முறையில் கையாளப்பட்டமை. ஜெனீவா பேச்சுவார்த்தை முறிந்த அன்று மாலை "முடிவின் ஆரம்பம் தொடங்கிவிடது" என  மேற்குலகின் முக்கியக ராஜதந்திரி ஒருவர் தனிப்பட  தெரிவித்தார்.

அன்று பி,பி,சிக்கு நான் கொடுத்த பேட்டியில் என் ஆத்திரம் தொனித்தது.

http://news.bbc.co.uk/2/hi/south_asia/5076930.stm

என் பேட்டியை எதிர்த்து என்னை அவதூறாக விமர்சித்து சில இயக்க ஆதரவு ஊடகங்கள் சில எழுதின. பின்னர் வன்னியின் அறிவுறுத்தலால்வை அகற்றப்பட்டன.

நான் மீண்டும் மீண்டும் வன்னிக்குச் சென்றேன். எனினும் கஸ்றோவின் சொல்லே வலியதாக இருந்தது.

"

Partition

 

The poet has been helping Norwegian facilitators in their efforts to bring the parties to the negotiating table.

 

o.gif
start_quote_rb.gifIf war breaks out again, neither party will be able to defend their territory - it will be a vicious circle end_quote_rb.gif
Jayapalan

 

The two sides agreed to stop attacks and disarm armed groups in Geneva in February, but since then violence has worsened.

"I consider both Sri Lankan army soldiers and the Tigers as my children. I don't want to kill my own children... I urge both parties to reconsider their foolish stand," Jayapalan says.

The polarisation of Sri Lankan society has destroyed political trust between the two major communities, he says.

"Most of us have become part of the partition."

Jayapalan has also used his poetry to fight for the rights of Sri Lanka's Muslim community, a minority among the Tamil minority.

The poet believes the Sudanese model, where parties agreed a five-year interim period before calling for a referendum on devolution of power for southern Sudan, is an ideal example for Sri Lanka.

"I think the parties and the Norwegian facilitators should work on a Sudanese-style power-sharing based on the Oslo accord."

"If war breaks out again, neither party will be able to defend their territory. So the Tigers will bring the war to the south and vice-versa. It is going to be a vicious circle similar to the Israeli-Palestinian conflict."

"I appeal to the Tiger leadership and to President Rajapakse to realise the dangers."

"

 

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.