Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாருங்கள் வாழ்த்துவோம் மீரா குகனை!!

Featured Replies

யாழ்கள நண்பி மீரா குகன் மிகக் குறுகிய காலத்தில் சிறு கதைகள், தொடர் கதைகள், கவிதைகள் எழுதி  பத்திரிகை, வானொலி, இணையத்தளங்கள் என்று சாதனை படைத்து வருக்கின்றார்...... ஒரு நல்ல கவிஞரை, எழுத்தாளரை வாழ்த்துவோம் வாருங்கள் உறவுகளே!!! :)

 

இவரின் நேர்காணல் ஒன்றையும் இணைக்கின்றேன்....

 

கல்குடா நேசனுக்காக கவிஞர் ஓட்டமாவடி றியாஸ் கல்குடா நேசன் இளங்கலைஞர் அறிமுகம் பகுதியை ஆரம்பித்து, இன்று பரவலாக கவிதை, கட்டுரை, கவிதை எனபல்துறைகளில் எழுதி வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதி வாரம் தோறும் இளங்கவிஞர்களை அறிமுகம் செய்து வருகின்றது.

இதன் தொடரில் அண்மைக்காலமாக பத்திரிகை, வானொலி, இணையத்தளங்கள் என்று சாதனை படைத்து வரும் பிரபலமான இளம் பெண் எழுத்தாளர் ஒருவரை  இந்த வாரம் அறிமுகம் செய்து வைப்பதில் கல்குடா நேசன் மகிழ்ச்சியடைகிறது.

அந்த வகையில் இன்று ‘நேர்காணலூடாக அறிமுகமாகிறார் இலங்கையைச் சேர்ந்தவரும் ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வசிப்பவருமான கவிஞர் மீரா குகன்.


கவிஞர் ஓட்டமாவடி றியாஸ்:

உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் ?

என்னைப்பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமே இல்லை. புலம்பெயர்ந்து வாழும் ஒரு சாதாரண குடும்பத்தலைவி அவ்வளவு தான். தமிழ் மொழி மேலுள்ள பற்று புலம்பெயர்ந்த பின் இன்னமும் கொஞ்சம் அதிகரித்துள்ளது. புதிதாக என்னைப்பற்றிக் கூறுவதற்கு வேறொன்றுமில்லை. என் தாய் மொழியாம் தமிழ் மொழியின் இனிமையை ஒவ்வொரு நாளும் காதில் கேட்கையில் உணர்கிறேன்.

கவிஞர் ஓட்டமாவடி றியாஸ்:

உங்களுக்கு சிறுகதை அனுபவம் எப்படி வந்தது?

கவிஞர் மீரா குகன்:

என் பிள்ளைகள் புலம்பெயர்ந்து வாழ்வதனால் வீட்டில் நான் தமிழ்மொழியில் அவர்களுடன் உரையாடினாலும், அவர்களின் பதில் பெரும்பாலும் ஆங்கிலத்திலோ அல்லது ஜேர்மன் மொழியிலேயோ தான்  வருவது பழக்கமாகி விட்டது. இவர்களின் இந்தப் பழக்கம் எனக்கு கொஞ்சம் கவலையைத்தந்தது. எப்படி எம் தாய்மொழியின் மீது அவர்களுக்கு ஆர்வத்தைக் கொண்டு வரலாம் என்று யோசித்தேன்.  சிறுகதைகள் வாசிப்பதன் மூலம் ஒரு மொழியை நன்கு கற்றுக்கொள்வது மிக இலகு.

ஆனால், நான் இலங்கையிலிருந்து சிறுவர் கதைப் புத்தகங்களைப் பெற்றுக்கொடுத்தால் அவர்களுக்கு அக்கதைகளில் அவ்வளவு நாட்டம் ஏற்படாது .

ஏனெனில், என் குழந்தைகள் இங்கே பிறந்தவர்கள். இவர்களது சுற்றாடல் நமது தாயகத்திலிருந்து கொஞ்சம் வேறுபட்டது. ஆகவே, இவர்களுக்கேற்றவாறு இவர்களுக்கு பரிச்சியமான சொற்கள் மற்றும் சூழல்களைக் கொண்டு சிறுவர் கதைகளை உருவாக்க முயற்சித்தேன்.

என் கதைகளை அமெரிக்கா நாட்டில் வசிக்கும் என் சகோதரனுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினேன். அக்கதைகளை வாசித்த என் சகோதரன் என்னை ஊக்குவிக்குமுகமாக தேர்ந்தெடுத்த ஒரு சில கதைகளைக் கொண்டு புத்தகமாக வெளியிட்டார். ‘மீரா மாமியின் பாலர் கதைகள்” என்ற தலைப்பில் ‘அமேசான்” இணையத்தளம் மூலம் வெளியிடப்பட்டது.

என் சிறுவர் கதைகளின் முதல் விசிறி என் மகள். அத்துடன், ஒவ்வொரு மாதமும் ‘வெற்றி மணி” பத்திரிகையில் தொடர்ந்து நான் எழுதும் சிறுவர் கதைகள் வெளி வந்து கொண்டிருக்கிறது. சிறுவர் கதையில் ஆரம்பித்த எனது பயணம்  இப்பொழுது கவிதைகள், சிறுகதைகள் த, டர்கதைகள் எனத்தொடர்கிறது.


கவிஞர் ஓட்டமாவடி றியாஸ்:

அமெரிக்காவில் வாழும் உங்கள் சகோதரர் உங்களது சிறுகதைகளை ‘மீரா மாமியின் பாலர் கதைகள்’ என்ற தலைப்பில் தொகுத்து வெளியிட்டதாகச் சொன்னீர்கள். அது பற்றி சற்று விரிவாகச் சொல்லவும்? மேலும்ம் அந்நூலுக்கு எவ்வாறான வரவேற்பு அங்கு கிடைத்தது?

கவிஞர் மீரா குகன்:

எனது சகோதரன் சிறுவர் கதைகளைத் தொகுத்து வெளியிட்டார். அது தான் என் முதல் நூல். இந்நூலை நாம் வெளியீட்டு விழாவொன்றை ஏற்பாடு செய்து வெளியிடவில்லை. மேலும், இந்நூலை வியாபார நோக்கத்திலும் விளம்பரபடுத்தவுமில்லை.  எமக்கு தெரிந்த நண்பர்களின் பிள்ளைகளுக்கும் ஒரு சில தமிழ் பாடசாலைகளுக்கும் இலவசமாகவே அனுப்பி வைத்தோம். நூலை வாசித்தவர்கள் பாராட்டினார்கள். அதுவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது .

கவிஞர் ஓட்டமாவடி றியாஸ்:

இன்று நீங்கள் சொல்வது போல ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்கள் தங்களது பிள்ளைகளுக்கு அது வீடாக இருந்தாலும் சரி, அல்லது பள்ளிகள், கல்லூரிகளாக இருந்தாலும் சரி அங்கேயெல்லாம் ஆங்கில மொழியே தான் போதிக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் அடுத்த தலைமுறை ஆங்கிலத்திற்கே தம்மை அர்ப்பணிக்கப் போகின்ற நிலமை தெரிகிறது. அங்கெல்லாம் தமிழ் மொழியின் பயன் குறைந்து தமிழ் மொழியினை அழிவுக்குக் கொண்டு செல்வதாகத் தோன்றுகிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன ?

கவிஞர் மீரா குகன்:

உண்மை.  இது மிகவும் வருந்ததக்க விடயம் தான் புலம்பெயர்ந்து வாழும் நமது சமூகத்தின் பிள்ளைகள் பெரும்பாலும் இங்கே பிறந்து வளர்பவர்கள். இதனால், இவர்களின் தாய் மொழி அல்லது பேசும் மொழி அந்த நாட்டின் மொழியாகவே மாறி விடுகிறது. இப்பிள்ளைகள் பெரும்பாலான நேரத்தைப் பாடசாலைகளில் கழிக்கிறார்கள். வீட்டில் மட்டுமே நமது தாய் மொழியாம் தமிழ் மொழியைப் பேசக்கூடியதாக இருக்கிறது.

ஒரு சில பெற்றோர்கள் ஆங்கில மொழிக்கு முக்கியம் கொடுக்கிறார்கள். இன்றைய கால கட்டத்தில் சர்வேதேச மொழியான ஆங்கில மொழி மிகவும் முக்கியமானது. முன்னேற்றத்துக்கு ஆங்கில மொழித் தேர்ச்சி பெரிதும் உதவுகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் .

ஆனால், எனது வாதம் என்னவென்றால்,  நாம் என்ன தான் வெளிநாட்டவர் என்று கூறிக் கொண்டாலும், எமது நிறமான மாநிறத்தை, வெள்ளை நிற வர்ணமாக மாற்றிக்கொள்ள முடியாது. வெள்ளையர்களுடன் நாம் ஒன்றாக நிற்கும் பொழுது, எப்படியும் நாம் பிறிதாகவே காட்சியளிப்போம். அதாவது, எமது அடையாளத்தை நாம் விரும்பினாலும் மாற்ற முடியாது. அது போலவே, நமது தாய் மொழியாம் தமிழ் மொழியை நாம் மறந்து மறைத்து என்றும் வாழ முடியாது.

நாம் தமிழர். எமது தாய் மொழி தமிழ் மட்டும் தான். நான் எனது வீட்டில் தமிழ் மூலமாகத்தான் பிள்ளைகளுடன் பேசுவேன். 

கவிஞர் ஓட்டமாவடி றியாஸ்:

எவ்வாறான கவிதைகள் உங்களுக்குப் பிடிக்கும்?

கவிஞர் மீரா குகன்:

எனக்கு பெரும்பாலும் பெண்ணியங்கள் பற்றிய கவிதைகள் எழுதப்பிடிக்கும். இன்றைய கால கட்டத்திலும் இன்னமும் பெண்கள் அடக்கப்டுகிறார்கள். ஆகவே, அதற்கெதிராக குரல் கொடுக்க விருப்பம். அது மட்டுமின்றி, எனக்கு கற்பனைக் கவிதைகள் மிகவும் பிடிக்கும் அதாவது கற்பனை வானில் சிறகடிக்க ரொம்பப் பிடிக்கும்.

கவிஞர் ஓட்டமாவடி றியாஸ்:

எழுத்துக்கள் மூலம் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியுமென்று நினைக்கிறீர்களா?

கவிஞர் மீரா குகன்:

தொழிநுட்பத்தில் மிக விரைவாக உலகம் முன்னேறிக்கொண்டு போய்க்கொண்டிருக்கின்ற அதே சமயம், இன்றைய சூழ்நிலைகளிலும் பெண்கள் பலவித துயரங்களை நாளுக்கு நாள் சந்திக்க வேண்டியுள்ளது. ஒரு பக்கம் பெண்கள் நாட்டை ஆட்சி செய்கின்றனர், மறு பக்கம் பெண்கள் அடக்கி ஆளப்படுகின்றனர். அப்பாவிப் பெண்களைக் குறி வைத்து, முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களை உபயோகித்து பல வகைகளிலும் ஏமாற்றித் துன்புறுத்தப்டுகின்றனர். பச்சிளங்குழந்தை தொடக்கம் சிறுமிகள் வரை பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு பல வேளைகளில் கொலை செய்யப்படுகின்றனர். குறிப்பாக, இத்தகையை அநியாயங்கள் எமது தாயகத்தில் அதிகரித்து வருவதை தினந்தோறும் செய்திகளாகக் கேட்டு அதிர்ச்சியடைகின்றோம்.

ஆகவே, நிச்சயம் எழுத்து மூலம் ஒரு விழிப்புணர்வைக் கொண்டு வரலாமென்பதே எனது கருத்தாகும். அடிக்க அடிக்க அம்மியும் நகரும் மாதிரி என்ற முது மொழிக்கொப்ப, பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் பாலியல் கொடுமைகளைப் பற்றி எழுத்து மூலம் சமூகத்துக்கு தொடர்ந்து எடுத்துக்கூறி வருவோமானால், நிச்சயம் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணலாம்.

ஒரு விடயத்தை எழுதி வாசகர் முன் சமர்ப்பித்தால் அதை வாசிப்பவர் அக்கட்டுரையின் உட்கருத்தை நன்கு விளங்கிக்கொண்டு, அதைப் பற்றி தமக்குள்ளே ஆராய்ந்து, அதன் உண்மைத் தன்மையை உணர்ந்து செயற்படக் கூடியதாக இருக்கும். உணர்ச்சிவசப்பட்டுப் பிழையான முடிவுகளை உடனே எடுக்காமல், சொல்ல வந்த விடயத்தை நன்குணர்ந்து, அதன் படி நடக்கவும் சாத்தியப்பாடு நிறையவே இருக்கிறது. ஆகவே, நிச்சயம் எழுத்து மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்பதே என் கருத்தாகும்.

கவிஞர் ஓட்டமாவடி றியாஸ்:  

கிராமப் புறங்களிலிருந்து பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் பெரும்பாலும் வராமலிருப்பதற்கு காரணமென்ன?

கவிஞர் மீரா குகன்:

இதற்கும் நான் மேல் கூறிய காரணங்களும் ஒன்று என்று கூறலாம். இப்பெண்கள் எங்கே தாங்கள் எழுதுவதால் தங்கள் குடும்பத்திற்கு அவப்பெயர் உண்டாக்கி விடுவோமோ என்ற அச்சம் அவர்களிடயே இயல்பாகவே ஒட்டிக் கொள்கிறது. கவிஞர்கள், எழுத்தாளர்கள் பொதுவாகவே கற்பனை உலகில் சஞ்சரிப்பவர்கள் தான் .

மற்றும் தாம் நேரில் சந்திக்கும் அல்லது தம்மைப் பாதிக்கும் தாக்கங்களைக் கொண்டு படைப்புகளை வழங்குவர்கள். ஒரு பெண் காதல் கவிதை எழுதி விட்டால், எமது சமூகம் உடனே ஓஹோ இப்பெண் காதலில் விழுந்து விட்டாளோ என்று சந்தேகக் கண்ணோடு பார்ப்பர். வீணாக அவளுக்கு ஒரு அவப்பெயரை உண்டாக்கிக் கொள்ள சாத்தியம் கூடுதலாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே, பொதுவாகவே அடங்கி வாழும் கிராமியப் பெண்கள் துணிந்து தமது எழுத்தாற்றலை வெளிக்கொணரப் பயப்படுகிறார்கள்.

கவிஞர் ஓட்டமாவடி றியாஸ்:  

இன்றுள்ள புறச்சூழலில் கவிதை எழுதுவதற்கான மன நிலையைத் தக்க வைத்துக் கொள்வது ஒரு கடினம் என்றே தோன்றுகிறது. அந்த வகையில், நீங்கள் ஒரு குடும்பத்தலைவியாக இருந்து கொண்டும் தொடர்ந்து செயற்படுவதற்கான உந்துதலை எப்படிப் பெறுகின்றீர்கள்?

கவிஞர் மீரா குகன்:

இது நல்ல கேள்வி தான். உண்மை . இயந்திரமாகச் சுழன்று கொண்டு வாழும் வாழ்க்கையில் நாம் எல்லோருமே மிகுந்த மன அழுத்ததுக்குள் அடங்கிப் போயிருக்கிறோம். எனக்கும் வீடு, சமையல் மற்றும் குழந்தைகள், உத்தியோகம் எனப்பல வகைகளிலும் வேலைப்பழு அதிகரித்தே உள்ளது.

நான் எழுத்தை நாடுவதே என்னை நானே கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளத்தான். நான் எழுதும் பொழுது ஒரு புதிய உலகில் என் எண்ணங்களை ஒரு நிலைப்படுத்துகிறேன். கவிதைகளில் ஆனந்தப்படுகிறேன். இவற்றுக்கும் நான் ஒன்றும் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றவள் இல்லை. ஆனாலும், என் முகநூல் நண்பர்கள் நான் விடும் பிழைகளைஹ் சுட்டிக்காட்டியதும் அதை திருத்திக்கொண்டு, அடுத்த கவிதைக்கு நகர்கிறேன்.

மிகச் சமீபமாகவே எழுதத் தொடங்கிய நான், இவ்வெழுத்து மூலம் தன்னம்பிக்கையைப் பெற்றிருக்கிறேன் என்பதை நிச்சயம் நான் இங்கு ஒப்புக்கொள்ளவே வேண்டும்.

கவிஞர் ஓட்டமாவடி றியாஸ்:

உங்கள் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் இவையெல்லாவற்றையும் படிக்கின்ற போது, பெண்ணியமே தெரிகிறது. உங்கள் எழுத்து உங்களை ஒரு பெண்ணிலைவாதி என்று அடையாளங்காட்டுகிறதே?

கவிஞர் மீரா குகன்:

உண்மையைச் சொல்வதாயின், நான் ஒரு பெண்ணிலைவாதியில்லை. அப்படி நான் நினைக்கவில்லை. ஏனெனில், நான் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவள். மேடையேறி முழக்கமிடுவது என்பதை என்னால் நினைத்தும் பார்க்க முடியாது. ஒரு பெண்ணிலைவாதி துணிவுடன் தன் செயல்களில் ஈடுபடுவாள். நான் என் எண்ணங்களில் தோன்றுவதை, அநியாங்கள் நடக்கும் பொழுது கவலை கொண்டு, அவற்றைப்பற்றி முகநூலில் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு பெண் தன் குடும்பத்துக்கும் கணவனுக்கும் எத்தனையோ விட்டுக்கொடுப்புகளைச் செய்து, அவர்கள் முன்னேற தன்னை அர்ப்பணிக்கிறாள். அன்புக்குப் பணிந்து போகும் பெண்ணை கொஞ்சமாவது அவளுக்கும் ஆசாபாசங்கள் இருக்குமென்பதை விளங்கிக்கொண்டு, பரிவுடன் பார்த்தாலே போதும். அது ஒன்றையே அவள் வெற்றியாகக் கொண்டு, மென்மேலும் தான் கொண்ட குடும்பத்தை முன்னேற்றப் பாடுபடுவாள்.

அவளிடம் ஒளிந்திருக்கும் திறமையை வெளிக்கொணர்ந்து தாங்களும் அவ்வெற்றியில் பங்கு கொள்ளலாம் தானே. இது ஒன்றும் கடினமான காரியமல்லவே.

கவிஞர் ஓட்டமாவடி றியாஸ்:

விமர்சனங்கள் ஒரு படைப்பாளனுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

கவிஞர் மீரா குகன்:

விமர்சனகள் ஒரு படைப்பாளனுக்கு மிகவும் தேவையான ஒன்று. ஆனால், புதிதாக படைக்க விரும்பும் ஒரு படைப்புக்கு அது தமக்கு பழக்கமில்லாத ஒன்றிற்காகவே விமர்சனம் செய்வது ஆரோக்கியமானதல்ல. நவீன உலகில் எதிலும் புதுமையிருந்தால் தான் அந்தப் படைப்புக்கள் வெற்றி பெறும் என்பது எனது தாழ்மையான கருத்து. 

விஞர் ஓட்டமாவடி றியாஸ்:

ஓசை, நயம், சந்தம், எதுகை, மோனை ஆகியவை கவிதைகளுக்கு அழகை வாரி வழங்குகிறதா? அல்லது இன்று சிலர் கூறுவது போல இடையூறுகளா?

கவிஞர் மீரா குகன்:

எதுகை, மோனை, நயம், சந்தம் ஒரு கவிதைக்கு மிக இன்றியமையாதது என்றே நான் நினைக்கிறன். அப்படியில்லாத பட்சத்தில் சில வேளை, அக்கவிதை ஒரு கட்டுரை போல அமைந்து விட வாய்புக்கள் இருக்கிறது.

கவிஞர் ஓட்டமாவடி றியாஸ்:

மரபுக்கவிதை மரணப்படுக்கையில் படுத்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். மரபுக்கவிதையின் சகாப்தம் முடிந்து விட்டது என கருதுகின்றீர்களா?

கவிஞர் மீரா குகன்:

நான் தமிழ் மொழியை திறன்படக் கற்று தேர்ச்சி பெற்றவளில்லை. தமிழ் மொழியில் மிகுந்த ஆர்வங்கொண்டவள் என்பது தான் உண்மை. மற்றப்படி விரிவாக மரபுக் கவிதைகளைப் பற்றிக்கூற எனக்கு அவ்வளவு தமிழ் அறிவில்லை. இறந்த காலத்தின் மரபுக்கவிதைகள் வாழ்ந்து  கொண்டிருக்கின்றன. நிகழ் கால மரபுக்கவிதைகள் இறந்து கொண்டிருக்கின்றன என்ற கவிஞர் வைரமுத்தின் கருத்தை ஏற்பவள் நான்.

கவிஞர் ஓட்டமாவடி றியாஸ்:

உங்களுக்கு பிடித்தமான எழுத்தாளர்கள் யார்?

கவிஞர் மீரா குகன்:

வைரமுத்துவின் கவி வரிகள் மிகவும் பிடிக்கும். தாமரையின் சினிமா பாடல் வரிகளையும் இரசித்திருக்கிறேன். மற்றப்படி ஒரு சராசரி பெண்ணைப்போல் ரமணிச்சந்திரனின் புத்தகங்கள் மற்றும் லக்ஷ்மியின் புத்தகங்களை விரும்பிப்படிப்பேன்.

கவிஞர் ஓட்டமாவடி றியாஸ்:

இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?

கவிஞர் மீரா குகன்:

ஒரு தொடர்கதை ஒன்றை எழுதி வருகிறேன். கவிதைகளும் இயன்றளவு எழுதுகிறேன்.

கவிஞர் ஓட்டமாவடி றியாஸ்:

இறுதியாக என்ன சொல்லப்போகின்றீர்கள்?

கவிஞர் மீரா குகன்:

பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஒன்றேயொன்று பெண் கவிஞர்களை, எழுத்தாளர்களைத் தரக்குறைவாகப் பார்ப்பதை நமது சமூகம் கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும் .ஒரு ஆண் கவிஞர் மிக சுதந்திரமாக தமது எண்ணத்தில் தோன்றுவதை எழுதக் கூடியதாக இருக்கின்றது.

ஆனால், ஒரு பெண் கவிதை, கட்டுரை எழுதினால் அவளுக்குப் பலவிதத்திலும் விமர்சனங்கள் எழுகின்றன. வீட்டிலிருந்தவாறு கற்பனை அல்லது சமூகப் பிரச்சினைகளை கவிதை வடிவில் தருவதில் என்ன தரக்குறைவு இருக்கிறது. தம்மிடம் இருக்கும் அறிவை மற்றவருடன் பகிர்ந்து கொள்வது சிறந்த விடயமல்லவா?

இதற்குப் போய் பெண்ணிலைவாதி, இப்பெண் காதல் வயப்பட்டு விட்டாளோ அல்லது காதலில் தோல்வியில் அல்லலுறுகிறாளோ என்று முத்திரை குத்துவதே பிழையான ஒன்று தானே.

ஆகவே, பெண்களை தயவு செய்து மதித்துப் போற்றுங்கள். இது தான் நான் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்வது

நன்றி நேர்கண்டவர்- கவிஞர் ஓட்டமாவடி றியாஸ்


http://kalkudahnation.com/

Edited by மீனா

இன்னும் சாதனை படைக்க வாழ்த்துக்கள் மிரா ஆக்கா tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்  மீரா குகன்...!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மீரா குகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் இந்த மீனா குகன்? யாழ்கள உறுப்பினரா?????? :unsure:

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மீரா!  

மீனா இவரின் ஆக்கங்களை நான் படித்தது இல்லை, தயவுசெய்து சிலவற்றை இணைத்து விடுங்கள்!

 

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் மீரா!  

மீனா இவரின் ஆக்கங்களை நான் படித்தது இல்லை, தயவுசெய்து சிலவற்றை இணைத்து விடுங்கள்!

 

http://www.yarl.com/forum3/topic/155500-ஒரு-பொய்யாவது-சொல்-கண்ணே-உன்-காதல்-நான்-தான்-என்று-காதல்-கதை/

யார் இந்த மீனா குகன்? யாழ்கள உறுப்பினரா?????? :unsure:

 

மீரா 

http://www.yarl.com/forum3/topic/155416-வணக்கம்/

குசா நீங்களும் அவவை வரவேற்று இருக்கின்றீர்கள் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாய் பிள்ளை உறவே மறந்து போற இந்த அவசர உலகத்திலை எல்லாத்தையும் நினைவு வைச்சிருக்கேலாது தானே....நினைவூட்டலுக்கு நன்றி.:)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மீரா குகன்!

நான் வாழ்த்தியவர்கள் என்றுமே வீழ்ந்ததில்லை!

நான் நட்ட மரங்கள் என்றுமே பட்டதில்லை!

அப்படியொரு ராசி எனக்கு!<_<

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்  மீரா குகன்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

என் அருமை நண்பி மீனாவுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் . உங்கள் பெருந்தன்மை என்னை சந்தோஷபட  வைக்கிறது . நன்றியடா .

 

http://www.yarl.com/forum3/topic/155500-ஒரு-பொய்யாவது-சொல்-கண்ணே-உன்-காதல்-நான்-தான்-என்று-காதல்-கதை/

மீரா 

http://www.yarl.com/forum3/topic/155416-வணக்கம்/

குசா நீங்களும் அவவை வரவேற்று இருக்கின்றீர்கள் :)

கொஞ்ச நாள் ஆளை காணேல்ல என்றா உடனே மறந்து போறதா, நல்ல நண்பர்கள் .

 

இன்னும் சாதனை படைக்க வாழ்த்துக்கள் மிரா ஆக்கா tw_blush:

மிகவும் நன்றி

இன்னும் சாதனை படைக்க வாழ்த்துக்கள் மிரா ஆக்கா tw_blush:

 

தாய் பிள்ளை உறவே மறந்து போற இந்த அவசர உலகத்திலை எல்லாத்தையும் நினைவு வைச்சிருக்கேலாது தானே....நினைவூட்டலுக்கு நன்றி.:)

அதுக்குள்ள மறந்து போயிட்டீங்களே. கவலையா இருக்கு .

வாழ்த்துக்கள்  மீரா குகன்...!

மிகவும் நன்றி suvy

வாழ்த்துக்கள் மீரா குகன்

மிகவும் நன்றி சகாறா. நீங்க என்றாலும் என்னை நினைவில வைச்சுறிக்கிறீங்களா . உங்கட பட்டாம்பூச்சி கதையின் ரசிகை .

வாழ்த்துக்கள் மீரா!  

மீனா இவரின் ஆக்கங்களை நான் படித்தது இல்லை, தயவுசெய்து சிலவற்றை இணைத்து விடுங்கள்!

 

அடக்கடவுளே , இப்படி ஒரு குண்டை தூக்கி போடுறீங்களே .

அதுக்குள்ள என்னை மறந்தாச்சு . இது தான் உலகம் . என்ன செய்றது .

அது தானே மீனா . பாருங்களேன் . இது சரியில்லை .

வாழ்த்துக்கள் மீரா குகன்!

நான் வாழ்த்தியவர்கள் என்றுமே வீழ்ந்ததில்லை!

நான் நட்ட மரங்கள் என்றுமே பட்டதில்லை!

அப்படியொரு ராசி எனக்கு!<_<

என் மனம் நிறைந்த நன்றிகள் உங்களுக்கு . உங்கள் ராசி என்னையும் உயர்த்தட்டும் .

வாழ்த்துக்கள்  மீரா குகன்..

என் மனம் நிறைந்த நன்றிகள் உங்களுக்கு

Edited by Meera Kugan

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மீரா..,இடைக்கிடை யாழிலும் உங்கள் பதிவுகளை போடுங்கள்  

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்  மீரா குகன்

இன்னும் பல ஆக்கங்களுடன் வெற்றி நடைபோட வாழ்த்துகின்றேன்

கொஞ்ச நாள் ஆளை காணேல்ல என்றா உடனே மறந்து போறதா, நல்ல நண்பர்கள் .

உங்களை மறந்து போறதா?

கத்தியுடன் தேடித்திரிகிறேன்......அப்படிக்கொஞ்சநாள் எல்லாம் காணமல் போகக்கூடாது.....விரைந்து வாருங்கள். உங்கள் ஆக்கங்களை விரும்பிப்படிப்பேன்.

வாழ்த்துக்கள் சகோதரி

வாழ்த்துக்கள்  மீரா குகன்....

யாழிலும் உங்கள் பதிவுகளை போடுங்கள் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களை மறந்து போறதா?

கத்தியுடன் தேடித்திரிகிறேன்......அப்படிக்கொஞ்சநாள் எல்லாம் காணமல் போகக்கூடாது.....விரைந்து வாருங்கள். உங்கள் ஆக்கங்களை விரும்பிப்படிப்பேன்.

வாழ்த்துக்கள் சகோதரி

haha... கத்திய காட்டி பயமுருதினதால இன்றைக்கே என் கவிதை ஒன்றோட திரும்ப வந்து இனைஞ்சிருக்கிறேன். உங்கட வரவேற்ப்பு எப்படி இருக்கு என்று பார்ப்போம் . துரத்தாட்டி சரி .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள்  மீரா குகன்....

யாழிலும் உங்கள் பதிவுகளை போடுங்கள் :)

மிகவும் நன்றி நண்பரே , இனி போட்டு போரடிக்க போறன், என்ன எல்லாரும் தயாரா .

வாழ்த்துக்கள்  மீரா குகன்..

மிகவும் நன்றி சகோதரி

வாழ்த்துக்கள் மீரா..,இடைக்கிடை யாழிலும் உங்கள் பதிவுகளை போடுங்கள்  

உங்கட ஆசியோட போடுறன் நண்பரே .

வாழ்த்துக்கள்  மீரா குகன்

இன்னும் பல ஆக்கங்களுடன் வெற்றி நடைபோட வாழ்த்துகின்றேன்

உங்கள் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி வாத்தியார்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மீரா குகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.