Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் 26 வருடங்களின் பின் சொந்த இடங்களில் மீள ஆரம்பிக்கப்பட்ட இரு பாடசாலைகள்

Featured Replies

யாழில் 26 வருடங்களின் பின் சொந்த இடங்களில் மீள ஆரம்பிக்கப்பட்ட இரு பாடசாலைகள்

( மயூரன் )

யாழ்.நடேஸ்வரா கல்லூரி மற்றும் யாழ்.நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயம் ஆகியன கடந்த 26 வருடங்களுக்குப் பின்னர் சொந்த இடங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

172ab7bb-68c5-4216-809a-171fe7658825.jpg

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 26 வருடங்களுக்கு முன்னர் அப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர். 

அதனை தொடர்ந்து குறித்த பாடசாலைகள் இரண்டும் 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி முதல் சொந்தக்கட்டடங்களில் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது.

5db734d8-0ec1-4c43-9a14-896cf931497b.jpg

அதனைத் தொடர்ந்து அப்பகுதியினை  கடந்த 26 வருடகாலமாக இராணுவத்தினர் கையகப்படுத்தி உயர் பாதுகாப்பு வலயமாக பிரடகனப்படுத்தி இருந்தனர்.

e0de48da-b9f7-4e8d-add3-0cd4f6188705.jpg

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 12 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பாடசாலையை மீளவும் சொந்த இடத்தில் இயங்குவதற்கு அனுமதித்தார்.

52430cf7-3381-42f8-a8b7-d9c7c87c5011.jpg

இருந்த போதிலும் இன்றைய தினமே பாடசாலை சொந்த இடத்தில் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளர்  செ. சந்திரராஜா தலைமையில் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வில் அதிதிகளாக யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சோ. சேனாதிராஜா, மற்றும் ஈ.சரவணபவன்,  வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்  தம்பிராசா குருகுலராசா, மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன் , எம்.கே.சிவாஜிலிங்கம் , பா.கஜதீபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

அத்துடன் பாடசாலை பழையமாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் ஆகியோரும் இதன் போது கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/7098

  • கருத்துக்கள உறவுகள்

போற்றுதற்குரிய  செயல்...!

  • கருத்துக்கள உறவுகள்

வரப்புயர நீர் உயரும். வரம்பே இல்லாது நீர் பாச்சுகிறது சிங்கள அரசு. நாங்களும் மகிழ்ந்து மாலைபோட்டு வரவேற்கிறோம். முதலில் தமிழருக்கு நிலையான பாதுகாப்பு வேண்டும். அதன்பிறகே செய்யப்படுவன எல்லாம் நிலைத்து நிற்கும். 

மிகமிக நல்லதொரு விடயம் நடந்துள்ளது.

வடமாகாண சபையின், குறிப்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் உண்மைகளை உரக்க கூறிவந்ததன் பயன் தான் இந்த மகிழ்ச்சியான தருணம்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் வெறுமனே பேசுவதில்லை. பேசும் ஒவ்வொரு வரியையும் ஆவணப்படுத்தி, சந்திக்கும் வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் அனைவரிடமும் ஏதாவது சில ஆவணங்களை ஆதாரங்களுடன் கொடுக்கும் வழக்கமுடைய அற்புத மனிதர்.  

தற்போது தமிழின விரோதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் அவருக்கு தமிழின விரோதிகளின் தூண்டுதல்களால் ஒருசிலர் நெருக்கடிகளை கொடுக்க முனைந்தாலும், விலைபோகாத நேர்மையான மக்கள் அவருக்கு என்றும் உறுதுணையாக இருப்பர்.

  • கருத்துக்கள உறவுகள்

போற்றுதற்குரிய நல்ல  செயல்

5 hours ago, போல் said:

போல் இதற்கும் விக்னேஸ்வரனுக்கும் சம்பந்தமில்லை. இது மைத்திரியின் முடிவினால் நேரடியாக  நடந்த ஒரு விடயம். இராணுவம் தமது 21 அலுவலகங்கள் காங்கேசன்துறையில் இருப்பதாக கூறி இழுபறியாக இருந்தது. பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் இருந்துவந்த நேரடி கட்டளைகள் மூலமே இது சாத்தியமானது. திறப்பு விழாவிற்கு அனந்தி, மாவை வந்தது அவர்கள் பழைய மாணவர்கள் என்பதால். 

4 minutes ago, ஜீவன் சிவா said:

மைத்திரியின் முடிவுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களின் தொடர்ச்சியான அழுத்தங்கள் மட்டுமே தான் காரணம் என்பதை, என்ற உண்மையை மறைப்பது அழகல்ல.

1 minute ago, போல் said:

மைத்திரியின் முடிவுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களின் தொடர்ச்சியான அழுத்தங்கள் மட்டுமே தான் காரணம் என்பதை, என்ற உண்மையை மறைப்பது அழகல்ல.

இல்லை, இது சர்வதேசத்தால்   கொடுக்கப்பட்ட அழுத்தம்.

வரும் மார்ச்சுக்கு முன்பாக சிங்களம் விரும்புதோ இல்லையோ சிலவிடயங்களை செய்தே ஆகவேண்டிய நிர்பந்தம். முந்தை நாளும் மயிலிட்டியை   விட மாட்டோம் என்று இராணுவ அதிகாரி கூறியிருந்தார். விட்டே ஆகவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது அரசு.

Just now, ஜீவன் சிவா said:

இல்லை, இது சர்வதேசத்தால்   கொடுக்கப்பட்ட அழுத்தம்.

சர்வதேசம் தானாக முன்வந்து அழுத்தம் கொடுக்கவில்லை!

தன்னை சந்தித்த அனைத்து சர்வதேச முக்கியஸ்தர்களிடமும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் ஆவணங்கள், ஆதாரங்களுடன் கொடுத்த தொடர்ச்சியான அழுத்தங்கள் மட்டுமே தான் காரணம் என்பதை, என்ற மாபெரும் உண்மையை மறைப்பது கொஞ்சமும் அழகல்ல.

15 minutes ago, போல் said:

விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த முதல் வருடத்தில் நான் உங்களை விட அவரை அதிகம் நம்பியும், நேசித்தும் இருந்தேன். அவரது நிர்வாகத் திறமை அற்ற ஆட்சியை பார்த்துதான் மாறினேன். வெறும் வாய் சவடால்தான் வேறு ஒன்றும் இல்லை. ஆனால் நல்ல மனிதர். நல்ல அரசியல்வாதியுமில்லை, நல்ல ஆளுமை உள்ள தலைவரும் இல்லை, நல்ல நிர்வாகத் திறனுடைய ஒரு  அதிகாரியும் இல்லை அவர் என்பது எனது இப்போதைய கணிப்பு. அவர் நினைத்திருந்தால் மாகாணசபையை வைத்து எவ்வளவோ செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.

சில ஆதாரங்கள் இத்திரியில் பகிர்ந்து உள்ளேன். பாருங்கள்.

Edited by ஜீவன் சிவா

5 minutes ago, ஜீவன் சிவா said:

விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த முதல் வருடத்தில் நான் உங்களை விட அவரை அதிகம் நம்பியும், நேசித்தும் இருந்தேன். அவரது நிர்வாகத் திறமை அற்ற ஆட்சியை பார்த்துதான் மாறினேன். வெறும் வாய் சவடால்தான் வேறு ஒன்றும் இல்லை. ஆனால் நல்ல மனிதர். நல்ல அரசியல்வாதியுமில்லை, நல்ல ஆளுமை உள்ள தலைவரும் இல்லை, நல்ல நிவாகத் திறனுடைய ஒரு  அதிகாரியும் இல்லை அவர் என்பது எனது இப்போதைய கணிப்பு. அவர் நினைத்திருந்தால் மாகாணசபையை வைத்து எவ்வளவோ செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.

உங்கள் கணிப்புகள் நிலையற்றது என்பதை நீங்களே ஒத்துக் கொண்டுள்ளீர்கள். நன்றி.

சிங்கள இனவெறியர்களும், தமிழின விரோதிகளும், போர்க் குற்றங்களுக்கு பெரும் துணை போன நாடுகளும், போர் குற்றங்களை மறைக்க முயலும் நாடுகளும், குழுக்களும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவைகளைப் பார்த்து நடுங்குவது ஏன்? எதனால்?

அரசியல் அனுபவம் அற்ற அவர்,  பழுத்த அரசியல்வாதிகளால் செய்ய முடியாத பலவற்றை செய்து வருகிறார்.

8 minutes ago, போல் said:

உங்கள் கணிப்புகள் நிலையற்றது என்பதை நீங்களே ஒத்துக் கொண்டுள்ளீர்கள். நன்றி.

சிங்கள இனவெறியர்களும், தமிழின விரோதிகளும், போர்க் குற்றங்களுக்கு பெரும் துணை போன நாடுகளும், போர் குற்றங்களை மறைக்க முயலும் நாடுகளும், குழுக்களும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவைகளைப் பார்த்து நடுங்குவது ஏன்? எதனால்?

உண்மை நான் ஜோசியத்தில் நம்பிக்கை இல்லாதவன். எனது கணிப்புகள் மனிதரது நடவடிக்கையினை பொறுத்து மாறும். அதுதான் சரியும் கூட.. எனது அப்பா கூட்டணிக்கு வாக்களித்ததற்காக நான் வாக்களிக்க வேண்டும் என்பவனில்லை நான். எனது கருத்துக்கள் காலத்துடன், காலத்தின் நிலைமை, காலத்தின் தேவை கருதி மாறும். மாறிக்கொண்டே இருக்கும் - ஆனால் எமது மக்களின் நல்வாழ்வு குறிக்கோளாக இருக்கும், அது மாறாது.

போல் விக்னேஸ்வரனை பார்த்து யாரும் பயப்படவும் இல்லை, வெருளவும் இல்லை. இப்போதெல்லாம் இங்கு வரும் மற்றைய நாட்டு பிரதிநிதிகள் இவரை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவதுமில்லை. இதுதான் யதார்த்தம். 

20 minutes ago, ஜீவன் சிவா said:

விக்னேஸ்வரனை பார்த்து யாரும் பயப்படவும் இல்லை, வெருளவும் இல்லை. இப்போதெல்லாம் இங்கு வரும் மற்றைய நாட்டு பிரதிநிதிகள் இவரை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவதுமில்லை. இதுதான் யதார்த்தம். 

ஜீவன் சிவா! நீங்கள் நீங்களாகவே இருங்கள். அது தான் உங்களுக்கு ஆரோக்கியம்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் என்ன செய்கிறார் சம்பந்தன் என்ன செய்கிறார், யாரைப் பார்த்து யார் பயப்படுகிறார்கள் என்பதை தமிழ் மக்களும் உலகமும் அறியும்.

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்கச் செயலாளர் ஆளுநருடன் கலந்துரையாடல்

Published: Thursday, 02 June 2016 00:00 | Print

26797548374_396931a89f_m.jpgநோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்கச் செயலாளர் டோரே ஹெடர்ம் உள்ளிட்ட குழுவினர் வட மாகாண ஆளுநர் ரெஜினோட் குரேயை 01 யூன் 2016 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

வடக்கில் நோர்வே அரசு மேற்கொண்டுவரும் உதவித் திட்டங்கள் தொடர்பாக இதில் கலந்துரையாடப்பட்டது.

ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவனும் இதில் கலந்து கொண்டார்.

http://www.np.gov.lk/tamil/index.php/2010-06-27-02-34-18/2011-01-05-04-05-42/2817-2016-06-02-00-00-11

உலக வங்கி அளித்த  5 கோடி டொலர் நிதியில், மேற்கொள்ளும் யாழ் நகர அபிவிருத்திக்கான இந்த திட்டத்துக்கான வரைவுகளைத் தயாரிக்கும் ஒரு கூட்டம் . இலங்கை நாணயப் பெறுமதியில், கிட்டத்தட்ட 800 கோடி ரூபாவில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டம். போர் முடிவுக்கு வந்த பின்னர், நகர அபிவிருத்தி ஒன்றுக்காக வடக்கில் மேற்கொள்ளப்படும் அதிகபட்ச நிதி ஒதுக்கீடாக இதனையே கருதலாம். ஆனால், இந்தக் கூட்டத்தை வடக்கு மாகாண முதலமைச்சரும், அமைச்சர்களும் புறக்கணித்திருக்கின்றனர்.

மக்களின் நல்வாழ்வா சொந்த அரசியலா?

யாழ் நகர அபிவிருத்திக்கான இந்த திட்டத்துக்கான வரைவுகளைத் தயாரிக்கும் ஒரு கூட்டம் நடக்க வேண்டிய இடம் மக்களால் தெரிந்த மாகாணசபை அலுவலகத்தில் தான். சிங்கள இனவெறி அரசால் நியமிக்கப்பட்ட சிங்கள ஆளுநர் இல்லத்தில் அல்ல.

மானம், ரோஷம் இழந்து நகர அபிவிருத்தி தேவை இல்லை.

முதலமைச்சர் விக்னேஸ்வரனும் எலும்புத் துண்டின் பின்னால் அலையும் நாய்போல் அலைய வேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனும் அப்படி செய்திருந்தால் இன்று தமிழர்களின் நடேஸ்வரா கல்லூரியோ, 1000 ஏக்கர் நிலமோ மீண்டும் தமிழர்களுக்கு கிடைத்திருக்காது. 

வடக்கு மாகாண ஆளுநராக செயற்பட்ட எச்.எம்.ஜி.எஸ்.பலிஹக்கார தனது கடைசி உரையில் கூறியதையே ரெஜினோல்ட் குரேயும் கூறிவிட்டு போவார். இணைப்பு கிடைத்தால் இணைக்கின்றேன். அதாவது வட மாகாணசபையுடன் சேர்ந்து எந்த திட்டத்தையும் செயல் படுத்த முடியவில்லை. எல்லாவற்றிற்கும் முட்டுக்கட்டை போடுவார்கள் என்று. இங்கு விக்னேஸ்வரன் தன்னை முதன்மை படுத்தாத பல கூட்டங்களுக்கு செல்லாமல் விட்டிருக்கிறார். இதைதான் தப்பு என்கிறேன்.

7 minutes ago, போல் said:

யாழ் நகர அபிவிருத்திக்கான இந்த திட்டத்துக்கான வரைவுகளைத் தயாரிக்கும் ஒரு கூட்டம் நடக்க வேண்டிய இடம் மக்களால் தெரிந்த மாகாணசபை அலுவலகத்தில் தான். சிங்கள இனவெறி அரசால் நியமிக்கப்பட்ட சிங்கள ஆளுநர் இல்லத்தில் அல்ல.

இது உலகவங்கி அரசினூடாக கொடுக்க விரும்பிய உதவி, இது ஆளுநர் ஊடாகத்தான் வரும். அதுசரி சட்ட ரீதியாக, அரசியலமைப்பு ரீதியாக ஆளுநருக்கா முதலமைச்சருக்கா அதிக அதிகாரம்?

5 minutes ago, ஜீவன் சிவா said:

இது உலகவங்கி அரசினூடாக கொடுக்க விரும்பிய உதவி, இது ஆளுநர் ஊடாகத்தான் வரும். அதுசரி சட்ட ரீதியாக, அரசியலமைப்பு ரீதியாக ஆளுநருக்கா முதலமைச்சருக்கா அதிக அதிகாரம்?

அரசியலமைப்பை படித்துப் போட்டு விடையை சொல்லுங்கள்! அதோடு காணி, போலிஸ் அதிகாரம் பற்றியும் கொஞ்சம் எட்டிப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பல கோடி நிதி இன்னும் வட மகாணத்தில் பயன்படுத்தப்படாமல் மீண்டும் திரும்பி செல்லவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. 

இந்த பாடசாலை திறப்பு முளுக்காரணம் வடக்கு முதல்வரோ வட மாகாண சபையோ அல்ல  இது ஜனாதிபதி மைத்திரியின் அவர்களின் உத்தரவுக்கமையவே இந்த இடம்  ஒப்படைக்கப்பட்டது இன்னும் பல இடங்களையும் ஒப்படைக்கவுள்ளனர் வரும் காலத்தில்  

வட மாகாண சபை வெறும் பிரேரணைகளை மட்டுமே நன்றாக செயற்படுத்தி வருகிறது  ஆனால் அரசாங்கம் நினைத்தால் தான் விடுவிக்கப்படும்??

2 hours ago, முனிவர் ஜீ said:

முதலமைச்சர் விக்னேஸ்வரன் பற்றி அவ்வப்போது திட்டமிட்ட சேறடிப்புச் செய்திகள் தமிழின விரோதிகளின் தூண்டுதல்களால் வெளிவருகின்றன. குறிப்பாக தமிழினப் படுகொலைகளுக்கு பெரும் துணை நின்ற இந்தியாவின் சில தமிழின விரோத பத்திரிகைகள், அவர் கட்சி ஆரம்பிக்க உள்ளார் போன்ற பொய்ச் செய்திகளை வெளியிடுகின்றன. அதில் ஒன்று தான் நிதி திரும்பல் பற்றி ஆதாரம் இல்லாமல் வரும் செய்திகள். இது ஈழத் தமிழினம் அழிய வேண்டும் என நினைப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகவே இருக்கும்.

அது போலவே சிங்கள இனவெறி அரசுகள் சிலநூறு ஏக்கர் காணிகளை இழுத்தடித்து இழுத்தடித்து மனமின்றி விடுவிப்பதற்கு முக்கிய காரணம், முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களின் தொடர்ச்சியான அழுத்தங்கள் மட்டுமே தான் என்ற உண்மையை மறைப்பது அழகல்ல.

வட மாகாண சபையின் பிரேரணைகள் வெறும் அறிக்கைகள் இல்லை. அவற்றுக்கு தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக பிரதிநிதிகளின் ஒருமித்த குரல் என்ற சட்ட அந்தஸ்து உள்ளது. இது போன்ற உண்மைகளை மறைப்பது தமிழின விரோதிகளுக்கும், தமிழின அழிப்பை மேற்கொள்பவர்களுக்கும் மட்டுமே உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

சுற்றி சுற்றி அங்கேயே நிற்கிறீர்களே அண்ணாச்சி?

வட மாகாண முதலமைச்சரின் அழுத்தம் இன்னும் பலமாக அமையட்டும் அது பல ஏக்கர் காணிகளை விடு  வித்து மக்கள் மகிழ்ச்சியாக குடியேறி தங்கள் நிரந்தர வாழ்க்கையை சந்தோசமாக வாழட்டும்

இது வரையில் வட மாகாண  சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் தான் அதிகமாக காரணம்  என்றால் இன்னும் பல பிரேரணைகள் நிறைவேற்றட்டும் ஆனால்  அரசாங்கத்தின் கையெழுத்து இல்லாமல் ஒரு காணி துண்டு கூட  மக்களின் வாழ்க்கைக்கு வழங்க படமாட்டாது அண்ணே  

இதுவே மகிந்தவின் ஆட்சியென்றால் இந்த பிரேரணைகளின் நிலைமை  பொட்டியில் வைத்த பாம்பு போல பாம்பை எடுத்து காட்டிவிட்டு பெட்டியில் வைக்க வேண்டிய நிலைமைதான்  மகுடி யார் கையில் இருக்கும் என்பதனை நீங்கள் அறீவீர்கள்?

Edited by முனிவர் ஜீ

8 minutes ago, முனிவர் ஜீ said:

அரசாங்கத்தின் கையெழுத்து இல்லாமல் ஒரு காணி துண்டு கூட  மக்களின் வாழ்க்கைக்கு வழங்க படமாட்டாது

சுற்றி சுற்றி முழுப் பூசணியை சோற்றில் மறைக்க நிக்கிறீர்கள்! வட மாகாண முதலமைச்சரின், வட மாகாணசபை பிரேரணைகளின் அழுத்தம் இல்லை என்றால் ஒரு இன்ச் காணியும் விடுபட்டிருக்காது.
மைத்திரி கும்பல் பூநகரியிலும், முல்லைத்தீவிலும் மேலும் காணிகளை பறிக்க முயலுவது ஒருத்தருக்கும் தெரியாது என்பது உங்கள் நினைப்பு. பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டுவிடாது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, போல் said:

திரு கோணமலை பகுதியில் நடப்பதுதான்  என்ன அண்ணாச்சி அந்த நிலவரம் தெரியுமா என்ன?

இன்னும் ஏழாயிரம் சிங்கள முஸ்லீம் குடும்பங்கள்வடக்கில் குடியேற விரும்பும் தெரிவித்துள்ளார்கள்  வட மாகாண சபையின் நிலைப்பாடுதான் என்ன  முல்லைத்தீவு பகுதியில் கட்டப்பட்டுள்ள விகாரைக்கு இன்னும் பல ஏதாவது பிரேரணை நிறைவேற்றி தடுக்க வழி செய்யவும் சொல்லுங்கள் வட மாகாண சபைக்கு 

வடக்கு முதல்வர் மீது எங்களுக்கு எந்த கோபமும் கிடையாது ஆனால் மறுத்து போக நினைப்பது பலர்  இன்னும் பாம்பு காடுகளில் தான்  வாழ அநாதரவராக வாழ வழி சமைக்கும் ( தமிழ் மக்கள்)☝

உலக நாடுகளிடையே இலங்கைக்கான போட்டி இதில் வடகிழக்கு பிரச்சியை என்பதை விட தமிழர்களின் பிரச்சனை தீர்க்கப்டடவேண்டும் என்ற அழுத்தம் அதிகமாக உள்ளதும் ஒரு காரணம் ?

11 minutes ago, முனிவர் ஜீ said:

முல்லைத்தீவு பகுதியில் கட்டப்பட்டுள்ள விகாரைக்கு இன்னும் பல ஏதாவது பிரேரணை நிறைவேற்றி தடுக்க வழி செய்யவும் சொல்லுங்கள் வட மாகாண சபைக்கு

வட மாகாணசபை தமிழின விரோதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுவதில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, போல் said:

வட மாகாணசபை தமிழின விரோதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுவதில்லை!

அது யாரு? 

அது  யாராக இருந்து விட்டு போகட்டும்

எங்களுக்கு மக்கள்  (  தமிழ் ) தங்கள் காணிகளில் நிரந்தரமாக குடியேறி வாழ வேண்டும் . 

போரில் வெற்றி கொண்ட அரசாங்கத்திடம் உடனடியாக கைப்பற்றிய இடங்களை விட்டு  விட்டு போக வேண்டும் என்று சொன்னால் முடியாத காரியம் கிடைக்கும் வரையிலும் லாபம் அது  காணிகளை இழந்து  பல வருடங்களாக அநாதையாக வாழுகின்ற மக்களுக்கு தானே தெரியும். 

அந்த நிலையில் ஒரு துண்டு நிலம்  அரசாங்கத்திடம் இருந்து கிடைக்குமானால் சந்தோசமே ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.