Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் நினைவஞ்சலி

Featured Replies

 
சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் நினைவஞ்சலி
 
 

article_1462766646-2.jpg

-எம்.றொசாந்த்

டெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரத்தினத்தின் 30ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு, அமைப்பின் யாழ். மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் தலைமையில், அன்னார் சுட்டுக்கொல்லப்பட்ட கோண்டாவில் கிழக்கு கோகுலவீதி அன்னங்கை தோட்ட வெளியில் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை இடம்பெற்றது.

article_1462766658-3.jpg

article_1462766669-4.jpg

- See more at: http://www.tamilmirror.lk/171752#sthash.adjj3IMf.dpuf
  • தொடங்கியவர்

நினைவஞ்சலி...
 

article_1462714010-IMG_0204.jpg

ரெலோ இயக்கத்தின் முன்னாள் தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு, சிறீ ரெலோ இயக்கத்தின் யாழ். மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் தலைமையில், அன்னார் சுட்டுகொல்லப்பட்ட கோண்டாவில் கிழக்கு கோகுலவீதி அன்னங்கை தோட்ட வெளியில், வெள்ளிக்கிழமை (06) மாலை இடம்பெற்றது. இதேவேளை, நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்திலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) நினைவு நிகழ்வுகள் இடம்பெற்றன.

article_1462714024-IMG_0203.jpgarticle_1462714034-new-%282%29.jpgarticle_1462714043-new-%281%29.jpg

- See more at: http://www.tamilmirror.lk/171723/2016-05-08-13-28-42#sthash.EHT4L7Bg.dpuf

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்.........

அஞ்சலிகள் ,

அட நான் சிறுவயதில் விளையாடிதிரிந்த அப்பப்பாவின்  காணி .

  • கருத்துக்கள உறவுகள்

சிறியை சுட்டது கூட நான் விளையாடித்திரிந்த எனது மாமியின் தோட்டத்தில் தான் .

சென்ற புதன் கிழமை மாமியின் தோட்டமாக இருந்தது இன்று அப்பப்பாவின் காணியாகிவிட்டது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, MEERA said:

சிறியை சுட்டது கூட நான் விளையாடித்திரிந்த எனது மாமியின் தோட்டத்தில் தான் .

சென்ற புதன் கிழமை மாமியின் தோட்டமாக இருந்தது இன்று அப்பப்பாவின் காணியாகிவிட்டது. 

எனக்கு உந்த மாறாட்டங்களை அடிக்கடி பார்த்து பழகிப்போச்சு...இன்னும் கொஞ்சநாள் விட்டால் என்ரை காணியிலை தான் சிறியை சுட்டது எண்டு கதை முடிஞ்சாலும் முடியும் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

சிறியை சுட்டது கூட நான் விளையாடித்திரிந்த எனது மாமியின் தோட்டத்தில் தான் .

சென்ற புதன் கிழமை மாமியின் தோட்டமாக இருந்தது இன்று அப்பப்பாவின் காணியாகிவிட்டது. 

நான் தெளிவா சொல்லுறன்tw_astonished:.காணி முதல்ல அப்பப்பாவுக்கு  சொந்தமாயிருந்தது .பிறகு மகள் (மாமி) கலியாணம் முடிச்சு போகேக்க  அவாவுக்கு சீதனமா குடுத்தாச்சு .அந்தகாணி இப்ப யாருக்கு சொந்தம் ......மாமிக்குத்தானே :grin:

56 minutes ago, நந்தன் said:

நான் தெளிவா சொல்லுறன்tw_astonished:.காணி முதல்ல அப்பப்பாவுக்கு  சொந்தமாயிருந்தது .பிறகு மகள் (மாமி) கலியாணம் முடிச்சு போகேக்க  அவாவுக்கு சீதனமா குடுத்தாச்சு .அந்தகாணி இப்ப யாருக்கு சொந்தம் ......மாமிக்குத்தானே :grin:

 

இது கூட விளங்காமல் இருக்கினம் நந்தன் .

அப்பாவின் அப்பாவின்  காணி அப்பாவின் தமக்கைக்கு சீதனம் கொடுத்தால் மாமியின் காணி ஆகிவிட்டது .

மாமியின் மகளின் மகன் டெலோவில் இருந்தார் .மிக சிறு வயது .சென்பற்றிக்ஸ் மாணவன் .

புலிகள் முதல் நாள் தாக்குதலில் முத்திரை சந்தியில் சூடு அவர் வாங்கி காயத்துடன் போய் ஒரு கோயில் தேர் முட்டிக்கு கீழ் மயங்கிவிட்டார் .சிறியை பாதுகாப்பிற்காக இவர்கள் வீட்டிற்கு தான் கொண்டு சென்றார்கள் .அதன் பிறகு மூன்றாம் நாள் தான் சிறியை சுட்டார்கள் .அன்று என்ன நடந்தது என்று இப்போ லண்டனில் இருக்கும் மாமியின் மகள் சொன்னார்.

சூடு வாங்கி மூன்று நாட்கள் மயங்கி இருந்தவரை கோயிலுக்கு வந்த பெண் ஒருவர்  கண்டு தனது வீட்டிற்கு கொண்டு சென்று வைத்தியம் செய்தார் .விஷயம் அறிந்து புலிகள் அங்கும் வந்துவிட்டார்கள் .ஊத்தை ரவி ,ரகீம் அதில் இருந்தார்கள் .சூடு வாங்கியவரின் அண்ணரும் ரகீமும் நண்பர்கள் .ரகீம் இவரை அடையாளம் கண்டு எதுவும் நடக்காமல் வீடு கொண்டுபோய்சேர்த்தாராம் .

இவர்களின் முழு குடும்பமும் லண்டனில் இருக்கின்றார்கள் ,சூடு வாங்கியவர் மட்டும் கனடா .

சனிக்கிழமை சிறி சபாரத்தினத்தின் நினைவஞ்சலி நடைபெற்றது சூடு வாங்கியவரும் வந்திருந்தார் .

நான்தான் புளொட் சார்பில்  பேசினேன் புலிகளின் கொலை அரசியல் தான் இன்று ஈழத்தமிழர்களின் இந்த நிலை என்று தெளிவாக விளங்கப்படுத்தினேன் .

குறிப்பு 

கு சாமிக்கும் மீராவிற்கும் திரும்ப திரும்ப என்னிடம் மூக்குடைபடுவதே வேலையாய் போச்சு .

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ மூக்குடைபடுவதாம். முதலில் புளொட்டின் கொலை அரசியல் பற்றி தெளிவாக விளங்கப்படுத்துங்கள் உங்கள் ஆட்களுக்கு. 

குறிப்பு

நந்தன் எழுதிய "நான் தெளிவா சொல்லுறன்" என்ற வசனம் கூட உங்களுக்கு விளங்கவில்லை அதற்குள்ள மற்றவர்களுக்கு தெளிவா விளக்கம் கொடுக்க வெளிக்கிட்டாச்சு. 

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

1. நான் 1982 இலே உமாட்ட உம் போக்குச் சரியில்லை என்று சொல்லிட்டு இயக்கத்தை விட்டும் நாட்டை விட்டும் வெளிக்கிட்டன்.

2. புளொட்டின் நடவடிக்கைகள் தொடர்பில் எனக்கு உடன்பாடில்லை.

3. சித்தார்த்தனின் நடவடிக்கைகள் தொடர்பில் எனக்கு என்னென்றே சொல்லத் தெரியவில்லை. புளொட்டுக்கும் எனக்கும் இப்ப சம்பந்தமில்லை.

4. மாமியின் காணி - போன கிழமை.

5. அப்பப்பாவின் காணி - இந்தக் கிழமை (அதுக்குள்ள மாமி மாத்தி எழுதிட்டா போல)

(என்னே வேடிக்கை மனிதர்கள்.. தாம் இவர்கள்....... நேரம் ஒரு கோலம்...)tw_blush:

 

இன்னும்......................

8 hours ago, arjun said:

நான்தான் புளொட் சார்பில்  பேசினேன் புலிகளின் கொலை அரசியல் தான் இன்று ஈழத்தமிழர்களின் இந்த நிலை என்று தெளிவாக விளங்கப்படுத்தினேன் .

இப்ப நான் தான் புளொட் சார்பில் புலிகளின் கொலை அரசியல் பற்றிப் பேசினன்..

என்ன பேசினன் என்றால்..

8 hours ago, arjun said:

சூடு வாங்கி மூன்று நாட்கள் மயங்கி இருந்தவரை கோயிலுக்கு வந்த பெண் ஒருவர்  கண்டு தனது வீட்டிற்கு கொண்டு சென்று வைத்தியம் செய்தார் .விஷயம் அறிந்து புலிகள் அங்கும் வந்துவிட்டார்கள் .ஊத்தை ரவி ,ரகீம் அதில் இருந்தார்கள் .சூடு வாங்கியவரின் அண்ணரும் ரகீமும் நண்பர்கள் .ரகீம் இவரை அடையாளம் கண்டு எதுவும் நடக்காமல் வீடு கொண்டுபோய்சேர்த்தாராம் .

இதுதான் புலிகள். சூடு வாங்கியவரையே காப்பாற்றிய புலிகள்.. சிறீசபாரட்னம் தான் செய்த இனவிரோத.. சமூக விரோத.. ஹிந்திய கூலிச் செயலுக்காக.. கள்ளியங்காட்டில் வைச்சு மக்கள் முன் சரணடைந்திருந்தால்.. இன்று நினைவஞ்சலி செய்ய வேண்டி வந்திருக்காது.

கனடாவிலோ.. லண்டனிலோ... புலி வாந்தி எடுத்துக் கொண்டிருந்திருக்கலாம். அல்லது வவுனியவிலோ.. கொழும்பிலோ சிங்களவனோட நின்று காட்டிக்கொடுத்திட்டு.. சொந்த இனத்தை அழித்தொழித்திட்டு.. புலிகள் காட்டிய பாதையில் தோன்றிய.. தமிழ் தேசியக் கூட்டமைப்பில்.. பம்பி... பரவி.. ஒற்றுமை பற்றி பேசிக் கொண்டு மக்கள் முன் வந்திருக்கலாம். 

சொந்த உறவுகளை கதறக் கதறக் காட்டிக்கொடுத்துக் கொன்றவனையும்.. வன்புணர்ந்தவனையும்.. அவன் எதிரிகளோடு நின்று துள்ளித் திரிந்த.. ஒளித்துக் கிடந்த காலம் மறந்து.. எம் பி ஆக்கி மகிழ்வது எம் மக்களின் மடமை தானே. அதில் குளிர்காய்ஞ்சிருக்கலாம். 

 

(இதில இங்க சிலர் மூக்குடைக்கினமாம் மற்றவைகளின். இனம்.. தேசம் என்று போராட வெளிக்கிட்டு.. எனது.. என் என்று பந்தா.. பம்மாத்து.. காட்ட வெளிக்கிட்டுத்தான்.. ரெலோ.. புளொட்.. ஈபி.. இன்னும் இத்தியாதி எல்லாம் ஒட்டுக்குழுக்கள் ஆகி சொந்த இனத்தையும்.. அதன் சுதந்திர தாகத்தையும் 35 வருசமா காட்டிக்கொடுத்தே அழித்தார்கள். இன்று... காக்கவன்னியன்களுக்கு நினைவஞ்சலி நடக்குது. அதில் ஒற்றுமைக்கு வேற பறைசாற்றினமாம். உருப்பட்ட மாதிரித்தான்.. இந்த இனத்தின் எதிர்காலம்.. எங்க போய் முடியப் போகுதோ..??! சூனியத்தை நோக்கிப் போகுது.):rolleyes:

தமிழ் மக்களுக்கு இன்றைய தேவை தூய தெளிவான அரசியல் மட்டுமே. ஒட்டுக்குழுகள் என்ன தான் நிறமாறினாலும்.. அதுகளின் அந்த சொந்தக் குணம் வெளிறாது என்பதற்கு இப்படிப்பட்ட நிகழ்வுகள் சாட்சி. இவை ஒற்றுமைக்கு உதவா.. பழிதீர்க்கும் எண்ணங்களையும்.. பகைமை இருப்பையுமே இன்னும் இன்னும் நிலைக்க வைக்கும். அதன் மூலம் அரசியல் செய்ய மீண்டும் புறப்படுகிறார்கள்.. இந்த இரத்தக்கறை படிந்த.. சொந்த ஆதாயங்களுக்காக.. சொந்த இனத்தை காட்டிக்கொடுத்தே பழிவாங்கிய.. இந்தக் காக்கவன்னியன்கள். 

Edited by nedukkalapoovan

இப்படியே மாரி தவக்கைகள் மாதிரி கத்தி சாவதை தவிர ஓடிவந்து புலிக்கொடி பிடித்தவர்களுக்கு வேறு தெரிவு இனி இல்லை .

நிலைமை இந்த அளவு கேவலத்திற்கு வரும் என்று கொடி பிடிக்கும் போது பிள்ளைகள் நினைக்கவில்லை .

கொலை செய்யும்போது விசில் அடித்ததன் வினை .

இந்த வாரம் ஈ பி டி பி யின் மகாநாடு யாழில் பிரமாண்டமாக நடக்குது .

விதியானது வலியது .

  • கருத்துக்கள உறவுகள்

வாந்தி வாந்தி வாந்தி.. எமக்குத் தெரிந்த தெல்லாம்.. எங்கும் வாந்தி.. எதிலும் வாந்தி... புலி வாந்தி. tw_blush::rolleyes:

ஒபாமா கியூபா செல்லவில்லையா ? யப்பான் அமெரிக்காவுடன் உறவு வைக்கவில்லையா?

மாற்று இயக்கங்கள் தாங்கள் விட்ட பிழைகளை ஒப்புக்கொண்டு வெளிப்படையாக விமர்சித்து அதற்கு மன்னிப்பும் கேட்டு பலவருடங்கள் ஆகிவிட்டது . 

 

  • கருத்துக்கள உறவுகள்

இனி புலிகளின் ஆவி தான் பதில் சொல்ல வேண்டும்.

புலி வாந்தி இல்லை செய்த கொலைகளுக்கும் அநியாததிற்கும் உலகம் கொடுத்த தண்டனை .

இப்படி தண்டனைகள் கொடுக்கபட்டாவிட்டால் மானிடம் செத்து உலகம் அழிந்தே விடும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்குழுக்கள் அடுத்த தேர்தலில் இருந்து.. புலிச்சாயம் பூசிய..தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியில் நின்று தேர்தலை சந்திக்கப் போகின்றன. மக்களே உங்களைப் பார்த்து அவர்கள் நேற்று வரை செய்த அநியாயத்துக்கு மன்னிப்பும் கேட்டிட்டினமாம்.. என்று ஒட்டுக்குழு முக்கியஸ்தர் கனடாவில் இருந்து சுயபிரகடனம் எழுதி இருக்கிறார். சும்மா இல்ல.. தாங்களே தங்களை விமர்சனம் பண்ணிட்டு மன்னிப்புக் கேட்டிருக்கினமாம். எனவே அடுத்த தேர்தலில் இருந்து ஒட்டுக்குழுக்கள் தனிய நின்று தனித்து ஆட்சியமைக்க மக்களாகிய நீங்கள் ஓட்டுப் போட்டு வீணாப் போங்கள்... என்று அறைகூவல் விடுக்கப்படுகிறது. tw_blush::rolleyes:

1 minute ago, arjun said:

புலி வாந்தி இல்லை செய்த கொலைகளுக்கும் அநியாததிற்கும் உலகம் கொடுத்த தண்டனை .

இப்படி தண்டனைகள் கொடுக்கபட்டாவிட்டால் மானிடம் செத்து உலகம் அழிந்தே விடும். 

ஓஓ.. அப்படின்னா... சிறிசபாரட்னம்.. உமா மகேஸ்வரன்.. பத்மநாபா.. அமிர்தலிங்கம்.. யோகேஸ்வரன்.. புளொட் மாணிக்கதாசன்.. புளொட் மோகன்.. இப்படி இன்னோரென்ன ஒட்டுக்குழுக்களை சாகடித்து தண்டனை வழங்கியதும்.. மானிடம் உய்ய உலகம் செய்த காரியம் தானே. இப்ப அதுக்கெல்லாம்.. எதற்கு அஞ்சலி. 

 

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்தது தமது வயிறு வளர்க்க கொடி பிடித்து கொலைகள் நடக்கும் போது விசில் அடித்து போராட போனவர்களை ஓட்டுகுழு ஓணான் குழு என்றவர்களுக்கு கிடைத்த பரிசுதான் இன்று நாட்டில் நடக்கும் அரசியல் .

உங்களால் நாட்டில் இனி எதுவும் செய்ய  முடியவே முடியாது .

முடிந்தால் நீங்களும் மனம் திருந்தி மன்னிப்பு கேட்டால் சிறு விமோசனம் என்றாலும் கிடைக்கும் .

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்குழு ஒட்டுக்குழு தான் எப்போதும். இன்றும் கூட அரசியலில் ஒட்டுக்குழு

 

வாலுகளை வெளியில் விட்டு ஓட்டுகுழுகளை உள்ளே எடுக்கும்போது விளங்க்கியிருக்கவேண்டும் யாருக்கு மக்கள் ஆதரவு இருக்கு என்று ?

தேர்தல் வேறு அதை நிரூபித்தது .

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்குழுக்களுக்கு உள்ள பேராதரவை கருத்தில் கொண்டு தான் ஒட்டுக்குழுக்கள்.. சொந்தக் கட்சி.. கொடி.. எல்லாத்தையும் கைவிட்டிட்டு.. புலிச்சாயம் பூசிய கூட்டமைப்புக்குள் குடிபுகுந்தவை போலும். 

மக்கள் இப்பவும் சிவப்பு மஞ்சளுக்கு தான் வாக்குப் போடினம்.. என்று தெரிஞ்சு ஒட்டுக்குழுக்கள் ஒட்டுண்ணிகளாக ஒட்டிக்கொண்ட இடம் தான் கூட்டமைப்பு. மிக வரைவில்.. ஒட்டுக்குழுக்கள் மீண்டும்.. தமக்குள் குத்துவெட்டுப் பட்டுக்கொண்டு கூட்டமைப்பை விட்டு ஓடும் நிலை வரும். 

அப்போது கூட்டமைப்பும் தமிழ் மக்களின் அரசியலும் மீண்டும் சரியான பாதைக்குப் போகும். சோர அரசியலுக்கு முடிவு வரும். 

இப்ப கூட்டமைப்பில்.. நாய் பன்றி நின்றாலும் மக்கள் வாக்குப் போடுவினம். சங்கரி போன்ற பிசாசுகளை இனம்கண்ட மக்கள்.. சில ஒட்டுக்குழு காட்டேரிகளுக்கு வாக்குப் போட்டது தொடர்பில்.. தான் விமர்சனம் வைக்கப்பட வேண்டி இருக்குது.  ஒட்டுக்குழுக்கள் ஒன்றும் திருந்திறதா தெரியல்லை.. இப்பவும் தங்கட துரோகங்களை முன்னிறுத்தும் நினைவஞ்சலிகளும்.. கூட்டங்களும் தான். அங்க சனத்தை விலைக்குக் கூட வாங்க முடியல்ல. தாங்களே தங்களுக்கு வேண்டியவையைக் கூப்பிட்டு நடத்துவது கூட்டம்.. சன நாய் அகம் என்று ஆகிப்போச்சுது. 

இவை எல்லாத்துக்கும் ஒரு முடிவை காலம் மிக விரைவில் எழுதும். மாற்றம் ஒன்றே மாறாதது. அதில் ஒட்டுக்குழுக்கள் அழிந்து ஒழிவதும் நடக்கும். tw_blush:tw_angry:

ஆயுத போராட்டம் நடக்கும் போது என்ன நடக்கின்றது என்று தெரியாமல் எப்படி அன்னியமாக இருந்தீர்களோ அது போலத்தான் இன்றும் நாட்டில் என்ன நடக்கின்றது என்று தெரியாத நிலை .

நாட்டில் இருந்து அரசியல் செய்யும் கூட்டமைபிற்கு நல்ல விளக்கம் .உங்கள் பிரச்சனையே அதுதான் கற்பனையில் முப்பது வருடங்கள் ஓடிவிட்டது இனியாவது நிஜத்திற்கு வாருங்கள் .

கடந்த தேர்தலில் விருப்பு வாக்கு ஒன்று ஒரு விடயம் இருந்தது அது கூடவா தெரியாது .

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்குழுக்களாக சிங்கள.. ஹிந்திய இராணுவங்களிடம் சரணடைந்து.. புலி அழிப்பு... என்று சொந்த இன அழிப்புக்கு ஆயுதம் தூக்கி சொந்த மக்களை பலவகையிலும் துன்புறுத்தி... இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் காட்டிக்கொடுப்பு.. ஆயுத.. அராஜக அரசியல் செய்து.. அங்கெல்லாம் மக்களால் அடித்து விரட்டப்பட்ட ஒட்டுக்குழு ஆட்கள் தான்.. பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பதுங்கினர்.

இறுதியில்... எல்லாம் தேர்தல்களிலும் மக்கள் விருப்பு வாக்குகளால்.. அலங்கரித்தது.. யார் சொந்த மக்களின் மனங்களில் உள்ளதை முன்னிறுத்தினார்களோ அவர்களே.

மாகாண சபை தேர்தலில்.. அனந்தி சசிதரன்... அரசியல் அனுபவமே அற்ற விக்கி ஐயா வாங்கிய வாக்குகளை விட.. 35 வருடம் அரசியல் செய்த.. ஒட்டுக்குழுக்கள் புலிச் சாயம் பூசியும் வாங்கின வாக்குகள் உண்மை பேசும்.

அதேபோல்... பாராளுமன்றத் தேர்தலில்.. சிறீதரன் வாங்கியதில் பாதிகூட வாங்க முடியவில்லை புலிச் சாயம் பூசிக் கொண்டு கூட்டமைப்பில் பதுங்கிக் கொண்ட ஒட்டுக்குழுக்களால். 

இதே ஒட்டுக்குழுக்கள்.. மீண்டும்.. இந்த அஞ்சலிகளோடு அவற்றின் புலிச் சாயம் வெழுக்க ஆரம்பித்துவிட்ட நிலையில்.. எனி வாங்கப் போகும் வாக்குகள் என்ன என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.

அமரர் சிறீசபாரட்னத்துக்கு அஞ்சலி செய்ய ஒரு பொதுமகன் போகேல்ல. மக்களுக்குத் தெரியும்.. எது துரோகம்.. என்பது. மக்கள் அதனைக் கண்டே வந்தார்கள். அந்தத் துரோகம்.. இனத்தைப் பாதிக்கும் என்பதால் அதனை நீள விடக்கூடாது என்று தான் மக்கள் சில சகிப்புத் தன்மைகளோடு தேர்தல்களில் வாக்களித்தனர். ஒட்டுக்குழுக்கள் அதனை எல்லாம்.. மறந்து.. தாம் புலிச்சாயம் பூசிக் கொண்டிருப்பதையும் மறந்து.. இப்போ.. மீண்டும் துரோகத்தனத்தை முன்னிறுத்திக் கொண்டு மக்களிடம் போனால்.. நிச்சயம்.. தாயக மக்களும் சரி புலம்பெயர் மக்களும் சரி இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

அதனைக் காலம் எடுத்துரைக்கும். ஏலவே களத்தில் உள்ள ஒட்டுக்குழுத் தலைமைகளுக்கு இது விளங்கும். ஆனாலும் வெளிநாடுகளில் இருக்கும் பழைய சிந்தனையில் வாழும் ஒட்டுக்குழுக்களுக்கு தான் இன்னும்.. புலி வாந்தியில் அரசியல் நடக்கும் என்ற பகற்கனவு நிரந்தரமாகக் குடி கொண்டிருக்கிறது. அது எனி வேலைக்கும் ஆகாது என்பது உள்ளூர் ஒட்டுக்குழுக்கள் நன்கே தெரிந்து தான் வைத்துள்ளன. அதனால் தான் இந்த அஞ்சலி நிகழ்வுகளிலும் ஒட்டுக்குழுக்கள் மிக எச்சரிக்கையாக பதங்களைக் கையாண்டு வருகின்றன. ஆனால் அகதிகளாகப் பதுங்கிக் கிடக்கும்..புலி வாந்திகளுக்கு அந்த எச்சரிக்கை கண்ணில் புலப்படுவதில்லை. ஏனெனில்.. அவர்களின் ஒரே நோய்.. புலி வாந்தி மனோவியாதி.  tw_blush:tw_warning:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, arjun said:

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்தது தமது வயிறு வளர்க்க கொடி பிடித்து கொலைகள் நடக்கும் போது விசில் அடித்து போராட போனவர்களை ஓட்டுகுழு ஓணான் குழு என்றவர்களுக்கு கிடைத்த பரிசுதான் இன்று நாட்டில் நடக்கும் அரசியல் .

உங்களால் நாட்டில் இனி எதுவும் செய்ய  முடியவே முடியாது .

முடிந்தால் நீங்களும் மனம் திருந்தி மன்னிப்பு கேட்டால் சிறு விமோசனம் என்றாலும் கிடைக்கும் .

 

அண்ணை கேக்கிறன் எண்டு குறை நினைக்கப்படாது........ஏனண்ணை நீங்கள் ஐரோப்பாவிலை சுழண்டடிச்சுப்போட்டு கனடாவுக்கு களவாய் ஓடினனீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, arjun said:

புலி வாந்தி இல்லை செய்த கொலைகளுக்கும் அநியாததிற்கும் உலகம் கொடுத்த தண்டனை .

இப்படி தண்டனைகள் கொடுக்கபட்டாவிட்டால் மானிடம் செத்து உலகம் அழிந்தே விடும். 

குமாரசாமி அண்ணர் அடிக்கடி எழுதுவார் செம்பு தூக்கிற கூட்டம் என்று.
இது சாதாரண ஒரு வசனம் இல்லை.
தமிழனின் வரலாறே இதுதான்.
நாயக்கர்கள் தமிழனை போட்டுதள்ளவில்லை .... இவர்கள்தான் செம்பு தூக்கி அவர்களை 
கூட்டிவந்தார்கள்.

ஒரு இன படுகொலையையே அரங்கேற்றிய சிங்கள பேரினவாதம் 
ஒரு சரரால் எப்படி பாதுகாக்க பட்டு வெள்ளை அடிக்க படுகிறது என்பதை 
புரிந்து கொள்ளுங்கள்.

பாலஸ்தீனிய மக்களின் வாழ்வு எப்படி திட்டமிட்டு அழிக்க பட்டது 
என்பதில் இருந்தோ ருவாண்டா இன படுகொலையில் இருந்தோ தமிழன் 
எதையும் கற்றுகொண்டதிலை. அடுத்தவனுக்கு நடந்தால் எனக்கு என்ன???
என்ற நிலைப்பாடு எல்லா தமிழரிடமும் இருக்கவே செய்கிறது.

44ஆயிரம் வரையான தன்னலமற்ற போராளிகளின் உயிராலும் குருதியாலும் 
தோய்ந்து தோய்ந்து எழுதபட்ட ஒரு விடுதலை போரை.
ஒரு தமிழன் தமிழால் இப்படி இரண்டே வசனத்தில் எழுதிவிடுகிறான்.
எழுதியவனின் அறிவு சார்வில் விவாதம் செய்வதே வீண்.
காரணம் காட்டில் வாழும் எந்த மிருக கூட்டமும் இப்படி ஒன்றை நினைத்ததே இல்லை.
இது அறிவு சார்ந்தது என்று எதை  வைத்தும் நிறுவ முடியாது.

இயற்கையில் தமிழனின் பிறப்பில் எதோ ஒரு குறைபாடு இருக்கிறது 
கண்டறியப்பட வேண்டிய ஒன்றாக அது இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
இது இன்றோ நேற்றோ வந்ததல்ல   வராலறு முழுதும் இருக்கிறது.
எப்போதும் ஒரு ஜி ஜி பொன்னம்பலமும் அவன் சார்ந்த தமிழரும் 
தமிழ் இனத்தில் மட்டும் பிறந்து கொண்டே இருக்கிரார்கார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இங்கே இருந்து கொண்டு மாரித் தவக்கை மாதிரி கத்திக் கொண்டு இருக்க வேண்டியது தான்...இன்னும் கொஞ்ச காலத்தில் ஊரில் இருக்கும் எல்லா இயக்கத்தையும் சேர்ந்த முன்னாக் போராளிகள் ஒன்று சேர்ந்து போராடித் தான் அங்குள்ள மக்களுக்கு ஏதாவது பெற்றுக் கொடுப்பார்கள்...நாங்கள் அப்பவும் இங்கிருந்து ஏதாவது சொல்லிக் கொண்டே தான் இருப்பம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.