Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் சர்ச்சைக்குரிய லைக்காவின் ஞானம் அறக்கட்டளை விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்!

Featured Replies

இலங்கையில் அல்லலுறும் தமிழர்களுக்காக அரசியல்வாதிகள் ஒன்றும் செய்யவில்லை: லைக்கா நிறுவனம் சாடல்

 

 
 
லைக்கா நிறுவனத்தின் துணைத்தலைவர் பிரேம் சிவசாமி
லைக்கா நிறுவனத்தின் துணைத்தலைவர் பிரேம் சிவசாமி
 
 

இலங்கையில் அல்லலுறும் தமிழர்களுக்காக தமிழக அரசியல்வாதிகள் ஒன்றும் செய்யவில்லை என்று லைக்கா நிறுவனத்தின் துணைத்தலைவர் பிரேம் சிவசாமி சாடியுள்ளார்.

லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை சார்பில் இலங்கையின் வவுனியாவில் கட்டப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை தமிழர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்துகொள்வதாக இருந்தது. இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்துகொள்ளக் கூடாது என்று திருமாவளவன், வைகோ, வேல் முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். பாமக நிறுவனர் ராமதாஸும் இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்துகொள்ளக் கூடாது என்று கூறி அறிக்கை விடுத்திருந்தார். அவர்களின் வேண்டுகோளை ஏற்று, இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று ரஜினிகாந்த் அறிவித்தார்.

மேலும், இனிவரும் காலங்களில் இலங்கை செல்வதை அரசியலாக்கி அங்கு என்னை போகவிடாமல் செய்துவிடாதீர்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், ரஜினியின் பயணம் ரத்தானதால் வரும் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறவிருந்த வீடு வழங்கும் விழாவை ரத்து செய்வதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் தமிழர்களுக்காக கட்டப்பட்ட 150 வீடுகளும் அவர்களிடமே ஒப்படைக்கப்படும் என்றும் லைக்கா கூறியுள்ளது.

இது தொடர்பாக லைக்கா நிறுவனத்தின் துணைத்தலைவர் பிரேம் சிவசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில், ''இலங்கையின் வடக்கு மாகாணத்தின் வவுனியா பிரதேசத்தின் சின்ன அடம்பன் கிராமம் மற்றும் புளியங்குளம் பகுதியில், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் சார்பில், 'லைக்கா ஞானம் கிராமம்' உருவாக்கப்பட்டது. இந்தக் கிராமத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட 150 வீடுகளை லைக்கா ஞானம் அறக்கட்டளை உருவாக்கியிருந்தது.

அகதி முகாம்களில் வாழ்ந்த 150 குடும்பங்களுக்கு இந்த வீடுகளை கையளிக்கும் விழா, எதிர்வரும் ஏப்ரல் 10-ம் தேதி, நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில், கலந்துகொள்ளுமாறு ரஜினிக்கு அழைப்பு விடுத்திருந்தோம். அந்த வகையில் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை சந்திப்பதற்கும் விருப்பம் தெரிவித்திருந்தார்.

இதற்கமைவாக ஏப்ரல் 9-ம் தேதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவிருந்த பிரமாண்டமான நிகழ்வில் கலந்து கொள்வதற்கும், புதிதாக உருவாக்கப்பட்ட வீடுகளுக்கான உறுதிப் பத்திரங்களை வழங்கி வைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான, ஞானம் அறக்கட்டளையின், அடுத்தக்கட்ட உதவித்திட்டங்களை, அறிவிக்கவும் திட்டமிட்டு இருந்ததோடு, ரஜினிகாந்த் இரண்டு நாட்கள் வடக்கு கிழக்கில் தங்கியிருக்கவும் விருப்பம் கொண்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் திருகோணமலை, மட்டக்களப்பு பிரதேசங்களுக்கும் நேரில் சென்று மக்களை சந்திக்கவும், ஆவலாக இருந்தார்.

ஆனால் அவரின் இலங்கைப் பயணம் குறித்து, தற்போது சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், ஒரு அறக்கட்டளையின் உதவித்திட்ட செயற்பாடுகளை, தமது அரசியல் சுய லாபத்திற்காக பயன்படுத்துகின்ற ஒரு அநாகரீக சூழல் உருவாகியிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் ரஜினியை தர்மசங்கடமான நிலைக்கு உட்படுத்தும் நிலை வலிந்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அசௌகரியங்களை தவிர்க்கும் முகமாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித் திட்டங்கள், இவற்றின் ஊடாக தடைப்படக் கூடாது என்பதற்காகவும், 9-ம் தேதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற இருந்த அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்படுவதோடு ரஜினிகாந்தின் இலங்கைப் பயணமும் ரத்துச் செய்யப்படுகிறது என்பதனை மிகவும் மனவேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனினும் திட்டமிட்டபடி பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பினையும், விருப்பத்தினையும், பூர்த்தி செய்யும் நோக்கத்துடன், வீடுகள் அனைத்தும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என்பதனையும் லைக்கா ஞானம் அறக்கட்டளை தெரிவித்துக் கொள்கிறது.

இதேவேளை இந்த தருணத்தில் சில விஷயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எங்களுக்கும் முன்னய ஆட்சியாளரான ராஜபக்சேவுக்கும் தொடர்புகள் இருப்பதாக வதந்திகளையும், புனை கதைகளையும் உருவாக்கியவர்கள் எமது வர்த்தக சாம்ராஜ்ஜியத்திற்கு எதிரான போட்டியாளர்கள் என்பது உலகறிந்த விஷயம்.

இப்படியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்பதோடு எந்தவொரு ஆதாரமுற்றவை.அதனால் எமது வர்த்தக செயற்பாடுகளோடும், சமூகம் சார்ந்த முன்னுதாரண திட்டங்களோடும் ஆரோக்கியமான போட்டிகளை உருவாக்க முடியாதவர்கள் முதுகில் குத்தும் நடவடிக்கைகளை தொடர்கின்றனர்.

இப்படியான வதந்திகளை பரப்புவதன் ஊடாக லாபத்தை பெற முனைபவர்களுக்கு சார்பாக, சில தமிழக அரசியல்வாதிகள் திரும்ப திரும்ப பேசுவது கண்டிக்கப்பட வேண்டியது. அத்துடன் எமது போட்டி வியாபாரிகளிடம் ஏதாவதொரு வகையில் கடமைப்பட்ட காரணத்தினால்தான் இப்படியான ஆதாரமற்ற , உண்மையற்ற வதந்திகளை இவர்கள் முன்வைக்கிறார்கள் என்பதனை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இத்தகைய அரசியல்வாதிகள் இன்று இலங்கையில் அல்லலுறும் தமிழ் மக்களின் வாழ்வுக்கும் அவர்களின் எதிர்கால நன்மைக்கும் எதுவும் செய்ததில்லை. ஆயினும் லைக்கா ஞானம் அறக்கட்டளையின் நோக்கம் எல்லாம் அரசியல் தவிர்த்து அவர்களுடைய வாழ்வாதாரத்துக்கும் நிரந்தர உறைவிடத்துக்கும் உதவி செய்வதே ஆகும்.

இதேவேளை இலங்கை தமிழ் மக்களுக்கு நீண்டகால அரசியல் தீர்வை உருவாக்கி கொடுப்பதற்கு பல அரசியல் தலைவர்கள் கடுமையான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதனை நாம் மனதார வரவேற்கிறோம். ஆனால் இன்றைய நிலையில், அனைத்தையும் இழந்து அல்லலுறும் மக்களுக்கு உதவுகின்ற எம்முடைய முயற்சிகளை நிம்மதியாக செய்ய விடுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்'' என்று பிரேம் சிவசாமி தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/இலங்கையில்-அல்லலுறும்-தமிழர்களுக்காக-அரசியல்வாதிகள்-ஒன்றும்-செய்யவில்லை-லைக்கா-நிறுவனம்-சாடல்/article9601668.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, MEERA said:

ஆமா விசேட அணிக்கெல்லாம் Letter Head தேவைப்படுகிறது.

விசேட அணி அல்லிராசா சுபாசுக்கும், ஞானம் பவுன்டேசனுக்கும் ரசனிக்கும் கழுவுறதை விட்டுட்டு அங்குள்ள போராளிகளுக்கு கழுவலாமே... !

சர்வதேச அளவில் அறியப்பட்ட உந்த ஞானம் பவுண்டேசனை ஒரு ஆயிரம் பேருக்கு தெரியுமா? 

ச்சீய்..... விசேட அணி(ல்)கள்.  புலிகளின்  சின்னத்தை போட்டு, Letter Head ஐயே.... அவமானப் படுத்தி விட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, MEERA said:

ஆமா விசேட அணிக்கெல்லாம் Letter Head தேவைப்படுகிறது.

விசேட அணி அல்லிராசா சுபாசுக்கும், ஞானம் பவுன்டேசனுக்கும் ரசனிக்கும் கழுவுறதை விட்டுட்டு அங்குள்ள போராளிகளுக்கு கழுவலாமே... !

சர்வதேச அளவில் அறியப்பட்ட உந்த ஞானம் பவுண்டேசனை ஒரு ஆயிரம் பேருக்கு தெரியுமா? 

இந்து விசேட அணி தொடர்பாக ஒரு பொறுப்புவாய்ந்த செயற்பாட்டடாளரைக்கேட்டடபோது அதற்கும் தமக்கும் தொடர்பில்லை என்று கூறினார். இவர்கள் இலண்டனில் இருந்தே அறிக்கைவிடுவதாகவும் தெரிவித்தார். பலஆயிரஆயிரம் போராளிகளதும் மக்களதும் குருதியால்  வளர்க்கப்பட்ட அமைப்பினது அடையாளங்கள் அவமானப்படுத்ததப்படுவது வேதனைக்குரியதும் கண்டிக்கப்பவேண்டியதும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீர்ரகளின் வீரம் செறிந்த மண்ணை பார்க்க போறாரம்.. அட கன்னட கூத்தாடி..! எங்களுக்கு ஒன்று என்றால் அவர்கள் அழுவர்கள் .. அவர்களுக்கு என்றால் நாம நிற்பம் கன்னட கூத்தாடி... அவரு ராணுவ வீரன் என்று ஒரு படத்தில் நடித்ததிற்கான எபெக்ட்... உன் ஊரில் இருந்து ஒரு சொட்டு இங்குட்டு தண்ணீர் வரல ..?? இதே மாறி அறிக்கைவிட்டு பாரு .. உன் நள்ளி எலும்பை நகாராஜு கடிச்சு குடுச்சுடுவான் ..முதலீடு பண்ணுவது எல்லாம் கர்நாடகா.. ஏமாத்தி பிழைக்க தமிழ்நாடு ... இதல வந்து இனம்  கினம் என்று எல்லாம் பேசுறாங்கப்பா .. உன்னை எல்லாம் சிகரெட்டு தூக்கி போட்டு பத்த வைக்கும் போதே உன் அண்றர் வேரை அவுத்து இருந்தால் சத்தியமாக தமிழ் சமூகத்திற்கு இவ்வளவு பெரிய சீர் கேடு வந்திருக்காது ..

டிஸ்கி :

கூத்தாடிகளை எங்க வைக்கணுமோ அங்க தான் வைக்கணும்..!! அவ்வளவு முக்கி முக்கியத்துவம் தேவை இல்லை ,,..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே ரஜனிகாந்துக்கு யாரும் எதிரியல்ல என்று நான் நினைக்கின்றேன்.
அவர் விரும்பினால் எப்பவோ  இலங்கைக்கு சென்று ஈழத்தமிழருடன் கலந்துரையாடியிருக்கலாம். அதை ஏன் செய்ய்வில்லை?

இவ்வளவு காலம் கடந்த பின் தான் அவருக்கு ஈழம் போர்நடந்த புண்ணிய பூமியாக தெரிகின்றதா?

அது சரி போர் நடந்த புண்ணிய பூமி?????

அந்த புண்ணியம் யாருக்கு????

இந்தியாவிற்கா அல்லது ஈழத்தமிழருக்கா?


ரஜனி வந்தால் ஈழத்தமிழர் பிரச்சனை ஜப்பானுக்கும் தெரியவருமாம்!

நாங்கள் பாக்காத யசூஷி ஆகாஷியா? :oO:
மோடி ரஜனிக்கு உற்ற நண்பராம்....:grin:

இவர் போய் பாத்திட்டு அங்கை போய் விளக்கப்படுத்தி சொல்லுவாராம்.tw_astonished:
கன்னடத்துக்கும் தமிழ்நாட்டிற்கும் பாலமாக நின்று பிரச்சனைய முடிக்க வக்கில்லை.
இதற்குள் போர் நடந்த புண்ணிய பூமியை பார்க்க வேண்டுமாம்.:cool:
இலங்கைக்கு போ..யார் வேண்டாம் என்றது....கலை,நடிகன் என்ற நீதியில் போ.....உனது வாயால் பத்து வீடு கட்டித்தல்லாம் என்று சொல்லிப்பார். அப்போது தெரியும் சுப்பர் ஸ்டாரின்  உச்சம்.

நான் எழுதியது சோத்துக்கோப்பையை தட்டிவிடும் கருத்தல்ல.:)

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களுக்காய் ரஜனி குரல் கொடுக்க வேண்டும் - தீபச்செல்வன்

ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் அவலத்தின் பொழுது திரைத்திரையினருடன் கலந்து நடிகர் ரஜனிகாந்த் குரல் கொடுத்தார் என்று குறிப்பிட்ட ஈழ கவிஞரும் ஊடகவியலாளருமான தீபச்செல்வன் நடிகர் ரஜனிகாந்த் ஈழத்தில் மூன்று தலைமுறைகளாக சூப்பஸ்டாராக செல்வாக்குப் பெறுபவர் என்று குறிப்பிட்டார்.

ரஜனிகாந்தின் படங்களை புலிகள் ஒரு பொழுதும் தடை செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இழத்தில் ரஜனிகாந்த் தொடர்பில் இந்தியா டுடே பத்திரிகையில் குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்தியா டுடே பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரை முழுமையாக தருகிறோம்.

போரும் இடப்பெயர்வும் அலைச்சலும் பலிகளும் நிறைந்தஈழத்து வாழ்வில் எக்காலத்திலும் தமிழகத்துத் திரைப்படங்கள் செல்வாக்குச்செலுத்தியே வந்திருக்கின்றன. போருக்கு முன்பாக தமிழகத்தின் தொடக்காலத்திரைப்படங்கலிருந்து போர்க்காலங்களில் வெளியான திரைப்படங்கள்வரை போர் ஓய்ந்ததருணங்கில் பொழுது போக்கிற்காக பார்க்கப்பட்டிருக்கின்றன. போராடும் மக்கள்தமிழகத்து திரைப்படங்களை பார்க்க வேண்டுமா என்பது குறித்தும் ஈழப் போராளிகளானவிடுதலைப் புலிகள் பரிசீலனை செய்து வந்திருக்கிறார்கள். முக்கியமான நெருக்கடிக்காலகட்டங்களில் தமிழத்துப் படங்கள் தடைசெய்யப்பட்டு போராடும் மக்கள் பார்க்க வேண்டியபன்மொழிப் படங்கள் காண்பிக்கப்பட்டிருக்கின்றன.

தமிழகத்து திரைப்படங்களில் சமூகத்தை சீரழிக்கும்காட்சிகளைக் கொண்ட படங்களையும் அப்படியான காட்சிகளையும் விடுதலைப் புலிகள்தடைசெய்திருந்தார்கள். இளைஞர்களை சீரழிக்கிற வகையில் வழிகாட்டும் ஆபசம் மிகுந்தபடங்களை அவர்கள் தடை செய்திருந்தார்கள். அது போராடும் ஒரு மக்கள் கூட்டத்தி;ற்கு அவசியமற்றதாகவும்இருந்தது. தொடர்புகள் பாதிக்கப்பட்டீருந்த காலங்களிலும் தமிழகத்தில் திரைப்படங்கள்வெளியாகும் அதே நாட்களில் தமிழகப் படங்கள் ஈழத்திலும் வெளியாகியிருக்கின்றன.யாழ்ப்பாணத்தில் உள்ள பழம் பெரும் திரையரங்குகளில் நடிகர் எம்.ஜி.ஆர் வந்;திருக்கிறார். இன்றும்அந்தத் திரையரங்குகளில் அவர்கள் வரும் பொழுது பிடிக்கப்பட்ட புகைப்படங்கள்கொலுவப்பட்டிருக்கின்றன.

போர் ஓய்ந்த தருணங்களில் பொழுது போக்கிற்காகதிரைப்படங்கள் பார்க்கப்பட்ட பொழுது நடிகர் ரஜனிகாந்தின் படங்களும்திரையிடப்பட்டுள்ளன. ரஜனிகாந்தின் படங்களை புலிகள் ஒரு பொழுதும் தடைசெய்திருக்கவில்லை. படங்களின் பகுதிகளையும் தடைசெய்திருக்கவில்லை. ஈழத்து மக்கள்பலரால் ரஜனிகாந்தின் படங்கள் ரசித்துப் பார்க்கப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தில்இருந்த திரைப்படம் பார்க்கும் சூழலைவிட வன்னியில் இருந்த திரைப்படம் பார்க்கும்சூழல் வித்தியாசமானது. மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா போன்ற பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் உள்ளதைப்போல பெரும் திரையரங்குகள் உள்ளன. வன்னியில் இன்றுவரை திரையரங்குகள் இல்லை.மினித்திரையரங்குகள் மட்டும் உள்ளன.

வன்னியில் பேரால் திரையரங்குகள் அழிந்துவிட்டன.பராசக்தி என்ற திரையரங்கு வன்னியில் 1990களுக்கு முன்பாக மிகவும் பிரபலமானது. 1990களில் ஏற்பட்ட யுத்தசூழலால் அங்கு திரைப்படங்கள் ஓடாமலும் 1995களில் ஏற்பட்ட யுத்த சூழலால் அவை அழிந்தும்போய்விட்டது. இடம்பெயர்ந்த இடங்களில் சிறிய திரைகளைக் கொண்ட மினித்திரையரங்குகளும் தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கொண்ட திரையரங்குகளும்இயங்கியிருக்கின்றன. மிக அதிகமாக வீடுகளில் சிறிய தொலைக்காட்சிப் பெட்டிகளில்திரைப்படங்கள் ஓடியிருக்கின்றன. அவற்றை குறிப்பிட்ட அந்தப் பகுதியைச் சேர்ந்தமக்கள் பார்ப்பார்கள்.

வன்னியில் பெரும் போர் மூண்டிருந்த ஒரு காலத்தில்கிளிநொச்சி நகரத்தைவிட்டு நாங்கள் இடம்பெயர்ந்திருந்தோம். மிக நீண்ட தூரத்தில்உள்ள அக்கராயன் என்ற கிராமத்தில் தஞ்சமடைந்திருந்தோம். எனது பெரியம்மா மூன்றுமுறிப்பு என்ற காட்டுப் பகுதியில் தஞ்சமடைந்திருந்தார். 1996இல் நடந்திருந்தது. அப்பொழுதுஅவர்களின் வீட்டுக்கு சென்றிருந்த பொழுது அருகில் உள்ள சிறிய மினித்திரையரங்கில்ரஜனிகாந் நடித்த ஆறிலிருந்து அறுபதுவரை என்ற திரைப்படத்தைப் பார்திருந்தேன்.எண்பதுகளில் வெளியான அந்தத் திரைப்படத்தை அப்பொழுதுதான் நான் பார்த்திருந்தேன்.இடம்பெயர்ந்த அந்த நாட்களிலும் அந்தத் திரைப்படத்தை பார்க்க முடிந்தது.

அன்று திரைப்படங்களைப் பார்க்க நமக்கு இருந்த சூழல்மிகவும் இக்கட்டானது. வசதியற்ற திரையங்குகள்தான் இருந்தன. எல்லாவற்றையும் விட்டுஓடிக் கொண்டிருந்தோம். இருக்க வீடற்று காடுகளிலும்p மரங்களுக்கு கீழாகவும் மக்கள்இருந்த சூழலில் திரையரங்குகளை அமைப்பது அவற்றை எத்தனை நாட்களுக்காக அnமைப்பது என்ற கேள்விகளால்எங்கேனும் தற்காலிகமாக கிடைத்த பொருட்களில் அமைக்கப்பட்ட கொட்டகைகளினுள்திரைப்படங்கள் ஓடின. திரைப்படங்கள் பார்க்கும் தருணத்தில் விமானங்கள் வந்தால்தெரியாது செல் அடி;த்தால் விளங்காது என்பதால் திரைப்படங்கள் மிகவும் அஞ்சிக் கொண்டும் பார்க்கவேண்டியிருந்தது. அக்காலத்திலும் சில திரைப்படங்களை மக்கள் விரும்பிப் பார்த்தார்கள்.அதில் ரஜனிகாந்தின் படங்கள் முக்கியம் பெறுகின்றன.

எனது நண்பர்கள் இருவருக்கு அவர்களின் பெற்றோர்கள்ரஜனிகாந் என்று பெயர் வைத்திருந்தார்கள். இருவரும் 1983இல் பிறந்தவர்கள். ஒருவன்கிளிநொச்சியில் பிறந்து வளர்ந்து நான் படித்த பாடசாலையில் என்னுடன் படித்திருந்தான்.மற்றவன் யாழ்ப்பாணத்தில் பிறந்து இடம்பெயர்ந்த காலத்தில் அக்கராயனில் என்னுடன் ஒருஅகதிக்குடியிருப்பில் வசித்திருந்தான். இவர்களின் பெற்றோர்கள் நடிகர் ரஜனிகாந்தன்ரசிகர்கள். அவரின் திரைப்படங்களின் பாதிப்பாhல் அந்தப் பெயரை தங்கள் பி;ள்ளைகளுக்கு வைத்திருக்கிறார்கள்.கடந்த மூன்று தசாப்தத்தைச் சேர்ந்த ஈழத்து மக்கள் ரஜனிகாந்தின் ரசிகர்களாகஉள்ளார்கள்.

1999இற்குப் பிற்காலத்தில் வெளியானரஜனிகாந்தின் படங்கள் பலவும் தொடர்ந்து வெளியிடப்பட்டிருக்கின்றன. சமாதானகாலங்களில் ஈழத் தமிழ் வெகுசன மக்களால் அவை விரும்பிப் பார்க்கப்பட்டுள்ளன. அப ர்வராகங்கள், முள்ளும்மலரும், பதினாறுவயதினிலே, மூன்றுமுடிச்சு, மூன்றுமுகங்கள்,தர்மத்தின்தலைவன்,தர்மத்துரை போன்றதிரைப்படங்கள் எண்பதுகளின் காலகட்டத்து ஈழத்து மக்களுடன் பின்னர் உருவாகியதலைமுறைகளிடத்திலும் மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தன. காலம் கடந்தும் மினித்திரையரங்குகளிலும் வீட்டு முற்றங்களில் தொலைக்காட்சிப் பெட்டிகளிலும்ஓடியிருக்கின்றன. குறித்த திரைப்படங்களின் பாடல்கள் இலங்கைத் தமிழ் வானொலிகளிலும்பேரூந்துகளிலும் ஒலிபரப்பட்டன. இன்றும் ஒலிக்கின்றன. இலங்கை வானொலிகள் ராஜனிகாந்தின்படங்களையும் அவர் நடித்த படப்பாடல்களையும் சிறப்பு நிகழ்ச்சிகளை அமைத்துஒலிபரப்புகின்றன.

பாட்ஷா, முத்து, படையப்பா, போன்ற திரைப்படங்கள் தமிழகத்தில் வெளியானகாலகட்டத்திலேயே வெளியாகி திரையரங்குகளில் பல நாட்கள் ஓடியிருக்கின்றன. சந்திரமுகிஈழத்தில் பெரியளவில் ஓடவில்லை. அதைப்போலவே குசேலன் படமும் ஓடவில்லை. சிவாஜி,எந்திரன் போன்றதிரைப்படங்களும் நன்றாக ஓடியிருந்தன. தமிழகத்துத் திரைப்படங்களிலிருந்து ஈழத்துசினிமா வேறுபடுகிறது. ஈழத்து சினிமா இலட்சியம் சார்ந்த கருத்துக்களையும்மக்களிடத்தில் கொண்டு செல்லுகின்றன. போர் சார்ந்த அவலங்களை பதிவு செய்கின்றன.அடுத்த கட்டமான பொழுது போக்குத் தேவைகளுக்காக தமிழகப்படங்கள் பார்க்கப்பட்ட பொழுதுரஜனியின் திரைப்படங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன.

முள்ளிவாய்க்கால் போர் நடந்து கொண்டிருந்த பொழுதுதமிழகத்தில் நடந்த போராட்டம் ஒன்றில் தமிழ்த் திரையினருடன் நடிகர் ரஜனிகாந் கலந்துகொண்டு ஆதரவளித்தார். ஈழத்து மக்கள் ஈழப்போராட்டத்திற்காகவும் இனி அழிப்புக்குஎதிராகவும் அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறார்கள். பெரும் ரசிகர்கூட்டம் கொண்ட ரஜனிகாந் ஈழத் தமிழ் மக்களுக்காக அன்று ஆதரவளித்தது போல தொடர்ந்தும்ஈழத்து தமிழ் மக்கள் தங்கள் வாழ்வுரிமை பெற குரல் கொடுக்க வேண்டும். ஈழத்தில்ரஜனிகாந்த் மூன்று தலைமுறைக்கு மேற்பட்ட மக்களால் கொண்டாடப்படும் சூப்பஸ்டார்என்பதை இறுதியாக அழுத்திச் செல்ல வேண்டும்.

ரஜனிகாந் சாதாரண மக்களை கவரும் நடிப்பைவெளிப்படுத்துபவர். இவரது ஸ்டைல்கள் ஈழத்து இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடத்திலும்தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ரஜனி படம் என்கிற ஈர்ப்பு அவர்களிடத்தில்வெகுவாகவே இருக்கிறது. போர்ச் சூழலில் வாழும் எங்கள் மத்தியில் திரைப்படங்களைப்பார்க்கும் காலமும் சூழலும் இருப்பதென்பது மிகவும் சிக்கலானது. எனினும் போர் ஓய்ந்த தருணங்களில் தடைகளைத் தாண்டிஈழத்து மக்களின் பொழுது போக்குச் சாதனத்தில் இன்று அதிகம் முக்கியம் பொறும்சினிமாவில் தமிழகச் சினிமாவே மிகவும் தாக்கம் செலுத்துகிறது.

அப்படிப்பபார்க்கப்பட்ட படங்களில் ரஜனி படங்கள் அதிகம் பார்க்கப்பட்டுள்ளன. ரஜனிக்கு பலர் ரசிகர்களாகியுள்ளனர். நெருக்கடியான சூழல்களைக் கடந்து வாழும்மக்களிடத்தில் நடிகர் ரஜனிகாந்த் பெறுகிற ரசிப்புத்தன்மை முக்கியமானதாக இருக்கிறது. ஒரு நடிகராக ஒரு கலைஞராக தமிழகமக்களிடத்தில் செல்வாக்குள்ளவராக நடிகர் ரஜனிகாந்த் ஈழத்து மக்களுக்கு என்னசெய்வார்? தமிகத்தின்ஒவ்வொரு உறுவுகளுக்கும் இந்தப் பொறுப்பு இருக்கிறது. நாம் அதை எதிர்பார்க்கிறோம்.

தீபச்செல்வன், ஈழ கவிஞர், ஊடகவியலாளர்.
deebachelvan@gmail.com

http://www.tamilwin.com/show-RUmpzCTajFKZm.html

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கூத்தாடிகளை எங்க வைக்கணுமோ அங்க தான் வைக்கணும்..!! அவ்வளவு முக்கி முக்கியத்துவம் தேவை இல்லை ,,..!

எல்லாம் சரிதான் புரட்சி.. ஆனால் தமிழ்நாட்டின் விதி, மக்களின் மனநிலை சினிமா கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, அதில் வரும் கதாபாத்திரங்களை ரசிப்பதோடு நிற்காமல் தன் வாழ்வின் வழிகாட்டிகளாக, தீர்மானிகளாக பார்க்க ஆரம்பித்தவுடன் தான் தமிழகத்தின் தலையெழுத்தே மாறிவிட்டது.. வேறு எந்த மாநிலத்திலும் இந்தளவிற்கு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

raj.jpg

திருமாவளவனை வேல்முருகனை திட்டுவது கூட ஒ.கே !! ஆனால் இந்த கன்னட கூத்தாடியை தலைவன் என்று ஏற்று கொள்வது  .. அட கடவுளே..! இங்கதான் இந்த மாறி என்றால் ...!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.