Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துருக்கியும்.... நானும்.  - தமிழ் சிறி. - 

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கிருபன் said:

இலண்டனில் துருக்கிகள் வாழும் இடத்திற்கு கிட்ட வசிக்கவில்லை என்பதால் சராசரி துருக்கிகளைப் பற்றி அவ்வளவு தெரியாது. ஜேர்மனியில் அவர்கள் எக்கச்சக்கம் என்பதால் பல விடயங்களை தமிழ் சிறி அண்ணா தொடர்ந்தும் சுவைபடத் தருவார் என்று எதிர்பார்க்கின்றேன்.

இங்கிலாந்துக்கு பாக்கியள் சிங்குகள் மாதிரி ஜேர்மனிக்கு துருக்கியள் வந்து வாய்ச்சிருக்கினம். 
துருக்கியை சேர்ந்தவர்கள் கெட்டவர்கள் அல்ல. ஆனால் அவர்களின் கொள்கைகள் மற்றவர்களை மட்டம் தட்டி தாங்களும் தங்கள் மதமும் உலகிலேயே சிறந்தது என........

ஆனால் தமிழர்கள் அப்படியல்ல.

  • Replies 143
  • Views 13.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, ஜீவன் சிவா said:

யாதும் ஊரே யாவரும் கேளிர் - கணியன் பூங்குன்றனார் // புறநானூறு

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

 

பொருள்

எல்லா ஊரும் எம் ஊர்
எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.

இதுதான் நான் சொல்ல வந்தது.

உந்த வியாக்கியானம் எல்லாம் உற்றார் உறவினர் குடும்பத்தாரோடை நிப்பாட்டிடோணும்.
உலக வர்த்தக/ஆதிக்க அரசியளுக்குள் உந்த கோதாரியளையெல்லாம் கொண்டு வராதேங்கோ....tw_blush:

ஊரிலைதானே நிக்கிறீங்க..... விருப்பமெண்டால் காலிமுகதிடலிலை நிண்டு யாதும் ஊரே யாவரும் கேளுங்கோ எண்டு கத்திப்பாருங்கோ...சிலநேரத்திலை சரிவந்தாலும் சரி வரும்...:cool:

1997 ஆம் ஆண்டளவில் வெளியாகி உலகைக் கலக்கிய துருக்கிய பாடல்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Surveyor said:

நான் பழகிய வரையில் பெரும்பாலான இஸ்லாமியர்கள் (ஒரு சிலரை தவிர) தங்களது மதம் தான் புனிதமானது என்றும் மற்ற மதங்கள் எல்லாம் கீழ்தரமானவை என்று வாதிடுவார்கள். ஒருவருக்கு தனது மதத்தில் பற்று இருப்பது சரிதான். ஆனால் அவர்கள் மற்ற மதங்களை மட்டம் தட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சிறி அண்ணை, நீங்கள் எழுதியதில் எந்த விதமான துவேஷ கருத்துக்களும் இல்லை.

புரிந்து கொண்டமைக்கு... நன்றி சேர்வயர். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஜீவன் சிவா said:

தமிழசிறி -மன்னிக்கவும்
உங்கள் திரியை ஒரு விவாத மேடையாக்க விரும்பவில்லை.
அப்படி திசை திரும்புவதாக தோன்றினால் சொல்லவும் - பதிவை எடுத்துவிடுகின்றேன்.

அப்படியெல்லாம் யோசிக்காதீர்கள், ஜீவன்  சிவா.
உங்கள் அபிப்பிராயத்தை தாராளமாக எழுதுங்கள். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

இலண்டனில் துருக்கிகள் வாழும் இடத்திற்கு கிட்ட வசிக்கவில்லை என்பதால் சராசரி துருக்கிகளைப் பற்றி அவ்வளவு தெரியாது. ஜேர்மனியில் அவர்கள் எக்கச்சக்கம் என்பதால் பல விடயங்களை தமிழ் சிறி அண்ணா தொடர்ந்தும் சுவைபடத் தருவார் என்று எதிர்பார்க்கின்றேன்.

பாகிஸ்தான் காரனைப் பற்றி எழுத,  நிறைய இருக்குமே... கிருபன்.
அதனை எழுதுங்கள் வாசிக்க, ஆவலாக உள்ளது. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

இங்கிலாந்துக்கு பாக்கியள் சிங்குகள் மாதிரி ஜேர்மனிக்கு துருக்கியள் வந்து வாய்ச்சிருக்கினம். 
துருக்கியை சேர்ந்தவர்கள் கெட்டவர்கள் அல்ல. ஆனால் அவர்களின் கொள்கைகள் மற்றவர்களை மட்டம் தட்டி தாங்களும் தங்கள் மதமும் உலகிலேயே சிறந்தது என........

ஆனால் தமிழர்கள் அப்படியல்ல.

குமாரசாமி அண்ணை,   பிரான்சுக்கு.... அடையார் (அல்ஜீரியர்) உள்ளதை எழுத மறந்து விட்டீர்கள். :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Athavan CH said:

1997 ஆம் ஆண்டளவில் வெளியாகி உலகைக் கலக்கிய துருக்கிய பாடல்.

துருக்கியில்... "கோகா  கோலா" விளம்பரத்துக்கு, 
"வை திஸ்  கொல வெறி"  பாடலின் இசையை பயன் படுத்தி இருக்கின்றார்கள்.  :grin:

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für old model ford bus

துருக்கியர்... சிக்கனமாக வாழ்வதிலும், தாம் உழைக்கும் பணத்தை...  ஊரில் ஏதாவது ஒரு தொழிலில் முதலீடு செய்து, அங்கு தமது நெருங்கிய உறவினர்கள் யாராவது ஒருவரை  கண்காணிக்கும் விதத்தில் நியமித்து இருப்பார்கள். அது  "ரக்சி" போன்ற வாகனமாகவோ,  கடைகளாகவோ, தோட்டங்களாவோ, ஆடு/மாடு/கோழி போன்றவற்றை  வளர்க்கும் பண்ணைகளாகவோ  தமது கிராமத்தின்  சூழ் நிலைக்கு ஏற்ப அமைத்துக் கொள்வார்கள்.  அதற்காக பலர் இங்கு... இரண்டு  வேலையை செய்து கொண்டு இருப்பார்கள்.

அனேகமானவர்கள் மாடி வீடுகளை...  மூன்று, நான்குக்கு மேற்பட்ட  தளங்களில் கட்டுவார்கள். 
கீழ் தளம் எப்படியும் கடைகளுக்காக  ஒதுக்கப் பட்டிருக்கும். மற்றைய தளங்களில்... பெற்றோர், உடன் பிறந்தவர்கள் போன்ற நெருங்கிய உறவுகளை குடியமர்த்தி விடுவார்கள்.  இவர்கள் விடுமுறைக்கு செல்லும்  போது தங்குவதற்கு, ஒரு மாடி தமக்காக  ஒதுக்கி இருப்பார்கள். 

முன்பு இவர்கள் எல்லோரிடமும், மேலே  படத்தில் உள்ளதைப்  போல்.....  பச்சை  அல்லது சிவப்பு நிற  FORD வாகனம் தான் வைத்திருந்தார்கள்.  அது இவர்களின் பெரிய குடும்பத்துக்கு வசதியாகவும், ஊருக்குப் போகும் போது மேலே  Carrier ஒன்று வைத்து அதில்,  மூட்டை  மூட்டையாக  பொருட்களை கட்டிக் கொண்டு போவார்கள். இப்போது அதனைக் காண முடியாது. காரணம் இங்கு உள்ள பொருட்கள் எல்லாம்.... துருக்கியில் மலிவாக கிடைக்கும்.  இப்ப....  சுற்றுலா போகும் ஜேர்மன் காரன் தான்.... அங்கிருந்து அடிடாஸ், பூமா...  ரீ  சேர்ட்டுக்களையும், சப்பாத்துக்களையும்  வாங்கி வருகின்றார்கள். அந்த அளவிற்கு துருக்கியில் பெரும் தொழில் நிறுவனங்கள் உள்ளது.

இன்னும் வரும்......

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

பாகிஸ்தான் காரனைப் பற்றி எழுத,  நிறைய இருக்குமே... கிருபன்.
அதனை எழுதுங்கள் வாசிக்க, ஆவலாக உள்ளது. :)

நான் மக்களோடு மக்களாக இருப்பதால் எமது இடத்தில் கறுப்பர்களும் தமிழர்களும்தான் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள்.?

பாகிஸ்தானியர், சீக்கியர், துருக்கியர், சோமாலியர், பங்களாதேஷிகள், சீனர், கொரியர் இருந்தாலும் பெருமளவில் இல்லை.

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

நான் அடையார்களுடன் தொழிற்சாலைகளிலும் மற்றும் அவர்களது வாகனங்கள், வீட்டுத் தளபாட திருத்த வேலைகள் என்றும் , மேலும் அவர்களுடன் என்னையெல்லாம் இவனாவது ஏமாத்திறதாவது என்ற திமிரில் இருமுறை வாகனம் வாங்கி என் ஆணவம் அடங்கிய காலங்களும் உண்டு. அதுபோல் எனக்கு தேவையான சில அலுவல்களுக்கு உதவிகளும் புரிந்திருக்கின்றார்கள்.இன்னும் எவ்வளவோ கூறலாம் .....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 3/6/2017 at 8:44 PM, Maruthankerny said:

இவர்கள் துருக்கி இல்லை ....
ஆனால் ...

துருக்கி ..... ஈராக் ... சிரியா எல்லைகளில் ஒரு தனித்துவமான இனமாக வாழ்கிறார்கள் 
இவர்களுக்கு பாரிய பழமைவாய்ந்த வரலாறு உண்டு 

இவர்கள் ஓரளவு இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றினாலும் 
எமது ஊரில் உள்ள கிறிஸ்தவம் போல் எல்லா நாடுகளும் உள்புகுத்தியதுதான் அது. 

நாடுகள் எல்லைகளை வகுத்த நேரம் இவர்கள் சரியான தலைமை இல்லாது 
நாடுகளின் அரசிலுக்குள் சிக்கிவிடடார்கள்.

கண்ணை மூடின மத வெறி இல்லாததால் 
துருக்கி ஈராக் சிரியா போன்ற நாடுகளால் எப்போதுமே 
தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள்.

தற்போது ஓரளவு ஐ ஸ் ஸ் தீவிரவாதிகளை ஓரளவு அடக்கியவர் இவர்கள்தான் என்றாலும் 
மறுபுறம் பலத்த இன்னல்களை சந்தித்தவர்களும் இவர்கள்தான்.
மதவெறி பிடித்த ஐ ஸ் ஸ் நாய்கள் குதறி குதறி கொடூரம் இழைக்க 
இவர்களின் மத சுதந்திரம் இன்னமும் காரணமாயிற்று.

துருக்கி பெண்கள் என்றால் .............
அது இன்னொரு இந்தியா என்று சொல்லலாம் 
காலையும் மாலையும் குரான் ஓதுவதும் உண்டு 
காலை எழுந்தவுடன் .... விஸ்கியில் வாய் கொப்பிளிப்பதும் உண்டு. 

வெளி உலகமே தெரியாத தவளைகளும் உண்டு ...
ஈழ தமிழரில் இருந்து .... எத்த்தியோப்பியா கறுப்பர் வரை பார்த்தவரும் உண்டு. 

 

துருக்கியர்கள் இஸ்லாம் மதம் சார்ந்தாலும் 
விபச்சாரம் .... குடி ... புகை இல்லாமல் இருப்பது என்றால் 
கொஞ்சம் கஷடப்படுவார்கள். 

 

 

மருதங்கேணி,

குர்திஸ் மக்களா   Turkish Republic of Northern Cyprus  எனும் நாட்டில் வாழ்பவர்கள்? 
Turkish Republic of Northern Cyprus  எனப்படும் நாடு ஓர் சைப்ரசின் ஒர் பகுதியல்லவா?? ஆனால் இவர்களது நாட்டிட்கு போக துருக்கி அரசாங்கத்திடம் விசா பெறவேண்டும். இவர்கள் by force ஆக‌ இதைபிடித்து வைத்துள்ளார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, colomban said:

 

மருதங்கேணி,

குர்திஸ் மக்களா   Turkish Republic of Northern Cyprus  எனும் நாட்டில் வாழ்பவர்கள்? 
Turkish Republic of Northern Cyprus  எனப்படும் நாடு ஓர் சைப்ரசின் ஒர் பகுதியல்லவா?? ஆனால் இவர்களது நாட்டிட்கு போக துருக்கி அரசாங்கத்திடம் விசா பெறவேண்டும். இவர்கள் by force ஆக‌ இதைபிடித்து வைத்துள்ளார்களா?

இதை இங்கு ஒருத்தர் இருந்தார் இப்போ எழுதுவதில்லை ...
அவர் கொஞ்சம் விளக்கமாக எழுதி இருப்பார்.
புளொட் இயக்கம் இப்படியான ஒரு தீர்வைதான் திம்பு பேச்சு முறிந்தவுடன் 
முன்வைத்தது ..
இந்திராகாந்தியின் ஆலோசகர் பார்த்தசாரதி இதையும் காசுமீரையும் கலந்து 
ஒரு தீர்வே ஈழத்தமிழருக்கு சரியானது என்று சொல்லிக்கொண்டு இருந்தார். 
(அதட்கு காரணம் இதுவும் ஒரே காலத்தில் நடந்து கொண்டு இருந்தது) 
உண்மையாக பார்த்தால் அதுதான் சாத்தியமானதும்.
பின்பு ராஜீவகாந்தி தனது தில்லு முல்லுகளை தொடங்கியதால் இவர்களை ஓரம் கட்டி விட்டார்.

ஆரம்ப பிரச்சனை என்ன என்று எனக்கு தெரியாது 
சைப்பிரஸ் பூராக துருக்கி கைப்பற்றி இருந்தது ... (இவர்கள் குருதிஸ் மக்கள் இல்லை)
இவர்கள் கிறிஸ் நாட்டை சேர்ந்தவர்கள் உண்மையில் கிறிஸ் நாடிட்குத்தான் இது சொந்தம் 
காஸ்மீர் போலவே ஆங்கிலேயர் வெளியேறியபோது இதையும் எந்த தீர்வும் இல்லாமல் விட்டு 
விட்டு சென்று விடார்கள். பின்பு சண்டை சமாதானம் என்று ...
1980-1985 இற்கு இடையில்  (திம்பு பேச்சுவார்த்தை காலத்தில்) 
ஏன் வடக்கு தனியாக பிரிந்தது என்பது எனக்கு தெரியவில்லை 
தனி நாடக அறிவித்தது.
வடக்கு இப்போதும் தனி நாடுதான் ... ஆனால் ஆமி(பாதுகாப்பு) பொருளாதாரம் போன்றவற்றை 
துருக்கியிடம் கையளித்து இருந்தது.
அதாவது துருக்கிக்குள் ஒரு தனி நாடு. 

சுவிஸ்லும் இப்படி ஒரு இத்தாலி நாட்டு நகரம் சுவிஸ் நாட்டுக்குள் உண்டு 
அங்கு எல்லாம் இத்தாலிதான் (போலீஸ் உட்பட)  .... பாதுகாப்பு பொருளாதாரம் எல்லாம் சுவிஸ்.
சுவிஸிட்க்குள் இருப்பதால் சுவிஸ் நாட்டு மக்கள் வளமை போல வேலை எல்லாம் செய்யலாம் 
ஆனால் அரசு சட்டம் எல்லாம் அவர்கள் உடையது. 

பார்த்தசாரதியை எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்திரா காந்தியின் அடாவடி 
தனமான வேலைகளை எல்லாம் வெட்டி ஓடிய முக்கிய அறிவாளி அவர்தான்.
இவர் இல்லை என்றால் பொற்கோவில் தாக்குதலுடன் பஞ்சாப் பிரிந்து இருக்கும் 
குறைந்தபடசம் பிரிவினை போர் தொடங்கி இருக்கும்.
இவரை ஒதுக்கியது என்றே ஒரே காரணமே போதும் ராஜீவ் அடி முட்டாள் 
என்று உணர்ந்துகொள்ள. 
இப்போ பாருங்கள் .. எமக்கு இந்த வடக்கு சைப்பிரஸ் தீர்வு எவளவு சாத்தியமானது என்று.

  • கருத்துக்கள உறவுகள்

2015 நத்தாருக்கு முன்தினம் துருக்கியில் வந்து இறங்கினால் 22 மணிநேரம் இடைத்தங்கல்.அதிகாலை 6மணிக்கே துருக்கி வந்தாச்சு.அங்கிருந்து பிள்ளைகளுடன் தொடர்பு கொண்டால் 22 மணி நேரமும் உங்கு அடைபட்டு கிடக்காமல் காகியா சோகியா என்ற பெயர்போன இடம் இருக்கு போய் பாருங்கோ என்று பிள்ளைகள் வற்புறுத்தினர்.சரி என்று ஆளாளுக்கு 30டொலர் கொடுத்து இடைத்தங்கல் விசா எடுத்து பணம் மாற்றி இடத்தில் உன்னிடம் தான் பணம் மாற்றப் போகிறேன் அதற்கு முன் இந்த இடங்களுக்கு எப்படி போவது என்று சொல்லுவியா என்று கேட்டது தான்.எங்களை கையிலே பிடித்து கொண்து போய் இந்த இடத்தில் விட்டமாதிரி சொல்லியும் எழுதியும் தந்தார் ஒரு அழகான பெண்மணி.

அவர் சொன்ன படி ஒரு ரெயின் எடுத்து மற்றைய சிறிய ரெயின் எடுப்பதற்காக இறங்கி வெளியே வந்தால் தெரு முழவதும் ஒரோ கூட்டம் கூட்டமாக நிறைய சனம்.அதற்குள் ஒருவர் ஓடி வந்து ஓ சிறிலங்காவா இந்த போடர் இப்படி இந்த போடர் அப்படி என்று ஒரு லெக்கர் அடித்தார்.ஏதொ சுத்தப் போகிறார்கள் மெதுவாக மாறுவோம் என்று கொஞ்சம் சாப்பிட்டு விட்டு வருகிறோம் என்று மெதுவாக களன்றுவிட்டோம்.பின்னர் அந்த பெண் தந்த தகவலின் படி சிறிய ரெயின் எடுத்து பிரமாண்டமான ஒரு பிரதேசமாக காட்சியளித்த காகியா சோகியா என்று இடத்தை 6 மணி நேரம் சுற்றி பார்த்து விமான நிலையம் திரும்பினோம்.

சரியாக 15 நாட்கள் கழித்து தை 10ம் திகதி 2016 என்று எண்ணுகிறேன் நாம் போய் சுற்றி திரிந்த அதே இடத்தில் குண்டு வெடித்து 10 பேர் பலியாகி பலர் படுகாயமடைந்திருந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இலையான் கில்லர் நன்றாக இருக்கிறது தொடருங்கள்....பாம்புப்படைத்தலைவியாக இருந்து வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன்:cool:

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் ஒரே ஒரு நாடு துருக்கி தான் அரைவாசி ஐரோப்பாவாகவும் அரைவாசி மத்திய கிழக்காகவும் இருப்பதாக முன்னர் கேள்விப்பட்டுள்ளேன்.இதை யாராவது ஊர்ஐpத படுத்த முடியுமா?

5 minutes ago, வல்வை சகாறா said:

இலையான் கில்லர் நன்றாக இருக்கிறது தொடருங்கள்....பாம்புப்படைத்தலைவியாக இருந்து வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன்:cool:

பாம்பு படை பாரீசில் தான் என்றால் கனடாவிலுமா?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

உலகத்தில் ஒரே ஒரு நாடு துருக்கி தான் அரைவாசி ஐரோப்பாவாகவும் அரைவாசி மத்திய கிழக்காகவும் இருப்பதாக முன்னர் கேள்விப்பட்டுள்ளேன்.இதை யாராவது ஊர்ஐpத படுத்த முடியுமா?

பாம்பு படை பாரீசில் தான் என்றால் கனடாவிலுமா?

கனடாவில் கிடையாது எல்லாம் இந்த யாழ் கருத்துக்கத்திற்குள்ளதான்

ஈழப்பிரியன் அண்ணா எங்கள் களமாளுமன்றத்தில் இந்த இலையான் கில்லர்தான் என்னைப் பாம்புப் படைத் தலைவியாக்கினார் அதை நான் எப்படி மறக்கமுடியும்? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

நான் அடையார்களுடன் தொழிற்சாலைகளிலும் மற்றும் அவர்களது வாகனங்கள், வீட்டுத் தளபாட திருத்த வேலைகள் என்றும் , மேலும் அவர்களுடன் என்னையெல்லாம் இவனாவது ஏமாத்திறதாவது என்ற திமிரில் இருமுறை வாகனம் வாங்கி என் ஆணவம் அடங்கிய காலங்களும் உண்டு. அதுபோல் எனக்கு தேவையான சில அலுவல்களுக்கு உதவிகளும் புரிந்திருக்கின்றார்கள்.இன்னும் எவ்வளவோ கூறலாம் .....!  tw_blush:

நானும் ஒருமுறை கார் திருத்த... விலை மலிவு என்று, துருக்கி கராஜில் கொடுத்தேன்.
சரியாக செய்யவில்லை. அதன் பின் அந்தப் பக்கமே... போவதில்லை.
ஆக... தலைமயிர் வெட்ட மட்டும், துருக்கி சலூனுக்கு போவேன். அங்கு  6 ஐரோவுக்கு  தலைமயிரை வெட்டி விடுவார்கள். 
ஜேர்மன் சலூனுக்கு போனால், 20  ஐரோ கொடுக்க வேண்டும். 

######################### ######################## ###################

19 hours ago, colomban said:

மருதங்கேணி,

குர்திஸ் மக்களா   Turkish Republic of Northern Cyprus  எனும் நாட்டில் வாழ்பவர்கள்? 
Turkish Republic of Northern Cyprus  எனப்படும் நாடு ஓர் சைப்ரசின் ஒர் பகுதியல்லவா?? ஆனால் இவர்களது நாட்டிட்கு போக துருக்கி அரசாங்கத்திடம் விசா பெறவேண்டும். இவர்கள் by force ஆக‌ இதைபிடித்து வைத்துள்ளார்களா?

Bildergebnis für Kurdistan

கொழும்பான்.....
குர்திஸ் மக்களின் பூர்வீக நிலப் பரப்பை, பலம் பொருந்திய இஸ்லாமிய  நாடுகளான.... ஈரான், ஈராக், சிரியா, துருக்கி, ஆர்மேனியா ஆகிய ஐந்து நாடுகள் ஆக்கிரமித்து  வைத்துள்ளது அவர்களை எதிர்த்து போராடும், துர்ப்பாக்கிய நிலையில் குர்திஸ் மக்கள் உள்ளார்கள். படத்தில் மஞ்சள் நிறத்தில் இருப்பது, முன்னைய குர்திஸ்தான். 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

உலகத்தில் ஒரே ஒரு நாடு துருக்கி தான் அரைவாசி ஐரோப்பாவாகவும் அரைவாசி மத்திய கிழக்காகவும் இருப்பதாக முன்னர் கேள்விப்பட்டுள்ளேன்.இதை யாராவது ஊர்ஐpத படுத்த முடியுமா?

Bildergebnis für türkei europa oder asien  

Bildergebnis für türkei europa oder asien

ஈழப்பிரியன்.... துருக்கி பரப்பளவில், பெரியநாடு. அதில் முக்கிய வியாபார நகரமானதும்,  12 மில்லியன் மக்கள் வசிக்கும் "இஸ்தான்புல்"  நகரதின் ஒரு பகுதியே ஐரோப்பாவுக்குள் வருகின்றது. படத்தில் தெளிவாக காட்டப் பட்டுள்ளது. 

Bildergebnis für erdogan

கூடுதல் தகவல் ஒன்று... துருக்கியில் இப்போது உள்ள மாதிரி... நாட்டிற்கு பிரதமர், ஜனாதிபதி என்று இரு பதவிகள் இல்லாமல், அமெரிக்காவில் உள்ளது போல்... ஒரு தலைவர் மட்டுமே இருக்க ஆவன  செய்ய பாராளுமன்றத்தில் விவாதம் நடந்த போது  சில கட்சிகள்  எதிர்த்தாலும், பெரும் பான்மையானவர்கள் ஒருவரின் ஆட்சி முறையை ஆதரிக்கின்றார்கள். அதற்கு ஜேர்மனி, இங்கிலாந்து, ஹொலண்ட்  போன்ற நாடுகள் எதிர்க்கின்றன. அதற்காக சில கிழமைகளில் சர்வசன வாக்கெடுப்பு நிகழ இருக்கின்றது. இப்போ உள்ள ஜனாதிபதி  எர்டோகான், புட்டின் மாதிரி... வெட்டு ஒன்று, துண்டு இரண்டாக பேச க்  கூடிய ஒற்றை ரூட்டு பேர்வழி என்பதால்... அநேக ஐரோப்பிய நாடுகள் எதிர்க்கிறார்கள். 

"என் நாட்டில், என் மக்களே..... எது வேண்டும் என்று  தீர்மானிப்பார்கள், அதற்குள் மற்றைய நாடுகள் மூக்கை  நுழைக்க வேண்டாம்" என்று....  எர்டோகான் தெரிவித்துள்ளார்.
விரைவில்.... அரசியல் சலசலப்பு ஒன்று நடக்கலாம் என்று,  பலரும் எதிர்பார்க்கின்றார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, தமிழ் சிறி said:

நானும் ஒருமுறை கார் திருத்த... விலை மலிவு என்று, துருக்கி கராஜில் கொடுத்தேன்.
சரியாக செய்யவில்லை. அதன் பின் அந்தப் பக்கமே... போவதில்லை.
ஆக... தலைமயிர் வெட்ட மட்டும், துருக்கி சலூனுக்கு போவேன். அங்கு  6 ஐரோவுக்கு  தலைமயிரை வெட்டி விடுவார்கள். 
ஜேர்மன் சலூனுக்கு போனால், 20  ஐரோ கொடுக்க வேண்டும். 

######################### ######################## ###################

எனக்கு 6 ஈரோவுக்கு தலைமயிரும் வெட்டி மீசையையும் அழகுபடுத்தி தேத்தண்ணியும் தருவார்கள் என்பதை இந்த இடத்தில் சொல்லியே ஆகவேண்டும்.:cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எனக்கு 6 ஈரோவுக்கு தலைமயிரும் வெட்டி மீசையையும் அழகுபடுத்தி தேத்தண்ணியும் தருவார்கள் என்பதை இந்த இடத்தில் சொல்லியே ஆகவேண்டும்.:cool:

Bildergebnis für feuer zeug gif

உங்கை... இன்னும், மலிவு போலை இருக்கு அண்ணே.....
இங்கை.. தேத்தண்ணி தரமாட்டார்கள், எனக்கு மீசை இல்லாத படியால் அதில் கை வைக்க வேண்டிய தேவை இல்லை. கண் இமையை அழகாக வெட்டி, காதில் முளைத்திருக்கும் மயிரை நெருப்புக் காட்டி எரித்து.... தலை, காது  எல்லாம்  30 செக்கன் மஸாஜ்  பண்ணி விடுவார்கள். tw_smiley:

என்னை..  பாகிஸ்தான்காரனோ என்று கேட்டார்கள். நானும் ஓம் என்று சொல்லி விட....
அவர்கள்... "சலாம் அலைக்கும்"  என்று  சொல்ல, பதிலுக்கு நானும்... "அலைக்கும்  சலாம்" என்று சொல்லி அலுவல் நடந்து கொண்டு இருக்குது. :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

 

Bildergebnis für Kurdistan

 

இப்போது இருக்கும் நாடுகளின் எல்லை கோடுகள் 
ஆங்கிலேயரும் ... பிரெஞ்சு  ... காரர்களும் கணிசமான ரோமியர்( இத்தாலி)ரும் 
தமது ஆக்கிரமிப்பு வேலைகளை கொஞ்சம் பிரச்சனைகள் இல்லாது 
சுமூகமாக பார்ததுக்கொள்ள வரையபட்டவை.

சிரியா இந்த பிராந்தியத்திலேயே மிக பழமை வாய்ந்த ஒரு முக்கிய நாடு 
பல காலமாக பாரிய போர்களை சந்தித்து அவற்றை வென்ற நாடும் கூட 

அதுபோல குர்திஷ் இன மக்களும் மிக பழமையான நாகரீம் வளர்ந்த மக்கள் 
இவர்களும் தமிழர்கள்போல் தமக்குள் அடிபட்டு தமது பாரம் பரியங்களை 
அழித்து விட்ட்டவர்கள்.

இந்த பிராந்திய வரலாறுகள் படித்தால் இப்போதைய பல 
பிரச்சனைகளை புரிந்துகொள்ள இலகுவாக இருக்கும் 

ஈரானின் வரலாறுகள் படிக்கும்போது நிறைய தமிழ் பெயர்களை மாறி மாறி காணலாம் 
கிழக்கு ஆசிய நாடுகள்போல் கம்போடியா தாய்லாந்து நாடுகள் கடந்த வரலாறு பார்த்தால் 
நிறைய தமிழின் ஆதிக்கம் இருக்கும் ... இவர்களின் முக்கிய கடவுள் சிவன் இப்போதும் அங்கு 
சிவன்தான் அவர்கள் பெயரை மாற்றி அழைக்கிறார்கள். 

ஈரானை ஆண்ட இறுதி வம்சம்... "பல்லவி வம்சம்" 
1979இல் நடந்த ஈரானிய புரடசியின் போதே இது தூக்கி ஏறியபட்டது.  

Pahlavi dynasty

The Pahlavi dynasty (Persian: دودمان پهلوی‎‎) was the ruling house of Iran from 1925 until 1979, when the monarchy was overthrown and abolished as a result of the Iranian Revolution. The dynasty was founded by Reza Shah Pahlavi in 1925, a former Brigadier-General of the Persian Cossack Brigade, whose reign lasted until 1941 when he was forced to abdicate by the Allies after the Anglo-Soviet invasion. He was succeeded by his son, Mohammad Reza Shah Pahlavi, the last Shah of Iran.

The Pahlavis came to power after Ahmad Shah Qajar, the last ruler of the Qajar dynasty, proved unable to stop British and Soviet encroachment on Iranian sovereignty, had his position extremely weakened by a military coup, and was removed from power by the parliament while in France. The National Assembly, known as the Majlis, convening as a Constituent Assembly on 12 December 1925, deposed the young Ahmad Shah Qajar, and declared Reza Shah the new monarch of the Imperial State of Persia. In 1935, Reza Shah asked foreign delegates to use the term Iran, the historical name of the country, used by its native people, in formal correspondence and the official name Imperial State of Iran (Persian: کشور شاهنشاهی ایران‎‎ Keshvar-e Shāhanshāhi-ye Irān) was adopted.

Faced with growing public discontent and popular rebellion throughout 1978, Mohammad Reza Shah Pahlavi went into exile with his family in January 1979, sparking a series of events that quickly led to the dissolution of the state on 11 February 1979, officially ending the 2,500-year-old tradition of monarchy in Iran.[2] At the death of Mohammad Reza Shah Pahlavi on 27 July 1980, his son Reza Pahlavi became the head of the Pahlavi royal family.

Shah_and_Farah.jpg

Mohammad_Pahlavi_Coronation.jpg

மொட்டாக்கு போடுறது ... மூடுறது ... பெண்ணடிமை 
எல்லாம் இப்போ 1970இன்  பின்புதான் ...
இந்த மூதேவிகளால் தோற்றுவிக்க பட்டிருக்கு 

இந்த பிராந்தியத்தில் வாழ்ந்த எல்லா சமூகமும் 
ஒரு துண்டால் தலையையும் காதையும் மூடியே வந்திருக்கிறார்கள் 
அது குளிரால் என்று நினைக்கிறேன். இஸ்லாம் ... கிறிஸ்தவர்கள் .. யூதர்கள் 
எல்லோரும் மூடிதான் இருந்து இருக்கிறார்கள் 
இந்த மூதேவிகள்தான் அதை சமயம் என்று சொல்லி பிரகாணப்படுத்தி உள்ளார்கள்.
ஆப்கானிஸ்தான் பெண்கள் எல்லாம் அந்த காலத்தில் பெருத்த அழகிகள் 
சில ராஜ்ஜியங்களையே கவுத்து இருக்கிறார்கள் ..
கஸல் என்ற கவிதையே அவர்களை பாடியதுதானே ? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எனக்கு 6 ஈரோவுக்கு தலைமயிரும் வெட்டி மீசையையும் அழகுபடுத்தி தேத்தண்ணியும் தருவார்கள் என்பதை இந்த இடத்தில் சொல்லியே ஆகவேண்டும்.:cool:

பார்ரா பாவம் சலூன் காரன் இருந்தால் தானே வெட்ட என்று போட்டு  வாங்குன காசுக்கு தேத்தண்ணியை ஊத்தி தந்திருக்கான் போல் இவரும் அதை குடிச்சிட்டு வந்திருக்கார் போல்tw_blush:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

Is it true that Pakistan and Afghanistan has a large number of Tamil town names?

Absolutely yes! Not only in Pakistan and Afghanistan, More than 19000 Towns Across the World in Tamil Name : Orissa Balu, Sea Researcher.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

பார்ரா பாவம் சலூன் காரன் இருந்தால் தானே வெட்ட என்று போட்டு  வாங்குன காசுக்கு தேத்தண்ணியை ஊத்தி தந்திருக்கான் போல் இவரும் அதை குடிச்சிட்டு வந்திருக்கார் போல்tw_blush:tw_blush:

முனிவர் எப்படி இப்படி .... உங்களின் அறிவுக் கூர்மையைப் பார்க்க புல்லரிக்குது....! tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.