Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

கிச்சன் கீர்த்தனா: வெள்ளை ஆப்பம்

3.jpg

உடல் எடையைக் குறைக்க உதவும் ஆப்பம்

இட்லி, இடியாப்பம் போல எளிதாக ஜீரணிக்கக் கூடிய நம்முடைய உணவு வகைகளில் ஆப்பத்துக்கும் முக்கிய இடமுண்டு. காலை, மாலை, இரவு என எந்த வேளைக்கும் ஏற்ற சரியான உணவு ஆப்பம். தற்போது, ஆப்பத்தில் பல வெரைட்டிகளைக் காட்டி வருகின்றன உணவகங்கள். வீட்டிலேயே ஆப்பம் செய்யலாம் என்றாலும், தோசை ஊற்றுவதைப்போல ஆப்பம் செய்வது அத்தனை எளிதல்ல. தோசையில் எண்ணெய் அதிகமாகப் பயன்படுத்துவோம். ஆனால், ஆப்பத்திலோ அதற்கு அவசியமில்லை.

எப்படிச் செய்வது?

முதலில் ஆப்பத்துக்கான மாவு தயாரிக்கும் முறை.

தேவை:

பச்சரிசி - 1 கிலோ

தயிர் - 100 கிராம்

உப்பு - 30 கிராம்

முழு தேங்காய் - ஒன்று

சமையல் எண்ணெய் - 50 மில்லி

செய்முறை:

பச்சரிசியைக் கழுவி சுத்தம் செய்து, அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி, இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மீண்டும் தண்ணீரை இறுத்து, ஒரு தட்டில் வைத்து மின்விசிறியின் கீழ் காயவிடுங்கள். லேசாக ஈரம் இருக்கும்போது மிக்ஸியில் அரைத்து, சல்லடையில் நன்கு சலித்துக் கொள்ளுங்கள். இனி, தேங்காயைத் துருவி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மிக்ஸியில் நன்கு அரைத்து ஒரே ஒரு முறை மட்டும் பால் எடுத்துக்கொள்ளுங்கள். இந்தப் பாலை அரைத்த மாவுடன் சேர்த்துக் கலந்து, கூடவே ஒரு கப் தயிரையும் சேர்த்து, கரண்டியால் நன்கு கலந்து, இறுதியாக உப்புச் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். முதல் நாள் மாலையில் இதைத் தயாரித்து ஒரு சட்டியில் வைத்து மூடி, மறுநாள் எடுத்து உபயோகிக்க வேண்டும்.

அடுப்பில் ஆப்பச் சட்டியை வைத்து சூடானதும், துளி எண்ணெய்விட்டு, துணி கொண்டு சட்டி முழுவதும் எண்ணெயைப் பரப்பிவிட வேண்டும். பிறகு, முதல்நாள் தயாரித்து வைத்திருக்கும் மாவை ஒரு கரண்டி எடுத்து சட்டியின் நடுவே ஊற்றி, சட்டியை ஒரு சுழற்று சுழற்றினால்... எல்லா பக்கத்திலும் மாவு உருண்டு ஓடி நிற்கும். ஒரு தட்டைக்கொண்டு சட்டியை மூடி, மிதமான தீயில் வைத்து நான்கு நிமிடங்கள் கழித்துத் திறந்தால், ஆப்பம் வெந்திருக்கும். அப்படியே எடுத்து விரும்பிய சைடிஷைத் தொட்டுச் சாப்பிடலாம்.

என்ன நன்மை?

பெரும்பாலோர் தேங்காய்ப் பாலை மாவில் சேர்க்காமல் ஆப்பம் செய்வார்கள். தேங்காய்ப் பாலைத் தனியாகத் தயாரித்து ஆப்பத்துடன் சேர்த்துக்கொள்வார்கள். ஆனால், மேற்படி முறையில் ஆப்பத்தைத் தயாரிக்கும்போது கூடுதல் சுவையுடன், உடலுக்கும் பலம் சேர்க்கும்.

தேங்காயில் 61 சதவிகிதம் நீரில் கரையாத நார்ச்சத்து உள்ளது. அதனால் தேங்காய் கலந்த உணவுகளைச் சாப்பிட்டால் விரைவாகப் பசிக்காது. இது சற்று தாமதமாகவே சர்க்கரையாக மாற்றப்படுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதில்லை. உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்களும் ஓரளவு இதனை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வாய்ப்புண், வயிற்றுப்புண், குடலில் உள்ள புண்களைக் குணப்படுத்தும் தன்மை தேங்காய்க்கு இருக்கிறது.

https://minnambalam.com/k/2019/03/13/3

வெள்ளை அப்பம் என்பது மலையாளிகள் செய்வது.
இலங்கையில் இது ப்ளேன் அப்பம் என சிங்களவன் செய்வான். வாட்டி ஒரம் எல்லாம் மொறு மொறு என இருக்கும். நடுவில் மென்மையாக இருக்கும். சுட சுட கட்ட சம்பலுடன் சாப்பிடும் சொல்லி வேலை இல்ல‌. முட்டையாப்பமும் போடலாம், அல்லது பெணி அப்பமும் போடலாம். பிறகு இஞ்ஜி போட்டு ஒரு ப்லேண்டி குடிக்க அந்த மாதிரி. 

இந்த செய்முறையில் ஆப்ப சோடா சேர்க்கப்படுமே? ஏன் சேர்க்கவில்லை?

கிச்சன் கீர்த்தானா மலையாளியாக இருக்க வேண்டும்.  

  • Replies 782
  • Views 227.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழினி
    தமிழினி

  • இட்டலியையும் பார்பிகியூப் ரேஞ்சுக்கு கொண்டு வந்தாச்சா..., இட்டலிக்கு வந்த வாழ்வைப் பார்....! 

  • நான் கொத்தமல்லி இலையையும்,பச்சை மிளகாய்,சின்ன வெங்காயம்,இஞ்சி போன்றவற்றை தண்ணீர் விட்டு கிரைண்டரில் அரைத்துப் போட்டு அந்த தண்ணீரிலேயே அரிரியை அவிய விடுவேன். சுப்பராய் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு அப்பத்துக்கு கள்ளு  சேர்ப்பது வழக்கம்........வெள்ளை அப்பம் சாம்பலுடன் சூப்பராய் இருக்கும்.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
On 3/13/2019 at 10:09 AM, suvy said:

அங்கு அப்பத்துக்கு கள்ளு  சேர்ப்பது வழக்கம்........வெள்ளை அப்பம் சாம்பலுடன் சூப்பராய் இருக்கும்.....!  😁

புளித்த கள்ளா, புளிக்காத கள்ளா சேர்ப்பது?

சாம்பாரா? சம்பலா? சாம்பாலாக இருக்காது என்பது நிச்சயம்!

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

புளித்த கள்ளா, புளிக்காத கள்ளா சேர்ப்பது?

சாம்பாரா? சம்பலா? சாம்பாலாக இருக்காது என்பது நிச்சயம்!

பொதுவா கள்ளு மரத்தில் இருந்து இறங்கி வரும்போது கீழ நின்று வாங்கிறது.உடன்கள்ளுதான் நல்லது என நினைக்கின்றேன்.புளித்த கள்ளு பொங்கி வரும் ஆனால் கொஞ்சம் வாடை இருக்கும்.....!

சம்பல் அரைத்த சம்பல் ......!   😋

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

பொதுவா கள்ளு மரத்தில் இருந்து இறங்கி வரும்போது கீழ நின்று வாங்கிறது.உடன்கள்ளுதான் நல்லது என நினைக்கின்றேன்.புளித்த கள்ளு பொங்கி வரும் ஆனால் கொஞ்சம் வாடை இருக்கும்.....!

சம்பல் அரைத்த சம்பல் ......!   😋

எதற்கு ஐயம் சற்றுமுன் அப்பம் சாப்பிட்ட சம்பந்தர் மாமாவைக் கேளுங்கள்.....! 

Quellbild anzeigen

  • கருத்துக்கள உறவுகள்
On 3/13/2019 at 2:43 AM, colomban said:

வெள்ளை அப்பம் என்பது மலையாளிகள் செய்வது.
இலங்கையில் இது ப்ளேன் அப்பம் என சிங்களவன் செய்வான். வாட்டி ஒரம் எல்லாம் மொறு மொறு என இருக்கும். நடுவில் மென்மையாக இருக்கும். சுட சுட கட்ட சம்பலுடன் சாப்பிடும் சொல்லி வேலை இல்ல‌. முட்டையாப்பமும் போடலாம், அல்லது பெணி அப்பமும் போடலாம். பிறகு இஞ்ஜி போட்டு ஒரு ப்லேண்டி குடிக்க அந்த மாதிரி. 

நீங்க பருத்தித்துறைப் பக்கம் அப்பம் சாப்பிடல்லைப் போல.

4 hours ago, suvy said:

சம்பல் அரைத்த சம்பல் ......!   😋

அரைத்த சம்பலை விட பொரித்து உரலில் இடித்த சம்பல் சுவை அதிகம்.எனக்கு விருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்க பருத்தித்துறைப் பக்கம் அப்பம் சாப்பிடல்லைப் போல.

அரைத்த சம்பலை விட பொரித்து உரலில் இடித்த சம்பல் சுவை அதிகம்.எனக்கு விருப்பம்.

பொரித்து இடித்த சம்பலும் சுவையானதுதான்.எனக்கும் பிடிக்கும்.ஆனால் அது தோசைக்கும் இடியாப்பத்துக்கும் ஒத்துழைப்பது போல் அப்பத்துக்கு உடன்படாது. அப்பத்துக்கும் இட்டலிக்கும் ஒரு துண்டு இஞ்சி போட்டு அரைத்த சம்பல்தான் திறம் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.....!   😋

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சுட சுட கிராமத்து நாட்டுக் கோழி சமையல் .....!  👍

  • கருத்துக்கள உறவுகள்

கிச்சன் கீர்த்தனா: சன்டே ஸ்பெஷல் - சைதாப்பேட்டை வடகறி

3.jpg

சென்னையின் முத்திரை!

வடகறி... தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ளவர்களுக்கே தெரியாத உணவு வகை. வடகறியைத் தவிர்த்துவிட்டுச் சென்னையின் சிறப்பு உணவு வகைகளைப் பட்டியலிட முடியாது. வடையின் மிச்சத்திலிருந்து செய்யப்படுவதுதானே வடகறி என்று நினைக்கப்பட்டாலும், இதற்கான செய்முறையே தனி.

65 ஆண்டுகாலமாக வடகறிக்குப் புகழ்பெற்ற சென்னை, சைதாப்பேட்டை ‘மாரி ஹோட்டல்’ உரிமையாளர் ‘வடகறி’ செய்முறையைப் பகிர்ந்துகொண்டார். தரமாகச் செய்யப்படும் இந்த வடகறி, மக்களின் நெஞ்சத்தில் இடம்பிடித்ததோடு திரைப்படப் பாடலிலும் இடம்பிடித்த பெருமையும் கொண்டது (சவாலங்கடி கிரிகிரி சைதாப்பேட்டை வடகறி…)!

இட்லி - வடகறி காம்பினேஷன் என்ற முந்தைய வழக்கம் மாறி, இப்போது தோசை - வடகறி, இடியாப்பம் - வடகறி, பூரி - வடகறி, செட் தோசை - வடகறி காம்பினேஷன் சென்னை நகரின் பல உணவகங்களில் வழக்கத்தில் வந்துவிட்டது.

3a.jpg

என்ன தேவை?

ஐந்து பேருக்கு வடகறி செய்ய...

கடலைப் பருப்பு - அரை கிலோ

பெரிய வெங்காயம் - அரை கிலோ (நறுக்கிக்கொள்ளவும்)

புதினா - ஒரு கட்டு (சுத்தம் செய்து ஆய்ந்துகொள்ளவும்)

இஞ்சி - 50 கிராம்

பச்சை மிளகாய் - 50 கிராம்

பூண்டு - 100 கிராம்

ஏலக்காய் - 5

கிராம்பு - 5

பட்டை, லவங்கம் - 25 கிராம்

சோம்பு - 50 கிராம்

மஞ்சள் தூள் - 10 கிராம்

(மல்லி) தனியாத் தூள் - 50 கிராம்

மிளகாய்ப் பொடி - 50 கிராம்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, வடைக்கு அரைப்பதுபோல் கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள். கனமான சட்டியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, கடலைப் பருப்பு விழுதை பக்கோடா போலப் பொரித்து எடுங்கள். பின்பு, இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளுங்கள். ஏலக்காய், கிராம்பு, பட்டை, லவங்கம், சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் பொடி செய்து, இஞ்சி - பூண்டு பேஸ்ட்டுடன் கலந்துகொள்ளுங்கள்.

கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கி வைத்துக்கொள்ளுங்கள். அதே எண்ணெயில் இஞ்சி - பூண்டு விழுது, பட்டை - சோம்பு பொடி கலவையை வதக்கி, தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள். ஒரு கொதிவந்ததும், வதக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். நன்றாகக் கொதித்ததும், பொரித்து வைத்துள்ள கடலைப் பருப்பு பகோடாக்களை லேசாக உதிர்த்து சேர்த்து, அரை மணி நேரம் கொதிக்கவிடுங்கள். புதினா தூவி, இறக்குங்கள்.

இந்த வடகறியின் சுவைக்காகவே இன்னும் இரண்டு தோசை உள்ளே பூகும்!

உடலுக்கு என்ன நன்மை?

கடலைப் பருப்பு புரதச் சத்து கொண்டது. இது எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும்போது கொழுப்புச் சத்து சேர்ந்தாலும், இந்த வடகறியில் சேர்க்கப்படும் பிற பொருட்கள் செரிமானத்துக்குத் துணைசெய்கின்றன. உடனடி ஜீரணத்துக்கு உதவுகின்றன. காலை வேளையில் சாப்பிடும்போது அன்றைய நாள் முழுவதற்குமே எனர்ஜியைத் தருகிறது

https://minnambalam.com/k/2019/03/24/3

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

கடலைப்பருப்பை வைத்து வடை சுட்டோமா😆,சாப்பிட்டோமா என்று இல்லாமல் அதென்ன கறி 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ரதி said:

கடலைப்பருப்பை வைத்து வடை சுட்டோமா😆,சாப்பிட்டோமா என்று இல்லாமல் அதென்ன கறி 

கடலைப்பருப்பு கறி அந்தமாதிரி இருக்கும் தங்கச்சி.....அதுவும் விரதநாள்ளை.....சொல்லி வேலையில்லை....கடலைப்பருப்பு  கிட்டத்தட்ட கரையிற பதம் வரைக்கும் அவிக்கவேணும். பருப்பை 2மணித்தியாலம் ஊறவிட்டுட்டும் கறி காய்ச்சலாம்.😎

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

கடலைப்பருப்பு கறி அந்தமாதிரி இருக்கும் தங்கச்சி.....அதுவும் விரதநாள்ளை.....சொல்லி வேலையில்லை....கடலைப்பருப்பு  கிட்டத்தட்ட கரையிற பதம் வரைக்கும் அவிக்கவேணும். பருப்பை 2மணித்தியாலம் ஊறவிட்டுட்டும் கறி காய்ச்சலாம்.😎

க.பருப்பு கறி நான் ஒரு நாளும் சமைத்ததில்லை....வடையை பொறித்து பிறகு கறி சமைப்பதையும் விட நான் வடையாகவே  சாப்பிட்டு விடுவேன்😋

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரதி said:

.வடையை பொறித்து பிறகு கறி சமைப்பதையும் விட நான் வடையாகவே  சாப்பிட்டு விடுவேன்😋

 வடை வேறு. வடகறி வேறு. இடியப்பத்துடன் வடையைச் சாப்பிடமுடியாது! ஆனால் வடகறியைச் சேர்த்துச் சாப்பிடலாம்😋

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

 வடை வேறு. வடகறி வேறு. இடியப்பத்துடன் வடையைச் சாப்பிடமுடியாது! ஆனால் வடகறியைச் சேர்த்துச் சாப்பிடலாம்😋

நான் வடைகறி சாப்பிட்டதில்லை...ஒரு நாளைக்கு செய்து பார்த்திட்டு அதற்கு பிறகு எழுதுகிறேன்.ஆனால் சரியான வாயுவாக இருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

சரியான வாயுவாக இருக்கும் 

பெண்களுக்கும் வாயுத்தொல்லை வருவதுண்டா!😤🤨 அப்படியென்றால் வயது போய்விட்டதாக்கும்!😲

  • கருத்துக்கள உறவுகள்

எனது அம்மா, துவரம் பருப்பை ஊறவைத்து, அரைத்து, தட்டி, பொரிக்காமல், கொழுக்கட்டை போல அவித்து, அதனை குழம்பாக வைப்பார்கள். எண்ணெயே இல்லாமல் அருமையாக இருக்கும். 

தமிழகத்து முறையில், கடலைப் பருப்பு பாவிக்கின்றனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரதி said:

க.பருப்பு கறி நான் ஒரு நாளும் சமைத்ததில்லை....வடையை பொறித்து பிறகு கறி சமைப்பதையும் விட நான் வடையாகவே  சாப்பிட்டு விடுவேன்😋

தங்கச்சி! கடலைப்பருக்கறி வெள்ளைச்சோத்துக்கு அந்தமாதிரி இருக்கும்.அதுவும் விரதநாளுகளிலை சொல்லி வேலையில்லை.....நான் வெள்ளைளைச்சோறு எண்டு சொன்னது எங்கடை பசுமதியை.....😎

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

தங்கச்சி! கடலைப்பருக்கறி வெள்ளைச்சோத்துக்கு அந்தமாதிரி இருக்கும்.அதுவும் விரதநாளுகளிலை சொல்லி வேலையில்லை.....நான் வெள்ளைளைச்சோறு எண்டு சொன்னது எங்கடை பசுமதியை.....😎

வியாழக்கிழமை சமைச்சு பார்த்திட்டு சொல்றன் 
 
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

தங்கச்சி! கடலைப்பருக்கறி வெள்ளைச்சோத்துக்கு அந்தமாதிரி இருக்கும்.அதுவும் விரதநாளுகளிலை சொல்லி வேலையில்லை.....நான் வெள்ளைளைச்சோறு எண்டு சொன்னது எங்கடை பசுமதியை.....😎

பசுமதி சோத்தை மனிசன் சாப்பிடுவானா?
புரியாணியைத் தவிர.முன்னர் புரியாணி முத்துச் சம்பாவில் தயாரிப்பார்கள்.இப்ப அந்த அரிசையே காணேல்லை.

5 hours ago, Nathamuni said:

கூழ் உண்மையிலேயே விரும்பி குடிக்கக் கூடியதே.
இணைப்புக்கு நன்றி நாதம்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

கூழ் உண்மையிலேயே விரும்பி குடிக்கக் கூடியதே.
இணைப்புக்கு நன்றி நாதம்.

இந்த தயாரிப்பு முழுவதுமே வித்தியாசம்.

ஒடியல் மாவுக்குள்ள எல்லாத்தையும் போட்டு, குலைத்து, பின்னர் உள்ளே போடுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

வியாழக்கிழமை சமைச்சு பார்த்திட்டு சொல்றன் 
 
சரியக்கா 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இந்த தயாரிப்பு முழுவதுமே வித்தியாசம்.

ஒடியல் மாவுக்குள்ள எல்லாத்தையும் போட்டு, குலைத்து, பின்னர் உள்ளே போடுகின்றனர்.

நாதம் இதில் ஆச்சரியம் என்னவென்றால்

எல்லாமே மண்சட்டி பானை.
அடுத்து பானை சிறிது மாதிரி இருந்தது.போடப் போட போட போய்க் கொண்டே இருக்கிறது.
கடைசியாக கூழ் குடிப்பதற்கு பாவிக்கும் பனை ஓலையால் செய்த பிழா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ரதி said:

வியாழக்கிழமை சமைச்சு பார்த்திட்டு சொல்றன் 
 
2 hours ago, Nathamuni said:

சரியக்கா 

இஞ்சை பார்ரா இவை இரண்டு பேர்ரை கூத்தையும்.....:grin:

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

இஞ்சை பார்ரா இவை இரண்டு பேர்ரை கூத்தையும்.....:grin:

வியாழக்கிழமை வரை அமைதியாக இருங்கோ.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.