Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்துள்ளோம்: முதல்வர் ஓபிஎஸ் தகவல்

Featured Replies

பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்துள்ளோம்: முதல்வர் ஓபிஎஸ் தகவல்

 

sasikala_long_10141.jpg

அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை பொதுக்குழு தேர்வு செய்துள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், எம்பிகள், பொதுக்குழு மற்றும் செயற்குழு குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் வி.கே.சசிகலா பங்கேற்கவில்லை. கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் கடைசி தீர்மானமாக, முதமைச்சர் அம்மாவின் வழிகாட்டுதல்களை நினைவில் கொண்டு, சின்னம்மாவுடைய தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்ற உறுதி ஏற்போம். சின்னம்மா வி.கே.சசிகலாவிடம் கழகத்தின் தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.

ops-_admk_meeting_1_10120.jpg

அதிமுக வரலாற்றில் மிக மிக முக்கியத்தும் வாய்ந்த இந்த நேரத்தில், தீய சக்திகளின் சூழ்ச்சிக்கு இடம் தராமல் கழக உடன் பிறப்புக்கள் அனைவரும் கட்டுக்கோப்போடும், அதிமுக இதுவரை நமக்கு அளித்திருக்கும் அனைத்துப் பெருமைகளுக்கும், அங்கீகாரங்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக தலைமைக்கு விசுவாசத்தோடும் பணியாற்றிட இந்தப்பொதுக்குழு உறுதி அளிக்கிறது. எம்ஜிஆரை புரட்சித் தலைவி அம்மா வடிவில் கண்டோம். அம்மாவை, சின்னம்மா வடிவில் கண்டு கழகப் பணிகளை தொடர்ந்து ஆற்றுவோம் என்று சூளுரைப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தீர்மான நகலை போயஸ் கார்டனில் இருக்கும் சசிகலாவிடம் வழங்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டார். முன்னதாக, தம்பிதுரையுடன் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ்., கட்சியின் பொதுச் செயலாளராக சின்னம்மாவை பொதுக்குழு நியமித்துள்ளது என்று கூறினார்.

http://www.vikatan.com/news/tamilnadu/76232-we-have-selected-sasikala-as-general-secretary-says-tamil-nadu-chief-minister.art

  • தொடங்கியவர்

சசிகலா தலைமையை ஏற்போம் #LIVEUPDATES அதிமுக பொதுக்குழு கூட்டம்...

 

admk-general-body-meet-vikatan-1_08541.j

அதிமுக அவசர பொதுக்குழு கூட்டம்.. புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க...

சசிகலாவிடம் தீர்மான நகலை வழங்கினார் ஓபிஎஸ்

*
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பொதுக்குழு தீர்மானம் போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தீர்மான நகலை, மதுசூதனன், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சசிகலாவிடம்  வழங்கினர். அப்போது, கட்சியின் பொதுச் செயலாளராக பதவியேற்க வேண்டும் என்று சசிகலாவை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

தீர்மானத்துக்குப் பின் ஏற்கெனவே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா பேனருக்கு மேல் சசிகலாவை வரவேற்று பிரமாண்ட பேனர்கள் அமைக்கப்படுகிறது

banner_10499.jpg

 

ஜெயலலிதாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு

* எல்லோருக்கும் எப்பொழுதும் சத்தான உணவு என்பது சாத்தியமான லட்சியமே என்பதை மெய்ப்பித்த முதலமைச்சர் அம்மாவுக்கு, மானுட சேவைக்கான பிலிப்பைன்ஸ் நாட்டின் ரமோன் மக்சையாய் விருது மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட ஏற்பாடுகளை செய்தல் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

*  சசிகலா தலைமையில் பணியாற்ற உறுதி என தீர்மானம் நிறைவேற்றம். 

ac78468d-e561-46c1-8c2b-433095d64d88_094

பொள்ளாச்சி ஜெயராமன் இரங்கல் தீர்மானம் வாசித்தார்

*   அ.தி்.மு.க. பொதுக்குழு வரலாற்றில் 45 பேர் மேடையில் அமர்ந்த முதல் பொதுக்குழு இது தான்

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 14 தீர்மானங்கள்! தீர்மானங்களை எடப்பாடி பழனிச்சாமி முன்மொழிந்தார்.

பொதுக்குழுவில் கண்ணீர் மல்க உரையாற்றுகிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

கண்ணீர் அஞ்சலி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி கண்ணீர் அஞ்சலி

*  அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது!

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், பொன்னையன் பண்ருட்டி ராமச்சந்திரன் மேடையில் உள்ளனர். மேலும் தம்பிதுரை, எடப்பாடி பழனிச்சாமி, அன்வர் ராஜா, சரோஜா உட்பட 45 பேர் மேடையில் உள்ளனர்

 

15749586_10210124751207725_1163867663_n_

  • * அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று 9.30 மணிக்கு ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி  திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
  •  
  • ஜெயலலிதாவின் நினைவைப் போற்றும் வகையில் ஜெயலலிதாவின் இருக்கை அரங்கில் வைக்கப்பட உள்ளது. 

admk-general-body-meet-vikatan-2_08086.j

அதிமுக அவசர பொதுக்குழு கூட்டம்.. புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க...

  • முதலமைச்சர் ஓ.பி.எஸ் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள கிளம்பினார். 
  • பொதுக்குழு உறுப்பினர்கள் இன்று காலை 7 மணியளவில் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு  பொதுகுழு நடக்கும் இடத்தை அடைந்தனர்.
  • இதனிடையே சசிகலா தான் அதிமுகவின்  பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அதிமுக முக்கிய நிர்வாகிகள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து வருகின்றனர். 

 

சசிகலா பொதுச்செயலாளரா? இணைப் பொதுச்செயலாளரா? 

ஆளும் அ.தி.மு.க.வின் பொதுக்குழு-செயற்குழு கூட்டம் இன்று நடக்கவுள்ளது.அப்போது அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் சசிகலா ஜெயலலிதா வகித்த பொதுச் செயலாளர் பதவியை அப்படியே விட்டுவிட்டு,புதிதாக உருவாக்கப்படும் இணைப்பொதுச் செயலாளர் பதவியை ஏற்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகி அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் சசிகலா செல்கிறார் என்ற தோற்றம் ஏற்படும். அதனால் தனக்கு அதிமுகவில் உள்ள ஒரு சில எதிர்ப்புகளையும் சமாளித்துவிட முடியும் என்று சசிகலா நம்புவதாக அ.தி.மு.க. சீனியர்கள் தெரிவிக்கின்றனர். அ.தி.மு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர்.மறைவுக்குப் பிறகு அக்கட்சியில் அவர் வகித்து வந்த தலைவர் பதவியைக் காலியாக வைத்துவிட்டு, தனது மரணம் வரையிலும் பொதுச் செயலாளராக மட்டுமே ஜெயலலிதா பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவு அவசர சிகிச்சைப் பிரிவில், சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 75 நாட்களாகத் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில் இந்த மாதம் 5-ம் தேதி திடீரென அவர் மரணமடைந்தார். இந்திய அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது அவரின் மரணம். இந்தச் சூழ்நிலையில் தங்களது தலைவியை இழந்த நிலையில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு-செயற்குழு இன்று  நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

இந்தப்பதவிக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா வரவேண்டும் என்று அ.தி.மு.க.வின் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் வற்புறுத்தி வந்தனர். அதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவில், நிர்வாகிகள் கூட்டத்தைக்  கூட்டி தீர்மானமும் நிறைவேற்றி உள்ளனர். அமைச்சர்கள், கட்சியின் தலைமை நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்,  அ.தி.மு.க.வின் பல்வேறு அணி நிர்வாகிகள் என்று அனைவரும் போயஸ் கார்டன் சென்று நேரிலும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் சசிகலாவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அவர்களும் நேரில் சசிகலாவுக்கு ஆதரவு அளித்தனர்.

இதனையடுத்து பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என்ற நிலை உருவானது. இந்த நிலையில் அ.தி.மு.க.வின் எம்.பி.சசிகலா புஷ்பாவின் கணவர்,கட்சியின் தலைமை அலுவலகம் சென்று பொதுச் செயலாளர் பதவிக்கு விண்ணப்பம் அளிக்க வந்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த கைகலப்பில் அவருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அங்கிருந்து காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். இந்த நிகழ்வால் அ.தி.மு.க.வின் தலைமைக்கழக அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மாதிரியான எதிர்ப்புகளை சசிகலா தரப்பு விரும்பவில்லை என்றும் அதனால் இணைப் பொதுச் செயலாளர் பதவியை உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.    

                       .
அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டுமானால் கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும் என்பது கட்சி விதி. இதையொட்டி அ.தி.மு.க. செயற்குழு, மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று (வியாழன்) காலை 9.30 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.செயற்குழு கூட்டத்தில் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதோடு, சசிகலாவை பொதுச் செயலாளராக்கும் தீர்மானமும் கொண்டு வரப்படவுள்ளது.

செயற்குழு கூட்டத்திற்கு பிறகு பொதுக்குழு கூட்டத்தில் இதற்கு ஒப்புதலும் பெறப்பட உள்ளது. ஒவ்வொரு முறை செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் போதும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்பது வழக்கம். ஆனால் இந்த முறை சிறப்பு அழைப்பாளர்கள் யாருக்கும் அழைப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. செயற்குழு-பொதுக்குழு நடக்கவுள்ள வானகரம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/76225-aiadmk’s--general-council-meeting-liveupdates.art

  • தொடங்கியவர்

குடும்பத்தலைவி முதல் அதிமுக பொது செயலாளர் வரை - எண்ணற்ற திருப்பங்களை கொண்ட சசிகலாவின் வாழ்க்கை

 
 

விகே. சசிகலா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

விகே. சசிகலா - நிஜமானது நிழல்
 

இன்று டிசம்பர் 29-ஆம் தேதியன்று சென்னையில் நடந்த பொதுக் குழுக்கூட்டத்தில் அவர் அதிமுகவின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.

சசிகலா குறித்து மேலும் படிக்க: சசிகலா நடராஜன்: நிழல், நிஜமாகிவிட்டதா?

இதற்கு முன்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவரும் முதலமைச்சருமான ஜெயலலிதா டிசம்பர் 5-ஆம் தேதியன்று உயிரிழந்ததையடுத்து அந்தப் பதவி காலியானது.

ஒரு சாதாரண குடும்பத் தலைவி என்ற நிலையிலிருந்து, தமிழகத்தின் ஆளும் கட்சியின் தலைவராக உயர்ந்த சசிகலாவின் வாழ்க்கைப் பயணம் பல திருப்பங்களையும் ஏற்ற இறக்கங்களையும் கொண்டது.

1984-ஆம் ஆண்டில் வினோத் வீடியோ விஷன் என்ற வீடியோ கடையை வைத்திருந்த சசிகலா, அப்போது கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சந்திரலேகாவின் பரிந்துரையின் பேரில் ஜெயலலிதாவுக்கு முதன் முதலாக அறிமுகமானார்.

அப்போது அவரது கணவர் மா. நடராஜன் கடலூர் மாவட்டத்தில் அரசு மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தார்.

1956ல் திருத்துறைப்பூண்டியில் விவேகானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதியின் மகளாக சசிகலா பிறந்தார்.

சசிகலாவின் உடன்பிறந்தவர்கள் யார்?

அவரோடு உடன் பிறந்தவர்கள் ஐந்து பேர் - சுந்தரவதனன், வினோதகன், ஜெயராமன், வனிதாமணி, திவாகரன். திருத்துறைப்பூண்டியில் பிறந்து வளர்ந்தாலும் சில ஆண்டுகள் கழித்து, குடும்பம் மன்னார்குடிக்கு குடிபெயர்ந்தனர்.

மன்னார்குடிக்கு அருகில் இருந்த விளார் என்ற ஊரைச் சேர்ந்த நடராஜனை திருமணம் செய்தார் சசிகலா. இந்தத் திருமணத்தை நடத்திவைத்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி.

ஜெயலலிதாவின் நட்பு கிடைத்தது எப்படி?

 

விகே. சசிகலா - நிஜமானது நிழல்

விகே. சசிகலா - நிஜமானது நிழல்

அப்போது அ.தி.மு.கவின் கொள்கைபரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் சுற்றுப் பயணங்களை படமெடுத்துக் கொடுக்கும் வாய்ப்பு சசிகலாவின் வினோத் வீடியோ விஷனுக்குக் கிடைக்க, ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்குள் அடியெடுத்து வைத்தார் சசிகலா.

அதற்குப் பிறகு, மெல்ல மெல்ல ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவராக வளர ஆரம்பித்தார் சசிகலா. ஜெயலலிதா மாநிலங்களவை உறுப்பினரானபோது, அவரோடு தில்லி செல்லும் அளவுக்கு நெருக்கமானார் சசிகலா.

ஆனால், தமிழக முதலமைச்சரும் ஜெயலலிதாவின் அரசியல் ஆசானுமாக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் மறைந்த போது, கட்சி இரண்டாக உடைந்த சமயத்தில், சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் ஜெயலலிதாவிற்குப் பின்னால் அணி திரண்டனர். இதுவே, ஜெயலலிதா வெகுவாக சசிகலாவைச் சார்ந்திருப்பவராக மாற்றியது.

சசிகலா 'சின்னம்மா' ஆனது எப்போது?

1991-இல் ஜெயலலிதா முதன் முறையாக தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற சமயத்தில், அவருக்கு எல்லாமுமாக மாறியிருந்தார் சசிகலா. அப்போதிலிருந்து ஜெயலலிதா, அம்மாவாகவும் சசிகலா சின்னம்மாவாகவும் அழைக்கப்பட ஆரம்பித்தார்கள். ஜெயலலிதா எங்கு சென்றாலும் நிழலாகப் பின்தொடர்ந்தார் சசிகலா.

இதனால், சசிகலாவின் கணவர் நடராஜன், சசிகலாவின் சகோதரர்கள், அவர்களது குடும்பத்தினரின் ஆதிக்கமும் அ.தி.மு.கவின் மீது படர ஆரம்பித்தது.

 

தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதாவுடன் சசிகலா

 தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதாவுடன் சசிகலா

1995-இல் சசிகலாவின் உறவினரான வி.என். சுதாகரனை தனது தத்துப் பிள்ளையாக தத்தெடுக்கும் அளவுக்கு சசிகலாவை நம்பினார் ஜெயலலிதா. அந்த சுதாகரனுக்கு ஜெயலலிதா செய்துவைத்த ஆடம்பரத் திருமணம், உலகில் மிகவும் செலவழித்து நடத்தப்பட்ட திருமணமாக கின்னஸ் சாதனை படைத்தது.

ஆனால், ஜெயலலிதா தனது முதலாவது ஆட்சிக் காலத்தின் இறுதியில் மக்களால் மிகவும் வெறுக்கப்பட்டதற்கு சசிகலாவின் உறவினர்கள் செய்ததாக கூறப்படும் முறைகேடுகளும் ஒரு காரணமாக அமைந்தன.

போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா

இதற்குப் பிறகு, ஜெயலலிதாவும் சசிகலாவும் இணைந்தே சிறைக்குப் போக நேர்ந்தது. பிறகு சிறிது காலத்திற்கு அவரை ஒதுக்கிவைக்கவும் செய்தார் ஜெயலலிதா. ஆனால், இது வெகுநாட்கள் நீடிக்கவில்லை. மீண்டும் போயஸ் தோட்ட இல்லத்தில் தலைகாட்ட ஆரம்பித்தார் சசிகலா.

அதற்குப் பிறகு, 2011 வரை போயஸ் தோட்ட இல்லத்திலும் அ.தி.மு.க என்ற கட்சியிலும் சசிகலாவின் அனுமதியின்றி எதுவும் நடக்காது என்ற நிலை ஏற்பட்டது.

2011-இல், தனக்கு எதிராக சசிகலா செயல்படுவதாகக் கருதிய ஜெயலலிதா, அவரை தனது போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து வெளியேற்றினார். ஆனால், சில மாதங்களிலேயே சசிகலாவின் மன்னிப்புக் கடிதத்தை ஏற்றுக்கொண்டு மீண்டும் அவரை போயஸ் தோட்டத்திற்குள் அனுமதித்தார் ஜெயலலிதா. அதற்குப் பிறகு, ஜெயலலிதா காலமாகவும் வரை, அவரை நிழலாகத் தொடர்ந்தார் சசிகலா.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா

குடும்பத்தலைவி முதல் பொது செயலாளர் வரை - சசிகலாவின் வாழ்க்கை

 

2014-ஆம் ஆண்டில் சொத்துக் குவிப்பு வழக்கில், இருவருமே ஒன்றாக சிறைசெல்ல நேர்ந்தது.

ஜெயலலிதாவின் நிழலாகவே இருந்தாலும், கட்சியின் முன்னணியில் ஒருபோதும் சசிகலா தென்பட்டதில்லை. ஆனால், கட்சியின் முக்கியமான தருணங்களில் முக்கியமான முடிவுகளை எடுப்பவராக சசிகலாவே இருந்தார்.

2002-இல் ஜெயலலிதா முதல்வராக பதவிவகிக்க முடியாமல் போனபோது, ஓ. பன்னீர்செல்வம் அந்த இடத்திற்கு முன்னிறுத்தப்பட்டது சசிகலாவின் ஆலோசனையின்பேரில்தான். அதற்குப் பிந்தைய தேர்தல்களில் எல்லாம் வேட்பாளர்களைத் தேர்வுசெய்யும்போது அதில் சசிகலாவின் பங்கும் இருக்கும்.

ஜெயலலிதாவால் உடன்பிறவா சகோதரி என்று அழைக்கப்பட்ட சசிகலா, கட்சியின் அனைத்து மட்டங்களிலும் செல்வாக்கு செலுத்தினார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை விடுவித்துவிட்டாலும், இது தொடர்பான மேல் முறையீட்டு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் முடிவடைந்து, இதன் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. . அந்தத் தீர்ப்பு, சசிகலாவின் எதிர்கால அரசியல்வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமையக்கூடும்.

இருந்தாலும் இப்போதைக்கு சசிகலா உச்சத்தை அடைந்திருக்கிறார். கட்சியைக் கைப்பற்றியிருக்கும் சசிகலா, முதல்வர் பதவி குறித்து என்ன முடிவுசெய்திருக்கிறார் என்பது விரைவில் தெரிய வரலாம்.

 

ஜெயலலிதா மறைந்த பிறகு அவரது உடலைச் சுற்றி நின்ற சசிகலாவின் உறவினர்கள்

 ஜெயலலிதா மறைந்த பிறகு அவரது உடலைச் சுற்றி நின்ற சசிகலாவின் உறவினர்கள்

ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட சசிகலாவின் உறவினர்கள், அவர் மறைந்த பிறகு அவரது உடலைச் சுற்றி நின்றது கடுமையான விமர்சனங்களுக்குள்ளானது. சசிகலா தற்போது கட்சியின் உயரிய பதவியை அடைந்திருக்கும் நிலையில், அவரது சொந்தங்கள் அதற்கான பலனை அடைய நினைக்கக்கூடும்.

தவிர, கட்சியின் நிர்வாகிகள் இப்போது சசிகலாவை ஏற்றுக்கொண்டிருப்பதாகத் தெரிந்தாலும் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் என்ன நினைக்கிறார்கள், அ.தி.மு.கவுக்கு வாக்களித்த சாதாரண வாக்காளர்கள் சசிகலா தலைமையிலான அ.தி.மு.கவையும் ஆதரிப்பார்களா என்பதெல்லாம் வருங்காலத்தில் விடை தெரிய வேண்டிய கேள்விகள்.

http://www.bbc.com/tamil/india-38456702

  • தொடங்கியவர்

சசிகலா பதவியேற்பு எப்போது?- முதல்வர் ஓபிஎஸ் பதில்

 

sasikala_12352.jpg

அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலா விரைவில் கட்சியின் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வி.கே.சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சசிகலாவை போயஸ் கார்டனில் சந்தித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தீர்மான நகலை ஒப்படைத்தார். தீர்மான நகலை பெற்றுக்கொண்ட சசிகலா, அதிமுக பொது செயலாளராக பொறுப்பேற்க ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ’இன்று முதல் அதிமுகவின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாதான். அதிமுக உறுப்பினர்கள் சம்மதத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் சசிகலா இன்றே பொதுச் செயலாளராகிறார். விரையில் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்து கட்சியின் பொறுப்பை சசிகலா ஏற்றுக்கொள்வார் எனக் கூறினார். 

http://www.vikatan.com/news/tamilnadu/76241-when-will-sasikala-take-oath-as-admk-general-secretary.art

  • கருத்துக்கள உறவுகள்

ஓடு மீன் ஓடி உறு மீன் பிடிக்கும் பொறுமை சசிகலாவுக்கு இருந்ததுபோல் வை கோவுக்கு இல்லாமல் போனது துரதிஷ்டம்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நந்தன் said:

ஓடு மீன் ஓடி உறு மீன் பிடிக்கும் பொறுமை சசிகலாவுக்கு இருந்ததுபோல் வை கோவுக்கு இல்லாமல் போனது துரதிஷ்டம்

வை.கோவின் தன்னம்பிக்கை இன்மை அவரை எங்கேயும் கொண்டு செல்லாது.

  • கருத்துக்கள உறவுகள்

பண நாயகம் ...ஜனநாயகத்தை விடவும் அதிக பலம் மிக்கது என்று மீண்டுமொரு முறை நிரூபிக்கப் பட்டுள்ளது!

நூற்றி எண்பது பாகைகளுக்கும் அதிகமாகக் குனியத் தமிழனால் மட்டும் தான் முடியும்!

  • தொடங்கியவர்

அ.தி.மு.க. மக்களே...ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு...சாத்தியமா? #NobelFactCheck

 

நோபல் ஜெயலலிதா

ன்று நடந்த அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில், 'எல்லோருக்கும் எப்பொழுதும் சத்தான உணவு என்பது சாத்தியமான லட்சியமே என்பதை மெய்ப்பித்த முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு, மானுட சேவைக்கான பிலிப்பின்ஸ் நாட்டின் ரமோன் மக்சையாய் விருது மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட ஏற்பாடுகளை செய்தல்' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்பது, அவர்களின் தொண்டர்களின் ஆசையாக இருக்கலாம். ஆனால் நோபல் பரிசு யாருக்கு வழங்கப்படும் தெரியுமா?

farmersday_10259_12562.png

ஆல்பிரட் நோபலின் நினைவாக நோபல் பரிசானது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் என 6 பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகின்றன. 

2016-ம் ஆண்டிற்கான மருத்துவத் துறைக்கான நோபல் பரிசானது ஜப்பான் நாட்டை சேர்ந்த யோஷினோரி ஓஷுமிக்கு வழங்கப்பட்டது. ஆட்டோபேஜி(Autophagy) எனப்படும் செல் தொடர்பான நிகழ்வின் செயல்பாடுகளை துல்லியமாக கண்டறிந்ததற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. ஆட்டோபேஜி என்றால் தன்னைத்தானே உண்ணுதல் என்று பெயர். யோஷினோரி ஓஷூமி ஜப்பான் நாட்டில் இருந்து நோபல் பரிசைப் பெற்ற 23-வது நபர். 

இயற்பியலுக்கான நோபல் பரிசு டேவிட் தௌலஸ், டங்கன் ஹால்டனே மற்றும் மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ் ஆகிய மூன்று பேருக்கு வழங்கப்பட்டது. பரிசுத் தொகையின் பாதித் தொகை டேவிட் தௌலஸ்க்கும், மீதித் தொகை மற்ற இருவருக்கும் பிரித்துத் தரப்பட்டது. இந்த மூன்று பேருமே, பொருட்களின் வடிவ மாற்றங்கள் குறித்த, ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள். இந்த ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசு, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த, ஜான் பியர் சாவேஜ், அமெரிக்காவைச் சேர்ந்த , சர்.ஜெ.ஃபிரேசர் ஸ்டோடர்ட் மற்றும் நெதர்லாந்தை சேர்ந்த பெர்னார்ட் ஃபெரிங்கா ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டது. 

அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பிய அதிபர் ஜூவான் மேனுவல் சான்டோஸ்-க்கும் வழங்கப்பட்டது. தற்போது ஜெயலலிதாவுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றுதான், தீர்மானமும் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

நோபல்

1901 முதல் 2016 வரைக்கும் இதுவரை அமைதிக்காக, 97 நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 130 பேர் இதனைப் பெற்றுள்ளனர். இவற்றில் 104 பரிசுகள் தனி நபர்களுக்கும், 26 பரிசுகள் அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. யாருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்பதைப் பற்றி நார்வே நோபல் கமிட்டிதான் முடிவெடுக்கும். இதுவரை 16 பெண்கள் அமைதிக்கான நோபல் பரிசினை பெற்றுள்ளார்கள். 1905-ம் ஆண்டுதான், அமைதிக்கான நோபல் பரிசு முதன்முதலாக பெண்ணிற்கு வழங்கப்பட்டது. இதுவரை நோபல் பரிசு பெற்றவர்களிலேயே குறைந்த வயதுடையவர் மலாலா. இவர் தனது 17 வயதில், 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்றார்.  மொத்தமாகப் பார்த்தால் 1901-ம் ஆண்டு முதல் 2016 வரைக்கும், 579 நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அனைத்து துறைகளையும் சேர்த்து, 911 பேர் பரிசினைப் பெற்றுள்ளார்கள். இதில் 885 தனி நபர்களும், 26 அமைப்புகளும் அடங்கும். அனைத்து துறைகளையும் சேர்த்து, நோபல் பரிசினைப் பெற்ற பெண்களின் எண்ணிக்கை இதுவரை 49. 

சரி..ஜெயலலிதாவை பரிந்துரை செய்ய முடியுமா?

alfred-nobel_12229.jpg

முடியாது. 1974-ம் ஆண்டு, மாற்றியமைக்கப்பட்ட நோபல் விதிகளின் படி, இறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது கிடையாது. 1974-ம் ஆண்டிற்கு முன்பும், இருவருக்கு மட்டுமே, இறந்த பின்பு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை நோபல் பரிசானது அறிவிக்கப்பட்ட பின்பு, ஒருவர் மரணம் அடைந்தால் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படும். ஆனால் 1974-ம் ஆண்டிற்கு முன்பு வரை ஒருவர் நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்ட பின்பு இறந்தால் அவருக்கு நோபல் பரிசு வழங்கலாம் என விதி இருந்தது. அதன்படிதான் மேற்கண்ட இருவரும் நோபல் பரிசு பெற்றனர். 

no_13374.JPG

2011-ம் ஆண்டு மருத்துவத்திற்காக நோபல் பரிசு பெற்ற ரால்ப் ஸ்டெய்ன்மேன், விருது அறிவிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே உயிரிழந்து விட்டார். அப்போதும் இந்த விதி நோபல் கமிட்டி இடையே விவாதங்களை கிளப்பியது. பின்பு இதுபற்றி ஆய்வு செய்த, நோபல் கமிட்டி அவருக்கு நோபல் பரிசு வழங்குவதாக அறிவித்தது. ஆக, மரணித்த ஒருவரை நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கவே முடியாது என்பதுதான் நோபல் விதி. 

இந்த விதிகளை யாரால் மாற்ற முடியும்?

http://www.vikatan.com/news/tamilnadu/76250-is-there-any-chances-for-jayalalithaa-to-get-a-noble-prize.art

  • தொடங்கியவர்

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம்

 

 
 
சசிகலாவிடம் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகலை அளிக்கிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். | படம்: எல்.சீனிவாசன்.
சசிகலாவிடம் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகலை அளிக்கிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். | படம்: எல்.சீனிவாசன்.
 
 

அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை நியமித்து அக்கட்சியின் பொதுக்குழு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த பொறுப்பேற்க, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் விடுத்த அழைப்பை ஏற்று, அதிமுக பொதுச் செயலாளராக நியமனம் ஆவதற்கு சசிகலா ஒப்புக் கொண்டார்.

அதிமுக பொதுக்குழுவிலும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணியளவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் கூடிய இக்கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வரும் அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம், "கழக சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டு கழக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டிருக்கிறார். அதற்கான தீர்மானம் பொதுக்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்தத் தீர்மானத்தை சசிகலாவிடம் தெரிவித்து அவரது சம்மதத்தை பெறுவதற்காக செல்கிறோம்" என்றார் ஓபிஎஸ்.

இதையடுத்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் போயஸ் கார்டன் சென்றனர்.

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போயஸ் கார்டன் இல்லம் சென்றடைந்தார். அங்கு அவர் சசிகலாவிடம் பொதுக்குழு தீர்மான நகலை நேரில் வழங்கினார். அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ஏற்குமாறும் அழைப்பு விடுத்தார்.

தீர்மான நகலைப் பெற்றுக் கொண்ட சசிகலா, ஆசி பெறும்விதமாக அந்த நகலை ஜெயலலிதா உருவப்படம் முன்னர் வைத்தார். அப்போது அவர் கண்கலங்கினார்.

அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்க சசிகலா சம்மதம் தெரிவித்துள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலாவிடம் பொதுக்குழு தீர்மான நகலை வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

முன்னதாக, அதிமுக தலைமைப் பொறுப்பு வி.கே.சசிகலாவிடம் ஒப்படைக்கப்படுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் > சசிகலாவிடம் கட்சித் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்து அதிமுக பொதுக்குழு தீர்மானம்

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்களில், சசிகலாவின் தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்ற உறுதி ஏற்கப்பட்டது.

அதிமுகவை சசிகலா வழிநடத்துவது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், 'ஜெயலலிதா மறைந்த நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் காப்பாற்றவும், வழி நடத்தவும், அஇஅதிமுக பொதுச் செயலாளர் நியமனத்துக்கு பொதுக்குழுவின் ஒப்புதல்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளராகவும் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். இதையடுத்து, புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.

அதிமுக பொதுச் செயலாளர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை பொதுச் செயலாளராக பொறுப்பேற்கும்படி அமைச்சர்களும் அதிமுக நிர்வாகிகளும் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக தீர்மானங்களை நிறைவேற்றி சசிகலாவிடம் அளித்துள்ளனர்.

பொதுச் செயலாளர் மட்டுமின்றி முதல்வராகவும் சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என தற்போது சிலர் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். இந்தப் பதவிகளை ஏற்பது தொடர்பாக சசிகலா, அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/tamilnadu/அதிமுக-பொதுச்-செயலாளராக-சசிகலா-நியமனம்/article9448924.ece?homepage=true

  • தொடங்கியவர்

சசிகலாவின் அடுத்த மூவ் இதுதானா.?!

 

sasikala-_poes_garden_13365.jpg

சசிகலா, பொதுச் செயலாளராவதில்  எந்தவித சட்ட சிக்கல்களும் இல்லை. கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா ஆன பிறகு வளர்ச்சிக்காக கட்சியில் அதிரடி மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கட்சியின் மூத்த நிர்வாகி கூறினார்.

சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவிடம் கட்சியின் தலைமை பொறுப்பு ஒப்படைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மான நகலை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், எடப்பாடி பழனிச்சாமி, உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் வானகரத்திலிருந்து கார்டனுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் சசிகலாவை சந்தித்து பேசினர்.

சசிகலாவிடம் தலைமை பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட தீர்மானம் நிறைவேற்றிய அடுத்த சில நிமிடங்களிலேயே அமைச்சர் பெஞ்சமின் தயாராக வைத்திருந்த பேனரை அங்கு வைத்தார். இதனால் ஜெயலலிதாவின் பேனர் மறைந்தது. இந்த பேனரையும் அமைச்சர் பெஞ்சமினே வைத்திருந்தார்.

இதுகுறித்து கார்டன் வட்டாரங்கள் கூறுகையில், "தீர்மானத்தின் நகலைப் பெற்ற சசிகலா, கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் பேசினார். அப்போது அவரது முகம், சோகமாகவே இருந்தது. 'அக்கா இருந்த இடத்தில் நானா' என்று அவர் கேட்ட போது, கட்சியின் மூத்த நிர்வாகிகள் 'உங்களைத் தவிர வேறுயாரும் இல்லை' என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அறைக்குள் சென்று இருக்கிறார் சசிகலா. இதனால் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சசிகலாவின் பதிலுக்காக கார்டனிலேயே காத்திருந்தனர். சில நிமிடங்களிலேயே அறையில் இருந்து சசிகலா வெளியே வந்தார். அப்போது, அங்கு வைத்திருந்த ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியபோது அவர் கண்ணீர் விட்டு அழுதார். பின்னர், தீர்மான நகலை ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். இதனை சசிகலா பெற்றுக் கொண்டு, பொதுச் செயலாளராக சம்மதம் தெரிவித்தார்" என்றனர்.

கூட்டத்தில் சசிகலாவின் பெயரைச் சொன்னவுடன் கூட்ட அரங்கிலிருந்து சில உறுப்பினர்கள் வெளியேறி உள்ளனர். இதனால் அவர்களுக்கு சசிகலா, தலைமை ஏற்பதை விரும்பவில்லை என்பது தெரிகிறது. வெளியே வந்த அவர்கள் உடனடியாக கிளம்பி விட்டனர். பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் முழுமையாக பங்கேற்கவில்லையாம். அதுகுறித்து கட்சியினரிடம் கேட்ட போது வரமுடியாதவர்கள் போன் மூலம் சசிகலா தலைமை ஏற்க ஆதரவு தெரிவித்து விட்டதாக கூறினார்கள்.

சசிகலா, பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டதை மறைமுகமாக கட்சியின் தலைமை பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. சட்ட ரீதியான செயல்பாடுகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு அவர் பொதுச் செயலாளராக பொறுப்பு ஏற்பார். மேலும் இந்த தகவல் தேர்தல் ஆணையத்துக்கும் தெரிவிக்கப்படும்.

இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், "சசிகலா, பொதுச் செயலாளராவதில் எந்தவித சட்ட சிக்கல்களும் இல்லை. அவர் பொதுச் செயலாளரான பிறகும் உடனடியாக முதல்வராவார் என்று சொல்வதிலும் உண்மையில்லை. சசிகலா, கட்சியின் பொதுச் செயலாளரான பிறகு வளர்ச்சிக்காக கட்சியில் அதிரடி மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வாய்ப்புள்ளது" என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/76248-sources-reveal-sasikalas-next-move-after-general-secretary-meeting.art

  • கருத்துக்கள உறவுகள்

ஜே - சசி காலக்கண்ணாடி..

- அதிமுக புள்ளிகளும், அரசு அதிகாரிகளும் ஊழல் செய்வதை கண்டும் காணாமல் ஊக்குவித்தவர் ஜே. அந்த ஆதாரங்களை சேர்த்து வைத்துக்கொண்டவர் ஜே.. இதன்மூலம் அவர்களை காலில் விழச் செய்தார்.

- காலில் விழ வைத்த ஜேவை கீழே தள்ளி விழுத்தியவர் சசி.. tw_blush: ஆஸ்பத்திரியில் சேர்த்து எம்பாம் பண்ணி நேரத்தை எடுத்துக்கொண்டார். அந்த நேரத்தைப் பயன்படுத்தி ஜேவின் கோப்புகளை வசப்படுத்தினார்கள் மன்னார்குடி குரூப்.

- இதையறிந்த டில்லி குரூப் சசியின் தலையில் கைவைத்து ஆசீர்வாதம் வழங்குதல்.. எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களை அனுப்பி தகவல் சேகரித்தல்..

- தங்களது தகவல்கள் சசியிடம் போனதை அறிந்த அதிமுக புள்ளிகள் சசியின் காலில் விழுதல்..

- டில்லி குரூப் தனது அதிகாரிகளை அனுப்பி சேகர் ரெட்டி, ராம மோகன் ராவ் என ஊழல் திமிங்கிலங்களைப் பிடித்தல்.. ராம மோகன் ராவின் அலுவலகத்தில் இருந்து தமிழக அரசுத்துறை தகவல்களை எடுத்துச் செல்லுதல்..

- சசிக்கு பொதுச்செயலாளர் பதவி..

- 2019 தேர்தலில் பாஜக + அதிமுக கூட்டணி.. tw_dizzy:

  • தொடங்கியவர்

சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தது ஏன்?- அதிமுக விளக்கம்

 

PinExt.png
 
 
அதிமுக பொதுக்குழு தீர்மான நகல்களைப் பெற்றுக் கொண்ட பின், போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதா படத்துக்கு மரியாதை செய்தார் சசிகலா.
அதிமுக பொதுக்குழு தீர்மான நகல்களைப் பெற்றுக் கொண்ட பின், போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதா படத்துக்கு மரியாதை செய்தார் சசிகலா.
 
 

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணங்களை அக்கட்சி தனது பொதுக்குழு தீர்மானங்கள் மூலம் விளக்கியுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை நியமித்து அக்கட்சியின் பொதுக்குழு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றியது. இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் விடுத்த அழைப்பை சசிகலா ஏற்றுக்கொண்டு அதிமுக பொதுச் செயலாளராக நியமனம் ஆவதற்கு சம்மந்தம் தெரிவித்தார்.

முன்னதாக, சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக நியமித்து, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம்:

"அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஒப்பற்ற தலைவி ஜெயலலிதாவை இழந்து கட்சி கலங்கி நிற்கிறது. அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வகுத்து அளித்த கொள்கைகளின் பாதையில் அதிமுகவை இனி யார் வழிநடத்திச் செல்வது என்ற நிலை ஏற்பட்டபோது, ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அனைவரது நெஞ்சங்களிலும் சசிகலாவின் பெயர்தான் எழுந்தது.

எனவே, அதிமுகவை வழிநடத்திச் செல்லத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது; கொள்கைகளை வகுப்பது; கட்சியின் அன்றாட செலவுகளுக்கு வங்கிக் கணக்குகளை இயக்க பொருளாளருக்கு அதிகாரம் வழங்குவது மற்றும் அனைத்து செயல்பாடுகளையும் ஏற்று நடத்த அதிகாரம் வழங்குவது ஆகிய பணிகளுக்காக கட்சிப் பொதுச் செயலாளர் நியமிக்கப்படுவது மிகவும் இன்றியமையாத பணியாக தற்போது இருக்கிறது. அதனை முடிவு செய்யும் அதிகாரம் கழக சட்ட திட்ட விதி - 19, பிரிவு - 8ல் பொதுக்குழுவுக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.

கழக சட்ட திட்ட விதி - 20, பிரிவு - 2 :பொதுச் செயலாளர் தமிழ்நாட்டில் உள்ள கழகக் கிளைகளின் அடிப்படை உறுப்பினர்களாலும், புதுச்சேரி - ஆந்திரம் - கர்நாடகம் - கேரளம் மகாராஷ்டிரா - புதுடெல்லி - அந்தமான் போன்ற மாநிலக் கழகங்களில் அடங்கிய கிளைக் கழகங்களின் உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கழக சட்ட திட்ட விதியின்படி, அதிமுகவின் பொதுச் செயலாளரை, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

அவ்வாறு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை கழக உறுப்பினர்களாலும், பொதுக்குழு உறுப்பினர்களாலும், தலைமைக் கழக நிர்வாகிகளாலும், மாவட்டக் கழகச் செயலாளர்களாலும், கழகத்தின் அனைத்து அமைப்புகளாலும், அதிமுகவை வழி நடத்தத் தகுதி படைத்தவர் என ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கும் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியும் 'சின்னம்மா' என்று நம் அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவரும், ஜெயலலிதா அவர்களுடன் 33 வருடங்கள் வாழ்ந்து அவரை தன் கண் இமை போல் பாதுகாத்து, அவரது நிர்வாகத் திறமைகளை அருகில் இருந்து கற்றுக் கொண்ட, நாம், சசிகலாவையே அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பணியாற்ற உகந்தவர் என்று இந்தப் பொதுக்குழு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது.

எம்.ஜி.ஆர். 24.12.1987 அன்று மறைந்ததைத் தொடர்ந்து, அதிமுகவுக்கு ஏற்பட்ட சோதனைகளால் கட்சி பிளவுபட்டபோது, அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க ஜெயலலிதாவுக்கு சசிகலா உறுதுணையாக இருந்து, உயிரை பணயம் வைத்துப் பாடுபட்டார். கட்சி இரண்டுபட்டதால் முடக்கப்பட்ட 'இரட்டை இலை' சின்னத்தை மீட்டெடுக்கும் முயற்சியிலும் ஜெயலலிதாவுக்கு சசிகலா உற்ற துணையாக இருந்தார்.

ஜெயலலிதாவை கொலை செய்திட திமுக-வினர் நடத்திய தாக்குதலில், ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலா முகத்திலும், கண்ணிலும் கொடுங் காயங்கள் ஏற்பட்டு இறை அருளால் உயிர் தப்பினார்.

1996-ஆம் ஆண்டு ஜெயலலிதாவை பழிவாங்க அப்போதைய திமுக ஆட்சியாளர்கள் தொடர்ந்த பொய் வழக்குகளில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, சசிகலா 11 மாதம் சிறை வைக்கப்பட்டார். ஜெயலலிதாவுக்கு எதிராக சாட்சி சொல்ல வற்புறுத்தி பல்வேறு துன்பங்களை கட்சியின் அரசியல் எதிரிகள் அளித்த போதும், ஜெயலலிதாவுக்கு மட்டுமே விசுவாசமாக இருந்து, அந்தத் துன்பங்களை எல்லாம் தாங்கிக் கொண்டவர் சசிகலா.

ஜெயலலிதாவே பகிரங்கமாக 'எனக்காக சசிகலா மிகுந்த சிரமங்களை அனுபவித்திருக்கிறார். என்னுடன் பிறக்காத சகோதரி அவர். என் அம்மாவின் இடத்தை என் வாழ்வில் நிரப்பிய பெண் அவர்' என்று பெருமையுடன் பல ஆண்டுகளுக்கு முன்பே பத்திரிகை பேட்டிகளிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் குறிப்பிட்டிருக்கிறார்.

அத்தகைய போற்றுதலுக்குரிய பங்களிப்பினை அதிமுக வளர்ச்சிக்கு வழங்கியவர் சசிகலா என்பது கட்சியினர் அனைவரும் நன்கு அறிந்த உண்மை.

எனவே, கழக சட்ட திட்ட விதி - 20, பிரிவு - 2ல் கூறப்பட்டுள்ளபடி, கழகப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படும் வரை, சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக நியமித்து இந்தப் பொதுக்குழு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது.

கட்சிப் பொதுச் செயலாளருக்கு கழக விதிகள் தரும் அனைத்து அதிகாரங்களையும் சசிகலா அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் பெற்று கழக நிர்வாகத்தை நடத்தி வர இந்தப் பொதுக்குழு ஒருமனதாக அங்கீகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றுகிறது" என்று அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் தம்பிதுரை உள்ளிட்டோர் இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தனர்.

சசிகலா தலைமையின் கீழ்...

சசிகலா தொடர்பாக 'சசிகலா தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்ற உறுதி ஏற்றல்' என்று தலைப்பில் நிறைவேற்றப்பட்ட அதிமுக தீர்மானத்தின் விவரம்:

அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அம்மா ஆகியோரது தன்னலமற்ற அயராத உழைப்பால், அறிவால், ஆற்றலால், தியாகத்தால் உருவான இயக்கம் அதிமுக. தமிழ்நாட்டின் உரிமைகளை நிலை நாட்டவும், உலகெங்கும் வாழுகின்ற தமிழர்களுக்கு உறுதுணையாய் இருக்கவும், தமிழ்நாட்டில் சமூக நீதி காக்கவும், ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் எல்லோருக்கும் பயன்படும் வளர்ச்சியை அடைந்திட வேண்டும் என்ற லட்சியத்தோடு அதிமுகவின் அரசியல் பயணம் நடைபெற்று வருகிறது.

இந்த ஒளி விளக்கு அணையா விளக்காக காலமெல்லாம் ஒளிரும் வண்ணம் அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவரும் கருத்தாகப் பணியாற்றிட வேண்டும். அதிமுகவை வழி நடத்தி வந்த ஜெயலலிதா நம்மிடையே இல்லாத இந்தச் சூழலில், கழகத்தின் எதிர்காலத்தை பொறுப்பும், அக்கறையும், திறமையும், உழைப்பும், அறிவும், அனுபவமும் கொண்ட ஒருவர் கையில் ஒப்படைப்பது மிக, மிக இன்றியமையாதது.

எனவே தான், கடந்த 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவோடு சேர்ந்து கழகப் பணிகளை ஆற்றுவதில் அனுபவம் பெற்று கழகத் தொண்டர்களை ஜெயலலிதா அறிந்து வைத்திருந்ததைப் போல தானும் அறிந்து வைத்திருக்கும் சசிகலாவிடம் கழகத்தின் தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.

அதிமுக வரலாற்றில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த நேரத்தில், தீய சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு இடம் தராமல் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கட்டுக்கோப்போடும், அதிமுக இதுவரை நமக்கு அளித்திருக்கும் அனைத்துப் பெருமைகளுக்கும், அங்கீகாரங்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக தலைமைக்கு விசுவாசத்தோடும் பணியாற்றிட இந்தப் பொதுக்குழு உறுதி ஏற்கிறது' என்று அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

http://tamil.thehindu.com/tamilnadu/சசிகலாவை-பொதுச்-செயலாளராக-தேர்ந்தெடுத்தது-ஏன்-அதிமுக-விளக்கம்/article9449297.ece?homepage=true

  • தொடங்கியவர்

 

சசிகலாவை வாழ்த்தும் பாஜக தலைவர்கள்!

 

sasikala-_jaya_anjali_1_17143.jpg

அதிமுக புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலா நடராஜனுக்கு பாஜக தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மான நகலை போயஸ்கார்டனில் இருந்த சசிகலாவிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்படைத்தார். இதனை பெற்றுக்கொண்டார் சசிகலா. அவர் விரைவில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்க உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனிடையே, சசிகலாவுக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தோற்றுவித்த கட்சி, மரியாதைக்குரிய ஜெயலலிதா உயிரை கொடுத்து வளர்த்த கட்சிக்கு இன்று புதிய பொதுச்செயலாளராக பொறுப்பேற்கிறார் சசிகலா நடராஜன் - வாழ்த்துகள்" என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/76282-bjp-leaders-praises-sasikala.art

  • தொடங்கியவர்

சசிகலாவைப் பற்றி இந்த 10 விஷயங்கள் உங்களுக்குத் தெரியுமா? #QuickRead

 

a5_12331.jpg

கேஸட் கடை விற்பனையாளராக இருந்து ஜெயலலிதாவுடன் நட்பு கொண்டு, அவருக்கு உற்ற தோழியாகி, பின்னர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி என அழைக்கப்பட்ட சசிகலா, இப்போது அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர். கட்சியிலும், ஆட்சியிலும் எந்த பொறுப்பும் இதுவரை வகிக்காமல் நேரடியாக பொதுச்செயலாளர் ஆனதன் மூலம் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளார் சசிகலா. அவரைப்பற்றிய 10 விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

 

  •  சசிகலா, ஜெயலலிதாவுக்கு அறிமுகமானது 1984ல். வீடியோ கடை நடத்தி வந்த சசிகலா, அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளரான ஜெயலலிதாவின் பிரசாரங்களை வீடியோவாக பதிவு செய்து கொடுக்க ஒப்பந்தமானார். அப்போது தான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

 

  •  தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு திரைப்பட கேசட்களை சசிகலா தரத்துவங்க இருவருக்கும் நட்பு அதிகரித்தது. ஜெயலலிதாவுக்கு அரசியல் ரீதியாக சோதனை நிறைந்த கால கட்டத்தில் துணையாக இருந்ததால், நெருக்கம் அதிகரித்து போயஸ் கார்டனிலேயே தங்கினார் சசிகலா.

a1_12597.jpg

 

  • யாரும் நெருங்க முடியாதவர் என சொல்லப்படும் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவராக, ஜெயலலிதாவின் நிழலாக வலம் வந்தவர் சசிகலா. தொழில் நிமித்தமாக சந்தித்துக் கொண்டாலும் உற்ற தோழியாகி, உடன் பிறவா சகோதரியாகி 30 ஆண்டுகளுக்கு மேல் ஜெயலலிதாவின் உடனிருந்தவர் சசிகலா. இருமுறை போயஸ் கார்ட்னை விட்டு வெளியேற்றப்பட்டாலும் அந்த பிரிவு சில மாதங்கள் கூட நீடிக்கவில்லை.

 

  • "நிபந்தனையற்ற அன்பு என்ற ஒன்று இருப்பதாகவே நான் கருதவில்லை. நிபந்தனையற்ற அன்பை நான் இதுவரை சந்தித்திருக்கவில்லை" என ஒரு பேட்டியில் சொன்ன ஜெயலலிதா, அதே பேட்டியின் இறுதியில், "என்னுடன் பிறக்காத சகோதரி சசிகலா. என் அம்மாவின் இடத்தை, நிரப்பிய பெண் அவர்" எனச்சொன்னார். அந்தளவு நெருக்கமானவர் சசிகலா

 

  •  ஜெயலலிதாவுடன் நெருக்கத்தால், சசிகலாவின் கணவர் நடராஜன் உள்ளிட்ட குடும்பத்தினர் பலரும் அ.தி.மு.க.வில் அதிகாரம் செலுத்தத் துவங்கினர். அரசியலிலும், பல்வேறு தொழில்களிலும் அவர் ஈடுபட்டனர். தனக்கு இணையாக ஒரு அரசை சசிகலாவின் குடும்பத்தினர் நடத்துவதாக புகார் சொல்லப்பட... 2001, 2011-ம் ஆண்டுகளில் இரு முறை கட்சியில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் சேர்க்கப்பட்டார் சசிகலா. சசிகலாவுடன் நீக்கப்பட்ட அவரது உறவினர்கள் யாரையும் ஜெயலலிதா சேர்த்துக்கொள்ளவில்லை.

a4_12137.jpg

  • சசிகலாவுடன் ஏற்பட்ட நெருக்கத்தால், சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மூன்றாவது மகன் சுதாகரனை வளர்ப்பு மகனாக தத்தெடுப்பதாக அறிவித்தார் ஜெயலலிதா. அவரின் திருமணத்தை ஜெயலலிதா பிரம்மாண்டமாக நடத்த அதுவே சர்ச்சையாகி... 1996-ம் ஆண்டு தேர்தல் தோல்விக்கு காரணமானது. தனக்கும், ஆட்சிக்கு கெட்டப்பெயர் கிடைக்க சசிகலா குடும்பத்தினரின் அதிகாரமே காரணம் என நினைத்த ஜெயலலிதா, சசிகலாவையும், உறவினர்களையும் வெளியேற்றினார். சுதாகரன் வளர்ப்பு மகன் என்ற அறிவிப்பையும் திரும்ப பெற்றதோடு, பின்னர் தனது ஆட்சியிலேயே போதை பொருள் வழக்கில் சுதாகரனை கைது செய்து சிறையிலும் அடைத்தார்.

 

  • ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுடன் சசிகலா, அவரது உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோரும் குற்றஞ்சாட்டப்பட்டனர். இந்த வழக்கில் ஜெயலலிதாவுடன் சசிகலா உள்ளிட்டோருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கிலும், டான்சி நில பேர ஊழல் வழக்கிலும் சிறை தண்டனை அனுபவித்தவர் சசிகலா.

 

a6_12334.jpg

  • ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமாக இருந்தாலும், கட்சியிலோ, ஆட்சியிலோ சசிகலாவுக்கு பொறுப்பு ஏதும் வழங்கப்படவில்லை. கட்சியிலோ, ஆட்சியிலோ அவர் நேரடியாக அதிகாரம் செலுத்தும் அளவுக்கு பொறுப்பு இல்லாமலே இருந்தார்.

 

  • இதுவரை சசிகலா எந்த மேடையிலும் பேசியதில்லை. பேட்டி கொடுத்ததில்லை. ஒரே ஒரு முறை அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 2011-ம் ஆண்டு ஜெயலலிதா போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றிய பின்னர், 2012-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு வருத்தம் தெரிவித்து கடிதமும், அதையே பத்திரிகைகளுக்கு அறிக்கையாகவும் வெளியிட்டார் சசிகலா.

 

  • சரியாக சொல்ல வேண்டும் என்றால் சசிகலாவின் குரலை கூட மக்கள் கேட்டதில்லை. சொத்துக்குவிப்பு வழக்கு, போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றம், குடும்ப ஆதிக்க புகார்கள் துவங்கி ஜெயலலிதா மரணம் வரை பல பிரச்னைகளில் அவர் பெயர் கடுமையாக பேசப்பட்டாலும், இதுவரை அவர் பொது இடத்தில் பேசியதில்லை. மீடியாக்களிடமும் கூட.

http://www.vikatan.com/news/coverstory/76242-you-should-know-10-facts-about-sasikala.art?artfrm=editor_choice

  • தொடங்கியவர்
 

31-ல் பொதுச்செயலாளராக பொறுப்பேற்கிறார் சசிகலா?

 

http---photolibraryw_22396.jpg

அதிமுக செயற்குழு, பொதுக்குழு இன்று நடந்தது. இதில் அக்கட்சி பொதுச்செயலாளராக சசிகலாவை நியமனம் செய்ய ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தீர்மான நகல் சசிகலாவிடம் வழங்கப்பட்டது.  இந்நிலையில் வருகின்ற 31-ம் தேதி சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்பார் என அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. அதன்படி, 31-ஆம் தேதி மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் இதற்கான விழா நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

http://www.vikatan.com/news/politics/76300-sasikala-likely-to-take-admk-genral-secretary-charge-on-31st.art

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

வை.கோவின் தன்னம்பிக்கை இன்மை அவரை எங்கேயும் கொண்டு செல்லாது.

தோழர்!  அனைத்திந்திய அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் பற்றிய தங்களின் மதிப்பீடு வருத்தமளிக்கிறது!!

8 hours ago, புங்கையூரன் said:

பண நாயகம் ...ஜனநாயகத்தை விடவும் அதிக பலம் மிக்கது என்று மீண்டுமொரு முறை நிரூபிக்கப் பட்டுள்ளது!

நூற்றி எண்பது பாகைகளுக்கும் அதிகமாகக் குனியத் தமிழனால் மட்டும் தான் முடியும்!

 

Image result for yoga images


தோழர்! சஷ்டாங்க யோகசனம் பயிலும் யோகிகள் குறித்தான தங்கள் பார்வை மிகவும் வேதனை அளிக்கிறது !!

Quote

அம்மாவை, சின்னம்மா வடிவில் கண்டு கழகப் பணிகளை தொடர்ந்து ஆற்றுவோம் என்று சூளுரைப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கால்களை தேடும்...
காலணிகள்..

டிஸ்கி :
இயற்கையை மாற்ற நினைத்தால் நாமதான் அரை லூசு! இல்லை முழு லூசு!!!

 

  • கருத்துக்கள உறவுகள்

சசிகலா பொதுச்செயலாளராக வராவிட்டால்  தான்  ஆச்சரியம்

  • தொடங்கியவர்

சசிகலா நியமனம்: அதிமுகவுக்கு சிக்கல் எப்போது வரும்? - ஞாநி பேட்டி

 
சசிகலா
 
 

அதிமுக பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தலைச் சந்திக்கும்போதுதான் அந்தக் கட்சி பிரச்சனையைச் சந்திக்க நேரிடும் என்று அரசியல் விமர்சகர் ஞாநி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா இடத்தில் சசிகலா ( புகைப்படத் தொகுப்பு)

இதுகுறித்து, பிபிசி தமிழுக்கு பேட்டியளித்த அவர், பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா தகுதியானவரா என்பதை அந்தக் கட்சியினர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

ஞாநி  ஞாநி

"அதிமுகவைப் பொருத்தவரை, ஜெயலலிதாவைத் தவிர அந்தக் கட்சிக்கு தலைவர் என்று வேறு யாரும் கிடையாது. அந்தச் சூழ்நிலையில், தேர்தலைச் சந்திக்கும்போது, ஜெயலலிதாவைப் போல மக்கள் செல்வாக்குள்ள, மக்களுக்குத் தெரிந்த முகம் இல்லை என்பது அவர்களுக்கு பெரிய பிரச்சனையாக இருக்கும். தேர்தலை சந்திக்கும் வரை பிரச்சனை இருக்காது," என்றார் ஞாநி.

"ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே, சசிகலாதான் நடைமுறையில் கட்சியையும் ஆட்சியையும் நடத்திக் கொண்டிருந்தார் என்று பல்வேறு பத்திரிகைச் செய்திகள் வந்திருக்கின்றன. ஏற்கெனவே, திரைக்குப் பின்னால் இருந்து கட்சியையும் ஆட்சியையும் இயக்கியவருக்கு தொடர்ந்து அதை பகிரங்கமாக செய்வதில் பெரிய சிக்கல் இருக்க முடியாது," என்று அவருக்கு உள்ள திறமை குறித்து கருத்துத் தெரிவித்தார்.

முதலமைச்சர் ஆவாரா?

சசிகலா முதலமைச்சர் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த ஞாநி, "பொதுச் செயலாளர் ஆவதற்கான வாய்ப்பு இருக்கும்போது, அடுத்த முதலமைச்சர் ஆவதற்கான வாய்ப்பும் இருக்கிறது என்றுதானே அர்த்தம்," என்றார்.

சசிகலா  

பொதுமக்கள் மீது என்னவிதமான தாக்கம் ஏற்படும் என்பது குறித்துக் கருத்து வெளியிட்ட ஞாநி, "பொதுமக்களைப் பொருத்தவரை, அதிமுக ஆட்சி நடந்து வந்த விதம் அவர்களுக்குத் தெரியும். ஜெயலலிதா இருந்தபோது, எப்படி திரைக்குப் பின்னால் இருந்து இயக்கிக் கொண்டிருந்தார், கட்சியும் ஆட்சியும் எப்படி செயல்பட்டுக் கொண்டிருந்தது என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதிலிருந்து வேறுபட்டதாக ஒன்று இருந்துவிடக்கூடிய வாய்ப்பில்லை," என்று தெரிவித்தார்.

பாஜகவுக்கு என்ன பலன்?

இந்த சூழ்நிலையை, மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி எப்படிப் பயன்படுத்திக் கொள்ளும் என்று கருத்துத் தெரிவித்த ஞாநி, "2019-ல் மக்களவைத் தேர்தல் வருகிறது. அப்போது அவர்களுக்குக் கூடுதலான எம்.பி.க்கள் தேவை. அதற்கு அவர்கள் கூட்டணிக்கு அதிமுகவை விரும்பலாம். எனவே, அதற்கேற்ப, அதிமுகவை நோக்கி அவர்கள் காய் நகர்த்தலாம் என எதிர்பார்க்கலாம், " என்றார் ஞாநி.

 

http://www.bbc.com/tamil/india-38461277

  • தொடங்கியவர்
தினகரனுக்கு சசிகலா முக்கியத்துவம்
மற்ற உறவினர்கள் அதிருப்தி
 
 
 

சசிகலா குடும்பத்தில், தற்போது, டி.டி.வி., தினகரனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவ தால், மற்ற உறவினர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

 

Tamil_News_large_167973020161230000158_318_219.jpg

ஜெயலலிதா மறைந்ததும், அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக, ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலை சுற்றி, சசிகலாவின் உறவினர்கள் நின்றனர். ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து

நீக்கப்பட்டு, வீட்டை விட்டு துரத்தி அடிக்கப் பட்ட, சசிகலா உறவினர்கள், உடலை சுற்றி நின்றது, அ.தி.மு.க.,வினரிடையே கடும் அதிர்ச்சியையும், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, உறவினர்களை 'கொஞ்ச நாட்கள் போயஸ் கார்டன் வர வேண்டாம்' என, சசிகலா உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, சசிகலா உடனிருப்பது யார் என்பதில், சசிகலா குடும்பத்தினர் இடையே, மோதல் உருவானது. குறிப்பாக, சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும், சகோதரி மகன், டி.டி.வி., தினகரனுக்கும் இடையே, அதிகாரப்போட்டி ஏற்பட்டது.

இந்நிலையில், அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா தேர்வு செய்யப் பட்டுள்ளார். இதற்கான தீர்மான நகலை, போயஸ் கார்டனில், சசிகலாவிடம், முதல்வர் பன்னீர்செல்வம் வழங்கினார். அப்போது, சசிகலாவுடன்,

 

டி.டி.வி.தினகரன், இளவரசியின் மகன் விவேக் ஆகியோர் இருந்தனர். இதன் மூலம், அவர்களுக்கு, சசிகலா முக்கியத்துவம் அளிப்பது உறுதியாகி உள்ளது. இது, சசிகலா வின் மற்ற உறவினர்களிடம், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1679730

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி எதிர்ப்பு + இரட்டை இலை + ஜெயலலிதா + பணபலம் என்று இருந்த அதிமுகவின் வாக்கு அரசியல் இன்று அதில் ஒரு பகுதியை (ஜெயலலிதா) இழந்துவிட்டது. கருணாநிதி எதிர்ப்பும் குறைந்து வருகிறது. இரட்டை இலை மற்றும் பணபலம் ஆகிய இரண்டும்தான் பிரகாசமாக உள்ளது. சேகர் ரெட்டி, ராமமோகனராவ் மீதான நடவடிக்கைகள் பணபலத்தையும் ஓரளவு சிதைக்கும்போல் உள்ளது. :11_blush:

  • தொடங்கியவர்

சசிகலா ஆதரவு தொண்டர்கள்: போயஸ் கார்டன் சுவாரசியங்கள்

 
p_3110258f.jpg
 
 
 

அஇஅதிமுக பொதுச் செயலாளராக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சட்டைப் பாக்கெட்டுகளில் வைக்கும் படங்கள், டி சர்ட்டுகள் ஆகியவற்றில் சசிகலாவின் புகைப்படத்தை அச்சிட்டு பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பான சில சுவாரசியப் படங்கள்

haha1_3110253a.jpg

தனியார் மாத இதழொன்றில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனக்கு அளிக்கப்பட்ட செங்கோலை, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு அளிப்பதாகச் சித்தரிக்கப்பட்ட காட்சியைக் காண்பிக்கும் அதிமுக தொண்டர்.

ha1_3110255a.jpg

எம்ஜிஆரின் படம் இடது மேல் ஓரத்திலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் பின்புறத்தில் இருக்க முன்னாள் சிரித்தபடி சசிகலாவின் படம்.

haha_3110256a.jpg

சசிகலா புகைப்படம் மற்றும் ஆதரவு வாசகங்கள் அச்சிட்ட டிசர்ட்டுகளை அணிந்துவந்த சின்னம்மா இளைஞர் நற்பணி மன்ற உறுப்பினர்கள்.

http://tamil.thehindu.com/tamilnadu/சசிகலா-ஆதரவு-தொண்டர்கள்-போயஸ்-கார்டன்-சுவாரசியங்கள்/article9449150.ece

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு தமிழ்நாடு இப்படியே தான் இருக்கும். அதன் தலைவிதி.... அரசியல் அறிவற்ற மக்களும் அவர்களின் சினிமா.. ஊழல் அரசியல்வாதிகளும். 

  • தொடங்கியவர்

5 ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா சசிகலாவை பொதுக்குழுவில் திட்டிய தினம் இன்று! #December30

 

சசிகலா

சசிகலாவை கட்சியைவிட்டு நீக்கப்பட்டபிறகு நடந்த 2011 பொதுக்குழுவில் சசிகலா குடும்பத்தினரை ஜெயலலிதா திட்டிய தினம் இன்று!

2011-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி ஜெயலலிதாவிடம் இருந்து அதிரடியாக அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில் சசிகலா மற்றும் அவரது உறவுகளை கட்சியில் இருந்து கட்டம் கட்டினார். ‘வி.கே.சசிகலா, எம்.நடராஜன், திவாகர், டி.டி.வி. தினகரன், வி.பாஸ்கரன், வி.என். சுதாகரன், டாக்டர் எஸ்.வெங்கடேஷ், எம்.ராமச்சந்திரன், ராவணன், அடையாறு மோகன், குலோத்துங்கன், ராஜராஜன், டி.வி.மகாதேவன், தங்கமணி, கலியபெருமாள், எம்.பழனிவேல், தோட்டக்கலை வி.கிருஷ்ணமூர்த்தி, சந்தான லட்சுமி சுந்தரவதனம், சுந்தரவதனம், வைஜெயந்தி மாலா ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள். அவர்களுடன் உடன்பிறப்புகள் யாரும் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது’ என சொல்லியிருந்தார் ஜெயலலிதா.

இந்த அறிவிப்பு வந்த 11-வது நாள் அதாவது 2011 டிசம்பர் 30-ம் தேதிதான் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூடியது. அந்த பொதுக்குழுவில் சசிகலா நீக்கம் பற்றிய பேச்சுகள் பரபரப்பை கிளப்பின. அதில் பேசிய ஜெயலலிதா ‘‘துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது’’ என்றார். அப்போது ஜெயலலிதா என்ன பேசினார். அந்த பேச்சு அப்படியே ரிப்பீட்டு!

Jayalalithaa_09041.png‘‘அரசியல்வாதிகளில் பலவிதம் உண்டு. கட்சிக்காரர்களிலும் பலவிதம் உண்டு. இவர்களில் சிலர் தவறு செய்கின்றனர். அதனால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியை விட்டு நீக்கப்படுகின்றனர். அப்படி நீக்கப்படும் ஒரு சிலர், இருப்பதை வைத்துக்கொண்டு அமைதியாக இருப்போம் என்ற முடிவுடன் அரசியலிலிருந்து ஒதுங்கிவிடுவர். ஒரு சிலர் வேறு கட்சியில் சேர்ந்துவிடலாம் என முடிவு எடுப்பர். தங்களது அரசியல் வாழ்க்கையைத் தொடர்வதற்காக இன்னொரு கட்சியில் சேர்வதில் நாம் தவறு காண முடியாது. ஆனால், இன்னும் சிலரோ கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பும், அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களை விடாப்பிடியாகத் தொடர்பு கொண்டு, ‘நாங்கள் மீண்டும் கட்சியில் இணைந்துவிடுவோம். எனவே எங்களைப் பகைத்துக்கொண்டால் நாங்கள் மீண்டும் கட்சியில் இணையும்போது உங்களைப் பழிவாங்கிவிடுவோம’ என்று மிரட்டுபவர்களாக இருப்பார்கள். இவ்வாறு கட்சித் தலைமையின் முடிவின்மீது சந்தேகம் ஏற்படுத்தும் விதத்தில் செயல்படும் துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது. அத்தகையவர்களின் பேச்சை நம்பி, அதன்படி செயல்படுகின்ற கட்சியினருக்கும் மன்னிப்பே கிடையாது’’ என முழுங்கினார் ஜெயலலிதா

இதெல்லாம் மூன்று மாதங்கள்தான் ‘‘அக்காவுக்குத் துரோகம் செய்த உறவுகளின் தொடர்புகளைத் துண்டித்து விட்டேன். அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை, உறவுமில்லை’ என சொன்ன சசிகலாவை திரும்ப சேர்த்துக் கொண்டார். ஆனால் அவர் உறவுகளை சேர்த்துக் கொள்ளவில்லை. அவர்கள் மீதான நடவடிகை தொடரும் என சொல்லியிருந்தார் ஜெயலலிதா. ‘‘அரசியல் ஆசை இல்லை’’ என்று சொன்ன சசிகலாதான் இப்போது பொதுச் செயலாளர். ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்கள்தான் சசிகலாவை சுற்றி இப்போது நின்று கொண்டிருக்கிறார்கள்.

http://www.vikatan.com/news/coverstory/76323-jaya-scold-sasikala-on-this-same-day-five-years-ago-december30.art

  • தொடங்கியவர்

எதிர்ப்பின்றி சசிகலாவிடம் வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவி

 
சசிகலாவிடம் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகலை அளிக்கிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். | படம்: எல்.சீனிவாசன்.
சசிகலாவிடம் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகலை அளிக்கிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். | படம்: எல்.சீனிவாசன்.
 
 

அதிமுகவில், தமிழக ஆட்சிப் பொறுப்பு ஓ.பன்னீர்செல்வத்திடம் அமைதியாக மாறியதைப்போல், கட்சி தலைமை மாற்றமும் எதிர்ப்பு ஏதுமின்றி, பொதுக்குழு தீர்மானம் மூலம், சசிகலாவிடம் சென்றுள்ளது.

தமிழக முதல்வராகவும், அதிமுக வின் பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். அன்றிரவே எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டு, சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். அவருடன் 31 அமைச்சர்களும் பதவியேற்றனர். ஆட்சி மாற்றம் என்பது மிகவும் எளிமையாக, அமைதியாக, எந்த குழப்பமுமின்றி நடந்தது. இதே போல், கட்சியின் பொதுச் செயலாளர் நியமனமும் குழப்பமின்றி நடந்து முடிந்துள்ளது.

முன்னதாக ஜெயலலிதா திடீர் மறைவால், அதிமுகவில் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டது. அப்போது முதல்வர் ஓ.பன்னீர்செல்வமே அந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஜெயலலிதாவின் தோழி சசிகலாவையே பொதுச்செயலாள ராக முன்னிறுத்தி அறிவித்தார். இதைத்தொடர்ந்து மற்ற அமைச்சர் கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர். அத்துடன், கட்சி யில் உள்ள 50 மாவட்டங்களிலும், பல்வேறு அணிகள் சார்பிலும் சசிகலாவை பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வலியுறுத்தி தீர் மானங்கள் நிறைவேற்றி அளித்து வந்தனர்.

ஒரு கட்டத்தில், பொதுச்செயலா ளரைத் தாண்டி, தமிழக முதல்வராக வும் சசிகலா பொறுப்பேற்க வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து தற்போது அதிமுக பொதுச் செயலா ளர் என்ற பொறுப்பு சசிகலாவிடம் நேற்று வழங்கப்பட்டுள்ளது. தற் போது தற்காலிகமாக வழங்கப் பட்டாலும், விரைவில் நிரந்தரமாக பொதுச்செயலாளராவது உறுதி யாகிவிட்டது. பொதுச் செயலாளர் பதவியை பொறுத்தவரை, அதிமுக வில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்பியை தவிர, வேறு யாரும் சசிகலா வருவதை எதிர்க்கவில்லை.

எந்த கருத்தையும் தெரிவிக் காமல் இருந்த மூத்த நிர்வாகியான பண்ருட்டி ராமச்சந்திரன் கூட, நேற்று பொதுக்குழு கூட்ட மேடையில் முன்வரிசையில் அமர்ந்ததுடன், சசிகலாவை அதிமுகவின் ‘கோ பைலட்’ என வர்ணித்து பேசினார்.

பொதுக்குழு கூட்டத்தில், எதிர்ப் பாளர்கள் யாரும் வருவதை அதிமுக நிர்வாகிகள் தவிர்த்த காரணத்தால், கட்சிப் பொறுப்பும் அதிமுகவில் சுமூகமாக, எவ்வித எதிர்ப்புமின்றி சசிகலாவிடம் வழங்கப்பட்டுள்ளது. அதை சசிகலாவும் ஏற்றுக் கொண்டார். அவர் பொதுச் செயலாளராகிவிட்டாலும், முறைப் படி அதிமுக அலுவலகத்தில் ஜனவரி 2-ல் பொறுப்பேற்றுக் கொள்வார் என அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.

சசிகலா முதல்வர்?

இதையடுத்து, சசிகலா எப்போது முதல்வராவார் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இது தொடர் பாக தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படை யாக எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், சக அமைச்சர்களான பி.தங்கமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சசிகலாதான் அடுத்த முதல்வராக வரவேண்டும் என தெரிவித்தனர். அப்போது முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருக்கும் போதே சசிகலாவை முன்னிறுத்துவதா என கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலளிக்கை யில், ‘‘ஒரு தொண்டன் தலைமைக்கு எவ்வாறு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதை எங்களுக்கு கற்றுக் கொடுத்ததே முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான்’’ என புகழ்ந்தார். இதன் மூலம், அவரும் சசிகலாவை முதல்வராக ஏற்றுக்கொள்கிறார் என்பது உறுதியானது.

அதிமுகவை பொறுத்தவரை கட்சித்தலைமையும், ஆட்சி பொறுப்பும் ஒருவரிடம் இருப்பதைத்தான், கட்சியினரும், அமைச்சர்களும் விரும்புவதால், விரைவில் ஆட்சிப்பொறுப்பும் சசிகலாவிடம் ஒப்படைக்கப்படும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், நேற்று முன்தினம் அதிமுக செய்தித்தொடர்பாளர் சி.பொன்னையன் பேசும்போது, ‘‘அதிமுகவில் அவர் முதல்வர், இவர் முதல்வர் என்ற பிரச்சினை எழவில்லை’’ என்ற புதிய தகவலையும் தெரிவித்துள்ளார். இது சற்றே குழப்பத்தை ஏற்படுத்தினாலும், சசிகலாவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மூலம் குழப்பங்களுக்கு விடைகிடைக்கும் என நம்பலாம்.

http://tamil.thehindu.com/tamilnadu/எதிர்ப்பின்றி-சசிகலாவிடம்-வந்த-அதிமுக-பொதுச்செயலாளர்-பதவி/article9449903.ece?homepage=true

  • தொடங்கியவர்

 

சசி முதல்வரானால் ஜெயா ஆவி பழி வாங்கியே தீரும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.