Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதேச சபையின் அனுமதியில்லாமல் முல்லைத்தீவு நகரில் காந்தி சிலை அமைப்பதின் அவசரம் என்ன? கேள்வி எழுப்புகின்றார் ரவிகரன்

Featured Replies

பிரதேச சபையின் அனுமதியில்லாமல் முல்லைத்தீவு நகரில் காந்தி சிலை அமைப்பதின் அவசரம் என்ன? கேள்வி எழுப்புகின்றார் ரவிகரன்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
FotorCreated-520-1024x603.jpg

பிரதேச சபையின் அனுமதியில்லாமல் முல்லைத்தீவு நகரில் காந்தி சிலை அமைக்கப்படுவது தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று  2016.12.19 முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தனது கண்டனத்தினைத் தெரிவித்தார்.

முல்லைத்தீவு நகரிலே பண்டாரவன்னியன் சிலையினை அமைப்பதற்கு ஒன்றரை வருடங்களாக சட்டரீதியான அனுமதிகள் பெற்று அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவர் பிரதேச சபையின் அனுமதிகள் பெறாமல் இரவோடிரவாக காந்திக்கு சிலை அமைப்பது பொருத்தமற்றது. அகிம்சையினைப் போதித்த காந்திக்கு முல்லைத்தீவில் சிலை அமைப்பதன் அவசியம் என்ன?. முல்லைத்தீவிற்கு காந்தி என்ன செய்தார்?

அகிம்சை ரீதியாக போராடிய தியாகி திலீபன்,  திலீபனுடன் முல்லைத்தீவில் உண்ணாவிரதமிருந்து ஆபத்தான நிலையில் காப்பற்றப்பட்ட திருச்செல்வம் ஆகியோருக்கு சிலை அமைப்பதை விடுத்து காந்திக்கு சிலை அமைப்பதன் அவசியம் என்ன?. அது கூட பிரதேச சபையின் அனுமதி பெறாமல் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் ஒருவரே சிலை வைக்க முயல்வது பிழையான விடயம். அனுமதியற்ற முறையில் புத்தர் சிலைகளை வைக்கும் பிக்குகளுக்கும் எம்மவர்களுக்கும் இடையிலேயே என்ன வித்தியாசம் உள்ளது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை முல்லைத்தீவு நகரில் அமைக்கப்படும் காந்தி சிலைக்கு பிரதேச சபையின் அனுமதி பெறப்படவில்லை என கரைதுறைபற்றின் பிரதேச சபையின் செயலாளர் கூட்டத்தில் தெரிவித்தார். இதன்போது கருத்துத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்டச் செயலர் நிதி மூலகங்கள் கிடைத்தாலும் எல்லாவற்றிற்கும் அனுமதிகள் பெறப்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் ஆங்கிலேயக் கோட்டையினைத் தகர்த்து எறிந்து பீரங்கிகளையும் கைப்பற்றிய மாவீரன் பண்டாரவன்னியனுக்கு சிலை அமைப்பதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் பிரதேச சபையின் அனுமதி கூடப் பெறாமல் முல்லைத்தீவு நகரில் அகிம்சைவாதி காந்திக்கு இரவிரவாக சிலை அமைக்கப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/archives/10962

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நவீனன் said:

FotorCreated-520-1024x603.jpg

...காந்திக்கு முல்லைத்தீவில் சிலை அமைப்பதன் அவசியம் என்ன?. முல்லைத்தீவிற்கு காந்தி என்ன செய்தார்?

 

தம்புடூஸ்,

திரையை விலத்தி வடிவா அவதானிக்கவும், அது சோனியா காந்தி சிலையாக இருக்கப்போகுது..!

இப்போ கணக்குப் போட்டுப்பாருங்கள், முல்லைத்தீவுக்கும், (சோனியா)காந்திக்கும் சம்மந்தம் தானாக வந்துவிடும்..!!

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவலாக காந்தி, பாரதியார், வள்ளுவர் சிலைகள் அமைக்கும் பணிகள் தடல்புடலாக இடம்பெற்று வருகின்றன. முதற்கட்டமாக, முல்லைத்தீவு நகரின் மையத்தில் காந்தியின் சிலை அமைப்புப் பணிகள் நிறைவுபெற்றுள்ளன.

இந்த சிலை அமைப்புப் பணிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்னின்று நடத்திவருகின்றார்.

இதை செய்தியாகப் படிக்கும்போது,

பல வருடங்களாக வறுமையில் முதலிடத்தில் இருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு செய்ய வேண்டிய அபிவிருத்தி பணிகள் ஆயிரம் இருக்க, காந்தி சிலையா இப்போது முக்கியம் என்ற கேள்வி உங்களுக்கும் இயல்பாகவே எழலாம்?

முல்லைத்தீவில் இருக்கின்ற கடல், நன்னீர் வளங்கள் முழுவதிலும் சொத்துப் பங்கு கேட்டு வந்திருக்கும் புதிய குடியேறிகளுக்கு சரியான பதில் தர தகுதி வாய்ந்த அரசியல்வாதிகள் இல்லாதிருக்கும்போது, காந்தி சிலையை தூக்கிக் கொண்டு காவடியாடும் அரசியல்வாதிகளும் அங்குதான் இருக்கின்றனர் என்ற வியப்புச் செய்தியும் உங்களுக்குள் எழும்.

முல்லைத்தீவின் கரையாக அரித்துவரும் நில - வாழ்வாதார அபகரிப்புக்களை தடுத்து நிறுத்த போராடாத அரசியல் தலைவர்கள் பாரதிக்காக சிலையெடுக்கத் துடிக்கும் நகைச்சுவை காட்சிகளையும் பார்த்துத்தான் ஆக வேண்டும்.

நல்லாட்சி மலர்ந்து இரண்டாவது ஆண்டு வரும்போதும் கூட முல்லைத்தீவு மாவட்டத்தில் அபகரிக்கப்பட்ட காணிகளில் ஒரு துண்டுகூட விடுவிக்கப்படவில்லையே எனக் கிளர்ந்தெழாத அரசியல்தலைவர்கள் காந்திக்கு சிலை முக்கியம் எனக் கிளர்ந்தெழும் நிலைலையும் அங்கு உண்டு.

இப்படி செயற்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டிய அரசியல் பணிகள் பல இருக்க சிங்களத் தீவுக்கோர் பாலம் அமைக்கக் கோரிய இந்திய தேசவுருவாக்கிகளின் சிலை நமக்கு தேவைதானா?

வடக்கின் பெருந்தெருக்கள் முழுவதும் போர் வெற்றி நினைவுச் சின்னங்கள். உள்ளே நுழைந்தால் இந்திய உபகண்டத்தின் கலாசார ஆக்கிரமிப்புச் சின்னங்கள் என்ற நிலையை நாமே உருவாக்கிக்கொள்ளப்போகிறோமா என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும்.

அகிம்சையைப் போதித்த காந்தியின் சிலை உலகம் முழுவதும் உண்டு. எனவே நமது நிலத்திலும் இருப்பது தவறில்லை என வாதிடுவோர், புத்தரும் உலகிற்கு அகிம்சையைத் தான் போதித்தார். அவரின் சிலையும் உலகம் முழுவதும் உண்டு. எனவே வடக்கில் புத்தர் சிலைகள் வைக்கப்படுவதனையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் கவனியுங்கள். காந்தி உலகப் பொதுவானவர் என்ற வழியில் அனுராதபுரத்தில் ஒரு சிலையை வைக்கமுடியுமா என்பதையும் சிந்தியுங்கள்.

நம் ஊர்களில், நம் ஊர் சந்திகளில் சிலை வைத்து அவர்தம் வரலாற்றைத சந்ததி கடத்த வேண்டிய பெரியவர்கள் ஒருவர் கூடவா இல்லை? கடந்த காலத்தை சிருஸ்டித்த எத்தனைப் பெரியவர்களைக் கடந்து வந்திருக்கிறோம். மறந்து வந்திருக்கிறோம். எத்தனை படுகொலைகளின் இரத்தம் இன்னும் ஆறமால் இந்த மண்ணில் இருக்கிறது....! நம்மத்தியில் சிலை வைத்துப் பூஜிக்கப்படவேண்டிய இவ்வளவு விடயங்கள் இருக்க, காந்திக்கும், பாரதிக்கும்,வள்ளுவனுக்கும் ஏன் சிலை?

காந்தி உலகுக்கு அகிம்சையைப் போதித்தவர் இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும்தான். அதே அகிம்சையை ஈழத் தமிழன் ஏந்திய போது காந்தி தேசம் என்ன செய்தது என்பதை மறந்து போனோமா?

 

 

 

நன்றி பேஸ் புக் நண்பர்   

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

தம்புடூஸ்,

திரையை விலத்தி வடிவா அவதானிக்கவும், அது சோனியா காந்தி சிலையாக இருக்கப்போகுது..!

இப்போ கணக்குப் போட்டுப்பாருங்கள், முல்லைத்தீவுக்கும், (சோனியா)காந்திக்கும் சம்மந்தம் தானாக வந்துவிடும்..!!

ராமனுக்கு கோவில் கட்டுறது 
தீவாளி கொண்டடாடுறது ......
என்று எமக்கு எதிர் மறையா செய்தே பழகி போச்சு.

தமிழன் சோனியாவிட்கு சிலை வைக்காது போனால்தான் அதிசயம் 

அனுமதியில்லாத சிலைகளை இடித்துதள்ள வேண்டியது தானே!

  • கருத்துக்கள உறவுகள்

Image result for gandhi

Image result for gandhi with girls

Image result for gandhi with girls

கொஞ்சம் காசு செலவழிந்தாலும் பரவாயில்லை .....
சிலைகளை கொஞ்சம் தத்த ரூபமகாக அமைத்தால் 
எமைபோல் ஏமாறாது ......
எதிர்கால சந்ததி என்றாலும் உண்மையான வரலாறை படிக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

தம்புடூஸ்,

திரையை விலத்தி வடிவா அவதானிக்கவும், அது சோனியா காந்தி சிலையாக இருக்கப்போகுது..!

இப்போ கணக்குப் போட்டுப்பாருங்கள், முல்லைத்தீவுக்கும், (சோனியா)காந்திக்கும் சம்மந்தம் தானாக வந்துவிடும்..!!

விலத்திப்பார்க்க விடுவாங்களோ  தெரியேல்ல

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நந்தன் said:

விலத்திப்பார்க்க விடுவாங்களோ  தெரியேல்ல

அது தெரியவில்லை ............

ஆனால் அவர்கள் விலக்கிய பின்பு உங்களை பார்க்க விடுவார்கள் !

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, நந்தன் said:

விலத்திப்பார்க்க விடுவாங்களோ  தெரியேல்ல

?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, MEERA said:

?

என்ன செல்லம்:221_see_no_evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, நவீனன் said:

முல்லைத்தீவு நகரில் காந்தி சிலை

ஏனப்பா எல்லாரையும் ஊருக்கை கூட்டிக்கொண்டு வாறியள்???? 
இவன் ஒருபக்கம்....அவன் ஒருபக்கம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.