Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொறுப்புக்கூறலில் விலகி நிற்க முடியாது! : குற்றவாளிகள் என்று சர்வதேசம் முத்திரை குத்திவிடும்!

Featured Replies

பொறுப்புக்கூறலில் விலகி நிற்க முடியாது! : குற்றவாளிகள் என்று சர்வதேசம் முத்திரை குத்திவிடும்!
 
 
பொறுப்புக்கூறலில் விலகி நிற்க முடியாது! : குற்றவாளிகள் என்று சர்வதேசம் முத்திரை குத்திவிடும்!
போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச தரப்பிடம் பொறுப்புக்கூற வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. பொறுப்புக்கூறலில் பின்னின்றால் சர்வதேசம் எம்மை ஒதுக்கி வைத்துவிடுவதுடன் குற்றவாளிகள் என்ற முத்திரையை பொறித்துவிடும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
 
போரில் பாதிக்கப்பட்ட, அங்கவீனமான படைவீரர் கள் மற்றும் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கும் வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் சேமநல மேம்பாட்டிற்காக விசேட சலுகைகள் வழங்கப்படும் ‘விருசர’ சிறப்புரிமை அட்டை வழங்கும் நிகழ்வு நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் முப்படைகளும், பொலிஸ் பிரிவினரும் ஒன்றிணைந்து பாதுகாப்பு படையினரின் நன்மையை கருத்தில்கொண்டு ‘விரிசர’ சிறப்புரிமை அட்டை வழங்க தீர்மானித்திருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.
 
குறிப்பாக உலகில் பல நாடுகளிலுள்ள பாதுகாப்பு படையினர் அழுத்தங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இலங்கையும் அவ்வாறான அனைத்து அழுத்தங்களுக்கும் முகங்கொடுத்து வந்துள்ளது.
 
விடுதலைப் புலிகளின் ஆக்கிரமிப்பு நாட்டில் பலமடைந்திருந்த நிலையில் எமது பாதுகாப்பு படையினர் 25 ஆண்டுகளாக பல தியாகங்களை செய்து போரை முடிவுக்கு கொண்டு வந்தனர். நாட்டில் மூவின மக்களையும் பாதுகாத்து நாட்டை பலப்படுத்தும் மிகப்பெரிய போராட்டத்தை எமது இராணுவம் மேற்கொண்டுள்ளது.
 
எமது நாட்டில் நடைபெற்ற இந்த மூன்று தசாப்த கால யுத்தம் நாட்டை முழுமையாக சீரழித்தது. அபிவிருத்தியை முழுமையாக வீழ்த்தியது, நாட்டில் மதங்களுக்கு இடையிலும், இனங்களுக்கு இடையிலும் முரண்பாடுகள் ஏற்பட ஆரம்பித்தது. எமது இராணுவம் பல பின்னடைவுகளை கண்டபோது இந்தியாவின் உதவியை கூட நாம் நாடினோம். ஆனால் அதிலும் எமக்கு நன்மை அளிக்கவில்லை.
 
அவ்வாறான நிலையில் மிக நீண்டகால போராட்டத்தில் பின்னர் எமது இராணுவத்தின் மூலமாக யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தோம். அதில் இருந்து திரும்பிப் பார்க்கும்போது இழப்புகள் பல கண்முன்னே தெரிந்தது. இந்த வெற்றியின் பின்னால் எமது இராணுவ வீரர்கள் செய்த தியாகம் எதையும் மறக்க முடியாது. அதேபோல் எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவத்தை கைவிடவும் முடியாது.
 
புதிய அரசு என்ற ரீதியில் புதிய பாதுகாப்பு திட்டம் ஒன்றை உருவாக வேண்டும். எமது பாதுகாப்பு படையினரின் பலத்தையும், சலுகைகளையும் உறுதிப்படுத்தி அதன் மூலமாக தேசிய பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். நாம் மீண்டும் நாட்டின் தேசிய பாதுகாப்பை சீரழிக்க இடமளிக்க முடியாது.
 
அதேபோல் இந்த நாட்டில் யுத்தம் ஏன் ஏற்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த காரணங்களை கவனத்தில் கொண்டு மீண்டும் அவ்வாறான எந்த பாதிப்பும் வராத வகையில் செயற்பட வேண்டும்.
 
நல்லிணக்க செயற்பாடுகளை இன்று சிலர் கேலிக்கு உட்படுத்துகின்றனர். சிலர் கடுமையாக விமர்சிக்கின்றனர். சிலர் இரத்தம் பற்றி கதைக்கின்றனர். யாராக இருந்தாலும் எந்த இனமாக, மதமாக இருந்தாலும் அனைவருக்கும் இருப்பது ஒரே இரத்தம்தான். இரத்தத்தில் மதமோ, இனமோ இல்லை.
 
குறிப்பாக நாட்டில் யுத்தம் நடந்தால் அது ஏன் என்ற காரணத்தை கண்டறிந்து மீண்டும் யுத்தம் ஒன்று ஏற்படாது தடுப்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். இந்த நாட்டில் கல்லினாலும், மண்ணினாலும், இரும்புக் கம்பிககளினாலும் நல்லிணக்கம் என்ற விடயத்தை கட்டியெழுப்ப முடியாது.
 
மூவின மக்களும் ஒன்றிணைந்து நாட்டின் நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டியது அனைவரதும் கடமையாகும். அதேபோல் அனைவரையும் ஒன்றிணைப்பது அரசாங்கத்தின் கடமையாகும். நல்லிணக்கத்தை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஏற்படுத்தும்போது அதை தடுக்க அனைத்து தரப்பிலும் இனவாதக் கருத்துகள் எழும். நாட்டை குழப்ப சிலர் முயற்சிப்பார்கள். ஆனால் அதையும் தாண்டி நாட்டின் நல்லிணக்கத்தை பலப்படுத்த வேண்டும்.
 
மேலும் எமக்கு எதிராக பல குற்றங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இராணுவத்தை தண்டிக்கப் போவதாகவும், புலனாய்வு பிரிவை காட்டிக்கொடுக்கப் போவதாகவும், நாட்டை பிரிக்க போவதாகவும் சர்வதேச தரப்பின் மூலமாக நாட்டின் சுயாதீன தன்மையை அழிக்கப் போவதாகவும் பல குற்றங்கள் முன்வைக்கின்றனர்.
ஆனால் நாட்டின் தலைவர் என்ற வகையில் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நான் நிராகரிக்கின்றேன்.
 
கடந்த கால ஆட்சியின் போதும் ஆட்சி மாற்றத்தின் போதும் அரசாங்கம் என்ற வகையில் சர்வதேச தரப்பின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை எமக்கு உள்ளது. நாடு என்ற ரீதியில் தனியாக வாழ முடியாது.
 
இன்றைய காலகட்டத்தில் அனைத்து நாடுகளின் ஒத்துழைப்புடன் தான் முன்செல்ல வேண்டும். அதேபோல் நாட்டில் வாழும் அனைத்து மக்களையும் இன, மத பேதம் இன்றி அனைவரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது.
 
நாட்டுக்கு உள்ளும் சர்வதேச மடத்திலும் கடந்த முன்னைய அரசாங்கத்திற்கும் எமக்கும் எதிராக எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்க வேண்டிய தேவை உள்ளது. அவ்வாறு பதிலளிக்காது புறக்கணித்து செல்ல முடியாது. அவ்வாறு புறக்கணித்து சென்றால் சர்வதேச மட்டத்தில் எம்மை ஒதுக்கி வைத்துவிடுவார்கள்.
 
நாட்டினுள் எழுந்துள்ள குழப்பங்களை, மக்களின் கோரிக்கைகளை தீர்க்க முடியாது. எமது பாதுகாப்பு தரப்பின் மீது சுமத்தியுள்ள குற்றசாட்டுகளை பொய்யென நிருபிக்க முடியாது. ஐக்கிய நாடுகளின் அங்கீகாரத்தை எம்மால் பெறமுடியாது.
 
இந்த நாட்டில் யுத்தத்தின் போது நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உள்ளது. அவை தொடர்பில் உண்மைகளை கண்டறியக் கோரி அழுத்தங்கள் எழுந்துள்ளது. அந்த குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தக் கோரி அழுத்தம் எழுந்துள்ளது. ஆனால் இந்த விசாரணைகளின் மூலம் உண்மைகளை கண்டறிவது மட்டுமே அடிப்படை நோக்கமே தவிர எந்த காரணம் கொண்டும் எமது இராணுவத்தை தண்டிப்பது அல்ல நோக்கம்.
 
பொதுமக்களுக்கு நாம் பொறுப்புக்கூறும் வகையில் தான் இந்த விசாரணையை செய்ய வேண்டியுள்ளது. அவ்வாறு இல்லாது நாம் பின்வாங்கினால் சர்வதேசமும் நாட்டு மக்களும் எம்மை குற்றவாளிகளாக பார்க்கும் நிலைமை ஏற்பட்டுவிடும். அதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்க முடியாது.
 
சர்வதேச ஒத்துழைப்பை, சர்வதேச உதவிகளை தட்டிக்கழிக்க முடியாது. இன்று எமக்கு எதிராக குரல் எழுப்பும் நபர்களின் கதைகளை கேட்டு ஐக்கிய நாடுகளின் உறுப்புரிமையில் இருந்து வெளியேறவோ, சர்வதேச மட்டத்தில் எமக்கு இருக்கும் ஒத்துழைப்பில் இருந்து நீக்கவோ எம்மால் முடியாது.
 
எனது பதவிக்காலம் முடியும் முன்னர் இந்த நாட்டுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களில் இருந்து முழுமையாக இந்த நாட்டை விடுவித்து நாட்டில் நல்லிணக்கத்தை முழுமையாக பலப்படுத்தியே செல்வேன் என வாக்குறுதியளிக்கின்றேன். பழிவாங்கும் நோக்கத்தில் என்னால் செயற்பட முடியாது. உண்மையில் இந்த நாட்டில் ஏன் யுத்தம் இன்று ஏற்பட்டது என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும். அதை விளங்கிக்கொண்டு செயற்பட வேண்டும்.
 
அதேபோல் இந்த நாட்டு மக்கள் எம்மை நம்பி எமக்கு மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளனர். அந்த பொறுப்புகளை சரியாக செய்ய வேண்டும். நானும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் மிகவும் முக்கிய பொறுப்புகளை நிறைவேற்றும் பயணத்தில் விரைந்து பயணித்து செல்கின்றோம். எமக்கு எதிராக எழும் அச்சுறுத்தல்களை கண்டு நாம் அஞ்சப்போவதில்லை. நாம் அச்சத்தில் பின்வாங்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

ஆக சர்வதேச அழுத்தம் ஒன்று தான் இவரை இப்படிப் பேச வைக்குது.

உண்மையாக மானுடத்துக்கு எதிரான குற்றம் புரிந்த சிங்கள முப்படைகளையும் தண்டிக்கனும்.. அதன் உதிரிகளை தண்டிக்கனும்.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மை நீதி கிடைக்கனும் என்ற எண்ணம் துளி அளவும் இல்லை. இதில இன நல்லிணக்கம் குறித்தும் பேசினமாம்.

சிங்களவர்களிடம் உண்மையைப் பேசாமல்.. பாதுகாப்பம் என்று சொல்லி செல்லும் இவர் எப்படி புரியப்பட்ட மானுடத்திற்கு எதிரான குற்றங்களுக்கு குற்றவாளிகளை தண்டித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும்.. உரிமையும் வழங்குவார் என்று எதிர்பார்ப்பது....??!

ஆனால் எம்மில் சிலர் உவர் சூப்பர்.. வல்லவர்.. என்று இவரைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் உருவாக்கி வருகிறார்கள். அந்த மாயை வட்டம் கலையும் நாள் வெகுதொலைவில் இல்லைப் போலும். :rolleyes:tw_angry:

புலம்பெயர் தமிழ் மக்கள் முன்னெடுத்த முன்னெடுக்கும்.. சிங்கள ஆட்சியாளர்களையும் அதன் இராணுவ இயந்திரத்தையும் தண்டிக்கக் கோரும் சர்வதேச விசாரணை ஒன்றும்.. ஐநா மத்தியஸ்த்தில் அமையும் தமிழ் மக்களிடம் விருப்புக் கேட்கும் வாக்களிப்புமே தீர்வுக்களுக்கான முன்னோடிகளாக முடியும். இதையே இவரது பேச்சு தெளிவாக்கி நிற்கிறது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவாவது சிலருக்கு புரியட்டும்

ஐநாவிலும் வீதிகளிலும் புலம் பெயர் சமூகம் என்ன செய்கிறது?

ஏன் செய்கிறது என்று..

 

சிரித்து குடல் அறுந்து போச்சு ,

ஆயிரம் தடவைகள் திருப்ப திருப்ப எழுதியாச்சு ,

சிங்களவன் தீர்வு தருவான் என்ற நம்பிக்கையில் தீர்வு வரும் என்று ஒரு போதும் எழுதவில்லை  யுத்தம் முடிந்த பின்  இலங்கை பற்றிய சர்வதேச நிலைப்பாடு அப்படி ,

இலங்கையில் தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை தொடர்ந்து சர்வதேசம் சந்தித்து வருவது அதற்காககத்தான் .

இதற்குள் புலம் பெயர் சமூகத்தை இழுத்து மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு வேணுமென்றால் சுயஇன்பம் காணலாம் .

போராட்டம் நடக்கும் போதுதான்  என்ன நடக்குன்றது என்று தெரியாது என்று பார்த்தால் இப்பவும் என்ன நடக்கின்றது என்று தெரியாமல் இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசம் மனிதாபிமானம் உடையது

அதை தட்டி எழுப்பாது 

தானாக ஓடிவந்து உதவுது...

நம்பிட்டம்

சிரிக்கக்கூட முடியல..

எவ்வளவு பேருடைய உழைப்புக்கள்

எவ்வளவு நேரங்கள்

எவ்வளவு பணம்...

எல்லாம் தேவையற்றது....

21 hours ago, விசுகு said:

இப்பவாவது சிலருக்கு புரியட்டும்

ஐநாவிலும் வீதிகளிலும் புலம் பெயர் சமூகம் என்ன செய்கிறது?

ஏன் செய்கிறது என்று..

 

அப்ப ஐநா தீர்மானத்தை எரித்தது எதுக்குள் அடங்கும் ?

1 hour ago, Gari said:

அப்ப ஐநா தீர்மானத்தை எரித்தது எதுக்குள் அடங்கும் ?

நாட்டில் என்ன நடக்குது என்றே தெரியாது ஆனால் எல்லாம் தாங்கள் செய்ததாக இருக்கவேண்டும்.

உங்கள் ஆசையை ஏன் கெடுப்பான் கொடி பிடிச்சுத்தான் இப்ப தீர்வு வருது .

ஐ நா தீர்மானம் -அதை வாசித்து விளங்கும் அறிவு இருந்தால் ஏன் இந்த பிரச்சனை எல்லாம் வருது .

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, arjun said:

சிரித்து குடல் அறுந்து போச்சு ,

ஆயிரம் தடவைகள் திருப்ப திருப்ப எழுதியாச்சு ,

சிங்களவன் தீர்வு தருவான் என்ற நம்பிக்கையில் தீர்வு வரும் என்று ஒரு போதும் எழுதவில்லை  யுத்தம் முடிந்த பின்  இலங்கை பற்றிய சர்வதேச நிலைப்பாடு அப்படி ,

இலங்கையில் தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை தொடர்ந்து சர்வதேசம் சந்தித்து வருவது அதற்காககத்தான் .

இதற்குள் புலம் பெயர் சமூகத்தை இழுத்து மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு வேணுமென்றால் சுயஇன்பம் காணலாம் .

போராட்டம் நடக்கும் போதுதான்  என்ன நடக்குன்றது என்று தெரியாது என்று பார்த்தால் இப்பவும் என்ன நடக்கின்றது என்று தெரியாமல் இருக்கு .

சர்வதேசம் அப்படி ஒரு நிலைப்பாட்டிற்கு வருவதற்கு என்ன காரணம். இலங்கையில் நடந்த இனவழிப்பு மற்றும் யுத்த மீறல்களை அவர்களிடம் கொண்டுபோய் சேர்த்தது யார். அதையும் சம்சும்தான் செய்தார்கள் என்று கூறும் அறிவிலிகளும் எம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அப்ப திட்டமிட்டுத்தான் புலிகள் இன அழிப்பிற்கு வழி கோலினார்களா ?  புலிகளையே கேவலப்படுத்தும் கருத்து இது ஆனால் வழியில்லாமல் தாங்கள் தப்ப மக்களுக்குள் ஒழிந்து மக்களை பலி கொடுத்தது உண்மை .

இன்றும் ஒரு அறிக்கை வந்திருக்கு வாசிக்கவும் .

இந்திராகாந்தி இருக்கும் போதே இலங்கையில் அரசியல் தீர்வு விடயம் சர்வதேசத்திற்கு போய்விட்டது முப்பது வருடங்கள் அதை குழப்பியவர்கள் யார் என்று நான் எழுத தேவையில்லலை .

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, arjun said:

அப்ப திட்டமிட்டுத்தான் புலிகள் இன அழிப்பிற்கு வழி கோலினார்களா ?  புலிகளையே கேவலப்படுத்தும் கருத்து இது ஆனால் வழியில்லாமல் தாங்கள் தப்ப மக்களுக்குள் ஒழிந்து மக்களை பலி கொடுத்தது உண்மை .

இன்றும் ஒரு அறிக்கை வந்திருக்கு வாசிக்கவும் .

இந்திராகாந்தி இருக்கும் போதே இலங்கையில் அரசியல் தீர்வு விடயம் சர்வதேசத்திற்கு போய்விட்டது முப்பது வருடங்கள் அதை குழப்பியவர்கள் யார் என்று நான் எழுத தேவையில்லலை .

 

அண்ணைக்கு அதுக்கு 40 வருஷம் முன்னமே பிரிடிஸ் சர்வதேசம் தீர்வு கொடுத்த விடயம் தெரியாது போல ...

பிரதேச ஆளுமை போட்டி என்பது 
1600 இல் மனிதன் கப்பல் கட்டி பயணம் தொடங்கியதில் இருந்துதான் நடக்குது.

இலங்கைக்கு 

1700இலேயே போர்துகிசர் தீர்வு தந்தார்கள் 

ஏன் இடையிலேயே இருந்து தொடங்கிறார் என்றுதான் புரியல்லை ......

இதில இந்திரா காந்தி சோவியத்துடன் கைகோர்த்துக்கொண்டு 
இலங்கையை அமெரிக்க சார்பா விழுத்தின தீர்வுதான் 
மகா தீர்வு ?? 

2 hours ago, arjun said:

 

 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, arjun said:

 

இந்திராகாந்தி இருக்கும் போதே இலங்கையில் அரசியல் தீர்வு விடயம் சர்வதேசத்திற்கு போய்விட்டது முப்பது வருடங்கள் அதை குழப்பியவர்கள் யார் என்று நான் எழுத தேவையில்லலை .

 

சர்வதேசம் தீர்வு வழங்ககூடாது....சகல தீர்வும் தங்கள் மூலம் வழங்கப்பட வேண்டும் என அடம் பிடித்தவர்களும் இந்தியாதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.