Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நட்சத்திர கிரிக்கெட் போட்டி: 8 அணிகளின் பெயர் மற்றும் கேப்டன் விவரம்

Featured Replies

நட்சத்திர கிரிக்கெட் போட்டி: 8 அணிகளின் பெயர் மற்றும் கேப்டன் விவரம்

 
cricketteams_2795524f.jpg
 

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நடைபெறும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் 8 அணிகளின் பெயர்கள் மற்றும் கேப்டன்கள் விவரம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் புதிததாக கட்டிடம் கட்ட பல்வேறு திட்டங்களுடன் புதிய நிர்வாகிகள் பணியாற்றி வருகிறார்கள். இதில் முதல் திட்டமாக ஏப்ரல் 17ம் தேதி நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற இருக்கிறது.

இக்கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் பங்கேற்க இருக்கிறது. ஒவ்வொர் அணியிலும் 6 வீரர்கள் இருப்பார்கள். இந்த 8 அணிகளுக்கு தமிழ்நாட்டின் முக்கியமான மாவட்டங்களின் பெயர்களை சூட்டியிருக்கிறார்கள். 'மதுரை காலேஜ்', 'சென்னை சிங்கம்ஸ்', 'நெல்லை டிராகன்ஸ்', 'தஞ்சை வாரியர்ஸ்', 'திருச்சி டைகர்ஸ்', 'ராமநாடு ரைனோஸ்', 'கோவை கிங்ஸ்' மற்றும் 'சேலம் சீட்டாஸ்' என்று 8 அணிகளுக்கு பெயரிட்டு இருக்கிறார்கள்.

இந்த 8 அணிகளுக்கும் கேப்டன்களாக சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், ஆர்யா, விஜய் சேதுபதி, ஜீவா ஆகியோர் விளையாட இருக்கிறார்கள். இதில் எந்த அணிக்கு யார் கேப்டன் என்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும், ஒவ்வொரு அணிக்கும் வீரர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது.

இக்கிரிக்கெட் போட்டியின் விளம்பர தூதர்களாக அனுஷ்கா, த்ரிஷா, நயன்தாரா, காஜல் அகர்வால் மற்றும் சமந்தா ஆகியோர் நியமிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ரஜினி, கமல், அமிதாப் பச்சன் மற்றும் சீரஞ்சிவி ஆகியோர் இக்கிரிக்கெட் போட்டியை துவக்கி வைக்க இருக்கிறார்கள்.

இக்கிரிக்கெட் போட்டியில் மொத்த உரிமையை முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் 9 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறது. தொலைக்காட்சி உரிமை மற்றும் இதர உரிமைகளின் மூலமாக வரும் பணத்தை அப்படியே கட்டிட நிதிக்கு ஒதுக்க இருக்கிறார்கள்.

இக்கிரிக்கெட் போட்டியின் முழுமையான இறுதிவடிவம் ஏப்ரல் 3ம் தேதியன்று வெளியாக இருக்கிறது.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-8-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article8417681.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நட்சத்திரக் கிறிக்கட் போட்டியில் வால் நட்சத்திரங்கள் விளையாடுவார்கள் தெரியும், கேர்ள் நட்சத்திரங்களும் விளையாடுகிறார்களா நவீனன்...!  tw_blush:

  • தொடங்கியவர்
1 hour ago, suvy said:

இந்த நட்சத்திரக் கிறிக்கட் போட்டியில் வால் நட்சத்திரங்கள் விளையாடுவார்கள் தெரியும், கேர்ள் நட்சத்திரங்களும் விளையாடுகிறார்களா நவீனன்...!  tw_blush:

நட்சத்திர கிரிக்கெட்: வீரர்களாக நடிகர்கள், விளம்பர தூதுவர்களாக நடிகைகள்

ccl
 
 

சென்னையில் நடைபெற இருக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் நடிகர்கள் வீரர்களாகவும், நடிகைகள் விளம்பர தூதுவர்களாகவும் பணியாற்ற இருக்கிறார்கள்.

தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் புதிததாக கட்டிடம் கட்ட பல்வேறு திட்டங்களுடன் புதிய நிர்வாகிகள் பணியாற்றி வருகிறார்கள். இதில் முதல் திட்டமாக ஏப்ரல் 17ம் தேதி நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற இருக்கிறது.

இக்கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. ஒவ்வொர் அணியிலும் 6 வீரர்கள் இருப்பார்கள். சூர்யா, விஷால், விஷ்ணு விஷால், தனுஷ் மற்றும் ஜீவா ஆகியோர் 5 மாவட்டங்களின் பெயரிடப்பட்ட அணிக்கு கேப்டனாக பணியாற்ற இருக்கிறார்கள். மீதமுள்ள 3 அணிக்கு கேப்டன் யார் என்பதை விரைவில் முடிவு செய்ய இருக்கிறார்கள்.

மேலும், அனுஷ்கா, த்ரிஷா, நயன்தாரா, காஜல் அகர்வால் மற்றும் சமந்தா ஆகியோர் இக்கிரிக்கெட் போட்டியில் விளம்பர தூதுவர்களாக நியமனம் செய்ய இருக்கிறார்கள். ரஜினி, கமல், அமிதாப் பச்சன் மற்றும் சீரஞ்சிவி ஆகியோர் இக்கிரிக்கெட் போட்டியை துவக்கி வைக்க இருக்கிறார்கள்.

இக்கிரிக்கெட் போட்டியில் மொத்த உரிமையை முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் 9 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறது. தொலைக்காட்சி உரிமை மற்றும் இதர உரிமைகளின் மூலமாக வரும் பணத்தை அப்படியே கட்டிட நிதிக்கு ஒதுக்க இருக்கிறார்கள்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8402180.ece

  • கருத்துக்கள உறவுகள்

விளப்பரத் தூதையும் பார்த்துக் கொண்டு விக்கட்டுக்குப் பக்கத்திலையும் நிண்டு ஆடுவாங்களா....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

kfio49cjibgsi.jpg

திரிசாவின்ட மதர் வருவாவா???? :love:

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

kfio49cjibgsi.jpg

திரிசாவின்ட மதர் வருவாவா???? :love:

மரத்தால ஏறி கொப்பால இறங்கிற பிளான் போல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

மரத்தால ஏறி கொப்பால இறங்கிற பிளான் போல.

இதுக்குத்தான் நான் ஊர்க்காரரை பக்கத்திலை வைச்சுக்கொண்டு ஒண்டுக்கும் மினைக்கடுறதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, குமாரசாமி said:

kfio49cjibgsi.jpg

திரிசாவின்ட மதர் வருவாவா???? :love:

இந்த மனுசனுடன் சேர்ந்ததால் 

எனக்கும் ரசனை மாறுது ஏனோ தெரியல ??

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

களைகட்டும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி : நடிகைகளும் ஆடுகிறார்களா? 

 

தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள வீரர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

nadigar-sangam-cricket-date.jpg

நடிகர் சங்கம் நடத்தும் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. 

 

8 அணிகள் பங்குபற்றும் 6 ஓவரகள் கொண்ட இப் போட்டியில் 8 அணிகளுக்குமான அணித் தலைவர்கள் மற்றும் அணியில் இடம்பெற்றுள்ள நட்சத்திரங்களின் பெயர்கள்  அறிவிக்கப்பட்டுட்டன.

இதில் நடிகைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

actor.gif

 

மேலும் ஒவ்வொரு அணிக்கும் விளம்பரத் தூதர்களாக முன்னணி நடிகைகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்த போட்டியில் அஜீத், விஜய், விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற நடிகர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

நடிகர் சங்க கிரிக்கெட் அணியில் இடம்பெறவிருக்கும் வீரர், வீராங்கனைகளின் பட்டியல் இதோ ;

 

சென்னை சிங்கம்ஸ் 

நடிகர்கள்: சூர்யா (அணித் தலைவர்),விக்ராந்த், சிவா, உதய், நந்தா, அருண் விஜய், அர்ஜுன். 

நடிகைகள்: ஹன்சிகா, கீர்த்தி சாவ்லா, கௌரி முங்கல், திவ்யா, ருக்மணி. 

மதுரை காளைஸ் 

நடிகர்கள்: விஷால்(அணித் தலைவர்), ரிஷி, சூரி, அருள்நிதி, ரமணா, ஆர்.கே.சுரேஷ், மன்சூர் அலிகான். 

நடிகைகள்: வரலட்சுமி, ஜனனி ஐயர், நிகில் கல்ராணி, சாந்தினி, மதுமிதா. 

கோவை கிங்ஸ் 

நடிகர்கள்: கார்த்தி(அணித் தலைவர்), பரத், விஷ்ணு, சஞ்சய், மகேந்திரன், ஜே.கே.ரித்திஷ், பிரசாந்த். 

நடிகைகள்: தமன்னா, மது ஷாலினி, சிருஷ்டி டாங்கே, மும்தாஸ் மிஸா, அபிநயஸ்ரீ. 

நெல்லை ட்ராகன்ஸ் 

நடிகர்கள்: ஜெயம் ரவி(அணித்தலைவர்), அரவிந்த்சாமி, விஜய் வசந்த், சவுந்தர் ராஜா, பிருத்வி, அஸ்வின் சேகர், வைபவ். 

நடிகைகள்: ஸ்ரீதிவ்யா, நமீதா, மனிஷா யாதவ், விஜயலட்சுமி, கோமல் சர்மா, பார்வதி நாயர். 

ராம்நாடு ரைனோஸ் 

நடிகர்கள்: விஜய் சேதுபதி(அணித் தலைவர்), ஜெய், கலையரசன், போஸ் வெங்கட், வருண் ஐசரி கணேஷ், சக்தி, அருண்பாலாஜி. 

நடிகைகள்: ரம்யா நம்பீசன், சோனியா அகர்வால், வசுந்தரா, காயத்ரி, ரித்விகா. 

தஞ்சை வாரியர்ஸ் 

நடிகர்கள்: ஜீவா (அணித் தலைவர்), லக்‌ஷ்மண், அசோக், ஷரண், பசுபதி, அதர்வா, பிளாக் பாண்டி. 

நடிகைகள்: அமலாபால், தன்ஷிகா, நிகிஷா பட்டேல், ஃப்ளோரா ஷைனி, சஞ்சனா சிங். 

திருச்சி டைகர்ஸ் 

நடிகர்கள்: சிவகார்த்திகேயன் (அணித் தலைவர்), ஷாம், விக்ரம் பிரபு, அசோக் செல்வன், நிதின் சத்யா, சதீஷ், ஸ்ரீமன், ஹேமச்சந்திரன். 

நடிகைகள்: கீர்த்தி சுரேஷ், சாயா சிங், காயத்ரி ரகுராம், தேஜாஸ்ரீ, வேதிகா. 

சேலம் சீட்டாஸ் 

நடிகர்கள்: ஆர்யா (அணித் தலைவர்), கார்த்திக் முத்துராமன், ஆதவ், உதயநிதி,உதயா,ஜித்தன் ரமேஷ்,செந்தில். 

நடிகைகள்: பிந்து மாதவி, நந்திதா, பூனம் கவுர், ரகசியா, சுஜா வரூனி. 

 

இந்நிலையில், சிவா, குஷ்பூ இருவரும் இப்போட்டியை தொகுத்து வழங்குவார்கள் என்று எதிரபார்க்கப்பட்டது. 

இந்நிலையில் சென்னை சிங்கம்ஸ் டீமிற்காக சிவா களமிறங்கி விட்டார். இதனால் இப்போட்டியை தொகுத்து வழங்கப் போவது யார்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

http://www.virakesari.lk/article/5049

நவீனன் இதற்கும் ஒரு போட்டி  வைத்தால் என்ன ?:rolleyes:

  • தொடங்கியவர்
13 minutes ago, arjun said:

நவீனன் இதற்கும் ஒரு போட்டி  வைத்தால் என்ன ?:rolleyes:

நீங்கள் போட்டியை நடத்துங்கோ...:)

நானும் கலந்துகொள்கிறேன்..

On 3/31/2016 at 5:15 AM, நவீனன் said:

இந்த 8 அணிகளுக்கு தமிழ்நாட்டின் முக்கியமான மாவட்டங்களின் பெயர்களை சூட்டியிருக்கிறார்கள். 'மதுரை காலேஜ்', 'சென்னை சிங்கம்ஸ்', 'நெல்லை டிராகன்ஸ்', 'தஞ்சை வாரியர்ஸ்', 'திருச்சி டைகர்ஸ்', 'ராமநாடு ரைனோஸ்', 'கோவை கிங்ஸ்' மற்றும் 'சேலம் சீட்டாஸ்' என்று 8 அணிகளுக்கு பெயரிட்டு இருக்கிறார்கள்.

மதுரை காலேஜ், சென்னை சிங்கம்ஸ், நெல்லை டிராகன்ஸ், தஞ்சை வாரியர்ஸ், திருச்சி டைகர்ஸ், ராமநாடு ரனோஸ், கோவை கின்ஸ். தமிழ்நாட்டில் புழக்கத்தில் உள்ள அருமையான தமிழ்ப்பெயர்கள் அணிகளுக்கு வைக்கப்பட்டுள்ளது, சூப்பர், வாழ்த்துக்கள்! 

46 minutes ago, நவீனன் said:

நீங்கள் போட்டியை நடத்துங்கோ...:)

நானும் கலந்துகொள்கிறேன்..

இது அனேகமாக சு ப ந நு சுவிஅன்னை, பகலவன், நந்தன், நுனாவிலான் குழுவினரின் சதியாகத்தான் இருக்கும். :grin:

  • தொடங்கியவர்
2 minutes ago, ஜீவன் சிவா said:

இது அனேகமாக சு ப ந நு சுவிஅன்னை, பகலவன், நந்தன், நுனாவிலான் குழுவினரின் சதியாகத்தான் இருக்கும். :grin:

அவர்களது கட்சிக்கு என்னை தலைவராக போடுவதாக சொல்கிறார்கள்...<_<

நடிகைகள் வேறு கிரிக்கெட் ஆட இருக்கிறார்கள்..tw_tounge: கட்சி தலைவர் என்றால்....tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஜீவன் சிவா said:

இது அனேகமாக சு ப ந நு சுவிஅன்னை, பகலவன், நந்தன், நுனாவிலான் குழுவினரின் சதியாகத்தான் இருக்கும். :grin:

திரையில் ஆடுறவங்கள் எப்படா திடலில் ஆடுவாங்கள் என்று காத்துக் கிடக்கிறம்..., அத்துடன் அம்பயருக்கு ஏன் அனுஷ்காவைப் போடேல்ல என்று மண்டை வேற காய்ஞ்சு போச்சு,நயன்கூட கலக்கேல்லை என்று நந்தன் ஒரே ஃபீலிங்  நீங்க வேற ....!  tw_blush:

2 minutes ago, நவீனன் said:

அவர்களது கட்சிக்கு என்னை தலைவராக போடுவதாக சொல்கிறார்கள்...<_<

இது முன்னாள் கட்சித்தலைவர் சுவி அண்ணைக்கு தெரியுமா 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நவீனன் said:

அவர்களது கட்சிக்கு என்னை தலைவராக போடுவதாக சொல்கிறார்கள்...<_<

நடிகைகள் வேறு கிரிக்கெட் ஆட இருக்கிறார்கள்..tw_tounge: கட்சி தலைவர் என்றால்....tw_blush:

 

2 minutes ago, ஜீவன் சிவா said:

இது முன்னாள் கட்சித்தலைவர் சுவி அண்ணைக்கு தெரியுமா 

கள நிலவரம் கவணிக்கப் பட்டுக் கொண்டுதான் இருக்கு...! :unsure:

  • தொடங்கியவர்

12974436_1081287815263565_42065773233692

நள்ளிரவில் கிரிக்கெட் பயிற்சியில் நட்சத்திரங்கள்!

8 hours ago, நவீனன் said:

நள்ளிரவில் கிரிக்கெட் பயிற்சியில் நட்சத்திரங்கள்!

நானும் ஏதோ நம்ம கில்பான்சுகளிண்ட படம் எண்டு வந்து பாத்தால் - வெறுத்துப் போச்சுது.

throw computer emoticon

  • தொடங்கியவர்
1 hour ago, ஜீவன் சிவா said:

நானும் ஏதோ நம்ம கில்பான்சுகளிண்ட படம் எண்டு வந்து பாத்தால் - வெறுத்துப் போச்சுது.

throw computer emoticon

ஆட்டம் தொடங்க படங்கள் வரும்...:)

7 minutes ago, நவீனன் said:

ஆட்டம் தொடங்க படங்கள் வரும்...:)

அப்ப ஏன் சுவி அண்ணை இப்பவே பச்சை குத்தினவர்.

உந்த சூரி பந்து பிடிக்குதோ இல்லையோ பார்க்க சிரிப்பு வருது - அதுக்காக குத்தியிருந்தால் மன்னிக்கலாம்.

 

  • தொடங்கியவர்
 
 
நட்சத்திர கிரிக்கெட் அணிகள் அறிமுகம்!(படங்கள் இணைப்பு)

13007256_1083092991749714_49340641046846

placeholder

placeholder

placeholderplaceholderplaceholder

placeholder

placeholderplaceholder

placeholderplaceholder

placeholder147113.jpg

placeholder

placeholder

placeholder

placeholderplaceholder

placeholder

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா ஹா ஹா  ... ஆட்டம் களைகட்ட ஆரம்பிடிச்சு....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, suvy said:

ஆஹா ஹா ஹா  ... ஆட்டம் களைகட்ட ஆரம்பிடிச்சு....!  tw_blush:

ஆனா தலைவர் நீங்க இல்லtw_blush:tw_blush:

39 minutes ago, suvy said:

ஆஹா ஹா ஹா  ... ஆட்டம் களைகட்ட ஆரம்பிடிச்சு....!  tw_blush:

 

On 12/04/2016 at 0:19 AM, ஜீவன் சிவா said:

அப்ப ஏன் சுவி அண்ணை இப்பவே பச்சை குத்தினவர்.

இப்ப புரியுதண்ணை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.