Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்தேகங்கள், ஆலோசனைகள், அறிவித்தல்கள்??

Featured Replies

  • தொடங்கியவர்

செய்தி திரட்டி

உடனுக்குடன் செய்திகள் | ஈழம் | உலகம்

இதில போடப்படுற செய்திகள் சரியாக இடம் தெரிந்தா போடப்படுகின்றன? அண்மையில் இதுக்க வந்த செய்திகள கொஞ்சம் பாருங்கோ...

  • கலிமுத்திப்போச்சு சொந்த தங்கையை திருமனம் செய்த அண்ணன்.... SUNDHAL
  • 82 ஐ கட்டிய 24 - பாட்டிகள் ஜாக்கிரதை nedukkalapoovan
  • நாயுடன், மகனைக் கட்டிப் போட்ட பெற்றோர்! கந்தப்பு
  • தண்ணி அடிச்சு மட்டன் சாப்பிடும் சேவல்... SUNDHAL
  • மகளைக் கொன்று, கணவரை சிறையில் தள்ளி மருமகனுடன் உல்லாசம்- பெண் கைது! kirubakaran
  • சிவகங்கை சாமியாரை மணந்த ஆஸ்திரிய பெண் கந்தப்பு
  • நிலாவில் சாய்பாபா - புட்டபர்த்தியில் பரபரப்பு கறுப்பி
  • உலகம் போற போக்கப் பாரு..! nedukkalapoovan
  • மனைவியின் துணையுடன் அண்ணன் மகளை கற்பழித்த கொடூர தம்பி! kirubakaran
  • 7 ஆண்டுகடள தான் திருமணம் செல்லும்? ஜெர்மனியில் தான் இந்த கூத்து SUNDHAL
  • வீட்டுக்குள் நுழைந்த நாகபாம்பை விரட்ட வீட்டையே இடித்து தரைமட்டமாக்கிய பெண் கந்தப்பு
  • 'செக்ஸ்' முதலிடத்தில் மெக்சிகோ: 3வது இடத்தில் இந்தியர்கள்!!! 5 nedukkalapoovan 284 29th September 2007 - 12:40 AM
  • விபச்சாரப் பண்ணை அம்ஸ்ரடாம்.. உருமாறுகிறது. nedukkalapoovan
  • ஒரே பெண்ணை மணந்து, 7 குழந்தைகளுடன் குடும்பம் நடத்தும் இரட்டையர்கள்! கறுப்பி
  • ஒசாமா நான்கு மனைவிகளுடன்....... குமாரசாமி
  • கணவர் பிணத்துடன் 3 நாட்களாக வசித்த மனநலம் பாதித்த பெண்-துணைக்கு 7 பூனைகள், 3 நாய்கள்! கந்தப்பு

யாழ் செய்தியாளர்கள் இப்படி இன்னும் பல இந்தியக் குப்பைகளை இஞ்ச வந்து கொட்ட வாழ்த்துக்கள்!! இவற்றை உடனுக்குடன் செய்திகள் என்று கூறுவது சரியாயாக இருக்கின்றதா? நெடுக்காலபோவானை ஏன் இப்படி செய்திகள இணைக்கிறீங்கள் எண்டு கேட்டால், தான் இப்படி செய்திகளை இணைப்பதன் உண்மையான நோக்கம் உலகத்தில் நடப்பது பற்றி எங்கட சனத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாய் விளக்கம் சொல்வார். :icon_mrgreen:

  • 2 weeks later...
  • Replies 281
  • Views 80.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இது பிழையா? :icon_idea::icon_idea::lol:

வல்வைமைந்தன் அவர்கள் இணைத்த சிவாஜி கணேசனின் மனைவி கமலா காலமானார் என்ற தலைப்பில் நான் கீழ்வருமாறு ஒரு கருத்து எழுதி இருந்தேன். இதை மட்டறுத்துனர் திருவாளர். எழுவான் அவர்கள் அகற்றி இருந்தார்.

"கேட்பதாக கோவிக்ககூடாது. சிவாஜிக்கு ஒரு மனைவி தானே? தமிழ் சினிமா என்றதும் எல்லாம் எனக்கு ரெண்டு ரெண்டாக தெரிகிறது"

மேலே நான் எழுதிய கருத்தில் கருத்துக்கள விதி முறை ஏதாவது மீறப்பட்டு உள்ளதா? இது பண்பற்ற முறையில் எழுதப்பட்ட ஒரு கருத்தா? "நான் கேட்பதாக கோவிக்ககூடாது" என்று கூறி இருக்கின்றேன். ஏனெனில் எனக்கு உண்மையில் சிவாஜிக்கு ஒரு மனைவிதானா என்று தெரியாது. எங்கோ இரண்டு மனைவி என்று படித்ததாக ஞாபகம். பிழையாக இருக்கலாம். ஆனால், இவ்வாறு கேட்டதில் என்ன தவறு உள்ளது? தமிழ் சினிமா உலகில் இரண்டு மனைவி இருப்பது ஒன்றும் பரபரப்பான விசயம் இல்லையே! இது சர்வ சாதாரணம் தானே? வேண்டுமென்றால், தமிழ் சினிமா என்றதும் எல்லாம் ரெண்டு ரெண்டாக தெரிகிறது என்று நான் கிண்டலாக எழுதிய வசனத்தை நீக்கி இருக்கலாம். இதற்காக முழுக்கருத்தையும் தூக்குவது சரியானதா? மட்டறுத்துனர் திருவாளர். எழுவான் அவர்கள் விளக்கம் தருவார்களா?

உங்களுக்கு சிவாஜி மீது மதிப்பு மரியாதை இருக்கலாம் அல்லது சிவாஜியின் வாழ்க்கை வரலாறு விரிவாக தெரிந்து இருக்கலாம். அதற்காக கருத்துக்களத்தில் கருத்து எழுதுபவர்கள் எல்லாருக்கும் சிவாஜி பற்றி தெரிந்து இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாமா? அல்லது எல்லாரும் சிவாஜியை போற்றவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாமா? அப்படியாயின் ஏனைய நடிகர்கள் யாழில் கிண்டல் செய்யப்படும்போது நீங்கள் ஏன் கண்டுகொள்வதில்லை? சிம்பு தொடக்கம் சிம்ரான் வரை எல்லா நடிக, நடிகைகளும் யாழில் எள்ளி நகையாடப்பட்டவர்களே! சிவாஜி மட்டும் யாழில் இதற்கு விதிவிலக்காக இருக்கவேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வைமைந்தன் அவர்கள் இணைத்த சிவாஜி கணேசனின் மனைவி கமலா காலமானார் என்ற தலைப்பில் நான் கீழ்வருமாறு ஒரு கருத்து எழுதி இருந்தேன். இதை மட்டறுத்துனர் திருவாளர். எழுவான் அவர்கள் அகற்றி இருந்தார்.

"கேட்பதாக கோவிக்ககூடாது. சிவாஜிக்கு ஒரு மனைவி தானே? தமிழ் சினிமா என்றதும் எல்லாம் எனக்கு ரெண்டு ரெண்டாக தெரிகிறது"

மேலே நான் எழுதிய கருத்தில் கருத்துக்கள விதி முறை ஏதாவது மீறப்பட்டு உள்ளதா? இது பண்பற்ற முறையில் எழுதப்பட்ட ஒரு கருத்தா? "நான் கேட்பதாக கோவிக்ககூடாது" என்று கூறி இருக்கின்றேன். ஏனெனில் எனக்கு உண்மையில் சிவாஜிக்கு ஒரு மனைவிதானா என்று தெரியாது. எங்கோ இரண்டு மனைவி என்று படித்ததாக ஞாபகம். பிழையாக இருக்கலாம். ஆனால், இவ்வாறு கேட்டதில் என்ன தவறு உள்ளது? தமிழ் சினிமா உலகில் இரண்டு மனைவி இருப்பது ஒன்றும் பரபரப்பான விசயம் இல்லையே! இது சர்வ சாதாரணம் தானே? வேண்டுமென்றால், தமிழ் சினிமா என்றதும் எல்லாம் ரெண்டு ரெண்டாக தெரிகிறது என்று நான் கிண்டலாக எழுதிய வசனத்தை நீக்கி இருக்கலாம். இதற்காக முழுக்கருத்தையும் தூக்குவது சரியானதா? மட்டறுத்துனர் திருவாளர். எழுவான் அவர்கள் விளக்கம் தருவார்களா?

உங்களுக்கு சிவாஜி மீது மதிப்பு மரியாதை இருக்கலாம் அல்லது சிவாஜியின் வாழ்க்கை வரலாறு விரிவாக தெரிந்து இருக்கலாம். அதற்காக கருத்துக்களத்தில் கருத்து எழுதுபவர்கள் எல்லாருக்கும் சிவாஜி பற்றி தெரிந்து இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாமா? அல்லது எல்லாரும் சிவாஜியை போற்றவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாமா? அப்படியாயின் ஏனைய நடிகர்கள் யாழில் கிண்டல் செய்யப்படும்போது நீங்கள் ஏன் கண்டுகொள்வதில்லை? சிம்பு தொடக்கம் சிம்ரான் வரை எல்லா நடிக, நடிகைகளும் யாழில் எள்ளி நகையாடப்பட்டவர்களே! சிவாஜி மட்டும் யாழில் இதற்கு விதிவிலக்காக இருக்கவேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களா?

வணக்கம் கலைஞன்

இந்த தலைப்பின் கீழ் நான் கருத்தை நீக்கியதற்கு காரணம் செய்தி ஒரு துக்கமானது. மரணம் சம்மந்தப்பட்டது. நீங்கள் மேற்சொன்ன எந்த காரணங்களுக்குள்ளும் நின்று நான் கருத்தின் மீது பிழை காணவில்லை. உங்கள் கேள்விக்கான சம்பவமோ அல்லது சந்தர்பமோ இந்த தலைப்பின் கீழ் இல்லை என்று கருதி நீக்கினேன். சம்பவங்கள் எல்லவிடத்திலும் தர்க்கரீதியாக முதன்மை பெறுவதில்லை மாறாக உணர்வு பூர்வமாகவும் முதன்மை பெறுவதுண்டு. உங்கள் கருத்து நீக்கப்பட்டதற்கு சம்பவத்தின் உணர்வு நிலையை கருத்தில் கொள்ளப்பட்டதே காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பின் கீழ் நான் கருத்தை நீக்கியதற்கு காரணம் செய்தி ஒரு துக்கமானது. மரணம் சம்மந்தப்பட்டது. நீங்கள் மேற்சொன்ன எந்த காரணங்களுக்குள்ளும் நின்று நான் கருத்தின் மீது பிழை காணவில்லை. உங்கள் கேள்விக்கான சம்பவமோ அல்லது சந்தர்பமோ இந்த தலைப்பின் கீழ் இல்லை என்று கருதி நீக்கினேன். சம்பவங்கள் எல்லவிடத்திலும் தர்க்கரீதியாக முதன்மை பெறுவதில்லை மாறாக உணர்வு பூர்வமாகவும் முதன்மை பெறுவதுண்டு. உங்கள் கருத்து நீக்கப்பட்டதற்கு சம்பவத்தின் உணர்வு நிலையை கருத்தில் கொள்ளப்பட்டதே காரணம்.

உணர்வு நிலையை கருத்தில் கொண்டு தான் எடுத்ததாக கூறி இருந்தீர்கள் வரவேற்கதக்கது ஆனால் இது உலகநடப்பில் போட வேண்டிய செய்தி அல்ல சினிமாபகுதியில் போட வேண்டிய செய்தி அதை ஏன் நீங்கள் கவனத்தில் எடுக்கவில்லை.உலக நடப்பில் இந்த செய்தி இருப்பதனால் தான் கலைஞன் இப்படியான கேள்வியை கலைஞன் கேட்டிருக்கக் கூடும். :icon_idea:

  • தொடங்கியவர்

நன்றி எழுவான் உங்கள் பதிலுக்கு...

----------------------------------------------------

  • தொடங்கியவர்

வணக்கம்,

இன்று வலைஞன் அவர்கள் இத்தால் சகலரும் அறிவது என்ற பகுதியில் புதிய நடைமுறை ஒன்றை அறிவித்து உள்ளார். இதுபற்றிய உங்கள் எண்ணங்கள் என்ன?

அதாவது, நீங்கள் ஒரு கருத்தை எழுதியபின் அதை அழிக்கமுடியாது. அல்லது மாற்றம் செய்யமுடியாது. மாற்றம் என்று அவர் கூறுவது பொருளில் மாற்றம் செய்வது எழுத்துப்பிழை இல்லை.

முன்பு பல தடவைகள் நான் எழுதிய அப்பாவித்தனமான கருத்துக்கள் இங்கிருந்து என்னை தொடர்ந்து போலோ பண்ணி, எங்கே நான் சறுக்குவேன் பிழைவிடுவேன் என்று தருணம் பார்த்து என்ன தாக்கும் ஒருசிலரால் நையாண்டி செய்யப்பட்டதால், அதாவது எனது அப்பாவித்தனமான கருத்துக்கள் வேறு திசைகளில் திசை திருப்பப்பட்டதால் நான் அவற்றை அகற்றியுள்ளேன்.

வலைஞன் இன்று கொண்டுவந்த இந்த நடைமுறை எனக்கு அவ்வளவு சரியாகப்படவில்லை. கருத்தாடல் தலைப்பை ஆரம்பிப்பவர் தான்விரும்பும் போது தான் ஆரம்பித்த கருத்தாடலை வாபஸ் வாங்கிக்கொள்ள, கருத்தாடலில் இருந்து விலகிக்கொள்ள உரிமை இருக்கவேண்டும்.

இன்று கரிகாலன் அவர்கள் நிருவாகத்திற்கு கூறாது தானாக எல்லாவற்றையும் அழித்து இருப்பது சரியா அல்லது பிழையா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அவர் நிருவாகத்திடம் தான் ஆரம்பித்த தலைப்புக்களை மூடுமாறு கேட்டால் நிருவாகம் அதற்கு உதவிபுரியவேண்டும் என நினைக்கின்றேன்.

அவர் சில நாட்களிற்கு முன்பு தனது உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு நிருவாகத்திடம் கேட்டு இருந்தார். இதற்கு இணையவன் அவர்கள் யாழில் தாம் ஒருவரையோ அல்லது அவர் எழுதிய கருத்துக்களையோ நீக்குவதில்லை. வேண்டுமானால் அவர் களத்தில் கருத்து எழுதாமல் இருக்கலாம் என்று கூறி இருந்தார்.

மேற்கண்ட விதி பலருக்கு யாழில் இணையும் போது தெரியாது. எனக்கும் கூட தெரிந்து இருக்கவில்லை. எனவே, யாழின் கருத்தாடல் தள விதிகளில் இதையும் முன்பே கூறவேண்டும் அதாவது நீங்கள் ஒரு முறை இணைந்தால் அந்த உறுப்புரிமையை இரத்து செய்யமுடியாது மற்றும் நீங்கள் எழுதிய கருத்துக்களை அழிக்கமுடியாது என்பதை.

புதிதாக இணையும் உறுப்பினர்கள் சூட்டோடு சூடாக கனதியான தலைப்புக்களை யாழில் ஆரம்பிக்கும்போது இப்படியான பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பு. நானும் யாழில் இணைந்த ஆரம்பத்தில் கனதியான விசயங்களை எழுதவெளிக்கிட்டு பின் கடுமையான தாக்குதலிற்கு ஆளாகியுள்ளேன்.

எனவே, நிருவாகம் ஆரம்பத்திலேயே புதிய உறுப்பினர்களிற்கு ஆலோசனை வழங்குவது நல்லது என்று நினைக்கின்றேன். அதாவது புதிய உறுப்பினர்கள் ஆரம்பிக்கும் கருத்தாடல்களிற்கு அவர்கள் யாழின் போக்கினை, கள நிலமையை புரிந்துகொள்ளும்வரை நிருவாகம் ஒரு பின்னூட்டலை அனுப்பிவைக்கலாம். இதற்காக அனுபவம் உள்ள பழைய உறுப்பினர்கள் மூலம் ஒரு குழுமம் கூட ஆரம்பிக்கப்படமுடியும். இந்த குழுமம் புதிதாக கருத்தாடல் ஆரம்பிக்கும் புதிய உறுப்பினர்கள் யாழில் settle ஆகும் வரை அவர்களிற்கு பின்னூட்டல் வழங்கலாம்.

எனக்கு கூட பலர் நான் பல கருத்தாடல்களை செய்தபோது பயனுள்ள ஏராளம் பின்னூட்டல்களை தனிமடலில் அனுப்பிவைத்து உள்ளார்கள். இதனால்தான் நான் யாழில் எனக்கு சுனாமி அடிக்கும்போதும் ஓடாது தாக்குப்பிடிக்க முடிகின்றது. பலகள உறவுகள் எனக்கு தனிமடலில் அனுப்பிய ஆலோசனைகள் காரணமாக எனது கருத்து எழுதும் பாணியில் நான் பல நல்ல மாற்றங்களை செய்ய முடிந்தது.

இவ்வாறு கரிகாலன் போல் மற்றவர்களும் செய்ததற்கு அல்லது செய்வதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன:

1. தான் கூறிய விடயம் தனக்கு பிழை என தெரிதல்

2. தனது கருத்து விசமத்தனமான முறையில் திசை திருப்பப்படுதல் / நையாண்டி செய்யப்படுதல்

பலர் மனஸ்தாபம் காரணமாகவே இவ்வாறு செய்கின்றார்கள். எனவே, இதை விதிமுறைகள் என்றபாணியில் அணுகாது ஒவ்வொருவரையும் சாதாரண மனிதர்கள் என்றரீதியில் மனிதாபிமானத்துடன் அணுகவேண்டும்.

இது கொஞ்சம் சிக்கலான யோசிக்கவேண்டிய விடயம். எல்லாரையும் இந்த புதிய நடைமுறை பாதிக்கும். நீங்களும் உங்கள் ஆலோசனைகளை கூறுங்கள்.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுகளில் இருக்கும் நேரம்(time stamp), கனேடிய நேரத்தை (இன்றைய நேர மாற்றத்தின் பின்னர்) விட 2 மணித்தியாலங்கள் முன்னதாக இருக்கிறது. இதை எப்படி சரிசெய்வது? (கனேடிய நேரம் 8.00pm க்கு பதிஞ்ச பதிவின் நேரம் (time stamp) 10.00 pm என இருக்கிறது.)

வணக்கம் கலைஞன்,

முதலில் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. அடுத்து, திருத்தங்கள் செய்வது தொடர்பான விதிமுறை புதியதல்ல. இந்த நடைமுறை பழைய கருத்துக்களத்தில் இருந்தே தொடர்கிறது. புதிய விதிமுறைகளில் இதனை சேர்த்துக்கொள்ளவில்லை. 'கருத்துக்கள குழுமங்கள்' தொடர்பான தலைப்பில் இதுபற்றி இப்போது குறிப்பிட்டுள்ளேன்.

கலைஞன், நீங்கள் ஒரு கருத்தை எழுதுகிறீர்கள். உங்கள் கருத்தை அடிப்படையாக வைத்து பலர் உங்கள் கருத்துக்கு பதில் கருத்து (நேரம் செலவழித்து) எழுதுகிறார்கள். திடீரென்று நீங்கள் உங்கள் கருத்துக்களை முற்றாக நீக்குகிறீர்கள். உங்களுக்கு பதிலெழுதியவர்களின் கருத்துக்களை என்ன செய்வது இப்போது?

பல நேரங்களில் மட்டுறுத்துனர்கள் கருத்துக்களை மட்டுறுத்தும் போதும் இந்தச் சிக்கல்கள் எழுதுவதுண்டு. ஒரு கருத்தை கருத்துக்கள விதிமுறைகளுக்கேற்ப நீக்கவேண்டி ஏற்படும். ஆனால், அதற்கு சிலர் பதிலளித்திருப்பார்கள். ஒரு கருத்தை நீக்கும் போது, அதற்கு பதிலளிக்கும் விதமாக எழுதப்பட்ட கருத்துக்களையும் நீக்கவேண்டி ஏற்படும். பதிலளிக்கும் விதமாக எழுதப்பட்ட கருத்துக்கள் பயனுள்ளதாகக் கூட பலவேளைகளில் இருந்ததுண்டு. அந்தச் சந்தர்ப்பங்களில் நிர்வாகத்தினருக்கு (நீக்குவதா, அனுமதிப்பதா என்று)குழப்பமே ஏற்படும். இதனால் தான் report முறையை பயன்படுத்துமாறு கருத்துக்கள உறுப்பினர்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

ஒரு கருத்தை முற்றாக நீக்குவதற்கு நிர்வாகத்தினருக்கு மட்டுமே அனுமதியுள்ளது. அதுவும் கருத்துக்கள விதிமுறைகளுக்கு அமைவாகவே. அதேபோல, மற்றவர்கள் உங்கள் கருத்துக்கு பதிலளிக்காத வரையில் நீங்கள் உங்கள் கருத்தை நீக்கலாம். இருந்தாலும், அவரவர் தாம் தம் கருத்துக்களை எழுதுவதற்கு முதல் பலதடவை சிந்தித்து எழுதுதல் நல்லது.

கருத்துக்கள உறவு கரிகாலன் தான் எழுதிய அநேகமான கருத்துக்களை முற்றாக நீக்கியிருக்கிறார். அந்தத் தலைப்பில் அவருக்கு பதிலளித்த மற்றையவர்களின் கருத்துக்களை இப்போது என்ன செய்யமுடியும் என்று நினைக்கிறீர்கள்? எழுதி எழுதி அழிப்பதற்கு இதென்ன மண்ணில் 'அ, ஆ' எழுதிப் பழகுகிற நிகழ்வா? இல்லைத்தானே. பொதுவான பொறுப்புமிக்க களம். இங்கு எழுதப்படுகிற கருத்துக்கள் பலராலும் வாசிக்கப்படுகிறது. எழுதும்போது பொறுப்புணர்வோடு எழுதவேண்டும். எழுதி எழுதி அழித்து விளையாடிக் கொண்டிருக்க முடியாது.

நீங்கள் ஒரு தலைப்பைத் தொடங்குகிறீர்கள். அந்தத் தலைப்பில் ஏனையவர்கள் சரியான முறையில் கருத்துக்களை முன்வைக்கவில்லை என்று நீங்கள் கருதினால், மட்டுறுத்துனர்களுக்கு அறியக் கொடுங்கள். அவர்கள் அந்தத் தலைப்பைக் கவனித்து நடவடிக்கை எடுப்பார்கள். சிலவேளை, அந்தத் தலைப்பில் நடவடிக்கை எடுக்கும் நிலையில்லை என மட்டுறுத்துனர்கள் கருதி ஒன்றும் செய்யாது விட்டால், அந்தத் தலைப்பிலிருந்து நீங்கள் விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டோ, அறிவிக்காமலோ விலகிக் கொள்ளலாம். இதனால் நீங்கள் எழுதிய கருத்துக்கும், உங்கள் நிலைப்பாட்டுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை.

* இங்கு நீங்கள் என்று கலைஞனை விளித்திருப்பது உதாரணத்துக்காகவே. ஏற்கனவே சில கருத்துக்கள உறவுகள் சிலர் தமது கருத்துக்கள் சிலவற்றை முற்றாக நீக்கிவிட்டு அதனை அழிக்குமாறு நிர்வாகத்தினருக்கு அறியத் தந்திருக்கிறார்கள். அது அவர்களுடைய கருத்துக்கு மற்றையவர்கள் பதிலளிப்பதற்கு முன்பாகவே. அதில் தவறில்லை.

புரிந்துணர்வுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி.

பதிவுகளில் இருக்கும் நேரம்(time stamp), கனேடிய நேரத்தை (இன்றைய நேர மாற்றத்தின் பின்னர்) விட 2 மணித்தியாலங்கள் முன்னதாக இருக்கிறது. இதை எப்படி சரிசெய்வது? (கனேடிய நேரம் 8.00pm க்கு பதிஞ்ச பதிவின் நேரம் (time stamp) 10.00 pm என இருக்கிறது.)

yarl.com மேல பாருங்கள் My Controls என்று இருக்கும் அதை Click செய்து உள்ள

போனால் இடது பக்கம் Options என்ற பிரிவுக்கு கீழே Board Settings

என்று இருக்கும் அதை Click செய்யுங்கள் Time Zone இருக்கும்.

Your base time zone என்றதை செய்துபாருங்கள் நாடுகளுக்கு ஏற்ப நேரங்களை

மாற்றும் வசதி இருக்கு...

pic1xe2.jpg

pic2mm7.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன், வலைஞன் கூறிய கருத்தில் நியாயம் இருக்கின்றது. அண்மையில் யாழில் இணைந்து களம் எங்கும் பல கருத்து தலைப்புக்களை தொடக்கிவிட்டு களத்திலிருந்து விலகுறன் என்று அறிக்கை விட்டுவிட்டு களத்திலிருந்து வெளியேறும் பொழுது தான் எழுதிய கருத்துக்களை அழித்துவிட்டு செல்லும் அ**** முட்**** பற்றி என்ன நினனக்கிறீர்கள்? அவரா தலைப்புக்களை திறப்பார், அவரா அழிப்பார், இப்படியானவர்கள் களத்தில் இருப்பதைவிட பார்வையாளராக இருப்பது நல்லது என்பதே எனது அறிவுரை.

யாழ்களம் பல கருத்தாளர்களை கண்டுள்ளது, அவர்களில் பலர் களத்தில் சில நடைமுறை, போக்கு பிடிக்காமல் விலகியுள்ளார்கள், அவர்கள் எவராவது இப்படியான முட்டா**** தனமான காரியத்தை செய்திருக்கிறார்களா? வந்த உடனேயே தொடங்கிட்டார், இந்த விலகுறன் இந்த விலகுறன் எண்டு சவுண்ட்.

நல்ல காலம் இவர் திறந்த கருத்து தலைப்புக்களின் கீழ் எந்த வித கருத்துக்களையும் மினக்கெட்டு நான் எழுதவில்லை. :icon_mrgreen::icon_mrgreen:

Edited by Danklas

  • கருத்துக்கள உறவுகள்

yarl.com மேல பாருங்கள் My Controls என்று இருக்கும் அதை Click செய்து உள்ள

போனால் இடது பக்கம் Options என்ற பிரிவுக்கு கீழே Board Settings

என்று இருக்கும் அதை Click செய்யுங்கள் Time Zone இருக்கும்.

Your base time zone என்றதை செய்துபாருங்கள் நாடுகளுக்கு ஏற்ப நேரங்களை

மாற்றும் வசதி இருக்கு...

நன்றி வசிசுதா. நீங்கள் கூறியது போல Time Zone ஜ மாற்ற நேரக்குறிப்பு சரியாக இருக்கிறது. நான் முதலில் My Controls க்கு போய்பர்தேன், ஆனால் Time Zone ஜ கண்டுபிடிக்கவில்லை. நீங்கள் கூறியதன் பின்னர் தான் Board Settings க்குள் ஒளிந்திருப்பதை கண்டேன்.

நன்றி

  • தொடங்கியவர்

நாவூற வாயூற எண்டு ஒருவர் புதுசு புதுசா எதை எதையோ பற்றி கருத்தாடல் துவங்கிறார். யாழ்பிரியாவும் அவர விடுறபாடா தெரியேல. அவர் துவங்கிற எல்லாத்தையும் நிருவாகத்துக்கு நகர்த்திக்கொண்டு இருக்கிறா.

என்னமோ நடக்கிது நடக்கட்டுமே...

ஆ...இண்டைக்கு நான் துவங்கின ஒரு கருத்தாடலும் நிருவாகத்துக்கு போட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களம் பல கருத்தாளர்களை கண்டுள்ளது, அவர்களில் பலர் களத்தில் சில நடைமுறை, போக்கு பிடிக்காமல் விலகியுள்ளார்கள், அவர்கள் எவராவது இப்படியான முட்டா**** தனமான காரியத்தை செய்திருக்கிறார்களா? வந்த உடனேயே தொடங்கிட்டார், இந்த விலகுறன் இந்த விலகுறன் எண்டு சவுண்ட்.

யாழ்களத்தின் நடைமுறைக்கு ஒத்து போற எங்களின்ட ஆக்கதிற்கே கருத்து எழுதுறாங்க இல்லை இதில வேற :wub:

நாவூற வாயூற எண்டு ஒருவர் புதுசு புதுசா எதை எதையோ பற்றி கருத்தாடல் துவங்கிறார். யாழ்பிரியாவும் அவர விடுறபாடா தெரியேல. அவர் துவங்கிற எல்லாத்தையும் நிருவாகத்துக்கு நகர்த்திக்கொண்டு இருக்கிறா.

என்னமோ நடக்கிது நடக்கட்டுமே...

ஆ...இண்டைக்கு நான் துவங்கின ஒரு கருத்தாடலும் நிருவாகத்துக்கு போட்டுது.

என்ன கலைஞன் கேள்வியோட முடிச்சிட்டீங்க....?

நீங்கதான் நிர்வாகத்தின் சார்பில் முன்னர் எங்கட குரலுக்கெல்லாம் பதில் தந்துகொண்டு இருந்தீர்களே.

தனிமனித கருத்துத்திணிப்பு மெதுமெதுவாக வளர்ந்து ஒரு மிருகக்காட்சிசாலையில் மிருகங்களை கூண்டுக்குள் காட்சிப்படுத்தி பணம் சம்பாதிப்பதை போல, இங்கு கருத்தாளர்களின் சுதந்திர உணர்வை முடமாக்கி தங்கள் கருத்துக்கேற்ற வகையில் எங்களை வைத்து கண்காட்சி நடக்கிறது போல?

விரக்தியடையும் கருத்தாளர்களின் மெளனமும் வெளியேற்றமும் இதற்கு மேலும் துணைபுரிகிறது.

தலைப்பை தூக்கிவிட்டு தற்போது அதற்கான அறிக்கை தாயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதா?

சு.க.சங்கம் சார்பில் இதை வன்மையாக கண்டிக்கிறேன்!

  • தொடங்கியவர்

என்னடா இது வம்பாப் போச்சு. நான் எழுதினத இப்படி ஒரு கோணத்திலையும் பார்க்கலாமோ..

நான் கொஞ்சகாலமாக கவனித்து வந்தன், என்னவெண்டா நாவூறவாயூற என்பவர் அடிக்கடி யாழ் உறவோசை/ யாழ் அரிச்சுவடியில் (எந்தப் பகுதி எண்டு சரியா நினைவில் இல்லை) புதிய புதிய தலைப்புக்களை ஆரம்பிக்க யாழ்பிரியா அவர்கள் அவற்றை நிருவாகத்திற்கு நகர்த்தி வந்தார். நிருவாகத்திற்கு அவர் துவங்கும் ஒவ்வொரு தலைப்பும் ஏன் நகர்த்தப்படுகின்றது எண்டு விளங்கவில்லை. நேற்று நாவூற வாயூற அவர்கள் தொடங்கிய கருத்தாடலை நான் வாசிக்கவில்லை. நான் பார்க்கமுன்னரே அது நிருவாகத்திற்கு போய்விட்டது.

எனவேதான் இப்படி இப்படி நடக்கிது எண்டு பொதுவாக கூறினேன். நிருவாகத்திற்கு கருத்தாடல் ஒன்றை நகர்த்தும்போது அது தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இருக்கட்டும், கருத்துக்களில் மாற்றம் பகுதியில் அவ்வாறு நிருவாகத்திற்கு குறிப்பிட்ட கருத்தாடல் நகர்த்தப்படுவதற்கான காரணம் என்ன என்று கூறினால் நல்லது எண்டு நினைக்கிறன்.

நான் பிரித்தானிய அரசு தீவிரவாதி கருணாவை விசாரித்து கல்விமான் ரவீந்திரநாத் அவர்களின் கடத்தலின் பின்னால் உள்ள மர்மங்களை கொண்டு வருமா எண்டு நேற்று ஒரு கருத்தாடல் ஆரம்பித்தேன். இதை மோகன் அவர்கள் நிருவாகத்திற்கு தற்காலிகமாக நகர்த்துவதாக அறிவித்து இருந்தார்.

சிலவேளைகளில் நான் தீவிரவாதி, பயங்கரவாதி எண்டு கருணாவை சொன்னது, மற்றும் கருணா செய்த பயங்கரவாதச் செயல்கள் எண்டு எழுதியதில் ஏதாவது பிழை இருக்குமோ? இல்லாவிட்டால் துணைவேந்தர் ரவீந்திரநாத் அவர்களை கடத்தியது கருணாதான் என்று உத்தியோகபூர்வமாக ஒருவரும் அறிவிக்காமல் இருப்பது காரணமாக இருக்குமோ?

ஹிஹி.. என்னையும் நிருவாகம் எண்டு நினைச்சீங்களோ? நான் நிருவாகத்திற்கு குடை பிடிக்கவில்லை. ஆனால், விசமத்தனமாக சிலர் நிருவாகத்தை அடிக்கடி கிண்டல் பண்ணுவதை பார்த்துக்கொண்டு சும்மாவும் இருக்கமுடியவில்லை. எனவேதான், நிருவாகம் சம்ந்தமாக ஏதாவது பிழையாக அல்லது பொருத்தமற்ற முறையில் கருத்துக்கள் வைக்கப்படும்போது அவற்றை எதிர்த்து வருகின்றேன். மற்றும்படி எனக்கும் நிருவாகத்திற்கும் எதுவித சம்மந்தமும் இல்லை.

இப்படியான சிக்கல் தீர நான் கூறக்கூடிய ஆலோசனை ஒண்டு என்னவென்றால், நிருவாகத்திற்கு தற்காலிகமாக நகர்த்தப்படும் கருத்தாடல்களை யாழ்கள உறவுகள் மட்டும் பார்க்கக்கூடிய ஒரு புதிய பகுதியை உருவாக்கி அந்தப்பகுதிக்கு நகர்த்தினால், (அதாவது யாழ்நாற்சந்தி போன்ற பகுதி) குறிப்பிட்ட கருத்தாடல்களை ஆரம்பிப்பவர்கள் சற்று அமைதி அடைவார்கள் எண்டு நினைக்கிறன்.

மற்றது நான் இதுவரை யாழில் 4835 கருத்துக்கள் எழுதி இருக்கிறன், இதோடையும் சேர்த்து 4836. நான் ஏராளம் கருத்தாடல்களை யாழில் ஆரம்பித்து இருக்கிறன். நான் அடிக்கடி என் புரபைலுக்கு போய் நான் முந்தி எழுதிய பழைய கருத்துக்களை வாசித்து பார்ப்பேன். அட நானா இப்படி எல்லாம் எழுதினன் எண்டு எனக்கே ஆச்சரியமா இருக்கும்.

அதாவது நான் சொல்ல வருவது என்ன என்றால் நான் எழுதிய கருத்துக்கள் பல என்னவென்று சில நாட்களில் எனக்கே தெரியாது. எனவே, நிருவாகம் எனது கருத்தை தூக்கினால், வெட்டினால்.. என்ன செய்தாலும் நான் பெரிதாக கவலைப்படுவதில்லை. யாழில் நான் எனது எண்ணங்களை பகிர்ந்து கொள்கின்றேன் என்பது தவிர, நான் எழுதுவது பைபிள் வேதாகமம் போல இவை எனது வாழ்க்கைகான விதிகள் அல்ல. வாழ்வு என்பது தொடர் பயணம். தொடர்ந்த கற்றல். இன்று நான் சரி என்று நினைப்பது நாளை பிழையாக எனக்கு தெரியலாம். நாளன்றைக்கு சரியாக தெரியலாம்.

நான் எழுதுபவற்றை நிருவாகம் என்ன செய்தால் என்ன... என்னவென்றாலும் செய்யட்டும். சிலவேளைகளில் நான் யாழில் எழுதிய கருத்துக்கள் ஒருகாலத்தில் பாடப்புத்தகத்தில் கொண்டுவரப்படலாம். ஹாஹா.

ஆனால், கருத்துக்கள் எழுதும்போது நான் எனது எண்ணங்களை, உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்கின்றேன் என்பது தவிர வேறு ஒன்றும் இல்லை. முக்கியமாக புத்தன் மாமா ஒருமுறை கூறியதுபோல் எனது எழுத்துக்களிற்கு நானே முதலாவது வாசகனாக இருக்கின்றேன். எனவே, இதை மற்றவர்கள் வாசிக்காவிட்டாலும், நான் எழுதியதை நான் வாசிக்கும்போது எனக்குள் ஒரு திருப்தி ஏற்படுகின்றது.

சு.க சங்கத்தில் உள்ளவர்களும் என்னை மாதிரி யாழை அணுகினால் மனஸ்தாபம் ஏற்படாது. இது எப்படி ஐடியா?

பி/கு: மேலே நான் கூறிய கருத்து 10th November 2007 கனடா நேரம் காலை 3.07 க்கு உரியது. ஆனால் இதேகருத்துடன் நான் 10th November 2007 கனடா நேரம் காலை 3.10 இற்கு உடன்படாது போகலாம். ஏனென்றால், நான் ஒரு சாமானிய மனிதன்.

ஓகேயா சாணக்கியன்?

Edited by கலைஞன்

கலைஞன்,

"வானத்தை போல" விஜயகாந் போல எல்லோராலும் இருக்க முடியாது கலைஞன்.

பேசாமல் எல்லோரும் ஒரு 6 மாதம் மோகன் அவர்களிடம் ஒரு கற்கை நெறிக்கு விண்ணப்பிக்கலாம். சித்தி அடைபவர்களை மட்டும் கருத்தெழுத அனுமதிக்கலாம்.

கரிகாலன் தன் கருத்துகளை தானே நீக்கியதற்கு கொதித்துப்போன வலைஞன் அவர்கள் மட்டுறுத்தினர் மட்டுமே அவ்வாறு செய்யலாம் என்றதோடு, இதனால் பதில்கருத்தெழுதிய கருத்தாளர்களின் மனஉணர்வுகளை பற்றியும் கவலைபட்டிருந்தார்.

அதேபோல் எத்தனை தலைப்புகள், கருத்துகளோடு குலைகுலையாக நிர்வாகம் என்னும் இருட்டறையில் தள்ளி தாளிடப்பட்டிருக்கின்றன? அதை எழுதிய கருத்தாளார்களுக்கு என்ன உணர்வுகள் இல்லையா?

மட்டுறுத்துதல் அவசியம்தான் ஆனால், இது இலங்கை அரசின் மனிதாபிமான ரீதியில் மக்களை மீட்கும் நடவடிக்கை போல் இருக்கிறது!

எனது உள்ளக்கிடங்கை வெளிப்படுத்தி விட்டேன் அவ்வளவுதான்!

நன்றி.

Edited by சாணக்கியன்

நான் கொஞ்சகாலமாக கவனித்து வந்தன், என்னவெண்டா நாவூறவாயூற என்பவர் அடிக்கடி யாழ் உறவோசை/ யாழ் அரிச்சுவடியில் (எந்தப் பகுதி எண்டு சரியா நினைவில் இல்லை) புதிய புதிய தலைப்புக்களை ஆரம்பிக்க யாழ்பிரியா அவர்கள் அவற்றை நிருவாகத்திற்கு நகர்த்தி வந்தார். நிருவாகத்திற்கு அவர் துவங்கும் ஒவ்வொரு தலைப்பும் ஏன் நகர்த்தப்படுகின்றது எண்டு விளங்கவில்லை. நேற்று நாவூற வாயூற அவர்கள் தொடங்கிய கருத்தாடலை நான் வாசிக்கவில்லை. நான் பார்க்கமுன்னரே அது நிருவாகத்திற்கு போய்விட்டது.

ஒருவருடைய கருத்து அல்லது ஒருவர் இணைக்கும் ஆக்கம் உடனடியாக நீக்கப்படுகிறது என்றால், அது யாழ் இணையம் ஊடாக வெளியில் சென்றடைவதைத் தடுப்பதற்கே. நீங்கள் குறிப்பிட்ட கருத்துக்கள உறுப்பினருக்கு யாழ் இனிது பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் எழுதுவதற்கு அனுமதியில்லை.

எனவேதான் இப்படி இப்படி நடக்கிது எண்டு பொதுவாக கூறினேன். நிருவாகத்திற்கு கருத்தாடல் ஒன்றை நகர்த்தும்போது அது தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இருக்கட்டும், கருத்துக்களில் மாற்றம் பகுதியில் அவ்வாறு நிருவாகத்திற்கு குறிப்பிட்ட கருத்தாடல் நகர்த்தப்படுவதற்கான காரணம் என்ன என்று கூறினால் நல்லது எண்டு நினைக்கிறன்.

காரணங்கள் 'கருத்துக்களில் மாற்றங்கள்' என்கிற தலைப்பின் கீழ் எழுதப்படுவதுண்டு. சிலவற்றுக்கு பொதுவில் காரணங்கள் எழுதப்படுவதில்லை. எழுதப்படாமல் விடுவதற்கும் காரணங்கள் உண்டு. உரியவருக்கு தனிமடலூடாக அறியக்கொடுக்கப்படுவதுண்டு. காரணங்கள் அறியத்தரப்படாவிட்டால் தனிமடலூடாக தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

இப்படியான சிக்கல் தீர நான் கூறக்கூடிய ஆலோசனை ஒண்டு என்னவென்றால், நிருவாகத்திற்கு தற்காலிகமாக நகர்த்தப்படும் கருத்தாடல்களை யாழ்கள உறவுகள் மட்டும் பார்க்கக்கூடிய ஒரு புதிய பகுதியை உருவாக்கி அந்தப்பகுதிக்கு நகர்த்தினால், (அதாவது யாழ்நாற்சந்தி போன்ற பகுதி) குறிப்பிட்ட கருத்தாடல்களை ஆரம்பிப்பவர்கள் சற்று அமைதி அடைவார்கள் எண்டு நினைக்கிறன்.

முன்னர் குறிப்பிட்டது போல் - சில தலைப்புகள் நிர்வாகத்துக்கு நகர்த்தப்படுவதே அவை யாழ் இணையம் ஊடாக வெளியில் சென்றடையக்கூடாது என்பதற்காகவே. சில கட்டுரைகள் இணைக்கப்பட்ட உடனேயே அச்சுப் பிரதியெடுக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. அவற்றின் நோக்கங்கள் சந்தேகத்துக்குரியனவாகவே உள்ளன. ஒருவர் தானே யாழ் இணையத்தில் ஒரு பெயரில் ஒரு செய்தியை/ஆக்கத்தை/கட்டுரையை இணைத்துவிட்டு, உடனடியாக அதைப் பிரதியெடுத்து - யாழ் இணையத்தில் வந்த செய்தியென்ற ஆதாரத்துடன் பரப்புரை செய்கிற சந்தர்ப்பங்களும் உள்ளன. நடந்தும் உள்ளது. எனவே இவற்றை தவிர்த்துக் கொள்ளவேண்டியே இந்த (உடனடி நடவடிக்கைகள்).

புரிந்துணர்வுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி.

  • தொடங்கியவர்

நன்றி வலைஞன் விரிவான பதிலிற்கு..

-----------------------------------------------------

கருத்துக்கள உறவுகள் குழுமத்திற்கும், கருத்துக்கள' உறவுகள் குழுமத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன?

கருத்துக்கள' உறவுகள் என்ற இந்த குழுமத்தில் harikalan என்பவர் மட்டும் உள்ளடக்கப்பட்டுள்ளார்.

' இதன் மூலம் என்ன வித்தியாசம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்று விளங்கவில்லை.

சிலவேளைகளில் கருத்துக்கள' உறவுகள் என்ற இந்த குழுமத்தை சேர்ந்தவர்கள் தாம் எழுதியவற்றை எடிட் செய்ய ஏலாதோ?

?

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கள உறவுகள் குழுமத்திற்கும், கருத்துக்கள' உறவுகள் குழுமத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன?

கருத்துக்கள' உறவுகள் என்ற இந்த குழுமத்தில் கரிகலன் என்பவர் மட்டும் உள்ளடக்கப்பட்டுள்ளார்.

' இதன் மூலம் என்ன வித்தியாசம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்று விளங்கவில்லை.

சிலவேளைகளில் கருத்துக்கள' உறவுகள் என்ற இந்த குழுமத்தை சேர்ந்தவர்கள் தாம் எழுதியவற்றை எடிட் செய்ய ஏலாதோ?

?

--------------------

இருப்பை நோக்கிய பறப்பு - இதழ் 16ஐ வாசிக்க இங்கே சொடுக்கவும்!

« ணெxட் ஓல்டெச்ட் · யாழ் உறவோசை · ணெxட் ணெநெச்ட் »

6 பக்கங்கள் « < 4 5 6 போக வேண்டிய பக்கம்

Fஅச்ட் றெப்ல்ய்

ஏனப்லெ எமைல் நொடிfஇcஅடிஒன் ஒf ரெப்லிஎச் | ஏனப்லெ ஸ்மிலிஎச் | ஏனப்லெ ஸிக்னடுரெ

கள முகப்பு தேடு உதவி யாழ் இனிது [வருக வருக] |-- யாழ் அரிச்சுவடி |-- யாழ் முரசம் |-- யாழ் உறவோசை செம்பாலை [செய்திக்களம்] |-- ஊர்ப் புதினம் |-- உலக நடப்பு |-- நிகழ்வும் அகழ்வும் |---- செய்தி அலசல் |---- கருத்துப்படம் |-- செய்தி திரட்டி படுமலைபாலை [தமிழ்க்களம்] |-- எங்கள் மண் |-- வாழும் புலம் |-- பொங்கு தமிழ் |-- தமிழும் நயமும் |-- உறவாடும் ஊடகம் செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்] |-- கவிதைப் பூங்காடு |-- கதை கதையாம் |-- வேரும் விழுதும் |-- தென்னங்கீற்று |-- நூற்றோட்டம் அரும்பாலை [இளைப்பாறுங்களம்] |-- வண்ணத் திரை |-- சிரிப்போம் சிறப்போம் |-- விளையாட்டுத் திடல் |-- இனிய பொழுது கோடிப்பாலை [அறிவியற்களம்] |-- கணினி வளாகம் |-- வலையில் உலகம் |-- தொழில் நுட்பம் |-- அறிவுத் தடாகம் விளரிப்பாலை [சிந்தனைக்களம்] |-- அரசியல் அலசல் |-- மெய்யெனப் படுவது |-- சமூகச் சாளரம் |-- பேசாப் பொருள் மேற்செம்பாலை [சிறப்புக்களம்] |-- நாவூற வாயூற |-- நலமோடு நாம் வாழ |-- நிகழ்தல் அறிதல் |-- வாழிய வாழியவே |-- துயர் பகிர்வோம் யாழ் உறவுகள் |-- யாழ் செயலரங்கம் |-- யாழ் நாற்சந்தி |-- யாழ் ஆடுகளம் |-- யாழ் திரைகடலோடி |-- யாழ் தரவிறக்கம் |-- யாழ் வழிகாட்டி |-- யாழ் இணைய குழுமம் |---- செய்திக் குழுமம் |---- ஒஸ்ரேலிய குழுமம் |---- ஒரு பேப்பர் குழுமம் |---- நேசக்கர அமைப்பு யாழ் களஞ்சியம் |-- புதிய கருத்துக்கள் |-- முன்னைய களம் 1 |-- முன்னைய களம் 2 |-- ஆங்கிலக்களம் |-- புறக்கணி சிறீலங்கா

Dஇச்ப்லய் Mஒடெ: ஸ்நிட்ச் டொ: ஸ்டன்டர்ட் · ளினெஅர்+ · ஸ்நிட்ச் டொ: ஓஉட்லினெ

Tரcக் திச் டொபிc · ஏமைல் திச் டொபிc · Pரின்ட் திச் டொபிc · ஸுப்ச்cரிபெ டொ திச் fஒரும்

கருத்துக்களத்திலிருந்து செய்திகள்

படைப்புக்களம்

ஏனையவை

புறக்கணி சிறீலங்கா

உலகச் செய்திகள் Bஅமினி ட்ய்பெ ஏங்லிஷ் ட்ய்பெ ஏங்லிஷ் Tஅமில் Yஅர்ல் ளொ-Fஇ Vஎர்சிஒன் தற்போது நேரம்்: 12த் ணொவெம்பெர் 2007 - 10:01 PM

Pஒநெரெட் Bய் ஈP.Bஒஅர்ட் 2.3.1 © 2007 ஈPஸ், ஈன்c.

[Tகெ cஒம்மென்ட்ச் அரெ ஒந்னெட் ப்ய் தெ பொச்டெர். Wஎ அரென்'ட் ரெச்பொன்சிப்லெ fஒர் தெஇர் cஒன்டென்ட். புதுவை cஒன்வெர்டெர் உதவி: சுரதா.கொம்]

[FஓறூM DஏஸீGண் BY: Fரே ஸ்கின்ச் & Bஉசினெச்ச் Fஒரும்] - [மீள்வடிவமைப்பு: யாழ் இணையம்]

[காப்புரிமை: யாழ் இணையம் 2007] - [ஆள்ள் றீGHTஸ் றேஸேற்VஏD] - [வடிவமைப்பு: யாழ் இணையம்] - [bஏஸ்T VஈஏWஏD ஈண் :: ஈஏ வ்7.0 | ஸ்Cறேஏண் றேஸோளூTஈஓண் :: 1280x900 Pஈக்ஷேள்]

என்ற சொல்லை 3 தடவைகள் பாவித்தால் கலைஞன் நிகழ்ச்ச்சியில் இருந்து நீக்கப்படுகிறார். :lol::icon_idea::lol:

  • தொடங்கியவர்

நுணாவிலான்,

நீங்கள் பகிடி விடுறீங்கள் சரி...

-------------------------------------------------------------------------------------------------------

நான் இங்கு ஒரு விடயத்தை கூறவிரும்புகின்றேன்.

அதாவது பலர் மனதுக்குள் பலவற்றை வைத்துக்கொண்டு வெளியில் சொல்ல விருப்பம் இல்லாமல் புகைந்து கொண்டு இருக்கின்றார்கள். பலர் அடிக்கடி சின்னச் சின்ன விசயத்துக்கு நிருவாகத்தை நோக்கி புதிய தலைப்புக்களை உருவாக்குகின்றார்கள்.

நான் மேலே கடைசியாக சுட்டிக்காட்டிய விடயம் கூட ஒரு புதிய தலைப்பில் வரக்கூடும்.

எனவேதான், இந்தக் கருத்தாடல் இப்படியான பிரச்சனைகளை ஓரளவு குறைக்கும் என்று நினைக்கின்றேன். நிருவாகத்திற்கும், கள உறவுகளிற்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு இந்தக் கருத்தாடல் மூலம் வரச் சந்தர்ப்பம் இருக்கின்றது.

பலர் மனதில் கேள்விகள் பல வைத்து இருப்பார்கள், ஆனால் வெளியில் விடமாட்டார்கள். நான் வெளிப்படையாக சந்தேகங்களை கேட்கின்றேன். இதன்மூலம் மற்றவர்களிற்கும் பல விடயங்களில் விளக்கம் கிடைக்கும், தெளிவு பிறக்கும் என நினைக்கின்றேன்.

நான் நிருவாகத்தை நோக்கி கேள்விகள் கேட்பதன் நோக்கம் நிருவாகத்தை சிக்கலில் மாட்டுவதோ அல்லது யாரையாவது புண்படுத்துவதோ அல்ல.

நிருவாகம் இன்றி கள உறவுகள் மட்டும் யாழ் கருத்தாடல் தளத்தை வெற்றிகரமாக நடாத்தமுடியாது. கள உறவுகள் இன்றி நிருவாகம் மட்டும் யாழ் கருத்தாடல் தளத்தை வெற்றிகரமாக நடாத்தமுடியாது. யாழ் கருத்தாடல் தளத்தின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு நிருவாகத்திற்கும் கள உறவுகளிற்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு, உறவுப்பாளம் இருப்பது அவசியம்.

இந்தக்கருத்தாடல் மூலம் நானும் என்னாலான பங்களிப்பை வழங்கி இந்த உறவுப்பாளம் மேம்பட முயற்சிசெய்கின்றேன். அவ்வளவுதான்.

நன்றி!

பி/கு: சிலர் நினைக்கக்கூடும் எனக்கு ஏன் இந்த தேவை இல்லாதவேலை, சும்மா வந்து கருத்தை எழுதிவிட்டு நடையைக்கட்ட வேண்டியதுதானே இப்படி எல்லாம் கருத்தாடல் அவசியமா எண்டு. எனவே தான் மேற்கூறிய விளக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணையவன்,எழுவான் போன்ற மட்டுறுத்தினர்களால் கருத்தெழுதுபவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எதற்கும் மேலிடம் கவனத்திற்கு எடுத்துக்கொள்வது நல்லது.இவர்கள் எந்தவொரு காரணமுமின்றி சர்வசாதாரணமாக கருத்துக்களை நீக்கிவிட்டு அமசடக்காக இருக்கின்றார்கள்.பலரின் கருத்துக்களுக்கு இன்றுவரை என்ன நடந்தது என்று தெரியவில்லை?

இணையவன்,எழுவான் போன்ற நுனிப்புல் மேய்பவர்களால் யாழில் கருத்தாடல் செய்பவர்களுக்கு சங்கடம்.இதை மேலிடம் கவனத்திலெடுக்கவேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள். :wub:

குமாரசாமி,

கருத்துக்கள் நீக்கப்படும்போதோ அல்லது தணிக்கை செய்யப்படும்போதோ அதற்கான காரணங்கள் தரப்படுகின்றன. அப்படி தகுந்த காரணங்கள் தரப்படாவிட்டால் அல்லது தரப்பட்ட விளக்கங்கள் பிழையாக இருந்தால் முறைப்பாடு செய்யலாம்.

இன்று தணிக்கை செய்யப்பட்ட கருத்துக்களில் பெரும்பாலானவை நேரடியான அல்லது மறைமுகமான தனி நபர் தாக்குதல்களாகும். 'நிற்கவா? போகவா?' என்ற தலைப்பில் ஒரு கருத்தை நீக்கிவிட்டு, கருத்துக்களில் மாற்றங்களில்

'நிற்கவா? போகவா?' என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.
என்று மட்டுமே எழுதியிருந்தேன். இதற்குக் காரணம் கூறுவது அவசியமற்றது என்பதை எழுதியவரும் வாசித்தவர்களும் புரிந்துகொண்டிருப்பார்கள். அதற்குள் நீங்களும் அக் கருத்தை மேற்கோள் காட்டி ஒரு கருத்து எழுதியிருந்தீர்கள். அதையும் நீக்கியிருந்தேன்.

ஒரு கருத்தை வாசித்து புரிந்துகொண்டபின்னர்தான் அது தணிக்கை செய்யப்படுகிறது. சில கருத்துக்களை அல்லது ஆக்கங்களை தணிக்கை செய்வதில் சிக்கலாக இருந்தால் அவை நிர்வாகத்திற்கு நகர்த்தப்பட்டு ஏனைய மட்டுறுத்தினர்களின் ஆலோசனையையும் பெற்றபின்னர் தணிக்கை செய்யப்பட்டு மீண்டும் இணைக்கப்படுவதுண்டு.

நுனிப்புல் மேய்வதாகக் கருதினால் அதனால் யாராவது பாதிக்கப்பட்டிந்தால் அதை தாராளமாக சுட்டிக் காட்டுங்கள்.

இணையவன்,எழுவான் போன்ற மட்டுறுத்தினர்களால் கருத்தெழுதுபவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எதற்கும் மேலிடம் கவனத்திற்கு எடுத்துக்கொள்வது நல்லது.இவர்கள் எந்தவொரு காரணமுமின்றி சர்வசாதாரணமாக கருத்துக்களை நீக்கிவிட்டு அமசடக்காக இருக்கின்றார்கள்.பலரின் கருத்துக்களுக்கு இன்றுவரை என்ன நடந்தது என்று தெரியவில்லை?

இணையவன்,எழுவான் போன்ற நுனிப்புல் மேய்பவர்களால் யாழில் கருத்தாடல் செய்பவர்களுக்கு சங்கடம்.இதை மேலிடம் கவனத்திலெடுக்கவேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள். :lol:

குமாரசாமி,

நீக்கப்படுகிற கருத்துகள் தொடர்பாக கருத்துக்களில் மாற்றங்கள் என்கிற தலைப்பில் எழுதப்படுகிறது. அங்கு குறிப்பிடப்பட்டிரா விட்டால், உரிய மட்டுறுத்துனரிடம் தனிமடலூடாக தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

கலைஞன்,

கருத்துக்கள உறவுகள் குழுமத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் தமது கருத்துக்களில் திருத்தம் (Edit) செய்வதற்கான வசதி உள்ளது. தனியொருவருக்கு இந்த திருத்த அனுமதியை எமது இந்த கருத்துக்கள மென்பொருளில் தடுக்கமுடியாது. அதனால் தான் திருத்த அனுமதியற்ற கருத்துக்கள' உறவுகள் குழுமம் ஒன்று தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

அடப்பாவிகளா.... நிற்கவா போகவாவில் நான்தான் எழுதினேன்

அதை காணவில்லை............ நீங்கதான் தூக்கினீங்களா? :wub:

ச்சே ஒரு அருமையான சண்டையை மிஸ் பண்ணிட்டீங்கள் :(

  • கருத்துக்கள உறவுகள்

மட்டுஸ் மாரும் நுனிபுல் மேய்யினமெ...அட ராமா .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.