Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரன் ஒண்டிவீரனார் அவர்களின் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி உறவுகளின் வீரவணக்கம் சங்கரன்கோவில்

 

  • Replies 3k
  • Views 276.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இன்று நாம் தமிழர் கட்சி சார்பாக கம்பம் நகரில் பஜாஜ் மைக்ரோ பைனான்ஸ் வங்கி முற்றுகை போராட்டம் நடைபெற்றது கம்பம் சட்டமன்ற தொகுதி சார்பாக

பறவைகளுக்காக பழங்களை பிடுங்காமலிருக்கும் பிள்ளைகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை விட்டு பிரிந்து சென்றவர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று -21/08/2020 சீமான் உரை. திருமண நிகழ்ச்சியில் ! ஜேம்ஸ் JAMES

 

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான மற்றும் நெகிழ்ச்சியான செய்தி | அனைவரும் பார்க்கவும்

 

  • கருத்துக்கள உறவுகள்

கைத்தறி நெசவாளர் குடும்பங்களைப் பட்டினிச்சாவிலிருந்து காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

கைத்தறி நெசவாளர் குடும்பங்களைப் பட்டினிச்சாவிலிருந்து காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

 

பல்லாயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர் குடும்பங்களை பட்டினிச்சாவிலிருந்து காக்க உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கைலாசம்பாளையத்தைச் சேர்ந்த கைத்தறித் தொழிலாளி சுப்ரமணியன் கடன்தொல்லை மற்றும் வறுமையால் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றதில் அவரும் அவருடைய மனைவியும் உயிரிழந்ததும் அவரது இரு குழந்தைகளும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனும் செய்தி பேரதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது. கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட தொழிற்முடக்கத்தைச் சரிசெய்ய மத்திய-மாநில அரசுகள் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்காததன் விளைவாக முற்றாக தொழில் முடங்கி வாழ்வாதாரம் பறிபோனதால் வருமானமின்றி வறுமையும், கடன் தொல்லையும் சூழ்ந்து ஏற்படுத்திய மன உளைச்சலே இந்த தற்கொலைக்கு காரணம் என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.

தமிழகத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான நெசவாளர் குடும்பங்கள் கைத்தறி தொழிலையே முழுநேரத் தொழிலாக செய்து வாழ்ந்து வருகின்றனர். ஏற்கனவே விசைத்தறி, வெளிநாட்டு ஆடை இறக்குமதி, உழைப்புக்கேற்ற ஊதியமின்மை உள்ளிட்ட பல காரணங்களால் நம் மரபுவழித் தொழில்களில் ஒன்றான கைத்தறி நெசவுத்தொழில் வேகமாக நலிவடைந்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றுப் பரவலையொட்டி போடப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக கடந்த 100 நாட்களுக்கும் மேலாக கைத்தறிகள் இயக்கப்படாமல் முடங்கிப் போயுள்ளதால் வருமானமின்றி கட்டட வேலை போன்ற தினக்கூலி வேலைக்கு செல்லும் அவல நிலைக்கு நெசவாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஊரடங்கு காலத்தில் கூலி வேலை கிடைப்பதும் கடினமாக இருப்பதால் கைத்தறி நெசவாளர்களின் குடும்பங்கள் போதிய வருமானமின்றி அன்றாட பிழைப்பிற்கே அல்லல்படுகின்றனர்.

ஏற்கனவே நெய்த சேலை, வேட்டிகளுக்கு உரிய சம்பளம் தரப்படாமலும், புதிதாக துணி நெய்வதற்காக பட்டு மற்றும் இதர மூலப்பொருட்கள் வழங்கப்படாமலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் கைத்தறி நெசவாளர்கள் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகியுள்ளனர். நெசவாளர்களுக்காக அரசு அறிவித்த 2000 ரூபாய் நிதி உதவி 50 சதவிகிதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என மனம் வருந்துகின்றனர்.

பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் முதல் உள்நாட்டு சிறு, குறு நிறுவனங்கள் வரை இந்த ஊரடங்கால் ஏற்பட்ட தொழில் முடக்கத்திலிருந்து மீள முடியாது தவித்துவரும் சூழ்நிலையில் கைத்தொழில் புரியும் ஏழை, எளிய பாமர தொழிலாளர்களின் நிலைமை மிகுந்த பரிதாபகரமானதாக உள்ளது.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தமிழக அரசு விரைவில் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாவிட்டால் நோய்த்தொற்றால் இறப்பவர்கள் எண்ணிக்கையைவிட பட்டினிச்சாவால் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகக்கூடும். அப்படி ஒரு நிலையை நோக்கி தமிழகம் சென்றுவிடாமல் தடுக்க, கைத்தறி நெசவாளர்கள் உட்பட அனைத்து பாரம்பரிய கைவினைஞர்களுக்கும் அரசு போதிய தொழில் பாதுகாப்பு வழங்க முன்வர வேண்டும்.

சொல்லொணாத் துயரத்தில் மூழ்கியுள்ள தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்களுக்கு தமிழக அரசு,

1. அமைப்புசாரா நெசவாளர்கள் உட்பட அனைத்து நெசவுத் தொழிலாளர்களுக்கும் ஊரடங்கு முடியும்வரை குறைந்தபட்சம் 8000 ரூபாய் மாதாந்திர துயர் துடைப்பு நிதியாக வழங்க வேண்டும்.

2. முடங்கிபோயுள்ள கைத்தறி தொழிலை மீட்டெடுக்க 1989 மற்றும் 1995 ஆம் ஆண்டுகளில் செய்தது போல கைத்தறி நெசவாளர்களிடமிருந்து கையிருப்பில் உள்ள நெய்யப்பட்ட வேட்டி, சேலைகளை தமிழக அரசே கொள்முதல் செய்ய முன்வர வேண்டும்.

3. கடந்த பல மாதங்களாக மூத்த நெசவாளர்களுக்கு தரப்படாமல் உள்ள ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. நிறுத்திவைக்கப்பட்டுள்ள சம்பளத்தொகையை வழங்க ஏற்பாடு செய்வதுடன், தொடர்ந்து நெசவுத் தொழிலை மேற்கொள்ள பட்டு, பாவு, ஜரிகை உள்ளிட்ட மூலப்பொருட்களை வழங்க வேண்டும்.

5.விவசாயத்தைப் போலவே நெசவுத்தொழிலுக்கும் முக்கியத்துவம் அளித்து, நெசவாளர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்க வேண்டும்.

தமிழக கைத்தறி நெசவாளர்களின் நியாயமான கோரிக்கைகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கைத்தறி நெசவுத் தொழிலையும், பல்லாயிரக்கணக்கான நெசவாளர்களின் குடும்பங்களையும் மீட்டெக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

https://www.naamtamilar.org/seeman-urges-tn-govt-lockdown-relief-of-rs-8000-monthly-for-tn-handloom-weavers-who-are-not-members-of-welfare-association/

 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் முதலமைச்சரானால் என்ன செய்வேன் - நல்ல தெளிவான பேச்சு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி சீமானின்றி ஒரு அரசியலும் இல்லை.. துரோகிகளுக்கு சிம்ம சொப்பணம்.. பொய்த்த திராவிடத்தை வாய்கிழிய பேசியவர்கள் இன்று தமிழ் தேசியம் பேசுகிறார்கள். இனி தமிழ் தேசிய காலம். இது பிரபாகரனின் யுகம். ஆடுகளம். இது புலியின் வேட்டை.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இனி சீமானின்றி ஒரு அரசியலும் இல்லை.. துரோகிகளுக்கு சிம்ம சொப்பணம்.. பொய்த்த திராவிடத்தை வாய்கிழிய பேசியவர்கள் இன்று தமிழ் தேசியம் பேசுகிறார்கள். இனி தமிழ் தேசிய காலம். இது பிரபாகரனின் யுகம். ஆடுகளம். இது புலியின் வேட்டை.

 

 

எத்தனையோ பிரபலங்கள் வெளிப்படையாகவே ஆதரிப்பார்கள்.
என்ன பழி வாங்கும் படலமாக படங்கள் வெளிவராமல் முடக்கப்பட்டுவிடும் என்ற பயம்.
உண்மையும் தான்.

சீமான் காலத்தின் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்க மகன் சீமான் கரங்களை வலுப்படுத்துவோம் / நாம் தமிழர்

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி இந்தியைத் திணிக்க முற்பட்டால் தமிழகமெங்கும் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்! – சீமான் எச்சரிக்கை

தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி இந்தியைத் திணிக்க முற்பட்டால் தமிழகமெங்கும் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்! - சீமான் எச்சரிக்கை

 

தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி இந்தியைத் திணிக்க முற்பட்டால் தமிழகமெங்கும் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்! – சீமான் எச்சரிக்கை

இந்தியாவில் நடைமுறையிலிருக்கும் மரபுவழி மருத்துவமுறைகளுக்கான மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான இணையவழி பயிற்சி முகாமில் இந்தியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டிய தமிழக மருத்துவர்களை மத்திய ஆயுஷ் அமைச்சகச் செயலாளர் வைத்ய ராஜேஷ் கொடேச்சா வெளியேறக்கூறி அவமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆதிக்கமும், ஆணவமும் மிகுந்து நடைபெற்ற இச்செயலானது, காலங்காலமாக இந்தியை ஏற்காத மாநிலங்களின் மீதான மொழித்திணிப்பு மற்றும் வெறுப்பின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது. இந்தி, சமஸ்கிருத மொழித்திணிப்பை முன்னெடுத்து, அம்முயற்சிகள் யாவும் தோல்வியைத் தழுவியதால், தற்போது அரசதிகாரிகள் மூலம் மறைமுகமாக அதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது மத்தியில் ஆளும் பாஜக அரசு.

இந்தியா ஒரே நாடாக இருக்க வேண்டுமென்றால், பல தேசிய மொழிகள் இருக்க வேண்டும். அம்மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஒரே மொழிதான் அதிகாரத்திலிருந்து ஆதிக்கம் செலுத்துமென்றால், இங்குப் பல நாடுகள் பிறக்க நேரிடும். அண்மையில் உச்சநீதிமன்றமே, அரசியலமைப்பு அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளையும் தேசிய மொழிகளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கச்சொல்லி அறிவுறுத்தியுள்ள நிலையில் அதற்கு முற்றிலும் நேரெதிராக மத்திய அரசு மொழித்திணிப்பை செய்ய முற்படுவது மிகப்பெரும் சனநாயகப்படுகொலையாகும்.

பிறிதொரு மொழியைக் கற்பதற்கும், அதனைப் பயிற்றுவிப்பதற்கும் நாங்கள் ஒருபோதும் எதிரிகள் அல்லர்; தாய்மொழி அல்லாது மற்றுமொரு மொழியைக் கற்பது என்பது அவரவர் தேவையின் பொருட்டும், விருப்பத்தின் பொருட்டுமாக அமையட்டும். அது ஒருவரது தனிப்பட்டவிருப்பவுரிமை. அதனை அரசு தீர்மானிப்பதும், வலுக்கட்டாயமாக ஒரு மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளித்துத் திணிக்க முற்படுவதும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான மிகப்பெரும் வன்முறையாகும்.

இந்தியா என்பது பல்வேறு மொழிவழித்தேசிய இனங்கள் சங்கமித்து வாழும் ஓர் ஒன்றியமாகும். பல்வேறு மொழிகளாலும், அம்மொழி பேசும் மக்களாலும் கட்டமைக்கப்பட்டுள்ள ஒன்றியத்தை ஒற்றை மொழிக்கான தேசமாக நிறுவ முற்படுவது இந்திய இறையாண்மையைத் தகர்க்கும் கொடுஞ்செயலாகும். அவரவர் தாய் நிலத்தில் அவரவர் மொழிக்கு முதன்மைத்துவம் அளிப்பது ஒன்றே இந்நாட்டின் பன்முகத்தன்மையைக் கட்டிக் காக்கும் நடவடிக்கையாக அமையும். அதன் அடிப்படையில், எமது தாய்மொழியான தமிழ்தான் எமது தாய் நிலத்தின் ஆட்சி மொழியாகவும், அதிகார மொழியாகவும், பண்பாட்டு மொழியாகவும், பயன்பாட்டு மொழியாகவும், வழிபாட்டு மொழியாகவும், வழக்காட்டு மொழியாகவும் இருக்க வேண்டும். அவ்வுரிமையையை நிலைநாட்டவே அரும்பாடுப்பட்டுப் போராடுகிறோம். வெள்ளைய ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து காலந்தொட்டு இன்றைக்குவரை இந்தித் திணிப்புக்கு எதிராக சமரசமில்லாது சமர் செய்து வருகிறோம். உலக வரலாற்றில் எங்கும் நடந்திராத அளவுக்கு மொழிக்காக எண்ணூறுக்கும் மேற்பட்ட மக்கள் போராடி அக்களத்தில் உயிர்நீத்த பெரும் ஈக வரலாறு தமிழர்கள் எங்களுக்கு மட்டுமே உரித்தானது.

கடந்த 70 ஆண்டுகால வரலாற்றில் காங்கிரசு, பாஜக என மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி அமைந்தாலும் இந்தியை நேரடியாகவோ, மறைமுகமாகவோ திணிக்கும் பணியைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறது. மத்தியில் ஆளும் அரசுகளின் இந்த எதேச்சதிகாரப்போக்கு, தற்போது தனிப்பெரும்பான்மையுடன் பாஜக அரசு அமைந்தவுடன் பன்மடங்காகப் பெருகியுள்ளது. அஞ்சலக, தொடர்வண்டிப்பணித் தேர்வுகளில் மாநில மொழிகளை நீக்கி அறிவித்ததும், ஆறு செம்மொழிகளுக்கு மொத்தமாக 30 கோடி மட்டுமே வளர்ச்சி நிதி ஒதுக்குவதும், புழக்கத்தில் இல்லாத சமஸ்கிருத மொழிக்கு ஒவ்வொரு ஆண்டும் 6,00 கோடிக்கும் மேல் வளர்ச்சி நிதி ஒதுக்குவதும், இந்தி வாரம், சமஸ்கிருத நாள் கொண்டாட வற்புறுத்துவதும், பல்வேறு மொழிகள் பேசும் நாட்டில் இந்தியில் மட்டுமே பிரதமர் அனைத்து உரைகளையும் நிகழ்த்துவதும், இந்தியை இந்திய ஒன்றியம் முழுமைக்குமான தேசிய மொழியாக கட்டமைக்க முயல்வதும் மற்ற தேசிய இனங்களின் மொழியை பிராந்திய மொழியாகச் சுருக்கி, இந்திய ஒருமைப்பாட்டிற்கே பேராபத்து விளைவிக்க முயலும் பிரிவினைவாதமாகும்.

‘இந்தி தெரியாதவர்கள் எல்லாம் வெளியேறுங்கள்’ என்று சொல்வது போல, இந்தி தெரியாத மாநிலங்கள் எல்லாம் நாட்டை விட்டு வெளியேறுங்கள் எனச் சொல்வார்களா? ‘இந்தியா இறையாண்மையுள்ள ஒரே நாடாக ஒற்றுமையாக இருக்கவேண்டுமென்றால், தமிழ்நாட்டிற்கு வெளியே வாழும் மக்களும் தமிழைக் கற்க வேண்டும்’ என்கிறார் அண்ணல் காந்தியடிகள். ஒரே மொழிதான் தேசிய மொழியென்றால், உலக மொழிகளிலே மிகவும் தொன்மைவாய்ந்த உயர்தனிச் செம்மொழியான தமிழைத்தான் இந்தியாவின் தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும். அதனைச் செய்வார்களா? மதத்தைக் காரணமாக் கொண்டு இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தாலும், அங்கு மொழித்திணிப்பால் கிளர்ச்சி ஏற்பட்டு வங்காளதேசம் எனும் தனித்தேசம் உருவான வரலாறு ஆட்சியாளர்களுக்கு மறந்து போனதா? புதிய கல்விக் கொள்கை எனும் பெயரில் மறைமுகமாக இந்தியைத் திணிக்க முற்படுவதும், இந்தி தெரியாதவர்கள் இந்தியர்களா? எனக் கேள்வியெழுப்புவதும், இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள் என அவமதிப்புச் செய்வதும் பாசிசத்தின் உச்சம்.

இந்தி பேசாத மாநிலங்களிலிருந்தும் மருத்துவர்கள் கலந்துகொள்வார்கள் எனத் தெரிந்திருந்தும் மூன்று நாள் பயிற்சி வகுப்பினை முழுக்க முழுக்க இந்தியில் நடத்தியதும், மற்ற மொழி மாநில மருத்துவர்களின் கோரிக்கைகளை அலட்சியத்துடன் புறக்கணித்ததும், குறிப்பாக மூன்றாம்நாள் முடிவில் இந்தி தெரியாதவர்கள் வகுப்பிலிருந்து வெளியேறுங்கள் எனும் ஆயுஷ் அமைச்சகச் செயலாளரின் மொழிவெறிப் பேச்சும் உள்நோக்கமுடையது; திட்டமிட்டே இது அரங்கேற்றப்பட்டிருக்கிறது. மேலும். ஆங்கிலத்தில் பயிற்சி வகுப்புகல் நடத்த வலியுறுத்திய தமிழகத்தைச் சேர்ந்த 37 சித்த மருத்துவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டிள்ளார்கள். எனவே, இதைத் தனிப்பட்ட ஒரு அதிகாரியின் செயலாக ஒதுக்கிவிட முடியாது.

தனக்கு ஆங்கிலம் சரிவரத் தெரியாது எனும் ஆயூஷ் அமைச்சக செயலாளரின் விளக்கம் எவ்வகையிலும் ஏற்புடையல்ல. ஆங்கிலம் தெரிந்திருந்தும் அதனைத் தவிர்த்து இந்தியிலேயே பேசுவது அவரது தாய்மொழிப்பற்றுக் காரணமாகத் தானே? அதே தாய்மொழிப்பற்று மற்ற மொழிவழி தேசிய இன மக்களுக்கும் இருந்தால் அது மட்டும் எப்படிப் பிரிவினைவாதமாகும்? 60 விழுக்காட்டுக்கும் மேலாக இந்தி தெரியாத மக்கள் வாழும் ஒரு நாட்டில் ஒரு துறையின் அமைச்சகத்துக்கு இணைப்பு மொழியான ஆங்கிலம் தெரியாத ஒருவரை எப்படி நியமித்தார்கள்? இதற்கு முன் இருந்தவர்களைப் போலல்லாது ஐ.ஏ.எஸ். பயிற்சி பெறாத குஜராத்தைச் சேர்ந்த வைத்தியா இராஜேஷ் கொடேச்சா அவர்களை ஆயுஷ் அமைச்சகச் செயலாளராக நியமித்ததும், அவருக்குப் பதவி நீட்டிப்பு தந்துள்ளதும் அவரது வன்மம் நிறைந்த மொழிவெறிப் பேச்சினை இதுவரை மத்திய அரசு கண்டிக்காததும் ஆளும் பாஜக அரசின் வழிகாட்டுதலின் பெயரில்தான் இவையெல்லாம் நடைபெறுகிறது என்பதை உறுதிசெய்கிறது.இதுதொடர்பாகத் தமிழக அரசு இதுவரை எவ்வித எதிர்வினையும் ஆற்றாது, அமைதி காப்பது சரியான அணுகுமுறை அல்ல.

மத்திய அரசின் பணிகளிலுள்ள அலுவலர்கள் தொடர்ந்து இந்தி மொழிவெறியோடு நடந்துகொள்வதைக் கண்டித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும், அட்டவணையிலுள்ள அத்தனை மொழிகளையும் தேசிய மொழியாகவும் அலுவல் மொழியாகவும் மத்திய அரசு அறிவித்திட உரிய சட்டப் போராட்டங்களையும் அரசியல் அழுத்தத்தையும் கொடுக்க வேண்டும் எனவும், இந்தித் திணிப்பினை ஏற்காத மாநில முதல்வர்களைச் சந்தித்து மாநிலங்களின் மொழியுரிமைக் கூட்டமைப்பை உருவாக்கி மத்திய அரசின் மொழி ஆதிக்கத்திற்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட முன்வர வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறி இந்தி திணிக்க முற்படுமானால் தமிழகமெங்கும் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும் என எச்சரிக்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

https://www.naamtamilar.org/seeman-urges-to-stop-hindi-imposition-otherwise-another-massive-anti-hindi-agitation-will-erupt/

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் மீது நூறு வழக்கு! | ஹிப்ஹாப் ஆதில்லாம் ஒரு ஆளே இல்ல...தமிழ்பிரியா ஆவேசம்

 

  • கருத்துக்கள உறவுகள்

நாம்தமிழருக்கு கிடைத்த வரம் - இடும்பாவனம் கார்த்தி 

 

  • கருத்துக்கள உறவுகள்

கடைசீல பார்த்தா, கிப் காப் தமிழன் இல்லை. கிப் காப் தெலுங்கன். வாண்டட் ஆ வந்து வண்டீல ஏறி மாட்டுகிறார்கள். ஆதி ராமச்சந்திர ரெட்டி கல்யாணம் கட்டினதும் ஒரு ரெட்டி பெண்ணை திருப்பதில.. 🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்

சுங்கச்சாவடிக் கட்டணத்தை உயர்த்தும் முடிவைக் கைவிட்டு, அடுத்த ஓராண்டிற்காவது சுங்கக்கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

சுங்கச்சாவடிக் கட்டணத்தை உயர்த்தும் முடிவைக் கைவிட்டு, அடுத்த ஓராண்டிற்காவது சுங்கக்கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்

 

சுங்கச்சாவடிக் கட்டணத்தை உயர்த்தும் முடிவைக் கைவிட்டு, அடுத்த ஓராண்டிற்காவது சுங்கக்கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

வரும் செப்டம்பர் 1 முதல் சுங்கச்சாவடிக் கட்டணங்கள் 10 விழுக்காடு அளவிற்கு உயர்த்தப்படலாம் என வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. கடந்த 5 மாதத்திற்கும் மேலாகத் தொடரும் ஊரடங்கினால் நாடு முழுமைக்கும் தொழில்கள், வேலைவாய்ப்பு என யாவும் பாதிக்கப்பட்டு மிகப்பெரும் பொருளாதார முடக்கமும், பணவீக்கமும் நிலவும் நிலையில் நடுத்தர வர்க்கத்தினரும், அடித்தட்டு உழைக்கும் மக்களும் பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்து, அத்தியாவசியத் தேவைகளுக்கே வழியற்று நிற்கையில், சுங்கச்சாவடிக் கட்டணம் உயர்த்தப்பட்டால் அது அவர்கள் தலை மீது விழும் பேரிடியாய் மாறும் என்பதில் ஐயமில்லை.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வாகன உரிமையாளர்கள் இந்தச் சுங்கச்சாவடி கட்டண உயர்வால் மேலும் பாதிப்படைவார்கள். போக்குவரத்துச் செலவு அதிகரிப்பால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயர்ந்து ஏழ்மையிலும், வறுமையிலும் உழன்று கொண்டிருக்கும் அடித்தட்டு உழைக்கும் மக்களைப் பட்டினிச்சாவை நோக்கித் தள்ளும் கொடுங்கோல் நடவடிக்கையாகும்.

அதளபாதாளத்திற்குச் சென்றுவிட்ட பொருளாதாரத்தை மீட்டெக்க எவ்வித முன்னெடுப்புகளையும் எடுக்காது விட்டுவிட்டு, ஊரடங்கால் ஆறுமாதகாலமாக வசூல் செய்ய முடியாத கட்டணத்தொகையினை மொத்தமாக வசூலிக்க முயலும் தனியார் நிறுவனங்களின் இலாபவெறி வேட்டைக்கு மட்டும் அவசர அவசரமாக அரசு அனுமதியளிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. சாலை வரி, வாகன வரி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ள வாடகை வாகன ஓட்டுனர்களும் ஊரடங்கால் தொழில் வாய்ப்பு ஏதுமில்லாத நிலையில் தற்போதுதான் மெல்ல மெல்ல மீளத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவேயுள்ள வரிகளையே நீக்கக்கோரி அவர்கள் கோரிக்கை வைத்தும் வரும் நிலையில் சுங்கக்கட்டணம் 10% அளவுக்கு உயர்த்தப்படும் என்பது அவர்களது வாழ்வாதாரத்தைச் சீர்குலைத்திடும் படுபாதகச்செயலாகும்.

சுங்கக்கட்டணம் என்பது அங்கீகரிக்கப்பட்ட பகற்கொள்ளைதான். அது முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் நீண்டநாள் கோரிக்கை எனும்போது, ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 20 விழுக்காடு அளவுக்குச் சுங்கக்கட்டணம் தொடர்ச்சியாக உயர்த்தப்படுவது மக்கள் பணத்தைச் சூறையாடும் கோரச்செயலேயாகும். ஒரு குறிப்பிட்டப் பகுதியில் சாலை அமைக்கப்படும் பணிக்குச் செலவான தொகையினைவிட அதிகமாக, தொடர்புடைய நிறுவனம் ஐந்தே ஆண்டுகளில் வசூல் செய்துகொண்ட பிறகும், தொடர்ந்து 15, 20 ஆண்டுகளாக எவ்விதக் கணக்கு வழக்குமின்றித் தொடர் வசூல் வேட்டையில் ஈடுபடுவதும், அரசு அதை அனுமதிப்பதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

வசூல் செய்யப்படும் கட்டணக்கணக்கை குறைத்துக்காட்டி மிகப்பெரிய மோசடியில் சுங்கவசூல் செய்யும் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதையெல்லாம் தடுக்க ஒரு சாலை அமைக்கப்பட்டதற்கான செலவு, ஒவ்வொரு நாளும் சுங்கச்சாவடியில் வசூல் செய்யப்படும் தொகை, எத்தனை வருடங்களில் அது நிறைவடைகிறது? எனும் தகவல், சாலையைப் பராமரிக்க ஒவ்வொரு மாதமும் ஆகும் செலவு, மீதமாகும் வசூல் கட்டணம் யாருக்குச் செல்கிறது? என்பது குறித்த தகவல்கள் என யாவற்றையும் நாட்டிலுள்ள அனைத்துச் சுங்கச்சாவடிகளும் வெளிப்படையாக அறிவிக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும். அத்தகைய வெளிப்படைத்தன்மையைச் சுங்கச்சாவடிகள் கடைப்பிடிக்காதவரை சுங்கக்கட்டணம் என்பது பகற்கொள்ளையாகத்தான் இருக்கும்.

சொந்த நாட்டிலேயே 50 கிலோ மீட்டருக்கு ஒருமுறை கட்டணம் செலுத்திப் பயணம் செய்வதென்பது ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்கூட இல்லாத அடிமை நிலையாகும். அதிலும் ஊரடங்கு முழுதாக நீக்கப்படாத, பொதுப்போக்குவரத்தும் தொடங்கப்படாத இந்நேரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், சிறு, குறு தொழில் செய்பவர்கள், வாடகை வாகனங்களில் பணிகளுக்குச் செல்லவேண்டிய நிலையில்தான் தற்போது உள்ளனர். அத்தகைய பரிதாபகரமான நிலையிலுள்ள மக்களை ஏதோ ஒரு தனியார் நிறுவனத்தின் இலாபத்தேவையை மட்டும் கருத்திற்கொண்டு கசக்கிப் பிழிவது அவர்களின் குருதியை உறிஞ்சி குடிக்கும் இழிசெயலாகும்.

கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்கள் விடுபட ஆண்டுக்கணக்கில் ஆகலாம் எனும் நிலையில் இப்பேரிடர் காலக்கட்டத்தில் அவர்களுக்குத் தேவையான உதவிகளைத் தந்து உறுதுணையாக இருக்க வேண்டிய மத்திய அரசு, அதற்கு நேர்மாறாக ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் வகையில், தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக அவசர அவசரமாகச் சுங்கச்சாவடிகளில் 10 விழுக்காடு அளவுக்குக் கட்டண உயர்வுக்கு அனுமதி வழங்கியுள்ளது வெந்தப்புண்ணில் வேலைப் பாய்ச்சுவதற்கு ஒப்பாகும்.

ஆகவே, சுங்கச்சாவடிகள் எவ்விதக் கட்டண உயர்வையும் நடைமுறைப்படுத்த அனுமதிக்கக் கூடாது எனவும், தற்போதைய பொருளாதாரத் தேக்க நிலையைக் கருத்தில் கொண்டு அடுத்த ஓராண்டிற்குச் சுங்கக்கட்டண வசூலை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இதன்பிறகும் தனியார் நிறுவனங்களின் கட்டணக்கொள்ளைக்கு ஆதரவாகச் சுங்கச்சாவடிக் கட்டண உயர்வை அரசு அனுமதிக்குமாயின் தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக மூடக்கோரி மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

https://www.naamtamilar.org/seeman-urges-that-the-decision-to-increase-the-toll-tariff-should-be-abandoned/

 

  • கருத்துக்கள உறவுகள்

கண்டுகொள்ளாத தமிழக அரசு கடலோர மாவட்டங்களுக்கும் ஆபத்தா? தமிழ்பிரியா வேங்கை பிரபாகரன் 

 

  • கருத்துக்கள உறவுகள்

சரியான ஆம்பிளைகளாக இருந்தால் -  சீமான் எதிர்ப்பாளர்கள் கவனத்திற்கு மட்டும்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.