Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

275 பயணிகளுடன் பயணித்த விமானம் தரையிறங்கும்போது விபத்து (VIDEO))

Featured Replies


275 பயணிகளுடன் பயணித்த விமானம் தரையிறங்கும்போது விபத்து (VIDEO))
 
 

article_1470220547-dubai_hayenayari1.jpg

இந்தியாவின் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட எமிரேட்ஸ் எயார்லைன் விமானமொன்று டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பில்லை,  விமானத்தில் பயணித்த 275 பயணிகளும் பாதுகாப்புடன் உள்ளனனர் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

போயிங் 777 ரக விமானமே தரையிறங்கும் போது தீபற்றி விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானம்  தரையிறங்கிய இடத்தைச் சுற்றி  புகை மண்டலம் வான்நோக்கி மேலெழுந்துள்ளது.

article_1470221013-twitter.jpg

- See more at: http://www.tamilmirror.lk/178580/-பயண-கள-டன-பயண-த-த-வ-ம-னம-தர-ய-றங-க-ம-ப-த-வ-பத-த-VIDEO-#sthash.5zXUOZdP.dpuf

36D509C800000578-3721366-Emergency_An_Em

36D52F0600000578-3721366-image-m-75_1470

36D5495500000578-3721366-image-a-87_1470

36D5496A00000578-3721366-image-a-86_1470

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

விமான விபத்தில் 300 பேரைக் காப்பாற்றி உயிரைப் பறிகொடுத்த தீயணைப்பு படைவீரர்!

துபாய் விமான விபத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட 300 பேரை காப்பாற்றும் முயற்சியில் தீயணைப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார் சம்பவம் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

air.jpg

திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று துபாய் சென்ற எமிரேட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக விமானத்தில் 20 நாடுகளைச் சேர்ந்த 282 பயணிகள் இருந்தனர். பயணிகளில் பெரும்பாலானோர் இந்தியாவை சேர்ந்தவர்கள். கேரளத்திலிருந்து ஐக்கிய அரபு நாடுகளில் பணி புரிந்து வரும் இவர்கள் குடும்பத்துடன் அந்த விமானத்தில் பயணித்தனர்.

பிரிட்டனை சேர்ந்த 18 பேரும் ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த 11 பயணிகளும் விமானத்தில் இருந்தனர்.  18 விமான ஊழியர்களும் என மொத்தம் 300 பேர்களுடன் துபாய் விமான நிலையத்தில் நேற்று மதியம் 12.50 மணிக்கு அந்த விமானம் தரையிறங்கத் தயாரானது. தரையிறங்கிய அடுத்த நிமிடம் விமானத்தில் திடீரென்று தீப்பிடித்தது. விமானத்தில் இருந்த பயணிகள் செய்வதறியாது திகைத்தனர். 'குய்யோ முறையோ ' என கூச்சலிட்டனர்.

தீயணைப்பு வண்டிகள் கொழுந்து விட்டு எறிந்து கொண்டிருந்த விமானத்தை நோக்கி விரைந்தன. தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. தீயணைக்கும் முயற்சியில், ஏராளமானத் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். மள மளவென நடந்த மீட்புப் பணியில் அத்தனைப் பயணிகளும் விமானத்தில் இருந்து மீட்கப்பட்டனர். எனினும் 13 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாமல், அத்தனை பயணிகளையும் தீயணைப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

arab.jpg

ஆனால் விமானப்பயணிகளை காப்பாற்றும் முயற்சியில், ஜாசிம் இஸ்ஸா அல் பாலுசி என்ற தீயணைப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனை ஐக்கிய அரபு குடியரசின் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான  ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில், ''துபாய் விமான நிலைய விபத்தில் பயணிகளை காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட இளம் தீயணைப்பு வீரர், ஜெஸ்சிம், தனது முயற்சியில் இன்னுயிரை ஈந்துள்ளார். அந்த இளைஞர் குறித்து தாய்நாடு பெருமை கொள்கிறது '' என குறிப்பிட்டுள்ளார்.

எமிரேட்ஸ் விமான நிறுவனம் உலகிலேயே  தலைசிறந்த விமான சேவையைத் தரக் கூடிய நிறுவனங்களில் ஒன்று. பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு விஷயங்களில் எந்த சமரசமும் செய்து கொள்ளாது துல்லியமாக தரக்கட்டுப்பாட்டு கோட்பாடுகளைக் கடைபிடிக்கும்  நிறுவனமும் கூட.  துபாய் விமான நிலையமும் அப்படிதான். பாதுகாப்பு, தரம் உள்ளிட்ட அனைத்திலும் முன்னிலையில் உள்ள ஆசியாவின் பிசியான விமான நிலையம். இந்த விமான நிலையத்தில் இத்தகைய விபத்து ஏற்படுள்ளது   அமீரக அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

airport.jpg

விமானத்தின் தலைமை பைலட் 7 ஆயிரம் மணி நேரத்திற்கு விமானம் ஓட்டிய தேர்ந்த அனுபவம் கொண்டவராம்.  விமானம் தரையிறங்கிய போது லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை என்றும் அதனால் விமானத்தின் டயர்கள் வெளியே வராமல், விமானம் அப்படியே ரன்வேயில் இறங்கியதாகவும் சொல்லப்படுகிறது. லேண்டிங் கியர் வேலை செய்யாதது குறித்து, பைலட்டுகள் விமானக்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கவில்லையாம். ஒருவேளை தகவல் அளித்திருந்தால் தரையிறங்க வேண்டாமென்று உத்தரவிடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.  விசாரணைக்கு பின், விபத்துக்கான  காரணம் முழுமையாகத் தெரிய வரும்.

மிகப் பெரிய விபத்து ஏற்பட்டும்  அத்தனைப் பயணிகளும் உயிருடன் பத்திரமாக காப்பாற்றப்பட்டதற்கு துபாய் விமான நிலையத்தில் நடந்த துரித செயல்பாடுகளே காரணம்  என எமிரேட்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

 

பயணிகளை காப்பாற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வீர மரணத்தை சந்தித்த ஜாசிம் இஸ்ஸாவுக்கு துபாய் விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தங்கள் உயிரைக் காக்கும் முயற்சியில் தீயணைப்புவீரர் ஒருவர் இறந்த சம்பவம் விபத்தில் பயணிகளிடையே உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

http://www.vikatan.com/news/world/66811-emirates-hundreds-escape-firefighter-killed.art

  • கருத்துக்கள உறவுகள்

நிஜத்தில் ஒரு சூப்பர் மேன் .....! tw_blush:

ஆழ்ந்த இரங்கல்கள் ...!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

நிஜத்தில் ஒரு சூப்பர் மேன் .....! tw_blush:

ஆழ்ந்த இரங்கல்கள் ...!

துபாய் நாட்டில் ஒரு சில‌ அரபிகள் நல்லவர்களென்பதை விட உலகத்தை நன்கு அறிந்தவர்கள் என்னை பொறுத்த வரை நான் பழகியவ‌ர்கள் நோன்புகாலத்தில் கூட சாப்பிட்டால் கூட எதுவும் சொல்ல மாட்டார்கள் அனால் சவுதியில் தலை கீழ் அந்த நாடு வளர்ச்சி பெற இதுவும் ஒரு காரணம் மார்க்கமும் இல்லை மதமும் இல்லை கோவில் கூட கட்ட அனுமதி அளித்திருக்கிறார் அந்த நாட்டு அரசர்

ஆழ்ந்த அனுதாபங்கள்   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதே தீவிபத்து திருவனந்தபுரத்தில் நடந்திருந்தால்....???????
தன்னுயிரை துச்சமென மதித்து பிற உயிர்களை காப்பாற்றிய தீயணைப்பு வீரருக்கு அஞ்சலிகள்.

  • தொடங்கியவர்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 4.8.2016 at 4:55 PM, குமாரசாமி said:

இதே தீவிபத்து திருவனந்தபுரத்தில் நடந்திருந்தால்....???????
தன்னுயிரை துச்சமென மதித்து பிற உயிர்களை காப்பாற்றிய தீயணைப்பு வீரருக்கு அஞ்சலிகள்.

arab.jpg

எண்ட குருவாயூரப்பா.... என்றபடி,  பரலோகம் சென்று இருப்பார்கள்.
அந்த துபாய், தீயணைப்புப் படை வீரரின் ஆத்ம சாந்திக்காக....  பிரார்த்திக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எமிரேட்ஸ் விமான விபத்தில் 282 பயணிகளை காப்பாற்றி உயிரை ஈந்த ' ரியல் ஹீரோ' மீட்பு பணி வீரர்

 


துபாய்: இன்று  எமிரேட்ஸ் விமானம் திருவனந்தபுரத்திலிருந்து சென்று துபாய் விமான நிலையத்தில் தரை இறங்கும் போது  விமானம்  விபத்துகுள்ளாகி ஒரு பகுதி தீ பிடித்தது. உடனடியா தீயணப்பு படை வீரர்கள் தீயை அணைத்ததோடு மீட்பு பணியில் ஈடுபட்டு 282 பயணிகளை காப்பாற்றினர்.மிகபெரிய விபத்தில் சிறப்பாக செயல்ப்பட்ட வீரர்களையும் துரிதமாக செயல்பட்டு எமிரேட்ஸ் நிறுவனத்தாரையும் பாராட்டினர்.Daily_News_8861309289933.jpg


இந்த விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் ராசல் அல் கைமாவை சேர்ந்த ஜாசிம் இஸ்ஸா முஹம்மது ஹசன் என்பவர் உயிரழந்தார். அவரின் தியாகம் போற்றத்ததக்கது என‌ பல்வேறு தரப்பினரும் மறைந்த அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=236127

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.