Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

மருதர்,

இது திரிப்பில்லை. 

தென்னாபிரிக்கா, அவுஸ்ரேலியா, கனடா, சிம்பாப்வே,  நியூசிலாந்து இவற்றில் கைக்கொள்ளப்பட்ட காலனியமும்,

இந்தியா, இலங்கை, மலேசியா, ஏமன், எகிப்து, கென்யா போன்ற இடங்களில் மேற்கொள்ளப் பட்ட காலனியமும் வேறு வேறு வகையின.

காலனிய காலத்திலேயே இது கொள்கை முடிவாக அமுல்படுத்தப்பட்டது.

2ம் வகையில் தனியே ஆட்சி அதிகாரத்தை, லாபம்தரும் தொழில்களை (தேயிலை) மட்டுமே வெள்ளையினத்தவர் எடுத்துக் கொண்டனர். காணிகளை பிடித்து, வெள்ளையினத்தவரை குடியேறற்றவில்லை.

1ம் வகையில் காணிகளை அபகரித்து, மண்ணுக்குரியவர்களை விரட்டி அல்லது அழித்து - தம்மை அந்த மண்ணில் குடிகளாக பிரதியீடு செய்தார்கள்.

இதே போலத்தான் டெல்லி சுல்தானியத்தின் கைகளில் மதுரை வீழ்ந்த போது உருது பேசும் இஸ்லாமியர் தமிழ்நாட்டில் குடியேறினர். அவர்களின் வழிவந்தோரே ,  அவர்களால் மதம்மாற்றப்பட்டோரே, இன்றைய தமிழ்நாட்டு இஸ்லாமியர். காலப்போக்கில் உருது அழிந்து போய்விட, இஸ்லாத்தை மட்டும் அவர்கள் கெட்டியாக கைப்பற்ற - இப்போ அவர்களை சீமான் தமிழ் இஸ்லாமியர் என்கிறார்.

சீமானின் தமிழ்-பிராமணனரும் இஸ்லாமியருக்கு முன் வந்து இப்படிச் சேர்ந்தோரே.

அச்சொட்டாக இதைப்போலவே  நாயக்கர் படை எடுப்பின் போது தமிழ்நாட்டில் நடந்தது. தெலுங்கு பேசும் நாயக்க மன்னர் மட்டும் தமிழ்நாட்டுக்கு வரவில்லை.   நாயக்க படைகளும், மக்களும் பெரும் எடுப்பில் வந்து, காணி பிடித்து, கிராமங்களை உருவாக்கி -குடியமர்ந்து - இப்போ 700 வருடங்களாக வாழ்கிறனர். 

ஆனால் இஸ்லாமியரை, பிராமணரை தமிழராக ஏற்கும் சீமான், நாயக்க சாதியினரை, பிள்ளைகளை, ஏனையோரை ஏற்க மறுக்கிறார்.

700 வருடங்களாக வாழ்ந்த மக்கள், வாழலாம் ஆனால் ஆளக்கூடாது என்கிறார்.

அயர்லாந்தின் பிரதமர் ஒரு இந்திய தந்தையின் மகன். நியூசிலாந்தின் பிரதமர் வேல்சில் பிறந்தவர். பிரித்தானியாவின் நிதியமைச்சர் பாகிஸ்தானில் இருந்து வந்து பேரூந்து ஓட்டியவரின் மகன், உள்துறை மந்திரி உகண்டாவில் இருந்து வந்த கடைக்காரரின் மகள். அமெரிக்க அதிபர் போட்டியில் இருக்கும் கமலாவின் தாய் தமிழ் நாட்டுக்காரர். இவ்வளவு ஏன், டிரம்பின் தாய் ஒரு ஸ்கொட்டிஸ் பெண்.

இப்படியாகத்தான் இருக்க வேண்டும் ஜனநாயகம். ஒருவனுக்கு குடியுரிமை, வாக்களிக்கும் உரிமை, இருந்தால் அல்லது குறைந்த பட்சம் அமெரிக்கா போல் நாட்டில் பிறந்திருந்தால் அந்த நபருக்கு ஆளும் உரிமையும் இருக்க வேண்டும்.

இல்லாமல் 700 வருடங்களுக்கு முன் நீங்கள் வந்தேறிகள் என ஒருவனது surname ஐ பார்த்து அவர் தேர்தலில் வென்று ஆளலாமா இல்லையா என தீர்மானிக்க வேண்டும் என்பது பச்சை இனவாதம்.

இதை தமிழ்நாட்டில் நாம் ஏற்போமாயின், புலம்பெயர் தேசங்களில் எம் சந்ததிகள் யாருமே எப்போதுமே அரசியலில் ஈடுபட, ஆளும் நிலைக்கு வர முடியாது என்பதையும் நாம் ஏற்றாக வேண்டும்.

அதற்க்கு நான் தயாரில்லை.

அதெல்லாம் சரிதான் சே,

வட அமெரிக்க , ஐரோப்பிய  சமூக சூழலையும் அரசியல் சூழலையும் தமிழ்நாட்டின்,  இந்திய  அரசியல் , சமூக சூழலையும் ஒப்பிடுவது சகிக்க கூடியதாக இல்லை. 

தமிழ்நாட்டின் அரசியல் , சமூக சூழ்நிலைகளுடன் ஒப்பிடக்கூடியவாறு உங்கள் உதாரணங்களிலிருந்து ஒன்றைத்தானும் உங்களால் கூற முடியுமா ?

[தற்போது ஐரோப்பா, வட அமெரிக்காவில் ஆபிரிகாவில் மிக வேகமாக வெளிக்கிளம்பி வரும் தேசியவாதத்தினை நீங்கள் கவனிக்கவில்லை போலும்]

  • Replies 3k
  • Views 277.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்போதே புலம்பெயர் வெள்ளை இனமல்லாதவர்கள் இங்கிலாந்தில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தாகி விட்டது.

அரசியலில் அதிகாரம் மிக்க 1,2, 3 நிலை பதவியில், 2 இல் இருப்பது சஜித் ஜாவிட், 3 இல் இருப்பது பட்டேல்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

இந்த வித்தியாசங்களை வைத்து வெள்ளை இன அமேரிக்கர்கள் வேண்டும் என்றே தம்மினதும், தம் சந்ததியினதும் ஒரே வாழிடத்தை சூறையாடி, வாழத்தகுதியற்ற இடமாக ஆக்குகிறார்கள் என்பது - மிகவும் மேலோட்டமான பார்வை.

இதுதான் உங்கள் முடிவென்றால் வட அமெரிக்காவை நீங்கள் தெளிவாக அவதானிக்கவில்லை என்று பொருள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அதெல்லாம் சரிதான் சே,

வட அமெரிக்க , ஐரோப்பிய  சமூக சூழலையும் அரசியல் சூழலையும் தமிழ்நாட்டின்,  இந்திய  அரசியல் , சமூக சூழலையும் ஒப்பிடுவது சகிக்க கூடியதாக இல்லை. 

தமிழ்நாட்டின் அரசியல் , சமூக சூழ்நிலைகளுடன் ஒப்பிடக்கூடியவாறு உங்கள் உதாரணங்களிலிருந்து ஒன்றைத்தானும் உங்களால் கூற முடியுமா ?

[தற்போது ஐரோப்பா, வட அமெரிக்காவில் ஆபிரிகாவில் மிக வேகமாக வெளிக்கிளம்பி வரும் தேசியவாதத்தினை நீங்கள் கவனிக்கவில்லை போலும்]

இப்படி ஒரு அரசியல் சமூக குழுவாத சகதிக்குள்தான் பாஸ் சிங்கப்பூர் இருந்தது. லிகுவான் யூ என்ற ஒற்றை மனிதன் மாற்றி யோசித்ததால் - இன்றைக்கு பூகோள ரீதியில்  கிழக்கில் இருந்தாலும் மேற்குலகில் இருக்கிறது சிங்கப்பூர்.

சிங்கப்பூரை பார்த்து தம் போக்கை மாற்றின மலேசியாவும், இந்தோனேசியாவும். 

தேசியவாதம் வேகமாக கிளம்பினாலும் அது பாசிசமாக மாற -அமெரிக்க, ஐரோப்பிய அரசியல் புற நிலைகள் அனுமதிக்காது. 

உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா? சீமான் சொல்வது போல ஜேர்மனியிலோ, யூகேயிலோ, “இது வெள்ளையர் நாடு, வெள்ளைதோல் அல்லாதவன் வா, வாழு, வியாபாரம் பண்ணு ஆனால் ஆளும் உரிமை ஜேர்மன் வம்ச/ஆங்கிலோ-சக்சன் வம்ச பிள்ளைகளாகிய எமக்குத்தான் உண்டு” என்று யாராவது பொது வெளியில் கூறினால் - தூக்கி உள்ளே வைத்து விடுவார்கள்.

கனடாவின் கதவுகள் சீமானுக்கு அடைக்கப்பட்டதுக்கும் இப்படியான துவேசப் பேச்சுகளே காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இதுதான் உங்கள் முடிவென்றால் வட அமெரிக்காவை நீங்கள் தெளிவாக அவதானிக்கவில்லை என்று பொருள்

அப்படியே ஆகட்டும் 😀

  • கருத்துக்கள உறவுகள்
On 12/23/2019 at 12:01 AM, goshan_che said:

தமிழ்தேசிய அரசியல், தமிழ் அடையாளம் இவற்றில் எனக்கு ஒரு முரணும் இல்லை. ஆனால் பிழைப்பு தேடி வந்தவர்களை இம்சித்துத்தான் இவை அடையப்படும் என நான் நினைக்கவில்லை. அப்படித்தான் அடையவேண்டும் என்றால் எனக்குத் தேவையும் இல்லை.

எப்படியும் அடையலாம்  என்றால்  தமிழீழத்தை  தலைவர்  அடைந்திருப்பார்

ஆனால்  இனி  தலைவர்  வழி  தோல்வி  கண்ட  வழியாகி  விட்டது  தான்  உண்மை  நிலை

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

எப்படியும் அடையலாம்  என்றால்  தமிழீழத்தை  தலைவர்  அடைந்திருப்பார்

ஆனால்  இனி  தலைவர்  வழி  தோல்வி  கண்ட  வழியாகி  விட்டது  தான்  உண்மை  நிலை

அண்ணை,

ஒரு பணிவான வேண்டுகோள். தயவு செய்து எல்லாவற்றிற்குள்ளும் அவரை இழுத்து வருவதை நிப்பாட்டுங்கோ.

இப்போ நீங்கள் எழுதியதற்கு, விமர்சனப்பார்வையில் என்னால் பதில் எழுத முடியும். ஆனால் அதனால் ஒரு பயனும் இல்லை. தேவையில்லாமல் அவரை விமர்சித்து அவரின் விசுவாசிகளை கடுப்பேற்றுவதில்தான் போய் முடியும்.

அண்மையில் ஏனைய ஒரு திரியிலும் இப்படி ஆகியது. அங்கே தவிர்க முடியாமல் நான் புலிகளையும், பிரபாவையும் விமர்சிக்கும் படியாயிற்று.

அவர் இறந்து 10 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது, ஒவ்வொரு திரியிலும் பள்ளிகூடத்தில் சண்டை என்றால் மேல் வகுப்பு படிக்கும் அண்ணரை இழுந்து வரும் பையன் போல் அல்லாது, திரியோடு ஒட்டி கருத்தெழுங்களேன்?

இது என் தாழ்மையான விண்ணப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, goshan_che said:

உண்மையில் எழுதும் போதே யோசித்தேன் ஆனால் நாங்கள் அடைந்திருப்போம் என் எழுதியிருந்தால் உங்கள் கேள்வி நீங்கள் சத்தியப்பிரமாணம் எடுத்ததை சொல்லவே இல்லையே என்பதாக இருந்திருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இப்படி ஒரு அரசியல் சமூக குழுவாத சகதிக்குள்தான் பாஸ் சிங்கப்பூர் இருந்தது. லிகுவான் யூ என்ற ஒற்றை மனிதன் மாற்றி யோசித்ததால் - இன்றைக்கு பூகோள ரீதியில்  கிழக்கில் இருந்தாலும் மேற்குலகில் இருக்கிறது சிங்கப்பூர்.

சிங்கப்பூரை பார்த்து தம் போக்கை மாற்றின மலேசியாவும், இந்தோனேசியாவும். 

தேசியவாதம் வேகமாக கிளம்பினாலும் அது பாசிசமாக மாற -அமெரிக்க, ஐரோப்பிய அரசியல் புற நிலைகள் அனுமதிக்காது. 

உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா? சீமான் சொல்வது போல ஜேர்மனியிலோ, யூகேயிலோ, “இது வெள்ளையர் நாடு, வெள்ளைதோல் அல்லாதவன் வா, வாழு, வியாபாரம் பண்ணு ஆனால் ஆளும் உரிமை ஜேர்மன் வம்ச/ஆங்கிலோ-சக்சன் வம்ச பிள்ளைகளாகிய எமக்குத்தான் உண்டு” என்று யாராவது பொது வெளியில் கூறினால் - தூக்கி உள்ளே வைத்து விடுவார்கள்.

கனடாவின் கதவுகள் சீமானுக்கு அடைக்கப்பட்டதுக்கும் இப்படியான துவேசப் பேச்சுகளே காரணம்.

இதுதான் உண்மையான நிலை.

2 hours ago, goshan_che said:

தேசியவாதம் வேகமாக கிளம்பினாலும் அது பாசிசமாக மாற -அமெரிக்க, ஐரோப்பிய அரசியல் புற நிலைகள் அனுமதிக்காது. 

2ம் உலகப் போரை நீங்கள்மறந்துவிட்டீர்கள் போலும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

இதுதான் உண்மையான நிலை.

2ம் உலகப் போரை நீங்கள்மறந்துவிட்டீர்கள் போலும்.

உங்களின் இரு பதிவுகளிலேயே உங்களின் கேள்விக்கான பதிலும் உண்டு.

2ம் உலக போரில் படித்த பாடங்கள்தான்- நீங்கள் சொல்லும் “உண்மையான நிலையை”   ஐரோப்பாவில் ஏற்படுத்தியது.

தேசிய மயப்பட்ட பாசிசம் எப்படிப்பட்ட ஒரு கொடூரமான மிருகம் என்பதை கண்டு கொண்ட ஐரோப்பிய சமூகம் இந்த மிருகம் விளித்துக்கொள்ள கூடாது என்பதில் மிகவும் அக்கறையாக இருப்பதே, இவ்வாறான சட்டங்களுக்கு காரணம். 

இருப்பினும் இத்தாலி, ஹங்கேரி, கிறீஸ் போன்ற இடங்களில் இந்த மிருகம் இப்போதும் தலை தூக்கவே செய்கிறது. 

இதே மிருகத்துக்குத்தான் தமிழ்நாட்டு மக்களே சட்டை செய்யாமல் விட்டாலும், சில புலம்பெயர் மக்கள் பாலும் முட்டையும் வைக்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேற்று மாநிலத்தார் ஊடுருவல் காரணமாக தமிழர்கள் தமிழ்நாட்டிலேயே உரிமைகளை இழக்கும் நிலை!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

மருதர்,

இது திரிப்பில்லை. 

தென்னாபிரிக்கா, அவுஸ்ரேலியா, கனடா, சிம்பாப்வே,  நியூசிலாந்து இவற்றில் கைக்கொள்ளப்பட்ட காலனியமும்,

இந்தியா, இலங்கை, மலேசியா, ஏமன், எகிப்து, கென்யா போன்ற இடங்களில் மேற்கொள்ளப் பட்ட காலனியமும் வேறு வேறு வகையின.

காலனிய காலத்திலேயே இது கொள்கை முடிவாக அமுல்படுத்தப்பட்டது.

2ம் வகையில் தனியே ஆட்சி அதிகாரத்தை, லாபம்தரும் தொழில்களை (தேயிலை) மட்டுமே வெள்ளையினத்தவர் எடுத்துக் கொண்டனர். காணிகளை பிடித்து, வெள்ளையினத்தவரை குடியேறற்றவில்லை.

1ம் வகையில் காணிகளை அபகரித்து, மண்ணுக்குரியவர்களை விரட்டி அல்லது அழித்து - தம்மை அந்த மண்ணில் குடிகளாக பிரதியீடு செய்தார்கள்.

இதே போலத்தான் டெல்லி சுல்தானியத்தின் கைகளில் மதுரை வீழ்ந்த போது உருது பேசும் இஸ்லாமியர் தமிழ்நாட்டில் குடியேறினர். அவர்களின் வழிவந்தோரே ,  அவர்களால் மதம்மாற்றப்பட்டோரே, இன்றைய தமிழ்நாட்டு இஸ்லாமியர். காலப்போக்கில் உருது அழிந்து போய்விட, இஸ்லாத்தை மட்டும் அவர்கள் கெட்டியாக கைப்பற்ற - இப்போ அவர்களை சீமான் தமிழ் இஸ்லாமியர் என்கிறார்.

சீமானின் தமிழ்-பிராமணனரும் இஸ்லாமியருக்கு முன் வந்து இப்படிச் சேர்ந்தோரே.

அச்சொட்டாக இதைப்போலவே  நாயக்கர் படை எடுப்பின் போது தமிழ்நாட்டில் நடந்தது. தெலுங்கு பேசும் நாயக்க மன்னர் மட்டும் தமிழ்நாட்டுக்கு வரவில்லை.   நாயக்க படைகளும், மக்களும் பெரும் எடுப்பில் வந்து, காணி பிடித்து, கிராமங்களை உருவாக்கி -குடியமர்ந்து - இப்போ 700 வருடங்களாக வாழ்கிறனர். 

ஆனால் இஸ்லாமியரை, பிராமணரை தமிழராக ஏற்கும் சீமான், நாயக்க சாதியினரை, பிள்ளைகளை, ஏனையோரை ஏற்க மறுக்கிறார்.

700 வருடங்களாக வாழ்ந்த மக்கள், வாழலாம் ஆனால் ஆளக்கூடாது என்கிறார்.

அயர்லாந்தின் பிரதமர் ஒரு இந்திய தந்தையின் மகன். நியூசிலாந்தின் பிரதமர் வேல்சில் பிறந்தவர். பிரித்தானியாவின் நிதியமைச்சர் பாகிஸ்தானில் இருந்து வந்து பேரூந்து ஓட்டியவரின் மகன், உள்துறை மந்திரி உகண்டாவில் இருந்து வந்த கடைக்காரரின் மகள். அமெரிக்க அதிபர் போட்டியில் இருக்கும் கமலாவின் தாய் தமிழ் நாட்டுக்காரர். இவ்வளவு ஏன், டிரம்பின் தாய் ஒரு ஸ்கொட்டிஸ் பெண்.

இப்படியாகத்தான் இருக்க வேண்டும் ஜனநாயகம். ஒருவனுக்கு குடியுரிமை, வாக்களிக்கும் உரிமை, இருந்தால் அல்லது குறைந்த பட்சம் அமெரிக்கா போல் நாட்டில் பிறந்திருந்தால் அந்த நபருக்கு ஆளும் உரிமையும் இருக்க வேண்டும்.

இல்லாமல் 700 வருடங்களுக்கு முன் நீங்கள் வந்தேறிகள் என ஒருவனது surname ஐ பார்த்து அவர் தேர்தலில் வென்று ஆளலாமா இல்லையா என தீர்மானிக்க வேண்டும் என்பது பச்சை இனவாதம்.

இதை தமிழ்நாட்டில் நாம் ஏற்போமாயின், புலம்பெயர் தேசங்களில் எம் சந்ததிகள் யாருமே எப்போதுமே அரசியலில் ஈடுபட, ஆளும் நிலைக்கு வர முடியாது என்பதையும் நாம் ஏற்றாக வேண்டும்.

அதற்க்கு நான் தயாரில்லை.

நான் சொல்லவந்தது உங்களுக்கு நன்றாக விளங்கிவிட்டது 
இனி நீங்கள் இந்த நிலையில் இருந்து இறங்க போவதில்லை என்பது எனக்கு உறுதியாக தெரியும்.
இங்கு கருத்தாடி வெல்வதிலும் விட  ... எமது எதிர்கால சந்ததி வளர்ச்சி பற்றி பேசுவது நல்லது 
என்பதே எனது இப்போதைய நிலைப்பாடு. 

எல்லோரும் எல்லா நாட்டிலும் அரசியல் செய்யலாம் செய்யவும் வேண்டும் 
அரசியல் எனும் பேரில் என்ன செய்கிறார்கள் செய்தார்கள் என்பதுதான் வாதத்துக்கு  உள்ளானது.

நெல்வயலின் அருகில் ஒரு கீரையும் வளர்ந்தால் அதையும் உணவாக்கி கொள்ளலாம்.
அதுவே நெல்லையே அழிக்கும் புல்லாக வளரும்போதுதான் ...
விவசாயிகள் புடுங்கி எறியவேண்டும் புல் வளர்ச்சியில் கொஞ்சம் கவனம் எடுக்க வேண்டும் 
என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

உருது வருகை 
நாயக்கர் வருகை 
இரண்டையும் குறிப்பிடத்துக்கு நன்றி. ஒன்று இப்போதும் அதுவாகவே இருப்பதோடு தமிழுக்கும் சில 
மேன்மைகளை செய்கிறது. மற்றது திட்டமிட்டு தமிழையே அழிக்கிறது .... இதுதான் வேறுபாடு.
இங்கு தமிழர்கள் தமிழை பாதுகாக்க நினைக்கிறார்கள்  

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Maruthankerny said:

நாங்கள் இருவரும் அவரவர் கொப்பில் இருந்து இறங்கப்போவதில்லை 😂.

ஆகவே இத்தோடு முடிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நாங்கள் இருவரும் அவரவர் கொப்பில் இருந்து இறங்கப்போவதில்லை 😂.

ஆகவே இத்தோடு முடிக்கிறேன்.

திட்டமிட்ட தமிழ் அழிப்பு 
புராண புரட்டுக்கள் உட்புகுத்தல் 
தமிழர்களை மேலோங்கவிடாது திட்டமிட்ட தடைகள் 

இவைகளில் இருந்து தமிழையும் தமிழர்களையும் எப்படி பாதுகாப்பது?
என்று எழுத தொடங்கினால் ... இருவரும் எழுத ஒருவிடயம்தான் இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

திட்டமிட்ட தமிழ் அழிப்பு 
புராண புரட்டுக்கள் உட்புகுத்தல் 
தமிழர்களை மேலோங்கவிடாது திட்டமிட்ட தடைகள் 

இவைகளில் இருந்து தமிழையும் தமிழர்களையும் எப்படி பாதுகாப்பது?
என்று எழுத தொடங்கினால் ... இருவரும் எழுத ஒருவிடயம்தான் இருக்கிறது. 

புதிய சிந்தனையை ஏன் பிறிதொரு தலைப்பில் ஆரம்பிக்ககூடாது ?

May be an Utopian idea ??

  • கருத்துக்கள உறவுகள்

வெல்லும் சொல் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது சீமானின் காலம் - (The Era of Seeman 2010-2020)

வருடத்தின் கடைசிநாள் - முதல் நாள் என்றெல்லாம் ஒன்றுமில்லை 

ஆனால் 2010 தொடங்கி - 2020 வரையிலான அரசியல் களம் என்பது சீமானின் காலம் ஆமாம் தமிழக உரிமைகளை கலைஞரும் ஜெலலிதாவும் பார்த்துக்கொள்வார்கள் என்று நினைத்து, ஓட்டுபோடுவதோடு நிறுத்திக்கொண்ட ஒரு தலைமுறை, தமிழர் பண்பாடு எது ? திராவிட பண்பாடு எனது என பிரித்தறிய முடியாமல் திராவிடர்கள்தான் தமிழர்கள், தமிழர்கள்தான் திராவிடர்கள் என்று மயக்கமுற்று கிடந்த ஒரு தலைமுறை, மாநில அரசியலா ? கருணாநிதி செயலலிதா ?, மத்திய அரசியலா ? காங்கிரஸ் பிஜேபி என்பதை தாண்டி சிந்திக்காத ஒரு தலைமுறை, அரசியல் என்பது அநாகரீகம் - சாக்கடை என்று ஒதுங்கி இருந்த ஒரு இளந்தலைமுறை, கடவுள் நம்பிக்கையற்ற அணுகுமுறையே பகுத்தறிவு என்று மூடநம்பிக்கையில் ஆட்பட்டு இருந்த ஒரு தலைமுறை, பெரியார் மட்டுமே தமிழின உரிமை மீட்பின் சர்வலோக நிவாரணி என்று நம்பியிருந்த ஒரு தலைமுறை, ஆறு, மலை, காடு, வளம், கல்வி இவைகளில் அரசியலே கலந்திருக்கவில்லை என்று நம்பியிருந்த ஒரு தலைமுறை, ஆரியபிராமணர்களுக்கு எதிரானவர்கள் திராவிடர்களே என்று மூடநம்பிக்கையில் கிடந்த ஒரு தலைமுறையை... இன்னும் எத்தனையோ தலைமுறைகளை...

சீமான் என்று ஒருவர் என்ன செய்தார் ?

தமிழகத்தின் பெருமைகளை உணர, தமிழின விரோத சக்திகளை - அதன் செயல்பாடுகளை அடையாளம் காண செய்தார்.

பெரியார் ஒருவரே இந்த சமூகத்தின் சர்வலோக நிவாரணி என்று பிம்பந்தத்தை உடைத்து வள்ளலாரையும், வைகுந்தரையும், தேவரையும் இம்மானுவேல் சேகரையும், இவர்களின் ஒற்றுமையின் தேவையையும் இந்த மண்ணில் அடையாளம் காட்டியவர். தமிழினத்தலைவர் பிராபாகரன் என்பதை இந்த மண்ணில் நிறுவியவர் என இன்னும் எத்தனையோ மாற்றங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த மண்ணில் தமிழ்த்தேசிய அரசியல் பயிர் முளைவிட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. 

இந்த பயிர் பலன்தர எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் ஆகலாம். ஆனால் இந்த பயிரின் வளர்ச்சி திராவிட- ஆரிய கூடாரங்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது என்பதில் எவருக்கும் ஐயமிருக்க போவதில்லை. 

எனவே இந்த பத்தாண்டுகள் சீமானின் காலம், இனிவரும் மொத்த ஆண்டுகளும் தமிழ்த்தேசியத்தின் காலம்.

உயிரைக்கொடுத்தேனும் தமிழ்த்தேசிய பயிரை வளர்ப்போம்.

நாம்தமிழர் (2010-2020).
 
பதிவர்: செந்தில்நாதன் துரைராசன் (வீரத்தமிழர் முன்னணி)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி 2019 :

2019 வருட தொடக்கத்திலிருந்து இன்றுவரை நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்ட உறவுகளின் எண்ணிக்கை 123147. சராசரியாக நாள் ஒன்றுக்கு 335 உறவுகள் இணைகிறார்கள்.

 இத்தனைக்கும் இந்த வருடம் நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல்கள், உள்ளாட்சி மன்றம் என தொடர்ச்சியாக தேர்தல்கள் வந்ததால் உறுப்பினர் முகாம்கள் குறைவாகவே நடந்தது. அத்தோடு இந்த வருடம் அவதூறுகள் புறக்கணிப்புகள் தடைகள் ஏராளம். நாம் செய்த செயல்கள் எத்தனையோ இருக்க அண்ணன் பேசியது எவ்வளவோ இருக்க தேவையில்லாததை வெட்டி எடுத்து பெரிதாக்கி வீழ்த்த நினைத்தார்கள். தேர்தல் ஆணையத்திற்கு தடை செய்ய சொல்லி கடிதம் எழுதினார்கள். கூட்டங்களுக்கு ஆர்பாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டன. காயல்பட்டினத்தில் பாபர் மசூதிக்கு எதிரான போராட்டத்திற்கு 144 போடப்பட்டது. இந்த வருடத்தில் மட்டும் அண்ணன் சீமான் மேல் 6 புதிய வழக்குகள். கட்சியினரின் பழைய வழக்குகளுக்கு சம்மன்கள் வழங்கப்பட்டு நீதிமன்றங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். 

இவ்வளவுக்கு பிறகும் மக்கள் கட்சியையும் சீமான் அண்ணனையும் தேடி வந்து இணைந்திருக்கிறார்கள். இதுவே கட்சி மீதும் அண்ணன் மீதும் மக்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையையும் தமிழ்த்தேசிய அரசியலின் வளர்ச்சியையும் காட்டுகிறது.

#RiseOfSeemanism

நன்றி..Packiarajan Sethuramalingam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சியின் சாதனை-

பெரம்பலூர் வேப்பந்தட்டை இனாம் அகரம் வேட்பாளராக நின்ற நாம்தமிழர் கட்சியை சார்ந்த திருமூர்த்தி ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.

இதில் சாதனை என்னவெனில் அது பொது தொகுதி அதில் ஆதிக்குடியை நிறுத்தி வேலை செய்து வெற்றியை பெற்றிருக்கோம்.

மாற்று அரசியல்!

- பாக்கியராசன்

===================

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி திருப்பத்தூர் ஒன்றியம் சேவினிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்ட தொகுதி துணைத்தலைவர் தம்பி சேவற்கொடியோன் வெற்றி பெற்றார்...

மகிழ்வுடன்

#தமிழர்_குடில்
#வடக்கு_மாவட்ட_தலைமையகம் 
#திருப்பத்தூர்_சட்டமன்ற_தொகுதி
#சிவகங்கை_மாவட்டம்

====================

#கிருட்டிணகிரி நாம் தமிழர் வேட்பாளர் ஜிஞ்சுப்பள்ளி ஊராட்சி தலைவராக
 சுரேஷ் குமார் வெற்றி

============•••••=

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குமரி மாவட்டம்... நாம் தமிழர் கிள்ளியூர்,  #மிடாலம் ஊராட்சி 3 வார்டுகளில் நம் அன்பு தம்பிகள் வெற்றுபெற்றுள்ளனர்.

#ஜெகன் (கிள்ளியூர் ஒன்றிய செயலாளர்)

#லாரா (மிடாலம ஊராட்சி செயலர்)

#பெர்ஜின் (மிடாலம் ஊராட்சி இணை செயலாளர்)

தகவல் - சதீஸ் குமாரசாமி (கிள்ளியூர் செயலாளர்)

உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.

குறிப்பு: இது சின்னம் இல்லாமல் சுயேச்சையாக போட்டியிடும் பதவிகள்.

=====================

"நாம் தமிழர் கட்சியின் சாதனை- "

உள்ளுராட்சி வெற்றிகள் மூலம் தான் ஒரு ஆரோக்கியமான ஆதவாளர்களை வளர்க்கலாம். தொடரட்டும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கீழ்ப்பென்னாத்தூர் தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் முதல் வெற்றி #தலைவர் பதவிக்கு கீழ்ப்பென்னாத்தூர் ஒன்றிய தலைவர் ரமேஷ்

====================

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விவசாயி சின்னத்தின் முதல் வெற்றி கன்னியாகுமரியில்.

#நாம்தமிழர்கட்சி தனது கட்சி சின்னத்தில் #விவசாயி #ராஜாக்கமங்கலத்தின் #ஊராட்சிஒன்றியகவுன்சிலர் வார்டு 11 ல் தனது முதல் #வெற்றியைபதிவுசெய்தது.
====================++

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

===================

💫 #நான்காவது_வெற்றி 💪💪💪

#தாராபுரம்_நாம்தமிழர்_கட்சியின்_முதல்_வெற்றி
#தாராபுரம்_ஊராட்சி_ஒன்றியம் #நாதம்பாளையம்_ஊராட்சி_மன்ற_3 #பகுதிக்கு_போட்டியிட்ட

💫#திரு_சரவணன் அவர்கள்🐅 

நாம் தமிழர் கட்சியின் நான்காவது
ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான
வெற்றியை உறுதி செய்தார்.

வாழ்த்துகள் 💪💪💪💪💪💐💐💐💐💐💐

===================

*கிருஷ்ணகிரி நாம் தமிழர் கட்சியின் 6வார்டு கோட்டப்பள்ளியில் ஊராட்சி குழு உறுப்பினராக திரு.ம.பிரபாகரன் அவர்கள் வெற்றி பெற்றார்.
 
====================

உத்தண்டியூர் ஊராட்சி வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள பவானிசாகர் ஒன்றிய தலைவர் அன்பு அண்ணன் காளிமுத்து அவர்களுக்கு  வாழ்த்துக்கள் 
#வென்றான்_உழவன்
#உள்ளாட்சியில்_விவசாயி_உயிர்தெழுகிறான்
====================

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.