Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பழைய அதிபரே வேண்டும்: உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு

Featured Replies

பழைய அதிபரே வேண்டும்: உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு
 
 
பழைய அதிபரே வேண்டும்: உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு
அதிபரின் பதவிக்காலத்தை நீடிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் மாணவிகள் தாக்கப்பட்டமை குறித்து தெளிவுபடுத்தும் வகையிலான மகஜர் உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
 
பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி, இன்று முதல் நிகழ்வாக யாழ். சுப்ரமணியம் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட போதை ஒழிப்பு நிகழ்வில் கலந்து கொண்டார்.
1473408475_u.jpg
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதியை அங்கு வந்து சந்தித்த உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் அவரிடம் குறித்த மகஜரை கையளித்துள்ளனர்.
 
1473408510_u1.jpg

http://onlineuthayan.com/news/17371

  • கருத்துக்கள உறவுகள்

அடங்கொக்காமக்கா,

பெட்டயளும் விடுற இல்லை எண்டு தான் நிக்கினம்.

இந்த ஓர்மம் படிப்பிலும் இருக்கோணம்.

அது சரி, எவ்வளவு சிறப்பானவராயிருந்தாலும், ஒருவருக்கு பதவி நீடிப்பு என்பது தவறான முன்உதாரணம். 

அடுத்து இருப்பவரின் வாய்ப்பு, சம்பள உயர்வு, மனத் திருப்தி மறுக்கப்படுவதுடன் மட்டுமன்றி இதனையே வேறு பாடசாலை மாணவரும் பின்பற்றினால்...

Edited by Nathamuni

பெட்டையள்தான் விடஇல்லையோ அல்லது பெட்டையளுக்கு பின்னால் திரைமறைவில் இயங்கும் கும்பல் விட இல்லையோ யாருக்கு தெரியும்.....????

  • தொடங்கியவர்
ஜனாதிபதி - உடுவில் மாணவிகள் சந்திப்பு
 
 

article_1473420553-IMG_20160909_121053.j

உடுவில் மகளிர் கல்லூரியில் முன்னாள் அதிபர் சிரானி மில்ஸை நீக்கயமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் செய்ய மாணவிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து, மகஜர் ஒன்றை வழங்கினர்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவில் ஜனாதிபதி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டுவிட்டுப் புறப்படும் போது ஜனாதிபதியைச் சந்தித்த மாணவிகள் தங்கள் பிரச்சினைகளைக்கூறி காலில் வீழ்ந்து அழுதனர்.

அதன் பின்னர் தாங்கள் கொண்டு வந்த மகஜரை ஜனாதிபதியிடம் கையளித்தனர். முன்னைய அதிபரை நீக்கித் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மாணவிகள் இதன்போது குறிப்பிட்டனர். (படப்பிடிப்பு: எஸ்.ஜெகநாதன்)

article_1473420570-IMG_20160909_121056.jarticle_1473420603-IMG_20160909_121114.jarticle_1473420610-IMG_20160909_121611.j

- See more at: http://www.tamilmirror.lk/181528/ஜன-த-பத-உட-வ-ல-ம-ணவ-கள-சந-த-ப-ப-#sthash.2NZIOA6b.dpuf

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனை, பெரிய இடம் போட்டுது பெட்டையளின்ற கண்ணீர் அந்தாள நித்திரை கொள்ள விடாது.

இனி மிசனரிமார் சிங்கி அடிச்சு சரண்டர் தான்.

எங்கப்பா எங்கண்ட வல்லுனர் ரங்காச்சாரியார், அதுதான் நம்ம ஜீவன் சிவா..

இவ்வளவு விசயங்கள் நடக்கிது. காணொலி ஒன்றும் இல்லையோ? குறிப்பாக மாணவிகள் இதுபற்றி என்ன சொல்ல வருகின்றார்கள் என்று. நாதமணியர் மன்னிக்கவும் நாதமுனியர் சும்மா வாயைக்குடுத்து மாணவிகளிடம் இருந்து வாங்கக்கூடாத இடத்தில அடிவாங்கப்போறார். tw_confused:

1 hour ago, Nathamuni said:

இனி மிசனரிமார் சிங்கி அடிச்சு சரண்டர் தான்.

இங்கு ஜனாதிபதியால் ஒன்றும் செய்ய முடியாது. இப் பாடசாலை ஒரு சுயாதீனமான திருச்சபையின் பரிபாலனத்தில் உள்ளது.

1 hour ago, Nathamuni said:

எங்கப்பா எங்கண்ட வல்லுனர் ரங்காச்சாரியார், அதுதான் நம்ம ஜீவன் சிவா..

அடப்பாவி இப்படி கவுத்திட்டானே.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ஜீவன் சிவா said:

இங்கு ஜனாதிபதியால் ஒன்றும் செய்ய முடியாது. இப் பாடசாலை ஒரு சுயாதீனமான திருச்சபையின் பரிபாலனத்தில் உள்ளது.

 

இப்படிகன இடத்தே ஓடிட்டி இருக்கு  என்ன செய்யலாம் அந்த கால வெள்ளைக்காரன் செஞ்ஜ பிழைகளில் ஒன்று ஒரு சில பாடசாலைகளை திருச்சபைகளிடம் ஒப்படைத்தது :unsure:

  • தொடங்கியவர்
1 hour ago, கரும்பு said:

இவ்வளவு விசயங்கள் நடக்கிது. காணொலி ஒன்றும் இல்லையோ? குறிப்பாக மாணவிகள் இதுபற்றி என்ன சொல்ல வருகின்றார்கள் என்று. நாதமணியர் மன்னிக்கவும் நாதமுனியர் சும்மா வாயைக்குடுத்து மாணவிகளிடம் இருந்து வாங்கக்கூடாத இடத்தில அடிவாங்கப்போறார். tw_confused:

 

யாழ். உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் இன்று ஜனாதிபதியை சந்தித்தனர்.
இதன்போது, உடுவில் மகளிர் கல்லூரியில் தற்போது நிலவுகின்ற பிரச்சினை தொடர்பில் கல்லூரி மாணவிகள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ஜீவன் சிவா said:

இங்கு ஜனாதிபதியால் ஒன்றும் செய்ய முடியாது. இப் பாடசாலை ஒரு சுயாதீனமான திருச்சபையின் பரிபாலனத்தில் உள்ளது.

அடப்பாவி இப்படி கவுத்திட்டானே.:grin:

இலங்கை ஜனாதிபதியின் அதிகாரம் வானளவு.

இங்கே, சொல்லே, வேண்டுகோளே, போதும்.

ஜனாதிபதி, அரசு, நினைத்தாலே, பள்ளிக்கூடத்தை திருச்சபையிடம் இருந்து புடுங்க முடியும் என்று திருச்சபைக்கு தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

இலங்கை ஜனாதிபதியின் அதிகாரம் வானளவு.

இங்கே, சொல்லே, வேண்டுகோளே, போதும்.

ஜனாதிபதி, அரசு, நினைத்தாலே, பள்ளிக்கூடத்தை திருச்சபையிடம் இருந்து புடுங்க முடியும் என்று திருச்சபைக்கு தெரியும்.

உன்மையை சொல்ல போனால் சபைதான் பிரச்சினை போல இருக்கிறதே நாதா:rolleyes::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கொண்டாட்டம்தான்   அவர்களூக்கு...நினைத்தது நடக்கிற்து......

  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இலங்கை ஜனாதிபதியின் அதிகாரம் வானளவு.

இங்கே, சொல்லே, வேண்டுகோளே, போதும்.

ஜனாதிபதி, அரசு, நினைத்தாலே, பள்ளிக்கூடத்தை திருச்சபையிடம் இருந்து புடுங்க முடியும் என்று திருச்சபைக்கு தெரியும்.

அப்போ  எதுக்கு இவ்வளவு இழுபாடு?

ஓ தமிழர்கள் என்பதாலா??

சாதி

இப்போ மதம்???

  • தொடங்கியவர்

 

உடுவில் கல்லூரி விவகாரம்: மாணவிகளை ஒளிப்பதிவு செய்த பொலிஸாருக்கு பெற்றோர் எதிர்ப்பு

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

அப்போ  எதுக்கு இவ்வளவு இழுபாடு?

ஓ தமிழர்கள் என்பதாலா??

சாதி

இப்போ மதம்???

உடன ஓடிப் போய் அந்தப்பகறகமா நில்லாதீங்க விசுகர்.

பெட்டையளின்ற கோரிக்கையில் நியாயமில்லை.

பிடித்திருக்கு என்று நாடு முழுவதும் பெடிபெட்டையள் உந்தக் கூத்தாடினால் பிறவு, கருணாநிதி வயசில வாத்திமார் இருப்பினமே.

பிறகு தானும் குடியான், பிலாவையும் தரான் கதைதான். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

உடன ஓடிப் போய் அந்தப்பகறகமா நில்லாதீங்க விசுகர்.

பெட்டையளின்ற கோரிக்கையில் நியாயமில்லை.

பிடித்திருக்கு என்று நாடு முழுவதும் பெடிபெட்டையள் உந்தக் கூத்தாடினால் பிறவு, கருணாநிதி வயசில வாத்திமார் இருப்பினமே.

பிறகு தானும் குடியான், பிலாவையும் தரான் கதைதான். :unsure:

பெட்டையளுக்கு சப்போட் பண்ண சொல்லவில்லையே நாதா...

முடிவை எடுக்கலாமல்லவா?

எல்லோரும் சுருட்டிக்கொண்டு கிடப்பினமல்லே....

 

  • கருத்துக்கள உறவுகள்

முடிவை இழுக்கிறது........ ஏனெண்டு.. புரியாத வயசு கண்டியலே...:grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியல்,சாதி,மதம் என்ற பிரச்சனைகளுக்கு அப்பால்......

மாணவிகளை இந்த பிரச்சனைக்குள் புகுத்தியது மிக மிக பாரதூரமான விடயம்.

பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களையே தேர்ந்தெடுக்கும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டு விட்டதா?
எதற்கும் கட்டுப்பாடு வரையறை ஒன்று இருக்க வேண்டும்.நிர்வாகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்களுக்கு நிர்வாகமோ அல்லது அதன் மேலிடமோ தான் முடிவெடுக்க வேண்டும்.


மாணவர்கள் தங்கள் வகுப்பு தலைவி அல்லது தலைவரை தேர்வு செய்யும் உரிமையுடன் மட்டுப்படுத்த வேண்டும்.
அதிபரையோ ஆசிரியரையோ தேர்ந்தெடுக்கும் தகுதி மாணவ மாணவிகளுக்கு என்றைக்குமே இல்லை.

இதென்ன சூப்பர் சிங்கர் போட்டியா இல்லை மானாட மயிலாடவா? :cool:

1 hour ago, குமாரசாமி said:

அரசியல்,சாதி,மதம் என்ற பிரச்சனைகளுக்கு அப்பால்......

மாணவிகளை இந்த பிரச்சனைக்குள் புகுத்தியது மிக மிக பாரதூரமான விடயம்.

பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களையே தேர்ந்தெடுக்கும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டு விட்டதா?
எதற்கும் கட்டுப்பாடு வரையறை ஒன்று இருக்க வேண்டும்.நிர்வாகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்களுக்கு நிர்வாகமோ அல்லது அதன் மேலிடமோ தான் முடிவெடுக்க வேண்டும்.


மாணவர்கள் தங்கள் வகுப்பு தலைவி அல்லது தலைவரை தேர்வு செய்யும் உரிமையுடன் மட்டுப்படுத்த வேண்டும்.
அதிபரையோ ஆசிரியரையோ தேர்ந்தெடுக்கும் தகுதி மாணவ மாணவிகளுக்கு என்றைக்குமே இல்லை.

இதென்ன சூப்பர் சிங்கர் போட்டியா இல்லை மானாட மயிலாடவா? :cool:

நியாயமான கருத்து. tw_thumbsup: என்றாலும்... கொஞ்சம் சத்தமாய் நியாயமான கருத்து என்று சொல்வதற்கு பயமாய் இருக்கின்றது. tw_anguished:

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

அடங்கொக்காமக்கா,

பெட்டயளும் விடுற இல்லை எண்டு தான் நிக்கினம்.

இந்த ஓர்மம் படிப்பிலும் இருக்கோணம்.

அது சரி, எவ்வளவு சிறப்பானவராயிருந்தாலும், ஒருவருக்கு பதவி நீடிப்பு என்பது தவறான முன்உதாரணம். 

அடுத்து இருப்பவரின் வாய்ப்பு, சம்பள உயர்வு, மனத் திருப்தி மறுக்கப்படுவதுடன் மட்டுமன்றி இதனையே வேறு பாடசாலை மாணவரும் பின்பற்றினால்...

எல்லாம்  நமது தே. தலைவரின் முன்மாதிரியை பின்பற்றித்தான். ஏன் எங்கள் சமுதாயத்தில் திறமையான இளையோர்கள் இல்லையா? அல்லது சம்மந்தன் மிக, மிக, யாராலும் வெல்ல நிர்வாகத்திறமையுள்ளவரா?

  • கருத்துக்கள உறவுகள்

ambuli2.jpg

இந்தப் பதிவில்....  நான்  மினைக்கெட்டு,  எழுதிய  எனது, இரண்டு கருத்துக்கள்... 
வெளி வரவில்லை  என்ற  கவலை இருந்தாலும்...
அம்புலி மாமா கதை மாதிரி, 
வேதாளம் அண்ணை...... மீண்டும்...   முருங்கை மரத்தில், ஏறினார். 

  • கருத்துக்கள உறவுகள்

 

இது , எல்லாம் .... இறக்குமதி செய்யப் பட்ட சொற்கள்.
மகஜர்  என்பதற்கு  அறிக்கை என்பது, சுத்த தமிழ்.
.****

Edited by நியானி
ஒரு வரி நீக்கம்

  • தொடங்கியவர்
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் நியாயப்படுத்தலும் மாணவர்களின் கல்விக்கு குந்தகம் ஏற்படுத்தக்கூடாது
உடுவில் மகளிர் கல்லூரி ஆர்ப்பாட்டம் தொடர்பில் நேரடி அலசல்

உடுவில் மகளிர் கல்­லூ­ரியின் மாண­வி­க­ளினால் கடந்த ஒரு வார கால­மாக தமது அதி­பரை தொடர்ச்­சி­யாக சேவை­யாற்ற வலி­யு­றுத்தி முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்த கவ­ன­யீர்ப்புப் போராட்­டமும் புதிய அதி­பரின் நிய­மனம் தொடர்­பான ஆளுநர் சபையின் நியா­யப்­ப­டுத்­தலும் ஒட்­டு­மொத்­த­மாக மாண­வி­களின் கல்­விக்கு ஏற்­பட்ட குந்­த­க­மா­கவே கல்விச் சமூ­கத்­தினால் நோக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் நீதித்­துறை தலை­யிட்டு குறித்த ஆர்ப்­பாட்டம் கடந்த வியா­ழக்­கி­ழமை முடி­வு­றுத்­தப்­பட்ட நிலையில் மீண்டும் மாண­விகள் தமக்கு நீதி­கோரி நாட்டின் ஜனா­தி­ப­தியின் காலில் விழுந்து புலம்பி மகஜர் ஒன்றை நேற்று முன்­தினம் கைய­ளித்­துள்­ளமை தீர்­வுகள் முழுமை பெறா­த­மை­யையே வெளிக்­காட்­டு­வ­தா­க­வுள்­ளது.

ஆசி­யாவின் முத­லா­வது பெண்கள் பாட­சாலை என்ற பெரு­மைக்­கு­ரி­யது யாழ்ப்­பாணம் உடுவில் மகளிர் கல்­லூ­ரி­யாகும். இக் கல்­லூ­ரியின் பாரம்­ப­ரியம் என்­பது மிக நீண்­ட­தாகும். பல துறை­களில் சாதனை படைத்த பெண்­களை உரு­வாக்­கிய கல்­லூ­ரி­யென்ற பெரு­மையும் பல கல்­வி­மான்­களை உரு­வாக்­கிய பெரு­மையும் இக் கல்­லூ­ரிக்­குள்­ளது. இந்­நி­லையில் கட­மையில் இருந்த அதி­பரே மீண்டும் சேவை­யாற்­ற­வேண்­டு­மென மாண­வி­களும் புதிய அதி­பரின் சேவையே வேண்­டு­மென கல்­லூ­ரியின் ஆளுநர் சபையும் கல்­லூரி மட்­டத்தில் முன்­வைத்த கோரிக்­கை­களே கடந்த வாரம் வீதி­வழி கவ­ன­யீர்ப்புப் போராட்­ட­மாக மாற்றம் பெற்­றி­ருந்­தது.

பிரச்­சி­னையின் தோற்றம்

இக் கல்­லூ­ரி­யா­னது தென்­னிந்­திய திருச்­ச­பையின் ஆளு­கைக்கு உட்­பட்­ட­தாகும். கல்­லூ­ரியின் நிர்­வாக விட­யங்கள் தொடர்பில் தீர்­மா­னங்­களை எடுப்­பது குறித்த திருச்­ச­பை­யினால் நிய­மிக்­கப்­பட்ட ஆளுநர் சபை­யாகும். இதன்­படி இக்­கல்­லூ­ரியில் இது­வரை காலமும் அதி­ப­ராக ஷிராணி மில்ஸ் என்­பவர் சேவை­யாற்­றி­யி­ருந்தார். எனினும் இவ­ர் கடந்த ஏழாம் திக­தி­யுடன் அறு­பது வய­தினை பூர்த்­தி­ செய்திருந்தார். இத­னை­ய­டுத்து கல்லூ­ரியின் ஆளுநர் சபை­யா­னது பழைய அதி­பரை ஓய்வு பெறு­மாறு தீர்­மானம் எடுத்த நிலையில் புதி­யதோர் அதி­பரை நிய­மிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு மாண­வி­களின் கவ­ன­யீர்ப்பு இடம் ­பெறும்­வேளை புதிய அதிபர் நிய­மனம் வழங்­கப்­பட்­டது. மாண­வி­களின் கவ­ன­யீர்ப்புப் போராட்­ட­மா­னது கட­மையில் இருந்த அதி­பரை ஓய்­வு­ப­டுத்­தி­யமை, அவரை மீண்டும் சேவைக்­குட்­ப­டுத்த வலி­யு­றுத்­தி­ய­மை­யா­கவே அமைந்­துள்­ளது. இத்­த­கைய வலி­யு­றுத்தல் கவ­ன­யீர்ப்பு கடந்த சனிக்­கி­ழமை 4 ஆம் திகதி கல்­லூ­ரியின் முன்­பாக மாண­வி­க­ளினால் இர­வு­ப­க­லாக தொடர்ச்­சி­யாக கடந்த வியா­ழக்­கி­ழமை வரை இடம்­பெற்­றி­ருந்­தது.

வலு­வ­டைந்த ஆர்ப்­பாட்­டமும்

மல்­லாகம் நீதி­வானின் தலை­யீடும்

இத்­த­கைய கவ­ன­யீர்ப்பு ஆரம்­பத்தில் மாண­விகள் முன்­னெ­டுக்க பின்னர் அவர்­க­ளுக்கு வலுச்­சேர்க்கும் வகையில் பழைய மாண­வி­களும் பெற்­றோர்­களும் ஒன்­றாகத் திரண்­டனர். இதன்­போது கவ­ன­யீர்ப்பு மேலும் வலுப்­பெற்­றது. இந்­நி­லையில் கல்­வித்­துறை அதி­கா­ரி­களும் அர­சியல்வாதி­களும் சென்று கவ­ன­யீர்ப்பை சம­ர­சப்­ப­டுத்த முனைந்­தி­ருந்­தனர். எனினும் அத்­த­கைய சம­ரச முயற்­சிகள் பய­னற்­ற­தாக மாறின. இந்­நி­லையில் கடந்த புதன்­கி­ழமை புதிய அதிபர் நிய­ம­னத்தைத் தொடர்ந்து அன்­றைய தினம் புதிய அதி­பரின் கீழான ஆசி­ரிய குழாம் கல்­லூ­ரிக்குள் நுழைந்­த­போது மீண்டும் கவ­ன­யீர்ப்புப் போராட்டம் ஆக்­ரோஷம் அடைந்­தது. இதன் தொடர்ச்­சி­யாக மறுநாள் வியா­ழக்­கி­ழமை ஆர்ப்­பாட்­டத்தை முன்­னெ­டுத்த மாண­விகள் மீது ஒரு குழு­வினர் தாக்­குதல் மேற்­கொண்­ட­தாக தெரி­விக்­கப்­படும் நிலையில் தமக்கு நீதி வழங்க வலி­யு­றுத்தி மல்­லாகம் நீதிவான் ஏ.யூட்­ச­னிடம் மாண­விகள் கோரிக்கை விடுத்­தி­ருந்­தனர்.

இத­னை­ய­டுத்து கல்­லூ­ரிக்கு விஜயம் மேற்­கொண்ட நீதிவான் மாண­வி­க­ளு­டனும் கல்­லூ­ரியின் நிர்­வா­கத்­தி­ன­ரு­டனும் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்­டி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து இப்­பி­ரச்­ச­ினை­யா­னது முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­தா­கவும் முன்னர் கட­மை­யாற்­றிய அதிபர் தாமா­கவே பத­வியில் இருந்து விலகிச் செல்­வ­தா­கவும் புதிய அதிபர் நாளை மறுநாள் செவ்­வாய்­க்கி­ழமை முதல் பொறுப்­புக்­களை ஏற்றுக்கொள்வார் எனவும் நீதிவான் தெரி­வித்­தி­ருந்தார். இதனைத் தொடர்ந்து மாண­விகள் தமது கவ­ன­யீர்ப்பை முற்­றாக நிறுத்­தி­யி­ருந்­தனர்.

யாழிற்கு வந்த ஜனா­தி­ப­தி­யிடம்

நீதி­கோரி புலம்­பிய மாண­விகள்

இதே­வேளை, நேற்று முன்­தினம் யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் மேற்­கொண்ட ஜனா­தி­பதி போதை ஒழிப்பு மாநாட்டில் கலந்­து­கொண்டு விட்டு வெளியேறும் போது ஜனா­தி­ப­தியை சூழ்ந்­து­கொண்ட உடுவில் மகளிர் கல்­லூரி மாண­விகள் தமது கோரிக்­கைக்கு உரிய தீர்வை வழங்க வலி­யு­றுத்­தியும் தம்­மீது நடாத்­தப்­பட்ட தாக்­கு­த­லுக்கு உரிய நீதி கிடைக்க வலி­யு­றுத்­தியும் கண்ணீர் சொரிய ஜனா­தி­ப­தியின் காலில் விழுந்து புலம்­பி­யி­ருந்­தனர். அத்­துடன் தமது கோரிக்­கைகள் அடங்­கிய மக­ஜ­ரையும் ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

கல்­லூரி ஆளு­நர்­ச­பையின் நியா­யப்­ப­டுத்தல்

கல்­லூ­ரியின் புதிய அதிபர் மாற்­ற­மா­னது முன்­னரே தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் தற்­போது சிலர் தவ­றான செய்­தி­க­ளையும் பொய்­யான தக­வல்­க­ளையம் பரப்பி மாண­வர்­க­ளையும் பொது மக்­க­ளையும் குழப்­பு­கின்ற முயற்­சியில் ஈடு­பட்டு வரு­கின்­றனர் என கல்­லூரி ஆளுநர் சபை­யினர் தெரி­வித்­துள்­ளனர். இது­தொ­டர்பில் அவர்கள் மேலும் தெரி­வித்­த­தா­வது,

கல்­லூ­ரியில் கட­மை­யாற்­றிய அதிபர் கடந்த 7ஆம் திக­தி­யுடன் தனது அறு­பது வயதை பூர்த்தி செய்­தி­ருந்த நிலையில் அவர் குறித்த தினம் ஓய்­வு­பெ­றுவார் என கடந்த 2015ஆம் ஆண்டு ஆவணி மாதம் 10ஆம் திகதி இடம்­பெற்ற கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது.

தொடர்ந்து இந்­தாண்டு மே மாதம் 27ஆம் திகதி புதிய அதிபர் தேர்­வுக்­கான விண்­ணப்பம் கோரும் அறி­வித்­தலும் பழைய அதிபர் ஊடா­கவே காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டது.

இவ்­வாறு அனைத்து நட­வ­டிக்­கை­களும் முறை­யாக ஒழுங்கு விதி­க­ளுக்கு அமை­வாக நடை­பெற்ற போதிலும் சிலர் தமது சுய இலாப தேவை­க­ளுக்­காக மாண­வர்­களைத் தூண்­டி­விட்டும் பொய்­யான தக­வல்­களைப் பரப்­பியும் பொது­மக்­க­ளையும் கல்­லூ­ரியின் கல்விச் செயற்­பாட்­டையும் குழப்­பு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றார்கள் எனத் தெரி­வித்­துள்­ளனர்.

மாண­வி­களின் நியா­யப்­ப­டுத்தல்

கல்­லூ­ரியில் கட­மை­யாற்றிய அதிபர் கட­மை­யாற்றும் காலப்­ப­கு­தியில் பல்­வேறு அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­தி­ருந்தார். இதன்­மூலம் தாம் பல்­துறை சார்­பிலும் பிர­கா­சிக்­கக்­கூடிய நிலை ஏற்­பட்­டது என கவ­ன­யீர்ப்பை மேற்­கொண்ட மாண­விகள் தெரி­வித்­துள்­ளனர்.

மேலும் கல்­லூ­ரியின் முகா­மை­யாளர் தாம் விரும்­பி­ய­வர்­களை ஆசி­ரி­யர்­க­ளாக நிய­மிக்க முடி­யா­துள்­ள­தா­கவும், இது­போன்ற தமக்கு தேவை­யான செயற்­பா­டு­களை குறித்த அதி­பரைக் கொண்டு செயற்­ப­டுத்த முடி­யா­துள்­ள­மையே அவரை ஓய்­வு­பெறச் செய்­வ­தற்­கான கார­ண­மாகும் என்றும் கல்­லூ­ரியில் அறு­பது வயதைத் தாண்டி பல அதி­பர்கள் சேவை­யாற்­றி­யி­ருந்த நிலையில் குறித்த அதி­பரைத் திட்­ட­மிட்டே ஓய்­வு­பெறச் செய்­துள்­ளனர் என மாணவிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.

தீர்மானம் எடுக்கும் தருணம்

இந்­நி­லையில் நிறை­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்ட கவ­ன­யீர்ப்பு போராட்டம், மீண்டும் ஜனா­தி­ப­தி­யிடம் மகஜர் கைய­ளிக்­கப்­பட்ட நிலையில் வடமாகாண சபையின் கவனத்துக்கு வந்துள்ளது. எனவே, மாண­வி­களின் நலன் கருதி அர­சியல் தலை­யீடுகள் அற்ற உரிய தீர்வை வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சு எடுக்­க­வேண்­டி­யது காலத்தின் தேவையாகவுள்ளது.

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=19&editionDate=11/09/2016

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.