Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சல்மன் மீன் கறி

Featured Replies

சல்மன் மீன் கறி

தேவையான பொருட்கள்

சல்மன் மீன் - 500 கிராம்
வெங்காயம் - 30 கிராம்
கறி பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி
கறித்தூள் - 3 தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
தேசிக்காய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை

A0664_01.jpg

மீனை சிறிய துண்டுகளாக நறுக்கி கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

A0664_02.jpg

ஒரு பாத்திரத்தில் மீன் துண்டுகளை போட்டு அதனுடன் தேசிக்காய், இஞ்சி பூண்டு விழுது, 1 1/2 தேக்கரண்டி கறித்தூள், ஒரு தேக்கரண்டி உப்பு ஆகியவற்றை போட்டு பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

A0664_03.jpg

ஊறிய மீன் துண்டுகளை அவண் ட்ரேயில் க்ரில் கம்பியில் அடுக்கி மீடியம் ஹீட்டில் க்ரில் செய்யவும். இம்மீன் எளிதில் வெந்துவிடும், மெதுவாக கலர் மாறியதும் எடுத்துக் கொள்ளவும். வெள்ளைப் பால் போல, ட்ரேயில் வடிந்திருப்பதைக் காணலாம், நன்கு முறுகவிட்டும் எடுக்கலாம், நன்கு முறுகவிட்டால், நேரடியாக பொரியல் போல சாப்பிடலாம்.

A0664_04.jpg

க்ரில் வசதி இல்லாதவர்கள் அடுப்பில் தோசை கல்லை போட்டு சிறிது எண்ணெய் விட்டு மீன் துண்டுகளை போட்டு வாட்டி எடுத்துக் கொள்ளவும்.

A0664_05.jpg

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் 1 1/2 தேக்கரண்டி கறித்தூள், 2 மேசைக்கரண்டி கறிபேஸ்ட் சேர்த்து பிரட்டவும்.

A0664_06.jpg

அதில் 250 மி.லி தண்ணீரும் ஒரு தேக்கரண்டி உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.

A0664_07.jpg

நன்கு கொதித்ததும், மீன் துண்டுகளைப் போடவும். மீன் துண்டுகளைப் பிரட்டிப் பிரட்டி விட்டு, கறி பிரட்டலானதும் இறக்கவும்.

A0664_08.jpg

சுவையான சல்மன் மீன் கறி ரெடி. இதில் சத்தும் அதிகம். இலங்கை தமிழரான <b> திருமதி. அதிரா </b> அவர்கள் இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.

குறிப்பு: இதில் பயன்படுத்தி இருப்பது பழப்புளி மற்றும் மிளகாய் விழுது. கறி பேஸ்ட் வாங்கும் போது புளி இருப்பதையே வாங்கிக் கொள்ளவும். அதில்தான் சுவை அதிகம், மீன்கறி, கிழங்குக்கறிகளுக்கு பயன்படுத்தலாம். புளி இல்லாத பேஸ்ட்டாக இருப்பின், கறியை இறக்கியதும் 2 தேக்கரண்டி எலுமிச்சைச்சாறு சேர்க்கவும்.

http://www.arusuvai.com/tamil/node/13760

  • கருத்துக்கள உறவுகள்

சமண் என்ற உச்சரிப்பே சரியானது. L க்கு சத்தம் இல்லை ஆகையால் சல்மன் தவறானது.:107_hand_splayed:

http://dictionary.cambridge.org/pronunciation/english/salmon

எம்மில் பலர் தவறாகவே உச்சரிக்கின்றனர்...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

சமண் என்ற உச்சரிப்பே சரியானது. L க்கு சத்தம் இல்லை ஆகையால் சல்மன் தவறானது.:107_hand_splayed:

http://dictionary.cambridge.org/pronunciation/english/salmon

எம்மில் பலர் தவறாகவே உச்சரிக்கின்றனர்...

ஆங்கிலேயர் இந்த மீனை... சமண் என்றோ சல்மான் என்றோ அழையுங்கள்,  எமக்கு ஆட்சேபனை இல்லை. :grin:
ஜேர்மன்காரர் ஆகிய நாம்.... இதனை  "லக்ஸ்" (Lachs) மீன் என்றே அழைப்போம். :)

இந்த மீனில் சிறிய செதில்கள் இருந்தாலும், முள்ளு குறைவு என்பதுடன் பொரிக்கவோ, குழம்பு வைக்கவோ மிகவும் ருசியானது.
இதில்... ஆற்றில் வளரும் லக்ஸ், கடலில் வளரும் லக்ஸ் என்று இரு வகை உண்டு.
இது... பிறந்த இடத்தில் இருந்து கன மைல்கள் சென்று வளர்ந்தாலும், 
முட்டையிட்டு  குஞ்சு பொரிக்க.... (மனுசரைப் போல)  தான் பிறந்த இடத்துக்கே வரும். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

சிறியர், 

உந்த மீன் குளிரான ஸ்கொட்லாந்து மீன்பண்ணைகளில் தான் வளர்கப்படுகிறது.

அமெரிக்க அலாஸ்கா பகுதியில் காட்டுப்பகுதியில் ஓடும் நதிகள், ஆறுகளில் துள்ளிப் பாயும் Wild Salmon (காட்டுப் பன்றி போல) தான் மிகவும் ருசியானது.

ஆற்றில் துள்ளிக் குதிக்கும் இந்த மீன்களை, கரடிகள் வேட்டையாடுவதே தனி அழகு.

நீங்கள் சொல்வது வேறு வகை மீனோ தெரியவில்லை. ஏனெனில், விலை அதிகமான இம்மீன்களை எப்படியும் பிடித்து தின்றுவிடுவார்கள். 

பண்ணையில் இருந்து வந்தாலும், நிறையை கூட்ட அதை இதை போட்டு வளர்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வருவதால் அரசு கண்காணிக்கிறது. 

https://en.m.wikipedia.org/wiki/File:Salmon_leaping_at_Willamette_Falls.jpg

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நான் டிஸ்கவரி சனலில் பார்த்து இருக்கிறேன் கரடிகள் விரும்பி பிடித்து உண்ணும் உணவு இந்த சால்மன் 

ஆனால் இன்னும் ருசிக்கலtw_confused:

இதில் கறி வைப்பதை இப்பதான் கேள்விப்படுகின்றேன். பொதுவாக இதனை கறியாக வைப்பதில்லை. அப்படி வைத்தாலும் இம் மீனில் விசேடமாக உள்ள  சத்துகள்  (முக்கியமாக ஒமேகா 3) அழிந்து விடும்

சமன் மீன் துண்டுகளின் மீது தேசிக்காய் சாறும் (Lemon) உப்பும் கொஞ்சம் மிளகுத் தூளும் சேர்த்து பிரட்டி ஒரு மணித்தியாலம் ஊறவைத்து விட்டு அவனில் (oven) வைத்து வேக வைத்து சாப்பிட நல்ல சுவையாக இருக்கும். BBQ   எனில் பிரட்டிய மீன் துண்டுகளை  அலுமினியத் தாளில் சுருட்டி வைத்து வேக வைத்தும் சாப்பிடலாம்.

இதை எல்லாவற்றையும் விட தரமான மீனாக வாங்கி பச்சையாக சாப்பிட இன்னும் சுவையாக இருக்கும். ஜப்பானியர்கள் சுசி (Sushi)யில் பச்சையாக வைத்து இருப்பார்கள்.

சின்னப் பிள்ளைகளிற்கு கொடுக்க வேண்டிய முக்கிய  மீன்கள் சமனும் உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

சிறியர், 

உந்த மீன் குளிரான ஸ்கொட்லாந்து மீன்பண்ணைகளில் தான் வளர்கப்படுகிறது.

அமெரிக்க அலாஸ்கா பகுதியில் காட்டுப்பகுதியில் ஓடும் நதிகள், ஆறுகளில் துள்ளிப் பாயும் Wild Salmon (காட்டுப் பன்றி போல) தான் மிகவும் ருசியானது.

ஆற்றில் துள்ளிக் குதிக்கும் இந்த மீன்களை, கரடிகள் வேட்டையாடுவதே தனி அழகு.

நீங்கள் சொல்வது வேறு வகை மீனோ தெரியவில்லை. ஏனெனில், விலை அதிகமான இம்மீன்களை எப்படியும் பிடித்து தின்றுவிடுவார்கள். 

பண்ணையில் இருந்து வந்தாலும், நிறையை கூட்ட அதை இதை போட்டு வளர்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வருவதால் அரசு கண்காணிக்கிறது. 

https://en.m.wikipedia.org/wiki/File:Salmon_leaping_at_Willamette_Falls.jpg

Five Types Of Pacific Salmon You Need To Know

King (Chinook): These are the granddaddies of salmon and one of the most prized catches. The largest of the Pacific wild salmon, kings are valued for their rich flavor and firm texture as well as their massive size (they usually do not weight less than 30 pounds; the record weight is 97 pounds). Kings from the Yukon are particularly prized because they are rumored to be fattier, thanks to cold temperatures and a long migration. Kings are excellent smoked, but also taste great grilled, baked, poached or any other way you can think to cook them up.

Red (Sockeye): Another highly valued Pacific salmon, reds are not as large as kings but have a rich, deep color and a high oil content. Flavorful and beautiful, red salmon present well on the plate and their density makes them a favorite for sushi. This fish also pairs well with other strong flavors.

Silver (Coho): Silver salmon are another favored wild salmon. Aggressive and fast, these smaller fish (averaging 10 pounds) congregate at the mouths of rivers to wait for appropriate weather or high tide. They are popular with sport fishermen, and their meat is also prized. Silver salmon’s flesh is more orange than red, and it has a mild flavor, with the firm flesh that is typical of the top three types of Alaska wild salmon. It is a favorite for grilling and canning.

Pink (Humpy): Pale in color and light in texture, the pink salmon has a low fat content compared to kings, reds and silvers. It is the smallest of the five Pacific salmon, averaging 3 to 5 pounds, and the most abundant, so it is easily caught and processed. Pinks are usually canned and sold in Europe and the South, and big blocks of the meat are also shipped to China. (Alaskans are notoriously snobby about their salmon and tend to stick to the three more popular varieties.) Pinks are an excellent source of protein.

Chum (Dog): The least desirable of the five Pacific salmon, chum have the lowest market value and are often sold to foreign markets. Though they are not as firm and rich as king, red or silver salmon, chum are nonetheless an excellent source of protein and have enough oil to be versatile in cooking.

In fact, many believe that chum have a bad rap. At the least, chum are clearly better than farmed salmon. If caught in the ocean and processed well, chum can make a tasty, lightly-flavored dish. Chum’s roe (eggs) are also the most valuable of all the Pacific salmon, and they are often caught for the roe alone. These fish are also marketed as “silverbright.”

ச(ல்)மோனில் 10-15 வகை உண்டு மேலே இருக்கும் 5 வகையும் 
பசிபிக் சமுத்திரத்தை ஒட்டி வாழ்வவை.

சிரியண்ணர் குறிப்பிடுவது நோர்வே சுவீடன் கடல்களில் வாழ்வவை 
ஐஸ்லாந்தில் இவை மிகவும் கூடுதலாக இருக்கிறது 

நோர்வேதான் பிரபல ஐரோப்பிய ஏற்றுமதியாளர்கள்.

சென்ற கோடை விடுமுறைக்கு ஜேர்மனி போயிருந்தேன் 
அங்கே ஜெர்மன் காரர் ஒருவர் ஒரு (குரோட்டோ) ரெஸ்டூரண்ட் 
வெளியில் வைத்து க்ரில் போட்டு வித்தார் ....

அது ப்ளூ ரன்னர் (சமன் இல்லை) நீல கோடு இருக்கும் 
ஜெர்மனியில் எப்படி அது இருக்கும் என்ற கேள்வி எனக்கு இப்பவும் உண்டு.
சுவையோ சுவை அப்படி ஒரு சுவை.
அது சாப்பிட என்றே டிக்கெட் போட்டு போகலாம்.   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இதில் கறி வைப்பதை இப்பதான் கேள்விப்படுகின்றேன். பொதுவாக இதனை கறியாக வைப்பதில்லை. அப்படி வைத்தாலும் இம் மீனில் விசேடமாக உள்ள  சத்துகள்  (முக்கியமாக ஒமேகா 3) அழிந்து விடும்

சமன் மீன் துண்டுகளின் மீது தேசிக்காய் சாறும் (Lemon) உப்பும் கொஞ்சம் மிளகுத் தூளும் சேர்த்து பிரட்டி ஒரு மணித்தியாலம் ஊறவைத்து விட்டு அவனில் (oven) வைத்து வேக வைத்து சாப்பிட நல்ல சுவையாக இருக்கும். BBQ   எனில் பிரட்டிய மீன் துண்டுகளை  அலுமினியத் தாளில் சுருட்டி வைத்து வேக வைத்தும் சாப்பிடலாம்.

இதை எல்லாவற்றையும் விட தரமான மீனாக வாங்கி பச்சையாக சாப்பிட இன்னும் சுவையாக இருக்கும். ஜப்பானியர்கள் சுசி (Sushi)யில் பச்சையாக வைத்து இருப்பார்கள்.

சின்னப் பிள்ளைகளிற்கு கொடுக்க வேண்டிய முக்கிய  மீன்கள் சமனும் உள்ளது

நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே....! பச்சை மீனை காரட் தோல் சீவுவதுபோல் மெல்லிசாய் சீவி சுருட்டி லெமன்துளி விட்டு வைத்துக் கொண்டு தக்காளி உறைப்பு சாஸ், மிளகாய் சாஸ் , சிறிது முத்தார்ட் போன்றவற்றில் தொட்டு சலாட்டும் சேர்த்து சாப்பிட சுவையாய் இருக்கும்....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

33 minutes ago, suvy said:

நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே....! பச்சை மீனை காரட் தோல் சீவுவதுபோல் மெல்லிசாய் சீவி சுருட்டி லெமன்துளி விட்டு வைத்துக் கொண்டு தக்காளி உறைப்பு சாஸ், மிளகாய் சாஸ் , சிறிது முத்தார்ட் போன்றவற்றில் தொட்டு சலாட்டும் சேர்த்து சாப்பிட சுவையாய் இருக்கும்....! tw_blush:

சமனை இவர் (அதிரா) சொல்வது போல் அவனில் கறித்தூளுடன், கறிப்பேஸ்றுக்கு (அய்ய, இத மனிசன் சேர்ப்பானா?) பதிலாக பஸ்டாவுக்கு போடுற இத்தாலிய சோஸ்சளை (சன்டிறைட் ரொமாற்ரோ..... ரெட் பிஸ்ரோ, கார்லிக் போன்ற) போட்டு, பேக் பண்ணிய வரை சரி.

அதன் பின் கறியாக்காமல்.... பிரோக்ளி, காலிபிளவர் மற்ற பிடித்த மரக்கறியளை தாட்சில போட்டு பட்டர் அல்லது மாஜரின் போட்டு வாட்டி, அவிந்தவுடன்.... உப்பு, டபிள் கிறீம் விட்டு... மீனைப் போட்டு பிரட்டி ... எப்பன் தேசிக்காய்ப் புளியை விட்டிறக்க..

ஆ..ஆ...

பிள்ளையள் விரும்பிச் சாப்பிடுவினம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பிரென்சுக்காரர்கள்  வெள்ளிக்கு கிழமைகளில் விசேஷமாய் மீன்தான் சாப்பிடுவார்கள் ....,இந்த சமன் மீனை மேலே நான் கூறியவாறு பலவிதமாய் அலங்கரித்து வைப்பினம் , கூடவே கருப்பு பச்சை ஒலிவ் காய்களும் இருக்கும்...!

எமது முறைப்படி ஆக்கினால் பச்சை தண்ணிபோல ருசி இருக்காது....! tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஜேர்மனியில் ஒரு சமையல்காரன்.
கிழமைக்கு கிட்டத்தட்ட 40 தொடக்கம் 50 கிலோ வரைக்கும் வாங்கி வெட்டி கொத்தி அழகாக கோப்பைகளில் பரிமாறி நல்ல பெயர் வாங்குபவன்..

நிழலியின் அறியான்மையையிட்டு கவலைப்படுகின்றேன்.tw_tounge:

மருதங்கேணிக்கு ஒரு பச்சைப்புள்ளி...tw_thumbsup:

நாதமுனி மன்னிக்கவும்....tw_glasses:

சுவியர்! நீங்களுமா? tw_hushed:

கிழமைக்கு இரு தடைவையாவது என் வீட்டில் இந்த மீன்கறி இருக்கும்.சுவைகள் தானாக இல்லாவிட்டாலும் சுவையூட்டுவது மிகச்சிறந்த சமையல்கலை.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Nathamuni said:

சிறியர், 

உந்த மீன் குளிரான ஸ்கொட்லாந்து மீன்பண்ணைகளில் தான் வளர்கப்படுகிறது.

அமெரிக்க அலாஸ்கா பகுதியில் காட்டுப்பகுதியில் ஓடும் நதிகள், ஆறுகளில் துள்ளிப் பாயும் Wild Salmon (காட்டுப் பன்றி போல) தான் மிகவும் ருசியானது.

ஆற்றில் துள்ளிக் குதிக்கும் இந்த மீன்களை, கரடிகள் வேட்டையாடுவதே தனி அழகு.

நீங்கள் சொல்வது வேறு வகை மீனோ தெரியவில்லை. ஏனெனில், விலை அதிகமான இம்மீன்களை எப்படியும் பிடித்து தின்றுவிடுவார்கள். 

பண்ணையில் இருந்து வந்தாலும், நிறையை கூட்ட அதை இதை போட்டு வளர்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வருவதால் அரசு கண்காணிக்கிறது. 

550px-Salmo_salar_%28crop%29.jpg   220px-Loch_Duart_Salmon%2C_Market_Hall%2C_Rockridge.jpg

நாதமுனி.. நான் குறிப்பிட்டது,  கடலில்  வளரும் ....  Wild Salmon (Wild lachs). கூகிளில் தேடும் போதும்... இந்தப் படம் தான் வந்தது. ஸ்கொட்லாந்து மீன்  பண்ணைகளில் வளர்க்கப் படும் நீங்கள் குறிப்பிடும் மீனைப் பற்றி கேள்விப் படவில்லை, படம் கிடைத்தால்... இணைத்து விடவும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maruthankerny said:
 
ச(ல்)மோனில் 10-15 வகை உண்டு மேலே இருக்கும் 5 வகையும் 
பசிபிக் சமுத்திரத்தை ஒட்டி வாழ்வவை.

சிரியண்ணர் குறிப்பிடுவது நோர்வே சுவீடன் கடல்களில் வாழ்வவை 
ஐஸ்லாந்தில் இவை மிகவும் கூடுதலாக இருக்கிறது 

நோர்வேதான் பிரபல ஐரோப்பிய ஏற்றுமதியாளர்கள்.

சென்ற கோடை விடுமுறைக்கு ஜேர்மனி போயிருந்தேன் 
அங்கே ஜெர்மன் காரர் ஒருவர் ஒரு (குரோட்டோ) ரெஸ்டூரண்ட் 
வெளியில் வைத்து க்ரில் போட்டு வித்தார் ....

அது ப்ளூ ரன்னர் (சமன் இல்லை) நீல கோடு இருக்கும் 
ஜெர்மனியில் எப்படி அது இருக்கும் என்ற கேள்வி எனக்கு இப்பவும் உண்டு.
சுவையோ சுவை அப்படி ஒரு சுவை.
அது சாப்பிட என்றே டிக்கெட் போட்டு போகலாம்.   

மருதங்கேணி,  நாம் இங்கு வாங்கும் பெரும்பாலான  மீன்கள்.... நோர்வே, சுவீடன், அலாஸ்காவில் இருந்து இறக்குமதி செய்யப் படுபவை.
அதிலும்... Salmon  மீன்கள் அநேகமானவை அலாஸ்காவை சேர்ந்தவையே...

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

இதில் கறி வைப்பதை இப்பதான் கேள்விப்படுகின்றேன். பொதுவாக இதனை கறியாக வைப்பதில்லை. அப்படி வைத்தாலும் இம் மீனில் விசேடமாக உள்ள  சத்துகள்  (முக்கியமாக ஒமேகா 3) அழிந்து விடும்

நிழலி... ஒரு முறை,  Wild salmon ஐ பொரியலாகவோ, கறியாகவோ சமைத்து ப் பாருங்கள். பின்பு அந்தக் சுவைக்கு அடிமையாகிப் போவீர்கள். :grin:

4 hours ago, குமாரசாமி said:

கிழமைக்கு இரு தடைவையாவது என் வீட்டில் இந்த மீன்கறி இருக்கும்.சுவைகள் தானாக இல்லாவிட்டாலும் சுவையூட்டுவது மிகச்சிறந்த சமையல்கலை.:cool:

குமாரசாமி  அண்ணையின், கட்சி தான் நானும்....
மீனில் இருக்கிற சத்து போய் விடும் என்பதற்காக... அதனை பச்சையாக சாப்பிட மாட்டேன்.
முதலில்... நாக்குக்கு வஞ்சகம் செய்யாமல்,  ருசியாக சாப்பிடுபவனே... சிறந்த சாப்பாட்டு ராமன்.  essen3.gif  tw_blush:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

நான் ஜேர்மனியில் ஒரு சமையல்காரன்.
கிழமைக்கு கிட்டத்தட்ட 40 தொடக்கம் 50 கிலோ வரைக்கும் வாங்கி வெட்டி கொத்தி அழகாக கோப்பைகளில் பரிமாறி நல்ல பெயர் வாங்குபவன்..

நிழலியின் அறியான்மையையிட்டு கவலைப்படுகின்றேன்.tw_tounge:

மருதங்கேணிக்கு ஒரு பச்சைப்புள்ளி...tw_thumbsup:

நாதமுனி மன்னிக்கவும்....tw_glasses:

சுவியர்! நீங்களுமா? tw_hushed:

கிழமைக்கு இரு தடைவையாவது என் வீட்டில் இந்த மீன்கறி இருக்கும்.சுவைகள் தானாக இல்லாவிட்டாலும் சுவையூட்டுவது மிகச்சிறந்த சமையல்கலை.:cool:

உங்களின் கருத்தில் இருந்து நான் மாறுபடவில்லை கு.சா....! இந்த மீன் பச்சை யாக சாப்பிடும் அளவு மென்மையானது என்றுதான் சொல்ல வந்தேன்.சிப்பி போன்றவைகளை அப்படியே பிரித்து விட்டும் சாப்பிடுவார்கள் , அதேநேரத்தில் அதை வைன் போன்றவை சேர்த்து நன்றாக ஆக்கியும் சாப்பிடுவார்கள்....! 

நீங்கள் அடிக்கடி செய்து சாப்பிடும் ஒரு ஆயிட்டத்தை நான் எப்படி வீம்புக்கு  மறுக்க முடியும்....!கந்தசஷடி முடியட்டும் ஒருக்கால் வாங்கி மனிசிக்கு சமைத்து கொடுக்கத்தான் இருக்கு. உண்மையில் வீட்டு சமையலுக்கு நான் உதை  வாங்கினதில்லை. நீங்கள் சொன்னதால் உதை வாங்கிறேன் ....! tw_blush:

13 hours ago, குமாரசாமி said:

நிழலியின் அறியான்மையையிட்டு கவலைப்படுகின்றேன்.tw_tounge:

அண்ணர்,

நீங்கள் சொன்னதை கடுமையாகயும் சீரியசாகவும் எடுக்கின்றான் இந்த நிழலி

நிழலி ஒரு முட்டாள், அனுபவம் இல்லாதவன், நாலு விசயம் தெரியாதவன் என்று சொல்லிப்பாருங்க்கள்.... கோபம் வராது. ஆனால் சாப்பாட்டு விடயத்தில் அறியாமையுள்ளவன்... அதுவும் ஒரு வேலனையில் பிறந்து வளர்ந்த அப்பாக்கு மகனாக பிறந்தவனுக்கு மீனின் சுவை தெரியாது என்றால் கெட்ட கோபம் வரும்...ஆங்

ஒருக்கால் பச்சை சமன் மீனில் லைட்டா  தேசிக்காய் சாறு புழிந்து சாப்பிட்டுப் பாருங்கோ.. அப்ப தெரியும் நிழலி எம்மாம் பெரிய சாப்பாட்டுக்காரன் என்று. அல்லது அவனில் வைத்து Bake பண்ணிப் பாருங்கோ..

8 hours ago, தமிழ் சிறி said:

நிழலி... ஒரு முறை,  Wild salmon ஐ பொரியலாகவோ, கறியாகவோ சமைத்து ப் பாருங்கள். பின்பு அந்தக் சுவைக்கு அடிமையாகிப் போவீர்கள். :grin:

இங்கு அட்லாண்டிக் சமுத்திரத்தில் பிடிக்கும் மீன்களுக்குதான் சுவை கூட என்று வாங்குவது.  பற்றி இன்னும் அனுபவம் இல்லை.... எங்காவது கண்டால் வாங்கி செய்து பார்க்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

உங்களின் கருத்தில் இருந்து நான் மாறுபடவில்லை கு.சா....! இந்த மீன் பச்சை யாக சாப்பிடும் அளவு மென்மையானது என்றுதான் சொல்ல வந்தேன்.சிப்பி போன்றவைகளை அப்படியே பிரித்து விட்டும் சாப்பிடுவார்கள் , அதேநேரத்தில் அதை வைன் போன்றவை சேர்த்து நன்றாக ஆக்கியும் சாப்பிடுவார்கள்....! 

நீங்கள் அடிக்கடி செய்து சாப்பிடும் ஒரு ஆயிட்டத்தை நான் எப்படி வீம்புக்கு  மறுக்க முடியும்....!கந்தசஷடி முடியட்டும் ஒருக்கால் வாங்கி மனிசிக்கு சமைத்து கொடுக்கத்தான் இருக்கு. உண்மையில் வீட்டு சமையலுக்கு நான் உதை  வாங்கினதில்லை. நீங்கள் சொன்னதால் உதை வாங்கிறேன் ....! tw_blush:

உண்மை தான்

நந்தார் காலங்களில் இது விசேசமாக இருக்கும்...

8 minutes ago, நிழலி said:

அண்ணர்,

நீங்கள் சொன்னதை கடுமையாகயும் சீரியசாகவும் எடுக்கின்றான் இந்த நிழலி

நிழலி ஒரு முட்டாள், அனுபவம் இல்லாதவன், நாலு விசயம் தெரியாதவன் என்று சொல்லிப்பாருங்க்கள்.... கோபம் வராது. ஆனால் சாப்பாட்டு விடயத்தில் அறியாமையுள்ளவன்... அதுவும் ஒரு வேலனையில் பிறந்து வளர்ந்த அப்பாக்கு மகனாக பிறந்தவனுக்கு மீனின் சுவை தெரியாது என்றால் கெட்ட கோபம் வரும்...ஆங்

தம்பி கோபத்தில எனக்கு கிட்ட வந்திட்டார்

அது தானே யாரிட்ட மீனைப்பற்றி கதை  விடுகினம்...

சுவை பற்றி  எங்களிடம் சந்தேகமே கேட்கப்படாது...:grin:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சல்மன் மீனை அணமையில் நோர்வேக்குப் போன போது சமைத்து தந்திருந்தார்கள்...ஆஹா என்னவொரு ருசி...லண்டன் வந்ததிலிருந்து மீனை விரும்பி சாப்பிடாத நான் அந்த மீனை ரசிது,ருசித்து சாப்பிட்டேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.