Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் புலிக்கு படையெடுப்பு

Featured Replies

யாழில் புலிக்கு படையெடுப்பு
யாழில் புலிக்கு படையெடுப்பு

இன்றைய தினம் நடிகர் விஜயின்  புலி திரைப்படம் உலகெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அந்த வகையில் யாழ்ப்பாணத்திலும் குறித்த திரைப்படம் ராஜா, மெஜெஸ்டிக் கொம்பிளக்ஸ் தியேட்டர்களில் இன்று காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

திரைப்படத்தை பார்ப்பதற்கு அதிகாலை முதலே அதிகளவான ரசிகர்கள் திரையரங்குகள் நோக்கி படையெடுத்தனர்.

ஆனாலும் குறித்த நேரத்துக்கு திரைப்படம் வெளியாகாததால் ரசிகர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது.பின்னர் புலித்திரைப்படம் திரையிடப்பட்டதால் ரசிகர்களின் கொந்தளிப்பு குதூகலிப்பாக மாறியது.

         33mo7yf.jpg          

          2ag8292.jpg 

5e8iyq.jpg

http://onlineuthayan.com/news/745

Edited by நவீனன்

வேலை இல்லா பட்டதாரிகள் முதல் வரிசையில்.. 

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது  போட்டோ பார்க்க "கூண்டோட கைலாசம்" போன மாதிரி பீலிங்சு .. 

Edited by Sasi_varnam

அது எப்படி வேலையில்லா பட்டதாரிகள் என கண்டு பிடித்திர்கள்?

இரண்டாவது  போட்டோ பார்க்க "கூண்டோட கைலாசம்" போன மாதிரி பீலிங்சு .. 

மூன்றாவது படத்தை பார்த்தா என்ன பீலிங்ஸ்?

சும்மா ஒரு ரைமிங்காக கேட்டேன் மற்றபடி ஒன்றும் இல்லை.

அது எப்படி வேலையில்லா பட்டதாரிகள் என கண்டு பிடித்திர்கள்?

எல்லாம் ஒரு குத்து மதிப்புத்தான்.. ஏன் இருக்க முடியாதா? 

எனக்கும் தான் ஒரு குத்து மதிப்பா தெரியுது நீங்கள்  வேலை வெட்டி இல்லாம கனனி க்கு முன்னால் இருந்து எங்கை என்ன நடக்குது என்று  குற்றம் குறை  நொட்டு நொடுக்கு சொல்வது போல  ஆனால் அது உண்மையாக இருக்காது.......

ஏன் என்றா  நீங்கள்   வருமானத்துக்கு ஏதாவது வழி செய்து கொண்டு தான் இந்த வேலையும் செய்வீர்கள்  என நிச்சையமாக தெரியும்

வன்னியில் சனம் சாகுது என்று நீங்கள்  மாதக் கணக்கா சாப்பிடாம இருந்து இருக்க மாட்டிர்கள்

வன்னியில் சனம் சாகுது என்று கோவணதோடு திரிந்து இருக்க மாட்டிர்கள்

வன்னியில் சனம் சாகுது என்று  கொண்டாட்டங்களுக்கு போகாம இருந்து இருக்க மாட்டிர்கள்

வன்னியில் சனம் சாகது என மனைவியோடு  படுக்கையறையில்  பங்கு கொள்ளாமல் இருந்து இருக்க மாட்டிர்கள்

இது எல்லாம்  அந்த அந்த நேரத்துக்கு நடந்து இருக்கும்

அது போல தான்  இளஞர்கள்  வாழ்க்கையும் அந்த அந்த நேரத்தில் அதை அதை செய்ய விடுங்கள்

 அதை விட புலத்தில் இருந்து கொண்டு யாழ்ப்பாண மக்களுக்கு அரசியலும் கலாச்சாரமும் கற்று கொடுக்க முயற்சிக்க வேண்டாம்..

இது உங்களை குறிப்பிட்டு எழுத வில்லை பொதுவாக புலம் பெயர் நாட்டில் இருந்து கொண்டு யாழ்ப்பாண மக்களுக்கு அறிவுரை கூறுவோரை நினைத்து எழுதினேன்

சரி மாதக்கன க்காக வேண்டாம் ஒரு கிளமையாச்சும் தாங்கள் உட்பட சாப்பிடாமல் இருந்த ஒருவரை இங்கு காட்டுங்கள்.

யாழில் இருக்கு பாடசாலை மாணவர்கள் இப்படி போகும் சந்தக்ர்ப்பங்கள் குறைவு ஒன்று வேலை இல்லாதவர்கள் அல்லது வெளிநாட்டில் இருந்து பணம் வருபவர்கள் அதைதான் நான் ஒரு குறிப்பாக சொன்னேன்.

உங்களை போன்ற சிலர் இணைய காவல் துறையாக இருப்பது எங்கள் பாக்கியம்.

Edited by Sooravali

எல்லோரும் ஒரு காலத்தில் மாணவர்களாக இருந்தவர்கள் தானே/?  

 நான் சொன்னேனா ஊரில் யார் யார் என்ன செய்ய வேண்டும் என/?

எல்லோரும் ஒரு காலத்தில் மாணவர்களாக இருந்தவர்கள் தானே/?  

 நான் சொன்னேனா ஊரில் யார் யார் என்ன செய்ய வேண்டும் என/?

மாணவர்களாக இருந்த எல்லோரும் நல்லவர்களாக வந்தார்களா? 

ஊரில யார் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் நேரடியாக சொல்லவில்லை இருந்தாலும் வன்னியில் சனம் செத்ததையும் பட்டினி கிடந்ததையும் ஒரு சினிமா கிளர்ச்சி குழுவுக்கு ஆதரவவாக எழுதி இருந்தீர்கள். 

இதை விட வேற என்னத்தை சொல்லவேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்
யாழில் புலிக்கு படையெடுப்பு
யாழில் புலிக்கு படையெடுப்பு

http://onlineuthayan.com/news/745

sorry

its too late !

  • கருத்துக்கள உறவுகள்

இதில என்ன புதிது!

அப்பவும், ரஜனி, கமல் ரசிகமணிகள் அடிபாடு இருந்தது தானே.

முக்கியமாக, தியேட்டர் போய் படன் பார்க்கும் கலாச்சாரம் இன்றும்...

வின்சர் திரையில், நான் ஏன் பிறந்தேன் படம் போகையில், சிலைட்  போட்டனர்: 'யாழ் இந்து அதிபர் வந்துள்ளார், மாணவர்களை தாமாக வெளியே வரச் சொல்கிறார்'.....:grin:

  • கருத்துக்கள உறவுகள்

sorry

its too late !

உங்கள் கருத்தை.... மிகவும் ரசித்தேன்..... மருதங்கேணி. சூப்பர். 38.gif

புலிக்குப் படையெடுப்பு என்றவுடன் எனக்கு என்னவோ தோன்றிற்று. நான் இன்னமும் கனவுலகில் இருக்கிறேனா?

யாழில் மட்டுமில்லை ரொறன்ரோவிலும் 9 தியேட்டர்களில் புலிக்கு படை எடுப்பு நடக்குது..... ஏன் யாழில் உள்ளவர்கள் படம் பார்க்கக் கூடாதா???? அவர்கள் சண்டை பிடிச்சு நாடு எடுத்துத் தரணும்.... வேறு ஒன்றும் செய்யக் கூடாது...

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் ஒரு காலத்தில் மாணவர்களாக இருந்தவர்கள் தானே/?  

 நான் சொன்னேனா ஊரில் யார் யார் என்ன செய்ய வேண்டும் என/?

 ஒரு காலத்தில் மாணவர்கள் விட்ட விளையாட்டுக்கள் பிற்காலத்தில் வினையாக முடிந்த அனுபவங்களினால் சிலர் ஆதங்கப்படுகிறார்கள். விரும்பினால் கேளுங்கள் திருந்துங்கள். இல்லையேல் தலைகீழாய் நடவுங்கள். அதற்காக எல்லோரும் எனக்கென்ன என்று முகத்தை திருப்பிக் கொண்டு போகவேண்டுமென எதிர்பார்க்காதீர்கள். தான் வாழும் சமுதாயத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் அதன் மட்டில் ஒரு கடமையுண்டு. "மூத்தோர் சொல்லும், முற்றிய நெற்கனியும் முன்னே கசக்கும், பின்னே இனிக்கும்". 

2009 இருக்கும்.... ஒரு முறை நான் ஒரு இன்ரவியூ முடிந்து மாலை 6 மணி போல் ரொரன்டோ வின் டவுன்டவுன் பக்கமாக நடந்து சென்று கொண்டு இருக்கின்றேன்.

ஒரு ஆங்கிலப் பாடகர் அல்லது நடிகர் என்று நினைக்கின்றேன்.  அவர் பிரபலமானவராகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். ஒரு காட்சியில் நடிப்பதற்காக வந்து இறங்குகின்றார். அவர் அங்கு வருவார் என்று எதிர்பார்த்து பலர் கூட்டம் கூட்டமாக தெருவில் காத்திருக்கின்றனர்.

இதோ அவர் வருகின்றார்...கூட்டம் ஆர்ப்பரிக்கின்றது. காரில் வந்து இறங்குகின்றார்...அவ்வளவுதான் முன்னுக்கு நின்ற அழகிய பெண் ஒருவர் தன் மேலாடையையும் மேலே உள்ள உள்ள உள்ளாடையும் கழற்றி எறிந்து விட்டு அவருக்கருகில் ஓடிச் சென்று அவரை அணைக்க முயல்கின்றார்...நான் வெட்கத்தில் கண்களை மூடிட்டேன் (பிளிவ் மீ ....நான் அச்சா பிள்ளையாக்கும்)

இதை ஏன் சொல்கின்றேன் என்றால், எந்த சமூகத்திலும் எந்தக் காலத்திலும் இப்படி பித்துப் பிடித்த இரு பகுதியினர் இருப்பார்கள். முன்னர் எம் அப்பாக்களின் காலத்தில் யாழ்ப்பாணத்தில் எம்.ஜி.ஆர் ரின் படச்சுருளை யானையின் மீது ஏற்றி பவனியாக வந்து திரையிட்டும் இருக்கின்றார்கள். அவருக்காக அங்கப்பிரதட்சனம் செய்தவர்களும் இருக்கின்றார்கள்

ஒரு சமூகம் என்றால் இது எல்லாம் இருக்கும். இன்று இங்கு திரையிட்டுள்ள The Martian படத்தினை முதல் காட்சியில் பார்க்க 8 மணியில் இருந்து ஸ்கார்பரோ சென்றரில் பலர் காத்து இருந்திருக்கின்றார்கள் (இன்று முன்பதிவு இல்லை)

இங்கு ரொரன்டோவில் இவ் கோடை நிகழ்வொன்றில் நல்ல மழை அடிக்கும் போது சனம் குடை பிடிச்சுக் கொண்டு அண்ட்ரியாவை பார்க்க காத்துக் கொண்டு இருந்த படங்கள் ஈகுருவி தளத்தில் இன்னமும் இருக்கு.

இப்படி படம் பார்க்க அடித்துப் பிடித்து யாழ்ப்பாணத்தில் ஓடிய இளைஞர்களில் பலர் கண்டிப்பாக வாழ்க்கையில் வெல்லத்தான் போகின்றார்கள். சிலர் சறுக்கி விழத்தான் போகின்றார்கள். ஆனால் வெல்வதற்கும் சறுக்கி விழுவதற்கும் புலிக்கு அடிச்சுப் பிடிச்சுக் கொண்டு போனதும் அது போன்ற விடயங்களும் காரணமாக இருக்காது.

யாழில் மட்டுமில்லை ரொறன்ரோவிலும் 9 தியேட்டர்களில் புலிக்கு படை எடுப்பு நடக்குது..... ஏன் யாழில் உள்ளவர்கள் படம் பார்க்கக் கூடாதா???? அவர்கள் சண்டை பிடிச்சு நாடு எடுத்துத் தரணும்.... வேறு ஒன்றும் செய்யக் கூடாது...

அங்கே படம்பார்க்க போகவேண்டாம் என்று யார் சொன்னது? 

சினிமா பார்ப்பதையும் வாழ்கையின் ஏனையகடமையும் ஒரேதராசில் போட்டு துணைக்கு உணர்வு பூர்வமான வன்னி கொடுமையை ஒருவர் எழுதி இருந்தார் (அதுக்கு லைக்கு வேறு). 

கனடாவிலையும் லண்டனிலையும் யாழில் இருக்குபோல இரு நெடுக்கடியா இருக்கு?

சிறுவர்களை ஏமாற்றி போதைப்பொருள் பாவனைக்கு தூண்டிவரும் தமிழ்த் திரைப்படங்கள்; மது, போதைப்பொருள் தகவல் நிலையம் ஆய்வறிக்கை

http://www.yarl.com/forum3/topic/163938-சிறுவர்களை-ஏமாற்றி-போதைப்பொருள்-பாவனைக்கு-தூண்டிவரும்-தமிழ்த்-திரைப்படங்கள்-மது-போதைப்பொருள்-தகவல்-நிலையம்-ஆய்வறிக்கை/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.