Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துருக்கி ராணுவத்தின் பிடியில்

Featured Replies

Turkey army group announces takeover on TV

The Bosphorus bridge was blocked off by military units
 
 The Bosphorus bridge was blocked off by military units

An army group in Turkey says it has taken control of the country, with bridges closed in Istanbul and aircraft flying low over Ankara.

PM Binali Yildirim earlier denounced an "illegal action" by a military "group", stressing it was not a coup. He said that the government remained in charge.

Traffic has been stopped from crossing both the Bosphorus and Fatih Sultan Mehmet bridges in Istanbul.

There are reports of gunshots in the capital Ankara.

Gunfire was also heard outside Istanbul police HQ and tanks are said to be stationed outside Istanbul airport. All flights are cancelled.

CNN Turk reported that President Recep Tayyip Erdogan was "safe" but did not elaborate.

A statement from the military group read out on NTV television said: "The power in the country has been seized in its entirety." Who represents the group remains uncertain.

A Turkish presidential source told Reuters that the statement was not authorised by the military command.

Mr Yildirim told NTV by telephone: "We are working on the possibility of an attempt. We will not allow this attempt.

"Those who are in this illegal act will pay the highest price," he added, saying it would not be correct to describe the move as a "coup".

He said: "There was an illegal act by a group within the military that was acting out of the chain of military command. Our people should know that we will not allow any activity that would harm democracy."

There are reports Turkey's top general has been taken hostage at the military HQ.

http://www.bbc.com/news/world-europe-36809083

  • தொடங்கியவர்
துருக்கியில் ராணுவம் ஆட்சியை பிடித்தது?

 

Tamil_News_large_1564833_318_219.jpg

அங்காரா: துருக்கி நாட்டில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.துருக்கியில் மக்களால் தேந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்கிறது. பிரதமராக பினாலி எல்ட்ரீம் உள்ளார். நேற்று துருக்கி டி.வி.சானல்களில் பரபரப்பு செய்திகள் வெளியாயின. இதில் துருக்கி ஆட்சியை ராணுவம் கைப்பற்றிவிட்டதாக கூறப்பட்டது. இது குறித்து மற்றொரு டி.வி.சானல்ஒன்றிற்கு பிரதமர் பேட்டியளித்தார். அதில் எனது ஆட்சியை கவிழ்த்து ராணுவம் கைப்பற்ற முயற்சி செய்கிறது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. ராணுவத்தை தூண்டிவிடும் பின்னணியில் உள்ளவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றார்.
இந்நிலையில் துருக்கியின் உள்ளூர் சானல்கள்வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த வெள்ளியன்று இரவில் துருக்கியின் தலைநகர் அங்காராவில் உள்ள அரசு மாளிகையினை ராணுவம் முற்றுகையிட்டு நிர்வாகம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டது. மேலும் இரண்டு முக்கிய பாலங்களான போஸ்பரஸ், சுல்தான் முகமதுஆகிய பாலங்கள் மூடப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசு அலுவலகங்களிலும் ராணுவம் குவிக்கப்பட்டதாகவும் அந்த டி.வி.சானல்கள் தெரியவந்ததால், துருக்கியில் பரபரப்பு காணப்படுகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1564833

62876fa9-b3de-4567-bbd0-32fde648ba9a.jpg

a845005f-05e7-45f2-82eb-9bf0cb427ced.jpg

 

  • தொடங்கியவர்

ஜெர்மனிய ஊடகங்களின் தகவலில்... துருக்கி பிரதமர் ஜெர்மனிக்கு வரலாம்..:rolleyes:

Erdogan should be on the road to Germany

'Helicopter shoots at presidential palace'

Twitter, Facebook, YouTube blocked

Posted at 23:54 15 Jul

Access to Facebook, Twitter and YouTube was blocked in Turkey soon after reports of a coup emerged, according to Reuters.

"Turkey Blocks, a group that monitors internet shutdowns in the country, and Dyn, which monitors internet performance and traffic globally, both reported it was difficult or impossible to access social media services in Turkey," it says.

At the same time, Turkey's Prime Minister has been tweeting freely.

And there were reports that President Erdogan's Twitter notifications popped up on screen while he was conducting a webcam interview with CNN Turk.

bbc

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐரோப்பிய யூனியனுக்கே சண்டித்தனம் காட்டியவருக்கு வந்த நிலையை பாருங்கள்......:cool:

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கியில் இவர் செய்த ஆட்சியைவிட துருக்கி ராணுவம் திறமையாகச் செயற்படும்  என நம்பலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரிய கைகளை பகைத்தால் நிலைமைகள் எப்படியும் மாறலாம்....

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கியின் ராணுவத்தலைமையகத்தில் பல ராணுவ உயர் அதிகாரிகள் பணயக்கைதிகளாக்கப்படுத்துள்ளார்கள் என சில செய்திகள் வருகின்றன. எதுவாக இருந்தாலும் எர்டோகான் ஆடசியில் இருந்து அகற்றப்படுவது துருக்கிக்கும் ஐரோப்பாவிற்கு நன்மையே.
அடுத்து இது போலவே ரஸ்யாவில்  புட்டினும் அகற்றப்படுதல்    ஆச்சரியப்படுவதற்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

gehen-nach-langer-eiszeit-wieder-aufeina

சந்தோசமான.... செய்தி.:)
தன்னுடைய.... வாயால் கெட்ட நாடு என்றால்.... துருக்கி ஆகத்தான்  இருக்க முடியும்.
இத்துடன்....  துருக்கிக்காரனின் கொட்டம் அடங்க வேண்டும்.

எர்டோகானை.... ரஷிய புட்டினுடன் ஒப்பிட்டு மகிழ்ந்த, துருக்கிக்காரனின் வாயில்... மண் விழுந்தது, இன்னும் சந்தோசம்.
அண்மையில்.... முன்னாள் உலக  குத்துச் சண்டை வீரர் முகமது அலி மறைந்த இறுதிச்  சடங்கில் கலந்து கொள்ள, அமெரிக்கா சென்ற எர்டோகான்..... அந்தச்  சடங்கில், தன்னை உரையாற்ற அனுமதித்து.... தன் மத சார்பில், முகமது அலிக்கு பச்சை போர்வை  போர்த்த வேண்டினாராம். அதற்கு.. அமெரிக்கா மறுத்து விட்டது. அதனால்.... விரக்தி அடைந்த எர்டோகான், பாதிச் சடங்கில் கலந்து கொள்ளாமல் வெளியேறி விட்டார். 

இது, விசா...  கொடுத்த, அமெரிக்காவுக்கு, கடுப்பு ஏத்தியிருக்கலாம்.
அத்துடன்... சில மாதங்களுக்கு முன், துருக்கி எல்லையில் பறந்த, ரஷ்சிய போர் விமானத்தை, சுட்டு வீழ்த்திய கடுப்பும்..... புட்டினுக்கு இருந்திருக்கலாம்.  மொத்தத்தில்.... எமக்கு இது.... மகிழ்ச்சியோ  மகிழ்ச்சி.:grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

துருக்கியில் ஆட்சியை கைப்பற்ற ராணுவம் முயற்சி: கலவரத்தில் 60 பேர் பலி

 
துருக்கியை கட்டுக்குள் கொண்டுவந்ததையடுத்து போலீஸாரையும் சிறைபிடித்தனர் ராணுவத்தினர் | படம்: ஏ.எஃப்.பி.
துருக்கியை கட்டுக்குள் கொண்டுவந்ததையடுத்து போலீஸாரையும் சிறைபிடித்தனர் ராணுவத்தினர் | படம்: ஏ.எஃப்.பி.

துருக்கியில் ஆட்சியைக் கைப்பற்ற ராணுவம் முயற்சித்ததால் அங்கு திடீர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆட்சியைக் கைப்பற்ற ராணுவ முயற்சியை அடுத்து புதிய படைத்தளபதியை நியமித்திருக்கிறார் பிரதமர் எர்டோகன். அரசை ராணுவ புரட்சியாளர்கள் பிடியில் இருந்து பாதுகாப்பேன் என அவர் சூளுரைத்துள்ளார்.

நாட்டை ராணுவப் பிடியில் இருந்து மீட்க மக்கள் வீதியில் இறங்கிப் போராடுமாறு அவர் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து எர்டோகனின் ஆதரவாளர்கள் ராணுவத்துக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினர்.

இதற்கிடையில் அரசு ஊடகங்களை ராணுவம் முடக்கியுள்ளது. அரசுத் தொலைக்காட்சியில் ராணுவத்தின் அறிக்கை மட்டுமே ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

அந்த ராணுவ அறிக்கையில், "துருக்கி ராணுவம் அரசு நிர்வாகத்தை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மனித உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவும் சட்டத்தை நிலைநாட்டவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது"

60 பேர் பலி:

துருக்கியில் நடந்த கலவரத்தில் 60 பேர் பலியாகினர். கலவரம் தொடர்பாக 336 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

ஐ.நா. வேண்டுகோள்:

துருக்கி மக்கள் அமைதி காக்குமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். துருக்கி நிகழ்வுகளை ஐ.நா. கூர்ந்து கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் தவிப்பு: ஹெல்ப்லைன் அறிவிப்பு

துருக்கியில் இந்தியர்கள் பலர் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களுக்கா அங்காரா நகரில் +905303142203, இஸ்தான்புல் நகரில் +905305671095 ஆகிய ஹெல்ப்லை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சுஷ்மா வேண்டுகோள்:

துருக்கியில் நிலைமை கட்டுக்குள் வரும் வரை இந்தியர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழர்கள் தவிப்பு:

துருக்கியில் பள்ளி விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்ற தமிழக வீரர், வீராங்கனைகள் அங்கு சிக்கிக் கொண்டுள்ளனர். அந்த வீரர்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என வெளியுறவு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. டிராப்சோன் பகுதியில் உள்ள விளையாட்டு கிராமத்தில் அவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

http://tamil.thehindu.com/world/துருக்கியில்-ஆட்சியை-கைப்பற்ற-ராணுவம்-முயற்சி-கலவரத்தில்-60-பேர்-பலி/article8859004.ece?homepage=true

  • தொடங்கியவர்
துருக்கியில் இராணுவப் புரட்சி தோல்வி; 42 பேர் பலி; புரட்சிப் படையினர் சரண்; 130 பேர் கைது
2016-07-16 10:00:17

துருக்கியில் ஜனாதிபதி தாயீப் எர்டோகன் தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அந்நாட்டு இராணுவத்தினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியைத் தழுவியுள்ளது.

 

இப்புரட்சியில் ஈடுபட்ட படையினருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையிலான மோதல்களில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

17990turkey-coup-366.jpg

 

 

துருக்கிய இராணுவத்தில் ஒரு தரப்பினர் நேற்றிரவு அரசாங்கத்தைக் கைப்பற்றும் புரட்சி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தையும் அவர்கள் கைப்பற்றினர்.

 

எனினும், இராணுவப் புரட்சிக்கு எதிராக மக்களை வீதியில் இறங்குமாறு ஜனாதிபதி தாயீப் ஏர்டோகன் கூறினர்.

 

17990turkey%20coup%20failed%20-%20presid

 


இதையடுத்து வீதியில் இறங்கிய மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான மோதல்களில் 47 பேர் உயிரிழந்தனர்.

 

17990turkey-coup.jpg

 

17990turkey-coup2.jpg

 

புரட்சி நடவடிக்கையில் ஈடுபட்ட 130 பேர் கைது செய்யபக்படடுள்ளதாக பிரதமர் பினாலி யில்ட்ரிம் கூறினார்.


புரட்சியில் ஈடுபட்ட படையினரின் விமானங்களை சுட்டு வீழ்த்துமாறும் அவர் படையினருக்கு உத்தரவிட்டார். ஏற்கெனவே புரட்சியில் ஈடுபட்ட படையினரின் ஹெலிகொப்டர் ஒன்று அரச சார்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.


சதிப் புரட்சி தோல்வியுற்றதையடுத்து இப்புரட்சியில் சம்பந்தப்பட்ட படையினர் பலர் இன்று சரணடைந்துள்ளனர். முழுமையான இராணுவ சீருடை அணிந்த நிலையில் கைகளை உயர்த்தியவாறு அவர்கள் சரணடைந்தனர்.

 

17990_turkey-coup-5.jpg

- See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=17990#sthash.ltxxZDqh.dpuf

துருக்கியின் ஆட்சி அதிகாரத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக அந்த நாட்டு இராணுவம் அறிவித்துள்ள போதிலும், அந்நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளதாக துருக்கியின் ஜனாதிபதி டையின் எர்டோகன் அறிவித்துள்ளார்.

துருக்கியின் அரச தொலைக்காட்சியை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ள இராணுவம், நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் மற்றும் இராணுவ சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. அத்துடன் துருக்கியின் அதிகாரம் சமாதானப் பேரவையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியின் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், சமூக இணையத்தளங்களுக்கும் தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் முக்கிய நகரங்களில் இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதுடன், போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் ஹெலிகொப்டர்கள் துருக்கி தலைநகரின் பறந்துகொண்டிருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹெலிகொப்டர் ஒன்றின் மூலம் துருக்கி புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், பொது மக்கள் கூடியிருந்த பகுதிகள் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துருக்கி பாராளுமன்றம் அமைந்துள்ள பகுதியிலும் இரண்டு வெடிச் சத்தங்கள் செவிமடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

நாட்டில் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 17 பொலிஸாரும் உள்ளடங்குவர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை துருக்கியில் உள்ள இலங்கையர்கள் நிலை குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் பீ.எம்.அம்ஸா தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாக இதுவரை எந்தவித தகவல்களும் பதிவாகவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

துருக்கி இராணுவ சதிப் புரட்சி முறியடிப்பு!

துருக்கியில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட இராணுவ சதிப் புரட்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக துருக்கி உள்நாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.

அங்காராவில் ரோந்து வரும் அனைத்து இராணுவ ஹெலிகொப்டர்களும் சுட்டு வீழ்த்தப்படும் என துருக்கி பிரதமர் பினலி யில்த்ரிம் எச்சரித்துள்ளார்.

சதி புரட்சியாளர்களால் கைது செய்து வைத்திருந்த இராணுவத் தலைமை தளபதி விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் பணிக்கு திரும்பியுள்ளதாகவும் உளவுத் துறை அறிவித்துள்ளது.

சதிப் புரட்சியில் ஈடுபட்ட இராணுவத்தினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வருவதாக அந்நாட்டு செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

இஸ்தான்பூலின் பாதிஹ் பகுதியில் சதி புரட்சியில் ஈடுபட்ட இராணுவ தரப்புக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் நடைபெறுவதாகவும், புரட்சி தோல்வியை நோக்கி செல்வதாகவும் துருக்கி முழுவதும் அர்தூகானுக்கு ஆதரவாக மக்கள் வீதிக்கு வந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சதி புரட்சியை திட்டமிட்டவர் இராணுவ தளபதி ஆலோசகர் கேர்ணல் முஹர்ரம் கோஷா என்று தகவல் வெளியாகியுள்ளது.

சதி புரட்சி தோல்வியடைந்ததை TRT தொலைக்காட்சி ஊழியர்கள் கொண்டாடுவதாகவும் அதன் காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பியதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.tamilwin.com/community/01/111095

துருக்கி இராணுவ சதிப் புரட்சி முறியடிப்பு! - 60 பேர் பலி,754 படையினர் சரண்

துருக்கியில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட இராணுவ சதிப் புரட்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக துருக்கி உள்நாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.

அங்காராவில் ரோந்து வரும் அனைத்து இராணுவ ஹெலிகொப்டர்களும் சுட்டு வீழ்த்தப்படும் என துருக்கி பிரதமர் பினலி யில்த்ரிம் எச்சரித்துள்ளார்.

சதி புரட்சியாளர்களால் கைது செய்து வைத்திருந்த இராணுவத் தலைமை தளபதி விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் பணிக்கு திரும்பியுள்ளதாகவும் உளவுத் துறை அறிவித்துள்ளது.

சதிப் புரட்சியில் ஈடுபட்ட இராணுவத்தினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வருவதாக அந்நாட்டு செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

இஸ்தான்பூலின் பாதிஹ் பகுதியில் சதி புரட்சியில் ஈடுபட்ட இராணுவ தரப்புக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் நடைபெறுவதாகவும், புரட்சி தோல்வியை நோக்கி செல்வதாகவும் துருக்கி முழுவதும் அர்தூகானுக்கு ஆதரவாக மக்கள் வீதிக்கு வந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சதி புரட்சியை திட்டமிட்டவர் இராணுவ தளபதி ஆலோசகர் கேர்ணல் முஹர்ரம் கோஷா என்று தகவல் வெளியாகியுள்ளது.

சதி புரட்சி தோல்வியடைந்ததை TRT தொலைக்காட்சி ஊழியர்கள் கொண்டாடுவதாகவும் அதன் காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பியதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

(மேலதிக இணைப்பு)

துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு: 62 பேர் பலி,754படையினர் சரண்

துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட 754 படையினர் இஸ்தான்புல்லில் சரண் அடைந்துள்ளனர்.

பாஸ்போரஸ் ஜலசந்தியின் மீதுள்ள பாலத்தில் நிலை கொண்டிருக்கும் கவச டாங்கிகளை விட்டு ஆண்கள் கையை மேலே தூக்கியபடி வருவதை துருக்கி தொலைக்காட்சி ஒன்று காட்டியது.

தலைநகர் அங்காராவில் தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரவு முழுவதும் அங்காராவில் இருந்த பாராளுமன்றக் கட்டிடம் மீது டாங்கிகள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

ஆட்சிக் கவிழ்ப்புக்கு சதி செய்தவர்கள் கடத்தியுள்ள விமானங்களை சுட்டு வீழ்த்தும்படி துருக்கி பிரதமர் பினாலி யில்டிரிம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த சதியில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 62 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அதில், பெரும்பான்மையானவர்கள் சிவிலியன்கள்.

 

http://www.tamilwin.com/othercountries/01/111103

 

  • தொடங்கியவர்

துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு: சதியை முறியடித்த பொதுமக்கள் (புகைப்படத் தொகுப்பு)

துருக்கியில் திடிரென ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் ராணுவத்தின் ஒரு பிரிவு அதிரடியாக ஈடுபட்டது. இந்த ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து வீதிக்கு வந்து போராடுமாறு பொதுமக்களுக்கு துருக்கி அதிபர் அழைப்பு விடுத்தார். பொதுமக்கள் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையை முறியடித்தனர். அதன் சுவாரஸ்ய புகைப்படங்கள் இதோ.

 

160715212053_turkey_coup_getty_624x351_g

 துருக்கியில் ராணுவத்தின் ஒரு பிரிவு அதிரடியாக ஆட்சியைக் கைப்பற்ற முனைந்ததை அடுத்து, இஸ்தான்புல்லின் முக்கிய இடங்களில் படையினர் நிறுத்தப்பட்டனர். (இடம் பாஸ்போரஸ் பாலம்)

 

160716025253_turkeyarmy_coup_512x288_get

 

 முன்னதாக ஒரு ராணுவக்குழு, நாட்டை ஒரு "அமைதிக் கவுன்சில்" தற்போது நடத்துவதாகவும், நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு மற்றும் ராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவித்தது.  

160715234819_turkey5.jpg

 இந்த நடவடிக்கை ஒரு "இணை அமைப்பால்" செய்யப்பட்டது என்று முன்னதாக எர்துவான் சி.என்.என்.துருக்கி தொலைக்காட்சிக்கும் மொபைல் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

 

160715231236_turkey_tanks_640x360_getty.

 ஊரடங்கு உத்தரவு மற்றும் ராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகு வீதிகளில் சென்ற டாங்கிகள்.

160715234818_turkey2.jpg

 

துருக்கி அதிபர் எர்துவான் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதியை முறியடிக்க வீதிக்கு வந்து எதிர்ப்பு தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

160716041926_turkey_gallery_07_976x549_a

 

 ''பொது இடங்கள் மற்றும் விமான நிலையங்களில் வந்து கூடுங்கள். மக்களின் சக்தியைவிட வேறு ஒரு பெரிய சக்தியில் எனக்கு நம்பிக்கை இல்லை'' என்றார் துருக்கி அதிபர்.

160716022318_gettyimages-576522092.jpg

 

அதிபரின் வேண்டுகோளைத் தொடந்து, அவருடைய ஆதரவாளர்கள் இஸ்தான்புல்லின் மத்திய தக்சிம் சதுக்கத்தில் கூடினர்.

 

160716015038_turkey_people_512x288_reute

 இஸ்தான்புல்லில் உள்ள அடாடர்க் விமான நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்.

 

160716011102_turkey_624x351_epa_nocredit

 துருக்கி அதிபர் எர்துவானுக்கு ஆதரவு தெரிவித்து வீதிகளுக்கு வந்த பொதுமக்கள்

160716015051_images_by_anadolu_ajansi_tu

 

 ராணுவ வீரர்களை பிடித்து வைத்து கொண்ட பொதுமக்கள்

160716015126_images_by_anadolu_ajansi_tu  160716015258_images_by_anadolu_ajansi_tu

 

 ராணுவத்தின் டாங்கிகளைக் கைப்பற்றிய எர்துவான் ஆதரவாளர்கள்

160716022138_gettyimages-576524784.jpg160716041056_turkey_gallery_02_976x549_r  

 

இதில் நடைபெற்ற மோதலில் 60 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அதில், பெரும்பான்மையானவர்கள் சிவிலியன்கள்.

http://www.bbc.com/tamil/global/2016/07/160716_turkey_coup_album

துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பல  படையினர் சரண் அடைந்துள்ளனர்

துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பல  படையினர் இஸ்தான்புல்லில் சரண் அடைந்துள்ளனர். பாஸ்போரஸ் ஜலசந்தியின் மீதுள்ள பாலத்தில் நிலை கொண்டிருக்கும் கவச டாங்கிகளை விட்டு பலர் கையை மேலே தூக்கியபடி வருவதை துருக்கி தொலைக்காட்சி ஒன்று காட்டியுள்ளது.


தலைநகர் அங்காராவில் தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வருவதாகவும் இரவு முழுவதும் அங்காராவில் இருந்த பாராளுமன்றக் கட்டிடம் மீது டாங்கிகள் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


ஆட்சிக் கவிழ்ப்புக்கு சதி செய்தவர்கள் கடத்தியுள்ள விமானங்களை சுட்டு வீழ்த்தும்படி துருக்கி பிரதமர் பினாலி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சதியில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மோதல்களின்போது சுமார் 60 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அதில், பெரும்பான்மையானவர்கள்  பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134081/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்

துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முறியடிப்பு: 200 பேர் பலி

160716053528_tayyip_erdogan_airport_in_i

 

துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாடு முழுக்க நடந்த மோதல்களில் சுமார் 200 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில், பெரும்பான்மையானவர்கள் பொதுமக்கள்.

துருக்கியின் இரு பெரு நகரங்களான இஸ்தான்புல் மற்றும் அங்காராவில் ஒரே இரவில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்புகளை தொடர்ந்து, 1500க்கும் மேற்பட்ட ஆயுத படையினர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துருக்கி அதிபர் ரீஸெப் தாயிப் எர்துவான் தொலைக்காட்சி உரையில், இந்த முயற்சியைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்.

தன்னுடைய அரசை கவிழ்க்க செய்யப்பட்ட முயற்சிகள் தேசத்துரோக செயல் என்றும், ராணுவம் சுத்தபடுத்தப்பட வேண்டும் என்பதை இது காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

29 கர்ணல் மற்றும் 5 தளபதிகள் இதுவரை துருக்கி ராணுவத்தில் தங்கள் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பாோஸ்போரஸ் நீரிணை மீதுள்ள பாலத்தில் நிலை கொண்டிருக்கும் கவச டாங்கிகளை விட்டு, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட படையினர் கையை மேலே தூக்கியபடி சரணடைய வருவதை துருக்கி தொலைக்காட்சி ஒன்று காட்டியது.

http://www.bbc.com/tamil/global/2016/07/160716_turkey_coup_attempt_thwarted

  • தொடங்கியவர்

இராணுவ புரட்சியை முறியடித்த மக்கள் ; வெளியானது வியப்பூட்டும் படங்கள்

Published by Gnanaprabu on 2016-07-16 19:24:09

 

துருக்கியில் இராணுவம் மேற்கொண்ட புரட்சியினை மக்கள் சக்தியினால் தோல்வியடைந்துள்ளது.

இந்நிலையில் இந்த இராணுவ புரட்சியின் போது  பலியாகியானவர்களின் எண்ணிக்கை 265 ஆக உயர்வடைந்துள்ளது.பலியாகியவர்களில் 104 பேர் இராணுவத்தினரும்,41 பொலிஸாரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 800 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 1500 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த இராணுவ புரட்சியினை முடிவுக்கு கொண்டுவர மக்கள் இராணுவத்துடன் மோதலில் ஈடுப்பட்ட படங்கள் .....

365327F700000578-3692693-image-a-68_1468

3654286300000578-3693268-image-a-31_1468

36544A6900000578-3692693-image-m-4_14686

365402A900000578-3693268-image-a-52_1468

36540DAD00000578-3692693-People_climb_on

3654764B00000578-3693268-image-a-68_1468

365500E800000578-3693268-image-a-83_1468

3654285700000578-3693268-image-a-69_1468

3653F6EB00000578-3693268-image-a-71_1468

3654679A00000578-3693268-image-a-32_1468

36543B9200000578-3693268-image-a-21_1468

365450F000000578-3692693-image-a-10_1468

3654FAD300000578-3693268-image-a-36_1468

3654484D00000578-3693268-image-a-23_1468

3653D76500000578-3692693-image-a-23_1468

3654544E00000578-3692693-image-a-7_14686

36532A6B00000578-3692693-image-a-74_1468

3654FEAE00000578-3692693-image-a-65_1468

3654600800000578-3693268-image-a-13_1468

3654766B00000578-3693268-image-a-17_1468

3653264100000578-3693268-image-a-73_1468

3653623000000578-3693268-image-a-80_14683653A9E000000578-3693268-image-a-79_146836545A3A00000578-3692693-image-a-13_14683653707A00000578-3692693-image-a-6_14686

3653F6DF00000578-3692693-image-a-7_14686

36535FC400000578-3692693-image-m-105_146

3653603C00000578-3692693-image-a-22_1468

36540DA100000578-3692693-ISTANBUL_TURKEY

3652774500000578-3692693-image-a-90_1468

365333A000000578-3692693-image-m-89_1468

365327A300000578-3692693-image-a-72_1468

365309D900000578-3692693-image-a-51_1468

365330FF00000578-3692693-image-a-83_1468

365306E300000578-3692693-image-a-45_1468

36530A8500000578-3692693-image-a-58_1468

36533E8100000578-3692693-image-a-97_1468

36533C0D00000578-3692693-image-a-99_1468

http://www.virakesari.lk/article/9055

துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு முயன்ற 3,000 ராணுவத்தினர் தடுத்து வைப்பு

துருக்கி ராணுவத்தை சேர்ந்த 3,000 உறுப்பினர்கள் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக துருக்கி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முன்னர், துருக்கி ராணுவத்திற்கு சொந்தமான டாங்கிகள் மற்றும் ஹெலிகாப்டர்களை அரசுக்கு எதிராக அவர்கள் கைப்பற்றி இருந்தார்கள்.

இரவு முழுக்க இஸ்தான்புல் மற்றும் அங்காரா நகரங்களில், துப்பாக்கிச்சூடு மற்றும் கனரக வெடிப்புகள் ஏற்படுத்திய சத்தங்கள் எதிரொலித்து கொண்டிருந்தன.

ஆனால், வீதிகளில் துருக்கி அதிபர் எர்துவன், ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதனை ஏற்று பெரும் திரளான மக்கள் கூடியிருந்தனர்.

சமூக வலைத்தளமான ட்விட்டரில், துருக்கியில் மீண்டும் புதிய புரட்சிகள் வெடிக்கலாம் என்பதால் பொதுமக்கள் வீதிகளிலேயே விழிப்புடன் இருக்கும்படி துருக்கி அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

http://www.bbc.com/tamil/global/2016/07/160716_turkey_coup_update

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மயிரிழையில் சிங்கன் எர்டோகன் தப்பிவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய உலகில்.....

இராணுவப்புரட்சிகள் நிலைக்காது.......

  • கருத்துக்கள உறவுகள்

3654544E00000578-3692693-image-a-7_14686

ஒரு நேட்டோ நாட்டின் கதியை நினைச்ச.. சிரிப்புச் சிரிப்பா வருகுது. tw_blush: இதெல்லாம் சொறீலங்காவிடம் பாடம் படிக்குதாம். :rolleyes:

இதுக்கு ஆனையிறவில் இருந்து எப்படி ஓடினம் என்று சிங்களவன் பாடம் எடுத்திருப்பான் போல. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கி மக்களை பாராட்டத்தான் வேண்டும்.

  • தொடங்கியவர்

துருக்கி பிரதமர் : ஆட்சிக் கவிழ்ப்பு ஜனநாயகத்தின் மீது படிந்த ஒரு கருப்பு கறை

 

துருக்கி பிரதமர் பினாலி இல்திரிம் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை துருக்கியின் ஜனநாயகத்தின் மீது படிந்த ஒரு கருப்பு கறை என்று விவரித்துள்ளார்.

160716110528_turkeys_prime_minister_bina

நாட்டின் விடுதலைக்காக 161 பொதுமக்கள் இறந்தனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவர் இந்த எழுச்சியில் பங்கெடுத்தவர்கள் குர்திஸ்தான் தீவிரவாத அமைப்பான பி.கே.கே என்று அறியப்படும் குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சியை விட மிக மோசமான தீவிரவாத குழுவை சேர்ந்தவர்கள்.

இந்த திட்டத்தை தீட்டிய 20 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளை தடுக்க மக்கள் வீதிகளில் இருக்குமாறு அதிபர் எர்துவான் கூறிய கருத்துக்களை அவர் எதிரொலித்தார்.

http://www.bbc.com/tamil/global/2016/07/160716_turkey_primeminister

  • தொடங்கியவர்

துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பிற்கு போதகர் ஃபேதுல்லா ஹியூலென் மீது குற்றச்சாட்டு

 

துருக்கியை விட்டு வெளியேறி பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழும் மத போதகர் ஃபேதுல்லா ஹியூலென், துருக்கி ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்று மறுத்துள்ளார்.

141229105942_fethullah_gulen_624x351_bbc
 

75 வயதான அவர் இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை கடுமையாகக் கண்டித்துள்ளார்.

அரசு நிறுவனங்களுக்கு இணையான அமைப்பை உருவாக்க முயற்சித்ததாக துருக்கி அரசு ஹியூலென் மீது குற்றஞ்சாட்டியுள்ளது.

அவர் அந்தக் குற்றச்சாட்டுக்கள் தன்னை இழிவுபடுத்துவதாக விவரித்தார்.

போதகருக்கு எதிரான ஆதாரம் இருந்தால் அதை பகிரவேண்டும் என்று துருக்கியை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

http://www.bbc.com/tamil/global/2016/07/160716_fethullah_gulen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, நவீனன் said:

துருக்கி பிரதமர் : ஆட்சிக் கவிழ்ப்பு ஜனநாயகத்தின் மீது படிந்த ஒரு கருப்பு கறை

 

துருக்கி பிரதமர் பினாலி இல்திரிம் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை துருக்கியின் ஜனநாயகத்தின் மீது படிந்த ஒரு கருப்பு கறை என்று விவரித்துள்ளார்.

160716110528_turkeys_prime_minister_bina

நாட்டின் விடுதலைக்காக 161 பொதுமக்கள் இறந்தனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவர் இந்த எழுச்சியில் பங்கெடுத்தவர்கள் குர்திஸ்தான் தீவிரவாத அமைப்பான பி.கே.கே என்று அறியப்படும் குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சியை விட மிக மோசமான தீவிரவாத குழுவை சேர்ந்தவர்கள்.

இந்த திட்டத்தை தீட்டிய 20 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளை தடுக்க மக்கள் வீதிகளில் இருக்குமாறு அதிபர் எர்துவான் கூறிய கருத்துக்களை அவர் எதிரொலித்தார்.

http://www.bbc.com/tamil/global/2016/07/160716_turkey_primeminister

   ஏதுர்வானின் ஒருவித சர்வாதிகார ஆட்சியை  ஆதரிப்பவர்கள்  அங்கே குர்திஷ் எனும்  ஒரு சிறுபான்மையினம் அடக்கி ஒடுக்கப்படுகின்றார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.