Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி

Featured Replies

 

        யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி

  http://www.apnaopinionbol.com/uploads/uploads/Capture_jpgAA_.jpg

 

2016 ஆம் ஆண்டு 20க்கு 20 ஒவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர்  இந்தியாவில் நடைபெற உள்ளது. 

இம்முறை, பிரிவு-1-ல் கடந்த டி20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் செம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணி, தென் ஆப்பிரிக்கஅணி, மே.இ.தீவுகள் அணி,  இங்கிலாந்துஅணி ஆகியவற்றுடன் தகுதிச் சுற்றிலிருந்து தகுதி பெறும் மற்றொரு அணியும்,

பிரிவு-2-ல் இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய அணிகளும் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வென்று தகுதி பெறும் ஒரு அணிஉட்பட மொத்தமாக 10 அணிகள் மோதவுள்ளன.

மார்ச் 8 முதல் ஏப்ரல் 3 வரை போட்டிகள் இடம் பெறும்.

பெங்களூரு, தரம்சலா, கொல்கத்தா, மொஹாலி, மும்பை, நாக்பூர், மற்றும் புதுடெல்லி ஆகிய மைதானங்களில் நடைபெறுகிறது.

தகுதிச் சுற்றில் மோதும் அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன:

 பிரிவு ஏ: பங்களதேஷ், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன்

பிரிவு பி: சிம்பாவே, ஸ்கொட்லாந்து, ஹொங்கொங், ஆப்கானிஸ்தான் 

தகுதிச் சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் மார்ச் 8-ம் திகதி முதல் 13-ம் திகதி வரை தரம்சலா மற்றும் நாக்பூர் மைதானங்களில் நடைபெறுகின்றன. 

தகுதிச் சுற்றுகளில் ஏ-பிரிவிலிருந்து தகுதி பெறும் அணியானது  இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ள பிரிவு 2-இலும், பி-பிரிவிலிருந்து தகுதி பெறும் அணி பிரிவு 1 இன் அணிகளான இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள், இங்கிலாந்து ஆகியவற்றுடன் இணையும். 

எனவே தகுதிச் சுற்றுப் போட்டிகளுடன் மார்ச் 8-ம் தேதி தொடங்கும் இந்தத் தொடர் ஏப்ரல் 3-ம் தேதி வரை தொடர்கிறது. மொத்தமாக 35 போட்டிகள் பெங்களூரு, சென்னை, தரம்சலா, கொல்கத்தா, மொஹாலி, மும்பை, நாக்பூர், மற்றும் புதுடெல்லி ஆகிய மைதானங்களில் நடைபெறுகிறது.

மார்ச் 30 மற்றும் 31-ம் தேதிகளில் நடைபெறும் அரையிறுதிப் போட்டிகள் முறையே புதுடெல்லி மற்றும் மும்பையில் நடைபெற, மார்ச் 3-ம் தேதி இறுதிப் போட்டி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

http://www.pradhanmantriyojana.in/wp-content/uploads/2015/12/Second-Round-Super-10-group-ICC-WC-2016-Fixture-Download.jpg                                       

 

12369215_936041259776401_812038472666816                                                

 

 

                                                       

 

நீங்கள் செய்ய வேண்டியது தகுதிச் சுற்றில் விளையாடும் அணிகளில் பிரிவு A இல் எந்த அணி பிரிவு B இல் எந்த அணி வெற்றி பெறும் என்று கணித்து முதல் 2 கேள்விகளுகளுக்கு பதில் தரவேணும்.

1. பிரிவு A இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 2 இல் இணையும்? (10 புள்ளிகள்)

 

2. பிரிவு B இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 1 இல் இணையும்? (10 புள்ளிகள்)

 

(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2 புள்ளிகள் மொத்தம் 40புள்ளிகள்)

3  இந்தியா எதிர் நியூசீலாந்து

4. மேற்கு இந்தியதீவுகள் எதிர் இங்கிலாந்து

5. பாகிஸ்தான் எதிர் Q1A

6. ஸ்ரீலங்கா எதிர் Q1B

7. அவுஸ்திரேலியா எதிர் நியூசீலாந்து

8. தென்ஆப்ரிக்கா எதிர் இங்கிலாந்து

9. பாகிஸ்தான் எதிர் இந்தியா

10. தென்ஆப்ரிக்கா எதிர் Q1B

11. ஸ்ரீலங்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள்

12. அவுஸ்திரேலியா எதிர் Q1A

13.பாகிஸ்தான் எதிர் நியூசீலாந்து

14. இங்கிலாந்து எதிர் Q1B

15. இந்தியா எதிர் Q1A

16. பாகிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா

17. தென்ஆப்ரிக்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள்

18. நியூசீலாந்து எதிர் Q1A

19. இங்கிலாந்து எதிர் ஸ்ரீலங்கா

20. இந்தியா எதிர் அவுஸ்திரேலியா

21. மேற்கு இந்தியதீவுகள் எதிர் Q1B

22. தென்ஆப்ரிக்கா எதிர் ஸ்ரீலங்கா

 

23)  அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 2 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 8 புள்ளிகள்)

24)  இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் நாடுகள் 2 ம் எவை?

(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 3 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 6 புள்ளிகள்)

25) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

26) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் சிறந்த் பந்து வீசுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

27) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

28) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

29) இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

30) இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

31) இத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

32) இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

 

போட்டி விதிகள்

1) போட்டி முடிவு திகதி 07.03.2016  ஐரோப்பிய நேரம் நள்ளிரவு 12 மணி.         (தகுதிச் சுற்றுப் போட்டிகள் தொடங்க முதல் பதில்கள் தரவேணும்)                            

2) ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

3) பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

4) ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

  • Replies 405
  • Views 25k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணை களத்துக்கு வரவும்:grin::grin:

  • கருத்துக்கள உறவுகள்

வந்துட்டன்....!

மரப் பொந்தில வைச்ச மூளையை எடுத்துத் துடைச்சுப் பொருத்தி யோசித்துக் களத்தில குதிப்பம் நந்தன்....!

  • தொடங்கியவர்
1 minute ago, suvy said:

வந்துட்டன்....!

மரப் பொந்தில வைச்ச மூளையை எடுத்துத் துடைச்சுப் பொருத்தி யோசித்துக் களத்தில குதிப்பம் நந்தன்....!

பொறுமை பொறுமை :grin:

அடுத்த சில வாரங்களுக்கு பல T 20 போட்டிகள் நடைபெற உள்ளது.

இலங்கை எதிர் இந்தியா

ஆசியகோப்பை போட்டிகள்

இதை எல்லாம் பார்த்து அலசி ஆராய்ந்து பதில் எழுதுங்கோ..:)

 

  • கருத்துக்கள உறவுகள்

குதியுங்கோ,நீங்க குதிச்சாத்தான் எங்களுக்கும் வாழ்வு வரும்

இங்கு கொஞ்சம் காசையும் சேர்த்து (உதாரணமாக பதிலளிப்பவர்கள் us$10 செலுத்த வேண்டும்)  வெல்பவர் பெயரில் ஒரு சிறுவன்/சிறுமிக்கு படிப்பிற்கு உதவலாமே.

நான் சபை குழப்பிதான். இருந்தாலும் ஒரு நப்பாசை.

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

 

ஆகா.. ஆகா... யாழ்கள சம்பியன் சுவி அண்ணர் களத்தில்.....:cool:

இசையை இன்னும் காணேலை இங்கால் பக்கம்! :)

 

  • தொடங்கியவர்
23 hours ago, நந்தன் said:

சுவி அண்ணை களத்துக்கு வரவும்:grin::grin:

 

22 hours ago, நந்தன் said:

குதியுங்கோ,நீங்க குதிச்சாத்தான் எங்களுக்கும் வாழ்வு வரும்

இந்த முறை உங்கள் சொந்த முயற்சியில் பதிலை கொடுத்து பாருங்கோ..<_< யாருக்கு தெரியும் அதிஸ்டம் இருக்கும்..:)

22 hours ago, suvy said:

வந்துட்டன்....!

மரப் பொந்தில வைச்ச மூளையை எடுத்துத் துடைச்சுப் பொருத்தி யோசித்துக் களத்தில குதிப்பம் நந்தன்....!

சுவி அண்ணா இந்தமுறை சாதித்து காட்டவேணும்..:) எல்லோருக்கும் பகிடியாக போய்விட்டது.

22 hours ago, ஜீவன் சிவா said:

இங்கு கொஞ்சம் காசையும் சேர்த்து (உதாரணமாக பதிலளிப்பவர்கள் us$10 செலுத்த வேண்டும்)  வெல்பவர் பெயரில் ஒரு சிறுவன்/சிறுமிக்கு படிப்பிற்கு உதவலாமே.

நான் சபை குழப்பிதான். இருந்தாலும் ஒரு நப்பாசை.

நல்ல யோசனைதான் ஜீவன்... ஆனால் நடைமுறைக்கு கடினம்.

அத்தோடு காசு சமந்தப்பட்ட விடயத்தில் நான் தலையிட விரும்பவில்லை.. மன்னிக்கவும்

 

 

21 hours ago, மீனா said:

ஆகா.. ஆகா... யாழ்கள சம்பியன் சுவி அண்ணர் களத்தில்.....:cool:

இசையை இன்னும் காணேலை இங்கால் பக்கம்! :)

 

அவர் ரொம்ப பிஸி பிரசாரத்தில்..tw_yum:

எனது தெரிவு - அதாவது பதில்கள் நிச்சயமாக இங்கு தகுதி அடிப்படையில் இருக்காது - எனது விருப்பு அடிப்படையிலும் இருக்கும். அதற்காக இந்தியா முதற்சுற்றிலேயே வெளியேற வேண்டுமென்ற ஆசை இருந்தாலும் அது பதிலாக இருக்காது - யதார்த்தம் என்று ஒன்று இருக்கே. 

ஆனாலும் வெற்றி எனக்கே.:D:

  • கருத்துக்கள உறவுகள்

நவீனன் நானும் கலந்து கொள்வேன்

  • தொடங்கியவர்
9 hours ago, ஈழப்பிரியன் said:

நவீனன் நானும் கலந்து கொள்வேன்

என்ன கதை இது..:) நீங்கள் இல்லாமலா... சரி வாங்கோ பதில்களோடு

  • தொடங்கியவர்
21 hours ago, ஜீவன் சிவா said:

எனது தெரிவு - அதாவது பதில்கள் நிச்சயமாக இங்கு தகுதி அடிப்படையில் இருக்காது - எனது விருப்பு அடிப்படையிலும் இருக்கும். அதற்காக இந்தியா முதற்சுற்றிலேயே வெளியேற வேண்டுமென்ற ஆசை இருந்தாலும் அது பதிலாக இருக்காது - யதார்த்தம் என்று ஒன்று இருக்கே. 

ஆனாலும் வெற்றி எனக்கே.:D:

ஜீவன் இந்த இந்திய இலங்கை போட்டி முடிய பதில் உங்களுக்கு எழுதுவம் என்று யோசித்தேன்.

நீங்கள் எந்த அடிப்படையில் பதில் தருகிறீர்கள் என்பது உங்கள் முடிவு..:rolleyes:

நீங்கள் ஹாங்காங் அணிதான் உலக கிண்ணத்தை வெல்ல போகுது என்றும் பதில் தரலாம்.<_<

வெற்றி உங்களுக்கு என்பதுதான் எங்கேயோ உதைக்குது..:grin:பதிலே இன்னும் தராமல்

 

 

அதைவிட யாழ் களத்தில் உள்ள  மகளிர்  தமிழினி, யாழ்கவி, குறைத்து மதிப்பிட முடியாது. கடந்த காலங்களில் முதல் இடங்களை வென்றவர்கள்.

இவர்களை விட ஆர்வமாக போட்டியில் பங்கு கொள்ளும் ரதி, செவ்வந்தி, kalyani,

மேலும் மிக ஆர்வகமாக அதுவும் இளம் ஆப்கானிஸ்தான் அணி சாதிக்கும் என்று நம்பும் பையன்26 இந்த போட்டியில் கலந்து கொள்ளவேணும் என்பது என் விருப்பம்..:) கனகாலம் இங்கு அவரை நான் காணவில்லை.

நான் இங்கு  எல்லோரது பெயரும்  குறிப்பிடவில்லை என்றாலும் எல்லோரும் பங்கு பெற வேணும் என்பதே விருப்பம்..பல காலங்களுக்கு பிறகு கவிதையோடு வருகைதந்து இருக்கும் ராஜன்விஷ்வா.<_< உட்பட

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வருவேன். எனதும் பதில்களும் ஜீவனது பதில்கள் போல எனது விருப்பு அடிப்படையில் தான் இருக்கும்

  • தொடங்கியவர்
On 13.2.2016 at 11:52 PM, ரதி said:

நானும் வருவேன். எனதும் பதில்களும் ஜீவனது பதில்கள் போல எனது விருப்பு அடிப்படையில் தான் இருக்கும்

தாராளமாக உங்கள் விருப்பு பதில்களை தரலாம்..:)

 

இந்த உலக கிண்ண தொடரில் பாகிஸ்தான் கலந்து கொள்ளுமா என்பது இன்னும் முடிவாகவில்லை. அவர்களது அரசியல் இழுபறியில் கிரிக்கெட் சிக்குண்டுபோய் இருக்கு.:rolleyes:  ஆசியகோப்பை போட்டிகள் முடிவுகளையும் அவதானித்து பதில்களை தரலாம்.

  • தொடங்கியவர்

ஆசிய கிண்ண ரி-20 போட்டிகளின் தகுதி சுற்றில், 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு இராட்சிய (UAE) அணியிடம், ஆப்கானிஸ்தான் அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது.

1 ம் 2ம் கேள்விக்கு பதில் தெரிவு செய்ய இந்த போட்டி முடிவுகள் சிறிது உதவியாக இருக்கும்..:)

  • தொடங்கியவர்

ஆசிய கிண்ண ரி-20 போட்டிகளின் தகுதி சுற்றில் மீண்டும் ஐக்கிய அரபு இராட்சிய (UAE) அணி வெற்றி.

Hong Kong 146/7 (20/20 ov)
United Arab Emirates 147/4 (18.3/20 ov)
 
1 ம் 2ம் கேள்விக்கு பதில் தெரிவு செய்ய இந்த போட்டி முடிவுகள் சிறிது உதவியாக இருக்கும்..:)
  • தொடங்கியவர்

ஆசிய கிண்ண ரி-20 போட்டிகளின் தகுதி சுற்றில் இன்று ஆப்கானிஸ்தான் அணி வெற்றி.

ஆப்கானிஸ்தான்  178/7 (20/20 ov)
ஹொங் கொங்    112 (17.1/20 ov)
 
ஆப்கானிஸ்தான் அணி  66 ஓட்டங்களால் வெற்றி
 
 
இன்னுமொரு தகுதி சுற்று போட்டியில் ஐக்கிய அரபு இராட்சிய (UAE) அணி வெற்றி.
 
ஐக்கிய அரபு இராட்சியம்   172/6 (20/20 ov)
ஓமான்    101/8 (20/20 ov)
ஐக்கிய அரபு இராட்சியம்   71 ஓட்டங்களால் வெற்றி
 
 
 
1 ம் 2ம் கேள்விக்கு பதில் தெரிவு செய்ய இந்த போட்டி முடிவுகள் சிறிது உதவியாக இருக்கும்..:)
  • தொடங்கியவர்

சரி இனி  களத்தில் இறங்க தயார் ஆகுங்கோ..<_<

ஒவ்வருவராக பெயர் சொல்லி கூப்பிட தேவை இல்லைதானே..:)

  • கருத்துக்கள உறவுகள்

நவீனன் நானும் கலந்து கொள்வேன்

  • கருத்துக்கள உறவுகள்

நவீனன் கேள்வி 23 இல் இரண்டு உள்ளது

  • தொடங்கியவர்
9 hours ago, Ahasthiyan said:

நவீனன் நானும் கலந்து கொள்வேன்

சந்தோசம்,  பதில்களுடன் வாருங்கள்..:)

8 hours ago, Ahasthiyan said:

நவீனன் கேள்வி 23 இல் இரண்டு உள்ளது

மிகவும் நன்றி அகஸ்தியன். எனது பிழை அது. நீங்கள் சுட்டி காட்டிய தவறு நிர்வகாத்தால் திருத்தபட்டுள்ளது.

நீங்கள் கவனிக்காத இன்னுமொரு தவறும் இருக்கிறது.  11வது கேள்வி  12 என்று உள்ளது. தொடர்ந்தும் நிர்வாகத்தை தொல்லை தருவது சரியல்ல..:)

ஆதலால் பதில் தருபவவர்கள் அதை கவனத்தில் எடுக்கவும் தயவு செய்து.

On 09/02/2016 at 11:28 PM, நவீனன் said:

வெற்றி உங்களுக்கு என்பதுதான் எங்கேயோ உதைக்குது..:grin:பதிலே இன்னும் தராமல்

இப்படி நீங்கள் விட்ட பிழைகளைத் திருத்தலாமெண்டால் நாங்களும் எங்கள் பதிலில் பிழையிருந்தால் திருத்துவோமே!:grin:

  • தொடங்கியவர்
2 minutes ago, ஜீவன் சிவா said:

இப்படி நீங்கள் விட்ட பிழைகளைத் திருத்தலாமெண்டால் நாங்களும் எங்கள் பதிலில் பிழையிருந்தால் திருத்துவோமே!:grin:

இப்ப எல்லாம் பதிவு போட்டவரே ஒரு நாளின் பின் எடிட் செய்யமுடியாது...<_<

3) பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார். ...:grin: இது முடிந்த முடிவு யாராக இருந்தாலும்

கேள்வி இலக்கங்கள் சரிசெய்யப்பட்டுள்ளன.

இனி போட்டியில் குதிக்க ஆர்வமுள்ளவர்கள் குதியுங்கோ. வெற்றிபெற வாழ்த்துகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.