Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைதானார் கருணா அம்மான்

Featured Replies

கைதானார் கருணா அம்மான்
 
 

அரசாங்க வாகனமொன்றை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக, கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸாரினால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/187107/க-த-ன-ர-கர-ண-அம-ம-ன-#sthash.kySBhsHN.dpuf

karuna.jpg

கருணா கைதானார்..!

 

கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சற்றுமுன்னர் கைதானார்.

நிதி முறைகேடு விடயமொன்று தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக இன்று காலை இவர் நிதிமோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/13979

கருணா கைது!
கருணா கைது!
முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் நிதி குற்ற விசாரணைப் பிரிவில்   இன்றையதினம் ஆஜராகியநிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கடந்த ஆட்சியின்போது பிரதி அமைச்சராக பதவி வகித்தகாலத்தில்   அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த  குற்றச்சாட்டு தொடர்பிலும் ஆட்சி மாறிய நிலையில் அவர் பயன்படுத்திய வாகனங்களை மீளவும் அரசிடம் ஒப்படைக்க தவறியமை குறித்து   வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இன்றையதினம் அழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசார ணைகளை அடுத்து அவர் கைது செய்யப்பட்டநிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

http://onlineuthayan.com/news/20787

  • தொடங்கியவர்

கருணா அம்மான் கைது

 

கருணா அம்மான் கைது

 

 
 
முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் இன்று வாக்குமூலம் அளிக்கச் சென்ற இவர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்த கருணா அம்மான், பின்னர் அந்த இயக்கத்தில் இருந்து விலகி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சியை ஆரம்பித்தார்.

பின்நாட்களில் அக் கட்சியில் இருந்து விலகிய அவர், அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார்.

இதனையடுத்து அவருக்கு பிரதியமைச்சர் பதவி மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பதவி போன்ற முக்கிய பொறுப்புக்கள் கடந்த ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://tamil.adaderana.lk/news.php?nid=85704&mode=lead

  • கருத்துக்கள உறவுகள்

நிம்மதியா கடைசிக்காலத்தை கழிக்கவிடுறானுங்களில்லை.

  • தொடங்கியவர்

'இத்துபோன வாகனத்துக்காக அழைத்துள்ளார்கள், விரைவில் வருவேன்'
 
 

“நான் கொலை செய்து, கொள்ளையில் ஈடுபட்டு நீதிமன்றம் போகவில்லை. ஒப்படைக்கப்பட்ட  ஒரு இத்துபோன வாகனத்துக்காக அழைத்துள்ளார்கள். விரைவாக வருவேன், கவலைப்படவேண்டாம், உண்மையே வெல்லும்” என கைதுசெய்யபட்டுள்ள கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

அரச வாகனமொன்றை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக, கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸார் முன்னிலையில் இன்று காலை ஆஜரானார். அதனையடுத்து,  கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/187120/-இத-த-ப-ன-வ-கனத-த-க-க-க-அழ-த-த-ள-ள-ர-கள-வ-ர-வ-ல-வர-வ-ன-#sthash.QSE6WERI.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இலங்கை முன்னாள் அமைச்சர் கருணா திடீர் கைதின் பின்னணி!

 

b1_13255.jpg

ராமநாதபுரம் : பிரபாகரன் தலைமையிலான விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும், ராஜபக்‌ஷே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்த கருணா இலங்கையில் இன்று திடீரென கைது செய்யப்பட்டார்.

விடுதலை புலிகள் அமைப்பில் கிழக்கு மாகாண தளபதியாக இருந்தவர் கருணா என்கிற விநாயகமூர்த்தி. பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்தவர். பின்னர் விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து தனி படையை பிரித்து வெளியேறியவர், அரசியலில் குதித்தார். அதன் பின்னர் ராஜபக்‌ஷேவின் ஆதரவாளராக மாறி, அவரின் அமைச்சரவையிலும் இடம்பிடித்தார். 2009ம் ஆண்டு நடந்த இறுதிகட்டப் போரின் போது, விடுதலைப் புலிகளின் ரகசிய செயல்பாடுகளை இலங்கை ராணுவத்திற்கு சொல்லியவர் இவர் தான் என்றும் சொல்லப்படுகிறது.

b3_13457.jpg

தேர்தலில் ராஜபக்‌ஷே அரசு படுதோல்வியடைந்ததையடுத்து, ராஜபக்‌ஷே அரசு மீதான பழைய வழக்குகள் எல்லாம் தூசு தட்டி எடுக்கப்பட்டன. அதன்படி ராஜபக்‌ஷேவின் சகோதரர், குடும்பத்தினர் மீது வழக்குகள் போடப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், ராஜபக்‌ஷே ஆட்சியில் நிதிமோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், கருணாவை விசாரணைக்கு அழைத்துச்சென்ற இலங்கை போலீஸார், விசாரணையின் முடிவில் கைது செய்தனர். 

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தியது, வாகனம் வாங்கியதில் நிதி முறைகேடு போன்ற புகார்கள் அவர் மீது கூறப்பட்டுள்ளது. 2 மணி நேர விசாரணைக்கு பின்னர் அவரை கைது செய்த இலங்கை போலீஸார், அவரை கைது செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

b2_13025.jpg

ராஜபக்‌ஷே தலைமையிலான அமைச்சரவையில், கருணாவுக்கு முக்கிய இலாகா ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. ஒருமைப்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த இலாகா தான் ஒதுக்கப்பட்டிருந்தது. ராஜபக்‌ஷே அமைச்சரவையில் தமிழ் பகுதியைச் சேர்ந்த அமைச்சர் இவர் ஒருவரே. அது மட்டுமல்லாமல் விடுதலை புலிகள் குறித்த முழு விவரங்களையும் அறிந்தவர் ஆவார்.  பிரபாகரனுடன் மிக நெருக்கமாக இருந்தவர். இவற்றோடு இணைத்து பார்க்கையில், கருணா இலங்கை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே சிரிசேனா அரசு பதவியேற்ற பிறகு, ராஜபக்‌ஷே அரசு மீதான பல புகார்கள் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், கருணா கைது என்பது மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகிறது. விடுதலை புலிகள் மீதான் போர் குறித்த முழுமையான விவரங்கள் அறிந்தவர் கருணா. இவரின் கைது இலங்கை அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என இலங்கை அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றன.

http://www.vikatan.com/news/coverstory/73728-srilanka--former-minister-karuna-amman-was-arrested.art


அம்மானுக்கு விளக்கமறியல்
 
 

article_1480397380-1.jpgகருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை டிசெம்பர் மாதம் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம், இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

அரச வாகனமொன்றை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக, கருணா அம்மான், நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸார் முன்னிலையில் இன்று காலை ஆஜரான நிலையில்,  கைது செய்யப்பட்டார்.

அதனையடுத்து, நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட போது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/187127/அம-ம-ன-க-க-வ-ளக-கமற-யல-#sthash.bnXsI2fe.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கருணாவுக்கு விளக்கமறியல் 

 

 

கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை டிசம்பர் மாதம் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Untitlddddddddded-1.jpg

கடந்த ஆட்சியின் போது 800 மில்லியன் பெறுமதியான துப்பாக்கி துளைக்காத வாகனொமொன்றை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில்  வாக்குமூலமளிப்பதற்காக நிதிமோசடி விசாரணைப்பிரிவில்  இன்று ஆஜராகிய போது இவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/13986

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

, உண்மையே வெல்லும்”

பெரிய  அரிச்சந்திரன் என்ற நினைப்பு. 
எப்பவோ போகவேண்டியவர். இனி ஒன்றொன்றாக கோத்துவிடுவினம்.  விரைவாய் வருவாராம்.  செய்த பாவத்துக்கு இவர்  அலைய, தாங்கள் தப்புவதற்கு  தற்கொலை, கொலை  எதுவோ?

  • கருத்துக்கள உறவுகள்

15267509_10157757637950137_3378148133700

  • தொடங்கியவர்

இலங்கை: கைது செய்யப்பட்ட கருணாவுக்கு டிசம்பர் 7 வரை விளக்க மறியல்

 

அரசு வாகனத்தை தவறான முறையில் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதியும், முன்னாள் அமைச்சருமான கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளீதரனை, வரும் டிசம்பர் 7-ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருணா கைது குறித்து படிக்க:முன்னாள் விடுதலைப்புலி தளபதி, கருணா கைது

கருணா
 கருணாவுக்கு டிசம்பர் 7 வரை விளக்க மறியல்

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான சுமார் 9 கோடி ரூபாவிற்கும் மேல் பெறுமதியான வாகனமொன்றை தவறான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் பாரிய நிதி மோசடிகளை ஆராயும் விசேட போலீஸ் குழு முன் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அழைக்கப்பட்ட கருணா அம்மானிடம் போலீசார் வாக்குமூலமொன்றை பதிவு செய்தனர்.

பின்னர், போலீசாரால் கைது செய்யப்பட அவர் கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டார்.

கருணா  நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட கருணா

நீதிமன்றத்தில் கருத்துக்களை தெரிவித்த போலீசார், விசாரணைகள் பூர்த்தி செய்யப்படாததால் காரணமாக சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர் தரப்பு வழக்கறிஞர், அமைச்சு பதவி முடிவடைந்த பின்னர் சம்பந்தப்பட்ட வாகனத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளுமாறு சந்தேக நபர் ஜனாதிபதி செயலகத்திற்கு அறிவித்த போதிலும், அந்த செயலகத்தின் அதிகாரிகள் எந்தவொரு பதிலையும் வழங்கவில்லை என்று அறிவித்தார்.

கருணா  

கருத்துக்களை ஆராய்ந்த நீதிபதி, சந்தேக நபரை வரும் 07-ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சந்தேக நபருக்கு பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள் இருப்பதாக அவரது வழக்கறிஞர் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொன்ற நீதிபதி, சிறைச்சாலைக்குள் அவருக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

http://www.bbc.com/tamil/sri-lanka-38143149

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, நவீனன் said:

கைதானார் கருணா அம்மான்

உதிலை சந்தோசப்படுறதுக்கோ இல்லை கவலைப்படுறதுக்கோ ஒண்டுமேயில்லை.....எல்லாம் நிகழ்ச்சி நிரலின்படிதான் நடக்குது.....:cool:

  • தொடங்கியவர்

கருணா அம்மானிற்கு 7 ஆம் திகதி வரை விளக்கமறியல்

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, நவீனன் said:

கருணா அம்மானிற்கு 7 ஆம் திகதி வரை விளக்கமறியல்

கருணா அம்மான் கைதுசெய்யப்படுவதில் கருணா அம்மானைத் தவிர வேறு எவர் முகத்திலும் சந்தோசமில்லை. :(

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழரசு said:

15267509_10157757637950137_3378148133700

இந்த கேஸுக்கு உள்ள போனால் ,,,,,,,,,,,,??
வெளியில வர காலம் எதுக்குமே ?

ஒன்பது கோடி ரூபாய் வாகனத்தை தவறான முறையில் பாவித்தபடியால் கைதாம். வாகனத்தை கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு ரிவர்சில் ஓடி இருப்பாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கரும்பு said:

ஒன்பது கோடி ரூபாய் வாகனத்தை தவறான முறையில் பாவித்தபடியால் கைதாம். வாகனத்தை கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு ரிவர்சில் ஓடி இருப்பாரோ?

குருஜி, நான் வெறும் 2ஜி , நீங்கள்தான் 4ஜி....! tw_blush:

  • தொடங்கியவர்
56 minutes ago, கரும்பு said:

ஒன்பது கோடி ரூபாய் வாகனத்தை தவறான முறையில் பாவித்தபடியால் கைதாம். வாகனத்தை கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு ரிவர்சில் ஓடி இருப்பாரோ?

சுமார் 700 இலட்சம் ரூபா பெறுமதியான ஜீப் மட்டக்களப்பில் கண்டுபிடிப்பு:

Edited by நவீனன்

உந்த ஜீப்பை பார்த்தால் இதைக்குடுத்து பேரீச்சம்பழம்தான் வாங்கலாம் போல கிடக்கு. :2_grimacing: 

  • தொடங்கியவர்

 

8 minutes ago, கரும்பு said:

உந்த ஜீப்பை பார்த்தால் இதைக்குடுத்து பேரீச்சம்பழம்தான் வாங்கலாம் போல கிடக்கு. :2_grimacing: 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, கரும்பு said:

ஒன்பது கோடி ரூபாய் வாகனத்தை தவறான முறையில் பாவித்தபடியால் கைதாம். வாகனத்தை கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு ரிவர்சில் ஓடி இருப்பாரோ?

பியரை குடிச்சுக்கொண்டு ஒவ்வொண்டாய் வாசிச்சுக்கொண்டு வரேக்கை.......உந்த வசனத்தை வாசிச்சவுடனை........சிரிப்பை அடக்கமுடியாமல் சிரிக்க வெளிக்கிட்டதாலை ....உள்ள இடம் முழுக்க பியர் சீறி பாய்ஞ்சிட்டுது....:grin:...tw_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கரும்பு said:

ஒன்பது கோடி ரூபாய் வாகனத்தை தவறான முறையில் பாவித்தபடியால் கைதாம். வாகனத்தை கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு ரிவர்சில் ஓடி இருப்பாரோ?

தனி ரூம் போட்டு யோசிப்பாங்களோ..... :grin:

  • கருத்துக்கள உறவுகள்

15253534_546928848838709_4720098783660221148_n.jpg?oh=3d8989571f14e6c6e1d4589924aac5d8&oe=58B30777

அழகிய படம்.  பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கலாம் போலுள்ளது.

  • தொடங்கியவர்

காட்டிக் கொடுத்த கருணாவின் சேவை: துரோகத்தை துரோகத்தால் வீழ்த்தும் இலங்கை

 

 
 
கருணா | கோப்புப் படம்: ஏஎஃப்பி
கருணா | கோப்புப் படம்: ஏஎஃப்பி
 
 

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1980-களின் புது வரவு முரளிதரன் என்ற கருணா. துடிப்பான நடவடிக்கைகள், தலைமையின் கண்ணசைவுக்கு ஏற்ப செயல்படும் பாங்கு - இந்த இரண்டு குணாதிசயங்களாலேயே பிராபகரனின் முக்கியத் தளபதிகளில் ஒருவர் என்ற இடத்துக்கு வேகமான முன்னேறியவர்.

புலிகள் இயக்கத்தில் இரண்டே இரண்டு நபர்கள் மட்டுமே கையில் துப்பாக்கியுடன் பிரபாகரனை சந்திக்க முடியும். முதலாமவர் பொட்டு அம்மான். அடுத்தவர் கருணா. தொடக்கத்தில் பிரபாகரனின் ஒட்டுமொத்த முக்கிய தளபதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட கருணா, ஒரு கட்டத்தில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்க ஆரம்பித்தார். அதற்காக, “மட்டகளப்பு - அம்பாறை மாவட்டத்தை உள்ளடக்கிய தென் தமிழீழத்தைச் சேர்ந்த புலிகள் இயக்கத் தோழர்கள் மதிக்கப்படவில்லை. அவர்களின் உயிர் தியாகம் உதாசீனப்படுத்தப்படுகிறது. தென் தமிழீழ மக்களுக்காக போரிட்டு இவர்களின் மடியில் மடிவதையே எனது இறுதி லட்சியமாக கருதுகிறேன். இதில் எவரும் குறுக்கிடுவதை நான் விரும்பவில்லை” என்று பிரபாகரனுக்கே கடிதம் எழுதினார்.

இது தவிர, நிதி ஆளுமை சர்ச்சைகள், தனிப்பட்ட சொகுசு வாழ்க்கை என்றெல்லாம்கூட கருணாவுக்கு எதிரான குற்றச் சாட்டுகள் உண்டு. இப்படியான புகார்கள் வந்ததுமே கருணாவுக்கும் தனக்குமான இடைவெளியை அதிகப்படுத்திக் கொண்டார் பிரபாகரன். அதேசமயம், அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால், ‘தென் தமிழீழத்தின் ஏகோபித்த தளபதியாக வரு வதற்காக இலங்கை அரசாங் கத்துடன் கைகோர்த்திருக்கிறார் கருணா’ என்ற தகவல் வெளியானபோது அதிர்ந்து போனார் பிரபாகரன். இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு கருணாவுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. ஆனால், அதை நிராகரித்த கருணா, தென் தமிழீழ கோஷத்தை தூக்கிப் பிடிக்கும் விதமாக தலைமைக்கு கடிதம் எழுதுகிறார்.

கடிதத்தின் இறுதியில் ‘பிரபாகரனின் தலைமையில் செயல்படுவதையே நாங்கள் விரும்புகிறோம். அவரை நாங்கள் கடவுள் என பாவிக்கிறோம்’ என்றெல்லாம் இருந்த வார்த்தைகள் பிரபாகரனை சாந்தப்படுத்தவில்லை. 06-03-2004-ல் கருணா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் நபர்களின் நாட்கள் எண்ணப்படும் என்பதை நன்கு உணர்ந்திருந்தவர் தனது நிஜமுகத்தை காட்ட ஆரம்பித்தார்.

ரணில் விக்கிரமசிங்கே கட்சியின் எம்.பி-யாக இருந்த இஸ்புல், கருணாவின் உறவுக்கார பெண் ஒருவரை மணம் முடித்திருக்கிறார். அந்த உறவுப் பாலத்தை பயன்படுத்தி ரணில் விக்கிரமசிங்கேயுடனும் அதைத் தொடர்ந்து சந்திரிகா, ராஜபக்ச உள்ளிட்ட தலைவர்களிடமும் விசுவாசம் காட்டி நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டார்.

புலிகள் கூடாரத்தின் உள் முகத்துவாரம் வரையிலான விஷயங்களை அறிந்த நபர் என்பதால் கருணாவை கைக்குள் வைத்துக் கொண்டு புலிகள் குறித்த ரகசியங்களையும் அவர்களின் அசைவுகளையும் தந்திரமாக கிரகித்துக்கொண்டார் ராஜபக்ச. இதற்கு அவர் அளித்த சன்மானம், தனது கட்சியின் உபதலைவர் பதவி, அமைச்சரவையில் துணை அமைச்சர் பதவி. புலிகள் இயக்கத்தை அடியோடு வீழ்த்திய முள்ளிவாய்க்கால் முற்றத்தின் பின்னணியில் ராஜபக்சேவின் ராஜதந்திரமும் கருணாவின் துரோகமும் போட்டிபோட்டு பங்காற்றியது.

அதேசமயம், முள்ளிவாய்க்கால் முடிவு வரும்வரை தனக்கு என்ன முடிவு ஏற்படுமோ என்ற அச்சத்தில் கொழும்பிலேயே முடங்கிக் கிடந்தார் கருணா. “ஈழப் போரில் ஒருவேளை நாங்கள் தோல்வியுற்றால், அதற்கு காரணம் துரோகமாக இருக்கும் அல்லது இயற்கையாக இருக்கும்” என்று ஏற்கெனவே பிரகடனம் செய்திருந்தார் பிரபாகரன். அவர் சொன்னதுதான் நடந்தது. துரோகத்தை துருப்பாக வைத்து புலிகளை வீழ்த்திய இலங்கை அரசு, போதும் கருணாவின் சேவை என்ற முடிவுக்கு வந்திருக்கிறது. அதனால்தான், அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கைதுக்கான காரணம் ஒன்று சொல்லப்பட்டாலும் அவரை ஒரேயடியாய் முடக்கிப் போடுவதற்கான வேறு சில ஆதாரங்களையும் இலங்கை அரசு துருவிக் கொண்டிருக்கிறது. ஆக மொத்தத்தில், வரலாறு திரும்பி இருக்கிறது. ஈழத்தில் மீண்டும் துரோகம் வென்றிருக்கிறது.

http://tamil.thehindu.com/tamilnadu/காட்டிக்-கொடுத்த-கருணாவின்-சேவை-துரோகத்தை-துரோகத்தால்-வீழ்த்தும்-இலங்கை/article9400803.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா அது, சமையல் முடிந்து விட்டது.... அந்த உப்பைத் தூக்கி அங்கால போடு......! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

கருணா அம்மான் இலேசுப்பட்ட ஆளில்லை என்பதை புலிகளின் அழிவு தெளிவாக்கியும் ஒரு சின்னப் பிரச்சினைக்காக அவரைக் கைது செய்ததை பெரிய விடயமாக பூதாகரமாக்கியுள்ளார்கள். அவர் உப்பாகவோ, கறிவேப்பிலையாகவோ இருக்கமாட்டார். 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

23 minutes ago, கிருபன் said:

கருணா அம்மான் இலேசுப்பட்ட ஆளில்லை என்பதை புலிகளின் அழிவு தெளிவாக்கியும் ஒரு சின்னப் பிரச்சினைக்காக அவரைக் கைது செய்ததை பெரிய விடயமாக பூதாகரமாக்கியுள்ளார்கள். அவர் உப்பாகவோ, கறிவேப்பிலையாகவோ இருக்கமாட்டார். 

 

பெரு மரங்களையும் துரும்பைப்போல் தூக்கியெறியும் வல்லமைகொண்ட யானையைச் சின்ன அறுகம்புல்லு வீழ்த்திவிடும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.