Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மீனவரை இழுத்துச் சென்ற இந்தியப் படகுகள்'

Featured Replies

இலங்கை மீனவரை இழுத்துச் சென்ற இந்தியப் படகுகள்'

 

இலங்கையின் வடக்கே காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி உட்புகுந்த இந்திய மீனவர்களின் இழுவைப் படகொன்று அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைநகர் மீனவர் ஒருவரின் வலைகளை நாசப்படுத்தியதுடன், அந்த மீனவரையும் படகுடன் இழுத்துச் சென்று நீரில் மூழ்கடிக்க முயற்சித்ததாக அதிகாரிகளிடம் முறையிடப்பட்டிருக்கின்றது.

'இலங்கை மீனவரை இழுத்துச் சென்ற இந்தியப் படகுகள்'
 'இலங்கை மீனவரை இழுத்துச் சென்ற இந்தியப் படகுகள்'

காரைநகரைச் சேர்ந்த லோகநாதன் என்ற மீனவரே கடற்படை அதிகாரிகளிடமும், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடமும் இவ்வாறு முறையிட்டிருக்கின்றார்.

புதன்கிழமை இரவு பத்து மணியளவில் 25க்கும் மேற்பட்ட இழுவைப் படகுகளில் வந்த இந்திய மீனவர்களே இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான தனது 27 வலைகளை அறுத்து சேதப்படுத்தியதுடன் வலைகளுடன் படகில் தன்னையும் இழுத்துச் சென்று மூழ்கடிக்க முயன்றதாக லோகநாதன் தெரிவித்துள்ளார்.

படகுடன் இழுத்துச் செல்லப்பட்டபோது, அவலக்குரல் எழுப்பிய போதிலும், இந்திய மீனவர்கள் அதனைக் கண்டுகொள்ளவில்லை என்றும், அப்போது அதனைக் கண்ட கடற்படையினர் இந்திய மீனவர்களைத் துரத்தியதையடுத்து, தன்னுடைய வலைகளை அறுத்து விடுவித்துக் கொண்டு இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் ஓடிச் சென்றதாக லோகநாதன் கூறினார்.

இந்திய இழுவைப் படகுகளைத் துரத்திச் சென்ற கடற்டைபயினரால் கைது செய்யப்பட்டு கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நான்கு இந்திய மீனவர்களும் நீதிமன்ற உத்தரவுக்கமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/12/151221_lankafishing

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொடிய அடாவடியில் ஈடுபட்ட இந்தியரை கடுமையான தண்டனைக்கு உட்ட்படுத்தவேண்டும் குறைந்தது 10 வருடங்கள் சிறையிலிடவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல லோகநாதன் சொல்லுறதும்.. சொறீலங்கா கடற்படை சொல்லுறதும் உண்மையான்னு விசாரிங்க. அப்புறம் நீதி விசாரணை பண்ணுங்க. குற்றவாளிகளுக்கு அந்தந்த நாட்டு நியமங்களுக்கு ஏற்ப தண்டனை வழங்குங்க...!  இந்திய மீனவர்கள் கடல் தாண்டா வண்ணம் தெளிவான எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு அடையாளம் இடப்படுதல் வேண்டும். அப்போதுதான் அவர்கள் எல்லை தாண்டுவதை குறைக்கலாம். வேண்டும் என்று எல்லை தாண்டும் இரு தரப்பு (சொறீலங்கா சிங்கள மீனவர்கள் உட்பட) மீனவர்கள்.. சம்பந்தப்பட்ட நீதித்துறையால் தண்டிக்கப்படுதல் அவசியம். மீண்டும் எல்லை தாண்டாத வகைக்கு அது அமைந்தால்.. நல்லது. :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இது மிகவும் சிக்கலான விடயம். சிங்களம், கடலின் இரு புறமும் வாழும் தமிழ் மீனவரிடையே பகைமையினை மூட்ட செய்யும் முயற்சி யாக இருக்கலாம்.

மேலும் நடுக்கடலுக்கு ஒரு மீனவர் தனியாகவா? 

1 hour ago, Nathamuni said:

இது மிகவும் சிக்கலான விடயம். சிங்களம், கடலின் இரு புறமும் வாழும் தமிழ் மீனவரிடையே பகைமையினை மூட்ட செய்யும் முயற்சி யாக இருக்கலாம்.

மேலும் நடுக்கடலுக்கு ஒரு மீனவர் தனியாகவா? 

நானும் யோசித்தேன், அவலக்குரல் எழுப்பியதை கேட்டுத்தான் இலங்கை கடற்படை வந்ததா? 

அவ்வளவு பக்கத்தில் தான் இதெல்லாம் நடந்ததா?

அது கடலா அல்லது குளமா? 

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் குரல் சிங்களத்திற்குக் கேட்டதா.....! :rolleyes:

நல்லாட்சியில் மாற்றம் உண்டுதான் போலும்.:grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Paanch said:

தமிழன் குரல் சிங்களத்திற்குக் கேட்டதா.....! :rolleyes:

நல்லாட்சியில் மாற்றம் உண்டுதான் போலும்.:grin:

ஆறு மாதத்திலை கல்வீடு கட்டித்தருவன்....பேசாமல் கிடவும் tw_lol: :cool:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

ஆறு மாதத்திலை கல்வீடு கட்டித்தருவன்....பேசாமல் கிடவும் tw_lol: :cool:

தற்போது தமிழனுக்கக் கல்வீடு கட்டுவது சற்றுக்கடினம் சாமியாரே...! அதனைவிடக் கல்லறை கட்டுவது மிகவும் சுலபம். அதற்கான உதவிகள் செய்வதற்குச் சில தமிழர்களே தயாராக உள்ளதை நீங்கள் அறியவில்லையா??:unsure::rolleyes:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.