Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனவாத வார்த்தைகளால் பிரதேச செயலக குழுவினரை திட்டிய விகாராதிபதி

Featured Replies

இனவாத வார்த்தைகளால் பிரதேச செயலக குழுவினரை திட்டிய விகாராதிபதி
 
 
இனவாத வார்த்தைகளால் பிரதேச செயலக குழுவினரை திட்டிய விகாராதிபதி
சட்டவிரோத காணி அபகரிப்பைத் தடுக்கச்சென்ற மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலக குழுவினரை கடுமையான இனவாத வார்த்தைகளால் திட்டியதோடு தமிழர்கள் அனைவரையும் புலிகள் என  மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் கூறியமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலையை உருவாக்கியுள்ளது.
 
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
 
அரச காணிகளை தங்களுக்கு வழங்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரர், அங்கு சென்ற  பட்டிப்பளை பிரதேச செயலாளரையும் அரச உத்தியோகத்தர்களையும் கடுமையாக திட்டியுள்ளார்.
 
அரச காணி அத்து மீறலை தடுக்க நீ யார்? உன்னுடைய அப்பன் வீட்டுக்காணியா? அம்மா வீட்டுக்காணியா? ஏன் சிங்கள மக்களுக்கு வழக்கு வைத்தாய்? நீயார் இவற்றைச்செய்ய? புலியா? தமிழர்கள் எல்லோரும் புலிகள்தான் என  கடுமையான இனவாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்த சம்பவமொன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு எல்லைக் கிராமத்தில் நடைபெற்றுள்ளது.
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமாக அமைந்துள்ள மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவின் கச்சக்கொடி கிராம உத்தியோகத்தர் பிரிவில் கால்நடைகளை மேய்க்கும் பொருட்டு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் காலா காலமாக மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, வெல்லாவெளி போன்ற பிரதேசங்களை சேர்ந்த பல கால்நடையாளர்கள் தமது கால்நடைகளை மேய்த்து வருகின்றனர்.
 
 
இந் நிலையில் அந்த இடங்களை தமது பயிர்ச்செய்கைக்கு மீட்டுத்தருமாறு கோரி மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமரத்ன தேரர் தலைமையிலான 4 பிக்குமார் இணைந்து  மக்களை ஒன்றித்து அம்பாறை கண்டி பிரதான வீதியினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதனை அறிந்த பிரதேச செயலாளர் திருமதி தி.தெட்சணகௌரியின் தலைமையிலான உத்தியோகத்தர் குழுவினர் குறித்த இடத்திற்கு சென்றனர்.
 
இதன் போது அரச காணிகளை அத்து மீறிப்பிடித்து பயிர்ச்செய்கையில் ஈடுபட விடுமாறும், அம்பாறை மாவட்டத்தில் தமது நிர்வாக சேவையினை பெறுவதற்கு  அனுமதிக்குமாறு கோரி கோசம் எழுப்பியவாறு, வீதியை மறித்ததினால் போக்குவரத்து தடைப்பட்டது. இதையடுத்து பல தடவைகள் மங்களகம உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான உத்தியோகத்தர் குழுவினர் வீதியை பயன்படுத்த உதவுமாறு கோரியும் பலனளிக்கவில்லை.
 
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமரத்ன தேரர் அவர்கள் குறித்த இடத்தில் நின்ற அரச உத்தியோகத்தர்களை (பிரதேச செயலக குழுவினரை) அவதூறாக பேசியபோதும்கூட அந்த இடத்தில் நின்ற பொலிஸ் உத்தியோகத்தர்களால் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 
எனினும் மனம் தளராது கடமையுணர்வோடு நின்ற பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானமே நடைமுறைக்கு வரும் என எழுத்து மூலம் அறிவித்ததன் பின்னர் ஆர்ப்பாட்டக்குழுவினர் கலைந்து சென்றனர் 

http://www.onlineuthayan.com/news/20074

  • கருத்துக்கள உறவுகள்

அட எங்கண்ட தூசனப் பிக்கர்.. :222_hear_no_evil:

பெரிசா எடாமல்..... சாது... சாது... எண்டு சொல்லீட்டு..... அப்படீயே... அவர் சொன்ன தூசனத்திலேயே புத்தரை... மேல பார்த்து இரண்டு கையையும் விரிச்சு கூப்பிட்டு கும்பிட்டால்... அவருக்கு விளங்கும், எங்க நிக்கிறியள் எண்டு. :221_see_no_evil:

மகிந்த, மைத்திரி வாங்காத தூசணப் பேச்சா? அதால பெரிசா எடாதீங்க மக்கா. :223_speak_no_evil:

வாய் சரியில்ல... ஆனால் தங்கமான மனிசனப்பா. :grin: 

இந்த வீடியோவில மஹிந்தருக்கும், அவரது மின்சாரத்துறை அமைச்சர் பவித்திரா வுக்கும் கிழிக்கிறார். :grin: :grin: 

என்ன, கரண்ட் களவு எடுத்து பிடிபட்டு விடடார். அதுதான் இந்தக் கிழியல். :grin:

 

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

அட சிவாஜிலிங்கம் இனவாதியாக தெரிகிறவர்களுக்கு இவர் இனவாதியாக தெரியவில்லை போலtw_angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, nunavilan said:

அட சிவாஜிலிங்கம் இனவாதியாக தெரிகிறவர்களுக்கு இவர் இனவாதியாக தெரியவில்லை போலtw_angry:

 

அங்கை கை நனைக்கிறவைக்கு எங்கடை பிரச்சனை எல்லாம் கண்ணை மறைச்சிடும் கண்டியளோ....

 

 

இதை விட எமக்கு வேறு என்ன வேண்டும்? :(

அமெரிக்கா தொடக்கம் கேடுகெட்ட சிங்களம் வரைக்கும் தாம் வாழ தூக்கியிருக்கும் ஆயுதம் இனவாதம்.

இந்த மஞ்சள் மாவீரன் புலிகள் இருக்கும் காலத்தில் கர்ச்சித்திருப்பேயேனால் கை தட்டியிருக்கலாம்.:grin:

எமது தமிழினத்திலும் இப்படி பலர்...பலர்:cool:

  • கருத்துக்கள உறவுகள்

 விடுதலைப் புலிகள் காலத்தில் இவர் பிறக்கவில்லைபோல் இருக்கிறது. அல்லது அப்போ பேச ஆரம்பிக்கவில்லையோ.

புத்தருக்கே அவமானம். இதுகளை துறவி என்று மதிக்கிறதுகளுக்கும் அவமானம். சுத்தியிருக்கிறதை அவிட்டுப்போட்டு நிண்டு விரீயாய் கத்தியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பிக்கு..... தூசணத்தால் பேசாவி ட் டால் தான்.... ஆச்சரியம்.
நாதமுனி இணைத்த இணைப்பில்.. 
பிக்கு ஜீ....... தூசணத்தால் பேசுவதோடு நின்று விடாது, ஆண் போலீஸ், பெண் போலீஸ்.... எல்லாத்துக்கும் அடிப்பது  சூப்பர்.
பிக்குவின் மேலாடை விலகி, உள்ளுக்கு காவி நிறத்தில்... வேட்டியும்  கட்டியிருப்பதை, இன்று தான்... கவனித்தேன். :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

'தம்பி உடையான் சண்டைக்கு அஞ்சான்.' 

பிக்குவிற்கு தம்பி இருப்பது மட்டுமல்ல. அவன் அரசில், உயர் அதிகாரத்தில் இருப்பதும் பிக்குவின் ஆட்டத்தில் புலனாகிறது. :rolleyes: 

  • கருத்துக்கள உறவுகள்

 இதெல்லாம் ஒரு சாது, கசாப்புக் கடையில தொழில் செய்ய  வேண்டியது. சினிமாவில வாற சண்டைக்காட்ச்சி போல நடிக்கிறார்.

  • தொடங்கியவர்

“தமிழ் நாய்களே உன்னை கொல்லுவேன்“ ; துறவியின் அநாகரீகமான நடத்தை (வீடியோ இணைப்பு)

 

 

மட்டக்களப்பில் கிராம சேவகர் ஒருவரை பௌத்த துறவி ஒருவர் மிகவும் அநாகரீகமான வார்த்தைகளால் வீதியில் வைத்து திட்டிய சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பௌத்த துறவி பொலிஸார் தடுத்தும் கிராம சேவகரை அநாகரீகமாக பேசுவது ,

வில்பத்துல வெட்டுறாங்கள். அங்க போய் வழக்கு போடுடா..

ஸ்ரீபாதல வெட்டுறாங்கள் அங்க போங்கோடா.. போங்கோ..

பறையன்களே... நீ புலிடா... புலிடா...

நீ புலியே தான்ரா... சிங்களவன அண்டைக்கு சுட்ட...

இண்டைக்க அடிக்கிற நீ அதைத் தான்ரா செய்யிற...

உன்னைப் பாக்கும்போது எரிச்சல் வருது..

இந்த நாய்தான் தொடர்ந்து வழக்கு போட்டது...

நீ கிராம சேவகர் எண்டத நினைச்சிக்கொள்... நீ தமிழன்...

நீ சிங்களவனுக்கு எதிரா தொடர்ந்து வழக்கு போடுறத நிப்பாட்டு..

உனக்கு நல்லபடியா சொல்றன்...

ஒரு சிங்களவனையும் ஒரு இடத்திலயிருந்து அசைச்சாலும் ..........

தம்பிய நீதிமன்றமும் முடிந்துவிட்டது. (முஸ்லிம் நீதிமன்றம்)

தமிழனின் நீதிமன்றமும் முடியும்...

நீ நல்லா நினைவு வச்சிக்கொள்... உன்ர தாடைய இப்ப அடிச்சி நொருக்கிடுவேன்...

நான் பொறுமையா இருக்கிறன் ஏன் எண்டா இந்தக் காக்கிச்சட்டைக்காகத்தான்.

அதை நீ நினைவு வச்சிக்கொள் பறையா....தமிழா...

இவனுக்கும் சொல்லனும் (பொலிஸிற்கு )........

(கிராம சேவையாளருக்கு) நீ சிங்களவன் எட்டுப் பேருக்கு எதிரா வழக்குப் போட்ட

ஏன் உன்ர அப்பாவின் இடமா? அம்மாவின் இடமா?...

டேய் அப்பாவிகளுக்கு இப்பிடி செய்யாத...

நீ புலியாகி சுட்ட.... நாங்க பொறுமையா இருந்தோம்....

(கெட்டவார்த்தை)

திரும்பியும் கைவைக்க வெளிக்கிட்டால் எந்தவொரு (கெட்டவார்த்ததை) மகனுக்கும் (கெட்டவார்த்தை) நான் சொல்றன் நல்லா தெரிஞ்சிக்கொள் கடைசி காலம்தான்

 

உங்களுக்கு....அடிப்பேண்டா...ம்ம்ம்....இவன் சாகும் வரைக்கும்....! என்று மக்கள் மத்தியில் கிராம சேவகரை திட்டி தீர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தின் போது அங்கு பணியில் ஈடுப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரி பௌத்த பிக்குவினை அவ்விடத்தினை விட்டு அழைத்து சென்றுள்ளார்.

 

http://www.virakesari.lk/article/13450

  • கருத்துக்கள உறவுகள்

பிக்கு ஜீ..... இவ்வளவு கெட்ட 81.gif  தூஷண வார்த்தைகளை...  எங்கு பொறுக்கியிருப்பார்.
ஸ்பெஷல் ரியூசன் எடுத்திருப்பாரோ..... :grin:  18.gif

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கே  இவரின்,   அர்ச்சனையை கேட்க... காதாலை பிளட் (இரத்தம்) வருது. :grin:

பிக்கு கேட்டதில் என்ன தவறு,  முஸ்லீம் முல்லை தீவிலும் , மன்னாரிலும் காடு அளிக்கும் போது வாய் மௌனமாக இருக்கும் நாங்கள் சிங்களவனுடன் மட்டும் வீரம் காட்டுவது ஏன் ???

முல்லைத்திவில்  ஒரு பிரதேசமே முஸ்லீம் மயம் , ஆனால் ஒரு தமிழனுக்கும் அதை தடுக்க வக்கில்லை.

சிங்களவன் ஒரு புத்தர் சிலை வைத்தாலும் உடனே படம் காட்ட வேண்டியது ....!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குவை புரிந்து கொண்டால் சரி அவர் போல இன்னும் கனபேர் பேசாமல் இருக்குறார்கள் ஆனால் பிக்கு பேசுகிறார் அவ்வளவுதான் இதயும் தமிழர்கள் புரிந்து கொண்டால் சரி 

ஆனால் இலங்கையில் இவரது பேச்சைக்கேட்ட சிங்கள மக்கள் ,மாணவர்கள் மற்றும் தலைவர்கள் இவர் பிக்குவாக இருக்க தகுதியற்றசவர் எனவும் இவர் ஒரு பைத்தியமாக இருக்ககூடும் என்று சொல்கிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, முனிவர் ஜீ said:

பிக்குவை புரிந்து கொண்டால் சரி அவர் போல இன்னும் கனபேர் பேசாமல் இருக்குறார்கள் ஆனால் பிக்கு பேசுகிறார் அவ்வளவுதான் இதயும் தமிழர்கள் புரிந்து கொண்டால் சரி 

ஆனால் இலங்கையில் இவரது பேச்சைக்கேட்ட சிங்கள மக்கள் ,மாணவர்கள் மற்றும் தலைவர்கள் இவர் பிக்குவாக இருக்க தகுதியற்றசவர் எனவும் இவர் ஒரு பைத்தியமாக இருக்ககூடும் என்று சொல்கிறார்கள் 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இது பழைய வீடியோவா அல்லது புதிதா நாதமுனி கர்ணா நிற்பது 

  • கருத்துக்கள உறவுகள்

கோபங்­கொண்ட தேரர், தன்­னு­டைய மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகாரையில், ஜனா­தி­பதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரைக் கொண்டுள்ள நினைவுக்கல்லை பெரிய சுத்தியலால் அடித்து நொறுக்கி அதை உடைத்தார்.

 

 

15036210_1332646570091624_31928492698885

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

கோபங்­கொண்ட தேரர், தன்­னு­டைய மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகாரையில், ஜனா­தி­பதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரைக் கொண்டுள்ள நினைவுக்கல்லை பெரிய சுத்தியலால் அடித்து நொறுக்கி அதை உடைத்தார்.

 

 

15036210_1332646570091624_31928492698885

 விஷம் தலைக்கேறிவிட்டுது, அதுதான் அப்பிடி ஒரு ஆட்டம் ஆடுறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.