Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்று உலகை ஆண்ட தமிழன் இன்று அடிமை பிடிக்குள் சிக்கியுள்ளான்! பாண்டிச்சேரி மாநாட்டில் சிறிதரன் எம்.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்று உலகத்தை தன் கைப்பிடிக்குள் வைத்திருந்த தமிழன், இன்று தனகென்று ஒரு பிடி நிலமில்லாமல் அடிமை வாழ்க்கை வாழும் அவல நிலையில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

பூகோள வரலாற்றில் இன்னொருவருக்கு கீழ் கட்டுப்பட்டு வாழக்கூடிய நிலையில் தமிழன் இன்று உள்ளான். அதனால் தான் இன்று தமிழர்களிடம் விரக்தி நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

பாண்டிச்சேரியில் நடைபெற்று வரும் உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பன்னாட்டு சிறப்பு மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

செம்மொழியான தமிழ் எங்கும் ஆட்சிமொழியாக இல்லை! உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர்

 

செம்மொழியான தமிழ் மொழி எந்த நாட்டிலும் அரசகரும மொழியாக இல்லை என உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அகில உலக தலைவர் வி.சு. துரைராஜா தெரிவித்தார். 

பாண்டிச்சேரியில் நடைபெற்று வரும் உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பன்னாட்டு சிறப்பு மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

ஈழத்தில் தமிழ் மொழி அரசகரும மொழியாக இருக்கின்றது என்று கூறப்பட்டாலும் அங்கு அது சரியாக அமுலில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

உலகில் ஆறு மொழிகள் மாத்திரமே செம்மொழியாக இருப்பதாகவும் அவற்றில் தமிழ் மொழியும் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

*செம்மொழியான தமிழ் எங்கும் ஆட்சிமொழியாக இல்லை! உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர்

*புதிய அரசியல் அமைப்புக்கான திட்டங்கள் எங்களிடம் உண்டு: பாண்டிச்சேரி மாநாட்டில் மாவை

*தமிழீழம் என்ற நாடு உருவாவதற்கான சாத்தியங்கள் இப்போது இல்லாமல் போய்விட்டது: வி.சு. துரைராஜா

*வெளிநாடுகளில் கலப்படமற்ற தமிழை பேசும் தமிழர்கள்! பாண்டிச்சேரி முதலமைச்சர் நெகிழ்ச்சி

http://www.tamilwin.com/show-RUmuyBSaSWis1J.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

tamilmanadu_001.jpg

tamilmanadu_002.jpg

tamilmanadu_003.jpg

tamilmanadu_004.jpg

tamilmanadu_005.jpg

tamilmanadu_006.jpg

tamilmanadu_007.jpg

tamilmanadu_008.jpg

 
  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல வேண்டிய சரியான செய்தியை சொல்ல வேண்டிய சபையில் சேர்த்திருக்கிறார். நன்றி சிறிதரன். tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்ளதை உரிய இடத்தில் உரிமையோடு சொல்லியிருக்கின்றார்.


நல்ல காலம் உந்த மாற்றுக்கருத்து மாணிக்கங்களுக்கு கதிரை குடுக்கேல்லை.:cool:

உலகம் என்றால் என்ன?

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, arjun said:

உலகம் என்றால் என்ன?

 

வடலியை ஒருக்கால் சுத்தி வந்தால் அதுதான் உலகம்.

  • கருத்துக்கள உறவுகள்

நிமிர்ந்து நின்று பார்த்தல் எது தெரியுதோ அது வானம் 
குனிஞ்சு நின்று பார்த்தல் எது தெரியுதோ அது உலகம்..
 

அதுதான் நாங்கள் இன்றும் இப்படி இருக்கின்றம் .

வரலாறும் தெரியாது 

உண்மையும் தெரியாது .

உலகத்தை தமிழன் எப்ப ஆண்டான் ?

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள  நினைப்பதில் தவறென்ன என்று கூறியது சம்பந்தர் இருந்த கட்சி தான். அமிர்/ மங்கையர்கரசியை கேட்க வேண்டிய கேள்வி இது?

  • கருத்துக்கள உறவுகள்

கல்தோன்றி மண்தோன்றாக்காலத்தில் முன்தோன்றி மூத்த தமிழ் என்று சொன்னவரையும் சாட்சிக்கு அழைக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

பின்பு ஏன் சிங்களவன் தெமலுத் எக்கய் கூத் எக்காய் என கூறுகின்றான்

2 hours ago, nunavilan said:

ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள  நினைப்பதில் தவறென்ன என்று கூறியது சம்பந்தர் இருந்த கட்சி தான். அமிர்/ மங்கையர்கரசியை கேட்க வேண்டிய கேள்வி இது?

ஆண்ட என்று சொன்னது தங்களை தாமே ஒழிய உலகை அல்ல 

தமிழ் கூட தெரியாமல் 

"அன்று உலகத்தை தன் கைப்பிடிக்குள் வைத்திருந்த தமிழன், "

சிலவேளை டைனசோர்களை தமிழன் என்று நினைகின்றாரோ சிறீதரன்  

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, arjun said:

ஆண்ட என்று சொன்னது தங்களை தாமே ஒழிய உலகை அல்ல 

தமிழ் கூட தெரியாமல் 

"அன்று உலகத்தை தன் கைப்பிடிக்குள் வைத்திருந்த தமிழன், "

சிலவேளை டைனசோர்களை தமிழன் என்று நினைகின்றாரோ சிறீதரன்  

டைனோசர்கள் எப்போ உலகை ஆண்டன.

 

எதற்கு எதை ஒப்பிடுவது என்று தெரியாததுகள் எல்லாம் வரலாறைப்பற்றிக்கதைக்குதுகள். இலங்கையை ஒருகுடையின்கீழ் ஆட்சிசெய்த தமிழ் மன்னர்களெல்லாம் தமிழர்களை மட்டும்தான் ஆண்டார்களோ. .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Eppothum Thamizhan said:

டைனோசர்கள் எப்போ உலகை ஆண்டன.

 

எதற்கு எதை ஒப்பிடுவது என்று தெரியாததுகள் எல்லாம் வரலாறைப்பற்றிக்கதைக்குதுகள். இலங்கையை ஒருகுடையின்கீழ் ஆட்சிசெய்த தமிழ் மன்னர்களெல்லாம் தமிழர்களை மட்டும்தான் ஆண்டார்களோ. .

தமிழின் வரலாறு எல்லோருக்கும் தெரிய வேண்டிய அவசியமில்லை.

இன்றும் நாளையும் முக்கியம். அதற்கு சோறு முக்கியம். வரலாறுகளை முக்கி அறிய வேண்டிய அவசியமில்லை.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

465px-Rajendra_map_new.svg.png

 

300s BCE–1279 CE

https://en.wikipedia.org/wiki/Chola_dynasty

அமெரிக்காவை.. ஹிந்தியாவை வெள்ளைக்காரன் காண முதலே.. தமிழன் உலகக் கடல் ஆளத்தொடங்கிவிட்டான்.

இப்போதும்.. அமேசன்.. மற்றும்.. தென் வடக்கு அமெரிக்க மக்களில் ஒரு பகுதி பழங்குடியினரை.. இந்தியச் சாயலோடு இருக்கக் காணலாம்.

தகுந்த ஆய்வுகள் செய்யப்பட்டால்.. இவர்களின் பரம்பலுக்கான காரணம் கண்டறியப்பட்டால்.. தமிழனின் பழைய அதிகார ஆளுமையின் வீச்சை இன்னும் உறுதி செய்து கொள்ள முடியும்.

ரோமர் காலத்தில்.. ரோமாபுரியோடு தமிழன் வர்த்தகம் செய்த சான்றுகள் பல அண்மைய ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. அதுவும் ரோமை அண்டி. tw_blush:

தமிழனின் அடிப்படை வரலாறு தெரியாததுங்க எல்லாம்.. புலிக்கு தமிழனுக்கு வகுப்பெடுக்குதுங்க.

காலம்டா சாமி. :rolleyes:

https://tamilvaralaru.wordpress.com/2011/09/10/kumarikandam/

சிந்துவெளியில் ஊர்கள், துறைமுகங்கள், ஆறுகள், மலைகளின் பெயர்கள் தமிழில் (Tamil Names in Sindh [Indus] Valley)

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு

வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்

ca. 200,000 to 50,000 BC: evolution of “the Tamilian or Homo Dravida“,
ca. 200,000 to 100,000 BC: beginnings of the Tamil language
50,000 BC: Kumari Kandam civilisation
20,000 BC: A lost Tamil culture of the Easter Island which had an advanced civilisation
16,000 BC: Lemuria submerged
6087 BC: Second Tamil Sangam established by a Pandya king
3031 BC: A Chera prince in his wanderings in the Solomon Island saw wild sugarcane and started cultivation in Kumari Kandam.
1780 BC: The Third Tamil Sangam established by a Pandya king
7th century BC: Tolkappiyam (the earliest known extant Tamil grammar)
https://tamilvaralaru.wordpress.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.