Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரன் அணி ஜங்கரநேசனை சீண்டிப் பார்க்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் அணி ஜங்கரநேசனை சீண்டிப் பார்க்கிறது

- ஈழநாட்டுக்காரன்

 

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%

 

மௌனத்தைவிட அதிகாரத்தை பலப்படுத்த வேறெதுவும் இல்லை என்று தமிழ்நாடு சினிமா இயக்குநர் இ.மணிமேகலை சொன்னார். இப்பொழுது இது ஜங்கரநேசனுக்குப் பொருந்தும்.

வடமாகாண சபை அமர்வில் விவசாய அமைச்சர் ஜங்கரநேசனுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை சுமந்திரன் அணி தெரிவித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் விவசாய அமைச்சால் செய்யப்பட்ட வேலைத் திட்டங்கள் சம்பந்தமானது. அதாவது கடந்த இரு ஆண்டுகளில் விவசாய அமைச்சுக்கு ஒதுக்கிய நிதியை முழுமையாக மக்களுக்காக செலவு செய்துவிட்டார் என்பதனால் அந்த வேலைத் திட்டங்களில் குறை கண்டுள்ளனர்.

இந்தக் குறைகண்டு பிடிப்புக்கு பல காரணங்கள் இருக்கிறது. அதாவது முக்கியமான காரணமாக முதலமைச்சருக்கு சார்பாக ஜங்கரநேசன் இயங்கி வருகின்றமை ஆகும். முதலமைச்சரை இல்லாமல் செய்து அந்தப் பதவியை எடுத்து விடவேண்டும் என்று வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கங்கணம் கட்டிநிற்கிறார். வடமாகாண சபை உறுப்பினர் லிங்கநாதன் எப்படியாவது விவசாய அமைச்சர் பதவியைதான் எடுத்து விடவேண்டும் என்றமுயற்சியில் இறங்கியுள்ளார். இவர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நம்பிக்கை அளித்துள்ளார்.

வடமாகாண அமர்வில் ஏனைய அமைச்சர்களுக்கு ஒதுக்கியநிதி என்னானது என்ற கணக்கு வழக்கு இதுவரை இல்லை. இதனை அமர்வில் முதலில் கேட்டிருக்க வேண்டும். அதனை பாராமுகமாக விட்டுவிட்டு மக்களுக்காக செலவு செய்த நிதியை ஏன் செலவு செய்தது என்ற மாதிரி ஜங்கரநேசனைக் கேட்க இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. விடுதலைப் புலிகள் அமைப்பு புளொட்டினை உள்ளே எடுத்ததில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்ததின் விளைவு இப்பொழுது லிங்கநாதனால் தெரிகிறது.

ஆமை புகுந்தவீடும் அமினா புகுந்த வீடும் உருப்படாது என்று சொல்வார்கள். அதேபோல் புளொட் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புகுந்துள்ளது.

முதலமைச்சரிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஆதரவு வழங்காத குற்றச்சாட்டுக்களின் கீழ் விவசாய அமைச்சரிற்கு எதிராக 11 குற்றச்சாட்டுக்களினை எழுப்பியுள்ள வடமாகாணசபையின் சுமந்திரன் அணி இது தொடர்பில் முதலமைச்சரினை விசாரணை செய்யவும் கோரியுள்ளது.

அண்மையில் இடம்பெற்றதமிழ் மக்கள் பேரவையின் உத்தேசஅரசியல் யாப்பு வெளியீட்டுநிகழ்வில் கலந்து கொள்ளக்கூடாதென முதலமைச்சரினை கோரும் கடிதமொன்றை தயாரிக்க வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா தலைமையில் கூடியபோது அதில் பங்கெடுக்க விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் மறுதலித்திருந்தார்.

அதேபோன்று மீன்பிடி அமைச்சரும் தனது போலியான கையெழுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் கண்டனம் வெளியிட்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாகவே விவசாயஅமைச்சரை பழிவாங்கும் நோக்கில் அவரிற்கு எதிராக சிவஞானம் சயந்தன், ஆனோல்ட் சுகிர்தன் மற்றும் அஸ்மின் உள்ளிட்டவர்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு விசாரணைகள் கோரப்பட்டுள்ளது. மக்களே வேதனைப்படும் வகையினில் மாகாணசபையின் போக்கு அமைந்திருந்தது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் பிறந்தநாளான 9ஆம் திகதி ஐங்கரநேசனை அமைச்சிலிருந்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து நீக்க முற்பட்டிருக்கிறது தமிழரசுக்கட்சி, வடக்குமாகாண சபையின் 45ஆவது அமர்வு நடைபெற்றிருந்த நிலையில் இரண்டு விடயங்கள் நீங்கலாக ஏனைய விடயங்கள் அனைத்தும் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனை குற்றம் சாட்டும் வகையிலேயே அமைந்திருந்தன.

மரம் நடுகை மாதத்தில் (கார்த்திகை) மரம் நட்டமை தொடக்கம் வைரமுத்துவை உழவர் விழாவுக்காக அழைத்தமை வரையில் குற்றச்சாட்டுக்களை அடுக்கி தீர்மானத்தை முன்மொழிந்தார் வன்னி மாவட்ட மாகாணசபை உறுப்பினர் லிங்கநாதன். இதனை அடுத்து மாகாணசபை உறுப்பினர்கள் ஆனோல்ட், சயந்தன், சுகிர்தன், இந்திரராஜா மற்றும் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

பொதுவான விடயத்தினை முன்வைப்பதாகத் தொடங்கிய விவாதம் எந்தக் கட்சியையும் சாராத ஐங்கரநேசனை மட்டும் நோக்கியதாக அமைந்த நிலையில் எதிர்ப்புக்கள் எதுவும் இல்லாத நிலையில் குறித்த அமைச்சுத் தொடர்பில் முதலமைச்சர் விசாரிக்க வேண்டும் என்ற பிரேரணை எதிர்ப்புக்கள் எதுவும் அற்ற நிலையில் நிறைவேறியிருக்கிறது.

விக்கினேஸ்வரனுக்கு எதிராக கையெழுத்திடாமை! தலைநகர் கொழும்பில் சுமந்திரன் பொப்பிமலர் அணிந்தபோது யாழ் கிட்டுபூங்காவில் கார்த்திகைப் பூ அணிந்து மரநடுகைமாதம் கடைப்பிடித்தமையால் சுமந்திரன் அணி ஜங்கரநேசன் மீது கடுப்hகி இருந்தனர்.

தமிழரசுக்கட்சி ஐங்கரநேசனுக்கு எதிராக அமர்வை திருப்பியிருந்ததற்கான காரணம் என்ன? என்று பார்த்தால் ஆரம்பத்திலிருந்தே சுமந்திரனின் அவுஸ்ரேலிய விஜயத்திலிருந்து சூடுபிடித்திருந்த முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு பலவழிகளில் முயற்சித்தும் இறுதியில் முதலமைச்சர் தன்நிலையை திடமாக உறுதிப்படுத்திய நிலையில் முதலமைச்சருக்கு மிகநெருக்கமாக செயற்பட்டு வருவதாக அறியப்பட்ட ஐங்கரநேசன் மீது கைவைப்பதன் ஊடாக முதலமைச்சரை தனிமைப்படுத்தும் ராஜதந்திரம் கையாளப்பட்டிருக்கின்றது.

முதலமைச்சர் மீதானநகர்வுகள் ஆரம்பமானதிலிருந்து முதலமைச்சரைவிட வெளியில் இருந்த முக்கியமான சில உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உறுதியாக இருந்திருக்கின்றனர் இந்த நிலைக்கு வலுச்சேர்க்கும் வகையில் உதயமானதமிழ் மக்கள் பேரவைமேலும் முதலமைச்சரை வலுப்படுத்தும் ஒரு ராஜதந்திரமாக அவதானிக்கப்பட்டுவந்திருந்தது.

இந்தநிலையில்தான் முதலமைச்சர் அண்மையில் தமிழ்மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டவரைபை முன்வைத்திருந்தார் அத்தோடு தொடர்ந்தும் உறுதியாக குரல் கொடுத்துவந்த முதல்வர் கூட்டமைப்பைவிட ஒருபடி மேலேபோய் ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரிடம் தன்னால் திரட்டப்பட்ட 4000 இற்கு மேற்பட்ட காணாமல் போனோரின் முறைப்பாடுகளை சாட்சியங்களுடன் சமர்ப்பித்திருந்தார். இது சுமந்திரன் தரப்பிற்கு கடும் கோபத்தை உண்டு பண்ணிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசைப் பற்றி நற்சான்றிதழை சம்பந்தன் தரப்பு ஐ.நா ஆணையாளருக்கு கொடுக்கும்போது வடக்குமுதல்வர் விடாப்பிடியாக இருப்பது அவர்களை சினங் கொள்ள வைத்திருக்கிறது.

சுமந்திரனுக்குபிறந்தநாள் பரிசுவழங்க முற்பட்டஉறுப்பினர்கள், ஏற்கனவே சம்பந்தனின் பிறந்தநாள் அன்று ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியை சேர்ந்த சிவமோகனை தமிழரசுக்கட்சிக்கு உள்வாங்கிய நிலையில் சுமந்திரனின் பிறந்தநாளில் முதலமைச்சரை நெருங்க முடியாத நிலையில் அடுத்த எதிரியாக தமிழரசுக ;கட்சியால் நோக்கப்பட்ட ஐங்கரநேசனை அமைச்சிலிருந்து பதவி விலக்கி முதலமைச்சரை தனிமைப்படுத்தி சுமந்திரனுக்கான பரிசைவழங்கும் திட்டத்துடன் தீர்மானத்தை கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன.

இதன் முதற்கட்டமாககடந்த 8.02.2016அன்றுதனியார் விடுதியொன்றில் கலந்துரையாடிய சுமந்திரன் தரப்பு ஏற்கனவே தமதுதரப்பான ஆனோல்ட்,சயந்தனின் நடவடிக்கைகள் வெற்றியளிக்காத நிலையில் புதிதாக ஒருவரைக் களமிறக்குவதாக அதற்கு புளொட்டினைச் சேர்ந்த ஏற்கனவேதான் குண்டகசாலையில் டிப்புளோமா கற்றதாக சொல்லிவரும் லிங்கநாதனை அணுகி அடுத்த விவசாய அமைச்சு தருவதாக உறுதியளிக்கப்பட்டு வரைபு தயாரிக்கப் பட்டிருக்கின்றது. முதல் நாள் இரவே முதலமைச்சரின் காதுக்கு எட்டிவிட்டதாக முதலமைச்சு வட்டாரங்களிலிருந்து அறிய வருகின்றது.

இது தொடர்பில் சில உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து அதேநாளில் ஐங்கரநேசனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான தீர்மானத்தடன் அது நின்று போனதாக தெரியவருகிறது. புளொட் மாகாணசபை உறுப்பினர் லிங்கநாதனுக்கு விவசாய அமைச்சு வழங்குவதாகசுமந்திரனால் வாக்குறுதி வழங்கப்பட்டதே அவர் தீர்மானத்தை முன்மொழியக்காரணம் என்றுசொல்லப்படுகிறது.

தமிழ்மக்கள் பேரவைக் கூட்டத்துக்குமுதலமைச்சர் கலந்துகொள்ளவேண்டாம் எனத் தெரிவித்து சேகரிக்கப்பட்ட கையெழுத்துவேட்டையில் ஐங்கரநேசன் கையெழுத்திடாமை, சுமந்திரன் பொப்பிமலர் அணிந்து கொழும்பு அரசுடன் இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தியவேளை ஐங்கரநேசன் கார்த்திகைப் பூ அணிந்து மாகாண அமைச்சர், உறுப்பினர்களுடன் கிட்டுபூங்காவில் நிகழ்வில் பங்கேற்றமை உட்பட்ட காரணங்களே இந்த நடவடிக்கைக்கு காரணம் என்று தமிழரசுக்கட்சி வட்டாரங்கள் தெரிவ்க்கினறன.

இந்தகார்த்திகைமலர் சூட்டிநடைபெற்றமலர்க் கண்காட்சி நிகழ்விற்கு சுமந்திரன் தரப்புமாகாணசபை உறுப்பினர்கள் பலர் கலந்துகொள்ளவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. உண்மையிலேயே எந்த அமைச்சரோ உறுப்பினரோ மோசடியில் ஈடுபட்டதாகவோ அல்லது வேறுதவறுகள் இருந்தால் அதனைதகுந்த ஆதாரத்தோடு சபையில் சமர்ப்பித்தோ அல்லது ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொண்டு வந்தோ இருக்கலாம் ஆனால் இன்றைய அமர்வில் அவைத்தலைவருடன் முதலமைச்சர் முரண்படும் வகையில் நிகழ்வு மோசமடைந்திருப்பது கவலைதருவதாக இருப்பதாக நோக்கர்கள் கருதுகின்றனர்.

 

http://www.nanilam.com/?p=8128

  • கருத்துக்கள உறவுகள்

1 ம் தரம்-------------அர்சுன்
2 ம் தரம்-------------அர்சுன்
3 ம் தரம்-------------அர்சுன்

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நவீனன் said:

 

நவீனன் தலையங்கம் வேறதானே

வுடுங்க சார்

  • கருத்துக்கள உறவுகள்

ஐங்கரநேசன் பனங்காட்டு நரி. இந்த கிழிஞ்ச பனையோலைகளின் சலசலப்புக்கு அஞ்ச வழியே இல்லை. tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
46 minutes ago, ஈழப்பிரியன் said:

1 ம் தரம்-------------அர்சுன்
2 ம் தரம்-------------அர்சுன்
3 ம் தரம்-------------அர்சுன்

மன்னிக்கவும்...தமிழ்மக்கள் விடுதலை/இனவிடுதலை/விடுதலைப்புலிகள்/இனப்படுகொலை என பல சொற்கள் இங்கே பாவிக்கப்படவில்லை. அப்படியான சொற்கள் இருந்தால் மட்டுமே தானியங்கி இயந்திரம் வேலை செய்யும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.:cool:
இப்படிக்கு
மிஸ்டர் வடலி

1 hour ago, ஈழப்பிரியன் said:

நவீனன் தலையங்கம் வேறதானே

வுடுங்க சார்

நான் அந்த இணைப்பை தந்தது அதில் மாகாணசபையில் நடந்த விவாதம் விளக்கமாக இருக்கு என்பதால்தான். .:)

நீங்கள் பிழையாக விளங்கி கொண்டீர்கள்.

Edited by நவீனன்

இப்பதான் பார்த்தேன் சுவை 

இவர்கள் எல்லோரையும் விட ஐங்கரநேசனை எனக்கு நன்கு தெரியும் .அப்பவே அவரில் வழக்கு இருக்கு .

பாவம் விட்டுவிடுவம் .

கட்டுரை எழுதியவரின் நோக்கம் புரியவில்லை சுமந்திரன் என்று தொடக்கி எங்கேயோ போகின்றார் .

 

இனி எதுவும் முடியாதவர்கள் இப்படித்தான் புலம்பிதள்ளுவார்கள் ,

நான் முன்னாள் என்றாலும் வடக்கில் சித்தர் பெற்ற வெற்றியும் கிழக்கில் வியாளேந்திரன் பெற்ற வெற்றியும் நினைத்து பார்க்கமுடியாதவை .புலிகள் அன்று சொன்னவற்றை கேட்கும் அளவிற்கு இன்று மக்கள் அங்கு இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்
Quote

நான் முன்னாள் என்றாலும் வடக்கில் சித்தர் பெற்ற வெற்றியும் கிழக்கில் வியாளேந்திரன் பெற்ற வெற்றியும் நினைத்து பார்க்கமுடியாதவை

 

 

சித்தர் புளட் கட்சியில் இருந்து கேளோ கேள் என கேட்டு மண் கவ்வியவர். கூட்டமைப்பில் இணைந்த பின் கூட்டமைப்பு கட்சிக்கு போட்ட வாக்குகள். பொய் எனில் சித்தரை சுயேச்சையாக கேட்டு வெல்ல சொல்லுங்கள் பார்க்கலாம். வியாளேந்திரனுக்கு  தனிப்பட்ட செல்வாக்கு தான் அவரது வாக்கு வங்கி. அவரே சொல்லி உள்ளார். தான் தமிழரசு கட்சியில்  போட்டியிட இருந்ததாகவும் இடம் இன்மையால் புளட்டில் போட்டி போட்டதாகவும் கூறி இருந்தார். வேணுமெனில்  audio இணைக்கலாம்.

6 hours ago, nunavilan said:

 

 

சித்தர் புளட் கட்சியில் இருந்து கேளோ கேள் என கேட்டு மண் கவ்வியவர். கூட்டமைப்பில் இணைந்த பின் கூட்டமைப்பு கட்சிக்கு போட்ட வாக்குகள். பொய் எனில் சித்தரை சுயேச்சையாக கேட்டு வெல்ல சொல்லுங்கள் பார்க்கலாம். வியாளேந்திரனுக்கு  தனிப்பட்ட செல்வாக்கு தான் அவரது வாக்கு வங்கி. அவரே சொல்லி உள்ளார். தான் தமிழரசு கட்சியில்  போட்டியிட இருந்ததாகவும் இடம் இன்மையால் புளட்டில் போட்டி போட்டதாகவும் கூறி இருந்தார். வேணுமெனில்  audio இணைக்கலாம்.

யாழில் சிறுவர்களுடன் நின்று மல்லு கட்டுவதே எனக்கு வெளியாகிபோய்விட்டது .

சித்தருக்கு வக்காலத்து வாங்க நான் வரவில்லை சிறுவருக்கு சிலவற்றை விளங்கபடுத்தவேண்டும் .

சித்தர் கேளே கேள் என்று கேட்டு மண்கவ்வவில்லை முன்னரும் எம்பியாக வந்தவர்  .பிறகு தோற்றவர் அப்படியே விட்டு தொலைத்திருக்கலாம் தானே ஏன் பின்னர் கூட்டமைப்பு அவரை உள்வாங்கியது .

இலங்கை தேர்தல் முறை கூட தம்பிக்கு தெரியவில்லை கூட்டமமைப்பில் நின்றாலும் விருப்பு வாக்குகள் மூலம் தான் எம்பியாக வரமுடியும் யாழில் வைத்த தேர்தல் போட்டியில் கூட எவரும் சித்தரின் பெயரை தெரிவுசெய்யவில்லை அதைத்தான் நினைத்து பார்க்காத வெற்றி என்று எழுதினேன் 

வியாளேந்திரனை சந்திக்கும்போது அவரது பின்புலம் பற்றி கேட்டேன் அவர் புளொட்டில் இருக்கவில்லை ஆனால் அண்ணை (சித்தர் ) தான் தன்னை அரசியலில் முதன்மை படுத்தியதாக சொன்னார் .இவரின் அண்ணாரின் மகன்(இருபது வயது இருக்கும் ) பின்லாந்தில் இருந்து இவரை சந்திக்க வந்திருந்தார்.தனது அப்பா புளொட்டில் இருந்ததாக சொன்னார் .புலிகளால் மட்டகளப்பில் வாசு ,கண்ணனுடன் கொலை செய்யப்பட்ட பவன் தனது உறவினர் என்றும் சொன்னார் .

இதுதான் பின்புலம் தம்பி .

ஐங்கரநேசன் மற்றும் விக்னேஸ்வரனின் போலி நிபுணர்குழுவை அம்பலப்படுத்திய நீதிமன்றம்

ayngaranesanகழிவு ஓயில் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, வடமாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டபோதிலும் நீதிமன்றுக்கு சமூகமளிக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
கழிவொயில் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்வதில்லையென அப்பிரதேசங்களைச் சேர்ந்த இரு சுகாதார வைத்திய அதிகாரிகள் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த நிலையில்,

குறித்த வழக்கு இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ . யூட்சன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது கடந்த வழக்குத் தவணையின் போது வடமாகாண விவசாய அமைச்சர் பொ .ஐங்கரநேசனுக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்ட போதும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.

இந்த நிலையில் வழக்கு அடுத்த மாதம் -17 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண விவசாய அமைச்சர் வேறொரு நிகழ்விற்குச் சென்ற காரணத்தால் அவர் வருகை தர முடியவில்லை என வடமாகாண சபையின் அபிவிருத்தி அலுவலர் நீதிமன்றத்தில் அவர் சார்பில் கடிதமொன்றைச் சமர்ப்பிக்க முற்பட்ட போதும் நீதவான் அதனை நிராகரித்து பிடிவிறாந்து பிறப்பிக்க முற்பட்ட நிலையில் அவர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கு.பொ .சி. வரதராஜா நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

இதன்போது பொதுமக்கள் நலன் சார்ந்து ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம், சட்டத்தரணிகளான சோ.தேவராஜா, கே.சுகாஷ், சோபிதன், பி .பார்த்தீபன் ஆகியோரும் வடக்கு மாகாண சபையின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கு.பொ .சி. வரதராஜாவும் ஆஜராகியிருந்தனர்.

இதன் போது சிரேஷ்ட சட்டத்தரணி கு.பொ .சி. வரதராஜா, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீர் விநியோகிப்பது தொடர்பில் கதைப்பதற்கான எந்தவொரு அதிகாரமும் வடமாகாண சபைக்கு இல்லையெனவும், இந்த அதிகாரம் அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கே உள்ளதாகவும் மன்றுக்குத் தெரியப்படுத்தினார்.

மக்களின் நீர்ப் பிரச்சனை தொடர்பான அதிகாரம் வட மாகாண சபையிடம் இல்லையென்றால், நீர் மாசு தொடர்பான ஒரு நிபுணர் குழுவை உருவாக்கி அறிக்கையை ஏன் தயாரித்தது? அந்த அறிக்கையை வெளியிட்டதன் காரணம் என்ன என்பதை நீதிமன்றம் ஐங்கரநேசனின் சட்டத்தரணியிடம் வினவியது.

ஏற்கனவே ஐந்து கிணறுகளில் ஈயம் கலந்திருப்பதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்திருந்தது.

அந்தக் கிணறுகள் யாருடைய கிணறுகள் என வினாவப்பட்ட நிலையில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் அது தொடர்பான விபரங்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்கள்.

குறித்த விபரங்களை சுகாதாரப் பரிசோதகர்கள் பெற்று அதற்குரிய நடவடிக்கையை எடுப்பார்கள். அடுத்த வழக்குத் தவணையின் போது வடமாகாண விவசாய அமைச்சர் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும் நீதிமன்றம் பணித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
On February 18, 2016 at 9:29 AM, arjun said:

இப்பதான் பார்த்தேன் சுவை 

இவர்கள் எல்லோரையும் விட ஐங்கரநேசனை எனக்கு நன்கு தெரியும் .அப்பவே அவரில் வழக்கு இருக்கு .

பாவம் விட்டுவிடுவம் .

கட்டுரை எழுதியவரின் நோக்கம் புரியவில்லை சுமந்திரன் என்று தொடக்கி எங்கேயோ போகின்றார் .

 

இனி எதுவும் முடியாதவர்கள் இப்படித்தான் புலம்பிதள்ளுவார்கள் ,

நான் முன்னாள் என்றாலும் வடக்கில் சித்தர் பெற்ற வெற்றியும் கிழக்கில் வியாளேந்திரன் பெற்ற வெற்றியும் நினைத்து பார்க்கமுடியாதவை .புலிகள் அன்று சொன்னவற்றை கேட்கும் அளவிற்கு இன்று மக்கள் அங்கு இல்லை .

யாழ் இந்து மகளீர் கல்லூரி மாணவி நர்மதா அக்கா செத்தது தொடர்பான வழக்குத்தானே!:unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.