Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை - அமெரிக்காவில் சுமந்திரன் குற்றச்சாட்டு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அரசாங்கம் உறுதியளித்த மறுசீரமைப்பு தொடர்பான செயற்பாடுகள் மந்த கதியிலேயே முன்னெடுக்கப்படுவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  தெரிவித்துள்ளார். இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையில், அமெரிக்க காங்கிரஸின் ஏற்பாட்டில், வொஷிங்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்விலேயே, சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் சொற்ப அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், உண்மையான மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு, அரசாங்கம் வழக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லையென சுமந்திரன் இதன்போது தெரிவித்தார். குறிப்பாக காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற அரசாங்கத்தால் நிறைவேற்றக்கூடிய விடயங்கள்கூட இதுவரை இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்தோடு, யுத்தக் குற்ற விசாரணை மற்றும் காணாமல் போனோர் விவகாரம் என்பனவற்றில், மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் எனவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பில் அரசாங்கம் முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுத்தாலும், அன்றாடம் இடம்பெறும் பல பிரச்சினைகள் காரணமாக, மக்களுக்கு இன்னும் எவ்வித விமோசனமும் கிடைக்கவில்லையென சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=159661&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

கனடா பக்கம் போற ஐடியா இருக்கோ?

அவுசில் கங்காறுகள், கனடாவில் கரடிகள், பிரிட்டனில் சிங்கங்கள்.... :grin:

Edited by Nathamuni

2 hours ago, தமிழரசு said:

ஆட்சி மாற்றத்தின் பின்னர் சொற்ப அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், உண்மையான மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு, அரசாங்கம் வழக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லையென சுமந்திரன் இதன்போது தெரிவித்தார். குறிப்பாக காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற அரசாங்கத்தால் நிறைவேற்றக்கூடிய விடயங்கள்கூட இதுவரை இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உப்படி எல்லாம் கதைக்கப் படாது சுமந்திரன். அப்புறம் நாங்கள் எப்படி, எத வைச்சு  உங்களை துரோகி எண்டு திட்டிறது. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ஜீவன் சிவா said:

உப்படி எல்லாம் கதைக்கப் படாது சுமந்திரன். அப்புறம் நாங்கள் எப்படி, எத வைச்சு  உங்களை துரோகி எண்டு திட்டிறது. :grin:

சுமந்திரனை தொடர்ந்து கவனித்து வந்தால்,உங்களிடம் இருந்து இப்படியான கருத்துக்கள் வெளிவராது.

2 hours ago, Nathamuni said:

கனடா பக்கம் போற ஐடியா இருக்கோ?

அவுசில் கங்காறுகள், கனடாவில் கரடிகள், பிரிட்டனில் சிங்கங்கள்.... :grin:

கனடாவில் வாலுகளெல்லாம் வாலாட்ட முடியாது  .

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

உப்படி எல்லாம் கதைக்கப் படாது சுமந்திரன். அப்புறம் நாங்கள் எப்படி, எத வைச்சு  உங்களை துரோகி எண்டு திட்டிறது. :grin:

அட  ......பிறகென்ன சும் கதைச்சிட்டாரெல்லே..இனியென்ன தீர்வுதான் ..2017 ஆ ...2018 ஆ ...?  முதலில கேட்டு சொல்லுங்கோ இது அவரோட தனிப்பட்ட கருத்தா என்று. 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் சொன்ன குற்றச் சாட்டுக்களை விட மேற்குலகினருக்கு நன்றாகவே தெரியும்.

கனடாவில் பிரச்சனையில்லை இப்ப சொத்து எல்லாம் பங்கு போட்டுவிட்டார்கள் அவர்கள் இப்ப இந்தி சினிமாவில்தான் ஆர்வம் கிழமைக்கு கிழமை பாடகர் நடிகர்களை இறக்கி கறுப்பு பணத்தை வெள்ளையாக்குகிறார்கள் .சுமந்திரன் வந்தால் பிரச்சனையில்லை......கனடாவில் அரசியல் ஆர்வம் குறைந்துவிட்டது...

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் சந்திரிகா கதிர்காமரைத் தன்னுடைய அரசில்  வெளி நாட்டமைச்சராக்கித் தமிழரை அழித்தார்.
இன்று மைத்திரி சுமந்திரனை எதிர்க்கட்சியில் வைத்துக் கொண்டே தமிழரை அழிக்கின்றார்.
வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல அமெரிக்காவிற்கு சுமந்திரன் சாட்சி சொல்லுகின்றார்-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.