Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காவடியெடுத்த இளைஞன் பலி...

Featured Replies

காவடியெடுத்த இளைஞன் பலி...
 
 

article_1461221649-news-%283%29.jpg

முல்லைத்தீவு மாவட்டத்தின் அம்பகாமம் அருள்மிகு மம்மில் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, ஒட்டுசுட்டான் தான்றோன்றீஸ்வரர் ஆலயத்திலிருந்து, தனது நேர்த்திக்கடனை நிறைவேற்ற பறவைக்காவடி எடுத்து வந்த இளைஞர் ஒருவர், உழவு இயந்திரம் கவிழ்ந்து இன்று வியாழக்கிழமை (21) காலை பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (படப்பிடிப்பு: சண்முகம் தவசீலன்)

article_1461221659-news-%284%29.jpgarticle_1461221669-news-%285%29.jpgarticle_1461221677-news-%286%29.jpg

http://www.tamilmirror.lk/170433/%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B3-%E0%AE%9E%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B2-

முல்லைத்தீவு அம்பகாமம் பிள்ளையார் ஆலய வருடாந்த திருவிழாவிவை முன்னிட்டு ஒட்டுசுட்டான் சிவன் ஆலயத்திலிருந்து தனது நேர்த்திக் கடனை நிறைவேற்ற பறவைக் காவடி எடுத்துவந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உழவு இயந்திரம் குடைசாய்ந்ததினாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட இடதுகரை முத்து ஜயன் கட்டையைச் சேர்ந்த வசந்தகுமார் கஜதீபன்(26) என்பவரே சம்பவத்தில் பலியாகியுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலும், ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகி ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90

http://www.tamilwin.com/crime/01/101928

இதெல்லாம் தேவைதானா?  tw_anguished: tw_anguished: tw_anguished: உடலை வருத்தி பொதுசனம் முன்னால் இப்படி காவடி ஆடுவது குறிப்பிட்ட கோயில் வளாகத்துக்குள் மட்டுமே செய்யப்படமுடியும் என்று சட்டம் கொண்டுவரப்படவேண்டும். தெருவில் எப்படி எல்லோர் முன்னாகவும் நிர்வாணமாக போகமுடியாதோ அவ்வாறே இப்படி உடலை சீர்குலைத்து தெருவில் உழவு இயந்திரத்தில் தொங்கிக்கொண்டு பொதுசனம் முன் செல்வதும் தண்டனைக்குரிய குற்றமாக கொண்டு வரப்படவேண்டும். ஒருவருக்கு தனது உடலை வருத்தி தொங்குவதற்கு உரிமை உண்டு. ஆனால், மற்றவர்கள் முன்னால் தொங்கிக்கொண்டு செல்வதற்கு உரிமை உண்டு என்றால் அது கேள்விக்குறியே. மிருகங்களை வெட்டி வேள்வி செய்வது தடைசெய்யப்பட்டது. இங்கே மனிதவதைக்கு தடை எப்போது கிடைக்கும்? மாறுகின்ற புதுயுகத்தில் கால, சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பண்பாடு, கலாச்சார செயற்பாடுகளிலும் மாற்றம் வேண்டும். உழவு இயந்திரங்கள் பாவனைக்கு வரும் முன்னதாகே எதில் தொங்கிக்கொண்டு சென்றார்கள்? மாட்டு வண்டியிலா? அநியாயமாய் மரணித்த இளைஞருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்! tw_anguished:

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளின் பெயரால் இப்படிப்பல உயிர் இழப்புக்கள்
ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வேற கலைஞன் இங்கே வெளிநாட்டிலேயே றோட்டு றோட்டாய் காவடி எடுக்கினம்.நீங்கள் தடை செய்யிறதைப் பற்றிக் கதைக்கிறீங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு முறை தடம்புரண்டதிற்கு அறுபத்தெட்டு வியாக்கியானங்கள்.....

இவற்றுக்கு  எதை என்னத்தை சொல்ல??????

Many of the worshippers have open wounds on the tops of their heads

The Ashura ritual takes part across the Middle East

 A Shi'ite boy is held still as a gash is cut into his head as part of an Ashura ceremony in Mumbai, IndiaREUTERS735594_Articolo.JPG

Karfreitag 2016: Blutiges Ritual auf den Philippinen. In mehreren Dörfern nördlich von Manila lassen sich Menschen in Erinnerung an die Opfer Jesu ans Kreuz nageln.Osterritual auf den Philippinen 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இப்பிடியும் சிலது

100248.jpg

 

images?q=tbn:ANd9GcQ6vm4s5AP3M3yOrqhQgwh

Edited by Thirdeye

  • கருத்துக்கள உறவுகள்

தவறு காவடி எடுத்தவரில் இல்லையே!

டிராக்டரில் அவரை வைத்துக் கட்டியவர்கள்... புவி ஈர்ப்பு மையத்தைப் பற்றிக் கவனமெடுக்கவில்லை!:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

ஒரு முறை தடம்புரண்டதிற்கு அறுபத்தெட்டு வியாக்கியானங்கள்.....

இவற்றுக்கு  எதை என்னத்தை சொல்ல??????

The Ashura ritual takes part across the Middle East

 A Shi'ite boy is held still as a gash is cut into his head as part of an Ashura ceremony in Mumbai, India

 

 

6 hours ago, புங்கையூரன் said:

தவறு காவடி எடுத்தவரில் இல்லையே!

டிராக்டரில் அவரை வைத்துக் கட்டியவர்கள்... புவி ஈர்ப்பு மையத்தைப் பற்றிக் கவனமெடுக்கவில்லை!:rolleyes:

தாம் பிறந்த  இனத்தையும், மதத்தையும்..... குறை சொல்பவர்கள் தான் தமிழ் இனத்தில் அதிகம்.

On 4/21/2016 at 3:02 PM, ரதி said:

நீங்கள் வேற கலைஞன் இங்கே வெளிநாட்டிலேயே றோட்டு றோட்டாய் காவடி எடுக்கினம்.நீங்கள் தடை செய்யிறதைப் பற்றிக் கதைக்கிறீங்கள்

கனடாவிலும் உள்ளது. 

On 4/21/2016 at 6:20 PM, குமாரசாமி said:

ஒரு முறை தடம்புரண்டதிற்கு அறுபத்தெட்டு வியாக்கியானங்கள்.....

இவற்றுக்கு  எதை என்னத்தை சொல்ல?????? 

ஓர் மனிதவதையை நியாயப்படுத்த இன்னோர் மனிதவதையை காண்பிக்கின்றீர்கள்.

On 4/21/2016 at 7:00 PM, புங்கையூரன் said:

தவறு காவடி எடுத்தவரில் இல்லையே!

டிராக்டரில் அவரை வைத்துக் கட்டியவர்கள்... புவி ஈர்ப்பு மையத்தைப் பற்றிக் கவனமெடுக்கவில்லை!:rolleyes:

எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன். தவறு காவடி எடுத்தவரிலும் இல்லை, உழவு இயந்திரத்தை ஓடியவரிலும் இல்லை. எல்லாவற்றையும் அமைதியாக வேடிக்கை பார்க்கும் கடவுளில்தான் எல்லா தவறும். :rolleyes:

On 4/22/2016 at 1:27 AM, தமிழ் சிறி said:

 

தாம் பிறந்த  இனத்தையும், மதத்தையும்..... குறை சொல்பவர்கள் தான் தமிழ் இனத்தில் அதிகம்.

ஒரு காலத்தில் உடன்கட்டை ஏறுதல், நரபலி போன்ற வழக்கங்கள் இருந்தன. இப்போதும் இறந்த மனித உடலை உண்ணும் சாமியார்கள் இந்தியாவில் இருக்கின்றார்கள். பிறந்த இனத்தில், மதத்தில் உள்ளவை எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொண்டிருந்தால் இந்நேரம் மனித சமூகம் செவ்வாய்க்கிரகம் வரை சென்று இருக்காது. பதிலாக இன்னும் காடுகளுக்குள் நிர்வாணகோலத்தில் அலைந்து இருக்கும். 

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கலைஞன் said:

கனடாவிலும் உள்ளது. 

ஓர் மனிதவதையை நியாயப்படுத்த இன்னோர் மனிதவதையை காண்பிக்கின்றீர்கள்.

எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன். தவறு காவடி எடுத்தவரிலும் இல்லை, உழவு இயந்திரத்தை ஓடியவரிலும் இல்லை. எல்லாவற்றையும் அமைதியாக வேடிக்கை பார்க்கும் கடவுளில்தான் எல்லா தவறும். :rolleyes:

ஒரு காலத்தில் உடன்கட்டை ஏறுதல், நரபலி போன்ற வழக்கங்கள் இருந்தன. இப்போதும் இறந்த மனித உடலை உண்ணும் சாமியார்கள் இந்தியாவில் இருக்கின்றார்கள். பிறந்த இனத்தில், மதத்தில் உள்ளவை எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொண்டிருந்தால் இந்நேரம் மனித சமூகம் செவ்வாய்க்கிரகம் வரை சென்று இருக்காது. பதிலாக இன்னும் காடுகளுக்குள் நிர்வாணகோலத்தில் அலைந்து இருக்கும். 

கலைஞன் காவடி எடுக்கும் படம் வாராது என எதிபார்க்கலாமா????

மாற்றம் என்பதே மாறாதது......

1 minute ago, விசுகு said:

கலைஞன் காவடி எடுக்கும் படம் வாராது என எதிபார்க்கலாமா????

மாற்றம் என்பதே மாறாதது......

உடலில் துளைகள்போடுவது Piercing ஒரு நாகரிகமாகவும் வளர்ந்து வருகின்றது. வெள்ளைக்காரர் போதைபொருட்களை பாவித்துவிட்டு வீடுகளில் இப்படி தூக்குகாவடிபோல் குத்தி தொங்கும் காணொலிகளை வலைத்தளத்தில் பார்த்துள்ளேன். எனவே இப்படி ஊசிகளில் உடலை குத்தி தொங்குகின்ற கலாச்சாரம் வேறோர் வகையில் தொடரக்கூடும். தவிர மேலைத்தேசத்தவர்களும் இந்த தூக்குகாவடிகள் ஆடக்கூடும். எனவே இந்த காவடி விசயம் எதிர்காலத்தில் வராது என்று எதிர்பார்க்கமுடியாது. அதேசமயம் வெள்ளைக்காரன் தூக்குக்காவடி எடுத்தால் தூக்குக்காவடி எடுப்பது சரியான செயலே என்றும் நிறுவமுடியாது. 

இனத்தில், சமயத்தில் நல்ல விடயங்களும் உள்ளன. எத்தனைபேர் கடைப்பிடிக்கின்றார்கள்? கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி எல்லா உயிரும் தொழும். தூக்குகாவடிக்கு ஆதரவான எத்தனைபேர் மாமிச உணவை தவிர்க்கின்றீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கலைஞன் said:

 

கதைக்க வெளிக்கிட்டால் எல்லாத்துக்கும் எதிர்க்கருத்து வைக்கலாம்.....இப்ப உந்த வீடியோவிலை பாருங்கோ பிள்ளையாருக்கு  நெய்யாலை பாலாலை தயிராலை தேனாலை எல்லாம் குளிப்பாட்டீனம்....உதெல்லாம் தேவையோ? பிள்ளையார் எல்லாம் செய்யெண்டு கேட்டவரோ? உதுகளுக்கு செலவழிச்ச காசை ஏழைஎளியதுகளுக்கு குடுத்திருந்தால் அது நியாயம் எண்டும் கதைக்கலாம் எல்லோ.
மதம் என்ற சொல்லில் எந்தவொரு மொழியிலும் இல்லாத அர்த்தம் எமது தமிழ்மொழியில் மட்டுமே உள்ளது. மதம் 

பல கோணங்களில் மேலுள்ள காணொலியை பார்க்கலாம். இங்கே பூசை செய்யும் பிரதம அர்ச்சகர் ஓர் வைத்தியர். அவரை சுற்றியுள்ளவர்களும் பல பட்டங்கள், கட்டங்கள் உள்ளவர்கள். மத ஈடுபாடு வெவ்வேறிடங்களில், வெவ்வேறு பிரிவினரிடையே மாறுபடுகின்றது. இந்துமதம் பயனற்றது  என்று அதிலிருந்து வோறோர் மதத்தினுள் தாவுகின்ற பகுதி ஒருபக்கம். பிற மதங்களை விடுத்து இந்துமதத்தினுள் பிடிப்பை ஏற்படுத்துகின்ற பகுதி இன்னோர் புறம். இந்த காணொலியை யூகேயில் வைத்தியராய் இருக்கும் எனது மாமி அனுப்பி வைத்தார், அவர் அதிக ஆன்மீக ஈடுபாடு உடையவர். காணொலியை பார்த்தபோது எனக்கும் உங்களுக்கு தோன்றிய வினாக்கள் தோன்றியது. நான் இந்த காணொலியை இங்கு இணைத்ததற்கு சில காரணங்கள் உள்ளன. அவை எவை என்பதை எழுதவிரும்பவில்லை, உங்களின் சுயதேடலுக்கே விடுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் கேரளாவில் ஒரு கோவிலில்  வெடிச்சம்பவத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் இறந்தனர் இதற்கு என்ன காரணம்  இறப்பு என்பது எந்த ரூபத்திலும் வரலாம் அகால மரணங்களை யாரும் எதிர்வு கூற முடியாத காரியம் 

அவர் காவடி தூக்கியதால் தான் சாவு என்றால் அதை தவிர்க்கவா முடியும் 

ஒரு காலத்தில் ஒருவன் தனக்கு பாம்பினால் சாவு என்று அறிந்து கொண்டானாம் சாவுக்கு பயந்தவன் கடலில் போய் ஒரு படகில் அமர்ந்திருந்த வேளையில் ஒரு தேசிக்காய் அருகில் மிதந்து வர அதை எடுத்து முகர்ந்த போது அதனுள் பாம்பு இருந்து கொத்தியதாக சொல்வார்கள் ஆக சாவை யாரும் தடுக்க முடியாது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.