Jump to content

மட்டன் கொழுப்புக் கறி


Recommended Posts

பதியப்பட்டது

p80n.jpg

மட்டன் கொழுப்புக் கறி

தேவையானவை:

 மட்டன் கொழுப்பு - 100 கிராம்
 சின்னவெங்காயம் - 5
 மிளகாய்த்தூள்  - ஒரு டீஸ்பூன்
 சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, மட்டன் கொழுப்பு, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், தேவையான உப்பு சேர்த்து வதக்கி, கால் கப் தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் அல்லது கொழுப்பு வேகும்வரை வேகவிட்டு இறக்கவும். கொழுப்பு மட்டுமே சேர்த்து செய்யும் இந்தக் கறி, சுவையாக, பூப்போல இருக்கும். இட்லியுடன் பரிமாறவும்.

குறிப்பு:

கொழுப்பில் இருந்து அதிகம் எண்ணெய் பிரியும் என்பதால், தாளிக்க குறைந்த அளவு எண்ணெய் சேர்த்தால் போதும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லா, ஐந்தாறு தரம் செய்தடிச்சுப் போட்டு, ஆசுப்பத்திரி போய் படுத்தியல் எண்டால் இதயத்தை சுத்தி, கொழாய் விட்டு கொழுப்படைப்பை எடுத்து விடுவினம்... :215_cow:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொழுப்பு ஒருபோதும் கொழுப்பாகவே இதயத்துள் போய் பாடியது நாதம்ஸ் ....! நல்ல கொழுப்பை தெரிந்தெடுத்து பக்குவமாக சமைத்து சாப்பிடலாம் ....!  tw_blush:

இங்கு கொழு கொழு வென கொழுப்புக் கறியாகவே வைத்திருக்கின்றார் , கொழுப்பு கூடிப் போச்சு....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கும் கொழுப்பு என்றால் பிடிக்கும் அதற்காகத் தனியாய் சமைப்பதில்லை. இறைச்சிக்குள் போட்டு நான் மட்டும் தனியாய் எடுத்துச் சாப்பிடுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கும் கொழுப்பு என்றால் பிடிக்கும் அதற்காகத் தனியாய் சமைப்பதில்லை. இறைச்சிக்குள் போட்டு நான் மட்டும் தனியாய் எடுத்துச் சாப்பிடுவேன்.

அக்காக்கு நல்லாப் பிடிக்கும் எண்டு உங்களைப் பார்த்தாலே தெரியுது. :223_speak_no_evil: :221_see_no_evil: :222_hear_no_evil:

இருந்தாலும் பார்த்தக்கோய்.... நம்மூர் வெயில் காய்ந்த வெள்ளாட்டக் கொழுப்புக்கும், இங்கத்தயான் செம்மறியாட்டுக் கொழுப்புக்கும் வித்தியாசம் இருக்குது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, suvy said:

கொழுப்பு ஒருபோதும் கொழுப்பாகவே இதயத்துள் போய் பாடியது நாதம்ஸ் ....! நல்ல கொழுப்பை தெரிந்தெடுத்து பக்குவமாக சமைத்து சாப்பிடலாம் ....!  tw_blush:

இங்கு கொழு கொழு வென கொழுப்புக் கறியாகவே வைத்திருக்கின்றார் , கொழுப்பு கூடிப் போச்சு....!  tw_blush:

ஒருமுறை ஆட்டிறைச்சி வாங்கும் போது, கொழுப்பை நீக்குமாறு சொன்னேன். நீக்கிய, பாக்கியர், அதை குப்பைத் தொட்டியில் போடாமல், பெட்டியினுள் போட்டார். பெட்டி கொழுப்பு நிறைந்து இருந்தது.

காரணம் கேட்டபோது, சிரித்தபடியே கேட்டார்... யூ கோயிங் ரெஸ்ரோரன்ட், ஓடரிங்.... நான் வித் மட்டன்... ? யா?

ஆம் என்றேன்.  'ரெஸ்ரோரன் கய்ஸ், கம் அண்ட் பை திஸ்'.

ஏன் என்றேன். உருக்கி, கறிக்கு மேல ஊத்தி தருவார்கள்... நைஸ் என்று அடித்து ரிப்ஸ் குடுத்து விட்டு வருவாய்.... 

இங்க, காசைத் தந்து போட்டு கொழுப்பை எறி என்கிறாய் என்று சிரித்தார்.

இப்போது, ரெஸ்ரோரன்டில் ... போனால்...நோ மட்டன் கறி.

பல ஆண்டுகளுக்கு முன் NHS எனும் அரச சுகாதார பிரிவு, சிவப்பிறைச்சியில் கொழுப்பை அகற்றுமாறு கோரி விடுத்த விளம்பரம்.

Minor surgery, saves you from major surgery!!

இறைச்சியில் கொழுப்பகற்றுவது : Minor Surgery!

இதயத்தில்..... 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் ரெஸ்ரோரன்ட் போனாலோ அல்லது சாப்பாட்டு ஓடர் பண்ணினாலோ மட்டனோ சம்பந்தப்பட்ட எதுவும் ஓடர் பண்ணுவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல கொழுப்பை அகற்றத்  தேவையில்லை நாதம்ஸ். பொதுவாய் எங்கள் வீடுகளில் இறைச்சிக்கறியோ மீனோ சமைக்கும்போது சைட் டிஷ்ஷாக ஒரு தக்காளி அவியக்  கறியோ, கத்தரி அவியக் கறியோ வைப்பினம். அதற்கு இந்த நல்ல கொழுப்பை பயன்படுத்தலாம் ருசியாக  இருக்கும் .....! tw_blush:

சகோதரி , நீங்கள் அதிகமான கடைகளில்  இறைசிக் குழம்பு சாப்பிடும்போது அந்தக் கோப்பையில் வர்ணஜாலம் காட்டி எண்ணையாய் மிதப்பது கொழுப்புதான். அதுதான் இறைச்சிக்கு ருசியையும் , மொச்சையான மனத்தையும் குடுக்கும். அவர்கள் ரசத்தில் போடும் எலும்பில்  கொழுப்பு குஷ்பூ மாதிரி முகம் காட்டிச் சிரிக்கிறதை கவனித்ததில்லையா....!:11_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் எமது உணவகங்களுக்கோ அல்லது இந்தியன் உணவகங்களுக்கோ சென்று சாப்பிடுவதில்லை. வீட்டில் தான் ஆட்டிறைச்சி அல்லது மற்றக் குழம்புகளோ சாப்பிடுவது.  சைனீஸ், தாய் உணவுகள் இன்னும் பிற வித்தியாசமான உணவுகளும் உண்பது. என் நண்பரின் உணவகம் ஒன்று உண்டு. அங்கே  எண்ணெய் அதிகம் இல்லாமல் சமைப்பார்கள்.

20 hours ago, Nathamuni said:

அக்காக்கு நல்லாப் பிடிக்கும் எண்டு உங்களைப் பார்த்தாலே தெரியுது. :223_speak_no_evil: :221_see_no_evil: :222_hear_no_evil:

இருந்தாலும் பார்த்தக்கோய்.... நம்மூர் வெயில் காய்ந்த வெள்ளாட்டக் கொழுப்புக்கும், இங்கத்தயான் செம்மறியாட்டுக் கொழுப்புக்கும் வித்தியாசம் இருக்குது. 

நாம் இருக்கப் போவதோ இன்னும் எத்தனை நாட்கள் என்று எமக்கே தெரியாதபோது விரும்பியதை உண்ணாமல் ஆவியாக அலைய முடியுமா நாதமுனி tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாம் இருக்கப் போவதோ இன்னும் எத்தனை நாட்கள் என்று எமக்கே தெரியாதபோது விரும்பியதை உண்ணாமல் ஆவியாக அலைய முடியுமா நாதமுனி tw_blush:

அதுவல்ல விசயம்.

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்.

போறது பிரச்சனை இல்லை.

இருக்கும் காலத்தில், நோயால், பாயில் விழாமல் இருப்பதற்கு நம்மால் முடிந்தளவு உணவில் ஆபத்தானவற்றை குறைப்போம்.

உங்க யாரும் எங்களை இழுத்துப் பறிக்கப் போவதில்லை கண்டியளே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தங்கச்சி!  சொன்னமாதிரி நானும் போறவாற இடங்களிலை மட்டன் பக்கம் தலை காட்டுறதில்லை...
ஆனால் வீட்டிலை சொல்லி வேலையில்லை...ரெட்வைனோடையும் மட்டனோடையும் ஒரே இழுபறியும் புடுங்குப்பாடும் தான்...:D:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/10/2016 at 1:38 AM, Nathamuni said:

அக்காக்கு நல்லாப் பிடிக்கும் எண்டு உங்களைப் பார்த்தாலே தெரியுது. :223_speak_no_evil: :221_see_no_evil: :222_hear_no_evil:

 

கொஞ்சம் குண்டாக இருந்தால் கொழுப்பு கூடுதல் என்பதா

 

அப்பாடா கோர்த்து விட்டாச்சு??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, முனிவர் ஜீ said:

கொஞ்சம் குண்டாக இருந்தால் கொழுப்பு கூடுதல் என்பதா

 

அப்பாடா கோர்த்து விட்டாச்சு??

நான் இந்த விளையாட்டுக்கு வரேல்ல...

அப்பாடி... அக்கா கோவிச்சா, துளஞ்சம்... :224_monkey:

Posted

இந்த கொழுப்பு :grin: கறி பதிவை இங்கு பதிந்ததுக்கு என்னால் ஆன உதவி..tw_blush:

 

இந்த திரி இவ்வளவு அல்லோல கல்லோல பட்டும் நிழலியை இங்கு வராமல் விட்டது ஆச்சரியமாக இருக்கு..:grin:

Posted
9 minutes ago, நவீனன் said:

இந்த திரி இவ்வளவு அல்லோல கல்லோல பட்டும் நிழலியை இங்கு வராமல் விட்டது ஆச்சரியமாக இருக்கு..:grin:

அவர் மீன் செதிலோட பிசி:grin:

Posted
16 minutes ago, ஜீவன் சிவா said:

அவர் மீன் செதிலோட பிசி:grin:

இல்லை அவரை வர பண்ணலாம் ஆட்டு மூளையில் ஒரு பதிவு போட்டால்..:grin:

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, Nathamuni said:

நான் இந்த விளையாட்டுக்கு வரேல்ல...

அப்பாடி... அக்கா கோவிச்சா, துளஞ்சம்... :224_monkey:

அக்காவுக்கு இப்பெல்லாம் கோவம் வாராது இல்லை நாத முனி  சும்மா பம்பலுக்கு எழுதியது:11_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.