Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

அண்ணாவை காணவில்லை என 
அழுதாள் தங்கச்சி
அவளும் காணாமல் போனாள்..!!!

என்ர பிள்ளையை திருப்பித்தாங்கோ என
கதறினாள் ஒரு தாய்
அவளும் காணாமல் போனாள்..!!!

இதயமே இல்லாத 
இரும்புமனிதர்கள் தேசத்தில்
கண்ணீர் வடிப்பது தண்டனைக்குரிய "குற்றம்"

மனிதமே இல்லாத மிருகங்கள் தேசத்தில்
விழி நீரின் "வலி" தெரியாது
அழுபவனுக்கு மரண "தண்டனை"!

நாக்குகள் அறுக்கப்படும் நரக பூமியில்
கேள்வி கேட்பவன் "தீவிரவாதி"

நீதியே இல்லாத நிர்வாண நாட்டில்
கோமணத்தோடு திரிபவன் "குற்றவாளி"

கேட்க நாதியற்ற இனமாய் இருப்பதால்
நாய் கூட துணிந்து காலைத்தூக்கும் "நரக தேசம்"

விசர் நாய்க்கு தண்ணீருக்குப் பயம்
வெறிநாய்களுக்கு தமிழனின் கண்ணீருக்குப் பயம்!

இரத்தக்காட்டேறிகளின் தேசத்தில்
குருதியே "குடிபானம்"-தமிழனின்
கண்ணீரே கறை கழுவும் தண்ணீர்!

என் அண்ணா எங்கே என கேட்டவளும் இல்லை...
அவர்களை பெற்றவளும் இல்லை...

உலக மனிதாபிமான கனவான்களே!!!

மலேசியன் விமானத்தை தேடும்போது
இவர்களையும் கொஞ்சம் தேடுங்கள்....
ஏனெனில்.........
தமிழர்களும் "மனிதர்கள் தான்"!!!

#தமிழ்ப்பொடியன்©
15/03/2014

https://soundcloud.com/podiyan/i-want-my-brother-alive

Image may contain: 3 people
  • Replies 233
  • Views 43.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தும் விருப்பும் இட்ட மற்றும் வாசித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப, நெடுக்கருக்கு ஊர்ல கலியாணம் போல...

சொல்லவேயில்லை. வந்து வாழ்த்தியிருப்போமே... 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

அப்ப, நெடுக்கருக்கு ஊர்ல கலியாணம் போல...

சொல்லவேயில்லை. வந்து வாழ்த்தியிருப்போமே... 

எல்லாத்தையும் ஒன்றா போட்டு மிக்ஸ் பண்ணக் கூடாது முனியார். அதுவேற.. இது வேற. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

எல்லாத்தையும் ஒன்றா போட்டு மிக்ஸ் பண்ணக் கூடாது முனியார். அதுவேற.. இது வேற. tw_blush:

கவியே,

கவிதையும் புரிந்தது.

கவிதை ஊடாக சொல்ல வந்த விடயமும், சொல்லாத விடயமும் புரிந்தது...

சரி.. போய் பார்த்தது பகிர்ந்தீர், போன காரணம் பகிரவில்லையே...

அது எப்போது ? :10_wink:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

கவியே,

கவிதையும் புரிந்தது.

கவிதை ஊடாக சொல்ல வந்த விடயமும் புரிந்தது...

சரி.. போய் பார்த்தது பகிர்ந்தீர், போன காரணம் பகிரவில்லையே...

அது எப்போது ? :10_wink:

சொந்த மண்ணை.. உறவுகளைத் தேடி ஒரு பயணம் அவ்வளவே. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

சொந்த மண்ணை.. உறவுகளைத் தேடி ஒரு பயணம் அவ்வளவே. tw_blush:

நான் போனபோது ஒரு விடயம் தோன்றியது. உங்களுக்கும் தோன்றி இருக்கும்.

யுத்தத்துக்கு ஆயிரம் காரணம் இருந்தாலும், யுத்தம் இல்லாத பூமி..... அழகானது..

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்.. யுத்தமில்லாத பூமி அழகானது என்பதை விட அமைதியானது பொருந்தும். ஆனால்.. அந்த அமைதிக்குள் அமுங்கிக் கிடக்கும் வேதனைகளும் எதிர்பார்ப்புக்களும்... ஏக்கங்களும்... வெளியே வரமுடியாத உணர்வுகளாய் அமுங்கிப் போவதும் நடந்தே வருகிறது... அல்லது அமுக்கப்படுவதும் நடத்தப்படுகிறது. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, nedukkalapoovan said:

சொந்த மண்ணை.. உறவுகளைத் தேடி ஒரு பயணம் அவ்வளவே. tw_blush:

ஹலோ..... நெடுக்ஸ்..... :grin:
தாய், தந்தை வழிகளில் உள்ள,  பழைய உறவுகளை தேடிப் போனீர்களா....
அல்லது வருங்கால... உறவைத் தேடி போனீங்களா? tw_heart:
என்பதே...  இப்போது, எம் முன் உள்ள, கேள்வி? tw_warning:
சுத்தி வளைக்காமல், பதில் சொல்லுங்கள். :D: 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nedukkalapoovan said:

ஆம்.. யுத்தமில்லாத பூமி அழகானது என்பதை விட அமைதியானது பொருந்தும். ஆனால்.. அந்த அமைதிக்குள் அமுங்கிக் கிடக்கும் வேதனைகளும் எதிர்பார்ப்புக்களும்... ஏக்கங்களும்... வெளியே வரமுடியாத உணர்வுகளாய் அமுங்கிப் போவதும் நடந்தே வருகிறது... அல்லது அமுக்கப்படுவதும் நடத்தப்படுகிறது. tw_blush:

 

வேதனைகளும் எதிர்பார்ப்புக்களும்... ஏக்கங்களும்... நிறைந்ததே வாழ்க்கை. அது எங்குமே நிரந்தரமானது.

500 வருடங்களாக அடிமைத்தனமாக வாழ்ந்த பூமி.

ஒரு நாள் தலை நிமிரும்.

அது எத்தனை ஆண்டுகள் ஆகுமோ சொல்ல முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையும் படங்களும் அருமை ....! 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nedukkalapoovan said:

ஆம்.. யுத்தமில்லாத பூமி அழகானது என்பதை விட அமைதியானது பொருந்தும். ஆனால்.. அந்த அமைதிக்குள் அமுங்கிக் கிடக்கும் வேதனைகளும் எதிர்பார்ப்புக்களும்... ஏக்கங்களும்... வெளியே வரமுடியாத உணர்வுகளாய் அமுங்கிப் போவதும் நடந்தே வருகிறது... அல்லது அமுக்கப்படுவதும் நடத்தப்படுகிறது. tw_blush:

அமுங்குவதற்கும், அமுக்கப் படுவதற்கும்... முக்கிய காரணம். சிங்களம்  அல்ல.
எம் இனத்துக்கு,   நல்லது செய்வார்கள் என்று....  தமிழ்  மக்களால்,  
தேர்ந்து எடுக்கப்பட்ட...  சம்பந்தன், சுமந்திரன்  கோஸ்டிகளின் ...... கையாலாகாத் தனம்.

அது மட்டுமல்ல, தமிழனுக்கு மட்டுமே... எதிர்க்கட்சி தலைவராக வர வேண்டும் என்று....
யாழ்ப்பாணத்தில்... போர் முடிந்த, புண் ஆறும் முன்னரே.. 
சிங்கள கொடியை  தூக்கிப் பிடித்த போது,  தெரிந்து விட்டது.
அதுக்குப்  பிறகும், இந்த.... அல்லக்கைகளை.... நம்பினது, மாபெரும் தவறு.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ஹலோ..... நெடுக்ஸ்..... :grin:
தாய், தந்தை வழிகளில் உள்ள,  பழைய உறவுகளை தேடிப் போனீர்களா....
அல்லது வருங்கால... உறவைத் தேடி போனீங்களா? tw_heart:
என்பதே...  இப்போது, எம் முன் உள்ள, கேள்வி? tw_warning:
சுத்தி வளைக்காமல், பதில் சொல்லுங்கள். :D: 

புதிய சொந்தங்களை பழைய சொந்தங்களுக்கு காட்டவும் பழகவும்.. அப்படின்னு வைச்சுங்களேன். அதோடு சொந்த மண்ணை தரிசிக்க. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

புதிய சொந்தங்களை பழைய சொந்தங்களுக்கு காட்டவும் பழகவும்.. அப்படின்னு வைச்சுங்களேன். அதோடு சொந்த மண்ணை தரிசிக்க. tw_blush:

அப்படியென்றால்,  உங்களது வருங்கால மனைவி, 
தமிழ் ஆள்... இல்லை  என நினைக்கின்றேன். உண்மையா..... :119_busts_in_silhouette:

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை எழுத கையாவது இருந்திருக்கு தப்பீட்டீங்க.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரைப் பற்றி கவிதை எழுத முடியுது ஆனால் ஊர் பெண்ணை ஊரில் போய் கட்டினதை சொல்ல வெட்கம் ஏன் இப்படிtw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

ஊரைப் பற்றி கவிதை எழுத முடியுது ஆனால் ஊர் பெண்ணை ஊரில் போய் கட்டினதை சொல்ல வெட்கம் ஏன் இப்படிtw_angry:

ஓ அப்ப கயிறு போட்டாச்சா  ரதி :rolleyes:tw_blush:

எல்லா காளைகளும் கயிறு போட்டாள்(ல்) அடங்கி இ(வி ) டுகிறதுtw_blush: 

On 1/28/2017 at 4:27 AM, தமிழ் சிறி said:

அப்படியென்றால்,  உங்களது வருங்கால மனைவி, 
தமிழ் ஆள்... இல்லை  என நினைக்கின்றேன். உண்மையா..... :119_busts_in_silhouette:

இதென்ன புது குழப்பம் கட்டுனாலும் சிங்கன் தமிழ் கட்டையதான் கட்டுவார் tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அழகான அந்த இயற்கையான படங்கள் ரொம்ப பிடித்திருக்கிறது.

  • தொடங்கியவர்

நீ 
அருகில் இருக்கும்.....
நொடிகள் எல்லாம் .....
என்கடிகார முற்கள் ......
நெருஞ்சி முற்கள்.....
என்னை விட்டு பிரிய....
போகிறாய் என்றதும்.....
முள்ளாய் குத்துகிறது.....!!!

&
இனிக்கும் 
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன் 

  • தொடங்கியவர்

காதல்..............
உலகில் அன்பு .............
நிலைபெற, ...............
இறைவன் எழுதிட்ட ...........
எழுத்து...............!!!

காதல் 
வந்துவிட்டால்.... 
காட்சிகள் தெரிவதில்லை! 
உறங்காத விழிகள் 
எரிகின்ற போதும்.... 
வலிகள் ஏதுமில்லை.........!!!

$$$$$
கவிப்புயல் இனியவன் 
 

ஏன் 
மனிதா என்னை .....
கொஞ்சம் கொஞ்சமாய் ...
கொல்லுகிறாய் ......
கெஞ்சி கேட்டு அழுகிறது ....
சிகரெட் .......!!!

நீ 
கொஞ்சம் கொஞ்சமாய் .....
இறப்பதற்காக என்னை .....
ஒத்திகை பார்க்கிறாயா ....?
உன் நுரையீரலை காட்டு ....
நானே நேரடியாய் வந்து .....
கொண்று விடுகிறேன் ....!!!

&
இன்று புற்று நோயாளர் தினம் 
கவிப்புயல் இனியவன் 

  • தொடங்கியவர்

காதல் இதயமும் ....
மெழுகு திரியும் ......
ஒன்றுதான் ......!!!

தனக்காக 
வாழாமல் பிறருக்காக 
எரிகிறது மெழுகு திரி....!!!

தனக்காக வாழாமல்.... 
உனக்காக உருகுகிறேன் ...
என்கிறார்கள் காதலர் ....!!!

மெழுகு திரி 
எண்ணெய்யால் உருகுகிறது ....
காதலர் எண்ணத்தால் .....
உருகுகிறார் ........!!!

&
கவிப்புயல் இனியவன் 

உன்னையே   பார்பேன்...
உன்னை மட்டுமே பார்ப்பேன்......
உன் கண்களை மட்டுமே ....
பார்ப்பேன்......!!!

உன்னை பார்க்காமல் .....
என் கண் யாரையும் ......
பார்க்கமாட்டேன் .......!!!
உயிரே சொல் 
தயவு செய்து சொல்
நீ எங்கிருக்கிறாய் ...?

&
கவிப்புயல் இனியவன் 

  • தொடங்கியவர்

காதலுக்கு 
இளமை......!!!

அனுபவத்துக்கு .....
முதுமை.....!!!

பண்பாட்டுக்கு 
பழமை.....!!!

நட்புக்கு  ......
தோழமை......!!!

முன்னேற்றத்துக்கு .....
திறமை......!!!

அளவான சொத்து...... 
இனிமை.....!!!

காதலில் தோற்றவன் ..... 
தனிமை......!!!

நம்பிக்கை துரோகம்..... 
கொடுமை.....!!!

வாழ்க்கையின் 
இன்பம் துன்பம் 
வழமை.....!!!

&
கவிப்புயல் இனியவன் 

  • தொடங்கியவர்

சமூக தளங்கள் ........
சமூகத்தை சீர் படுத்தும் ......
தளங்களாக இருக்கவேண்டும் .....
சீரழிக்கும் தளங்களாக.......
மாறிவிடக் கூடாது ......!!!

இராணுவ  புரட்சி மூலம்.....
ஆட்சியை மாற்ற இருந்தவர்களை.....
சமூகதள தகவல் மூலம் மக்கள்.....
புரட்சி வெடித்து இராணுவ புரட்சி.....
தோற்கடிக்கப்பட்டற்கு சமூக தள.....
செய்தி பரிமாற்றம் உதவியதை.....
யாரும் மறந்திடமாட்டார்கள்.........!!!

தலைவன் இல்லாமல் தம் இன.....
பண்பாட்டை இளைஞர் போராட்டமாய்.....
போராடி வெற்றி கண்ட ஜல்லிக்கட்டு......
போராட்டம் சமூக தள பரிமாற்றம்.....
உலகையே திரும்பி பார்க்கவைத்து......
உலக புரட்சியின் புதிய பரிமாற்றத்தை.....
படைத்தது சமூக தள ஆயுதம்........!!!

மறுபுறத்தில் வேதனையான .......
சகிக்க முடியாத தகவல் பரிமாற்றம்.........
நடைபெற்றுகொண்டிருப்பதும் ........
மறுப்பதற்கில்லை.........
தனிப்பட்ட பகைமைக்கும்.........
விருப்பு வெறுப்புக்கும் சமூகதளம்......
பயன்படுவது வேதனை அளிக்கிறது.........!!!

எங்கோ நடைபெற்ற நிகழ்வை.......
திரித்து கூறுதல் பொருத்தமற்ற......
ஊகங்களை மக்கள் மத்தியில்......
பரப்புதல் ஒருவகை சமூக குற்றமே......
உண்மையை பலமுறை சொல்லுங்கள்.....
அது சமூகத்தின் தேவைப்படுகள்.....
பொய்யை பலமுறை கூறி உண்மை.....
ஆக்காதீர்கள் அது சமூக விரோதம்.....!!!

இன்னும் பல சமூக அவலமுண்டு.......
அதற்கும் போராட்ட தேவையுண்டு......
தப்பான தகவல்களை பரப்பினால்......
உங்கள் உண்மையான தேவைக்கு......
சமூகம் முன் வர தயங்கும்..........
எந்த ஒரு ஆயுதத்தையும் உண்மைக்காக.......
பயன்படுத்தினால் நிச்சயம் வெற்றியுண்டு....
சிலவேளை தோற்றலும் வரலாறு ஆகும்......!!!

நம் கையில் ஆயுதம் இருக்கிறது......
என்பதற்காக எப்படியும் பயன்படுத்தலாம்.......
எப்போதும் பயன்படுத்தலாம் என்ற......
எண்ணம் மாறவேண்டும் உண்மைக்கு......
பயன்படுத்துவோம் தொடர் வெற்றியை.....
பெறுவோம்...............................!!!

&
சமூக விழிப்புணர்வு கவிதை
கவிப்புயல் இனியவன்
 

  • தொடங்கியவர்

இது குழந்தை தொழில் இல்லையா..?
------------------------------------

பட்டாசு தொழிற்சாலையில்.....
குழந்தை வேலை செய்தால்......
சட்ட நடவடிக்கை.........!!!

தீப்பெட்டி தொழிற்சாலையில்.......
குழந்தை வேலை செய்தால்......
சட்ட நடவடிக்கை.........!!!

செங்கல் சூளையில்....
குழந்தை வேலை செய்தால்......
சட்ட நடவடிக்கை.........!!! 

சல்லி கல் உடைக்க......
குழந்தை வேலை செய்தால்......
சட்ட நடவடிக்கை.........!!! 

குழந்தை 
தொழில் சட்டபடிகுற்றம் .....
தேவையான சட்டம்......
வரவேற்கவேண்டிய சட்டம்.....!!!

சினிமாவிலும் சின்ன திரையிலும்.....
பிஞ்சு மனத்தில் நஞ்சை விதைக்கும்......
காட்சிகளில் நடிக்கும் குழந்தைகள்....
குழந்தை தொழில் இல்லையா....?

உடலில் காயம் வந்தால் தான்.....
குழந்தை தொழில் குற்றமா.....?
உளத்தில் காயம் வந்தால்........
குழந்தை தொழில் குற்றமில்லையா....?
அளவுக்கு மீறிய வயதுக்கு மீறிய......
செயல்களும் வார்த்தைகளும்........
குழந்தை மனசை காயப்படுத்தும்.....
ஏன் இன்னும் புரியவில்லை....?

புரியாமல் தெரியாமலில்லை.....
பணம் பணம் பணம்.............
எல்லமே பணம் செய்யும் மாயை........
வயிற்று பிழைப்புக்கு போராடும்.....
மக்களுக்கு ஒரு நியாயம்......
வர்த்தக கவர்ச்சி மக்களுக்கு.......
இன்னொரு நியாயமா..........?
சிந்திப்போம் செயல்படுவோம்....!!!

&
விழிப்புணர்வு கவிதை
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

நீ ...........
என்னை ..............
காதலிப்பாய் என்றால்...........
நான் என்னை உருக்க தயார்.............
ஆனால் உருக்கி விடாதே ...!!!

காதல் ஒரு சேலை..........
அளவாக இருந்தால் அழகு.........
அளவு மீறினால் கிழிஞ்சிடும் ...!!!

நான் காதல் விளக்கு.........
காதல் திரி  காதல் நெய்......
நீ வெளிச்சமாக இரு போதும்.....!!!

&
கவிப்புயல் இனியவன் 

காதலித்துப்பார் .........
பகலில் நிலாதெரியும்.......
காதலில் தோற்றுப்பார் ......
இரவில் சூரியன் தெரியும் ..!!!

காதலில் இதயத்தில் .....
வருவது முக்கியம் இல்லை ..
நிலையாக இருப்பதே .....
காதலின் காதல் .........!!!

உன்னை ...........
அடையாளம் கண்டேன் ...
என் அடையாளத்தை ............
தேடுகிறேன் ..!!!

&
கவிப்புயல் இனியவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.