Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈபிடிபியினரும் இராணுவத்தினருமே எனது மகனை கடத்தினர்! பொய் சொன்ன டக்ளஸ் தேவானந்தா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஈபிடிபியினரும் இராணுவத்தினருமே எனது மகனை கடத்தினர்! பொய் சொன்ன டக்ளஸ் தேவானந்தா
[ செவ்வாய்க்கிழமை, 15 டிசெம்பர் 2015, 03:20.41 PM GMT ]
epdp_001.jpg
அம்மா.. இங்கே பாருங்கள் நான் இங்கே இருக்கிறேன்... என என்னுடைய பிள்ளை ஈ.பி.டி.பி முகாமிற்குள் இருந்து கத்தினான். என்னுடைய பிள்ளையை பார்க்க ஓடிச் சென்றபோது அங்கு நின்ற படையினர் துப்பாக்கியை கொண்டு என்னை சுடுவதற்கு துரத்தினார்கள் என அராலி செட்டியார் மடத்தைச் சேர்ந்த இராசேந்திரம் துளசிமலர் என்ற தாய் கதறியழுது சாட்சியமளித்துள்ளார்.

காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வுகள் இன்றைய தினம் சங்கானை பிரதேச செயலகத்தில் நடைபெற்றிருந்த நிலையில் குறித்த சாட்சியம் வழங்கப்பட்டிருக்கின்றது.

குறித்த சாட்சியத்தில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2007.05.12ம் திகதி பிரதேச செயலகத்திற்கு தந்தையுடன் கடவுச்சீட்டு எடுப்பதற்காக சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது 252-3286 என்ற இலக்கம் பொறிக்கப்பட்ட வெள்ளை வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த படை யினரும், ஈ.பி.டி.பியினரும் வட்டுக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக வைத்து எனது மகனை பிடித்துச் சென்றார்கள்.

பிடிக்கும்போதே என் பிள்ளையை வீதியில் வைத்து மூர்க்கத்தனமாக தாக்கியே இழுத்துச் சென்றார்கள். அதில் வந்திருந்த ஈ.பி.டி.பியினரை எமக்கு தெரியும். பின்னர் நான் மானிப்பாய் ஈ.பி.டி.பி முகாமுக்குச் சென்றேன். அங்கே நின்றவர்கள் தாங்கள் பிடிக்க வில்லை. என கூறிவிட்டார்கள்.

மேலும் பிள்ளை வேண்டுமென்றால் கடவுளை கும்பிடுங்கள் எனவும் கூறினார்கள். பின்னர் நான் யாழ்ப்பாணத்திலுள்ள ஈ.பி.டி.பி முகாமிற்கு வந்தபோது நான் வந்திருப்பதை அறிந்த எனது மகன் பெரும் சத்தமாக கதறியழுது அம்மா நான் இங்கே இருக்கிறேன் என கத்தினான்.

நான் உள்ளே செல்ல முற்பட்டபோது அங்கு நின்ற படைசிப்பாய் துப்பாக்கியால் என்னை சுடுவதற்கு வந்தான். பின்னர் நான் ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாண பொறுப்பாளர் என இருந்த சில்வேஸ்திரி அலென்டினை சந்தித்து சம்பவத்தை கூறினேன். அப்போது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் தங்கள் அலுவலகத்திற்கு வரும்படியும் பார்க்கலாம் என்றும் கூறினார்கள்.

பல மாதங்களாக அந்த முகாமுக்கு நடந்தேன். எந்த பயனும் இல்லாமல். டக்ளஸ் தேவானந்தாவை கொழும்பில் சந்தித்தேன். அப்போது அவரிடம் விடயத்தை சொன்னபோது உங்கள் மகன் வட்டுக்கோட்டை பொலிஸ் ஊடாக ஒப்படைக்கப்பட்டதாக கூறிவிட்டார்.

அவர் சொன்னது பொய். பிள்ளை விடுவிக்கப்படவேயில்லை. பின்னர் 5 வருடங்களுக்கு முன்னர் கண்டியில் வைத்தியசாலை ஒன்றில் படையினருடன் எனது மகன் நிற்பதை கண்டதாக ஒருவர் கூறினார்.

ஆனால் அவருக்கு கிட்டச் செல்ல முடியவில்லை. எனவும் அவர் கூறிவிட்டார். எனவே எனது மகன் உயிருடன் இருக்கிறான். அவனை மீட்டுக் கொடுங்கள் என ஆணைக்குழு முன்னிலையில் பெரும் சத்தமிட்டு கதறியழுது சாட்சியமளித்தார் அவர்.

epdp_002.JPG

 

தமிழ்வின்.காம்

இனியாவது துணிந்து எல்லோரும் உண்மைகளை சொல்ல முன்வரவேண்டும் .

ஆயுதம் தூக்கி அடாவடி செய்த அனைவரையும் காட்டிக்கொடுத்து நீதி மன்றத்தில் நிறுத்தவேண்டும் 

43 minutes ago, arjun said:

இனியாவது துணிந்து எல்லோரும் உண்மைகளை சொல்ல முன்வரவேண்டும் .

ஆயுதம் தூக்கி அடாவடி செய்த அனைவரையும் காட்டிக்கொடுத்து நீதி மன்றத்தில் நிறுத்தவேண்டும் 

நீங்கள் ஆயுதங்களோடை இருக்கவில்லை என்பதை முதலிலை உறுதிப்படுத்துங்கோ அண்ணை...  விசாரணயை உங்களிட்டை இருந்து ஆரம்பிக்க ஆவன செய்வீர்கள் எண்டு நம்புகிறன்..

  • கருத்துக்கள உறவுகள்

காட்டு விலங்குகளைப் பற்றிய விபரணப் படம் ஒன்று பார்த்தேன். அதில் மான்குட்டி ஒன்றை சிறுத்தை பிடித்துவிட்டது. அதனைக் கொல்லாமலும், தப்பியோட விடாமலும் தன் கால்களுக்குள் வைத்திருந்தது சிறுத்தை. மான்குட்டியோ சிறுத்தையை முகர்ந்து முகர்ந்து பார்த்து நடுங்கியவாறு மிரண்டது. தன் குட்டியைக் காப்பாற்ற இயலாமலும், சிறுத்தையை நெருங்கமுடியாமலும் தாய்மான் தூரமாக நின்று பரிதவிப்பதைக் காட்டினார்கள். அந்தக் கொடுமையை, தாய்மானின் முகத்தில் தெரிந்த அந்தச் சோகத்தை வெளிப்படுத்த எந்த மொழியிலும் வார்த்தைகள் கிடைக்காது. அதுபோலவே பிள்ளைகளைப் பறிகொடுத்த எங்கள் தமிழ்த் தாய்மார்களின் நிலமை இன்று.
 

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் தேவானந்தா எங்களை ஏமாற்றி விட்டார் என் தயார் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.

குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

டக்ளஸ் தேவானந்தா எங்களை ஏமாற்றி விட்டார் என் தயார் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.





முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா எங்களை ஏமாற்றி விட்டார் என கண்ணீருடன் தயார் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். சங்கானை பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின் போதே அவ்வாறு  சாட்சியம் அளித்தார்.

தனது சாட்சியத்தில் மேலும்  கூறுகையில்,

எமது மகனை 1997ம் ஆண்டு 4ம் மாதம் 4ம் திகதி இராணுவத்தினர் எமது வீட்டை சுற்றி வளைத்து கைது செய்து கொண்டு சென்றனர். முதலில் மாவடி இராணுவ முகாமில் மகனை தடுத்து வைத்திருந்தார்கள். நான்காவது நாள் உடுவில் இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டு உள்ளாதாக மாவடி முகாம் இராணுவத்தினர் கூறினார்கள். அதனை அடுத்து உடுவில் இராணுவ முகாமுக்கு சென்ற போது கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்தனர்.

கொழும்பிற்கு சென்று நான்காம் மாடியில் விசாரணை செய்த போது அவ்வாறு யாரும் இல்லை என கூறினார்கள். ஊருக்கு திரும்பி வந்து இருந்த போது தெரிந்தவர் ஒருவர் கூறினார் டக்ளஸ் தேவானந்தாவுடன் தொடர்பு கொண்டு கதையுங்கள் அவர் உங்கள் மகனை மீட்டு தருவார் என கூறினார்.

அதையடுத்து டக்ளஸ் தேவானந்தாவை நேரில் சென்று சந்தித்து மகன் தொடர்பில் தெரிவித்த போது உடனேயே உடுவில் இராணுவ முகாமுக்கு தொடர்பு கொள்வதாக கூறி தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தி யாருடனையோ கதைத்தார்.

கதைத்து முடிந்ததும் உங்கள் மகனை சந்தேகத்தில் உடுவில் இராணுவ முகாமில் தடுத்து வைத்து விசாரணை செய்கின்றார்கள் நாலைந்து நாட்களுக்குள் விடுதலை செய்வார்கள் என கூறி எம்மை அனுப்பி வைத்தார். 

நாலைந்து நாட்கள் ஆகியும் மகன் திரும்பி வராததால் மீதும் டக்ளஸ் தேவனானந்தாவை நேரில் சந்திக்க எத்தனையோ தடவைகள் முயற்சித்தும் நேரில் சந்திக்க முடியாது போனதாக தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126925/language/ta-IN/-----.aspx

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Paanch said:

காட்டு விலங்குகளைப் பற்றிய விபரணப் படம் ஒன்று பார்த்தேன். அதில் மான்குட்டி ஒன்றை சிறுத்தை பிடித்துவிட்டது. அதனைக் கொல்லாமலும், தப்பியோட விடாமலும் தன் கால்களுக்குள் வைத்திருந்தது சிறுத்தை. மான்குட்டியோ சிறுத்தையை முகர்ந்து முகர்ந்து பார்த்து நடுங்கியவாறு மிரண்டது. தன் குட்டியைக் காப்பாற்ற இயலாமலும், சிறுத்தையை நெருங்கமுடியாமலும் தாய்மான் தூரமாக நின்று பரிதவிப்பதைக் காட்டினார்கள். அந்தக் கொடுமையை, தாய்மானின் முகத்தில் தெரிந்த அந்தச் சோகத்தை வெளிப்படுத்த எந்த மொழியிலும் வார்த்தைகள் கிடைக்காது. அதுபோலவே பிள்ளைகளைப் பறிகொடுத்த எங்கள் தமிழ்த் தாய்மார்களின் நிலமை இன்று.
 

உண்மை! இப்படியான நிலைமை உலகில் உள்ள எந்தத் தாய்க்கும் வரக்கூடாது. 

யார் செய்திருந்தாலும் அர்த்தமற்ற அராஜகக் கொலைகள் யாவும் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும். தண்டனைகளும் கொடுக்கப் பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.