Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காவிரி பிரச்சினையில் கர்நாடகாவில் மீண்டும் வன்முறை: பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல்

Featured Replies

காவிரி பிரச்சினையில் கர்நாடகாவில் மீண்டும் வன்முறை: பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல்

 

 
மைசூரு சாலையில் வன்முறை. | படம்: கே.பாக்யபிரகாஷ்.
மைசூரு சாலையில் வன்முறை. | படம்: கே.பாக்யபிரகாஷ்.

தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறந்த் விட உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்த நிலையில், கர்நாடகாவில் வன்முறைகள் தீவிரமடைந்தது. இதையடுத்து பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டதாக வந்த செய்திகளை கர்நாடகா போலீஸ் மறுத்தது. ஆனால் மாலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தமிழகத்திற்கு செப்டம்பர் 20ம் தேதி வரை காவிரியில் நீர் திறந்து விட உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்த நிலையில், கர்நாடகாவில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

கர்நாடகா அரசுப் பேருந்து போக்குவரத்துக் கழகம் தமிழகத்துக்கான அனைத்து பேருந்துகளையும் நிறுத்தி வைத்துள்ளது. மைசூருவில் கடைகள் மூடபட்டுள்ளன.

பெங்களூரு நிலவரம்:

பெங்களூருவில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வன்முறைகள் வெடித்துள்ள நிலையில், பெங்களூரில் மக்கள் பதற்றமும் பீதியும் அடைந்துள்ளார்கள். 12.30 மணி முதல் நம்ம மெட்ரோ சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன

குறிப்பாக மைசூரு சாலையில் ஒட்டுமொத்தமும் குழப்பமான நிலை நீடிக்கிறது. தனியார் பள்ளிகள் குழந்தைகளை உடனடியாக வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு பெற்றொருக்குஅறிவுறுத்தியுள்ளது. சில தனியார் பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பாக வீடு போய்ச் சேர்வதை உறுதி செய்ய கூடுதல் ஆசிரியர்களை ஈடுபடுத்தியுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் ஐடி துறையைச் சார்ந்தவர்கள், தமிழ்நாடு பதிவு வாகனங்களை எடுத்து கொண்டு சாலைகளில் வரவேண்டாம் என்று எச்சரித்து வருகின்றனர்.

மைசுரு பேங்க் சர்க்கிளில் கன்னட ஆர்பாட்டக்காரர்கள் மனிதச் சங்கிலி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு சாலையை முற்றிலும் வழிமறித்துள்ளனர். எலஹங்கா புதிய டவுனில் தமிழ்நாடு ரெஜிஸ்ட்ரேஷன் லாரி மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.

பி.இ.எச். கல்லூரி சுங்கச் சாவடி அருகே தமிழ்நாடு லாரி ஒன்றுக்கு தீவைக்கப்பட்டது. மகதி சாலையிலும் லாரி ஒன்றிற்கு தீவைக்கப்பட்டது. சாட்டிலைட் பஸ் ஸ்டேண்டில் உள்ள அடையார் ஆனந்த பவன் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த வளாகம் சூறையாடப்பட்டு சேதமடைந்துள்ளது.

வட்டால் நாகராஜ் மற்றும் பிற கன்னட ஆர்பாட்டக்காரர்கள் விதான் சவுதா அருகே கைது செய்யப்பட்டனர். முன்னதாக இவர்கள் முதல்வர் சித்தராமையாவைச் சந்தித்து தமிழகத்தில் உள்ள கன்னடக்காரர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியுள்ளனர். இதே வேளையில் தமிழ்ச் சங்க் உறுப்பினர்களும் சித்தராமையாவிடம் நகரத்தில் உள்ள 25 லட்சம் தமிழர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தினர்.

வன்முறையையடுத்து நம்ம மெட்ரோ சேவைகள் முடக்கப்பட்டன. பெங்களூருவில் மட்டும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட சுமார் 18,000 போலீஸார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் சில பகுதிகளில் கன்னடியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் குறிப்பிட்டு முதல்வர் சித்தராமையா, முதல்வர் ஜெயலலிதாவுக்கு இது குறித்து கடிதம் எழுதப்போவதாக தெரிவித்துள்ளார்.

மைசூரு நிலவரம்:

காவிரிப் படுகை மாவட்டங்களில் ஆர்பாட்டம் மூண்டதையடுத்து சாமராஜன் நகர் மாவட்டத்தின் தமிழக-கர்நாடக எல்லை மூடப்பட்டது. சாமராஜன்நகர் மாவட்டத்தை இணைக்கும் 7 தமிழக சாலைகளில் காவல்துறையினர் செக்போஸ்ட்களை அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓசூரில் கவலைதரும் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.

200 பேர் கைது:

கர்நாடகாவில் ஆர்பாட்டக்காரர்கள் 200 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு சீர்பெற அனைத்து உதவிகளையுன் செய்யத் தயார் என்று மத்திய அரசு கர்நாடகத்திற்கு தெரிவித்துள்ளது.

http://tamil.thehindu.com/india/காவிரி-பிரச்சினையில்-கர்நாடகாவில்-மீண்டும்-வன்முறை-பெங்களூருவில்-144-தடை-உத்தரவு-அமல்/article9100204.ece?homepage=true

  • தொடங்கியவர்
இரு மாநில அரசுகளும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்
 
கர்நாடகாவில் 40 தமிழக பஸ்களுக்கு தீ வைப்பு
 
கர்நாடகா அமைச்சரவை அவசர கூட்டம்
 
 
 
பெங்களூருவில் 15 ஆயிரம் போலீசார் குவிப்பு
 
 
 
Tamil_News_large_1605051_318_219.jpg
 

பெங்களூரு: தமிழர்களுக்கு எதிராக கலவரம் வெடித்துள்ளதை தொடர்ந்து, பெங்களூருவில் 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காவிரியில் வரும் 20 ம் தேதி வரை வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து பெங்களூருவில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் வெடித்துள்ளது. வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டுள்ளன. அடித்து சேதப்படுத்தப்படுகின்றன. போராட்டம் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இரு மாநிலங்களிலும் போக்குவரத்து தடைபட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவை தடைபட்டுள்ளது.

சில இடங்களில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். பெங்களூருவில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூடுதல் கமிஷனர் கூறியுள்ளார்.

போராட்டம் காரணமாக பதற்றம் ஏற்பட்டுள்ளதால், நிலைமையை சமாளிக்க பெங்களூருவில் 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்ட அதிரடிப்படையினர், 3000 ேஹாம் கார்டுகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பெங்களூருவில் உள்ள ஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் வைத்திருந்தால், அதனை வெளியில் எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1605051

  • தொடங்கியவர்
கர்நாடகாவில் கன்னடர்கள் வெறியாட்டம்: 50 கேபிஎன் பஸ்களுக்கு தீ வைப்பு
 
 
 
Tamil_News_large_160505520160912193712_318_219.jpg
 

பெங்களூரூ: காவிரியில் தமிழகத்திற்கு கர்நாடகா நீர் திறந்துவிட்டதை கண்டித்து பெங்ளூரூவில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தமிழகத்தின் கேபிஎன் நிறுவனத்தை சேர்ந்த, ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 27 லாரிகளும் எரிக்கப்பட்டன.
சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதையடுத்து காவிரியில் தமிழகத்திற்கு கர்நாடகா நீர் திறந்துவிட்டதை கண்டித்து கர்நாடகா தலைநகர் பெங்களூரூவில் இன்று வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. தமிழக வாகனங்கள் , நிறுவனங்கள மீது கன்னடர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனால் அங்கு சட்டம்,ஒழுங்கும் சீர்கெட்டு, பதட்டம் ஏற்பட்டுள்ளது. 144 தடை உத்தரவும் பிறக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக பெங்களூரூ நகரில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

இந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:


* சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமைதியான முறையில் கர்நாடகா மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
* சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் கர்நாடகாவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
* மைசூரு, மாண்டியா, ராம்நகர், சி்த்தூர்கார் ஆகிய பகுதிகளில் பதற்றமான சூழ்நி்லை ஏற்பட்டுள்ளது.
* கர்நாடகா நிலைமையை கட்டுக்குள் வைக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
* கர்நாடகாவின் பொதுசொத்துக்களுக்கும், பொதுமக்களுக்கும் எந்த சேதத்தையும் ஏற்படுத்த வேண்டாம்.
* 10 சி.ஆர்.பி.எப்.படைகள், 182 கே.எஸ்.ஆர். படைகள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும் 10 சி.ஆர்.பி.எப்., படைகள் அனுப்ப கோரியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

50 தமிழக பஸ்கள் தீ வைப்பு

இதற்கிடையே , பெங்களூரூ, மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நைஸ் சாலையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த கேபிஎன் நிறுவனத்திற்கு சொந்தமான பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக பதிவு எண் கொண்ட 50 தமிழக பஸ்கள் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளன.

 

பெங்களூரூவில் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டும் என்று

பெங்களூரூ உதவி போலீஸ் கமிஷனர் ஹரிஹரன் கூறினார்.


முன்னதாக கர்நாடக அமசை்சரவை அவசரக்கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று மாலை கூடியது, அப்போது சட்டம் ஒழுங்கு குறித்தும் வன்முறையை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடந்தது

http://www.dinamalar.com/news_detail.asp?id=1605055

blrfire

  • தொடங்கியவர்

கொளுத்தப்பட்ட பேருந்துகள்... கர்நாடகாவில் நடந்தது என்ன?

ண்ணீர் ஓர் எரிபொருள் அல்ல என்கிறது விஞ்ஞானம். ஆனால், இப்போது தண்ணீர் எரிபொருளாய் மாறியிருக்கிறது.  ஒரு ஹைட்ரஜன் அணுவும், ஓர் ஆக்சிஜன் அணுவும் பிணையும்போது உருவாவதுதான் நீர் என்கிறது வேதியியல். ஆனால், இந்த அணுக்களின் பிணைவு, ஒரு பிளவையே உணடாக்கி இருக்கிறது. காவிரி பிரச்னையில் திங்கள்கிழமை மாலையில் மட்டும்  தமிழக பதிவு எண் கொண்ட 50 தனியார் பேருந்துகள் கொளுத்தப்பட்டுள்ளன.

கொளுத்தப்பட்ட தனியார் பேருந்துகள்!

பெங்களூருவிலிருந்து 17 கி.மீ தொலைவில், கெங்கேரியில் உள்ள தனியார் பேருந்துகள் பணிமனையில் 50-க்கும் மேற்பட்ட தமிழக பதிவு எண் கொண்ட பேருந்துகள் கன்னட இனவெறியர்களால் கொளுத்தப்பட்டு இருக்கின்றன. கொளுத்தியவர்கள், ‘‘நாங்கள் எங்கள் ரத்தத்தைக் கொடுப்போம்... ஆனால், காவிரியை அல்ல...’’ என்று கோஷமிட்டுக் கொண்டே கொளுத்தியதாக அந்தப் பகுதியில் இருந்த செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

 

 

இது மட்டுமல்லாமல் திங்கள்கிழமை முழுவதும் கர்நாடக மாநிலத்தில், மாண்டியா, மைசூரு, சித்திரதுர்கா, தர்வாத் மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் தாக்கப்பட்டு இருக்கின்றன. அதுபோல, தமிழர்களின் கடைகளும் அதிக அளவில் தாக்கப்பட்டு இருக்கின்றன.  குறிப்பாக மாண்டியா பகுதியில்தான் அதிக அளவில் வன்முறை வெடித்து இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பண்டவபுரா பகுதியில் தமிழர்களின் வீடுகளும், கடைகளும் தாக்கப்பட்டு இருக்கின்றன. சாம்ராஜ் நகரிலும் தமிழர்களின் கடைகள் குறிவைத்து தாக்கப்பட்டு இருக்கின்றன.

‘‘வன்முறை அதிக அளவில் வெடித்துள்ளதால், பெங்களூரு பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. ஆனபோதிலும், அங்கு தமிழர்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்த வண்ணம்தான் இருக்கிறது’’ என்கிறார்கள் பெங்களூருவில் வசிக்கும் தமிழர்கள்.

Cauvery%20Row%20001.png

Cauvery%20Row%20002.png

Cauvery%20Row%20003.png

Cauvery%20Row%20004.png

Cauvery%20Row.png

 

மாலை 4.30 முதல் 8.10  வரை:

4.30: சத்தியமங்கலம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட லாரிகள் தும்காரா பகுதியில் தாக்கப்பட்டு இருக்கின்றன.
5.30: கலவரத்தில் ஈடுபட்ட 200 பேர் கைதுசெய்யப்பட்டு இருப்பதாகக் கன்னட உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்தார்.
5.40: கே.ஆர் மார்க்கெட், கலாசிபால்யா மற்றும் ஜே.சி சாலையில் உள்ள பல கடைகள் அச்சுறுத்தலுக்கு அஞ்சி அடைக்கப்பட்டன.
7.00: தமிழக பதிவு எண் கொண்ட 50 தனியார் பேருந்துகள் கொளுத்தப்பட்டன.
7.45: கர்நாடக முதலவர் நாளை காலை 11 மணிக்கு அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி உள்ளார்.
8.10: அமெரிக்கா அட்வைசரி, பெங்களூருவில் உள்ள தங்கள் நாட்டுக் குடிமக்களைப் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளது.

http://www.vikatan.com/news/coverstory/68293-nearly-50-buses-torched-by-kannadiga-angry-mob.art

  • தொடங்கியவர்

பெங்களூருவுக்கு ராணுவத்தை உடனே அனுப்புமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையா கோரிக்கை

 

பெங்களூரு: பெங்களூருவுக்கு ராணுவத்தை உடனே அனுப்புமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா தொலைபேசியில் பேசினார். அப்போது பெங்களூருவில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து சித்தராமையா விளக்கம் அளித்தார்.

http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=245241

கர்நாடகாவில் தமிழர் நடத்தும் பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு தீ வைப்பு

 

பெங்களூரு: கர்நாடகாவில் தமிழர் நடத்தும் பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு வன்முறை கும்பல் தீ வைத்து எரித்தது. சேதங்கள் குறித்து முழு விவரம் தெரியவில்லை.

 

பெங்களூருவில் வன்முறையை ஒடுக்க போலீசார் துப்பாக்கிச்சூடு : 2 பேர் காயம்

 

பெங்களூரு: பெங்களூருவில் வன்முறையை ஒடுக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் காயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெங்களூருவில் ஹெக்கனஹள்ளி, ராஜகோபாலநகர்   ஆகிய இடங்களில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

 

http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=245240

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு ரெஜிமென்டை அனுப்புங்கோ:grin:

  • கருத்துக்கள உறவுகள்

சட்டம்  ஒழுங்கை நிலை நாட்டத் தவறிய... கர்நாடக அரசை கலைத்து விட்டு...
கவர்னர் ஆட்சியை  கொண்டு வருவதை விட்டு....  மத்திய அரசு என்னத்துக்கு  வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்குது.

நதி நீர் பொதுவானது... கர்நாடகம், காவிரி வரும் வழியில்.... சகட்டு மேனிக்கு அணை கட்டத் தொடங்கும் போதே... 
அதனை கண்டித்து நடவடிக்கை எடுத்திருந்தால்.... இன்று நிலைமை இவ்வளவு மோசமாக போயிருக்காது. 

  • தொடங்கியவர்
சித்தராமையா வீடு மீது கல்வீசி தாக்குதல்; துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி, 7 பேர் காயம்
 
 
 
Tamil_News_large_1605088_318_219.jpg
 

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா வீட்டின் மீது கலவரகாரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். பெங்களூரில் நடந்த கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். 7 பேர் காயமடைந்தனர்.

சித்தராமையா வீடு மீது கல்வீச்சு


தமிழகம் மற்றும் கர்நாடக இடையே காவிரி தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் நடந்து வரும் நிலையில் பெங்களூரில் பல வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டதாக அம்மாநில முதல்வர் சித்தராமையாவின் மைசூரில் உள்ள வீடு மீது கலவரகாரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒருவர் பலி

 

இந்நிலையில் பெங்களூரில் கலவரகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. இதில் கலவரத்தில் ஈடுபட்ட மகடி பகுதியை சேர்ந்த உமேஷ் என்பவர் பலியானார். மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர். பெங்களூரில் நடந்து வரும் வன்முறையை கட்டுப்படுத்து அம்மாநில போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1605088

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
பெங்களூருவில் வன்முறையாளர்களை கண்டதும் சுட போலீசாருக்கு உத்தரவு

 

 

பெங்களூரு: பெங்களூருவில் கலவரத்தை கட்டுப்படுத்த 8 இடங்களில் வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட போலீஸ் ஐ.ஜி., உத்தரவு
கர்நாடகாவில் காவிரி பிரச்னை தொடர்பாக இன்று (12.09.16) காலை முதல் பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. தமிழகத்தை சேர்ந்த வாகனங்களை வன்முறையாளர்கள் தீ வைத்து கொளுத்தி வருகின்றனர். மேலும் பெங்களூரில் செயல்படும் தமிழகத்தை சேர்ந்த கே.பி.என் தனியார் நிறுவனத்தின் 50 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையா வீட்டின் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

 

இந்நிலையில் வன்முறையாளர்களை கட்டுப்படுத்த அம்மாநில போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வன்முறையாளர்களை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு பணியை மேற்கொள்ளவும், 10 கம்பெனிகளை சேர்ந்த துணை ராணுவ படையினர் தற்போது பெங்களூரில் முகாமிட்டுள்னர். மேலும் 10 கம்பெனி துணை ராணுவ படையினர் பெங்களூரு நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் கர்நாடக ரிசர்வ் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூரில் நடந்து வரும் கலவரத்தை கட்டுப்படுத்த சுமார் 15 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

இதற்கிடையில் கண்ணீர் புகைகுண்டு வீச்சு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவமும் நடந்தது. இதில் ஒருவர் பரிதாபமாக பலியானார், 7 பேர் காயமடைந்தனர். மேலும் கலவரங்கள் ஆங்காங்கே தொடர்வதால் காமாட்சிபாளையம், விஜயாநகர், ராஜாஜிநகர், மகடி சாலை, பைத்தர்யானபுரா, ராஜகோபால் நகர் உட்பட 8 இடங்களில் வன்முறையாளர்களை கண்ட உடன் சுட போலீசாருக்கு ஐ.ஜி., உமேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

 

போலீசாரின் இந்த நடவடிக்கையால் பெங்களூரில் வன்முறை படிப்படியாக குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1605170

  • தொடங்கியவர்

பெங்களூருவில் நடந்த துப்பாக்கிச்சுட்டில் காயமடைந்த 3 பேரில் ஒருவர் உயிரிழப்பு

 

Daily_News_2240368127823.jpg

பெங்களூர் : பெங்களூருவில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 3 பேரில் ஒருவர் உயிரிழந்தார். ஹெக்கனஹள்ளியில் வன்முறையில் ஈடுபட்டோர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

போலீஸ் வாகனத்தை தீயிட்டு கொளுத்த முயற்சித்த போது போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞர் பெயர் யோகேஷ் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=245243

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் ஒற்றுமை இன்மையே, கண்டவன், நின்றவன் எல்லாம் பதம் பார்க்க வசதியாக இருக்கிறது. நாதியற்ற  இனம், தெக்கில மீன் பிடிக்கப் போனால் சிங்களவனிடம் அடி, வடக்கில் கர்நாடகம் ....

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் சொக்கத்தங்கம் என்பது இங்கு பலருக்கு புரிந்திருக்கும்
 

  • கருத்துக்கள உறவுகள்

ஜெ ஹிந்த் பாரத் மாதாஜி ......

எத்தனை தமிழ் படத்தில் பார்த்திருக்கின்றோம் வந்தே மாதரம் பாடினால் தாக்குதல் நிறுத்தப்படும் 

1 hour ago, colomban said:

சிங்களவன் சொக்கத்தங்கம் என்பது இங்கு பலருக்கு புரிந்திருக்கும்
 

ಚಿತ್ರ: ಪಡುವಾರಹಳ್ಳಿ ಪಾಂಡವರು
ರಚನೆ: -
ಗಾಯನ: ಪಿ.ಬಿ.ಶ್ರೀನಿವಾಸ್
 
ತೂಕಡಿಸಿ ತೂಕಡಿಸಿ ಬೀಳದಿರು ತಮ್ಮ ನನ್ನ ತಮ್ಮ ಮಂಕುತಿಮ್ಮ 
ತೂಕಡಿಸಿ ತೂಕಡಿಸಿ ಬೀಳದಿರು ತಮ್ಮ ನನ್ನ ತಮ್ಮ ಮಂಕುತಿಮ್ಮ 
ತೂಕಡಿಸಿ ತೂಕಡಿಸಿ ಬಿದ್ದರು ನನ್ನಜ್ಜ ನಿನ್ನಜ್ಜ ಮುತ್ತಜ್ಜ
ತೂಕಡಿಸಿ ತೂಕಡಿಸಿ ಬೀಳದಿರು ತಮ್ಮ ನನ್ನ ತಮ್ಮ ಮಂಕುತಿಮ್ಮ
 
ಅಕ್ಷರದ ಸಕ್ಕರೆಯ ಕಹಿಯೆಂದು ತಿಳಿದು ಪುಸ್ತಕವ ಕಸಕಿಂತ ಕಡೆಗಣಿಸಿ ಎಸೆದು
ಹಸ್ತವನು ತಲೆಗಿಟ್ಟು ಹಣೆಬರಹವೆಂದು
ತೂಕಡಿಸಿ ತೂಕಡಿಸಿ ಬಿದ್ದರು ನನ್ನಜ್ಜ ನಿನ್ನಜ್ಜ ಮುತ್ತಜ್ಜ
 
ಹಾಕ್ಕಿಟ್ಟ ಹುಯ್ಗಂಜಿ ತುಂಡು ತಂಬಲಿಗೆ ಸಾವಿಟ್ಟರೋ ಕೊರಳ ಜೀತದ ಕತ್ತರಿಗೆ
ಬಿಕ್ಕೆಟ್ಟರೋ ನರಳಿ ಜೀವಶದಂತೆ
ತೂಕಡಿಸಿ ತೂಕಡಿಸಿ ಬಿದ್ದರು ನನ್ನಜ್ಜ ನಿನ್ನಜ್ಜ ಮುತ್ತಜ್ಜ
 
ಬದುಕನ್ನು ಎದುರಿಸಲು ಕಣ್ತೆರೆದು ನೋಡಾ ಬೆದೆರಿಕೆಗೆ ಕೈ ಕಟ್ಟಿ ಆಳಾಗ ಬೇಡ
ಕೊಚ್ಚೆಯ ಹುಳುವಂತೆ ಕುರುಡಾಗ ಬೇಡ
 
ತೂಕಡಿಸಿ ತೂಕಡಿಸಿ ಬೀಳದಿರು ತಮ್ಮ ನನ್ನ ತಮ್ಮ ಮಂಕುತಿಮ್ಮ 
ತೂಕಡಿಸಿ ತೂಕಡಿಸಿ ಬಿದ್ದರು ನನ್ನಜ್ಜ ನಿನ್ನಜ್ಜ ಮುತ್ತಜ್ಜ
ತೂಕಡಿಸಿ ತೂಕಡಿಸಿ ಬೀಳದಿರು ತಮ್ಮ ನನ್ನ ತಮ್ಮ ಮಂಕುತಿಮ್ಮ

 

දස්කොන් - සක්මන් කරන මළුව පාළුයි දේවී
                  මං විතරයි ඔබ කිසි දිනක නොඒවී
ප්‍රමිලා    - ඉක්මන් ගමන් එපා පා පැකිළේවී
                 දස්කොන් සකිසඳ මා ඔබේ කුමාරී

දස්කොන් -සෙංකඩගල වටකල පවුරු වලල්ලේ
                 පෙම් ගී ගැයු විහඟුන් හැපී වැටෙන්නේ

                 සෙංකඩගල වටකල පවුරු වලල්ලේ
                 පෙම් ගී ගැයු විහඟුන් හැපී වැටෙන්නේ
ප්‍රමිලා    - රන්තරු දෑස පියන රෑ හඳපානේ
                 අත්තන මලක් වෙලා ඔබ ලඟ ඉන්නේ

දස්කොන් - සක්මන් කරන මළුව පාළුයි දේවී
                  මං විතරයි ඔබ කිසි දිනක නොඒවී
ප්‍රමිලා    - ඉක්මන් ගමන් එපා පා පැකිළේවී
                 දස්කොන් සකිසඳ මා ඔබේ කුමාරී

දස්කොන් - වාසල මිණිබැඳි දොර අරින වෙලාවේ
                  දෑසින් වැටෙන කඳුලු මට සිහිනොවුනේ
                  වාසල මිණිබැඳි දොර අරින වෙලාවේ

எதோ ஒருவகை ஒற்றுமை உள்ளது 

3 hours ago, colomban said:

சிங்களவன் சொக்கத்தங்கம் என்பது இங்கு பலருக்கு புரிந்திருக்கும்
 

அப்ப தம்பி 83ம் ஆண்டு உயிரோட எரிக்கும் பொது என்ன கும்பகர்ணன் போல நித்திரையோ ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, colomban said:

சிங்களவன் சொக்கத்தங்கம் என்பது இங்கு பலருக்கு புரிந்திருக்கும்
 

சிங்களவன் எந்தவிதத்திலை சொக்கத்தங்கம் எண்டு சொன்னியளெண்டால் நாங்களும் உலகமும் சேர்ந்து சந்தோசப்படுவமெல்லே...:(

திராவிடன்
காவிரி தரமாட்டான்
பாலாறு தரமாட்டான்
முல்லை பெரியாறு தரமாட்டான்
ஆனால்,
தன்மானத் தமிழன்
நாட்டையே ஆள தருவான்!

என்னைக்கு நடிக்க வந்தவனுங்க கிட்ட நாட்டைக் கொடுத்தானுகளோ அன்றைக்கே நீர்த்து போய்விட்டது காவிரி விவகாரம்.

திராவிடத்தை பேசி, பின்பற்றி, ஆளவிட்டுவிட்டு, அண்டை திராவிட மாநிலங்களிடம் குடிநீருக்கே பிச்சை எடுக்கிறான் தமிழன்.

  • தொடங்கியவர்

கர்நாடகாவில் துணை ராணுவப் படையினர் குவிப்பு : அசம்பாவிதங்களை தவிர்க்க கொடி அணிவகுப்பு

 

Daily_News_7544780969620.jpg

பெங்களூரு: பெங்களூருவில் பதற்றம் நிறைந்த 16 இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் தமிழக பதிவெண் வாகனங்களும், கார்களும் மற்றும் தனியாருக்கு சொந்தமான பேருந்துகளும் நேற்று வன்முறை கும்பலால் தீ வைத்து கொளுத்தப்பட்டது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படும் எலக்ட்ரானிக் சிட்டியில் தமிழக பதிவெண் கொண்ட லாரிக்கு தீ வைக்கட்டதால் லாரியிலிருந்து ஓடி தப்பித்து அதன் டிரைவர் உயிரை காப்பாற்றிக் கொண்டார்.

பெங்களூருவில் ஒரு இடத்தில் தமிழர் நடத்தும் கடைக்கு தீ வைக்கப்பட்டது. விஜயாநகரில் தமிழகத்தை சேர்ந்த ஒரு கார் கன்னட அமைப்பி்னரால் அடித்து நொறுக்கப்பட்டது. இதனிடையே மைசூருவில் அமைதியை ஏற்படுத்த 5 கம்பெனி துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். மேலும் துணை ராணுவ படையினர் கர்நாடகாவிற்கு விரைந்துள்ளனர். தேவைப்பட்டால் பெங்களூருவிலும் துணை ராணுவப் படையினர் களமிறக்கப்படுவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=245370

  • தொடங்கியவர்

அமைதி திரும்பியது பெங்களூரூவில்! #StatusUpdate

 

காவேரி நீர் பங்கீட்டு பிரச்னை, நேற்று விஸ்வரூபம் எடுத்து, இரு மாநிலங்களிலும், வன்முறை வெடித்துள்ளது.நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியாகி இருக்கிறார். நான்கு பேர் காயமடைந்து இருக்கிறார்கள்.உச்சநீதிமன்றம் செப்டம்பர் 20-ம் தேதி, கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என மீண்டும் உத்தரவிட்டதும், கலவரம் வெடித்தது.

sd.jpg

@BlrCityPolice என்ற ட்விட்டர் ஐடி மூலம், இன்றைய பாதுகாப்பு நிலை பற்றி காவல்துறை அறிவுறுத்தி இருக்கிறது.பெங்களூரு முழுவதிலும் 15000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.144 தடை உத்தரவு இன்றும் அமலில் இருப்பதால் BMTC ,BMRCL,KSRTC  பேருந்துகள் இயங்காது. பெங்களூரு முழுவதும் தற்போது அமைதியான சூழலலே நிலவுகிறது.வாட்சாப்பில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தபட்டுள்ளது.அதே போல்,  RR நகர்,விஜயநகர், சந்திரா லே அவுட், ராஜாஜி நகர், சந்திரா லே அவுட் உள்ளிட்ட 16 இடங்களில் இன்றும் தடை உத்தரவு பிறக்கப்பட்டு இருக்கிறது.

16.jpg

 

 

 


ஞாயிறு அன்று கன்னட நடிகர்களைப் பற்றி ஃபேஸ்புக்கில் பதிவு செய்ததற்காக ஒருவரை,கன்னட அமைப்புகள் தாக்கியதாக வெளியான வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதன் எதிரொலியாக நேற்று காலை ராமேஸ்வரத்தில், கன்னட வாகனங்களை சிலர் தாக்கினர். அதே போல், சென்னையில் இருந்த தனியார் ஹோட்டலில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.அதன் பின்னர் நேற்று மதியத்தில் இருந்து கர்நாடகாவின் பெங்களூரு, மைசூர் ஆகிய இடங்களில் கலவரம் வெடித்தது.மதியத்திற்கு மேல் ஷாப்பிங் மால்கள்  மூடப்பட்டன. 12 மணியில் இருந்து மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டது.கூடுதல் பாதுகாப்பு படையினர் வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் எழுதினார் கர்நாடக முதல்வர் சித்தாராமையா

வாகனங்கள் மீது தாக்குதல்


பெங்களூரு மைசூர் போன்ற இடங்களில் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக வாகனங்கள் தாக்கப்பட்டன. கர்நாடகாவில் இருந்த தமிழக வாகனங்கள் தாக்கப்படாமல் இருக்க, தமிழக  வாகனங்களில் இருக்கும் நம்பர் பிளேட்டுக்களை அகற்றி இருக்கிறார்கள்.சிலர் அதை மறைத்து இருக்கிறார்கள்."இங்குள்ள தமிழக மக்களையும், அவர்களது வாகனங்களையும் காப்பது எங்கள் கடமை..இது போன்ற செயல்களால், வன்முறையாளர்கள் இடமிருந்து பத்திரமாக வாகனங்களை மீட்க முடியும்" என்றார் கூடுதல் ஆணையர் ஹிதேந்திரா. ஆனால், அதையும் மீறி நேற்று தமிழக தனியார் பேருந்து நிலையத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட  பேருந்துகளை கிடங்கிலேயே வைத்து எறிக்கப்பட்டன.


நயண்டஹல்லியில் இருந்து குவேம்பு நகர் வரையில் இருக்கும் 3 கிமீ தொலைவிற்கு போர்க்காட்சிகள் போல், வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது.நியூ டிம்பர் சாலையில் இருக்கும் 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் தாக்கப்பட்டன.வாகனங்களை எறித்ததோடு, வன்முறையாளர்கள் அதில் செல்ஃபி போட்டோக்கள் எடுக்கும் அளவிற்கு மதி இழந்து வெறியாட்டம் நிகழ்த்தினர்.

 

selfie.jpg

கன்னடம் பேசு


சில இடங்களில் கன்னட அரசு பேருந்துகளில் இருந்தும் மக்கள் இறக்கிவிடப்பட்டனர்.சில இடங்களில் மக்கள் நிறுத்தி, கன்ண்டம் பேச சொல்லி இருக்கிறார்கள். கன்னடம் பேசிய சிலரை , கன்னட நாளிதழ் ஒன்றைக் கொடுத்து, தலைப்பை படித்துக்காட்ட சொல்லி இருக்கிறார்கள்.அப்படி பேசியவர்களை மட்டும் தான் அமைதியாக செல்ல அனுமதித்து இருக்கிறார்கள்.

நேற்று மதியம் 144 த்டை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.ஆனால், அது பொய் என அறிவிக்கப்பட்டது.பின்னர் 6 மணியளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தாமதாக தடை உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டது தான் காரணம் என சிலர் தெரிவிக்கின்றனர்.

http://www.vikatan.com/news/india/68298-peace-returns-in-bengalore-status-update.art

மீண்டும் கன்னட தீவிரவாதிகள் 
தமிழன் மீது தாக்குதல்

 

  • தொடங்கியவர்

ஊரடங்கு உத்தரவால் பெங்களூருவில் அமைதிச் சூழல்; பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

 

 
பெங்களூரு தீபாஞ்சலி நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பாதுகாப்புப் பணியில் மத்திய படையினர் | படம்: மோகித் எம்.ராவ்
பெங்களூரு தீபாஞ்சலி நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பாதுகாப்புப் பணியில் மத்திய படையினர் | படம்: மோகித் எம்.ராவ்

தமிழகத்துக்கு வரும் 20-ம் தேதி வரை காவிரியில் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, வன்முறை வெடித்ததால் பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பெங்களூருவில் அமைதி நிலவுகிறது. பள்ளி, கல்லூரிகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. அரசு, தனியார் பேருந்துகள், டாக்ஸிகள், ஆட்டோக்கள் என எவ்வித வாகனங்களும் இயங்கவில்லை.

திரையரங்குகள், பொழுதுபோக்கு கூடங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இயல்பு வாழ்க்கை முடங்கியிருந்தாலும் திங்கள் கிழமை போல் வன்முறை சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை.

நகர் முழுவதும் மத்திய போலீஸ் படையினரும், மாநில காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். 40 கம்பெனி படைகள் கர்நாடகா முழுவதும் குவிக்கப்பட்டுள்ளது. மாநில உள்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மத்திய படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மைசூரு சாலையில் மட்டும் தடையையும் மீறி திரண்ட கும்பல் தமிழக வாகனங்களுக்கு தீ வைத்துள்ளன. 8 லாரிகள் தீக்கிரையானதாகத் தெரிகிறது.

கண்டதும் சுட உத்தரவு:

இதற்கிடையில் வன்முறை வெறியாட்டங்கள் அதிகமாக காணப்பட்ட ராஜகோபால் நகர், காமாட்சிபாளையா, ஹெங்கன்ஹல்லி, மைசூர் சாலை, பெட்ராயனபுரா உள்ளிட்ட 8 இடங்களில் கலவரங்களை கட்டுப்படுத்தும் வகையில் 'கண்டதும் சுடும்' உத்தரவு அமலில் இருக்கிறது.

'மனிதாபிமானம் முக்கியம்'

நிலம், ஜலம், ஜனம் என்ற கோஷங்களோடு போராடி வரும் கன்னட அமைப்புகளுக்கு முதல்வர் சித்தராமையா அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். நிலம், ஜலம், ஜனம் முக்கியம்தான் அதைவிட முக்கியம் மனிதாபிமானம். எனவே மனிதாபிமானத்தை பேணும் வகையில் நடந்துகொள்ளுங்கள் என அவர் தொலைக்காட்சி, வானொலி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வர்த்தகம் பாதிப்பு:

தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்குமாறு கடந்த 7-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது முதல் மாநிலம் முழுவதும் பரவலாக நடந்துவரும் போராட்டங்களால் வர்த்தகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் இயக்கப்படாததால் கே.எஸ்.ஆர்.டி.சி.-க்கு ரூ.4 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. முழுவதும் நிலைமை சீரான பிறகே இழப்பு விவரங்கள் முழுமையாக தெரியவரும்.

ஐடி ஹப் என்று பெயர் பெற்ற பெங்களூருவில் மென்பொருள் நிறுவனங்கள் பலவும் மூடிக்கிடக்கின்றன. ஒரு சில நிறுவனங்கள் ஊழியர்ளை வீட்டில் இருந்தே பணி செய்யும்படி அறிவுறுத்தியுள்ளன.

விளக்கம் கோரினார் ராஜ்நாத் சிங்:

இதற்கிடையில் கர்நாடகாவில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் குறித்து விளக்கமளிக்குமாறு மாநில அரசுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். அதேவேளையில், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

அமைச்சரவை கூட்டம்:

நிலைமை இன்று சற்றே கட்டுக்குள் இருந்தாலும் போராட்டங்களை நிரந்தரமாக கட்டுக்குள் கொண்டு வருவது, கர்நாடகா மாநில உரிமைகளை மீட்டெடுப்பது குறித்து சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா, மூத்த எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, வீரப்ப மொய்லி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

அரசியல் ஆகும் காவிரி பிரச்சினை..

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடக முதல்வர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரி மைசூரு, மண்டியாவில் கன்னட அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், "காவிரி விவகாரத்தை எதிர்க்கட்சிகளான பாஜகவும், மஜதவும் அரசியல் ஆக்கி வருகின்றன. சில கன்னட அமைப்புகளும், விவசாய சங்கங்களும் சுயநல நோக்கத்தோடும், சாதி உணர்வுடனும் சித்தராமையாவுக்கு எதிராக போராடி வருகின்றன. தேர்தலை மனதில் வைத்து இந்த அமைப்புகள் செயல்படுகின்றன" என சித்தராமையாவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் வேதனை:

காவிரி பிரச்சினையில் கர்நாடகாவில் நடைபெறும் வன்முறை வேதனை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கர்நாடகம், தமிழகம் என இரு மாநில மக்களும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முற்பட வேண்டுமே தவிர வன்முறையில் ஈடுபடக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். பொறுப்புகளை மனதில் வைத்து இரு மாநில மக்களும் செயல்பட வேண்டும். நாட்டின் நலனே முக்கியம் என்பதை மக்கள் உணர வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார்.

ஹெல்ப்லைன் எண்கள் அறிவிப்பு:

கர்நடகா போலீஸ் தரப்பில் பொதுமக்களுக்காக ஹெல்ப்லைன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18004250100, 155365 எண்களை தொடர்பு கொண்டு மக்கள் பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/india/ஊரடங்கு-உத்தரவால்-பெங்களூருவில்-அமைதிச்-சூழல்-பாதுகாப்பு-நடவடிக்கைகள்-தீவிரம்/article9103483.ece?homepage=true

  • தொடங்கியவர்

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவோம்; சட்ட மீறல்களை ஒடுக்குவோம் - கர்நாடக முதல்வர் உறுதி

 

 
கர்நாடக முதல்வர் சித்தராமையா. | கோப்புப் படம்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா. | கோப்புப் படம்.

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் சட்டத்தை மதிக்காமல் மீறுபவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம் என்றார் சித்தராமையா.

இன்று காவிரி விவகாரம் குறித்து கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் சித்தராமையா இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கர்நாடகா மதித்து நடக்கும். காவிரி பிரச்சினையில் கர்நாடகாவுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது.

15 டிஎம்சி தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளதால் அதனை நடைமுறைப் படுத்தித்தா ஆக வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இடைக்கால தீர்ப்புதான். தீர்ப்பின் சாதக பாதகங்களை மேல்முறையீட்டில் எடுத்துரைப்போம். நீதித்துறை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம்.

தமிழகத்துக்கு கர்நாடகா தொடர்ந்து தண்ணீர் வழங்கியே வருகிறது. இந்த கூட்டத்தில் பெங்களூரில் நடைபெற்ற வன்முறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. வன்முறைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மக்கள் இது குறித்து அமைதி காக்க வேண்டும். உயிரிழப்புகளை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது. பொதுச்சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் சட்டத்தை மதிக்காமல் மீறுபவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம். தவிர்க்க முடியாத சூழலில்தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பிற மாநிலத்திலிருந்து வருவோருக்கும், இங்கேயே இருப்போருக்கும் பாதுகாப்பு அளிப்போம். கர்நாடகாவில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. காவல்துறையும், அரசும் மக்களுக்கு பாதுகாப்பாகவும் உதவியாகவும் இருக்கும். பிறமொழி பேசும் மக்களின் உடைமைகளுக்கும் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்.

பொதுமக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்தல் கூடாது. தமிழகத்தில் உள்ள கன்னட மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய அம்மாநில அரசை வலியுறுத்துகிறோம். இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஜெயலலிதாவும் எனக்கு பதில் எழுதியுள்ளார். இரு மாநிலங்களுக்கிடையேயும் நல்லுறவு நிலவ வேண்டும்.

தமிழகத்துக்கு நீர் அளித்தாலும் குடிநீர் விநியோகம் சீராக இருக்கும் என்று உறுதி அளிக்கிறேன். கர்நாடக தரப்பு வாதங்களை காவிரி மேற்பார்வைக் கூட்டத்தில் எடுத்துரைப்போம்.

காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க பிரதமர் மோடியை நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். காவிரிப் பிரச்சினையில் சுமுகத் தீர்வு காண பேச்சு வார்த்தை நடத்துமாறு பிரதமரை வலியுறுத்துவோம். இந்தப் பிரச்சினையின் அனைத்து அம்சங்களையும் பிரதமரிடம் பேசுவோம்” என்றார் சித்தராமையா.

http://tamil.thehindu.com/india/உச்ச-நீதிமன்ற-தீர்ப்பை-அமல்படுத்துவோம்-சட்ட-மீறல்களை-ஒடுக்குவோம்-கர்நாடக-முதல்வர்-உறுதி/article9103972.ece?homepage=true

கன்னடர்கள் காடையர்கள் என்பதை அவ்வப்போது நிரூபித்து வருகிறார்கள். இவர்கள் களவாக இந்தியாவினுள் புகுந்த ஆரியர்களின் கலப்பாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்


 

Quote

மக்கள் இது குறித்து அமைதி காக்க வேண்டும். உயிரிழப்புகளை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது. பொதுச்சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் சட்டத்தை மதிக்காமல் மீறுபவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம்.

இனி .. வந்த என்ன வராட்டி என்ன ? அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே..
ஒரு வேளை இன்னும் ரொம்ப எதிர்பர்க்குறாரோ? அதுக்கு பேசாம சிங்களவன ஆலோசகரா வச்சுக்கங்க . தமிழனுக்கு எதிரா  இன்னும் டிசைன் டிசைன்னா எப்படி கலவரம் பண்ணுவது என்று சொல்லி குடுப்பான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.