Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளைகளுக்கு... திருமணம்  பேச ஆரம்பிக்கும் பெற்றோர்கள், அதனை... பிள்ளையிடம் சொல்லலாமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

தானும்... தன்ரை படிப்பும்...என்ற சிந்தனைகளில் இருக்கும்  பிள்ளைகளுக்கு, 
நீயும்...  "லவ்"  பண்ணு என்று, இலங்கைத் தமிழ்  அப்பன்  சொல்ல முடியுமா?

தானும் தன் படிப்பும் என்று இருக்கும் நேரத்தில் சொல்லணும் என்றில்லை

திருமணம் பற்றிய கதை வந்தால் சொல்லத்தான் வேண்டும்

நாம 4 அடி பாய்ந்தால் அவர்கள் 16அடி பாய்வார்கள் சிறி.

அவர்கள் கதையை தொடங்குகிறார்கள் என்றால் மீற்றர் பார்க்கிறார்கள் என்று அர்த்தம்..

  • 2 weeks later...
  • Replies 51
  • Views 6.3k
  • Created
  • Last Reply

தனது வாழ்ககைத் துணையை தேர்வு செய்யும் முழு உரிமையும் அந்த பிளளைககு உண்டு. பெறறோர் அதற்கு உதவியாக ஒததாசை இருக்கலாமேயொழிய தாங்களே தன்னிசசையாக முடிவெடுககும் உரிமை அவர்களுககு இலலை. நாங்கள் வாழ்வது மத்திய காலததில்(Middle Age)  இல்லை.நவீன அறிவியல் காலததில்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறியர்,

இன்று தான் உங்கள் இந்த திரி பார்த்தேன்.

இன்றைய நிலையில், பெற்றவர்கள், பெண்ணாயின் ஆணுடன், ஆணாயின் பெண்ணுடன் வாழ்க்கை நடாத்த முனையவேண்டுமே என்பதே முதலாவது  ஆதங்கம்.

அடுத்தது, நம்மூரில் உள்ளது போல மச்சான், மச்சாள், ஒன்று விட்ட அண்ணன், அக்கா, தங்கச்சி வித்தியாசம் புரியும் சூழல் இல்லை. எனவே சொந்தத்துக்குள் கட்டி வைப்பது, இங்குள்ள கலாச்சாரத்தில் வளரும் பிள்ளைகளுக்கு புரிய வைத்து செய்வது இலகுவானது அல்ல.

மூனறாவதாக, நமது சமூகத்துக்குள் புரையோடியுள்ள, சாதி, இன, மத வேறுபாடுகள் பிள்ளைகளுக்கு புரியாது. புரிய வைத்து தோல்வி கண்டவர்கள் பலர்.

(ஒரு சிங்கள பெண்ணை பல்கலைக் கழகத்துள் சந்தித்து, அவளும், என்னைப் போல இலங்கையர் தானே என்று வாதிட்டு கலியாணம் செய்த ஒருவர், தெரிந்த உறவில் உண்டு)

கனிரசம் கொட்டும் காதல் கடிதங்கள் எல்லாம் கடந்த காலமிது.

உனது (நிர்வாண) படத்தினை அனுப்பு... எனது அனுப்பி வைத்தேன், பார்த்தாயா என்று உடலழகு பார்த்து ஆண் நண்பர், பெண் நண்பர் தேர்வுகள் ஸ்னாப் சாட், இன்ஸ்டாகிராம் ஊடாக நடக்கும் காலமிது. (பகிடி இல்லை. முக்கியமாக அப்பாவிப் பெண் பிள்ளைகளுக்கு சொல்லி வையுங்கள்....பெண் தானாக விலத்தியவுடன், ஆண் நண்பர் அப்படியான படங்களை, இணைய வெளியில் போட்டு விடுகிறார்கள்... பழிவாங்கும் முகமாக... இது பெரிய ஒரு சமூகப் பிரச்னை.இது தொடர்பாக புதிய சட்டம் கொண்டுவர பிரித்தானிய அரசு ஆலோசிக்கின்றது)

இந்த நிலையில்..... குறிப்பு, பொம்பிளை பார்த்தல்...ஒகே சொல்லுதல்.... கலியாணம்....

ஒரு வெள்ளை நமது பெண்ணை, ஆணைக் கட்டினால்... முதல் அனுமானம்.... அவரது சமுகத்தில்.... அவருக்கு ஒன்றுமே கிடைக்க வில்லை.... அதுதான் இந்தப் பக்கம் எட்டிப் பார்த்து விட்டார்.

அதே போல குறிப்பு... பேச்சு என்றால்.... அவராக தேட முடியவில்லை... தாய் தகப்பன் உதவி செய்யினும் என்று முடியும்....

காலம் மாறிப் போச்சு. :rolleyes:

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகளின் திருமணவிடயத்தை அவர்கள் அறியாமல் செய்ய வெளிக்கிடுவது சுத்த முட்டாள்த்தனம். இன்றை காலத்தில் பிள்ளைகளே தங்களுக்கான வாழ்க்கைத்துணையைத் தெரிவு செய்கிறார்கள். ஒரு வேளை தெரிவு செய்யவில்லை என்றால் அவர்கள் தமக்குரிய துணைக்கு தங்களுக்குப் பிடித்த சில தகுதிகளை எதிர்பார்க்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்ளலாம். அன்றைய காலங்கள் போல் பிள்ளையின விருப்பு வெறுப்புகளை அறியாமல் பெற்றோர் எம்முயற்சி எடுத்தாலும் தோல்வியில் மட்டுமே முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, வல்வை சகாறா said:

உங்கள் பிள்ளை நாளைக்கு வேற்று இனத்தவரை....உதாரணத்திற்கு ஆபிரிக்கரையோ அல்லது அரேபியரையோ  மணம் முடிக்க விருப்பம் தெரிவித்தால் உங்கள் பதில் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

உங்கள் பிள்ளை நாளைக்கு வேற்று இனத்தவரை....உதாரணத்திற்கு ஆபிரிக்கரையோ அல்லது அரேபியரையோ  மணம் முடிக்க விருப்பம் தெரிவித்தால் உங்கள் பதில் என்ன?

ஒன்னும் பண்ண முடியாது 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, நந்தன் said:

ஒன்னும் பண்ண முடியாது 

அப்ப தனிநாடும் தேவையில்லை.....

சல்லிக்கட்டும் தேவையில்லை..

மானம் மரியாதையும் தேவையில்லை.

வரலாறும் தேவையில்லை....

பாரம்பரியமும் தேவையில்லை.....

சேறு கண்ட இடத்திலை மிதிச்சு தண்ணி கண்ட இடத்திலை கழுவிக்கொண்டு சீவியத்தை நடத்தவேண்டியதுதான்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
On 1/21/2017 at 7:26 PM, குமாரசாமி said:

உங்கள் பிள்ளை நாளைக்கு வேற்று இனத்தவரை....உதாரணத்திற்கு ஆபிரிக்கரையோ அல்லது அரேபியரையோ  மணம் முடிக்க விருப்பம் தெரிவித்தால் உங்கள் பதில் என்ன?

நிச்சயமாக மறுப்பு தெரிவிக்கமாட்டேன் ஏனெனில் திருமணம் என்பது இருமனம் சம்பந்தப்பட்டது. மனம் கொண்டதுதான் மாளிகை. வரலாறு, பாரம்பரியம் என்பது பெற்றோர் பிள்ளைகளின் வாழ்வுக்கு அவர்களின் வாழ்க்கைத்துணையின் தெரிவுக்கு குறுக்காக நின்று நஞ்சு குடிப்பேன் நாம் சொல்லும் பெண்ணையோ அல்லது பிள்ளையையோதான் மணக்கவேண்டும் என்று அச்சுறுத்தி பிள்ளைகளின் மகிழ்ச்சியான வாழ்வை நாசமாக்குவதல்ல.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, வல்வை சகாறா said:

பட்டிக்காட்டுத்தனமான நஞ்சு குடிப்பன் என்ற கருத்து அநாகரிகமானதுதான்.
ஆனாலும் நாம் நமது இனம் பாராம்பரியம் பழக்கவழக்கத்தை ஊட்டி வளர்ப்பதன் மூலம் எமது இனத்தை தக்க வைக்கலாம்.

இனிவரும் காலங்களில் தமிழ் தமிழினம் தனி நாடு என்று புலம்பாமல் அலம்பாமல் எமது உலகம் ஓரினம் என்று கதை விடுங்கள் .நோபல் பரிசாவது கிடைக்கும்.
 
11 minutes ago, வல்வை சகாறா said:

மனம் கொண்டதுதான் மாளிகை. வரலாறு, பாரம்பரியம் என்பது பெற்றோர் பிள்ளைகளின் வாழ்வுக்கு அவர்களின் வாழ்க்கைத்துணையின் தெரிவுக்கு குறுக்காக நின்று நஞ்சு குடிப்பேன் நாம் சொல்லும் பெண்ணையோ அல்லது பிள்ளையையோதான் மணக்கவேண்டும் என்று அச்சுறுத்தி பிள்ளைகளின் மகிழ்ச்சியான வாழ்வை நாசமாக்குவதல்ல.  

இதற்கு தானா பாடுபட்டு மண்ணை கவ்வினாய் பிரபாகரா? 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

பட்டிக்காட்டுத்தனமான நஞ்சு குடிப்பன் என்ற கருத்து அநாகரிகமானதுதான்.
ஆனாலும் நாம் நமது இனம் பாராம்பரியம் பழக்கவழக்கத்தை ஊட்டி வளர்ப்பதன் மூலம் எமது இனத்தை தக்க வைக்கலாம்.

இனிவரும் காலங்களில் தமிழ் தமிழினம் தனி நாடு என்று புலம்பாமல் அலம்பாமல் எமது உலகம் ஓரினம் என்று கதை விடுங்கள் .நோபல் பரிசாவது கிடைக்கும்.
 
கு.சா அண்ணை நாங்கள் வாழ்வது பல்லின சமூகம் கலந்து வாழும் கனடா நாட்டில் இந்நாட்டில் பிறந்து அல்லது சிறு பிராயத்திலே இருந்தே பல்லின சமூகத்தவர்களோடு பழகும் எமது பிள்ளைகள் இச்சூழலுக்கு இசைவாக்கம் அடைந்து வெகு நாட்கள் ஆகிவிட்டன. விடாப்பிடியாக பெற்றோர்களாக இருக்கும் நாம்தான் இன்னும் மாற்றமடையாமல் பிள்ளைகளுடன் போராடிக்கொண்டிருக்கிறோம். எங்களால் அவர்களை மீள எமது தனித்துவமான சூழலுக்கு இட்டுவரமுடியாது. அப்படியான முயற்சிகளும் இன்றைய சூழலில் வெற்றி அளிக்காது. இங்கு பிள்ளைகளின் திருமணவிடயமாக பெற்றோர் வரன் பார்க்கமுயற்சிக்கும்போது அவர்களுக்கு அதை தெரிவிக்கவேண்டுமா இல்லையா என்பதுதான்  கேள்வியே..... திருமண விடயம் தொடர்பாக பிள்ளைகளுக்குத் தெரியாமல் பெற்றோர் முடிவெடுப்பது மிகவும் தவறானது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்று இரண்டிற்கும் ஆசைப்படாதீர்கள்.

புத்திசாலித்தனமாக நடப்பதாக நினைத்து வெறும் உரலை இடிக்காதீர்கள்.
இனிவரும் காலங்களிலாவது தமிழ் தனிநாடு என்று புலம்பாமல் இருங்கள்.
சந்ததியை தொலைத்து விட்டு சொந்தவீடு தேடாதீர்கள்.tw_blush:

பிள்ளைகளுக்கு சொல்லி வளருங்கள்...சாதியை அல்ல...நாங்கள் தமிழர்கள்....தமிழர்களின் அவலங்களை.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

இதற்கு தானா பாடுபட்டு மண்ணை கவ்வினாய் பிரபாகரா? 

கு.சா அண்ணை இந்தத் தலைப்பிற்கும் இந்தக் கருத்திற்கும்என்ன சம்பந்தம்?tw_angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் இனமும் என் தேசமும் வேறு.....
என் நலமும் என் பிள்ளை நலமும் வேறு....:cool:

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்பது இரு மனங்கள் சேர்ந்தது என்டாலும் சின்ன வயதில் இருந்து பிள்ளைகளுக்கு தங்கட மொழி,இனப் பற்றை சொல்லி வளர்க்கா விட்டால் வேற்றினத்தில் தான் திருமணம் செய்வார்கள். இது யார் குற்றம்?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

திருமணம் என்பது இரு மனங்கள் சேர்ந்தது என்டாலும் சின்ன வயதில் இருந்து பிள்ளைகளுக்கு தங்கட மொழி,இனப் பற்றை சொல்லி வளர்க்கா விட்டால் வேற்றினத்தில் தான் திருமணம் செய்வார்கள். இது யார் குற்றம்?

ரதி எனக்கு மூனறு பிள்ளைகள் இருவர் இலங்கையில் பிறந்தவர்கள்.ஒருவர் இங்கு பிறந்தவர். 

மூவரும் தமிழ் கதைத்தால் இப்போது தான் இலங்கையில் இருந்து வந்திருக்கிறார் என்று தான் தெரியாதவர்கள் யோசிப்பார்கள்.எத்தனையோ பேர் கேட்டும் இருக்கிறார்கள்.

இருந்தும் பல்கலையில் இருந்து 8-9 வருடங்களாக வேற்று நாட்டவரையே விரும்பி இருந்தபடியால் வேறு வழியின்றி இருவருக்கும் மருமக்களின் தாய் தந்தையரின் சம்மதத்துடன் மணமுடித்து கொடுத்துள்ளோம்.

இப்போ தவறு எங்கே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் ஈழப்பிரியன்!
தவறுகள் எங்கும் எதிலும் இருக்கும்.

இது நியதி.

உங்களிடம் ஒரு சிறிய கேள்வி?.
எமது பிள்ளைகளின் இரண்டும் கெட்டான் வாழ்க்கை முறையால் திருமணங்கள் கொஞ்சம் தடுமாறித்தான் போய்க்கொண்டிருக்கின்றது. இது சந்தர்ப்ப சூழ்நிலை.:(

எமது பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகளின் வாழ்க்கை எப்படியிருக்கும் என நினைக்கின்றீர்கள்? அல்லது எப்படியிருக்க வேண்டுமென நினைக்கின்றீர்கள்?

இது விதண்டாவாதத்திற்கல்ல.....நாலு நல்ல விடயங்களை பகிர்ந்து கொள்வதற்கு மட்டுமே..:)

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

எமது பிள்ளைகள்  இரு தோணியில் பயணிக்கிறார்கள்.ஆனால் அவர்கள் பிள்ளைகளுக்கு அப்படி ஒரு தேவை இருக்காது. 

பேரப்பிள்ளைகள் எனும் போது பெரியதொரு கேள்விக்குறி தொக்கி நிற்கிறது.பிள்ளைகள் தங்களை எப்படி வளர்தோமோ அதே மாதிரி தங்கள் பிள்ளைகயையும் நாங்களே வளர்க்க வேண்டும் என விரும்புகிறார்கள்.

வயது போக போக குளிர் ரொம்ப தான் உலுப்பி எடுக்குது.இந்த நிலையில் அடுத்த அடி எங்கே வைப்பது.இது தான் உண்மை நிலமை.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎31‎/‎01‎/‎2017 at 4:44 PM, ஈழப்பிரியன் said:

எமது பிள்ளைகள்  இரு தோணியில் பயணிக்கிறார்கள்.ஆனால் அவர்கள் பிள்ளைகளுக்கு அப்படி ஒரு தேவை இருக்காது. 

பேரப்பிள்ளைகள் எனும் போது பெரியதொரு கேள்விக்குறி தொக்கி நிற்கிறது.பிள்ளைகள் தங்களை எப்படி வளர்தோமோ அதே மாதிரி தங்கள் பிள்ளைகயையும் நாங்களே வளர்க்க வேண்டும் என விரும்புகிறார்கள்.

வயது போக போக குளிர் ரொம்ப தான் உலுப்பி எடுக்குது.இந்த நிலையில் அடுத்த அடி எங்கே வைப்பது.இது தான் உண்மை நிலமை.

உங்கள் மீது தான் பிழை ஈழப்பிரியன்...நீங்கள்,உங்கள் பிள்ளைகளுக்கு  மொழியை சொல்லிக் கொடுத்த அளவிற்கு இனப் பற்றை என் ஊட்டி வளர்க்கவில்லை?...தமிழ்ரகளோடு பழக விடாமல் தனித்து வளர்த்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 01/02/2017 at 9:04 PM, ரதி said:

உங்கள் மீது தான் பிழை ஈழப்பிரியன்...நீங்கள்,உங்கள் பிள்ளைகளுக்கு  மொழியை சொல்லிக் கொடுத்த அளவிற்கு இனப் பற்றை என் ஊட்டி வளர்க்கவில்லை?...தமிழ்ரகளோடு பழக விடாமல் தனித்து வளர்த்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

குமாரசாயண்ணை மற்றும் ரதியின் கருத்துக்களின் தென்படும் ஆதங்கமும் விருப்பங்களும் தேவையான  ஒன்று தான்.

ஆனால் நாம் அதற்கு முன்  சிலவற்றை கணக்கில் எடுக்கவேண்டும்

1- எமது பிள்ளைகள் படிக்கும் நாடு எது?

2- அவர்கள் படிக்கும் முதல் மொழி எது?

3- அவர்கள் பழகும் பாடசாலை மற்றும் வேலையிடத்து  நண்பர்கள் உறவுகள் யார்??

4- அவர்கள் வாழப்போகும் தேசம் எது?

இவ்வளவையும் சேர்த்து பார்த்தால் இதில் தமிழும் தமிழர்களும் 1 வீதம் கூட வரமாட்டார்கள்

எனவே உண்மை கசக்கும்.

ஆனால்.......???

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் எல்லாரும் ஊருக்கு போனால் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.நில அகபரிப்ரிப்பு  உட்பட

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3.2.2017 at 8:45 PM, விசுகு said:

வணக்கம் விசுகர்!

எனது இனத்திற்குள் கட்டாய , வற்புறுத்தல் , நிர்ப்பந்திக்கப்பட்ட திருமணங்களை முதல் வரிசையில் நின்று எதிர்க்கின்றேன்.

ஆனால் தமிழன் என்ற அடையாளத்திற்குள் வரும் போது......எனது கலாச்சாரம்...எனது மண் என்ற உணர்வு வரும் போது குறுகிய வட்டத்திற்குள்ளேயே நிற்பேன். நிற்க வேண்டும்.

இதுதான் இன்றைய காலகட்டம்.

அங்கிருப்பவர்கள் சிங்களமயமாக்கலை எதிர்க்க வேண்டும். நாமோ எமது பிள்ளைகள் விருப்பப்படி நடக்க வேண்டும். இது என்ன நியாயம்?.

நீங்கள் உங்கள் நியாயப்படுத்தை முன்னிலைப்படுத்த முனைகின்றீர்களே தவிர நியாயத்தை கதைக்க முன்வரவில்லை.

காலம், நாடு ,உலக சூழ்நிலைகளை பற்றி சிந்தித்து கதைக்க வேண்டும் என யோசித்தால்.....

நாடு இனம் மக்கள் அழிவுகளை மறந்து மனிதம் என்ற கோட்டில் நின்றும்  கதைக்கலாம்.

நான் எனது பிள்ளைகளுக்கும் என்  நண்பர்களின் பிள்ளைகளுக்கும் சொல்லியது இதுதான்..
இளவயதில் திருமணம் செய்யுங்கள். தமிழரை துணையாக தேடுங்கள். இளவயதில் பிள்ளைகளை பெற்றெடுங்கள். சொந்த வீடு வாசல்களை வைத்திருங்கள்.வீட்டில் தமிழில் கதையுங்கள்..உங்கள் தெய்வ வழிபாட்டை தினம்தோறும் கடைப்பிடியுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

பேசாமல் எல்லாரும் ஊருக்கு போனால் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.நில அகபரிப்ரிப்பு  உட்பட

உளமார சொல்கிறேன்.
நாட்டுக்கு போவதில் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.நான் சுகமாக வாழ எனது தாய் தகப்பன் சேகரித்த வீடு மற்றும் காணி பூமியும் இருக்கின்றது.

நீங்கள் அடிக்கடி சொல்வது போல் புலம் பெயர்ந்தவர்கள் அனைவரும் நாட்டுக்கு சென்று விட்டால் எப்படி? எதனால் பிரச்சனைகள் தீரும்?
இன்றும்  40வீதமான எமது உறவுகள்(மாணவர்கள் உட்பட) புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வாதாரத்திலேயே காலத்தை கடத்துகின்றார்கள்.

உங்கடை கதையை பாத்தால்....வெளிநாட்டிலை இருக்கிறவன் கதைக்கவே கூடாது எண்டுற மாதிரியெல்லே போகுது.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

நான் எனது பிள்ளைகளுக்கும் என்  நண்பர்களின் பிள்ளைகளுக்கும் சொல்லியது இதுதான்..
இளவயதில் திருமணம் செய்யுங்கள். தமிழரை துணையாக தேடுங்கள். இளவயதில் பிள்ளைகளை பெற்றெடுங்கள். சொந்த வீடு வாசல்களை வைத்திருங்கள்.வீட்டில் தமிழில் கதையுங்கள்..உங்கள் தெய்வ வழிபாட்டை தினம்தோறும் கடைப்பிடியுங்கள்.

எனக்கு மிக பிடித்த  ஒன்று கு.சாமியண்ணை  அதேயே நீங்கள் சொல்லி இருக்குறீர்கள்   வாழ்க்கையை சொல்லி கொடுப்பதில் என்ன பிழை இனம் இனத்தை சேர வேண்டும்  அடுத்தவனும் மனிதன் தான் ஆசைகள் ,பாசங்கள் இருக்கலாம்  ஆனால் நாம் தமிழர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/22/2016 at 6:00 AM, தமிழ் சிறி said:

தானும்... தன்ரை படிப்பும்...என்ற சிந்தனைகளில் இருக்கும்  பிள்ளைகளுக்கு, 
நீயும்...  "லவ்"  பண்ணு என்று, இலங்கைத் தமிழ்  அப்பன்  சொல்ல முடியுமா?

சிறி அண்ண செக்ஸ்சையையே எப்ப வைத்துகொள்ள வேண்டும்,எந்த வயதில் வைத்துக்கொள்ள வேண்டும் செக்ஸ் என்றால் இதுதான்  என்று சொல்லி கொடுக்கும் வெளி நாட்டில் தன் துணையாக வரப்போகிறவளை சொல்லி கொடுப்பதில் என்ன பிழை  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 30.1.2017 at 8:56 PM, ரதி said:

திருமணம் என்பது இரு மனங்கள் சேர்ந்தது என்டாலும் சின்ன வயதில் இருந்து பிள்ளைகளுக்கு தங்கட மொழி,இனப் பற்றை சொல்லி வளர்க்கா விட்டால் வேற்றினத்தில் தான் திருமணம் செய்வார்கள். இது யார் குற்றம்?

எனக்குத்தெரிந்து பல இடங்களில் சோறு,சோத்துக்கூட்டம் என்ற நக்கல் நளினங்கள் போய்......

தமிழன் , தமிழச்சி என்று பகிடிவதை பண்ணத்தொடங்கியிருக்கிறர்கள். நல்ல சகுனமாகவே பார்க்கின்றேன்.

எனக்கு தெரிந்த தமிழ் சமுதாயம் தமிழராகவே வாழ்கின்றார்கள்.

பிள்ளைகளை முடிந்த அளவிற்கு தமிழ்மணம் வீச வைக்கின்றார்கள்.(கலியாண சாமத்திய வீடு அல்ல)

வீட்டில் உணவு மற்றும் பழக்கவழக்கங்களில் ஊர் நினைவலைகளை மீள வைக்கின்றார்கள்.

திருமண விடயத்தில் என்னவிட அகங்காரத்துடன் அந்த பிள்ளைகள் இருக்கின்றார்கள்.

புலம் பெயர்ந்த நாடுகளில் வேலை படிப்பு விடயத்தில் அவர்களுக்கு அதிகம் தெரியும்....

ஆனால்....

வருங்கால வாழ்க்கை விடயத்தில் எனக்கு இன்னும் அதிகம் தெரியும்...

சொல்ல வேண்டியது என் பொறுப்பு...

சொல்லி திருத்த வேண்டியது என் கடமை.

மீறியவர்களின் கதையும் எனக்குத்தெரியும்.:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.