Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்கள் ஐவருக்கு 20 ஆண்டு கால சிறைத் தண்டனை

Featured Replies

முன்னாள் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்கள் ஐவருக்கு 20 ஆண்டு கால சிறைத் தண்டனை

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் ஐந்து பேர் மீதான தண்டனையை, நெதர்லாந்து நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

1_V_LTTE.jpg

நெதர்லாந்தில், 2003-2010க்கு இடைப்பட்ட காலங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதன்போது பலரும் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், சட்டத்துக்குப் புறம்பான முறையில் அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்களையும் இவர்கள் வினியோகித்ததாகவும் கூறப்பட்டது. இவை மூலம் பெறப்பட்ட பணத்தை சட்ட விரோதமாக இலங்கைக்கு அனுப்பியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இக்குற்றச்சாட்டுக்களின் பேரில் குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சந்தேக நபர்களுக்கு இருபது ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இவர்களில் நால்வர் மேன்முறையீடு செய்தபோதும், அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதுடன் தண்டனையும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/18723

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட ஐவர்? நெதர்லாந்து நீதிமன்றம் முக்கிய முடிவு

நாட்டுக்கு வெளியே ஆயுதம் தாங்கி போரிட்டவர்களாக இருந்தாலும் நெதர்லாந்து குற்றவியல் சட்டப்படி அவர்களை தண்டிக்க முடியும் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் என்ற காரணத்தால் நெதர்லாந்தில் தண்டனை பெற்றவர்கள் விடயத்தில் அந்த நாட்டின் உச்சநீதிமன்றம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக நெதர்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2003ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக செயற்பட்டதாக ஐந்து பேருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஐந்து பேரும் ஹேக் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

குறித்த 5 பேரும் சுதந்திர நாடு கோரிக்கையை முன்வைத்து நடைபெற்ற போராட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக, புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இணைந்து போரில் கலந்து கொண்டார்களா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 5 பேரும் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு எதிராக செயல்பட்டால் மட்டுமே தண்டிக்க முடியும்.

விடுதலைப் புலிகள் ஈடுபட்ட மோதல் என்பது இருவேறு நாடுகளுக்கு இடையே ஆனதல்ல எனவும், அது இலங்கை தேசத்தின் உள்விவகாரம் எனவும் நீதிமன்றத்தில் தெளிவுப் படுத்தப்பட்டுள்ளது.

இதனால் குற்றவாளிகள் என கருதப்படும் 5 பேரும் சர்வதேச கலவரக்காரர்களாக கருத முடியாது எனவும் மேல்முறையீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/special/01/141635

  • தொடங்கியவர்

புலி உறுப்பினர்கள் ஐவருக்கு 20 வருடங்கள் சிறை :

நெதர்­லாந்தில் விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்­துக்­காக நிதி சேக­ரித்த குற்­றத்­துக்­காக ஹேக் நீதி­மன்றம் ஐந்து தமி­ழ­ர்களுக்கு விதித்த 20 வருட சிறைத்தண்­ட­னையை நெதர்­லாந்து உச்ச நீதி­மன்றம் உறு­தி­செய்­துள்­ளது. நாட்­டுக்கு வெளியே ஆயுதம் தாங்கி போரிட்­ட­வர்­க­ளாக இருந்­தாலும் நெதர்­லாந்து குற்­ற­வியல் சட்­டப்­படி அவர்­களை தண்­டிக்க முடியும் என அந்­நாட்டு உச்ச நீதி­மன்றம் தெரி­வித்­துள்­ளது. விடு­தலைப் புலி­க­ளுக்கு ஆத­ர­வாக செயற்­பட்­ட­வர்கள் என்ற கார­ணத்தால் நெதர்­லாந்தில் தண்­டனை பெற்­ற­வர்கள் விட­யத்தில் அந்த நாட்டின் உச்­ச­நீ­தி­மன்றம் இந்த முடி­வுக்கு வந்­துள்­ள­தாக நெதர்­லாந்து ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

maxresdefault.jpg

2003-–2010 ஆம் ஆண்டுக்கு இடைப்­பட்ட காலங்­களில் விடு­தலைப் புலிகள் இயக்­கத்­துக்­காக நிதி சேக­ரித்­த­தாக இவர்கள் மீது குற்றம் சாட்­டப்­பட்­டி­ருந்­தது.

பல தமி­ழர்­களை அச்­சு­றுத்தி இந்த ஐவரும் நிதி சேர்த்­த­தாக வழக்கு தொட­ரப்­பட்­டி­ருந்­தது. மேலும், சட்­டத்­துக்குப் புறம்­பான முறையில் அதிர்ஷ்ட இலாபச் சீட்­டுக்­க­ளையும் இவர்கள் விநி­யோ­கித்­த­தா­கவும் கூறப்­பட்­டது. இவை மூலம் பெறப்­பட்ட பணத்தை சட்டவிரோ­த­மாக இலங்­கைக்கு அனுப்­பி­ய­தா­கவும் குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது. இக்­குற்­றச்­சாட்­டுக்­களின் பேரில் குறித்த ஐவரும் கைது செய்­யப்­பட்­டனர்.

நெதர்­லாந்துப் பிரஜை ஒருவர், ராத்­தர்டாம் பொலிஸ் நிலை­யத்தில் ஒரு புகார் கொடுத்தார். ஒரு நபர், தம்மை மிரட்டி பண வசூல் செய்­கிறார் என்­பதே புகார். அடுத்த சில தினங்­களில், இதே­போல வேறு சில புகார்­களும் நெதர்­லாந்தில் வெவ்­வேறு நகர பொலிஸ் நிலை­யங்­களில் பதி­வா­கின.

ஆனால் குற்றம் சாட்­டப்­பட்­ட­வர்கள் மீது எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­காது நெதர்­லாந்து பொலிஸார் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை கண்­கா­ணிக்­கத்­தொ­டங்­கினர்.

பொலிஸார் பல மாதங்கள் சேக­ரித்த தக­வல்­களை நெதர்­லாந்து தேசிய பாது­காப்­புக்குப் பொறுப்­பான உளவுப் பிரி­வான Algemene Inlichtingen- en Veiligheidsdienst (AIVD) என்ற அமைப்­பிடம் கைய­ளித்­தனர்.

2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கைத் தமி­ழர்களின் 16 இடங்கள் ஒரே நேரத்தில் நெதர்­லாந்து உள­வுத்­துறை சுற்­றி­வ­ளைத்­தது. இதில் 7 பேர் கைதா­கினர். கணினி ஹார்ட் டிஸ்க்­குகள், டி.வி.டி.க்கள், புகைப்படங்கள் உட்­பட பல ஆவ­ணங்கள் கைப்­பற்­றப்­பட்­டன. பண­மாக 40,000 யூரோ எடுக்­கப்­பட்­டது.

கைது செய்­யப்­பட்­ட­வர்­களில், விடு­த­லைப்­பு­லி­களின் சர்­வ­தேச பிர­தான கணக்­கா­ளரும், நெதர்­லாந்து தலை­வரும் அடக்கம் என்று கூறப்­பட்­டது. தமிழர் புனர்­வாழ்வுக் கழகம், தமிழ் இளையோர் அமைப்பு, தமிழ் மகளிர் அமைப்பு, தமிழ் கலை பண்­பாட்டுக் கழகம் ஆகி­ய­வற்றின் நெதர்­லாந்துத் தலை­வர்­களும் கைது செய்­யப்­பட்­ட­தாக பி.பி.சி. செய்தி வெளி­யிட்­டது.

பின்னர் இந்த விடயம் நெதர்­லாந்து நீதி­மன்­றத்­துக்குச் சென்­றது. பயங்­க­ர­வாத இயக்­க­மாக தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு நிதி சேகரித்தல் தொடர்பான வழக்கு பதிவாகியது. விடுதலைப் புலிகளுக்காக மிரட்டி பணம் சேகரித்ததாக Extortion, Material support to terrorism, Money laundering ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/18783

  • கருத்துக்கள உறவுகள்

காசை அடித்து விட்டான் ...
காசை அடித்து விட்டான் என்று ....
கூவுற கூட்ட்த்தில் இருந்து எத்தனை பேர் 
நாங்களும் கூட வாறம் என்று ஜெயிலுக்கு போகிறார்கள் என்று பார்ப்போம். 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On ‎06‎.‎04‎.‎2017 at 8:27 AM, Maruthankerny said:

காசை அடித்து விட்டான் ...
காசை அடித்து விட்டான் என்று ....
கூவுற கூட்ட்த்தில் இருந்து எத்தனை பேர் 
நாங்களும் கூட வாறம் என்று ஜெயிலுக்கு போகிறார்கள் என்று பார்ப்போம். 

போராட்டத்தைச் சாதகமாக்கி உண்மையிலேயே காசை அடித்தவர்களும், தங்களை இனம் கண்டவர்களிடம் இருந்து ஒதுங்கி மறைந்து கொள்ள, உங்களின் கருத்தைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. 
 
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Paanch said:

போராட்டத்தைச் சாதகமாக்கி உண்மையிலேயே காசை அடித்தவர்களும், தங்களை இனம் கண்டவர்களிடம் இருந்து ஒதுங்கி மறைந்து கொள்ள, உங்களின் கருத்தைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. 
 
மக்களை கொலைசெய்து கடத்தி வைத்து மிரட்டி 
வவுனியாவில் பணம் பறித்த சிர்த்தார்த்தனிடம் சென்று எத்தனை பேர் காசு கேட்டு விட்டார்கள்??

காசை ஒருவன் களவாடி இருந்தால் ...
அவன் சிரத்தார்தானின் தம்பியாகத்தான் இருக்கும் 
அப்படி ஒரு அஜோக்கினால்தான் மக்கள் காசை சுருட்ட முடியும்.

அப்ப்டியானவன் இங்கு வந்து யாரும் கருத்து பகிர்வதால் 
திருப்பி கொடுக்க போகிறானா ?

காசு சேர்த்த எல்லோரையும் ....
உழைத்த எல்லோரையும் அதற்குள் அடக்கி விட்டு ...
இங்கு அல்லி கொட்டுவோரைத்தான் ...
நான் கேட்டு எழுதினேன். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

காசு சேர்த்த எல்லோரையும் ....
உழைத்த எல்லோரையும் அதற்குள் அடக்கி விட்டு ...
இங்கு அல்லி கொட்டுவோரைத்தான் ...
நான் கேட்டு எழுதினேன். 

இங்கு அல்லி கொட்டுவோருக்குப் பின்னால் அவர்கள் கொட்டுவதைப் பொறுக்க ஒரு கூட்டம்  இருக்கத்தான் செய்கிறது. யாரை நோவது.? :( 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Maruthankerny said:

காசு சேர்த்த எல்லோரையும் ....
உழைத்த எல்லோரையும் அதற்குள் அடக்கி விட்டு ...

இப்படித்தான்  என்னையும்இந்த சாக்குக்குள்போட்டு

கும்மலடிக்க  கொஞ்சப்பேர்  வெளிக்கிட்டவை

ஆதாரம் கேட்க கொண்டு வாறன் என்று போய் நாலைஞ்சு வருசங்கள்  ஆகுது...

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, செந்தமிழாளன் said:

ஆமா இயக்கம் ஊரில இருந்து இங்கு கொண்டு வந்து முதலிட்டு இருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, செந்தமிழாளன் said:

முதலாவது பதிலை  யாரிடம் கேட்கிறீர்கள்??

அடுத்தது 12 ஆயிரம்போராளிகள்
40 ஆயிரம் மக்கள்  என்று சொல்கிறார்
தாயகத்திலிருக்கிறார்
முழுத்தரவுகளும்  உள்ளதா?
அவை  ஏன்புள்ளி விபரங்களுடன்  இதுவரை வெளியிடப்படவில்லை

ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட அமைப்பு ஏன்  உருவாக்கப்படவில்லை
உருவாக்கப்படக்கூடாது
அவ்வாறு உருவானால்  (தற்பொழுது கூட)
உதவ  பலர்தயாராகவே  உள்ளனர்.

10 minutes ago, MEERA said:

ஆமா இயக்கம் ஊரில இருந்து இங்கு கொண்டு வந்து முதலிட்டு இருக்கு. 

அவர் அவ்வாறு கூறவில்லை. புலம் பெயர்ந்த நாடுகளில் சேர்க்கப்பட்ட நிதி மூலமாக உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் நிதி தற்போது தனிப்பட்டவர்களின் கைகளிலுள்ளது. இதை யாராலும் மறுக்க முடியாது. 

ஆதாரங்கள் வெளியிடுபவர்களின் பாதுகாப்பினை தங்களால் உறுதி செய்ய முடியுமா? 

Just now, விசுகு said:

முதலாவது பதிலை  யாரிடம் கேட்கிறீர்கள்??

அடுத்தது 12 ஆயிரம்போராளிகள்
40 ஆயிரம் மக்கள்  என்று சொல்கிறார்
தாயகத்திலிருக்கிறார்
முழுத்தரவுகளும்  உள்ளதா?
அவை  ஏன்புள்ளி விபரங்களுடன்  இதுவரை வெளியிடப்படவில்லை

ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட அமைப்பு ஏன்  உருவாக்கப்படவில்லை
உருவாக்கப்படக்கூடாது
அவ்வாறு உருவானால்  (தற்பொழுது கூட)
உதவ  பலர்தயாராகவே  உள்ளனர்.

தரவுகள் சேகரிக்க கூடியளவு நிலைமை அங்குள்ளதா? இதற்கான அமைப்பினை ஒழுங்கமைக்க வேண்டியவர்கள் எமது தமிழ் அரசியல் வாதிகள்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, செந்தமிழாளன் said:

தரவுகள் சேகரிக்க கூடியளவு நிலைமை அங்குள்ளதா? இதற்கான அமைப்பினை ஒழுங்கமைக்க வேண்டியவர்கள் எமது தமிழ் அரசியல் வாதிகள்தான்.

அப்படியானால் எவ்வாறு இவ்வாறு பகிரங்கமாக பேசமுடிகிறது???

Edited by விசுகு

உங்கள் கருத்துப்படி போராளிகள் மக்கள் எல்லோரும் அங்கு வறுமையில் நோயில் வாடாமல் பிச்சையெடுக்காமல் , தமது வாழ்வாதாரதுக்காக இராணுவத்தினரின் கால்களில் விடாமல், விபாச்சரத்துக்கு தூண்டப்படாமல் , தமது குடும்பத்தினரின் வயிற்றுப்பசி போக்குவதற்காக மதம் மாறாமல் இன்னும் தற்கொலை செய்யாமல் நிம்மதியாக வாழ்கின்றார்கள் இல்லையா ? 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, செந்தமிழாளன் said:

அவர் அவ்வாறு கூறவில்லை. புலம் பெயர்ந்த நாடுகளில் சேர்க்கப்பட்ட நிதி மூலமாக உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் நிதி தற்போது தனிப்பட்டவர்களின் கைகளிலுள்ளது. இதை யாராலும் மறுக்க முடியாது. 

ஆதாரங்கள் வெளியிடுபவர்களின் பாதுகாப்பினை தங்களால் உறுதி செய்ய முடியுமா? 

செந்தமிழாளன், உறுதி செய்வதற்குரிய ஆள் நான் அல்ல, ஆனால் சிலதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

புலம்பெயர் நாடுகளில் 15இலட்சத்திற்கும் (?) அதிகமான தமிழர்கள் இருக்கிறார்கள். இதில் சில நூற்றுக்கணக்கானவர்களிடமே இப்படியான சொத்துக்கள் அகப்பட்டுக் கொட்டுள்ளது, அதை வைத்துக் கொண்டு புலம்பெயர் தமிழர்கள் எல்லாரும் ஆட்டையை போட்டார்கள் என்பது தவறு. 

இந்த நிதி ஆரம்பத்திலிருந்து சட்டத்திற்கு முரணாகவே திரட்டப்பட்டதால் வெளிக் கொண்டு வருவது சாத்தியமற்றது, நிதியை அமுக்கியவர்கள் தாமாக முன்வந்தாலே சாத்தியம், ஆனால் அவர்கள் ஒருபோதும் வரப்போவதில்லை

ஆகவே இந்த விடயத்தை தவிர்த்து அடுத்த கட்டத்திற்கு நகர்வதே நல்லது, 

Just now, MEERA said:

உங்கள் கருத்துடன் உடன்படுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, செந்தமிழாளன் said:

உங்கள் கருத்துப்படி போராளிகள் மக்கள் எல்லோரும் அங்கு வறுமையில் நோயில் வாடாமல் பிச்சையெடுக்காமல் , தமது வாழ்வாதாரதுக்காக இராணுவத்தினரின் கால்களில் விடாமல், விபாச்சரத்துக்கு தூண்டப்படாமல் , தமது குடும்பத்தினரின் வயிற்றுப்பசி போக்குவதற்காக மதம் மாறாமல் இன்னும் தற்கொலை செய்யாமல் நிம்மதியாக வாழ்கின்றார்கள் இல்லையா ? 

இல்லை

வடக்கு மாகாண  சபை   உருவான போதாவது இவ்வாறான ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பு உருவாகும் என்பதே என்  போன்றவர்களின் எதிர்பார்ப்பாக  இருந்தது

ஆனால்  நிலமை  என்ன?

இன்று மாகாண  சபைக்குள்ளேயே  ஊழல்  எனும்நிலை

இந்த நிலையில் பல குளறுபடிகள்

பல ஏமாற்று வேலைகள்

அதற்காகத்தான் இவர்போன்றவர்களாவது

ஒருவரை  ஒருவர்குற்றம் வாட்டுதல்

மற்றும்எமக்குள்பிளவுகளை  விதைப்பதை  விடுத்து

இனி மேலாவது உண்மையான போராளிகள் பொதுமக்களை  இனம் கொண்டு

ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட தரவுகளுக்குள் கொண்டு வந்தால்

நிச்சயம் உதவிகள் கிடைக்கும்

1 minute ago, விசுகு said:

அவர் ஏன் பிளவுகளை விதைக்கின்றார் என நினைக்கின்றீர்கள். உண்மையை தெளிவுபடுத்துகின்றார் தமது ஆதங்கத்தினை வெளிப்படுதுகின்றார் .

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, செந்தமிழாளன் said:

அவர் ஏன் பிளவுகளை விதைக்கின்றார் என நினைக்கின்றீர்கள். உண்மையை தெளிவுபடுத்துகின்றார் தமது ஆதங்கத்தினை வெளிப்படுதுகின்றார் .

அவரது கடைசி வரிகளை கேளுங்கள்

90  களில்  வெளிநாடு போய் சொத்துக்களை  குவித்துவிட்டு

இந்த பேய்க்கதை  கதைக்கப்படாது என்கிறார்...

யாருக்கு  இது????

1 minute ago, விசுகு said:

அவரது கடைசி வரிகளை கேளுங்கள்

90  களில்  வெளிநாடு போய் சொத்துக்களை  குவித்துவிட்டு

இந்த பேய்க்கதை  கதைக்கப்படாது என்கிறார்...

யாருக்கு  இது????

அவர் எல்லோருக்கும் சொல்லவில்லை. பேய் கதை கதைப்பவர்களுக்கு தான் சொல்கின்றார். ஆகவே தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவ்வளவோ போராளிகள் சிறையில் அடைக்கப்படுள்ளார்கள் என சொல்கிறார்கள்.
ஆனால் இவர் மட்டும் வெளியில் வந்து.......2009க்கு முன் போல் சர்வ சாதாரணமாக விடுதலைப்புலிகள் பொறுப்பாளர் போன்று கதைக்கின்றாரே....இது இன்றையகாலகட்டத்திற்கு எப்படி சாத்தியமானது????

இவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லது செய்ய விரும்பினால் ஒரு அறக்கட்டளையை திறந்து  உதவி திட்டத்தை ஆரம்பிக்கலாமே.

12 minutes ago, குமாரசாமி said:

சொல்பவர் பிழையாயிருக்கலாம். சொல்லும் விடயங்கள் பிழையில்லையே !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, செந்தமிழாளன் said:

சொல்பவர் பிழையாயிருக்கலாம். சொல்லும் விடயங்கள் பிழையில்லையே !

அவர் சொல்லும் விடயங்கள் கேட்கும் கேள்விகள்.....
எப்படி இலங்கையில் தடைசெய்யப்பட்ட  அமைப்பு சார்பாக கேள்விகள் கேட்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

உவர் சொல்லுறதில ஒரு பிழையும் இல்லை கண்டியளோ.

ஸ்கந்ததேவா முதல் பல பேர் இயக்கத்துக்கு காசு என்று சேர்த்து, வீடு சொத்து வாங்கி குவித்து விட்டு இப்ப, கேட்டால்,  அண்ண வருவார், பத்திரமா ஒப்படைக்க வேணும் என்று கவனமா பார்க்கிறோம். என்று குளுசை தருவினம்.

எல்லாம் முடிந்த பின்னும்., 2009 மே 21 ம் திகதி, கிளம்பி வந்து, அண்ண ரகசியத் தகவல், மேல பறக்கிறது விழுத்த ஆயுதம் உடனே நாடு போகவேணும்.... காசு வேணுமாம் என்று குளுசை விட்டவர் (சில பேர் குடுத்தவையள் தான்) இப்ப, தனது மாமனாரின் பெயரில் £1.8 மில்லியனுக்கு freehold பெட்ரோல் நிலையம் வாங்கி, லேண்ட் ரோவர் புதிய கார் இறக்கி ஓடுகிறார்.

சீதனமாம். மாமா கொழும்பில வியாபாரத்தில கொடி கட்டி பறந்தவராம் எண்டு புளூடா. (இத்தனைக்கும் மாமனார், அரிசி புரோக்கர்.) 

7 minutes ago, குமாரசாமி said:

அவர் சொல்லும் விடயங்கள் கேட்கும் கேள்விகள்.....
எப்படி இலங்கையில் தடைசெய்யப்பட்ட  அமைப்பு சார்பாக கேள்விகள் கேட்க முடியும்?

இவர் புனர்வாழ்வு கொடுக்கப் படடவரோ தெரியவில்லை.

புலியோ, சிங்கமோ, போராளிகளுக்கோ, வேற யாருக்கோ... காசைக் கொண்டோடி வாருங்கோ எண்டெல்லோ வங்குரோத்து அரசாங்கம் நிக்குது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
49 minutes ago, Nathamuni said:

உவர் சொல்லுறதில ஒரு பிழையும் இல்லை கண்டியளோ.

ஸ்கந்ததேவா முதல் பல பேர் இயக்கத்துக்கு காசு என்று சேர்த்து, வீடு சொத்து வாங்கி குவித்து விட்டு இப்ப, கேட்டால்,  அண்ண வருவார், பத்திரமா ஒப்படைக்க வேணும் என்று கவனமா பார்க்கிறோம். என்று குளுசை தருவினம்.

எல்லாம் முடிந்த பின்னும்., 2009 மே 21 ம் திகதி, கிளம்பி வந்து, அண்ண ரகசியத் தகவல், மேல பறக்கிறது விழுத்த ஆயுதம் உடனே நாடு போகவேணும்.... காசு வேணுமாம் என்று குளுசை விட்டவர் (சில பேர் குடுத்தவையள் தான்) இப்ப, தனது மாமனாரின் பெயரில் £1.8 மில்லியனுக்கு freehold பெட்ரோல் நிலையம் வாங்கி, லேண்ட் ரோவர் புதிய கார் இறக்கி ஓடுகிறார்.

சீதனமாம். மாமா கொழும்பில வியாபாரத்தில கொடி கட்டி பறந்தவராம் எண்டு புளூடா. (இத்தனைக்கும் மாமனார், அரிசி புரோக்கர்.) 

இவர் புனர்வாழ்வு கொடுக்கப் படடவரோ தெரியவில்லை.

புலியோ, சிங்கமோ, போராளிகளுக்கோ, வேற யாருக்கோ... காசைக் கொண்டோடி வாருங்கோ எண்டெல்லோ வங்குரோத்து அரசாங்கம் நிக்குது.

யார் கொடுத்த காசை? 

யாருடைய காசை????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.