Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரபு நாடுகள் இலங்கையில் காணிகளை கொள்வனவு செய்வது ஏன்? காரணம் கூறுகிறார் கலகொட : பின்னணியில் பைசர் உள்ளதாகவும் தகவல்

Featured Replies

அரபு நாடுகள் இலங்கையில் காணிகளை கொள்வனவு செய்வது ஏன்? காரணம் கூறுகிறார் கலகொட : பின்னணியில் பைசர் உள்ளதாகவும் தகவல்

 

 

galagoda-aththe-gnanasara-thero-F002554.(ஏ.ஆர்.ஏ.பரீல்)

ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் மற்றும் அபுதாபி போன்ற நாடுகள் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையில் காணிகளை கொள்வனவு செய்து, ஹோட்டல்கள் நிறுவி முஸ்லிம் குடியேற்றங்களையும் பள்ளிவாசல்களையும் நிறுவுவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் பின்னணியிலிருந்து செயற்படும் அமைச்சர் பைசர் முஸ்தபாவைக் கைது செய்து இது தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டும், அவரது அமைச்சுப் பதவியை பிரதமர் ரத்துச் செய்ய வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு கோரியுள்ளது.

அம்பகமுவ பிரதேச சபை பிரிவில் நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரே கிராம சேவையாளர் பிரிவு பிக்பீல்ட் தோட்டத்தில் ஹோட்டல் ஒன்று நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விமான ஓடுதளமும் களஞ்சியசாலையும் நிறுவப்பட்டுள்ளது. அபுதாபி நிறுவனம் ஒன்று நிர்மாணிக்கவுள்ள ஹோட்டலை உடன்நிறுத்தும்படியும் கோரிக்கை விடுத்துள்ளது.

 கொழும்பு கிருலப்பனை பௌத்த மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற பொதுபலசேனா அமைப்பின் ஊடக மாநாட்டில் பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வேண்டுகோளை முன்வைத்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 'எமது நாட்டின் நகர்ப்புறக் காணிகளும் தப்லீக் எனும் முஸ்லிம்களின் அமைப்பினால் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டு வருகின்றன. 

இது ஆபத்தான விடயமாகும். தினமும் நகர்புறங்களில் 10 ஏக்கர் காணிவீதம் ஆக்கிரமிப்புச் செய்வதற்கு திட்டமிட்டு செயற்படுத்தப்படுகிறது. 

இது தப்லீக் அமைப்பின் காணி கொள்ளையடிப்பாகும். 

புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் ஆயுதமேந்தி நிலத்தை அபகரிக்க முயற்சித்தார். ஆனால் அதே வேலையை தப்லீக் அமைப்பு நகர்ப்புற காணிகளின் பெறுமதியை விட 10 மடங்கு பணம் செலுத்தி அபகரிப்புச் செய்கிறது. 

வஹாபிசத்தைப் பரப்பும் ஒரு சிறு குழுவினரே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

http://www.virakesari.lk/article/13021

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடி சக்கை..

  • கருத்துக்கள உறவுகள்

ஓஓ ..........

  • கருத்துக்கள உறவுகள்

அட கோதாரி....

  • கருத்துக்கள உறவுகள்

கிழிஞ்சுது...... போ..... 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிப்போடு அரிவாளை ஆகா! மொட்டைகளும் இனித் தொப்பிபோட்டுத் துண்டெடுக்கும் காலம் கனிந்து வருகிறது!! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கெங்கும், குறிப்பாக மட்டக்கிளப்பில்.... விவசாயிகளுக்கு இலவசமாக தண்ணியை வார்த்து, குடிகாரராக்கி பின்னர் அவர்களது காணிகளை குறைந்த விலைக்கு எழுதி வாங்குகிறார்களாம்.

மார்கத்துக்கு எதிராக அறா வட்டிக்கு கொடுத்து, கட்டமுடியாத நிலையில் காணிகளை குறைந்த விலைக்கு எழுதி வாங்குகிறார்களாம்.

இவ்வளவு நாளும் தமிழருக்கு... இப்ப சிங்களவருக்கு கடி தொடங்கியிருக்குது....

tw_confused:

 

  • கருத்துக்கள உறவுகள்

 அட கொக்கா மக்கா .... நா அப்டியே ஷாக்காயிட்டேன்    :unsure:

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

கலகொட கண்ணுக்குள் எண்ணை விட்ட படி தான் இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nunavilan said:

கலகொட கண்ணுக்குள் எண்ணை விட்ட படி தான் இருக்கிறார்.

கலகோடயுடன் புலம் பெயர் அமைப்புக்கள் கலந்துரையாட வேண்டும்,...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.