Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்புத்துறை முகத்தில் தாக்குதல்

Featured Replies

கொழும்புத்துறை முகத்தில் தாக்குதல் முயற்சி ஒன்றைத் தாம் முறியடித்துள்ளதாக ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இணையத்தில் முழுமையான செய்தி இணைக்கப்படவில்லை. ஒரு வரியில் (ஓட விடப்பட்டுள்ள) செய்தியில் அதிகாலை ஐந்து மணியளவில் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் முயற்சியை கடற்படையினர் முறியத்துள்ளதாகவும், புலிகளின் படகு ஒன்று அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரம் தெரிந்தவர்கள், வேறு செய்திகள் மூலம் இதனை அறிந்தவர்கள் இங்கே வந்து விபரங்களைக் கொட்டுங்கள்

Navy fires at a suspicious boat move off Wattala ; One boat destroyed

SL navy this morning fired at three suspicious boats off Wattala, Western coast of the Island this morning. According to the naval sources one the boats was completely destroyed while the others have fled. A search operation is presently underway.

source

  • தொடங்கியவர்

Sri Lankan navy says it prevented possible Tamil rebel attack on Colombo's port

The Associated PressPublished: January 26, 2007

COLOMBO, Sri Lanka: The Sri Lankan navy prevented a possible Tamil Tiger rebel attack on Colombo's port early Saturday when a naval patrol detected three suspicious boats approaching the harbor, a Defense Ministry official said.

The boats did not stop when ordered to do so, forcing the navy to fire at them, said a duty official at the ministry's media unit. One of the boats was destroyed and the two others managed to flee, said the official, who cannot be identified by name under military regulations.

Edited by மின்னல்

  • தொடங்கியவர்

SLN fires at three boats near Colombo harbor

[TamilNet, Saturday, 27 January 2007, 02:24 GMT]

The Sri Lanka Navy Saturday early morning around 5.30 a.m. attacked three unidentified boats found close to the lighthouse of the Colombo harbor. Government security forces claimed that these boats suspected to be of LTTE had come to attack the Colombo harbor, private electronic media reported in its Saturday morning news broadcast quoting military sources.

According to these reports, one boat had sunk and other two had fled.

Security forces launched a search operation in the area following this incident, said media sources in Colombo.

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா தலைநகரில் உள்ள கொழும்பு துறைமுகத்தைத் தாக்குவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட முயற்சி ஒன்றைத் தாம் இன்று காலையில் முறியடித்துள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு வட்டாரங்கள் கொழும்பில் தெரிவித்துள்ளன.

அதிவேகப் படகுகள் மூலம் வந்து துறைமுகத்தைத் தாக்குவதற்கு விடுதலைப் புலிகள் முற்பட்டதாகவும், இவ்வாறு விடுதலைப் புலிகள் வந்த படகுகளில் ஒன்று கடற்படையினரது தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டதாகவும் படைத் தரப்பினர் தெரிவித்தனர்.

மூன்று படகுகளிலேயே விடுதலைப் புலிகள் வந்ததாகவும், அவற்றில் ஒன்று மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏனைய இரண்டு படகுகள் அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டதாகவும் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளைக் கடற்படையினர் முடுக்கிவிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்ற போதிலும் இது பற்றிய மேலதிகத் தகவல்கள் எதுவும் இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து கொழும்புத் துறைமுகத்திலும், அதனையடுத்துள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்ற

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Rebel boat sunk, says Sri Lanka

Sri Lanka's navy has destroyed a boat which the Tamil Tiger rebels were using to attempt an attack on Colombo harbour, the defence ministry says.

The boat was sunk after ignoring orders to stop. Two other boats managed to make their escape.

There was no word on casualties, but local residents reported hearing heavy gunfire near the port.

The Tamil Tigers want an independent homeland in the north and east for the country's minority Tamil community.

The boats were seen about 0530 (0000GMT) in a "high security zone" which is out of bounds to unauthorised vessels.

A guard at a lighthouse noticed the boats and alerted the navy.

As the boats approached Colombo harbour, they were told to stop, but failed to do so.

The air force later joined navy ships in a search for the two boats which fled.

After two decades of fighting, a truce was signed in 2002 between the Tamil Tigers and the government.

Although it is still officially in effect, fighting over the past year has left over 3,500 people dead.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6304741.stm

கொழும்பு கடற்பரப்பில் மோதல்.

ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பின் வத்தளையை அண்டிய கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் நடமாடிய படகுகள் மீது தமது கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

கடற்படையினரின் தாக்குதலில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மூன்று படகுகளில் ஒன்று அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய இரண்டும் தப்பியோடியுள்ளதாகவும் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு தேடுதல் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

கொழும்புத்துறை முகத்தை நோக்கி சந்தேகத்திற்கிடமான படகுகள் மூன்று நகர்வதைப் சுற்றுக்காவிலில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவதானித்ததைத் தொடர்ந்து அவற்றை நிறுத்துமாறு பணித்தபோதும் படகுகள் தொடர்ந்து பயணிக்க முற்பட்டதையடுத்து அவற்றின் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் இதன்போது ஒரு படகு அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய இரு படகுகளும் ஒருவாறு தப்பிச் சென்றுள்ளதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ஏ.பி.செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் இத்தாக்குதலினால் ஏற்பட்ட இழப்பு விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லையெனவும் எனினும் கடுமையான துப்பாக்கி வெடிப்புக்களை கொழும்புத் துறைமுகத்திற்கு அருகே செவிமடுத்ததாக உள்ளுர் வாசிககள் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

-Sankathi-

Navy destroys three suspicious boats - Off Colombo [2nd Lead]

SL Navy fast attack craft fired at three suspicious boats coming towards restricted waters off Colombo around 5:40 a.m., this morning (Saturday 27th of January).

SL Navy sources said, the fast attack craft initially destroyed one boat at a location 6 nautical miles Off Colombo and pursued the remaining boats further westward. Latest reports indicate that the remaining two boats have also been destroyed at a location 11 nautical miles form Colombo.

The detection has initially made by the land sentries manning the southern parameters of the Colombo harbour High Security Zone and informed the Naval Craft at sea.

No fishing vessels are allowed come in to restricted zone of the Colombo port that stretch approximately 10 nautical miles seaward from Colombo port. Further investigations are conducted by the Naval authorities.

http://www.defence.lk/new.asp?fname=20070127_02

  • தொடங்கியவர்

பாதுகாப்பு அமைச்சினதோ அல்லது பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையத்தினதோ இணையத் தளங்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திகளில் விடுதலைப் புலிகளின் படகுகள் எனக் குறிப்பிடப்படவில்லை. மாறாக சந்தேகத்திற்கிடமான படகுகள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள்தான் செய்தார்கள்.. நாங்கள் அதை முறியடித்தோம்.. நாங்கள் பலமாக உள்ளோம்... என்று புது புருடா விடுகிறார்களோ யாருக்குத் தெரியும்..?

உண்மையிலை ஒரு நாளைக்கு அடிக்ககுள்ள தெரியும்..!

இலங்கை நேரம் காலை 5.10 க்கு கொழும்பு துறைமுகத்தின் உள்நுழைவுக்கான அனுமதி கோரிய நிலையில் ஒரு கப்பல் இருந்ததாகவும் அதை இலக்கு வைத்தே இத்தாக்குதல் முயற்சி செய்யப்பட்டுள்ளதெனவும் அக்கப்பல் பாகிஸ்தானில் இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இத்தாக்குதல் முயற்சிக்கு வந்த மூன்று படகுகளில் ஒன்று கடற்படையின் தாக்குதலில் தீப்பற்றி வெடித்த பிரமாண்டமான சத்தம் கொழும்பு கடற்படை தலைமையயகம் வரை பலமாக கேட்டதாக சொல்லப்படுகிறது. தாக்குதல் இலக்காக கருதப்படும் அக்கப்பல் எதுவித பாதிப்புக்கும் இல்லாமல் துறைமுகத்தின் உள்ளே கொண்டுசெல்லப்பட்டதாக தெரிகிறது. இவை கொழும்பிலிருந்து பத்திரிகையொன்றில் வேலை செய்யும் ஒருவர் சொன்ன தகவல்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள்தான் செய்தார்கள்.. நாங்கள் அதை முறியடித்தோம்.. நாங்கள் பலமாக உள்ளோம்... என்று புது புருடா விடுகிறார்கள்.

உண்மையிலை ஒரு நாளைக்கு அடிக்ககுள்ள தெரியும்..!

உண்மையிலை ஒரு நாளைக்கு அடிக்ககுள்ள தெரியும்..!

  • கருத்துக்கள உறவுகள்

சனி 27-01-2007 16:31 மணி தமிழீழம் [செந்தமிழ்]

கொழும்பு துறைமுகத்தினுள் புலிகள் உள்நுழைந்தனர்?

இன்று காலை கொழும்பின் அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் அமைந்துள்ள கொழுமப்பு துறைமுகத்தினுள் கடற்புலிகளின் தாக்குதல் அணி ஒன்று உள் நுழைந்துள்ளதாக சிறீலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்

இன்று காலை 5.30 மணியளவில் கொழும்பு தறைமுகத்தின் வெளிச்ச வீடு வரை ஊடுருவிய இந்த படகுகள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கடற்படையினரின் தாக்குதலில் ஒரு படகு மூழகடிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.ஏனைய இரண்டு படகுகளும் அங்கிருந்து தப்பிச் சென்ற இரண்டு படகுகளையும் கடற்படை படகுகள் தாக்கி அழித்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்

இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் பலத்தை முற்றாக முறியடிக்கும் தாக்குதல்களை தொடரவுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் இடம்பெற்றுள்ள இந்த ஊடுருவல் நடவடிக்கையானது ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் தெளிவான செய்தியை தெரிவித்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி சேவை கருத்து வெளியிட்டுள்ளது

தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிக்க முடியும் என்ற அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு தவறானது என்றும் யுத்தத்தின் மூலம் வெற்றி கொள்ள முடியாத சக்தியாக விடுதலைப் புலிகள் விளங்குகின்றார்கள் என்பதை இந்த சம்பவம் தெளிவு படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

இலங்கையின் தென் பகுதியில் அதி உயர் பாதுகாப்பு வலயம் வரை கடற்புலிகளின் படகுகள் வெற்றிகரமாக ஊடுருவியுள்ளமை ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு கட்டமைப்புகள் குறித்து பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

இந்த படகுகள் தாக்குதல் நடத்தும் நோக்கில் கொழும்பு துறை முகத்தினுள் நுழையவில்லை என்றும் தம்மால் கொழும்பு வரை கடல் மார்க்கமாகவும் வந்து செல்முடியும் என்பதை வெளிப்படுத்துவதேந இந்த ஊடுருவலின் நோக்கம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

கடற் புலிகளின் தளமொன்றில் இருந்து இந்த படகுகள் சுமார் 125 மைல் தூரம் பயணம் செய்திருக்க வேண்டும் என்றும் அந்த படகுகள் கொழும்பு துறை முகத்தினுள் நுழையும் வரை ஸ்ரீலங்கா கடற்படைகளால் அந்த படகுகள் அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

விடுதலைப் புலிகளை யுத்தத்தின் மூலம் வெற்றி கொண்டு விடலாம் என்ற மகிந்த சிந்தனையை இந்த நடவடிக்கை கேள்விக்குறியாக்கியிருப்பத

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி உண்மையில் யாருடைய படகுகள் அவை? புலிகள் ஒன்றும் உரிமை கொண்டாடவில்லையே..

படகில் வந்த மூன்று பேரை கைது செய்திள்ளதாக வானொளிச் செய்தி ஒன்றில் சொன்னார்களே...படகு வெடித்து சிதறும் போது, அதிலிருந்து கடலுக்குள் குதித்தவர்களை தாம் கைது செய்ததாக சொன்னார்கள்.

அது சரி உண்மையில் யாருடைய படகுகள் அவை? புலிகள் ஒன்றும் உரிமை கொண்டாடவில்லையே..

முந்தைநாள் சிறீ லங்காவுக்கு இரகசிய விஜயம் மேற்கொண்ட பாகிஸ்தான் படை அதிகாரிகள் வந்த படகாய் இருக்குமோ? :lol:

முந்தைநாள் சிறீ லங்காவுக்கு இரகசிய விஜயம் மேற்கொண்ட பாகிஸ்தான் படை அதிகாரிகள் வந்த படகாய் இருக்குமோ? :D

:lol::D:D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று காலை கொழும்பின் அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் அமைந்துள்ள கொழுமப்பு துறைமுகத்தினுள் கடற்புலிகளின் தாக்குதல் அணி ஒன்று உள் நுழைந்துள்ளதாக சிறீலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்

இன்று காலை 5.30 மணியளவில் கொழும்பு தறைமுகத்தின் வெளிச்ச வீடு வரை ஊடுருவிய இந்த படகுகள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கடற்படையினரின் தாக்குதலில் ஒரு படகு மூழகடிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.ஏனைய இரண்டு படகுகளும் அங்கிருந்து தப்பிச் சென்ற இரண்டு படகுகளையும் கடற்படை படகுகள் தாக்கி அழித்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்

இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் பலத்தை முற்றாக முறியடிக்கும் தாக்குதல்களை தொடரவுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் இடம்பெற்றுள்ள இந்த ஊடுருவல் நடவடிக்கையானது ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் தெளிவான செய்தியை தெரிவித்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி சேவை கருத்து வெளியிட்டுள்ளது

தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிக்க முடியும் என்ற அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு தவறானது என்றும் யுத்தத்தின் மூலம் வெற்றி கொள்ள முடியாத சக்தியாக விடுதலைப் புலிகள் விளங்குகின்றார்கள் என்பதை இந்த சம்பவம் தெளிவு படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

இலங்கையின் தென் பகுதியில் அதி உயர் பாதுகாப்பு வலயம் வரை கடற்புலிகளின் படகுகள் வெற்றிகரமாக ஊடுருவியுள்ளமை ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு கட்டமைப்புகள் குறித்து பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

இந்த படகுகள் தாக்குதல் நடத்தும் நோக்கில் கொழும்பு துறை முகத்தினுள் நுழையவில்லை என்றும் தம்மால் கொழும்பு வரை கடல் மார்க்கமாகவும் வந்து செல்முடியும் என்பதை வெளிப்படுத்துவதேந இந்த ஊடுருவலின் நோக்கம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

கடற் புலிகளின் தளமொன்றில் இருந்து இந்த படகுகள் சுமார் 125 மைல் தூரம் பயணம் செய்திருக்க வேண்டும் என்றும் அந்த படகுகள் கொழும்பு துறை முகத்தினுள் நுழையும் வரை ஸ்ரீலங்கா கடற்படைகளால் அந்த படகுகள் அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

விடுதலைப் புலிகளை யுத்தத்தின் மூலம் வெற்றி கொண்டு விடலாம் என்ற மகிந்த சிந்தனையை இந்த நடவடிக்கை கேள்விக்குறியாக்கியிருப்பத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதிவு சும்மாவே செய்திகளை மிகைப்படுத்தி எழுதுவதில் கெட்டிக்காரர்கள்.. மிகைப்படுத்தலை தவிர்த்து யதார்த்தம் என்ன என்பதுதான் பலருக்குத் தேவையாகவுள்ளது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் இப்படி நிகழ்வு நடந்ததுதானா என்பதே இன்னும் தெளிவாகவில்லை.. இதற்குள் போய்.

அரசாங்கம் தொடர்ந்து தங்களுக்குதான் வெற்றியென்று சிங்களமக்களை ஏமாற்றுவதற்காக இப்படியொரு சம்பவத்தை சித்தரித்திருக்கலாம் அல்லவா?

கடற்புலிகள் மேல் பெரும் தாக்குதல் தொடுப்பதற்கு ஏதுவாக, ஸ்ரீலங்கா அரசு சோடிக்கும் ஒரு சாட்டு இது என்று தான் நினைக்கிறேன்.

இதோ கொழும்பு துறைமுகம் வரை கடற்புலிகள் வந்து விட்டார்கள். துறைமுகத்தின் ஊடான உங்கள் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் பாதிப்படைய போகிறது என்றும், ஆசியாவின் பிரதான கடல் மார்க்கங்களில் ஒன்றான கொழும்பு துறைமுகத்தின் ஊடான கடல் வழிப்பாதை ஆபத்தில் உள்ளது என்றும் இந்தியாவையும், சர்வதேச நாடுகளையும் அச்சுறுத்தி, கடல் புலிகளின் மீதான பெரும் தாக்குதலுக்கு, சர்வதேசத்தின் ஆதரவை தேடும் ஸ்ரீலங்காவின் சதி முயற்சி இதுவென்றே நினைப்பார்கள்.

(வேறு நாடுகளுக்கு செல்லும் கப்பல்கள் கூட தண்ணீர், எரிபொருள், மற்றும் பிற தேவைகளுக்காக கொழும்பு துறைமுகத்தில் தரிப்பதுண்டு

கடற்புலிகளின் பலத்தால் வடக்கில் நிலை கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் விநியோக பாதை பெரும் சிக்கலில் உள்ளது. இந்த விநியோக பாதை சீர் செய்யப்படாவிட்டால், வடக்கை தொடர்ந்து தக்க வைப்பதென்பது பகற்கனவு என்று இராணுவத்திற்கும் தெரியும். வடக்கை இழந்தால் அரசியலை விட்டு மட்டும் அல்ல, தான் அம்பாந்தோட்டையை விட்டே ஓட வேண்டி வரும் என்று மகிந்தருக்கும் தெரியும்.

இது போன்ற கடற்சமர்களின் போது கடற்புலிகளை உயிருடன் பிடிப்பது என்பது கனவே. மற்ற இரு படகுகளும் ஒரு வேட்டு கூட தீர்க்காமல் எங்கோ ஓடிவிட்டனவா? இப்படி காதில் பூ சுற்றுவதே இவர்கள் வழக்கமாகி விட்டது.

இந்த உளுத்துபோன பொய்களை சர்வதேசத்தில் இருக்கும் ஜனநயக காவலர்களும் உடனே நம்புவது போல் அழகாக பாசாங்கு செய்வார்கள். ஏனென்றால் அவர்களின் முதலீடுகளிலும், பொருளியல், இராணுவ நலன்களிலும் தான் அவர்களுக்கு அவர்களுக்கு அக்கறை. மனிதாபிமானம், ஜனநாயகம் என்று இவர்கள் ஊளை இடுவதெல்லாம், தங்கள் இராணுவ, பொருளாதர நலன்களுக்கு குந்தகம் வராத வரையில் தான்.

இனிப்பு இருக்கும் இடம் தேடி எறும்பு வருவதை போல் தான் இந்த நாடுகளின் ஆதரவும். தமிழீழத்தின் உதயம், இவர்களின் இராணுவ பொருளாதர நலன்களுக்கு ஏற்புடையது தான், என்ற எண்ணத்தை நாம் இவர்களுக்கு தோற்றுவித்து விட்டால், இவர்களின் ஆதரவு நம் வாசல் தேடி வரும்.

25 வருடங்களாக வியட்நாமுடன் யுத்தம் செய்த அமெரிக்கா இன்று அதே வியட்நாமுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்கிறது. பயங்கரவாதி என்று மேற்கத்திய நாடுகள் அழைத்த லிபியாவின் கடாபியுடன், இன்று இதே மேற்கத்திய நாடுகள் எண்ணெய் வர்த்தகம் செய்ய போட்டி போடுகிறது. வலை வீசித்தான் சுறாக்களை பிடிக்க வேண்டும். வெறும் தூண்டிலுக்கு அவை மாட்டாது!!!

சரியான திசையில் உங்கள் கண்ணோட்டம் அமைந்துள்ளது..! :lol:

B) B) மிகச் சரியாகச் சொன்னீர்கள் வெற்றிவேல். கோத்தபாய ராஜபக்ஸ மீதான ஓட்டோ தாக்குதல் போன்று, இதுவும் இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்பட்ட ஒரு நாடகமே.

விடுதலைப் புலிகள் மிகவும் பலமாக இருக்கிறார்கள் என்று அரசாங்கத்திற்கு மிக நன்றாகத் தெரியும். அத்தோடு, தலைவர் இந்த வருட மாவீரர் நாள் சிறப்புரையில் தமிழீழத் தனியரசை அமைக்கப்போவதாகக் கூறிவிட்டார். அதனால், அரசாங்கம் மிகவும் பீதியிலுள்ளது. புலிகள் தாக்குதல்களைத் தொடங்குவதற்கு முன்னர், தாங்களே தாக்குதல்களை நடத்தி, தாங்கள் பலமாக இருப்பதாகக் காட்டிக் கொள்ளவே இந்த நாடகங்கள். அதோடு, வாகரையைக் கைப்பற்றியதால் அவர்களுக்கு ஒரு மமதையும் வந்துவிட்டது. அந்த மமதையில்தான் இப்படியான சில செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு நடந்தபின்னும் தலைவர் அவர்கள் இதுவரை ஒன்றும் செய்யாமல் இருக்கிறார் என்றால், விரைவில் நன்றாகக் கொடுக்கப் போகிறார் என்றுதான் அர்த்தம். பொறுத்திருந்து பார்ப்போம்... B) B)

Conflicting details are emerging about the attack off the seas of Colombo harbour, Saturday morning. An informed source told TamilNet Saturday evening that four vessels were destroyed by the attackers, while the SLN authorities said they have destroyed 3 “suspicious boats”.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.