Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.இந்துவின் 125ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவனி

Featured Replies

யாழ்.இந்துவின் 125ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவனி
யாழ்.இந்துவின் 125ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவனி

 யாழ்.இந்துக்கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று யாழில் மாபெரும் நடைபவனி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

யாழ்.இந்துக்கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த 20ஆம் திகதி ஆரம்பமாகி இன்று நான்காவது நாளாக பாடசாலை சமுகத்தால் நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

index_zpsrdlozz8y.jpg

index.jpg1_zpse38vopoq.jpg

index.jpg2_zpsecyyejkf.jpg

 

http://onlineuthayan.com/news/526

Edited by நவீனன்

12004849_403035823228352_512634942465614

12006147_403035819895019_878901299921779

12033131_403035816561686_522326362423619

12047036_403035869895014_863580966203053

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி...அர்ஜுன்!

படத்தில சில முகங்கள் பரிச்சயமாய் கிடக்குது...வடிவா நினைவுக்கு வருகுதில்லை!

வேம்படி டீச்சர் மாரின்ர முகத்தில துளிர்க்கிற வெட்கம்... படத்தில நல்லாயிருக்குது!:)

வாழ்த்துக்கள் யாழ். இந்து...!

உனது பணி என்றும் முடிவுக்கு வருவதில்லை....இன்னும் நிறைய உள்ளது! நன்றி..!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி...அர்ஜுன்!

படத்தில சில முகங்கள் பரிச்சயமாய் கிடக்குது...வடிவா நினைவுக்கு வருகுதில்லை!

வேம்படி டீச்சர் மாரின்ர முகத்தில துளிர்க்கிற வெட்கம்... படத்தில நல்லாயிருக்குது!:)

வாழ்த்துக்கள் யாழ். இந்து...!

உனது பணி என்றும் முடிவுக்கு வருவதில்லை....இன்னும் நிறைய உள்ளது! நன்றி. 

எனக்கும் சில முகங்கள் கூட சேர்ந்து ஓடிய மாடுகள் பொல் தெரிகிறது.

ரவிராஜ் தேவதேவன் இருவர் முகங்களும் தெரிகின்றன.பிழையாகவும் இருக்கலாம்.

பழைய ஞாபகங்கள்.பள்ளி வாழ்க்கை எப்பவும் எந்த ஒரு வாழ்வையும் ஈடு செய்யாது.

வாழ்க வளர்க யாழ் இந்து.

இணைப்புக்கு மிகவும் நன்றி நவீனன் 

அது சரி ஏன் ஊர்வலமாக வேம்படிக்கு போனார்கள்?

  • தொடங்கியவர்
யாழ்.இந்துவின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா
யாழ்.இந்துவின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா

யாழ்.இந்துக்கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு இன்று யாழ்.இந்துக்கல்லூரியில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கல்வி அமைச்சர் அகிலவிராச் காரியவசம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் யாழ் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை குறித்த விழா நிகழ்வில் யாழ்.இந்துவின் 125ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டது.

   JHC%20125th%20year%20565865.jpg&h=auto&w

   JHC%20125th%20year%20565863.jpg&h=auto&w

           JHC%20125th%20year%20565862.jpg&h=auto&w  

 

          

           http://onlineuthayan.com/news/548

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் சில முகங்கள் கூட சேர்ந்து ஓடிய மாடுகள் பொல் தெரிகிறது.

ரவிராஜ் தேவதேவன் இருவர் முகங்களும் தெரிகின்றன.பிழையாகவும் இருக்கலாம்.

பழைய ஞாபகங்கள்.பள்ளி வாழ்க்கை எப்பவும் எந்த ஒரு வாழ்வையும் ஈடு செய்யாது.

வாழ்க வளர்க யாழ் இந்து.

இணைப்புக்கு மிகவும் நன்றி நவீனன் 

அது சரி ஏன் ஊர்வலமாக வேம்படிக்கு போனார்கள்?

இதெல்லாம் ஒரு கேள்வியா ஈழப்பிரியன்...!

இந்துக்கு அருகிலே வீடு இருந்தும் , காலையில் குறூப்பாய் சைக்கிள் எடுத்துக் கொண்டு லேடீஸ் கொலிஜ், ஸ்ரான்லி , சுன்டுக்குளி, வேம்படி எல்லாம் கொன்றோல் பண்ணி வந்து வீட்டில சைக்கிளை விட்டிட்டு மைதான மதில் ஏறிக்குதித்து கல்லூரிக்குள் செல்லும் ....!  ம்...ம்... அது ஒரு கனாக் காலம்...!! :rolleyes:  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்துக்கு அருகிலே வீடு இருந்தும் , காலையில் குறூப்பாய் சைக்கிள் எடுத்துக் கொண்டு லேடீஸ் கொலிஜ், ஸ்ரான்லி , சுன்டுக்குளி, வேம்படி எல்லாம் கொன்றோல் பண்ணி வந்து வீட்டில சைக்கிளை விட்டிட்டு மைதான மதில் ஏறிக்குதித்து கல்லூரிக்குள் செல்லும் ....!  ம்...ம்... அது ஒரு கனாக் காலம்...!! :rolleyes:  :grin:

:grin:

யாழ் இந்துவிற்கு வாழ்த்துக்கள்

எனக்கும் சில முகங்கள் கூட சேர்ந்து ஓடிய மாடுகள் பொல் தெரிகிறது.

ரவிராஜ் தேவதேவன் இருவர் முகங்களும் தெரிகின்றன.பிழையாகவும் இருக்கலாம்.

பழைய ஞாபகங்கள்.பள்ளி வாழ்க்கை எப்பவும் எந்த ஒரு வாழ்வையும் ஈடு செய்யாது.

வாழ்க வளர்க யாழ் இந்து.

இணைப்புக்கு மிகவும் நன்றி நவீனன் 

அது சரி ஏன் ஊர்வலமாக வேம்படிக்கு போனார்கள்?

லண்டன் ரவிராஜ் இப்போதும் எனது மிக நெருங்கிய நண்பர் .தேவதேவன் பொட்ஸ்சுவானவில் இருக்கின்றார் கனடா வந்தபோது சந்தித்தேன் .இவர்களுக்கு இடையில் நிற்பவர் சிவகுமார் .வயது மிக குறைவு லண்டனில் இருந்து என்னுடன் இந்தியா வந்தவர் .இப்ப கலிபோர்ணியா (யாழில் இவரை பற்றி ஒரு கதை எழுதினேன் )

திருகேதிஸ்வரன்,வசந்தன் ,சுகந்தன் ,பிரேம்ஷங்கர் ,ரவீந்திரன் (விற்றமின் ),அசோகன் எல்லோரும் நிற்கின்றார்கள் .மிஸ் பண்ணிவிட்டன். 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி..அர்ஜுன்!

இப்ப ஒவ்வொரு படத்துக்கும்... நீங்கள் சொல்லிய பெயர்களை இணைக்க.. எல்லாமே வெளிக்குது..!:)

வாழிய யாழ் நகர் இந்துகல்லூரி வையகம் புகழ்ந்திட என்றும் .......

மிக சிறப்பாக நடை பெறுகிறது , முன் வரிசையில் அரசியல்வாதிகளை / அடிவருடிகள்  பார்க்கும் போது மனதில் நெருடல், உதவிகள் அவசியம் அதற்காக பிழையான Role model களை மாணவருக்கு உதாரணமாக கூடாது.

மீண்டும் ...வாழிய யாழ் நகர் இந்துகல்லூரி வையகம் புகழ்ந்திட என்றும் .......

 

 

  • தொடங்கியவர்

‘கல்லூரி வாசல் தேடி - 2015’ பழைய மாணவர்களின் கௌரவமளிக்கும் நிகழ்வு

வையகம் புகழ்ந்திடும் யாழ் இந்துக் கல்லூரியின் 125வது அகவைகாணும் எம் இந்து அன்னைக்கு மகுடம் சூட்டும் இந்து மைந்தர்கள்.

Group_1.jpg

எவ்விடமேகினும் எத்துயர்நேரினும்எம்மன்னை நின்னலம் மறவோம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் கல்லூரி கீதத்தில் வரும் வரிகள் இவை. இந்த வரிகளுக்கு உயிரூட்டுவதுபோல் 1993 ஆம் ஆண்டு உயர்தரப்பிரிவு மாணவர்களின் ‘கல்லூரி வாசல் தேடி’ என்னும் நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கல்லூரியில் நடைபெற்றது. 

Handing_1.JPG

காலச் சுழலில் சிக்கி உலகம் முழுவதும் சிதறுண்டு வாழும் 93’ ஆண்டு அணி மாணவர்கள் ஒன்றுசேர்ந்து தமக்கு வாழ்வளித்த கல்லூரிக்கும் தம்மை வழிகாட்டிய ஆசான்களுக்கும் கௌரவமளித்த நன்நாளாக இத்தினமும் நிகழ்வும் அமைந்திருந்தது.

‘கல்லூரி வாசல் தேடி’ நிகழ்வில் முன்னாள் அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் என 50 க்கும் மேற்பட்ட கௌரவிக்கப்படுவோர் கல்லூரி நுழைவாயிலிலிருந்து மங்கள வாத்திய இசை முழங்க சம்பிரதாயபூர்வமாக அழைத்துச் செல்லப்பட்டனர். கல்லூரியின் ஞானவைரவ பெருமான் ஆயத்தில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்ற பின்னர் முக்கியமானதும் முன்னோடி செயற்திட்டமுமான முன்வாயில் நடைபாதை திட்டம் பூர்த்தி  செய்யப்பட்டு தற்போதைய அதிபர் ஐயம்பிள்ளை தயானந்தராஜா அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. 

Welcome_2.JPG

இதன் பின்னர் விழாமண்டபமான சபாலிங்கம் அரங்கில் மங்களகரமாக விழா ஆரம்பிக்கப்பட்டது. சைவமும் முத்தமிழும் செழித்தோங்க வேண்டும் என்ற நாவலரின் எண்ணத்தில் உதித்த யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பாரம்பரியங்கள் சிறப்புறும் வகையில் விழா ஆரம்பமானது. 

மங்கள விளக்கேற்றல் நிகழ்வில் முதலாவது சுடரை முன்னாள் அதிபர் அ. பஞ்சலிங்கம் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து அக்காலப்பகுதியில் பிரதி அதிபராகக் கடமையாற்றிய பொ.ம. மகேஸ்வரனும் இன்னாள் அதிபர் ஐ. தயானந்தராஜாவும் ஆசிரியை செல்வி செல்லத்துரையும் ஆசிரியர் திருமதி ச. சுரேந்திரனும் மங்கள விளக்கேற்றினர்.

Welcome_1.JPG

“ஆள்பாதி ஆடைபாதி என்பது நமது முதுமொழி. அதற்கிணங்க ஒரு பாடசாலையின் பௌதீக வளங்களும் ஆளணி மாணவ வளங்களும் சிறப்பாக முகாமை செய்யப்பட வேண்டும். ஒரு பொருளின் மீதான அல்லது ஒரு நபர் மீதான முதலாவது பார்வை உயர்வானதாக இருக்கும்போது யாவும் சௌந்தரியம் மிக்கதாகத் தோன்றும். 

அந்தவகையில் கல்லூரியை பசுமையாகவும் அழகாகவும் மாற்றுவதன் மூலம் மாணவர்களின் பெறுமதி உயர வேண்டும். சிறப்பான கற்றல் கற்பித்தல் செயற்பாட்டிற்கான சூழ்நிலை உருவாக்கப்படுவதன் ஊடாக கல்லூரியின் மதிப்பு உயரவேண்டும். இந்தக் கைங்கரியத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னோடி செயற்பாடாகவும் முன்மாதிரியாகவும் கல்லூரி வாசல் புனரமைப்புச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

Hall_1.JPG
இத்திட்டத்தின் மூலம் எமக்கு அறிவொளி ஊட்டிய ஆசிரியர்களையும் எம்முடன் இனிய மாணவப்பருவத்தைக் கழித்த சக மாணவ நண்பர்களையும் இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் ஒருவரை ஒருவர் உணர்வுபூர்வமாக சந்தித்து நிற்கின்றோம்” என தலைமை உரை நிகழ்த்திய 93’ உயர்தர மாணவர் அணியின் சிரேஷ்ட மாணவன் மு. ராகவன் குறிப்பிட்டார்.

அதிபர் ஐ. தயானந்தராஜா தனது வாழ்த்துரையில்,

Speech_02.jpg

குறிப்பிட்ட திட்டம் உருவான சூழ்நிலையையும் திட்டம் முன்னெடுக்கப்படும் போது சந்தித்த தடைகளை எவ்வாறு மாணவர்கள் தாண்டினார்கள் எனவும் கல்லூரியின் தேவைகளையும் குறிப்பிட்டு உரையாற்றியிருந்தார். 

தொடர்ந்து முன்னாள் அதிபர் அ. பஞ்சலிங்கம் அவர்கள் விசேட உரையாற்றும்போது, 

Speech_3.jpg

குறிப்பிட்ட அணி மாணவர்களுடனான தன்னுடைய அனுபவங்களையும் அவர்களுக்கான சீரிய வழிகாட்டல்கள் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்பட்டன என்பதனையும் நினைவு கூர்ந்தார். 

குறிப்பாக விஞ்ஞான, கணித, வர்த்தகப் பிரிவு பாடங்களுக்கான சிறந்த ஆசிரியர்களை மிகுந்த கஸ்டத்தின் மத்தியில் எவ்வாறு தேடிப்பெற்றோம் என்பனையும் குறிப்பிட்டிருந்தார். 

தொடர்ந்து சிறப்புரையாற்றிய முன்னாள் பிரதி அதிபர் பொ.ம. மகேஸ்வரன் ,

Speech_01.jpg

“1993 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மிகவும் நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே தமது கல்வியைத் தொடர்ந்திருந்தார்கள். 

போர் சூழ்நிலை இவர்கள் தமது கல்வியைச் சுமூகமாகத் தொடர்வதற்கு இடமளித்திருக்கவில்லை. 1990 ஆண்டில் சாதாரண தரப்பரீட்சை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருக்கவில்லை.

ஐந்து மாதங்கள் பாடசாலை இயங்கவில்லை. இருந்தபோதிலும் வலயமட்டத்தில் தகுதிகாண் பரீட்சை வைத்து மாணவர்களை உயர்தரத்தில் விஞ்ஞான, வர்த்தக, கணித, கலை பிரிவுகளில் கற்பதற்கு ஏற்பாடு செய்தோம். 

Project_2.JPG

பின்னர் 1991 ஆண்டில் இவர்கள் க. பொ. த. (சாதாரண தர) பரீட்சையில் தோற்றியிருந்தார்கள். இவ்வாறு சொல்லொண்ணா நெருக்கடிகளுக்கு மத்தியில் கற்றவர்களே உலகெங்கும் பரந்து இன்று மருத்துவர்களாகவும் பொறியியலாளர்களாகவும் கணக்காளராகவும் அரச உயர் நிர்வாகிகளாகவும் கல்வியியலாளராவும் சமூகத்துறைசார் அறிஞர்களாகவும் வர்த்தகர்களாகவும் பெருமைப்படும் விதத்தில் சிறப்புற்று விளங்குகின்றார்கள். 

அத்துடன் இவ்வளவு காலம்கடந்தும் தாம்கற்ற பாடசாலையை நேசிக்கும் பெருந்தன்மையை எண்ணி பெருமைப்படுகின்றோம்” எனவும் மனம் நெகிழ்ந்து கூறினார். 

கனடா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, ஓமான்  போன்ற வெளிநாடுகளில் இருந்தும் உள்ளாட்டிலிருந்தும் நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்கள் தமது கல்லூரி இளமைக்கால நினைவுகளை கண்ணீர்மல்க மீட்டு, தாம் இன்று உயர்நிலையில் வாழ்வதற்கு தமக்கு வழிகாட்டிய ஆசிரியர்களுக்கு மனம்நெகிழ்ந்து நன்றி தெரிவித்தார்கள். 

புலம்பெயர் மாணவர் சார்பாக உரையாற்றிய க. கிரிசாந்தன்,

 தனது மனநெகிழ்வா உரை மூலம் ஆசிரியர்களை ஆனந்தக்கண்ணீர் சிந்த வைத்தார். ‘கல்லூரி வாசல் தேடி’ நிகழ்வின் செயற்திட்ட விளக்கவுரையை த. நந்தனன், வி. சுதாகர் ஆகியோர் தெளிவுபடுத்தியிருந்தனர். 

மேலும் இந்நிகழ்வினை சிறப்புற ஒருங்கிணைத்து வழிநடத்திய ர. ரகுசுதன் நன்றியுரையாற்றினார். அரங்க நிகழ்வினை உணர்வுபூர்வமாக ப. ரகுமார் தொகுத்து வழங்கியிருந்தார். ஆசான்களை கௌரவிக்கும் நிகழ்வின்போது பழைய மாணவர்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

Group_5.jpg

ஆசிரியர்களுடனான மதியபோசன நிகழ்வானது மாணவர்களும் ஆசிரியர்களும் பரஸ்பரம் தமது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஆரோக்கியமாக அமைந்திருந்தது. பின்னர் பழைய மாணவர்களுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கட் போட்டியும் நடைபெற்றது. 

Project_1.JPG

இடம்பெயர்வுகள் மற்றும் புலம்பெயர்வுகள் காரணமாக 1986 ஆம் ஆண்டிலிருந்து 1993 ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு வரையான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிலரின் தொடர்புகள் இல்லாமையினால் அவர்கள் இந்த விழாவில் பங்குபற்ற முடியாமல் போனதையிட்டு ‘கல்லூரி வாசல் தேடி’ விழாக்குழுவினர் மனம் வருந்துகின்றனர். 

இந்த நிகழ்வும் செயற்திட்டமும் ஒரு முன்னோடி முயற்சியாகவே எண்ணப்படுவதனால் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ள எமது திட்டங்களிலும் நிகழ்வுகளிலும் கைகோர்த்து எம்முடன் பங்குபற்றுவதை மனப்பூர்வமாக விரும்புகின்றோம்.

http://www.virakesari.lk/articles/2015/09/25/‘கல்லூரி-வாசல்-தேடி-2015’-பழைய-மாணவர்களின்-கௌரவமளிக்கும்-நிகழ்வு

 

Edited by நவீனன்

இணைப்பிற்கு நன்றி நவீனன் ..இது எமது 93 AL batch மூலம் செய்த சிறு முயற்சி .

முக்கியமாக 'ஆசான்களை' முன் வைத்து நிகழ்வுகள் ஒழுங்கமைகப் பட்டன

''''''''''மங்கள விளக்கேற்றல் நிகழ்வில் முதலாவது சுடரை முன்னாள் அதிபர் அ. பஞ்சலிங்கம் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து அக்காலப்பகுதியில் பிரதி அதிபராகக் கடமையாற்றிய பொ.ம. மகேஸ்வரனும் இன்னாள் அதிபர் ஐ. தயானந்தராஜாவும் ஆசிரியை செல்வி செல்லத்துரையும் ஆசிரியர் திருமதி ச. சுரேந்திரனும் மங்கள விளக்கேற்றினர்.''''''''

Edited by Gunci

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்! எனக்கு பஞ்சரையும், நண்பர்  வைத்தியர் சிவசுதனையும் மட்டும் தெரிகிறது. மிகுதிப் பேரின் முகம் கொட்டிலில் சந்தித்த நினைவிருக்கிறது, பெயர்கள் தான் நினைவில்லை! 

12038297_10206664747731673_1536005712119

  • தொடங்கியவர்

#‎JHC_125_Hindu_Walk‬


நேற்று என் வாழ்வில் ஒரு மறக்க முடியாத வாழ்வின் மிகப்பெரிய ஒரு தருணத்தை ஏற்படுத்தித்தந்த நிகழ்வு, இனி எப்போது இது போன்றதொரு தருணம் அமையப்பெறும் என்று நேற்றைய நிகழ்வில் சமூகமளிக்க முடியாதவர்களை பெரும் வேதனைக்குள்ளாக்கிய ஒரு பெரிய நிகழ்வு, இந்துவின் மைந்தர்களாகிய எமக்கே உரிய தனித்துவமான ஒரு பெரிய கௌரவமான நிகழ்வு, எம் இந்து அன்னையை என்றுமே நாம் மறவோம் என்று சர்வதேசத்துக்கே நாம் உணர்த்திய ஒரு நிகழ்வு, யாழ்ப்பாணத்திலேயே மிகப் பெரிய ஒரு அதிசயத்தை நிகழ்த்திய ஒரு நிகழ்வு, இப்படி இன்னும் எத்தனையோ விடயங்களை பற்றி பெருமையாக பேச வைக்கக் கூடிய ஒரு நிகழ்வு இனிதே வெற்றிகரமாக இந்துவின் மைந்தர்களால் வெற்றிகரமாக முன்னெடுக்கப் பட்டு வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.

 

என்னதான் நான் இந்துவின் மைந்தனாக இருந்தாலும் நேற்று அந்த நிகழ்வில் பங்குபற்றியவன் என்ற ரீதியில் நான் கண்டு வியந்து அதிசயித்த பலவற்றில் சிலவற்றையாவது பெருமையுடன் கூற இந்துவின் புதல்வன் என்ற ரீதியில் என்றும் கடைமைப் பட்டுள்ளேன்

 

1.மங்கள வாத்தியமான நாதஸ்வரம், மேளதாளம் இசைக்க இந்துவின் மைந்தர்களால் பாண்ட் வாத்தியம் இசைக்க, பிரத்தியோகமாக பழைய மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இதர பல வாத்தியங்கள் முழங்க பவனி இந்துக்கல்லூரி வாயிலில் இருந்து ஆரம்பித்தது

 

2.தமிழருக்கே உரிய கலாச்சார விழுமியம் சார்ந்த பலவற்றை கண்டேன் வியந்தேன். என்னதான் வெயில் அடித்து காப்பெட் வீதி கால்ப் பாதங்களை பதம் பார்த்தாலும் ஆரியகுளம் சந்தி வரை நடைபவனியில் சின்னம் சிறு இந்துவின் புதல்வர்கள் கோலாட்டத்தையும், காவடி ஆட்டத்தையும், கரகாட்டதையும், மயிலாட்டம் என்பவற்றை கைவிடவில்லை(நாங்கள் அவர்களை ஹன்டர் வாகனத்தில் தூக்கி ஏற்றும் வரை அவர்கள் வெறும் கால்களுடன் அத்தினை வலிகளையும் பொறுத்த படி ஆடியபடியே வந்தனர்) நவநீதன் ஆசிரியர் தலைமையிலான பட்டாடை அணிந்து வந்த தமிழ் கழக மாணவர்கள் கலாச்சாரவாதிகளாக கண்முன்னே தென்பட்டார்கள்.எங்கள் கல்லூரிகளை காலடி பதித்த காந்தியடிகள், விவேகானந்தர், அப்துல்கலாம் ஆகியோரை ஞாபகப்படுத்தும் முகமாக சின்னம் சிறு மாணவர்கள் வேடம் தரித்திருந்தது பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது

 

3.இந்துவின் இலட்சனை அருமையாக வடிவமைக்கப் பட்டிருந்தது

 

4.குதிரையில் ஏறிவந்த சிரேஸ்ட மாணவத்தலைவரின் இந்துக் கொடியுடனான சவாரி காண்பதற்கு கம்பீரமாக இருந்தது

 

5.முக்கியமாக என்னை மெய் சிலிர்க்க வைத்தது 2012 உயர்தரமாணவர்களின் ஏற்பாடு. ஒரு டபிள் டெக்கர் பஸ் வண்டியின் கூரைப்பகுதியில் அனைத்து 2012 உயர்தர வகுப்பு மாணவர்களும் ஒருமிக்க ஒன்று சேர்ந்து பவனி வந்ததுடன், இந்து அன்னையின் 125வது நிகழ்வு பூர்த்தியை முன்னிட்டு பஸ் வண்டியின் உள்ளேயே கவிதைத் தொகுப்பு(ஆக்கம்:உமாகரன்) ஒன்றை வெளியீடு செய்தனர்

 

6.மத்திய கல்லூரி மாணவர்களும், வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகளும் குத்து விளக்கேற்றி கும்பம் வைத்து தாம் வீதியின் இரண்டு புறங்களிலும் வரிசையில் நின்று கைதட்டி கரகோசங்களை தந்து எங்களை உற்சாகப் படுத்தினர்.

 

7.முக்கியமாக சொல்ல வேண்டிய ஒன்று எங்களுடைய பாட்னர் ஸ்கூல் என்பதை நிரூபிக்கும் முகமாக எங்களுக்கு கடும் வெயிலில் தாகம் தீர்க்க அத்தனை இந்துவின் மைந்தர்களுக்கும் நெல்லிரசப்பானம் அளித்து களைப்பை நீக்க யாழ் இந்து மகளிர் கல்லூர் மாணவிகள் தங்களாலான உதவிகளை மிகவும் சிறப்பாக செய்தனர்.

 

8.எங்கள் இந்து அன்னையில் உள்ள கழகங்கள் அனைத்தையும் காண்பிக்கும் முகமாக ஒவ்வொரு வாகனத்திலும் ஒவ்வொரு கழகங்களால் வர்ணமயமாக்கப் பட்டிருந்தது.அதில் இந்துவின் அன்னைக்கு பெருமை சேர்த்த மாணவர்களின் புகைப்படங்களை தாங்கிய பனர்களை காண அருமையாக இருந்தது.

 

9.குமாரசாமி மண்டபத்தைப் போல ஒரு வாகனம் அலங்கரிக்கப்பட்டு குமாரசாமி மண்டபத்தில் உள்ளது போன்று எமது கல்லூரியில் சேவையாற்றிய அனைத்து அதிபர்களின் புகைப்படங்களையும் உள்ளடக்கியிருந்தது சிறப்பாக இருந்தது.

 

10.நீல வெள்ளை வர்ண ஜெர்சி அணிந்த ஒரு பெரிய இந்துவின் மைந்தர்களின் கூட்டத்தை ஒரே நேரத்தில் அவதானிக்க முடிந்தது

 

நான் இந்த இடத்தில் ஒரு உண்மையை சொல்லியே ஆக வேண்டும் இந்துவின் நடைபவனி ஏதோ சாதரணமாக தான் இருக்கும் என்ற மனோநிலையில் தான் காலை கல்லூரிக்கு சென்றேன். நிகழ்வு முடிந்து வரும் போது அசாதாரண ஒரு நிகழ்வாக என் மனதில் பதிவாகியது. அது அங்கு வந்த அனைத்து இந்துவின் மைந்தர்கள் மனதிலும் பதிவாகியிருக்கும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.அதே நேரம் வருகை தர சந்தர்ப்பம் கிட்டாதவர்கள் மனதில் பெரியதொரு சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை

 

நாங்கள் எல்லோரும் எப்போது எங்கும் எந்த சந்தர்ப்பத்திலும் பெருமைப் படும் ஒரு விடயம் "நான் இந்துவின் மைந்தன்"

"வாழிய யாழ் நகர் இந்துக் கல்லூரி
வையகம் புகழ்ந்திட என்றும்"

"எவ்விடமேகினும் எத்துயர் நேரினும்
எம் அன்னையை நின்நலம் மறவோம்"

‪#‎இப்படிக்கு‬
‪#‎இந்துவின்_இணைபிரியா_மைந்தன்‬

12004931_1012037842182447_59646220356826

12043060_1012038092182422_73818034036944

 

12043035_1012038205515744_74583005077227

10982907_1012038525515712_31596614504755

12006702_1012038888849009_39774580852721

12015041_1012038372182394_25974376100029

12045561_1012038885515676_69620734594474

12004931_1012038892182342_30807465245402

12017575_1012039322182299_26638823181990

12038617_1012039068848991_37225620456541

12027359_1012039065515658_13728667725766

12029850_1012039548848943_74282297823382

12029597_1012039075515657_51594237049795

12027368_1012039325515632_28258684774319

12031487_1012039308848967_29351059109911

11863361_1012041298848768_45128863560928

இது ஒரு முகநூல் பதிவு. அவரிடம் அனுமதி பெற்றுதான் இந்த பதிவு இங்கு இடப்பட்டுள்ளது.

நன்றி  senthuran

https://www.facebook.com/sivagurunathan.senthuran?pnref=story

11998828_10156081990515531_1382478359940

12043093_10156081990575531_1410453565203

11988361_10156081990690531_8946999364529

26 ஆம் திகதி திலீபனின் நினைவுநாள் என்பதால் கலை நிகழ்சிகள் எதுவும் நடைபெறவில்லை .இரத்ததான நிகழ்வு மட்டுமே நடந்தது .

12039685_887565117964511_998816703593306

  • தொடங்கியவர்
யாழ்.இந்துவின் 125ஆம் ஆண்டு நிறைவு விழா இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று
யாழ்.இந்துவின் 125ஆம் ஆண்டு நிறைவு விழா இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று

யாழ். இந்துக்கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் நேற்று மாலை யாழ் இந்துக்கல்லூரியின் குமாரசாமி மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் ஐயம்பிள்ளை தயானந்தராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கடந்த 24ஆம்திகதி ஆரம்பமான 125ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் தொடர்ச்சியாக நான்கு நாள்கள் நடைபெற்று நேற்று நிறைவடைந்தன.

மேலும் இந்நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர் பாலசுந்தரம் பிள்ளை,பேராசிரியர் குகபாலன்,நல்லூர் கோட்டக் கல்வி பணிப்பாளர் அகிலன்,வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன்,அதிபர்கள்,ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதில் கல்வி புலத்தில் சாதனைகள் படைத்த மாணவர்களுக்கு கௌரவிப்பும் இடம்பெற்றது.

            index_zps2u6pkoa9.jpg

index.jpg%201_zpsx1oyasjg.jpg

index.jpg2_zps1hgitu5h.jpg                     

                                 

                                          

       http://onlineuthayan.com/news/637

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் ரவிராஜ் இப்போதும் எனது மிக நெருங்கிய நண்பர் .தேவதேவன் பொட்ஸ்சுவானவில் இருக்கின்றார் கனடா வந்தபோது சந்தித்தேன் .இவர்களுக்கு இடையில் நிற்பவர் சிவகுமார் .வயது மிக குறைவு லண்டனில் இருந்து என்னுடன் இந்தியா வந்தவர் .இப்ப கலிபோர்ணியா (யாழில் இவரை பற்றி ஒரு கதை எழுதினேன் )

திருகேதிஸ்வரன்,வசந்தன் ,சுகந்தன் ,பிரேம்ஷங்கர் ,ரவீந்திரன் (விற்றமின் ),அசோகன் எல்லோரும் நிற்கின்றார்கள் .மிஸ் பண்ணிவிட்டன். 

விளக்கத்திற்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.