Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் தீர்வுத் திட்டத்தை தயாரிக்கும் உபகுழுவில் இடம்பெற்றுள்ள 15 பேர் விபரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தீர்வுத் திட்டத்தை தயாரிக்கும் உபகுழுவில் இடம்பெற்றுள்ள 15 பேர் விபரம்
DEC 28, 2015 


தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் தீர்வுத் திட்ட ஆவணத்தை தயாரிக்க 15 பேர் கொண்ட உபகுழுவொன்றை தமிழ் மக்கள் பேரவை நியமித்துள்ளது.

யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் நேற்றுக்காலை நடந்த பேரவையின் இரண்டாவது கூட்டத்தின் பின்னர், நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில், இணைத் தலைவர்களில் ஒருவரான மருத்துவர் பி.லக்ஸ்மன் இதனை அறிவித்தார்.

”அரசியல் தீர்வு சம்பந்தமாக விஞ்ஞான பூர்வமான ஆவணமொன்றை முன்வைப்பதற்காக 15 பேர் கொண்ட உப குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சார்பில் தலா இரண்டு பேரை முன்மொழிந்துள்ளன. முதலமைச்சர் சார்பிலும் இரண்டுபேர் நியமிக்கப்படுவர். மேலும், சிவில் சமூக அமைப்புகளின் சார்பில் 5 பேர் நியமிக்கப்படுவர் என்று அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, தமிழ் அரசுக் கட்சி சார்பில் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், சட்டவாளர் காண்டீபன், புளொட் சார்பில் ரி.பரந்தாமன், ஈபிஆர்எல்எவ் சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி சர்வேஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சட்டவாளர் வீ.மணிவண்ணன், தமிழ் மக்கள் பேரவை சார்பில், சட்டவாளர்கள் குருபரன் குமாரவடிவேல், புவிதரன், சேவியர் விஜயகுமார் மற்றும் கலாநிதி கே.ரி.கணேசலிங்கம் ஆகியோர் இந்த உபகுழுவில் இடம்பெற்றுள்ளனர்.

முதலமைச்சர் சார்பில் நியமிக்கப்படும் இருவர், புளொட் சார்பில் ஒருவர், சிவில் சமூகம் சார்பில் ஒருவர் என நான்கு பேர் மட்டும் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.

அதேவேளை, “ இந்த நிபுணர் குழுவுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக வெளிநாடுகளில் உள்ள அரசியலமைப்பு உருவாக்கத்தில் தேர்ச்சியுள்ள, 5 ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து நிபுணர்குழு ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும்.

தமிழ் மக்களுடைய சுய ம் அல்லது அடையாளத்தைப் பாதுகாக்கின்ற வகையில், எமது தீர்வுத் திட்டம் தயாரிக்கப்படும்.

அரசியல் தீர்வானது எவ்வாறு அமைய வேண்டும். எவ்வாறான விடயங்கள் உள்வாங்கப்பட வேண்டும் போன்றவற்றை ஆராய்ந்து மக்களுடைய பங்களிப்புடன் தீர்வு விடயத்தை முன்வைப்பதே இந்த உபகுழுவின் நோக்கம்.

இத்தீர்வுத் திட்டம் அடிமட்டத்திலிருந்து மேலெழுந்து வந்து சகல மக்களினதும் அபிலாசைகளைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்பதே எல்லோருடைய ஆவலாகும்.

அதன்பிரகாரம் நிபுணர் குழு அமைக்கப்பட்டு அரசியல் தீர்வுத் திட்டத்திலுள்ள முக்கியமான விடயங்கள் ஆராயப்பட்டு அறிக்கைகள் முன்வைக்கப்படும்.

அது பேரவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டபின்னர் மக்கள் மத்தியில் முன்வைக்கப்படும்.  அதன் பின்னர் மூன்று அல்லது நான்கு மாதங்களில் தமது இறுதியான தீர்வு திட்ட வரைபை அல்லது முன்மொழிவை நிபுணர்குழு உருவாக்கும் என நினைக்கிறோம்.

இதேபோன்று நிபுணர்குழு உருவாக்கும் தீர்வு திட்டம் தொடர்பா க நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் பேசவேண்டிய தேவை இருக்கிறது.

இது தொடர்பில் மக்கள் பேரவையில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் அல்லது கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளின் தலைவர்கள் ஊடாக கூட்டமைப்புடன் இந்த விடயம் தொடர்பாக நாங்கள் நிச்சயமாக பேசுவோம்.

தமிழ் மக்கள் பேரவை பல சிவில் அமைப்புக்களை உள்வாங்கி உருவாக்கப்பட்டுள்ள ஒரு அமைப்பாகும். இது எந்தச் சந்தர்ப்பத்திலும் அரசியல் கட்சியாக மாற்றமடையாது.

இதில் உள்ளவர்களும் பல்வேறு சமூக அமைப்புக்களையும் மத அமைப்புக்களையும் சார்ந்தவர்களே உள்ளனர். எனவே அவர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் அரசியல் கட்சி என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படப் போவதில்லை.

தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்று பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இந்தப் பொறுப்பை அரசியல் கட்சிகளிடம் மாத்திரம் விட்டுவிடக்கூடாது.

ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் மக்களே. கடந்த காலங்களில் ஏற்பட்ட பெருமளவான உயிரிழப்புக்கள் சொத்து இழப்புக்கள் தியாகங்கள் அனைத்திற்கும் ஓர் சரியான தீர்வு எட்டப்படவேண்டும்.

அதற்காக உழைக்க வேண்டியது ஒவ்வொருவரினது கடமையாகும். அக்கடமையைச் செய்யவே நாம் முயற்சித்துள்ளோம்.” ” என்றும் மருத்துவர் லக்ஸ்மன் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/12/28/news/12297

தமிழீழ தமிழ் தேசிய மக்கள் பேரவையின் ஜனநாயக செயற்பாடுகளுக்கு நாம் செவி சாய்க்கவேண்டும் - தலைவர் மாவை. எனது மனதில் எழும் 2 கேள்விகள் :1. ஜனநாயகம் என்பது மக்களுடைய மக்களுக்காக மக்களினால் நடத்தப் படுவது என்று கூறினார் ஆபிரகாம் லிங்கன். பாதிக்கப் பட்ட சுண்ணாகம், வலிகாமம் மக்களின் தூய நீருக்கான போராட்டத்தை மழுங்கடிக்க முயற்சி செய்தவர்கள் ஜனநாயக வாதிகளா? மாற்றுக் கருத்து உடையவர்களை மண்டையில் போட்டு தள்ளியவர்கள் எப்போது ஜனநாயக வாதிகள் ஆனார்கள்? மக்களால் நிராகரிக்கப்பட்டு தேசியப் பட்டியலிலும் இடம் கிடைக்காததனால் புதிய அமைப்பை உருவாக்கும் அதிருப்தியாளர்கள் ஜனநாயகத் தலைவர்களா ? 2. சிவில் சமுதாயம் என்பது சிவில் சமுதாய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களின் அமைப்பு என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது . சிவில் சமுதாய நிறுவனம் என்பது அரசாங்க நிறுவனமற்ற இலாபத்தை ஈட்டாத தன்னார்வத் தொண்டர் நிறுவனம் என்று மேலும் கூறுகிறது. இந்த நிலையில் அரசாங்கத்திலும் வேலை செய்து கொண்டு தனியார் துறையிலும் இலாபம் ஈட்டிக் கொண்டு இருப்பவர்களையும் அரச ஊதியத்தில் பல்கலைக்கழக விரிவுரைகளை நடத்துபவர்களையும் எவ்வாறு சிவில் சமூகப் பிரதிநிதிகள் என்று ஏற்றுக் கொள்ள முடியும் ? இவர்கள் எப்போது எந்த நிறுவனத்தின் ஊடாக இலாபமீட்டாத தன்னார்வ தொண்டர் வேலைகளில் ஈடுபட்டு சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆனார்கள் ? விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் அவர்களையும் போராட்டத்தையும் கடுமையாக விமர்சித்து வந்தவர்கள் தற்போது கொள்கை மாறக்கூடாது என்று கூறி மாவீரர் தின அறிக்கைகளை ஒத்த அறிக்கைகளை வெளியிடுவதன் நோக்கம் என்ன ?யாரவது பதில் தெரிந்தால் கூறுங்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் நேரத்தில் சிறைக்கைதிகளின் போராட்டத்தை மழுங்கடித்து இன்று அவர்களை நடுத்தெருவில் விட்டவர்கள் யார் ?

Quote

மாற்றுக் கருத்து உடையவர்களை மண்டையில் போட்டு தள்ளியவர்கள் எப்போது ஜனநாயக வாதிகள் ஆனார்கள்?

கூட்டமைப்பு உள்வாங்கிய சுரேஸ் பிறேமசந்திரன். சித்தார்த்தனை கேட்க வேண்டிய கேள்வி 

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, nunavilan said:

கூட்டமைப்பு உள்வாங்கிய சுரேஸ் பிறேமசந்திரன். சித்தார்த்தனை கேட்க வேண்டிய கேள்வி 

குரு செய்தால் குற்றமில்லை...

ஒருவேளை கூட்டமைப்புக்குள் ஐனநாயகம்

ஐனநாயகவாதிகள் இல்லையோ...??

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுக்  கருத்திலும் சோரம் போகக் கூடிய இனத்தைக் காட்டிக்கொடுக்கக் கூடிய.. இனத்தை எதிரியோடு சேர்ந்து கருவழிக்கக் கூடிய.. கருத்துக்களுக்கு செயல்களுக்கு.. மண்டையில் போட்டால் தான் என்ன போடா விட்டால் தான் என்ன. காந்திக்கும் மண்டையில போட்டிருக்காங்க. நாட்டைக் காட்டிக்கொடுத்ததென்று. ஜனநாயகத்தின் தந்தை லிங்கனுக்கும் மண்டையில தான் போடு. எதுகும் ஓவரா போகாத வரைக்கும்.. தான்.  :rolleyes:tw_angry:

Edited by nedukkalapoovan

ஆணி வேரை புடிங்கியாச்சு இனி பயப்பட ஒன்றும் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்ரகாம் லிங்கன்.. காந்தி.. மார்ட்டின் லூதர் கிங்.. இவர்களை எல்லாம் பெரிய ஆலமரத்து ஆணி வேர் வந்து போடல்ல. தனி நபர்கள்... போட்டுத் தள்ளினார்கள். ஓவரா ஆடினா.. அடங்கத்தான் வேண்டி வரும்.. அதுதான் இயற்கையின் நியதி. tw_angry::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பிளவுபடாத ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு வேணுமென்று சிங்களவன் கேட்காமலே சொல்லும் சம்பந்தருக்கு ஆப்புத்தான்!!!

5 hours ago, Gari said:
மாற்றுக் கருத்து உடையவர்களை மண்டையில் போட்டு தள்ளியவர்கள் எப்போது ஜனநாயக வாதிகள் ஆனார்கள்?

1950 களில் இருந்து இலங்கை அரசுக்கு எதிராக தமது வன்முறை தேர்தல் பேச்சுகளின் மூலம் இளைஞர்களை தூண்டிய தமிழரசு கட்சியினரிடம் இந்த கேள்வியை நீங்கள் கேட்கவில்லையா? 1977 தேர்தல் மேடையில் அரசாங்கத்தை ஆதரிக்கும் அரசியல்வாதிகள் இயற்கை மரணம் அடையமாட்டார்கள் என்று பகிரங்கமாக வன்முறையை தூண்டி மண்டையில் போடும் கலாசாரத்தின் விதையை நாட்டியவர்கள் இந்த தமிழரசு கூட்டணியிரே.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புலவர் said:

பிளவுபடாத ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு வேணுமென்று சிங்களவன் கேட்காமலே சொல்லும் சம்பந்தருக்கு ஆப்புத்தான்!!!

பிறகென்ன விக்கி குறூப் (இன்றிலிருந்து தமிழ் மக்கள் பேரவை வாலியால் விக்கி குறூப் என அழைக்கப்படுகின்றது tw_blush:) கட்டாயம் தனித் தமிழீழம் எடுத்துத் தருவினை போலக் கிடக்கு. <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.