Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“எழுக தமிழ்!” பேரணியில் தமிழரசுக் கட்சிக்கு ஆர்வமில்லை!

Featured Replies

 “எழுக தமிழ்!” பேரணியில் தமிழரசுக் கட்சிக்கு ஆர்வமில்லை!

தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழு உறுப்பினர்களுக்கும், தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் “எழுக தமிழ்!” பேரணியில் தம்மால் பங்குபற்ற முடியாது என்று தமிழரசுக் கட்சி தரப்பு தெரிவித்திருப்பதாக தெரியவருகின்றது.

எதிர்வரும் செப்ரெம்பர் 24ஆம் திகதி நடைபெறவிருக்கும் “எழுக தமிழ்!” எழுச்சிப் பேரணியில் பங்குபற்றுமாறு தமிழரசுக் கட்சியையும் அழைப்பதற்காகவே தமிழ் மக்கள் பேரவையினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண வர்த்தகர் சங்க தலைவர் திரு. ஜெயசேகரம் அவர்களின் ஏற்பாட்டில், அவரது வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00மணிக்கு ஆரம்பமாகிய இந்தச் சந்திப்பு சுமார் இரண்டரை மணி நேரங்கள் நீடித்தது.

தமிழ் மக்கள் பேரவையின் சார்பில் அதன் இணைத்தலைவர் மருத்துவர் லக்ஸ்மன், ஏற்பாட்டாளர்களில் ஒருவரான மருத்துவர் சிவன்சுதன், பேராசிரியர் சிவநாதன், மருத்துவர் பாலமுருகன் மற்றும் மேலும் மூவர் கலந்துகொண்டனர்.

தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் திரு. மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பேரணி நடாத்தப்படுவதற்காக முன்வைக்கப்படுகின்ற காரணங்களும், கோரிக்கைகளும் சரியானவையாக இருக்கின்ற பொழுதும் இந்தப் பேரணியினால் அரசாங்கத்திற்கு நெருக்கடிகள் ஏற்படும் என்றபடியினால் இந்தப் பேரணியை நடாத்தாது தவிர்க்கும்படி தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் மக்கள் பேரவையினரை கேட்டுக்கொண்டார். ஆனால் அரசாங்கத்திற்கு நெருக்கடிகள் வந்துவிடும் என்பதற்காகத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை முன்வைத்து நடாத்தப்படுகின்ற ஒரு போராட்டத்தை நிறுத்திவிட முடியாது என்று பேரவையினர் பதிலளித்தனர்.

புதிதாக எழுதப்படுகின்ற அரசியலமைப்பு சட்டம் தமிழ் மக்களுக்கு முழுமையான தீர்வு ஒன்றை கொண்டுவரும் என்று தான் நம்புவதாக எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். “ஆனால், தமிழர்கள் ஏமாற்றப்பட்டு விடுவதற்கும் வாய்ப்புக்கள் உண்டு. அதனால் நாம் காத்திருந்துதான் பார்க்கவேண்டும்” என்றும் அவர் கூறினார். அப்பொழுது, “எமக்கான உரிமைகளை வலியுறுத்திப் போராட்டம் எதனையும் நடத்தாமல் காத்திருந்துவிட்டு, பின்பு ஏமாறச் சொல்லுகிறீர்களா என்று பேரவைத் தரப்பிலிருந்து பேராசிரியர் சிவநாதன் கேட்ட பொழுது,  “ஏற்கனவே அறுபது வருடங்களாக நாங்கள் எத்தனையோ தடவைகள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம். இன்னுமொரு தடவை கூட நாங்கள் ஏமாற்றப்பட்டாலும் பரவாயில்லை. அவ்வாறு நாங்கள் ஏமாற்றப்பட்டால், அதன்பின்பு போராட வேண்டிய தேவைகள் எதுவும் இருக்கின்றதா எனவும், மாற்று வழிகள் என்ன இருக்கின்றன எனவும் நாங்கள் தேடலாம்” என்று எம்.ஏ. சுமந்திரன் பதிலளித்தார்.

அதற்கு, அறுபது வருட காலங்களாக நம்பிக்கை தரப்பட்டு ஏமாற்றப்பட்டுவிட்ட நாங்கள் இன்னொரு தடவையும் அவ்வாறு ஏமாற்றப்படக்கூடிய சூழல் இருப்பதாக நீங்களே கூறுவதால், அவ்வாறு ஏமாற்றப்படாமல் இருப்பதற்காக தமிழ் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து இந்த “எழுக தமிழ்!” பேரணியை நிச்சயமாக நடாத்தியே தீரவேண்டும் என்று பேரவையினர் பதிலளித்தனர்.

இருந்தாலும், இந்த “எழுக தமிழ்!” பேரணிக்கு தமது கட்சியின் ஆதரவு இல்லையென்றும், தாம் அதில் பங்குபற்ற மாட்டோம் என்றும் அந்தப் பேரணியை நடத்தாது நிறுத்திவிடும்படியும் தமிழரசுக் கட்சியினர் தெரிவித்தனர்.

http://thuliyam.com/?p=41822

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா நியூயோர்கிலை நிற்கையில்....மனது நோகும்படி நடக்கக் கூடாது...அது எங்கடை மடியிலைதான் உதைக்கும்...அய்யாவுக்கு அங்கு உலகத்திலையே முதல் சனாதிபதியாம்...அவர் இந்த தரத்தோடை இலங்கையின் அழுக்கை துடைத்துவிடுவாராம்...அந்த சந்தோசத்திலை மகன்,மகள்கள் மருத்துவபடிப்பையும்...சிரீது சொத்தையும் 5 கார் காணாது 8 கார் ஆக்கிவிடலாம்....இந்த ஊர்வலத்தை நிப்பாட்டுங்கோ..


தமிழரசுக் கட்சி, வணிகர் கழகம் ஆதரவில்லை
 
20-09-2016 11:00 AM
Comments - 0       Views - 0

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள 'எழுக தமிழ்' பேரணிக்கு, இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் என்பன ஆதரவு வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளன.

தமிழர் தாயகத்தில் சிங்கள, பௌத்த மயமாக்கலை உடன் நிறுத்தக் கோரியும் தமிழர் தேசம் தனித்துவமான இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான ஒரு சமஸ்டித் தீர்வை வலியுறுத்தியும் யுத்தக் குற்றங்களுக்கும் இனப்படுகொலைக்குமான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளது.

உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடத்தப்படவுள்ள இந்தப் பேரணி, கல்வியங்காட்டில் ஆரம்பித்து திருநெல்வேலி, மாவட்டச் செயலகம்; வழியாக யாழ்ப்பாணம் - முற்றவெளி நோக்கிச் செல்லவுள்ளது.

இந்தப் பேரணிக்கு ஆதரவு வழங்குமாறு, ஏற்பாட்டாளர்கள் அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடினர். இதில், தமிழரசுக் கட்சியுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், தமிழரசுக் கட்சி ஆதரவு கொடுப்பதற்கு மறுத்துள்ளது.

இதேவேளை, 'இந்தப் பேரணிக்கு தாங்கள் ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை. கடைகளைப் பூட்டி பேரணியில் கலந்துகொள்வதற்கு நாங்கள் அறிவித்தல் கொடுக்கமாட்டோம். விரும்பினால், ஒவ்வொரு வர்த்தகர்களும் அதனைச் செய்யலாம். அது அவர்களின் விருப்பம்' என வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/182246#sthash.u8ztn6Uo.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கட்சியினதும் அதனது செயற்பாடுகளினதும் பொய்த்தன்மையைத் தாமே தமது வாயால் சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது. இனியாவது தமிழர்கள் சரியான தலைமைகளை இனங்காண்பதோடு தமிழ் மக்கள் பேரவையை சரியாகப் பயன்படுத்திப் பொருத்தமான அரசியல் தீர்வுத்திட்டமொன்றை ஒரு கைநூல் வடிவிலே மும்மொழிகளிலும் தயாரித்து வெளிநாட்டு ராசதந்திரிகள் சிங்கள தமிழ் அரசியல் கட்சிகள் புலம்பெயர் தமிழமைப்புகள் மனிதஉரிமைச் செயற்பாட்டாளர்கள் ஐநா சார்அமைப்புகள் என அனைவரோடும் பகிர்வதும் அது தொடர்பான பரப்புரைக் குழுவொன்றை உருவாக்கி சனனாயக ரீதியான செயற்பாடுகளை முடுக்கிவிடுவதே தமிழரசுக்கட்சியின் தமிழர் நலன்பேணாப்போக்கை முறியடித்துத் தமிழரது உரிமைகளைப் பெற வழிசமைக்கும். இனியும் தமிழரசுக்கட்சியை நம்பினால் முழுத்தீவும் இன்னும் சில ஆண்டுகளில் பௌத்த சிங்கள மயமாகிவிடும்.

இந்த  நிகழ்வு  உண்மையில்  புலபெயர்  தேசங்களில்  செய்யவேண்டிய  ஒன்று  ஊரில  இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அஞ்சரன் said:

இந்த  நிகழ்வு  உண்மையில்  புலபெயர்  தேசங்களில்  செய்யவேண்டிய  ஒன்று  ஊரில  இல்லை .

ஆம்.. அப்படி புலம்பெயர் தேசங்களில் செய்யும்போதுதான் கொத்துரொட்டி விற்றார்கள் என்று கட்டுரை வரையலாம்.. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

ஆம்.. அப்படி புலம்பெயர் தேசங்களில் செய்யும்போதுதான் கொத்துரொட்டி விற்றார்கள் என்று கட்டுரை வரையலாம்.. tw_blush:

இங்க செய்தா

அந்த மக்கள் செய்யட்டும்

அங்க செய்தா

புலத்தில் செய்யவேண்டியது

நான் ஒன்றிலும் இல்லை

அங்கயும் ஆதரவில்லை

இங்கையும் ஆதரவில்லை

வரவும் மாட்டன்.....:(

 

19 hours ago, Athavan CH said:

 “எழுக தமிழ்!” பேரணியில் தமிழரசுக் கட்சிக்கு ஆர்வமில்லை!

தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழு உறுப்பினர்களுக்கும், தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் “எழுக தமிழ்!” பேரணியில் தம்மால் பங்குபற்ற முடியாது என்று தமிழரசுக் கட்சி தரப்பு தெரிவித்திருப்பதாக தெரியவருகின்றது.

தமிழரசுக்கட்சியின் பலம் இதில்உடையப்பொகிறது

வெளியில் தெரியப்போகிறது...

இது தமிழருக்கு நன்மை தருமா?

இல்லை......??????????

  • கருத்துக்கள உறவுகள்

 

5 hours ago, இசைக்கலைஞன் said:

ஆம்.. அப்படி புலம்பெயர் தேசங்களில் செய்யும்போதுதான் கொத்துரொட்டி விற்றார்கள் என்று கட்டுரை வரையலாம்.. tw_blush:

குறிப்பாக  சீமான்  கோஷ்டியை  உள்ள  அனுமதிக்க  கூடாது  உண்டியல்  தடை  செய்யவேணும்  ...மற்றும்படி  றோட்டிக்காவது  எங்கத்  தேசியவாதிகள்  வருவீனம்  அதுக்குத்தானே  விக்கிற .

  • கருத்துக்கள உறவுகள்

வக்கீல்கள் பேச்சை கேட்டு தயவு செய்து வீணாக போக வேண்டாம் .. !!  

அருஞ்சொற்பொருள் என்று இன்றும் இங்கு தமிழ் பேப்பரில் அதாவது  ஒரு நான்கு வழிமுறைகள் கொடுப்பார்கள்.. அன்னம் என்றால் சோறு . இல்லை பறவை,.. இப்படி கொஸ்டின் பேப்பரில் டிக் அடிச்சு பழகுறம் ....பழசு எல்லாம் எதற்கு இப்ப புதியதாக கதைப்பம்..!!

வருங்கால பாலைவனம் எது ?
1)
அ.) தார் பாலைவனம் ஆ) பாலாற்று படுகை இ) முல்லைபெரியாறு படுகை ஈ) காவிரி படுகை
2)
வக்கீல்கள் தொழில் என்ன ..?
அ) ....


டிஸ்கி :

 காசு வாங்காமால் எந்த வக்கீல் இதுவரை வாதிட்டு இருக்கார்,,?  

கோர்ட்டில் பருப்பு வேகவில்லையென்றால் இதுங்க மட்டும் ஏன் பொதுவாழ்க்கைக்கு வருதுகள்..? அங்கையும் சுப்ரீம் கோர்டில் டிசில்வா கல்சான் குலசான் எவனா ஆப்பு வைத்திருப்பார்கள்..

டிஸ்கிக்கு டிஸ்கி ;


நாம பொதுவாழ்கையில் ஈடு படும் நல்ல வக்கீல்களை குறை சொல்ல வில்லை..

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 20.9.2016 at 6:29 PM, விசுகு said:

இங்க செய்தா

அந்த மக்கள் செய்யட்டும்

அங்க செய்தா

புலத்தில் செய்யவேண்டியது

நான் ஒன்றிலும் இல்லை

அங்கயும் ஆதரவில்லை

இங்கையும் ஆதரவில்லை

வரவும் மாட்டன்.....:(

 

On 20.9.2016 at 4:59 PM, இசைக்கலைஞன் said:

ஆம்.. அப்படி புலம்பெயர் தேசங்களில் செய்யும்போதுதான் கொத்துரொட்டி விற்றார்கள் என்று கட்டுரை வரையலாம்.. tw_blush:

நான் நினைத்ததை அப்படியே சொல்லியிருக்கின்றீர்கள்.tw_thumbsup: tw_thumbsup: tw_thumbsup: 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, அஞ்சரன் said:

குறிப்பாக  சீமான்  கோஷ்டியை  உள்ள  அனுமதிக்க  கூடாது  உண்டியல்  தடை  செய்யவேணும்  ...மற்றும்படி  றோட்டிக்காவது  எங்கத்  தேசியவாதிகள்  வருவீனம்  அதுக்குத்தானே  விக்கிற .

எந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி அவர்களை தடுப்பது?! tw_blush: நீங்கள் மேலை நாடு ஒன்றில்தானே வாழ்கிறீர்கள்?! சட்டம் என்பது எவ்வாறு இயங்கும் என்பது ஓரளவுக்காவது தெரியுமல்லவா?! :D:

On 9/19/2016 at 5:14 PM, Athavan CH said:

புதிதாக எழுதப்படுகின்ற அரசியலமைப்பு சட்டம் தமிழ் மக்களுக்கு முழுமையான தீர்வு ஒன்றை கொண்டுவரும் என்று தான் நம்புவதாக எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

இவர் எல்லாவற்றையும் தான் நம்புவதாக முதலில் சொல்லுவார்.. பிறகு நம்பினதுபோல் நடக்கவில்லை என்பார்கள் இவரது கட்சிக்காரர்கள். "நான் ஏமாறுகிறேன்.. நீங்களும் ஏமாறுங்கோ.." எண்டு சொல்லினம்.. :D:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே நடந்தாலும் பதில் வராது தேவையானதை விடுத்து தேவையில்லாதது தான் நடக்கிறது 

ஒற்றுமை என்று காட்டலாம் ஆனால் அதுக்குள்ள எத்தனை எதிரிகள் இருக்கிறான் என்பது கனபேருக்கு தெரியாது 

  • தொடங்கியவர்

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு...

11744.jpg

அன்புக்குரிய மாவை சேனாதிராசா அவர்களுக்கு அன்பு வணக்கம். 
முன்பும் இரு தடவை தங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அந்தக் கடிதங்கள் எழுதப்பட்ட சூழ்நிலை வேறு. இன்றைய சூழ்நிலை வேறு. தமிழ் மக்களின் அகிம்சைப் போராட்டத்தில் தங்களின் வகிபங்கு மறப்பதற்குரியதல்ல. 

நம் சிறுவயதில் என் ஊரில் பெரிய வரவேற்பு நிகழ்வு. சிறை மீண்ட மாவை சேனாதிராசா, வண்ணை ஆனந்தன், காசிஆனந்தன் ஆகியோருக்கு வரவேற்பு என்று பெரியவர்கள் பேசிக்கொண்டனர். 

பட்டாசு வெடிகளின் மத்தியில் ஓடி ஓடிப் பார்த்தேன். விபரத்தை அப்போது விளங்கிக் கொள்ளமுடிய வில்லை. பின்னாளில் தமிழ் மக்களின் அகிம்சைப் போராட்டம்; அதன் காரணமாக தாங்கள் சிறை சென்ற வரலாறுகளை அறிந்து கொண்டேன். 

இவை ஒரு சிறு முற்குறிப்பு. நாம் இக்கடிதம் எழுத முற்பட்டதன் நோக்கம் எதிர்வரும் 24ஆம் திகதி தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வட மாகாணத்திலுள்ள அத்தனை பொது அமைப்புகள், தமிழ் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் எனப் பலரும் திரண்டு அகிம்சை வழியில்-ஜனநாயக முறையில் மாபெரும் பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளது. 

இந்தப் பேரணிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரவு தெரிவிக்காது என்பது போல ஒரு தகவல் வெளிவந்துள்ளது.  இந்தத் தகவலில் உண்மை இருக்க முடியாது என்பது நம் உறுதியான நம்பிக்கை. 
அதிலும் மாவை சேனாதிராசாவை தலைவராகக் கொண்ட இலங்கை தமிழரசுக் கட்சி அப்படியொரு முடிவுக்கு வராது என்பதே நம் நம்பிக்கையின் ஆதாரம். 

இருந்தும் தங்களையும் சிலர் திசை திருப்பலாம். இப்போது தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமையில் யார் எந்தப் பக்கம் என்பது கூடத்தெரியாமல் இருப்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.

அகிம்சை வழியில் பேரணி நடத்துவது இப்போது உகந்ததல்ல. தீர்வு விபரங்கள் நடந்து கொண்டிருப்பது போல தங்கள் கட்சியின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தீர்வு விரைவில் வரு மாக இருந்தால், அது நல்லது. 

ஆனால் அந்தத் தீர்வை பேரணி எப்படி தடை செய்யும் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.
தீர்வை விரைவு படுத்துங்கள் என்பதுதான் பேரணியின் அதி உச்சமான கோரிக்கை. ஏனைய கோரிக் கைகள் வடக்கில் புதிதாக பெளத்த விகாரைகளை அமையாதீர்கள், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள், தமிழ் மக்களின் வாழ்விடங்களில் இருந்து இராணுவத்தை வெளியேற்றி மக்கள் மீள் குடியமர உதவுங்கள். காணாமல்போனவர்களின் விடயத்தில் விரைந்து கரிசனை காட்டுங்கள். எங்கள் கடல் வளத்தை எங்களுக்கே உரியதாக்குங்கள் என்ற கோரிக்கைகளே முன்வைக்கப்படுகின்றன. இந்தக் கோரிக்கைகள் தவறானவை என்று நீங்கள் கருதுகின்றீர்களா?

அப்படியானால் அண்மையில் கிளிநொச்சியில் பெளத்த விகாரை அமைப்பதற்கு எதிராக நடந்த பேர ணியில் நீங்கள் ஏன் பங்கேற்றீர்கள்? பேரணி நட த்துவதென்றால் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அதில் வெற்றி பெற்றவர்களும்தான் செய்ய வேண்டுமா? தேர்தலில் தோற்றவர்கள் முன்னெடுக்கும் பேரணி என்று நாக்கூசாமல் சொல்வோரில் எத்தனை பேரின் தேர்தல் வெற்றி உண்மையானது. 

தேர்தலில் வென்ற சம்பந்தன் ஐயா உட்பட சிலர் முன்னைய தேர்தலில்   தோற்றது மறதிக்குரியதாயி ற்றா? இதுபோன்ற கேள்விகள் எழுவது நியாயமானதே. எனவே தமிழ் மக்கள் பேரவை நடத்துகின்ற பேரணி தமிழ் மக்களுக்கானது. அந்தப் பேரணியில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளே கவனிக்கப்பட வேண்டிவை. 

இந்தப்  பேரணியில் தமிழ் மக்கள் உணர்வு பூர்வமாக பங்கு பற்றுவர். அவர்களின் எண்ணிக்கை பல ஆயிரமாக கணிக்கப்படும் போது நிச்சயம் நல்லாட்சியில் காலம் கடத்தப்படும் தீர்வுகள் மேலெழும் என் பதே உண்மை. இதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.  

http://www.valampurii.lk/valampurii/content.php?id=11744&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்

சின்னக்கவுண்டர் சிறிதரன் பேரணி நடத்தினால் ஒரு பிரச்சனையும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.