Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தண்டனையிலிருந்து தப்பும் கலாசாரம் நீடிக்கக்கூடாது சபையில் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்

Featured Replies

தண்டனையிலிருந்து தப்பும் கலாசாரம் நீடிக்கக்கூடாது

p025-24634efbff7ef106c384b725b5791d94cbe73c3e.jpg

 

சபையில் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்
(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேரவையின் தீர்மானத்தின் முழு­மை­யா­னதும் துரி­தமா­ன­து­மான அமு­லாக்­கமே நாட்டில் இடம்­பெற்ற பேர­ழி­வு­க­ளி­லி­ருந்து மீள்­வ­தற்­கான முத­லா­வது படி­யாக இருக்கும். அவ்­வா­றான நட­வ­டிக்­கையில் காணப்­படும் தாம­த­மா­னது எமது நாட்டின் எதிர்­கா­லத்­துக்கு பாதிப்­பா­கவே அமையும் என எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் நேற்று சபையில் எச்­ச­ரிக்கை விடுத்தார்.

பொது­மக்­க­ளுக்கு எதி­ராக என்ன நடந்­தது என்­பது 

தொடர்­பி­லேயே ஐ.நா கரி­சனை கொண்­டுள்­ளது எனத் தெரி­வித்த எதிர்க்­கட்­சித்­த­லைவர் தண்­ட­னையில் இருந்து தப்பும் தற்­போ­தைய கலா­சாரம் நீடிக்­கக்­கூ­டாது எனவும் சுட்­டிக்­காட்­டினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம் தொடர்­பாக சபை ஒத்­தி­வைப்பு வேளைப் பிரே­ர­ணையில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

 எதிர்க்­கட்சித் தலைவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், 

ஐ.நா. மனித உரிமை பேர­வை­யினால் நிறை­வேற்­றப்­பட்ட இந்த தீர்­மா­னத்­திற்கு இலங்கை அர­சாங்கம் கடப்­பட்­டுள்­ளது. அத்­துடன், அதை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது அரசின் கடப்­பா­டாகும். இந்த நாட்­டுக்கு எந்த பாதிப்பும் ஏற்­ப­டாத வகையில் அதை எப்­படி செய்­வது என்று நாம் பார்க்க வேண்டும். 

முன்­னைய அர­சாங்­கத்தின் காலத்தில் இடம்­பெற்ற நிகழ்­வு­களே இந்த தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்­கான நிலை­மை­க­ளுக்கு கார­ண­மாக இருந்­துள்­ளன. 2012 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­தவும் உள்­நாட்டு விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளவும் கடந்த அர­சாங்­கத்­துக்கு சகல சந்­தர்ப்­பங்­களும் வழங்­கப்­பட்­டி­ருந்­தன. எனினும், அவை எதிலும் பங்­கேற்க தவ­றி­யதன் விளை­வா­கவே 2015 ஆம் ஆண்டு தீர்­மானம் கொண்டு வரப்­பட்­டது. இது மறுக்­கப்­பட முடி­யாத உண்­மை­யாகும். இந்த நிலை­மைக்­கான பொறுப்பை கடந்த அர­சாங்கம் ஏற்க வேண்டும். 

ஐ.நா. தீர்­மா­ன­மா­னது இலங்­கைக்கு எதி­ரான தீர்­மானம் என்று அடிக்­கடி குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. நான் அந்த கருத்­துடன் ஒத்­துப்­போ­க­வில்லை. யுத்­தத்தில் ஈடு­பட்ட இரு தரப்­பு­க­ளான அரச படைகள் மற்றும் ஆயுத போராளி குழு­வான விடு­தலை புலி­களால் இழைக்­கப்­பட்­ட­தாக கூறப்­படும் சர்­வ­தேச மனித உரி­மைகள் மற்றும் மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் தொடர்­பான விட­யங்­களே இந்த தீர்­மா­னத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. இது இலங்­கைக்கு எதி­ரான தீர்­மானம் கிடை­யாது. இரு­த­ரப்­பு­க­ளி­னாலும் இழைக்­கப்­பட்ட குறித்த சில செயற்­பா­டுகள் பற்­றிய தீர்­மா­ன­மாகும். அனைத்து செயற்­பா­டு­களும் பற்­றி­ய­து­மல்ல. 

2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் நிறை­வ­டைந்த பின்னர் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த அப்­போ­தைய ஐ.நா. செய­லாளர் நாயகம் பான் கீ மூனிடம் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ அளித்த உறு­தி­மொ­ழியின் பின்­னரே இந்த அனைத்து நட­வ­டிக்­கை­களும் ஆரம்­பிக்­கப்­பட்­டன. இலங்­கையின் பொறுப்­புக்­கூறல் தொடர்பில் மகிந்த ராஜ­பக்ஷ தெளி­வான உறு­தி­மொ­ழியை இதன்­போது வழங்­கி­யி­ருந்தார். 

அதே­நேரம் நாட்டின் தென்­ப­கு­தி­களில் சிங்­கள இளை­ஞர்கள் மற்றும் மக்கள் ஆயி­ரக்­க­ணக்கில் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டு மனித உரி­மைகள் மற்றும் மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் இடம்­பெற்ற போது 1980 களின் இறுதி காலப்­ப­கு­தியில் ஐ.நா. மனித உரி­மைகள் அங்­கத்தின் தலை­யீட்டை கோரி மகிந்த ராஜ­ப­கஷ ஜெனீவா சென்­றி­ருந்தார். தாம் என்ன செய்­கிறோம் என்­பதை தெரிந்தே அவர் அன்று அந்த செயற்­பாட்டைச் செய்­தி­ருந்தார். 

2008 மற்றும் 2009 ஆம் ஆண்­டு­களில் என்ன நடந்­தது என்­ப­தற்­கான ஒரே வித்­தி­யாசம் அதைப் போன்ற சம்­ப­வங்கள் வடக்கில் இடம்­பெற்­றி­ருந்­தன என்­ப­தாகும். யாரும் இரா­ணுவ வீரர்கள் சார்பில் முறை­யிட்­டி­ருக்­க­வில்லை. 88 மற்றும் 89 களில் மஹிந்த ராஜபக்~ ஜெனீவா சென்­றி­ருந்த போது இரா­ணுவ வீரர்கள் சார்பில் அவர் முறை­யிட்­டி­ருக்­க­வில்லை. பொது­மக்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது தொடர்­பி­லேயே அவர் முறை­யிட்­டி­ருந்தார். 

பொது மக்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது தொடர்­பி­லேயே ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையும் செயற்­ப­டு­கி­றது. அதற்கு சமாந்­த­ர­மாக ஆயுத படை­யினர் இழைத்த மீறல்­க­ளுக்­காக அவர்­க­ளுக்கு எதி­ராக விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. மனித உரி­மைகள் மற்றும் மனி­தா­பி­மான சட்­டங்கள் பொது­மக்கள் பற்­றிய கரி­ச­ணையைக் கொண்­டுள்­ளன. தண்­ட­னையில் இருந்து தப்பும் தற்­போ­தைய கலா­சாரம் நீடிக்­கக்­கூ­டாது. அது முடி­வுக்கு வர வேண்டும். 

மனித உரி­மைகள் மற்றும் மனி­தா­பி­மான சட்ட மீறல்­களில் நிரா­யு­த­பா­ணி­யான பொது­மக்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­ப­தையும் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக போராட்­டத்தை முன்­னெ­டுத்த ஆயுத போரா­ளி­க­ளுக்கு எதி­ராக அர­சினால் எடுக்­கப்­பட்ட முறை­யான நட­வ­டிக்­கை­க­ளையும் இணைத்துக் குழப்­பிக்­கொள்ளக் கூடாது. இந்த இரு நிலை­மை­க­ளுக்கும் இடை­யி­லான வித்­தி­யாசம் தெளி­வாக வரை­யறை செய்­யப்­பட்­டுள்­ளது. 

ஐ.நா தீர்­மா­னத்தின் ஒத்­தி­வைப்பு வேளை விவா­தத்தின் ஆரம்­பத்தில் யுத்த வீரர்கள் பற்றி பேசப்­பட்­டது. அனைத்து யுத்த வீரர்­களும் சர்­வ­தேச மனித உரி­மைகள் மற்றும் மனி­தா­பி­மான சட்­டங்­களை மீறி செயற்ப்­பட்­டனர் என்று நான் கரு­த­வில்லை. அவர்­களில் சிலர் சந்­தே­கத்­துக்கு இட­மின்றி அந்த சட்­டங்­க­ளுக்கு எதி­ராக குற்­றங்­களை புரிந்­துள்­ளனர் என்­ப­தையும் நிரா­க­ரிக்க முடி­யாது. 

ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளான லசந்த விக்­கி­ர­ம­துங்க மற்றும் பிரகீத் எக்­னெ­லி­கொட தொடர்­பான வழக்­குகள் திரு­கோ­ண­மலை 5 மாண­வர்கள் மற்றும் மூதூரில் 17 தொண்டர் பணி­யா­ளர்கள் படு­கொ­லைகள் போன்ற விட­யங்­களில் ஆயுத படை­யினர் அல்­லது யுத்த வீரர்கள் சம்­பந்­தப்­பட்­டி­ருந்­தனர் என்­ப­தற்­காக மூடி மறைக்க முடி­யுமா? இந்த சம்­ப­வங்­களில் யுத்த வீரர்கள் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளனர் என்ற ஒரே கார­ணத்­திற்­காக இவற்றை மூடி மறைக்க முடி­யாது. 

மனித குலத்­துக்கு எதி­ராக 2008 மற்றும் 2009 ஆம் ஆண்­டு­களில் இழைக்­கப்­பட்ட குற்­றங்­களை எப்­படி மூடி மறைக்க முடியும்? உயர்­ப­த­வி­களை வகிக்கும் நபர்­களின் அர­சியல் நிகழ்ச்­சி­நி­ரலை பெருக்கிக் கொள்தல் மற்றும் முறை­யான கட­மையை நிறை­வேற்­று­வதில் அர­சாங்­க­மொன்­றுக்கு இருக்கும் பொறுப்பு என்­ப­ன­வற்றில் நிரா­யு­த­பா­ணி­யான பொதுக்கள் கொலை­களை யாரும் குழப்பிக் கொள்ள இடமளிக்கக்கூடாது. 

1988 மற்றும் 1989களில் தெற்கில் இடம்பெற்ற சம்பவங்களும் சரி 2008 மற்றும் 2009 களில் வடக்கிலும் இடம்பெற்றவையும் சரி அவை மனித குலத்துக்கு எதிரான குற்றங்களாகும். எந்தவொரு நாடும் அவ்வாறான குற்றங்களை அலட்சியம் செய்யாது. 

எமது நாடு பேரழிவுமிக்க நிலைமைகளை சந்தித்துள்ளது என்பதை நிராகிக்க முடியாது. அந்த அனுபவங்களை கொண்டுள்ள நாம் அத்தகைய நிலைமையில் இருந்து மீள வேண்டும். அதற்காக ஐ.நா. மனித உரிமைகள் பிரேரணையின் முழுமையானதும் துரிமானதூமான அமுலாக்கமே அதற்கான முதலவாது படியாக இருக்கும். அவ்வாறான நடவடிக்கையில் காணப்படும் தாமதமானது எமது நாட்டின் எதிர்காலத்துக்கு பாதிப்பாகவே அமையும் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-07#page-1

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவை வடகொரியாவுடன் ஒப்பிட முடியுமா? – அனைத்துலக ஊடகம்

 

UNHRCஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், சிறிலங்கா மீதான விவாதம் சூடுபிடித்துள்ளது. இந்த மாத இறுதியில் சிறிலங்கா மீது ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் பிறிதொரு தீர்மானம் நிறைவேற்றப்படும் நிலை காணப்படுவதுடன், இத்தீர்மானத்திற்கு அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கமானது இணைஅனுசரணை வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறானதொரு தீர்மானத்தின் மூலம் சிறிலங்கா மீதான, பேரவையின் அண்மைய தலையீடுகள் தொடர்பாக கேள்வி எழுப்புவது இலகுவானதாக இருக்கும். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த தடவை சிறிலங்கா மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது எதிர்பார்த்தளவு செயற்படுத்தப்படாத நிலையில் பிறிதொரு தீர்மானம் நிறைவேற்றப்படும் போது சிறிலங்கா இதனை சரியாக நிறைவேற்றும் எனக் கருதமுடியாது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் இறுதியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிட்டவாறு கலப்பு நீதிமன்றப் பொறிமுறை ஒன்றை அமைப்பதற்கு சிறிலங்காவின் பெரும்பான்மை சமூகம் அல்லது அதன் அரசியல் தலைமைத்துவம் தனது ஆதரவை வழங்க முன்வராத நிலையில், தற்போது நடைபெற்று வரும் பேரவையின் 34வது கூட்டத் தொடரில் சிறிலங்காவின் இணைஅனுசரணையும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டாலும் அது பெரிதளவில் வெற்றியளிக்காது என சிலர் கருதுகின்றனர்.

இந்த விடயத்தில் சிறிலங்காவில் சாதகமான நகர்வுகள் முன்னெடுக்கப்படாவிட்டால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடையும்.

ஐ.நா பாதுகாப்பு சபையின் ஆணைக்கூடாக சிறிலங்காவிற்கு எதிராக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் விசாரணை மேற்கொள்ளுமாறு சிலர் அழைப்பு விடுத்துள்ளனர்.  ஐக்கிய நாடுகள் சபையால் அண்மையில் வடகொரியாவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நகர்வுகளை ஒத்த நகர்வுகளை சிறிலங்கா தொடர்பில் ஐ.நா எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஒழுங்காக நடத்தப்படுகின்ற ஜனநாயக ஆட்சி இடம்பெறும் சிறிலங்காவை, சர்வதிகார ஆட்சி இடம்பெறும் உலகின் மிகவும் மோசமான நாடுகளில் ஒன்றான வடகொரியாவுடன் ஒப்பீடு செய்வது பொருத்தமற்றதாகும். தவிர, ஐ.நா பாதுகாப்புச் சபையானது வடகொரியாவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் முன்னால் நிறுத்துமாறு பரிந்துரைக்கவில்லை.

மாறாக, சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் முன்னால் நிறுத்துமாறு குறித்த சில மக்களால் கோரிக்கை முன்வைக்கப்படுவது போன்றே, வடகொரியாவையும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்துமாறு தனிப்பட்ட சிலர் கோரிக்கை விடுத்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் முன் சிறிலங்கா நிறுத்தப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையை வலியுறுத்தினர். ஆகவே இக்கருத்தானது சிறிலங்காவில் பலம் பெற்று வருகிறது.

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட சிறிலங்கா வாழ் மக்கள் தமக்கு நீதி கிடைக்கவில்லை என்பதையிட்டு மிகவும் மனம் வருந்துகின்றனர். போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மக்கள் போருக்குப் பின்னான தற்போதைய சூழலிலும் கூட பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்த மக்கள் சிறிலங்கா அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஐ.நா பொதுச் சபையானது இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதற்காக ஐ.நா பாதுகாப்புச் சபையின் கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பான விடயமும் பேசப்பட்டு இதற்கூடாக சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்த வேண்டும் என போரால் பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் இவையெல்லாம் இடம்பெறுவதற்கான காலக்கெடு என்ன? இவ்வாறான நகர்வுகள் வெற்றியளிக்கும் என்கின்ற நம்பிக்கை எவ்வாறு ஏற்படுத்தப்படும்? அத்துடன் வடகொரியாவானது ஐ.நா பாதுகாப்புச் சபையின் பரிந்துரையின் பேரில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்படவில்லை என்பதும் இங்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும். ஆகவே சிறிலங்கா விடயத்தில் வடகொரியா ஒப்பீடு செய்யப்படக் கூடாது.

தர்க்க ரீதியான விவாதங்களை மேற்கொள்வதில் எவ்வித தவறும் இல்லை. எனினும் இராஜதந்திர ரீதியாக விவாதிக்கப்பட வேண்டிய இவ்வாறான பிரச்சினைகளில் அரசியல் சார் கற்பனைகள் உட்பகுத்தப்படுவதானது  ஆபத்தை ஏற்படுத்தும்.

ஆகவே சிறிலங்கா என்பது வடகொரியா அல்ல என்பது வெளிப்படை உண்மையாகும்.

அதேவேளை, சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவதற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுப்பதானது கபடமானது என்பதுடன் தவறாக வழிநடத்துவதாகும்.

ஆங்கிலத்தில் – The Diplomat
வழிமூலம்       – Taylor Dibbert
மொழியாக்கம் – நித்தியபாரதி

http://www.puthinappalakai.net/2017/03/11/news/21875

போர்க்குற்றம், மனித உரிமை மீறல்களுக்கு இராணுவம் பொறுப்புக்கூறத் தேவையில்லை - சம்பந்தன்!

இறுதிக்கட்டப் போரின்போது அரச படைகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு இராணுவம் உட்பட அரச படைக் கட்டமைப்பு பொறுப்புக்கூறத் தேவையில்லையென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறிலங்கா அரச படைகள் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களை ஒட்டுமொத்தமாக மீறியுள்ளதாக தான் ஒருபோதும் குற்றம் சாட்டவில்லையெனத் தெரிவித்த அவர் ஒருசில இராணுவத்தினரேஅந்தச் சட்டங்களை மீறினர் எனவும் தெரிவித்துள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கூட்டு எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட ஜெனிவா தீர்மானம் தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அனைத்து யுத்த வெற்றிவீரர்களும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபினமான சட்டங்களை மீறியுள்ளார்கள் என நான் கூறவில்லை.எனினும் அவர்களில் சிலர் சந்தேகத்திற்கு இடமின்றி அந்த சட்டங்களுக்கு எதிராக குற்றங்களை புரிந்துள்ளனர் என்பதை நிராகரிக்க முடியாது என்றார்.

http://thuliyam.com/?p=70073

  • தொடங்கியவர்

ஐ.நா மனித உரிமைப் பேரவை தீர்மானத்தை பாராளுமன்றம் நிராகரிக்க முடியாது – சம்பந்தன்

sambanthar.jpg
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை பாராளுமன்றம் நிராகரிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமுல்படுத்த வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உண்டு என சுட்டிக்காட்டியுள்ள அவர் ஜெனீவா தீர்மானங்களை முழு அளவில் துரித கதியில் அமுல்படுத்த வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கிடையாது எனவும்  யுத்தமொன்றின் போது மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தரப்புக்களுக்கு எதிராகவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ள அவர் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறப்படாத நிலைமை தொடர்ந்தும் நீடிக்க அனுமதிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

1990களில் தெற்கில் பாரியளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஜெனீவாவிற்கு சென்று முறையிட்டிருந்தார் என சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

லசந்த படுகொலை, பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம், மூதூரில் 17 தன்னார்வ தொண்டர்கள் கொல்லப்பட்டமை, திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டiமை போன்ற சம்பவங்கள் குறித்த விசாரணைகளை அதன் பின்னணியில் யுத்த வீரர்கள் இருக்கின்றார்கள் என்பதற்காக கைவிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/29237

உங்கள் சாணக்கிய அரசியலின் இறுதி விளைவு தமிழரின் முகத்தில் சாணி அடிப்பதாகவே அமையப்போகிறது...., 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குடம் பாலும் நஞ்சு என்று திருவாளர் எதிர்க்கட்ஸி கூறவில்லை 
அதிலே சில துளிகளாக கொஞ்சம் நஞ்சு கலக்கப்பட்டு  இருக்கிறது என்று சொல்கிறார். 
ஆகவே எந்த பயமுமோ ....
மேலதிக கேள்வி விசாரணைகளோ தேவையில்லை 
பாலை தமிழர்கள் டம்மிளர் கப் களில் 
எதிர்க்கட்ஸி தலைப்பிடத்தில் வாங்கி ....குடித்து மகிழலாம்.
என்றுதான் சொல்கிறார் ! 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தன்னை கொல்ல வந்தார்கள், புலிகள் கூட்டமைப்பை உருவாக்க வில்லை,போர் குற்ற மீறல் பற்றி ஜெனிவாவுக்கு செல்லாமல் விடுவது என தீர்மானித்தமை (பின்னர் ஏனோ தானோ என சென்றார்கள்), சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்தவர்களை பொய் வாக்குறுதிகளை கொடுத்து அவர்களின் போராட்டத்தை மழுங்கடித்தமை, 40 ஆயிரம் மாவீர்ர்கள் தமிழீழத்துக்காக தமது உயிரை அர்ப்பணித்து சில வருடங்களில் சிங்கள இனவாதிகளின் சிங்க கொடியை தூக்கி பிடித்தமை என்று மக்களால் தெரிவு செய்யப்பட்ட சிங்கன்கள் செய்யும் வேலைகள் தமிழரை என்றென்றும் அடிமைகளாக வைத்திருக்கவே உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப உங்கள என்ன ம.க்கு தமிழ் மக்கள் தெரிவு செய்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, புலவர் said:

அப்ப உங்கள என்ன ம.க்கு தமிழ் மக்கள் தெரிவு செய்தார்கள்.

அந்தக்காலத்திலிருந்தே தமிழரசுக் கட்சிக்கு வாக்குப்போட்டுப் பழகிப் பின்பு அது  மரபுவழியாகி வந்துவிட்ட பழக்கம்.! மாற்றுவது கடினம்.!! சமசுக்கிறித மந்திரம் இல்லாமல் சாமி கும்பிடவோ! அன்றித் திருவிழா, சடங்குகள் செய்யவோ! அனைத்துத் தமிழர்களாலும் முடியுமா....? இதுபோலத்தான் அதுவும். :(

  • தொடங்கியவர்
ஐ.நா. தீர்மானத்தை இழுத்தடிப்பதானது நாட்டுக்கே பாதகம் சம்பந்தன்
ஐ.நா. தீர்மானத்தை இழுத்தடிப்பதானது நாட்டுக்கே பாதகம்  சம்பந்தன்
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் இலங்கைக்கு எதிரானது அல்ல. அதை நிறைவேற்றும் கடப்பாடு அரசுக்கு இருக்கின்றது. தண்டனையிலிருந்து தப்பும் கலாசாரம் இனியும் தொடரக் கூடாது.  இதனை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் தாமதமும் மறுப்பும், நாட்டிற்குப் பாதகமானதே. இவ்வாறு நாடாளுமன்றில் வலியுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.
 
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
 
மகிந்த அரசின் செயற்பாடுகள் காரணமாகவே ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தொடர்ச்சியாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. உள்ளகப் பொறிமுறையும் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாகவே 2015இலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த அரசுக்கு தற்போது கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
 
இந்தத் தீர்மானத்துக்குக் கட்டுப்பட்டு அதை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது. அதை எவ்வாறு உரிய வகையில் நிறைவேற்றுவது என்பது பற்றிச் சிந்தித்து நடவடிக்கைகளை துரிதப்படுத்தவேண்டும். ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கைக்கு எதிரானது என்று பரப்புரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அது முற்றிலும் தவறானதாகும். இந்தக் கருத்துடன் உடன்பட முடியாது. போரின்போது இரு தரப்புமே பன்னாட்டுச் சட்ட திட்டங்களை மீறியுள்ளன. அது பற்றி விசாரிக்கவேண்டுமென்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
 
போர்  முடிவடைந்த பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருடன் இணைந்து முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கூட்டறிக்கையொன்றை விடுத்தார். இதன் பிரகாரமே அனைத்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டன. பொறுப்புக்கூறல் பற்றியும் உறுதிமொழி வழங்கப்பட்டது.
 
நாட்டின் தென் பகுதிகளில் சிங்கள இளைஞர்கள் மற்றும் மக்கள் ஆயிரக்கணக்கில் சித்திரவதை செய்யப்பட்டு மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் இடம்பெற்றபோது 1980 ஆம் ஆண்டுகளின் இறுதிக் காலப்பகுதியில் ஐ.நா. மனித உரிமைகள் அங்கத்தின் தலையீட்டைக் கோரி மகிந்த ராஜபக்ச ஜெனிவா சென்றிருந்தார். தாம் என்ன செய்கிறோம் என்பதை தெரிந்தே அவர் அதைச் செய்திருந்தார். 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதற்கான ஒரே வித்தியாசம் அதைப் போன்ற சம்பவங்கள் வடக்கில் இடம்பெற்றிருந்தன என்பதுதான். எவரும் இராணுவ வீரர்கள் சார்பில் முறையிட்டிருக்கவில்லை. 
 
1988 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் மகிந்த ராஜபக்ச ஜெனிவா சென்றிருந்தபோது இராணுவ வீரர்கள் சார்பில் அவர் முறையிட்டிருக்கவில்லை. பொதுமக்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலேயே அவர் முறையிட்டிருந்தார். பொதுமக்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலேயே ஐ.நா. மனித உரிமைகள் சபையும் செயற்படுகிறது.
 
அதற்குச் சமாந்தரமாக ஆயுதப் படையினர் இழைத்த மீறல்களுக்காக அவர்களுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள் பொதுமக்கள் பற்றிய கரிசணை கொண்டுள்ளன. தண்டனையில் இருந்து தப்பும் இந்தக் கலாசாரம் நீடிக்கக்கூடாது. 
 
அது முடிவுக்கு வரவேண்டும். மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்களில் நிராயுதபாணியான பொதுமக்களுக்கு என்ன நடந்தது என்பதை அரசுக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுத்த ஆயுத போராளிகளுக்கு எதிராக அரசினால் எடுக்கப்பட்ட முறையான நடவடிக்கைகளுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது. இந்த இரு நிலைமைகளுக்கும் இடையிலான வித்தியாசம் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது.
 
இந்த விவாதத்தின் ஆரம்பத்தில் போர் வீரர்கள் பற்றிப் பேசப்பட்டது. அனைத்துப் போர் வீரர்களும் பன்னாட்டு மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களை மீறிச் செயற்பட்டனர் என்று நான் கருதவில்லை. அவர்களில் சிலர் சந்தேகத்துக்கு இடமின்றி அந்தச் சட்டங்களுக்கு எதிராகக் குற்றங்களை இழைத்துள்ளனர். 
 
ஊடகவியலாளர்களான லசந்த விக்கிரமதுங்க மற்றும் பிரகீத் என்னெலிகொட தொடர்பான வழக்குகள் மற்றும் திருகோணமலை 5 மாணவர்கள் மற்றும் மூதூரில் 17 தொண்டர் பணியாளர்கள் படுகொலைகள் போன்ற விடயங்களில் ஆயுதப்  படையினர் அல்லது போர் வீரர்கள் சம்பந்தப்பட்டிருந்தனர் என்பதை மூடிமறைக்க முடியுமா? இந்தச் சம்பவங்களில் போர் வீரர்கள் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர் என்ற காரணத்துக்காக இவற்றை மூடி மறைக்க முடியாது. 
 
மனித குலத்துக்கு எதிராக 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் இழைக்கப்பட்ட குற்றங்களை எப்படி மூடி மறைக்க முடியும்? உயர் பதவிகளை வகிக்கும் நபர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரல் பெருக்கிக் கொள்வதில் முறையான கடமையை நிறைவேற்றுவதில் அரசொன்றுக்கு இருக்கும் பொறுப்பையும் நிராயுதபாணியான பொதுக்கள் கொலைகளையும் யாரும் குழப்பிக்கொள்ள இடமளிக்கக்கூடாது. 
 
எமது நாடு பேரழிவு நிலைமைகளைச் சந்தித்துள்ளது. நாம் அந்த நிலைமையில் இருந்து மீளவேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் சபைத் தீர்மானத்தின் முழுமையானதும் துரிமானதூமான நடைமுறை மீளும் பாதை நோக்கிய முதலாவது படியாக இருக்கும். இந்த நடவடிக்கையில் இடம்பெறக்கூடிய தாமதமோ அல்லது மறுப்போ எமது நாட்டின் எதிர்காலத்துக்குப் பாதிப்பாகவே அமையும் - என்றார். (த-5)

http://onlineuthayan.com/news/26527

  • கருத்துக்கள உறவுகள்

போரே நடக்கவில்லை என்று சம் சும் மாவை கும்பல் அடிச்சுச் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவர்களின் சட்டாம்பி சாணக்கியம் என்பது சொந்த இனத்தை கருவறுத்து தாம் எஜமானர்களை மகிழ்வித்து.. தம்மை வாழ வைத்துக் கொள்வது.

இதனால்.. சம் வழியில் வந்த பலரை நோக்கி தாய் மண்ணை நேசித்தவர்கள் துப்பாக்கிகளை திருப்ப வேண்டி வந்தது.

உந்தக் கும்பல்.. அதனை இப்போ மீண்டும் நிரூபிக்கிறது.

இதனால்.. தமிழ் மக்களுக்கு உலக அரங்கில் இருந்த கொஞ்ச நெஞ்ச.. மனிதாபிமானக் கருசணையும் அற்றுப் போய்.. தமிழர்கள் ஒட்டுமொத்தமாக.. சிங்களவர்களுக்கு அடிமை சாசனம் எழுதி வாழ வைக்கப்படுவார்கள். அதனை நோக்கிய.. உந்த எலும்பு பொறுக்கி.. எஜமான விசுவாச.. சட்டாம்பி சாணக்கிய அரசியல் கோமாளிகள்.. தம் பிழைப்பை நோக்கி வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

2016 இல் தீர்வு என்று குடுகுடுப்பை கிலுப்பி பதவிக்கு வந்தவர்கள்.. இன்று சொந்த இன அழிவைச் செய்தவர்களை பாதுகாக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதற்குப் பெயர் தான் துரோக அரசியல். இதனால்.... தான் தமிழ் போராளிகள்.. இவர்களுக்கு எதிராகவும் துப்பாக்கிகளை நீட்டினார்கள்.

 

18 minutes ago, nedukkalapoovan said:

போரே நடக்கவில்லை என்று சம் சும் மாவை கும்பல் அடிச்சுச் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவர்களின் சட்டாம்பி சாணக்கியம் என்பது சொந்த இனத்தை கருவறுத்து தாம் எஜமானர்களை மகிழ்வித்து.. தம்மை வாழ வைத்துக் கொள்வது.

இதனால்.. சம் வழியில் வந்த பலரை நோக்கி தாய் மண்ணை நேசித்தவர்கள் துப்பாக்கிகளை திருப்ப வேண்டி வந்தது.

உந்தக் கும்பல்.. அதனை இப்போ மீண்டும் நிரூபிக்கிறது.

இதனால்.. தமிழ் மக்களுக்கு உலக அரங்கில் இருந்த கொஞ்ச நெஞ்ச.. மனிதாபிமானக் கருசணையும் அற்றுப் போய்.. தமிழர்கள் ஒட்டுமொத்தமாக.. சிங்களவர்களுக்கு அடிமை சாசனம் எழுதி வாழ வைக்கப்படுவார்கள். அதனை நோக்கிய.. உந்த எலும்பு பொறுக்கி.. எஜமான விசுவாச.. சட்டாம்பி சாணக்கிய அரசியல் கோமாளிகள்.. தம் பிழைப்பை நோக்கி வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

2016 இல் தீர்வு என்று குடுகுடுப்பை கிலுப்பி பதவிக்கு வந்தவர்கள்.. இன்று சொந்த இன அழிவைச் செய்தவர்களை பாதுகாக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதற்குப் பெயர் தான் துரோக அரசியல். இதனால்.... தான் தமிழ் போராளிகள்.. இவர்களுக்கு எதிராகவும் துப்பாக்கிகளை நீட்டினார்கள்.

 

இதற்கு அவர்களை குறை சொல்ல வேண்டாம். வாக்களித்த முட்டாள்களுக்கு தான் சமர்ப்பணம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Dash said:

இதற்கு அவர்களை குறை சொல்ல வேண்டாம். வாக்களித்த முட்டாள்களுக்கு தான் சமர்ப்பணம்.

அண்மையில் ஒரு தமிழ் உணவகத்தில் எம்மவர் சிலரின் சம்பாசணை..

அவா.. என்ர வீட்டுக்கு வாறதில்லை.. முந்தி..

நான் ஏன் போக வேணும்..

இப்ப அவாவா வலிய வந்து கதைச்சா..

போர்வை ஒன்றும் வாங்கித் தந்தா..

இதற்கு.. கூட்டத்தில் இருந்த இன்னொருவர்

அவாவில.. சேஞ் தெரியுது..

இப்ப அந்த அவா.. நல்லவா ஆகிட்டா. நாளை.. மீண்டும் கெட்டவா ஆகலாம். 

இந்தளவு தான் எம் தமிழர்கள் பலரின் சிந்தனை.. அது அரசியலாகட்டும்.. குடும்பமாகட்டும்.. சமூகமாகட்டும்.

இதுகள்.. புத்தகத்தை படிச்சு.. பெரிய பதவிகளுக்குள் போனாலும்.. அடிப்படை சிந்தனையில்.. மாற்றத்தை விரும்புவதில்லை.

விளைவு... ஒரு அடிமைப்பட்ட இனமாக.. இது இந்தப் பூமிப் பந்தில் வாழ் நேர்வது. tw_blush:

Edited by nedukkalapoovan

 

1 hour ago, nedukkalapoovan said:

அண்மையில் ஒரு தமிழ் உணவகத்தில் எம்மவர் சிலரின் சம்பாசணை..

அவா.. என்ர வீட்டுக்கு வாறதில்லை.. முந்தி..

நான் ஏன் போக வேணும்..

இப்ப அவாவா வலிய வந்து கதைச்சா..

போர்வை ஒன்றும் வாங்கித் தந்தா..

இதற்கு.. கூட்டத்தில் இருந்த இன்னொருவர்

அவாவில.. சேஞ் தெரியுது..

இப்ப அந்த அவா.. நல்லவா ஆகிட்டா. நாளை.. மீண்டும் கெட்டவா ஆகலாம். 

இந்தளவு தான் எம் தமிழர்கள் பலரின் சிந்தனை.. அது அரசியலாகட்டும்.. குடும்பமாகட்டும்.. சமூகமாகட்டும்.

இதுகள்.. புத்தகத்தை படிச்சு.. பெரிய பதவிகளுக்குள் போனாலும்.. அடிப்படை சிந்தனையில்.. மாற்றத்தை விரும்புவதில்லை.

விளைவு... ஒரு அடிமைப்பட்ட இனமாக.. இது இந்தப் பூமிப் பந்தில் வாழ் நேர்வது. tw_blush:

2021ம் ஆண்டு அடுத்த தேர்தல் வரும் போது மீண்டும் ஜயா மீண்டும் சமஷ்டி கையில் எடுப்பார்,யாராவது எதிர்த்து கேள்வி கேட்டால் முள்ளிவாய்க்காலை காட்டி பயமுறுத்த வேண்டியது தான்

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.